முந்தைய பாகம்: பூமியைத் தேடி... (பாகம் 2.....)
”இல்லை மோர்கன், யோசிப்போம், ஏதாவது முயற்சி செய்வோம், யோசியுங்கள். நாசாதானே பூமிக்கருகே வரக் கூடிய ஆபத்தான பொருள்களை ட்ராக் செய்து வருகிறது? ஆனா இந்தக் கல் உங்கள் ட்ராக்கிங்கில் வரவில்லையே, என்ன பிரச்சனை?” என்று சற்று எரிச்சல் அடைந்தவராய் கேட்டார் ஜனாதிபதி ராபர்ட்சன்.
”ஆக்சுவலா நானே அதைப் பற்றி பேசலாம்னு இருந்தேன். 2008-ம் வருடத்திலிருந்து நாசா பூமிக்கு அருகில் வரும் வாய்ப்பிருக்கும் 140 மீட்டருக்கு அதிகமான சைஸ் உள்ள கற்களை கண்டறிந்து ட்ராக் செய்து வருகின்றது. அந்த லிஸ்ட்டிங்கில் இந்த 34 கிமீ கல் இல்லவே இல்லை. மேலும் 2 நாளுக்கு முன்பு வரைகூட எங்கள் ஆப்சர்வேசனில் இது வரவில்லை. ஆனால் இப்போது இது பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது, அதுவும் அதன் இயல்பான வேகத்தை விட அதிகமாய். இது எங்களுக்கு உண்மையிலேயே விளங்கவில்லை. க்ரெய்ட்டன் நீங்க என்ன சொல்றீங்க?”
”ஆமா மோர்கன், நாங்களும் அதைக் கவனித்தோம், அதன் வேகம் இயல்பைவிட அதிகமா இருக்கு, அது 2 நாட்கள் முன்பு வரை இந்தப் பாதையிலேயே இல்லை. லினியரில் இருந்து நாங்கள் நாசாவிற்கு இதுபற்றி தகவல் அனுப்பி இருக்கிறோம். இனி ஸ்பேஸ்கார்ட் (Spaceguard) சிஸ்டத்திற்கு அலர்ட் அனுப்ப வேண்டும், அதை நீங்கள்தான் செய்ய வேண்டும்”
”மோர்கன் ஸ்பேஸ்கார்ட் சிஸ்டத்தை அலர்ட் செய்ய வேண்டாம், அப்புறம் உலகநாடுகளுக்கும், மக்களுக்கும் நம்மால் பதில் சொல்ல முடியாது, முதலில் என்ன செய்யலாம்னு முடிவு செய்து கொள்வோம். இன்னேரம், ஐரோப்பா, சீனா, இந்தியாவிலிருந்து இந்தக் கல் பத்தின தகவல் வந்திருக்குமே?”
”ஆமா, இந்தியா ஸ்பேஸ்கார்ட் சிஸ்டத்திற்கு நேரடி அலர்ட் அனுப்பி இருக்கிறது, ஆனால் அவர்கள் இன்னும் தகவலை பிரஸ்சிற்கு வெளியிடவில்லை. ஐரோப்பிய யூனியன் ஸ்பேஸ்கார்ட் உறுப்பினராக இருப்பதால் அவர்கள் தனி அலர்ட் எதுவும் அனுப்பவில்லை. சீனாவிடம் இருந்து எந்த தகவலும் இல்லை மிஸ்டர் ராபர்ட்சன்”
”நல்லதாப்போச்சு, தகவலை இப்போதைக்கு வெளியிட வேண்டாம்னு இந்தியாவிற்கு ஒரு அறிவுறுத்தல் அனுப்புங்க. சீனா ஸ்பேஸ்கார்ட் சிஸ்டத்தில் மெம்பர் கிடையாது, அதனால் அனுப்பலைன்னு நினைக்கிறேன். மோர்கன் உங்கள் தலைமையில் ஒரு டீம் உருவாக்குங்கள், யார் வேணுமோ அழைத்துக் கொள்ளுங்கள், அனைத்து சோர்சுகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள், இன்று இரவு 10 மணிக்கு மீண்டும் மீட்டிங்கில் சந்திப்போம், அப்போது எனக்கு ஒரு நல்ல செய்தி சொல்வீர்கள்னு நம்புறேன்” என்றவாறு ராபர்ட்சன் விடைபெற்றுக் கொண்டார். 10 மணிக்கு இன்னும் சிலமணி நேரங்களே இருந்தன.
சிறிதுநேர அமைதிக்குப்பின் மோர்கன் மீட்டிங்கை தொடர்ந்தார்.
”கிரெய்ட்டன், உங்கள் அனைத்து துறைத் தலைவர்களுடன் அடுத்த மீட்டிங்கிற்கு தயாராகுங்கள், இன்னும் 1 மணிநேரத்தில் நாம் அடுத்த மீட்டிங்கில் இணைவோம், நான் லாஸ் அலமாஸ் இயக்குனரையும் அவர்கள் டீமையும் மீட்டிங்கில் இணைக்கச் சொல்கிறேன், அவர்கள் தான் நியூக்ளியர் வார்ஹெட்ஸ் (Nuclear Warheads) ப்ரோகிராமை ஹேண்டில் செய்யக் கூடியவர்கள். நாம் எல்லா சாத்தியக் கூறுகளையும் முழுமையாக ஆராய வேண்டும். இத்தோடு இந்த மீட்டிங்கை முடித்துக் கொள்வோம். மீண்டும் சந்திப்போம். நன்றி”
ப்ரொஜெக்டர்கள் அணைந்தன. மீட்டிங்கும் முடிவுக்கு வந்தது. க்ரெய்ட்டனும், மாதவனும் யோசனையோடு அமைதியாக அமர்ந்திருந்தார்கள். மாதவன் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவராக,
”க்ரெய்ட்டன், மற்ற நாடுகளில் எவ்வளவு நியூக்ளியர் வெப்பன்ஸ் இருக்குன்னு தெரிஞ்சுக்க முடியுமா? இந்த இக்கட்டான சூழ்நிலையில அவங்க உதவுவாங்கன்னு நினைக்கிறேன்”
”ம்ம், சரிதான் இது எல்லாருக்குமான பிரச்சனைதானே. அவர்களும் உதவலாமே? நான் உடனே ஜனாதிபதி அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு இந்த தகவலை பெற முயற்சிக்கிறேன். செக்ரட்டரி, உடனே ஜனாதிபதி அலுவலகத்திற்கு கால் பண்ணுங்க”
க்ரெய்ட்டன் ஜனாதிபதி அலுவலகத்திற்கு தகவலைச் சொன்னார். அது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் தகவல் வகையைச் சேர்ந்ததால், சற்று நேரத்தில் ஜனாதிபதியே நேரடியாகச் சொல்வார் என்று கூறிவிட்டார்கள்.
”மாதவன், இன்னும் கொஞ்ச நேரத்துல அதுபற்றி விபரம் கிடைக்கும், ஆனா எனக்கு நம்பிக்கை இல்லை. ஏன்னா எல்லா அணு ஆயுத நாடுகளும் ஒப்பந்தத்துல கையெழுத்துப் போட்டு அவங்க அணு ஆயுதங்களை அழிச்சுட்டாங்க. இப்போ எங்கேயுமே அணு ஆயுதம் தயாரிக்க உதவும் ரியாக்டர்கள் கூட இல்லை. ஏன் மின்சாரத்திற்காக பயன்படுத்தப்படும் அணு உலைகள் கூட நிறுத்தப்பட்டு பல வருடங்கள் ஆகின்றதே?”
”நீங்க சொல்றது சரிதான் க்ரெய்ட்டன். இருந்தாலும் இப்போ நம்மகிட்ட ரகசியமா 50 குண்டுகள் இல்லையா? அதுமாதிரி கண்டிப்பா இன்னும் சில நாடுகள் வெச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்”
”இருக்கலாம் ஆனா நமக்குத் தேவையான 200 குண்டுகள் கிடைக்குமா? நம்மகிட்டயே 50 தான் இருக்கு, மத்த நாடுகள்ல நிச்சயமா அதைவிட குறைவாத்தான் இருக்கும்”
”இல்லை க்ரெய்ட்டன், இன்னும் குறைவான குண்டுகளை பயன்படுத்தி அக்கல்லை அழிக்க ஒரு வழி இருக்கிறது. ஆனால் அது சிமுலேசன் செய்யவே மிக மிகக் கடினமானது. அதைச் செயல்படுத்துவதற்கும் மிக மிகத் துல்லியமான சிஸ்டங்கள் தேவை”
”அது என்ன வழி மாதவன்..? ”
(தொடரும்...)
.
55 comments:
:))))
”அது என்ன வழி மாதவன்..? ”
மாதவன் : எல்லாருக்கும் வாசல்தான் வழி..
பின்னிட்டீங்க.. (கதைய கொண்டு போற விதத்த சொன்னேன்..)
க்ரெய்ட்டன் ஜனாதிபதி அலுவலகத்திற்கு தகவலைச் சொன்னார். அது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் தகவல் வகையைச் சேர்ந்ததால், சற்று நேரத்தில் ஜனாதிபதியே நேரடியாகச் சொல்வார் என்று கூறிவிட்டார்கள்.
ஜனாதிபதியே நேரிடையாக தலையிட்டுபேசுவார் என்பதே பெரிய விஷயம்தான் வேலை செய்பவர்களுக்கும் உற்சாகமாக வேலையில் ஈடு பட முடியும்.
பாகம் 1 - ல் கல் பூமியை நோக்கி வரமாதிரி படம்.
பாகம் 2 - ல் கல் பூமியை தொட்டது போன்ற படம்.
பாகம் 3 - ல் கல் பூமியை மோதிவிட்ட மாதிரியான படம்.
பாகம் 4 - ல் ????
சீட்டு நுனி`க்கு கொண்டு வந்துட்டீங்க சார்... த்ரில்`ஆ இருக்கு..
கதை மிக விறுவிறுப்பாகச் செல்கிறது அண்ணா :))
///// Madhavan Srinivasagopalan said...
பின்னிட்டீங்க.. (கதைய கொண்டு போற விதத்த சொன்னேன்..)//////
நன்றி மாதவன்...
///// Lakshmi said...
ஜனாதிபதியே நேரிடையாக தலையிட்டுபேசுவார் என்பதே பெரிய விஷயம்தான் வேலை செய்பவர்களுக்கும் உற்சாகமாக வேலையில் ஈடு பட முடியும்./////
ஆமா அதுமட்டுமில்லாம, பிரச்சனையும் அவ்ளோ சீரியசாச்சே?
//////மதியின் வலையில் said...
பாகம் 1 - ல் கல் பூமியை நோக்கி வரமாதிரி படம்.
பாகம் 2 - ல் கல் பூமியை தொட்டது போன்ற படம்.
பாகம் 3 - ல் கல் பூமியை மோதிவிட்ட மாதிரியான படம்.
பாகம் 4 - ல் ????
/////
ஹஹ்ஹா பாஸ் அந்த படங்கள் எதேச்சையா அமைந்தவை.... நன்றி!
//////Mohamed Faaique said...
சீட்டு நுனி`க்கு கொண்டு வந்துட்டீங்க சார்... த்ரில்`ஆ இருக்கு..///////
நன்றி பாஸ்.... வெயிட் பண்ணுங்க....!
சீட்டிங் நுனியில் உக்காந்து படுச்சேன்.....
ஹி ஹி ஹி ஹி...
#யோவ், போன பதிவுல கெட்ட கேள்விக்கெல்லாம் பதிலே சொல்லல?
//////கோமாளி செல்வா said...
கதை மிக விறுவிறுப்பாகச் செல்கிறது அண்ணா :))///////
இன்னும் இருக்கு.....
////// வெளங்காதவன் said...
சீட்டிங் நுனியில் உக்காந்து படுச்சேன்.....
ஹி ஹி ஹி ஹி...
#யோவ், போன பதிவுல கெட்ட கேள்விக்கெல்லாம் பதிலே சொல்லல?///////
நிச்சயமா சொல்வேன்....
தமிழ் மனம் பிரச்சினை...
கவனிக்க...
நான் நாலாவது ஓட்டுப் போட்டேன்... இப்போ ஒரே ஒரு ஓட்டுதான் காட்டுது...
/////வெளங்காதவன் said...
தமிழ் மனம் பிரச்சினை...
கவனிக்க...
நான் நாலாவது ஓட்டுப் போட்டேன்... இப்போ ஒரே ஒரு ஓட்டுதான் காட்டுது...
///////
தமிழ்மணத்திலேயே பிரச்சனை இருக்கு...
///இல்லை க்ரெய்ட்டன், இன்னும் குறைவான குண்டுகளை பயன்படுத்தி அக்கல்லை அழிக்க ஒரு வழி இருக்கிறது. ஆனால் அது சிமுலேசன் செய்யவே மிக மிகக் கடினமானது. ///
அடுத்த பாகம் வரை சீட் நுனியிளியே ஒக்காரணுமா அண்ணே?
டெர்ரர் கதை ராம்சாமி அண்ணே
வாழ்த்துக்கள்
////வெளங்காதவன் said...
///இல்லை க்ரெய்ட்டன், இன்னும் குறைவான குண்டுகளை பயன்படுத்தி அக்கல்லை அழிக்க ஒரு வழி இருக்கிறது. ஆனால் அது சிமுலேசன் செய்யவே மிக மிகக் கடினமானது. ///
அடுத்த பாகம் வரை சீட் நுனியிளியே ஒக்காரணுமா அண்ணே?//////
வேற வழி?
////// ஜ.ரா.ரமேஷ் பாபு said...
டெர்ரர் கதை ராம்சாமி அண்ணே
வாழ்த்துக்கள்////////
நன்றி ரமேஷ் பாபு!
சீக்கிரம் சொல்லுங்க மாதவன்..
குண்டுகளை ஏவுகணையில் கொண்டு சென்று அதை விண்கல்லில் மோத விடுவார்களா? அப்படியானால் ஒவ்வொரு குண்டுக்கும் ஒரு ஏவுகணையா?
என்னை தவிர எல்லோரும் கதை படிச்சாச்சா?
விறு விறு..சுறு சுறு சைன்ஸ்ஃபிக்சன் தொடர்...........கலக்குறீங்க பாஸ்.
ரொம்ப நாளா நாலாம்பாகத்துக்குத் தான் வெயிட்டிங்.
என்னமோ போ மாதவா -ன்னு ஜனாதிபதி சொல்லலியா?
மூணு பாகமும் படிச்சிட்டேன்
தமிழ்மணம் ஏழாவது குத்திட்டோம்ல...
கோமாளி செல்வா said...
கதை மிக விறுவிறுப்பாகச் செல்கிறது அண்ணா :))//
சத்தியமா இவன் பதிவை படிக்கவே இல்லை டேய் டேய்...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என்னை தவிர எல்லோரும் கதை படிச்சாச்சா?//
பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மூணு பாகமும் படிச்சிட்டேன்//
பாகம்'னா அது ஒரு சாப்பாடுதானே...?
//////இந்திரா said...
சீக்கிரம் சொல்லுங்க மாதவன்..
///////
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க எப்படியும் சொல்லிடுவார்.
///////எஸ்.கே said...
குண்டுகளை ஏவுகணையில் கொண்டு சென்று அதை விண்கல்லில் மோத விடுவார்களா? அப்படியானால் ஒவ்வொரு குண்டுக்கும் ஒரு ஏவுகணையா?//////
இனி வரும் பாகங்களில் அதன் மர்மம் விளங்கும்....
////// செங்கோவி said...
விறு விறு..சுறு சுறு சைன்ஸ்ஃபிக்சன் தொடர்...........கலக்குறீங்க பாஸ்.
///////
நன்றிங்ணா......
////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மூணு பாகமும் படிச்சிட்டேன்//////
ம்ம்
//////MANO நாஞ்சில் மனோ said...
தமிழ்மணம் ஏழாவது குத்திட்டோம்ல...//////
ஜனநாயக கடமைய நிறைவேத்துறதுல அண்ணனை யாரும் மிஞ்ச முடியாதுய்யா....
வணக்கம் சார், இந்தப் பகுதியும் மிகவும் விறுவிறுப்பாக இருந்திச்சு! கடைசி லைன்ல டுவிஸ்ட் வச்சுட்டீங்க! அது என்ன சிஸ்டம்னு அறிய ரொம்ப ஆவலா இருக்கும்! ஸோ வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் பார்ட்!
அண்ட், எங்கிட்ட ஒரு கொஸ்டீன் இருக்கு ஸார்!
அந்த 34 கிலோமீட்டர் விட்டமுள்ள கல்லைப் பற்றி நீங்க சொல்லியிருக்கிறதப் பார்த்தா, அது ஏதோ ஆர்டிஃபிஷல் எலிமெண்ட்ஸ் மாதிரி தோணறது!
2008 ல் இருந்து, ஆய்வுகளைச் செய்து வரும் நாசாவின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு அந்தக் கல் வருதுன்னா, சம்திங் ராங் சார்!
மேலும் இந்தியா, சீனா போன்றவை தகவல்களை வெளியிடாமல் இருக்குறது, கொஞ்சம் சிந்திக்க வைக்குது! அது இயல்பானதா? அல்லது அதற்குள்தான் கதையே இருக்கிறதா?
” சீனா ஸ்பேஸ்கார்ட் சிஸ்டத்தில் மெம்பர் கிடையாது,”
இதுவும் ஒரு சந்தேகத்தை கெளப்புது!
பார்க்கலாம்!
எப்படியோ, அடுத்த பகுதியைப் படிக்க ரொம்ப ஆவலா இருக்கு!
@ஐடியாமணி,
அந்த விண்கல் பற்றிய விபரங்கள் அடுத்தடுத்த பகுதிகளில் வரும்.....
முதல் பகுதியிலே உங்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தேன்....அகராதி வைக்க..கீழே பின் குறிப்பாக விளக்கம் வைக்கலாமே...இல்லாவிட்டால் நீங்கள் APTURE Plugin (It opens related pages pertaining to the word highlighted) வைக்கலாம்...இந்த தொடர் வாசிப்பவர்களுக்கு நன்கு பயன்படும்...
சுஜாதா விட்டுப்போன இடத்தை நிரப்புங்கள்...வாழ்த்துக்கள்...
////// ரெவெரி said...
முதல் பகுதியிலே உங்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தேன்....அகராதி வைக்க..கீழே பின் குறிப்பாக விளக்கம் வைக்கலாமே...இல்லாவிட்டால் நீங்கள் APTURE Plugin (It opens related pages pertaining to the word highlighted) வைக்கலாம்...இந்த தொடர் வாசிப்பவர்களுக்கு நன்கு பயன்படும்...
சுஜாதா விட்டுப்போன இடத்தை நிரப்புங்கள்...வாழ்த்துக்கள்...
////////
நன்றி ரெவெரி, உங்கள் யோசனைய ஏற்கிறேன்... ஆனால் செயல்படுத்துவது மிக கடினம், முயல்கிறேன்!
நல்ல பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
கவுண்டரே கலக்குறீங்க ...
பன்னி, இண்டிபெண்டன்ஸ் டே படத்த திரும்பவும் பாக்கலாம் தானே !!! :)))))
சூப்பர் மாம்ஸ்! செம்ம விறுவிறுப்பு!
என்னாது இப்பத்தான் பூமியைத்தேடுறீங்களா?................நானும் வாரன் இனி தொடர்ந்து...உங்கள் பதிவில் பூமியைத்தேடி
மிக அற்புதமாக செல்கிறது கதை.அடுத்த பகுதியை விரைவில் எதிபார்க்கிறோம்.
//////Rathnavel said...
நல்ல பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
///////
நன்றி ஐயா..
////தினேஷ்குமார் said...
கவுண்டரே கலக்குறீங்க ...//////
நன்றி தினேஷ்...
//////கக்கு - மாணிக்கம் said...
பன்னி, இண்டிபெண்டன்ஸ் டே படத்த திரும்பவும் பாக்கலாம் தானே !!! :)))))
///////
பார்க்கலாம்.....
/////ஜீ... said...
சூப்பர் மாம்ஸ்! செம்ம விறுவிறுப்பு!//////
வாங்க ஜீ... நன்றி!
/// K.s.s.Rajh said...
என்னாது இப்பத்தான் பூமியைத்தேடுறீங்களா?................நானும் வாரன் இனி தொடர்ந்து...உங்கள் பதிவில் பூமியைத்தேடி//////
நன்றி ராஜ்!
////// FOOD said...
இன்றுதான் உங்கள் கதையின் மூன்று பாகங்களையும் அடுத்தடுத்துப் படித்து முடித்தேன். செம விறு விறுப்பு. அடுத்த பதிவிற்கான ஆவலத்தூண்டும் பதிவுகள்.விஞ்ஞானம்+கற்பனை கலந்து கலக்குறீங்க, இருப்பத்தோராம் நூற்றாண்டின் இளைய சுஜாதா. பகிர்விற்கு நன்றி.///////
வாங்க ஆபீசர். ரொம்ப நன்றி....!
/////RAMVI said...
மிக அற்புதமாக செல்கிறது கதை.அடுத்த பகுதியை விரைவில் எதிபார்க்கிறோம்./////
நன்றிங்க....
வணக்கம் பாஸ்
வார இறுதியில் கொஞ்சம் ரிலாக்ஸ் எடுத்தேன்.
அதான் வர முடியலை...
எல்லோர் வலையும் மீண்டும் இன்று தான் மேயத் தொடங்கினேன்.
மன்னிக்க வேண்டும்!
திரில் படம் பார்ப்பது போன்ற பீலிங்ஸினைத் தந்தவாறு கதை நகர்கிறது.
அடுத்த பாகத்தில் சந்திக்கிறேன்.
Post a Comment