Wednesday, September 7, 2011

இது கதையல்ல... இன்னுமொரு போட்டி!

என்னடா கதையா என்று ஓடிவிட வேண்டாம்... இந்த கதையும் உங்கள் புத்திசாலி தனத்துக்கு நாங்கள் விடபோகும் சின்ன சவால்தான்! இந்தக்கதை ஹன்ட் ஃபார் ஹின்ட் போட்டிக்காக உருவாக்கப்பட்டது! ஆனால் தமிழ் தெரியாத நண்பர்களும் விளையாட வசதியாக விவாதத்தின் போது இதை எடுத்துவிட்டோம். அப்போது இந்த கதையில் நான்கு லாஜிக் தவறுகள் வைக்கப்பட்டு நான்கு விடைகளையும் கொடுத்தால் அடுத்த லெவலுக்கு போவதாக ப்ளான் செய்தோம்.. ஆனால் இப்போது தனியாக போடுவதால் இன்னும் இரண்டு லாஜிக் தவறுகள் சேர்க்கப்பட்டு மொத்தம் ஆறு தவறுகள் உள்ளன! அதை முடிந்தால் அல்லது முயன்று கண்டுபிடியுங்கள்! 



மார்கழி மாதம் ஞாயிறு... அதிகாலை ஐந்து மணி... மெல்ல எனக்கு விழிப்பு தட்டியது! வெங்கடேச சுப்ரபாதம் காற்றில் தவழ்ந்து வந்து குளிர் காற்றோடு போட்டி போட்டு காதுக்குள் சென்றது! எங்க ஊர் சிவன் கோவிலில் இருந்துதான் வருகிறது.. இந்த மார்கழி வந்தாலே இப்படித்தான்.. ஐந்து மணிக்கு மேல் தூங்க முடியாது. இந்த அதிகாலையிலும் சமையலறையில் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டது..அக்காவாகத்தான் இருக்கும்! அவளுக்கு மார்கழி என்றில்லை...வருடத்தில் எல்லா மாதமும் இப்படிதான் அதிகாலைலே எழுந்து விடுவாள்..ஏனென்றால் மாமா ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிவிடுவார் வேலைக்கு! அம்மாவும் அப்பாவும் போனதிலிருந்து அக்காதான் எனக்கு எல்லாமே.. எனக்காகத்தான் மாமாவையும் பையனையும் கூட்டி வந்து இந்த வீட்டிலே இருந்து விட்டாள்!

இப்பொழுது சுப்ரபாதத்திற்கு போட்டியாக அவளது புலம்பலும் நான் விரும்பாமலே என் காதுக்குள் சென்றது...கழுத வயசாகுது... ஒரு வேலைக்கு போறதில்லை.. திங்க வேண்டியது...பக்கத்துக்கு வீட்டு பரமேசோட ஊர் சுத்த வேண்டியது... ராத்திரி வரை எங்கயாவது வெட்டி ஞாயம் பேசிட்டு இழுத்து போர்த்திட்டு தூங்க வேண்டியது.. இப்பிடி இருந்தா உனக்கு எப்பிடி பொண்ணு பார்த்து எப்ப கல்யாண பண்ணி.. க்கும்ம்... அதுக்கெல்லாம் கொடுப்பன வேணும்... என்று அக்கா தொடர்ந்ததை வலுக்கட்டாயமாக காதுக்குள் நுழைவதை தடுத்து விட்டு குளிக்க சென்றேன்!

குளித்து விட்டு..அக்காவிடம் சொல்லி விட்டு பால் வாங்க கிளம்பினேன்.. பக்கத்தில்தான்! இந்த அதிகாலை நடை எனக்கு பழகிவிட்டது.. வீட்டை விட்டு வெளியில் வந்தேன்.. மாமா அந்த அதிகாலையிலும் அவரது பஜாஜ் விக்டரை துடைத்து கொண்டிருந்தார்! ஒரு சின்ன புன்னகையை அவருக்கு இலவசமாக கொடுத்துவிட்டு நடக்க துவங்கினேன்.. ஊருணியை கடக்கும்போது கவனித்தேன்.. நான்  நேற்று  இரவு  மொட்டாக பார்த்த தாமரைஎல்லாம் அழகாக மலர்ந்து என்னை பார்த்து சிரித்தது.. அப்பிடியே ரசித்துவிட்டு அதை கடந்தேன்...ஒவ்வொரு வீட்டு வாசலிலும்.. பெண்கள் அதிகாலை ஈரக்கூந்தளோடு கோலம் போட்டு கொண்டிருந்தனர்.. அதில் டியூசன் வகுப்பில் எனக்கு பரிச்சயமான பெண்கள் என்னை பார்த்து புன்னகைத்தனர்! அதை வாங்கி ரசித்துக்கொண்டே டீக்கடை நோக்கி சென்றேன்.. எனது ஒவ்வொரு காலையும் இப்பிடித்தான் நகரும்.. அதிகாலை நடை.. ஒரு டீ.. ஒரு தம்மு.. அதன் சுகமே தனி! 

தம்மடிக்கும்போதுதான் ஞாபகம் வந்தது..பரமேஷ் சொன்ன கம்பெனிக்கு இன்னிக்கு அப்ளிகேசன் அனுப்பவேண்டும்... மாமாவிடம் கொஞ்சம் பணம் வாங்கி வைக்கணும்.. என்று நினைத்தபடியே பால் வாங்கி கொண்டு விரைவாக வீடு செல்ல நடந்தேன்.. ஆனால் வழியெங்கும் பார்த்த பெண்களின் புன்னகை என்னை மெது நடை போடவைத்தது! வீட்டில் பாலை அக்காவிடம் கொடுத்துவிட்டு மாமாவிடம் மெதுவாக தலை சொறிந்தேன்.. மாமா... ஒரு அப்ளிகேசன் அனுப்பனும்ம்ம்... உனக்கு இதே பொழப்பா போச்சுடா?.. ஒரு வேலை தேடிக்க துப்பில்லை.. காசு மட்டும் வக்கனையா கேளு..என்று அர்ச்சனை செய்தபடி நூறு ரூபாய் கொடுத்தார்!

வாங்கும்போதுதான்  ஞாபகம் வந்தது.. இன்னும் ஒருவாரத்தில் தீபாவளி..இன்னும் புது துணிகூட எடுக்கவில்லை...ஏதாவது வழி  செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்!கொஞ்ச நேரம் டிவி..புத்தகம்... விஜய் நியூஸ் என்று ஒன்பது மணி வரை நேரத்தை கடத்தி விட்டு போஸ்ட் ஆபிஸ் சென்றேன்.. நிரப்பிய அப்ளிகேஷனை பதிவு தபாலில் அனுப்பி விட்டு நண்பனின் டியூசன் செண்டர் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.. பாடம் நடத்த! பிறகு? என்ன செய்வது நாற்பத்தைந்து வயதாகி விட்டது.. இன்னும் வேலை கிடைக்க வில்லை..அதனால் கல்யாணமும் ஆகல... கடைசி வரை என் தலையில் இப்படிதான் எழுதியிருக்கு போல என்று விதியை நொந்துகொண்டு நடந்தேன்..வழியில் தென்பட்ட பெண்களுக்கு புன்னகைத்தபடியே!

சரி.. கதையை படித்தாகிவிட்டதா? கேள்விக்கு வருவோம்.. இந்த கதையில் ஆறு(6) லாஜிக் மீறல்கள் உள்ளன.. அது என்ன என்ன என்று  கமென்ட்டில்  சொல்லுங்கள்..உங்கள் புத்திசாலி தனத்தை இலவசமாக சோதித்துக்கொள்ளுங்கள் :)) 

முழுமையான விடை வரும்வரை விடைகள் மட்டறுக்கப்படும்.. :))

122 comments:

மாணவன் said...

போட்டியில எங்களையும் சேர்த்துக்குவீங்களா? :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் என்ன சொல்லணும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

test

மாணவன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நான் என்ன சொல்லணும்?///

நீங்க ஒன்னுமே சொல்ல வேண்டாம் வேடிக்கை மட்டும் பார்த்தா போதும் :)

மாணவன் said...

//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
test//

டெஸ்ட் பாஸ்........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

t

மாணவன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
t//

சரி ஆன்ஸர் ஒன்னு கண்டுபிடிச்சீட்டீங்க மீதி இன்னும் 5 கண்டுபிடிங்க பார்க்கலாம்... :)

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
test/////

failed

அம்பலத்தார் said...

ஆறுதலாக விபரமாகப் படித்திட்டு வாறன்

karthikkumar said...

ரெண்டு கதைகள் கொடுத்து ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க சொன்னா எனக்கு கொஞ்சம் ஈசியா இருக்கும்... :))

Madhavan Srinivasagopalan said...

// ரெண்டு கதைகள் கொடுத்து ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க சொன்னா எனக்கு கொஞ்சம் ஈசியா இருக்கும்... //

வேணும்னா இருக்குர் ஒரு படத்துக்கும், ஒரு கதைக்கும் ஆறு வித்தியாசம் சொல்லலாம்...

Madhavan Srinivasagopalan said...

// ஒரு அப்ளிகேசன் அனுப்பனும்ம்ம்... //

'ம்' ஸ்டாக் அதிகமா இருக்கா.. அப்ப ஒகே..

Madhavan Srinivasagopalan said...

//ராத்திரி வரை எங்கயாவது வெட்டி ஞாயம் பேசிட்டு இழுத்து போர்த்திட்டு தூங்க வேண்டியது.. இப்பிடி இருந்தா உனக்கு எப்பிடி பொண்ணு பார்த்து எப்ப கல்யாண பண்ணி.. க்கும்ம்... //

தேவையில்லாமல் அண்ணன் பன்னிக்குட்டி ராம்சை உசுப்பி வேடிக்கை பார்ப்பதை நான் வன்மையாக கண்டுகறேன்.. சாரி.. சாரி.. கண்டிக்கறேன்.

M.R said...

வெங்கடேச சுப்ரபாதம்

இது சிவன் கொவிலில் இருந்து வருவதாக சொன்னது நெருடல் .1

Madhavan Srinivasagopalan said...

// குளித்து விட்டு.. //

ஓகே.. ஓகே.. நம்பிட்டோம்.. நம்பிட்டோம்..

M.R said...

ராத்திரி வரை எங்கயாவது வெட்டி ஞாயம் பேசிட்டு

இப்பிடி சொல்லிட்டு கடைசியில் டியுசன் சொல்லித்தர போவதாக சொன்னது இரண்டாவது நெருடல்

அருண் பிரசாத் said...

@ எம் ஆர்
ஒரு லாஜிக் சரி
அடுத்தது தவறு... அது லாஜிக் மிஸ்டெக் இல்லையே

Vidhoosh said...

லாஜிக் மீறல் 1: எங்க ஊர் சிவன் கோவிலில் இருந்துதான் வருகிறது //வெங்கடேச சுப்ரபாதம் // ஏம்பா ஏன்?
லாஜிக் மீறல் 2: அவரது பஜாஜ் விக்டரை துடைத்து கொண்டிருந்தார்! //பஜாஜ் விக்டர் டூ வீலரா? டி.வி.எஸ். தான் விக்டர்//
லாஜிக் மீறல் 3: நேற்று இரவு மொட்டாக பார்த்த தாமரைஎல்லாம் அழகாக மலர்ந்து //அதிகாலை அஞ்சு மணிக்கே ?//
லாஜிக் மீறல் 4: இன்னும் ஒருவாரத்தில் தீபாவளி.. // ஐப்பசி அப்புறம்தான் மார்கழி //
லாஜிக் மீறல் 5: போஸ்ட் ஆபிஸ் சென்றேன்.. நிரப்பிய அப்ளிகேஷனை பதிவு தபாலில் அனுப்பி// மார்கழி மாதம் ஞாயிறு??? ஏது போஸ்ட் ஆபீசு//
லாஜிக் மீறல் 6: //ஆறு தவறுகள் உள்ளன! // மொத்தம் அஞ்சு தான் இருக்கு

Vidhoosh said...

followup

M.R said...

இன்னும் ஒருவாரத்தில் தீபாவளி..இன்னும் புது துணிகூட எடுக்கவில்லை.

மார்கழிக்கு அப்புறம் தை தானே வரும்,அப்போ பொங்கலுக்கு பதிலாக தீபாவளி என்று சொன்னது நெருடல் 3.

அருண் பிரசாத் said...

@விதூஷ்
5 லாஜிக் மிஸ்டேக் கண்டுபிடிச்சிட்டீங்க.... அந்த ஆறாவது தப்பு.... என்னமா யோசிக்கறீங்க? :)

அருண் பிரசாத் said...

@ எம் ஆர்
இந்த லாஜிக் மிஸ்டேக் - சரி

M.R said...

பால் பூத்துக்கு பால் வாங்க போறது தெரியும் .டீ கடையிலேயே பால் வாங்கிட்டு வந்துட்டானா

எஸ்.கே said...

லாஜிக் தவறுகள்
1. விடை வரும்வரை விடைகள் (விடையா விடைகளா)
2. மட்டறுக்கப்படும்.. :)) (இதுக்கு ஸ்மைலி வரக்கூடாது)
3. புத்திசாலி தனத்தை (தனியாக தனம் என்கிற யாரையோ குறிக்கிறது.)
4. கேள்விக்கு வருவோம்.. (கேள்வி என்று சொல்லிவிட்டு கேள்வியே தரலை)
5. போஸ்ட் தமிழ்மணத்தில் இணைந்துள்ளது, ஆனால் இண்ட்லியில் இணையவில்லை.
6. ஆறாவது தவறு இல்லை அதுவே ஒரு தவறுதான்.

Vidhoosh said...

///விஜய் நியூஸ் என்று ஒன்பது மணி வரை///
காலை ஒன்பதுக்குள் ஏது விஜய் ந்யூஸ். அதுவும் ஞாயிறன்று. :))

Vidhoosh said...

//தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை..//


ஹையோ ஹையோ.. :))

Anonymous said...

1.சிவன் கோவிலில் இருந்து வெங்கடேச சுப்ரபாதமா? #முரண் 1

2. மார்கழி மாசம். ஆனா ஒரு வாரம் கழிச்சு தீபாவளியா? # முரண் 2

3. ஞாயிற்றுக்கிழமை எப்படி தபால் ஆஃபிஸ் திறந்திருக்கும்?

4. அதிகாலை வேளை. இன்னும் சூரியனே உதிக்கல. எப்டி தாமரை எல்லாம் மலர்ந்ததாம்? # முரண் 4

5. அக்கா வேலைக்கே போவதில்லை என திட்டுகிறார். ஆனால் அவர் தான் ட்யூசன் செண்ட்டரில் வேலை பார்க்கிறாரே # முரண் 5

6.


By
மகேஷ்வரி

M.R said...

டியூசன் செண்டர் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.. பாடம் நடத்த! பிறகு? என்ன செய்வது

இன்னும் வேலை கிடைக்க வில்லை.

பாடம் நடத்துவது வேலை இல்லையா .

வயசு உதைக்கிறதே

45 வயசில் வேலைக்கு அப்ப்ளிகேசன்
போடுவது என்பது....

டியுசன் சென்டரில் வேலை செய்து கொண்டு வேலை இல்லை எனபது

அவரது அக்கா வெட்டி அரட்டை அடித்து ஊர் சுற்றும் பேர்வழி என்று சொல்லப்பட்டவர் பாடம் நடத்த செல்வது.

vinu said...

maargali will come after ippasi so deevaali after maargali is wrong

from sivan temple venkatesa suppra baatham....

இரா.ச.இமலாதித்தன் said...

01. சிவன் கோயிலில் வெங்கடேச சுப்ரபாதம் ஒலிக்காது.
02. பஜாஜ் விக்டர் இல்லை டிவிஎஸ் விக்டர் தான் பைக் உள்ளது.
03 .ஊருணியில் தாமரை பூக்காது என்றே நினைக்கிறேன்.
04. இரவிலேயே தாமரை பூத்திருக்கும்.
05. இவருக்கு நாற்பத்தைந்து வயது உண்மையெனில், இவரோடு டியுசன் படித்த பெண்கள் உள்ளூரிலேயே இருந்திருக்க மாட்டார்கள்.திருமணம் ஆகி வெளியூர் சென்றிருப்பார்கள்.
06. பால் வாங்க டீக்கடைக்கு போகவேண்டியதில்லை.
07. மார்கழிக்கு அடுத்த மாதம் தீபாவளி வராது.
08. விஜய் டிவில நியுஸ் ஒளிபரப்பாகாது.
09. டியுசன் நடத்துவதும் ஒரு வேலைதானே?.ஆனால் அவர் வேலைக்கே செல்லாமல், ஊர் சுற்றுவதாகத்தானே கதையில் சொல்லப்படுகிறது.

ஆறு கேட்டீங்க, நான் ஒன்பதாக கொடுத்திருக்கேன்.. எதவாது பார்த்துபோட்டு கொடுங்க...

M.R said...

பக்கத்துக்கு வீட்டு பரமேசோட ஊர் சுத்த வேண்டியது...

அப்பிடின்னா அவங்க அக்காவிற்கு பாடம் நடத்த செல்வது தெரியாதா

vinu said...

vijay news

then one place said no job! at another he going for tuiton center to teach students

Anonymous said...

1.சிவன் கோவிலில் இருந்து வெங்கடேச சுப்ரபாதமா? #முரண் 1

2. மார்கழி மாசம். ஆனா ஒரு வாரம் கழிச்சு தீபாவளியா? # முரண் 2

3. ஞாயிற்றுக்கிழமை எப்படி தபால் ஆஃபிஸ் திறந்திருக்கும்?

4. அதிகாலை வேளை. இன்னும் சூரியனே உதிக்கல. எப்டி தாமரை எல்லாம் மலர்ந்ததாம்? # முரண் 4

5. அக்கா வேலைக்கே போவதில்லை என திட்டுகிறார். ஆனால் அவர் தான் ட்யூசன் செண்ட்டரில் வேலை பார்க்கிறாரே # முரண் 5

6.


By
மகேஷ்வரி

vinu said...

sunday post office leave

Anonymous said...

6. விஜய் டீவில எங்க ந்யூஸ் போடுறாங்க? #முரண் 6

By
மகேஷ்வரி

அருண் பிரசாத் said...

@vidhoosh
உங்க கடைசி விடைய கொஞ்சம் தெளிவா சொல்லுங்க

@மகேஷ்வரி
5 விடைகள் சரி
ஆறாவது லாஜிக் மிஸ்டேக் இல்லை. எங்க மக்கள் பாதி பேரை வீட்டுல அப்படித்தான் திட்டுறாங்க இன்னமும் :)

Madhavan Srinivasagopalan said...

// எஸ்.கே said...

லாஜிக் தவறுகள்
1. விடை வரும்வரை விடைகள் (விடையா விடைகளா)
2. மட்டறுக்கப்படும்.. :)) (இதுக்கு ஸ்மைலி வரக்கூடாது)
3. புத்திசாலி தனத்தை (தனியாக தனம் என்கிற யாரையோ குறிக்கிறது.)
4. கேள்விக்கு வருவோம்.. (கேள்வி என்று சொல்லிவிட்டு கேள்வியே தரலை)
5. போஸ்ட் தமிழ்மணத்தில் இணைந்துள்ளது, ஆனால் இண்ட்லியில் இணையவில்லை.
6. ஆறாவது தவறு இல்லை அதுவே ஒரு தவறுதான்.//

இதற்கு நீங்கள் விடையளிப்பது ஏழாவது தவறாகும்.

M.R said...

மாமா... ஒரு அப்ளிகேசன் அனுப்பனும்ம்ம்... உனக்கு இதே பொழப்பா போச்சுடா?.. ஒரு வேலை தேடிக்க துப்பில்லை.. காசு மட்டும் வக்கனையா கேளு..என்று அர்ச்சனை செய்தபடி நூறு ரூபாய் கொடுத்தார்!

டியுசன் நடத்துற ஆள்கிட்ட நூறு ரூபாய் இல்லையா .

ஒரு வேலை தேடிக்க துப்பில்லை என்று மாமா சொல்கிறாரே .
அவருக்கு டியுசன் பாடம் நடத்த செல்வது தெரியாதா

வேலை தேடத்தானே அப்ளிகேசன் போடணும்னு சொல்கிறார் .
பிறகு வேலை தேடிக்க துப்பில்லை என்று சொல்வது

எல்லாத்துக்கும் மேல நாற்பத்தி ஐந்து வயது என்பது நெருடலாக இருக்கு

அருண் பிரசாத் said...

@ எம் ஆர்
டீ கடை, ஊர் சுற்றுதல் - லாஜிக் மிஸ்டேக் ஆகாது

@ வினு
2 விடைகள் சரி... ஆனா டியூஷன் சம்பந்தமான விடை தப்பு

Madhavan Srinivasagopalan said...

// எங்க மக்கள் பாதி பேரை வீட்டுல அப்படித்தான் திட்டுறாங்க இன்னமும் :) //

நான் வேறு பாதி என்பதை இதன் மூலம் உறுதி படுத்துகிறேன்.

vinu said...

thaamarai iravil/maalaiyil mattumthaan pookum....

அருண் பிரசாத் said...

@ இமலாதித்தன்
நீங்க கொடுத்த 9 விடைல
1,2,7,8 - சரி
3,4,5,6,9 - தவறு

Anonymous said...

7. என்னது பாஜாஜ் விக்டர துடச்சுக்கிட்டு இருந்தாரா? அது என்ன கம்பெனி? #முரண் 7

By
மகேஷ்வரி

அருண் பிரசாத் said...

@ மகேஷ்வரி
6வது விடையும் சரி :)

@ வினு
முதல்ல போட்டது சரி
கடைசியா போட்டது தவறு (தாமரை)

அருண் பிரசாத் said...

@ எம் ஆர்
அது லாஜிக் மிஸ்டேக் இல்லை பாஸ்

Vidhoosh said...

காலை ஒன்பது மணிக்குள் விஜய் டிவியில் ந்யூஸ் வராது.

அருண் பிரசாத் said...

@ மகேஷ்வரி
முரண் 7 என்ன சொல்ல வரீங்கனு புரியலை?!

5/6 - சரி

vinu said...

pottirukkum potto sivan kovil alla

தமிழா தமிழா said...

1.சிவன் கோவிலில் சுப்ரபாதம்
2.மார்கழி மாதத்திற்கு பின் தை மாதம்- பொங்கல்.தீபாவளி இல்லை.
3.விஜய் நியூஸ்
4.போஸ்ட் ஆபீஸ் சன் டே
5.டியூஷன் சென்ட் சன் டே

இரா.ச.இமலாதித்தன் said...

01. சிவன் கோயிலில் வெங்கடேச சுப்ரபாதம் ஒலிக்காது.
02. பஜாஜ் விக்டர் இல்லை டிவிஎஸ் விக்டர் தான் பைக் உள்ளது.
03. ஞாயிற்று கிளமியில் போஸ்ட் ஆபிஸ் திறந்திருக்காது
04. மார்கழிக்கு அடுத்த மாதம் தீபாவளி வராது.
05. விஜய் டிவில நியுஸ் ஒளிபரப்பாகாது.

அருண் பிரசாத் said...

@ விதூஷ்...

:) நேரடி விடை வேணும்...

தமிழா தமிழா said...

1.சிவன் கோவிலில் சுப்ரபாதம்
2.மார்கழி மாதத்திற்கு பின் தை மாதம்- பொங்கல்.தீபாவளி இல்லை.
3.விஜய் நியூஸ்
4.போஸ்ட் ஆபீஸ் சன் டே
5.டியூஷன் சென்ட் சன் டே

யோசிப்பவர் said...

1) சிவன் கோவிலில் ஏது சுப்ரபாதம்?
2) அதிகாலையிலேயே தாமரை மலருமா?
3) விஜய் டீவியில் ந்யூஸ் கிடையாது
4) மார்கழி மாதம் ஏது தீபாவளி?
5) ஞாயிற்றுக் கிழமை பதிவுத் தபால் அனுப்ப முடியுமா?
6) ட்யூசன் செண்டரில் பாடம் நடத்துவது வேலை இல்லையா? பின்ன எப்புடி ”ஒரு வேலைக்கு போறதில்லை..”?சரி அப்படி ட்யூசன் நடத்துவதற்கு சம்பளம் என்று ஏதாவது கொஞ்சமாவது வராதா? அப்படி சம்பளம் வந்தால் நூறு ரூபாய்க்கு எதற்காக மாமாவை எதிர்பார்க்க வேண்டும்?

யோசித்த பொழுது எழுந்த சில கேள்விகள்/பதில்கள்:
ஞாயிறன்று மாமா ஆறு மணிக்கு வேலைக்கு கிளம்புவாரா?(ஷிஃப்ட் என்றால் சாத்தியம். மேலும் அது ஜெனரல் ஸ்டேட்மெண்ட்)
கூந்த’ளோ’டு - ஸ்பெல்லிங் மிஸ்டேக் உண்டா?(லாஜிக் மிஸ்டேக் இல்லை)
45 வயதில் அப்ளிக்கேஷன்?! ஏஜ் பார் ப்ராப்ளம்?! (அவ்வளவு லாஜிக் மீறல் இல்லை)
ஞாயிற்றுக் கிழமை ட்யூசன் செண்டர் உண்டா?(இருக்கலாம்)

vinu said...

on sunday how maamaa go office then y sister woke up at 5 to prepare food for maamaa

அருண் பிரசாத் said...

@ இமலா
கொடுத்த 5 விடைகளும் சரி

@ தமிழா தமிழா
1,2,3,4 சரி
5 தவறு

Prabu Krishna said...

1.பஜாஜ் விக்டர் அல்ல டிவிஎஸ் விக்டர்

2.ஞாயிறு, போஸ்ட் ஆபிஸ்

3. விஜய் நியூஸ்

4. சிவன் கோவிலில் சுப்ரபாதம் கிடையாது திருமறை மட்டும்

5. தீபாவளி மர்கழிக்கு பிறகு வராது

6.தாமரை மலரும் நேரம் அதிகாலைக்கு பின். அதாவது ஐந்து மணி அல்ல.

ஏதேனும் தவறு என்றால். அந்த எண்ணை குறிப்பிடவும்.

Vidhoosh said...

//:) நேரடி விடை வேணும்... // இதெல்லாம் ரொம்ப அநியாயம் அருணு.. அப்பிடியே ராஜ் டீவில ரெண்டு படம் ஒட்ட வச்சு மூணு மணி நேரம் பேசிட்டே இருப்பானுங்க...அதே மாதிரி.. அவ்வ்வ்..

//கொஞ்ச நேரம் டிவி..புத்தகம்... விஜய் நியூஸ் என்று ஒன்பது மணி வரை நேரத்தை கடத்தி விட்டு போஸ்ட் ஆபிஸ் சென்றேன்.. ///

காலை ஐந்து மணிக்கு ஐயா எழுந்து பால் வாங்கி ஐந்தே காலுக்கு வராருன்னு வச்சுப்போம், ஐந்தேகால் மணிலேர்ந்து ஒன்பது மணிக்கு சுமாருக்கு ஐயா அப்ப்ளிகேஷன் தபால் ரெடி பண்ணு வரை விஜய் டீவில ந்யூஸ் ஷெடூள்ள கிடையாதுங்கறேன்..

சோடா ப்ளீஸ்.

Madhavan Srinivasagopalan said...

// @ இமலாதித்தன்
நீங்க கொடுத்த 9 விடைல
1,2,7,8 - சரி
3,4,5,6,9 - தவறு //

ஆறு கேட்டா.. அறுபது விடை தருவாங்க போல..

Prabu Krishna said...

follow-up comments

அருண் பிரசாத் said...

@யோசிப்பவர்
1,2,3,4,5 சரி
6 வது தவறு - லாஜிக் மிஸ்டேக் இல்லை

@ வினு
ஆபிஸ் விடை தவறு

Anonymous said...

7. bajaj victor is wrong. it is TVS victor

By
Maheshwari

அருண் பிரசாத் said...

@ பிரபு

6 விடையும் சரி :)

@ விதூஷ்

சோடா இல்லை... ஷெடியூல் படி பார்த்தா உங்க விடை தவறு :)

Vidhoosh said...

//@ விதூஷ்

சோடா இல்லை... ஷெடியூல் படி பார்த்தா உங்க விடை தவறு :)

//
ரொம்ப ஓவரு.. அப்பிடிப் பார்த்தா அதுவும் லாஜிக் மிஸ்டேக் தானே..

ஆயிரம் பொற்காசா தரப் போறீங்க?

அப்பிடின்னா அந்த ஏழாம் லாஜிக் மிஸ்டேக்-கையும் இலவசமா கண்டுபிடிக்கிறேன். :))

vinu said...

ok i give mup

பன்னிக்குட்டி ராம்சாமி said...

offline

அருண் பிரசாத் said...

@ மகேஷ்வரி
7வதா நீங்க சொன்ன விடை சரி

@ விதூஷ்
ஏன் இவ்வளோ குழம்பறீங்க... ஓவரா யோசிச்சா உடம்புக்கு ஆகாதான்....

உங்க விடையை கொஞ்சம் சரியா சொல்லனும் அவ்வளவே

இரா.ச.இமலாதித்தன் said...

01. சிவன் கோயிலில் வெங்கடேச சுப்ரபாதம் ஒலிக்காது.
02. பஜாஜ் விக்டர் இல்லை டிவிஎஸ் விக்டர் தான் பைக் உள்ளது.
03. ஞாயிற்று கிழமையில் போஸ்ட் ஆபிஸ் திறந்திருக்காது
04. மார்கழிக்கு அடுத்த மாதம் தீபாவளி வராது.
05. விஜய் டிவில நியுஸ் ஒளிபரப்பாகாது.
06. சூரிய உதயத்திற்கு பிறகுதான் தாமரை மலரும்.அதிகாலையில் மலர்ந்திருக்காது.

Madhavan Srinivasagopalan said...

புது தில்லி குண்டு வெடிப்பு இங்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

offline//

Electricity line...

அருண் பிரசாத் said...

@ இமலா
6 விடைகளும் சரி

Balakumar Vijayaraman said...

1. சிவன் கோவில் (பெருமாள் கோவில்)
2. பஜாஜ் விக்டரை (டி.வி.எஸ். விக்டர்)
3. ஒருவாரத்தில் தீபாவளி (பொங்கல்)
4. விஜய் நியூஸ் (விஜய் சேனலில் நியூஸ் கிடையாது)
5. மார்கழி மாதம் ஞாயிறு (போஸ்ட் ஆபீஸ் விடுமுறை)
6. ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிவிடுவார் வேலைக்கு (ஞாயிற்றுக் கிழமை லீவா இருக்குமோ?)

அருண் பிரசாத் said...

@ பாலகுமார்
5 விடைகள் சரி
6 வது யோசிங்க

Lalitha said...

1 சுப்ரபாதம் சிவன் கோவிலில் இருந்து வருவது
2 பஜாஜ் விக்டர் -
3மாமா ஸ்கூட்டர் துடைப்பது ஞாயிறு கிழமை - ஆபீஸ் கிடையாது
4. தீபாவளி மார்கழி மாதத்தில் வராது
5 .விஜய் சேனலில் நியூஸ் கிடையாது
6 போஸ்ட் ஆபீஸ் - ஞாயிறு கிழமை கிடையாது

Balakumar Vijayaraman said...

தாமரை அதிகாலை மலராதோ, சூரியன் உதித்தபின் தான் மலருமோ?

சுதாகர் குமார் said...

1.//வெங்கடேச சுப்ரபாதம் காற்றில் தவழ்ந்து வந்து குளிர் காற்றோடு போட்டி போட்டு காதுக்குள் சென்றது! எங்க ஊர் சிவன் கோவிலில் இருந்துதான் வருகிறது.//

2.//பஜாஜ் விக்டரை துடைத்து கொண்டிருந்தார்!//
3.//இரவு மொட்டாக பார்த்த தாமரைஎல்லாம் அழகாக மலர்ந்து என்னை பார்த்து சிரித்தது.//
4.//இன்னும் ஒருவாரத்தில் தீபாவளி.//
5.//விஜய் நியூஸ் //
6.//போஸ்ட் ஆபிஸ் சென்றேன்.. //

அருண் பிரசாத் said...

@ லலிதா
1,2,4,5,6 சரி
3 தவறு - அது லாஜிக் மிஸ்டேக் இல்லை

@ பாலகுமார்
அதே...

@சுதாகர்குமார்
பாயிண்ட் எல்லாம் சரிங்க... விடை? :)

Madhavan Srinivasagopalan said...

(1)// .... அதில் டியூசன் வகுப்பில் எனக்கு பரிச்சயமான பெண்கள் என்னை பார்த்து புன்னகைத்தனர்! //

(2)//...ஆனால் வழியெங்கும் பார்த்த பெண்களின் புன்னகை என்னை மெது நடை போடவைத்தது! //

(3) //.....வழியில் தென்பட்ட பெண்களுக்கு புன்னகைத்தபடியே! //

இதெல்லாம் வேறையா வெளங்கிடும்..

செல்வா said...

//Electricity line...//

Land line...

மாலுமி said...

/////Electricity line...//
Land line..///

டாஸ்க் மார்க்ல லைன்ல நின்னுட்டு இருக்கேன்

Leo Suresh said...

1. bajaj victor illa tvs victor

Leo Suresh said...

margazi madham deepawali eppadi varum

vinu said...

///அடுத்து அந்த google extension. சும்மா அதை ஒரு Browserல போட்டு இருந்தா நாடு பேரு கிடைச்சி இருக்கும் அப்புறம் என்ன? அந்த datasஐ அந்த நாட்டு பேரோட கொடுத்த விக்கிபீடியா பேஜ்ல மேட்செய்தால் விடை கிடைச்சிடும்.////


no datas ///- datum vs data

சுதாகர் குமார் said...

1.சிவன் கோவிலிருந்து சுப்ரபாதம் என்பது தவறு ..
2.பஜாஜ் விக்டரை என்பது தவறு
3.இரவு மொட்டாக பார்த்த தாமரைஎல்லாம் அழகாக மலர்ந்து it only flowers during night time
4.இன்னும் ஒருவாரத்தில் தீபாவளி.not possblie after jan with in a week
5.விஜய் நியூஸ் .. there no news in vijay tv
6.போஸ்ட் ஆபிஸ் சென்றேன்.sunday holiday

anujanya said...

விதூஷ் பஸ் பார்த்து இங்கு வந்தேன். எனக்குத் தெரிந்த வரை லாஜிக் மீறல்கள்:

வெங்கடேச சுப்ரபாதம் - சிவன் கோயிலிலிருந்து வராது :)
பஜாஜ் விக்டர் - ஃபேன்; பஜாஜ் பல்சர் அல்லது செடக் என்று இருக்க வேண்டுமோ? இல்லை விக்டர் தான், ஃபேன் தான் என்றால் 'அவரது பஜாஜ் விக்டர்' என்று வருவது லாஜிக் மீறல்.
மொட்டிலிருந்து மலராக விடியலில் தெரிபவை அல்லியாக இருக்க வேண்டும். தாமரை இல்லை.
தீபாவளி ஐப்பசி மாதம் வரும். அதற்கு இரண்டு மாதம் தள்ளி தான் மார்கழி. அப்போது ஒரு வாரத்தில் தீபாவளி வராது.
விஜய் நியூஸ் - விஜய் டிவியில் செய்திகள் கிடையாது.
அன்று ஞாயிறு - டியூஷன் சென்டர் இருந்தாலும் நிச்சயம் போஸ்ட் ஆபிஸ் இயங்காது. லாஜிக் ...
சரியா பாஸ்?

போட்டி நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

அனுஜன்யா

வெங்கட் said...

எனக்கு ஒரு லாஜிக் தப்பு கூட தெரியலையே...

# நாம இன்னும் வளரணுமோ..?!!!

kathiravan said...

1.வெங்கடேச சுப்ரபாதம் - பெருமாள் கோவிலில் இருந்து வரும்
2. பஜாஜ் விக்டர் - TVS விக்டர்
3. தீபாவளி- மார்கழிக்கு முன்பு வரும்
4. விஜய் நியூஸ் - காலையில் கிடையாது
5. 45 வயதுக்கு மேல் - எந்த வேலைக்கு புதியதாக சேர முடியும்?
6. தாமரை - குளத்தில் மலரும். ஊருணியில்?

மாணவன் said...

online......... :)

அருண் பிரசாத் said...

@ லியோ சுரேஷ்
2 விடைகளும் சரி

@சுதாகர்குமார்
உங்க விடை எல்லாம் சரிதான் ஆனா அந்த தாமரை விடை உல்ட்டாவா சொல்லிட்டீங்க

@அனுஜன்யா
6 விடைகளும் சரி

@கதிரவன்
1,2,3,4 சரி
4,5 தவறு

Marimuthu Murugan said...

1. "ஒரு வேலைக்கு போறதில்லை" ன்னு ஆரம்பத்துல சொல்லிட்டு, 'டியூசன்க்கு பாடம் நடத்த' போகிறார்ன்னு சொல்லி இருக்கீங்க.

2. பஜாஜ் விக்டர் - மின்விசிறி.

3. தாமரை சீசன் இல்லை.

4. ஈரக்கூந்தளோடு - எழுத்துப் பிழை.

5. மார்கழி மாதத்தில் (15 December - 14 January), தீபாவளி வராது.

6. விஜய் டிவில நியூஸ் கிடையாது.

அருண் பிரசாத் said...

@ மாரி முத்து
5,6 மட்டும் சரி

Marimuthu Murugan said...

Arun Ji, please send me, my answers back to marimurugan@gmail.com.

I forgot the order. Need to see what I answered for 5 and 6.

sorry for this inconvinience.

www.rasanai.blogspot.com said...

logic meeral vidaigal ena naan ninaippathu

1. sivan koilil vishnu suprabatham idikkuthe
2. bajaj victor alla tvs victor bike
3. thamarai ooruniyil irukkathu
4. vijay news ippothu illai aanal athu iruntha kaalathil kathai nadappathaga vaithukollalam
5. maarghazhi sunday so no post office and cannot send register post (this logic is good one i think for the creators)
6. akka velai ethuvum illai and endru thittugirarkal aanal avar tuition centrela velai seigirar.

vijay news or thamarai point sari endru eduthukondal 6 logic thavaru endru sonnathuthan 6vathu logic thavaru ena ninaikiraen.
hunt for hint lateathan therinjathu atleast ithvathu sariyaga irunthal santhosham
anyhow i appreciate the hard work by the tk team kudos. thanks
sundar g chennai

அருண் பிரசாத் said...

@ சுந்தர் ஜி
தாமரை, டியூஷன் விடைகள் தவறு

www.rasanai.blogspot.com said...

nandri
city kaaran enbathal thamarai vidai type pannumbothe santhegam irunthathu

velai illai endru akka tittukirargal aanal avarthan tuition centrela paadam nadathugirar endru varugirathe appo etho oru velai seigirar thaane athu sariyana vidai endru ninaikiraen (sendra murai thelivaga ezthuvilaiyo ??)


ezuthiya meethi 4 um sari endral + 5 vathu melae sonna tuition velai

6vathu 6 logic thavaru and endru sonnathu thaan 6vathu thavaru yenenil motham 5 thavarugale. yeninum, meendum muyarchikkiraen ookamalithatharkku nandri
please please comments eppadi tamizhil type pannuvathu enakku theriyavillai sollikodungalaen.
nandri sundar g chennai

திவாண்ணா said...

1. வெங்கடேச சுப்ரபாதம் காற்றில் தவழ்ந்து வந்து குளிர் காற்றோடு போட்டி போட்டு காதுக்குள் சென்றது! எங்க ஊர் சிவன் கோவிலில் இருந்துதான் வருகிறது..//
சிவன் கோவிலில் இருவது வேங்கடேச சுப்ரபாதம் வராது.

௨. வலுக்கட்டாயமாக காதுக்குள் நுழைவதை தடுத்து விட்டு …// அதெப்படி சார்?

3. மொட்டாக பார்த்த தாமரை எல்லாம் அழகாக மலர்ந்து ..//இன்னும் சூரியன் உதயமாகலை. தாமரை மலராது.

4. இன்னும் ஒருவாரத்தில் தீபாவளி..... // மாசம் மார்கழி. தீபாவளி முடிஞ்சிருக்கும்.
5. ஒரு வேலைக்கு போறதில்லை.. //ட்யூஷன் சொல்லித்தறது வேலைதானே?

6. விஜய் நியூஸ் - அப்படி ஒரு சானல் இல்லை.
7. ஞாயிற்றுக்கிழமை போஸ்ட் ஆபீஸ் திறந்திருக்காது.

ஹும்? ஏழாயிடுத்தே? அப்ப 2 ஐ கான்சல் பண்ன வேண்டியதுதான் போல இருக்கு.

www.rasanai.blogspot.com said...

maarghazhi mathathirrkku oru vaarathil deepavali eppadi logic idukkithe
sundar g chennai

தமிழா தமிழா said...

5.தாமரை ஐந்து மணிக்கு பூக்காது

6.ஆறு மணிக்கு மாமா கிளம்பிவிடுவார். பணம் வாங்கியது லாஜிக் இல்லை

தமிழா தமிழா said...

5.தாமரை ஐந்து மணிக்கு பூக்காது

6.ஆறு மணிக்கு மாமா கிளம்பிவிடுவார். பணம் வாங்கியது லாஜிக் இல்லை

திவாண்ணா said...

தொடர..
ஆமா எந்த கோவில் படம் இது? அழகா இருக்கு!

ரசிகன் said...

1. வெங்கடேச சுப்ரபாதம் - சிவன் கோவிலில்
2. பஜாஜ் விக்டர்
3. தாமரை சூரியனை கண்ட பின் தான் மலரும்.
4. ஞாயிறு போஸ்ட் ஆஃபீஸ் விடுமுறை
5. மார்கழி மாதம் - ஒருவாரத்தில் தீபாவளி
6. விஜய் நியூஸ்

அருண் பிரசாத் said...

@ சுந்தர் ஜி
http://www.google.com/transliterate/
இங்க போய் நீங்க போட்ட கமெண்ட்டை அப்படியே போடுங்க தமிழ்ல மாத்தி தரும்

@திவா
5 சரியா கண்டுபிடிச்சிட்டீங்க.... ஒரு முக்கியமான தவறை விட்டுட்டீங்க....
(எதுக்கும் இங்க இருக்கற பழைய கமெண்ட்டுகளை படிங்க்... கொஞ்சம் புரியும்)

@ தமிழா தமிழா
5 வது சரி... 6 வது பணம் சம்பந்தமான லாஜிக் தவறு

அருண் பிரசாத் said...

@ திவா
அந்த கோவில் பத்தி கதை ஆசிரியர் வைகை தல வரலாற்றுடன் விரைவில் விளக்குவார்

@ ரசிகன்
6 ம் சரி

Marimuthu Murugan said...

Here answers for the Remaining 4 logical errors. Please correct.


1. Vengadesa subrapatham is not correct. It should be Tirupavai Pasurams.

2. It is not Sivan Temple. It should be Vishnu temple.

3. Lotus will not grow in OORUNI.

4. Lotus will blosooms when sunlight touches it. At 5 AM, there wont be sun light.

5. Bajaj victor should be TVS victor.

6. To buy milk, why he went to tea shop.

:)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Vidhoosh said...
//தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை..//


ஹையோ ஹையோ.. :))////////

??? ரொம்ப தைரியம்தான் போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// வெங்கட் said...
எனக்கு ஒரு லாஜிக் தப்பு கூட தெரியலையே...

# நாம இன்னும் வளரணுமோ..?!!!
/////////

பாத்து விட்டத்த இடிச்சிடாம வளருங்க.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மாலுமி said...
/////Electricity line...//
Land line..///

டாஸ்க் மார்க்ல லைன்ல நின்னுட்டு இருக்கேன்///////

அடுத்து சைட் டிஷ் லைன்ல நிப்பியா?

திவாண்ணா said...

//பஜாஜ் விக்டரை //
விக்டர் டிவிஎஸ் தயாரிப்பு.
சில்லி மீ!

Anonymous said...

எட்டு தவறு உள்ளதே...உங்க ஆற முதல்ல சொல்லுங்க..சரி பார்த்துக்கிறேன்...

ரெவெரி

வைகை said...

@ மாரிமுத்து

1 வது பதிலை தெளிவாக சொல்லவும்

4,5 சரி.. மற்றவை தவறு

வைகை said...

@ www.rasanai.blogspot.com

1,2,5 சரியான பதில்

4 வது பதிலை நேரடியாக சொல்லவும்

3,6 தவறு

வைகை said...

ரெவெரி said...
எட்டு தவறு உள்ளதே...உங்க ஆற முதல்ல சொல்லுங்க..சரி பார்த்துக்கிறேன்...

ரெவெரி//


அந்த எட்ட மொதல்ல சொல்லுங்க.. எங்க ஆறு அதுல இருக்கான்னு சொல்றோம்! ( டீலிங் ஓக்கேவா?) :))

அருண் பிரசாத் said...

விடைகள்:

கதையில் உள்ள ஆறு லாஜிக் மீறல்களை முதலில் சொல்லிவிடுகிறேன்...

1. சிவன் கோவிலில் வெங்கடேச சுப்ரபாதம் போட மாட்டார்கள்.
2. பஜாஜில் விக்டர் என்ற மாடல் இல்லை .. டி.வி.எஸ்ஸில்தான் உண்டு.
3. அதிகாலையில் தாமரை மலராது... சூரியன் வந்த பிறகுதான் மலரும்.
4. மார்கழி மாதம் நிகழும்போது ஒரு மாதத்தில் தீபாவளி என்பது தவறு.
5. விஜய் டிவியில் செய்திகள் கிடையாது.
6. ஞாயிற்று கிழமை போஸ்ட் ஆபிஸ் கிடையாது.

பல நண்பர்கள் லாஜிக் மீறல்களையும் நடைமுறை தவறுகளையும் குழப்பிக்கொண்டார்கள் என்று நினைக்கிறேன். அவைகள் என்னென்ன அது ஏன் தவறு என்று பார்க்கலாம். அதிகம் பேர் குழப்பிக்கொண்டது இவைகளைத்தான்.....

1. பலபேர் சொன்னது டியூசன் எடுப்பவனை எப்படி வேலையில்லாதவன் என்று கூறலாம் என்று.. கதையில் எந்த இடத்திலும் அவன் மாத சம்பளத்திற்கு எடுக்கிறான் என்று சொல்லவே இல்லை.. நண்பன் என்ற முறையிலும் பொழுது போக்கவும்கூட எடுக்கலாம்... அப்படி பார்த்தால் ஊரில் எல்லோருக்குமே ஏதாவது ஒரு வேலை இருந்து கொண்டேதான் இருக்கும்.. யாரும் வெட்டி ஆபிசர் இல்லை போல?
2. அடுத்து ஞாயிற்று கிழமை மாமா ஏன் வேலைக்கு போகிறார் என்று... இன்றைய தேதியில் எவ்வளவோ கம்பெனிகள் ஷிப்ட் முறையில் ஞாயிற்று கிழமையும் உண்டு.
3. அடுத்து 45 வயதில் யார் வேலை தேடுவார்கள் என்று... ஐம்பது வயதிலும் வேலை தேடுபவர்கள் நம் நாட்டில் உண்டு.

Madhavan Srinivasagopalan said...

// 2. பஜாஜில் விக்டர் என்ற மாடல் இல்லை .. டி.வி.எஸ்ஸில்தான் உண்டு. //

ஆனால் பஜாரில்? விக்டர் என்ற மாடல் இருக்கே..

Radha said...

சிவன் கோவிலில் இருந்து சுப்ரபாதம் ?
ஞாயிறு அன்று தபால் அனுப்ப முடிவது ?
மார்கழியில் தீபாவளி?

Radha said...

இது ஒரு லாஜிக் மீறலா இருக்குமா என்று தெரியவில்லை...மார்கழியில் விடியற்காலை ஆறு மணிக்கு முன்னர் தாமரை மலர்ந்திருப்பதை பார்த்ததில்லை. (அதற்கு அந்த நேரத்திற்கு முழிச்சிருக்கணும். :-))

வைகை said...

@ ராதா

மேல பாருங்க... ஆன்சர் போட்டாச்சு.. சரி பார்த்துக்கொள்ளுங்கள்! உங்கள் ஆர்வத்திற்கு நன்றி :))

Radha said...

// மாமா அந்த அதிகாலையிலும் அவரது பஜாஜ் விக்டரை //
வீட்டில் ஒவ்வொருவரும் தனியாக fan வைத்திருக்கிறார்களா? :-)

வெளங்காதவன்™ said...

//லாஜிக் மீறல் 1: எங்க ஊர் சிவன் கோவிலில் இருந்துதான் வருகிறது //வெங்கடேச சுப்ரபாதம் // ஏம்பா ஏன்?
லாஜிக் மீறல் 2: அவரது பஜாஜ் விக்டரை துடைத்து கொண்டிருந்தார்! //பஜாஜ் விக்டர் டூ வீலரா? டி.வி.எஸ். தான் விக்டர்//
லாஜிக் மீறல் 3: நேற்று இரவு மொட்டாக பார்த்த தாமரைஎல்லாம் அழகாக மலர்ந்து //அதிகாலை அஞ்சு மணிக்கே ?//
லாஜிக் மீறல் 4: இன்னும் ஒருவாரத்தில் தீபாவளி.. // ஐப்பசி அப்புறம்தான் மார்கழி //
லாஜிக் மீறல் 5: போஸ்ட் ஆபிஸ் சென்றேன்.. நிரப்பிய அப்ளிகேஷனை பதிவு தபாலில் அனுப்பி// மார்கழி மாதம் ஞாயிறு??? ஏது போஸ்ட் ஆபீசு//
லாஜிக் மீறல் 6: //ஆறு தவறுகள் உள்ளன! // மொத்தம் அஞ்சு தான் இருக்கு///

ஆறாவது மீறல்- ///நண்பனின் டியூசன் செண்டர் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.. பாடம் நடத்த!///

வேலைவெட்டி இல்லைன்னு திட்டுனதா சொல்றாங்க...பொறவு இது வேலை தானே?

ஜெய்லானி said...

சகோ விதூஷ 5 சொல்லிட்டாங்க..!! 6வது லாஜிக் மீறல் என்னன்னு சொன்னா ..?

டியூசன் சொல்லிக்குடுக்கும் அவர் எதுக்கு அத்தானிடன் பணம் கேட்க வேண்டும் . அதான் டியூசண் சொல்லி குடுக்கிறாரே .. அதுவுமில்லாம வேலை வெட்டிக்கு போவதில்லைன்னு அக்கா ஏன் திட்டனும் ..!! :-))

எஸ் சக்திவேல் said...

தலை சுத்துது.

K N MALOLAN said...

1.Sivan koil-suprapaadam
2.Sunday-post office
3.Sunday tuition center
4.how come elder sister scolds unemployed -whenteaching in tuition center?
5.when earning some thing Y ask money from Mama?
6.Baja victor Or TVS victor?

K N MALOLAN said...

1.Sivan koil-suprapaadam
2.Sunday-post office
3.Sunday tuition center
4.how come elder sister scolds unemployed -whenteaching in tuition center?
5.when earning some thing Y ask money from Mama?
6.Baja victor Or TVS victor?