Monday, August 22, 2011

"HUNT FOR HINT" - போட்டி முடிவுகள்....



நண்பர்களே,

கடந்து 5 நாட்களாக பதிவுலகையே தன்வசம் கட்டிபோட்டு இருந்த “HUNT FOR HINT” ல் வெற்றியாளர்கள் முடிவாகிவிட்டது. அதை அறிவிப்பதற்கு முன்னதாக இந்த அமோக வெற்றி பெற உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.



கேம் பற்றிய சில சுவாரசிய தகவல்கள்:

நேற்று (21/08/2011) வரையில் பதிவான,

மொத்த போட்டியாளர்கள்                              : 568
மொத்த PAGE VIEWS                                          : 185,649
HALL OF FAME ல் இடம்பிடித்தவர்கள்            : 15  (இன்று மதியம் வரை)
25 லெவலில் இருப்பவர்கள்                            : 15
21 - 24 லெவலில் இருப்பவர்கள்                     : 31
11 - 20 லெவலில் இருப்பவர்கள்                     : 69

கேம் உருவான விதம்:
சரியாக சொல்ல வேண்டுமானால் ஜூலை 7ஆம் தேதிதான் இந்த சின்ன தீப்பொறி தோன்றியது.... அதை கும்மி நண்பர்கள்கிட்ட பகிர்ந்து கொண்டு போது. “ஓ! தாராளமா செய்யலாமே” என சொல்ல மட மடவென வேலைகளில் இறங்கினோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறைகளை சார்ந்தவர்கள் என்பதாலும், வேலைகளை சரியாக பகிர்ந்து கொண்டதாலும் இதோ 40 நாட்களில் வெற்றிகரமாக முடிக்க முடிந்தது.

முக்கியமாக கோடிங் எழுதிய நாகராஜசோழன், படங்களையும் வெப்பேஜ்களையும் டிசைன் செய்த எஸ் கே, அவ்வப்போழுது ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கிய அனு, டெக்னிக்கல் சப்போர்ட் தந்த டெரர் பாண்டியன், தன் சரியான ஆலோசனைகள் மூலம் இந்த கேமிற்கு புரொபஷனல் லுக் வர வைத்த அருண்பிரசாத் ஆகியோரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

மேலும், இந்த கேமை வடிவமைக்க தங்கள் உழைப்பு, நேரம் மற்றும் பணத்தை செலவழித்ததோடு இல்லாமல் கேமுக்கு மார்கெட்டிங் செய்த டெரர் கும்மி நண்பர்களுக்கும் பஸ்களை ரீஷேர் செய்த இணைய நண்பர்களுக்கும் சிறப்பு நன்றிகள்....

கேம் ரிலீசான ஆகஸ்ட் 17, காலை நாங்கள் அடைந்த மகிழ்ச்சியை வார்தைகளில் சொல்ல இயலாது. வெகுநாள் தவமிருந்து பெற்ற குழந்தை முதல் அடியை எடுத்து வைக்கும் போது எவ்வளவு மகிழ்ச்சி வருமோ அவ்வளவு மகிழ்ச்சி. ஆனால், சிறிது நேரத்தில் சில தொழில்நுட்ப கோளாறால் பிரச்சனை வர எங்கள் டெக்னிக்கல் டீம் பட்ட பாட்டையும் அது சரி செய்த பிறகு அடைந்த மகிழ்ச்சியும் அனுபவித்தால்தான் தெரியும்.

எல்லாம் சரியாக சென்று கொண்டு இருந்த போது சிலர் கூட்டாக விளையாடி முன்னேறுவதை கண்டோம். கூட்டாக ஒரே ஐடியில் விளையாடினாலும் பரவாயில்லை வேறு வேறு ஐடியில் ஒன்றாக முன்னேறியதை கண்டு கேமை வடிவமைத்த எங்கள் அனைவருக்கும் வருத்தமே. சிலருக்கு எச்சரிக்கை, சிலரை இடை நீக்கம் என செய்து ஓரளவிற்கு கட்டுப்படுத்தினோம்.

கூட்டாக விளையாடியவர்கள் வெற்றி பெற்றதால் நேர்மையாக விளையாடிய சிலர் பாதிக்கப்பட்டு இருப்பது உண்மைதான். அவர்களுக்கு எங்களின் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இவைகளை ஓரளவிற்கு அடுத்த சீசனில் கட்டுபடுத்துவோம் என நம்புகிறோம்.

சரி வெற்றியாளர்கள் அறிவிப்பிற்கு போகலாம்

HALL OF FAME:

16. இமலாதித்தன், நாகப்பட்டினம்
15. விதூஷ், சென்னை
14. கோ.கணேஷ், பெங்களூர்
13. ஆர் வி
12. எம் எஸ் சிவகுமார்
11. எஸ் எம், மதுரை
10. சூஜை
9. ஹேமமாலினி, விசாகபட்டினம்
8. வைரஸ்
7. ரசிகன், சென்னை
6. கேவீஆர், சவுதி

முதல் 5 இடங்களை பிடித்தவர்கள்:


5. அப்துல் பசீத் - துபாய்
4. பலே பிரபு - திருச்சி

3. அர்ஜுன், திண்டுக்கல்.

2. ஹரி ஷங்கர், சென்னை.

போட்டி நடந்த இருநாளும் கம்ப்யூட்டர் முன்பே அமர்ந்து இரவு பகலாக போராடி முதல் இடத்தை பெற்றவர்,

1. சுந்தர் ராஜன், சென்னை.

டிஸ்கி: இன்னும் விளையாடி கொண்டு இருப்பவர்களின் ஆர்வத்தை கருதி இன்னும் சில நாட்கள் கழித்து விடைகளை வெளியிடலாம் என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

விளையாட்டில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்துகளையும் அனுபவத்தையும் கமெண்ட்டில் சொல்ல வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்....

நீங்கள் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியப்பட்டு இருக்காது. ஒவ்வொரு விடைகளை கண்டுபிடிப்பது எவ்வளவு கடினம் என எங்களுக்கு தெரியும், நீங்கள் செய்த உழைப்பை நாங்கள் அறியாமல் இல்லை. உங்கள் உழைப்பிற்கு எங்கள் டீம் தலை வணங்குகிறது.

இந்த விளையாட்டால் நீங்களும், கேள்விகள் வடிவமைப்பால் நாங்களும் பல விஷயங்களை கற்றுகொண்டதை மறுக்க முடியாது. ஒரு வித்தியாசமான போட்டியை உங்களுக்கு வழங்கிய மகிழ்ச்சியுடன் உங்களிடம் இருந்து தற்காலிகமாக விடை பெறுகிறோம். கேம் வெப்சைட் தொடர்ந்து இயங்கும்.

வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகள்....
மற்றும்
கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்....
சிறிது இடைவெளிக்கு பின் மீண்டும் சந்திப்போம்....


71 comments:

வைகை said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் :-))

Madhavan Srinivasagopalan said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்..

மாலுமி said...

கலந்து கொண்ட அனைவருக்கும், பரிசுகளை வென்ற ஐந்து பேருக்கும் என் வாழ்த்துக்கள்

Vidhoosh said...

வாழ்த்துக்கள் நண்பர்களே.. :))

ரொம்ப சுவாரசியமாக இருந்தது.

மாணவன் said...

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்..

karthikkumar said...

போட்டியில் பங்கேற்ற & வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் + நன்றிகள் .. :))

Prabu Krishna said...

நன்றி மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

நல்ல பயனுள்ள விளையாட்டு.

மொக்கராசா said...

முக்கியமாக கோடிங் எழுதிய நாகராஜசோழன், படங்களையும் வெப்பேஜ்களையும் டிசைன் செய்த எஸ் கே, அவ்வப்போழுது ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கிய அனு, டெக்னிக்கல் சப்போர்ட் தந்த டெரர் பாண்டியன், தன் சரியான ஆலோசனைகள் மூலம் இந்த கேமிற்கு புரொபஷனல் லுக் வர வைத்த அருண்பிரசாத் ஆகியோரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

மேலும், இந்த கேமை வடிவமைக்க தங்கள் உழைப்பு, நேரம் மற்றும் பணத்தை செலவழித்ததோடு இல்லாமல் கேமுக்கு மார்கெட்டிங் செய்த டெரர் கும்மி நண்பர்களுக்கும் பஸ்களை ரீஷேர் செய்த இணைய நண்பர்களுக்கும் சிறப்பு நன்றிகள்....//

உண்மையில் இங்கே குறிப்பிட்டுள்ள எல்லாரையும் பாராட்டுகிறேன்.

Veni, Vidi, Vici என்று ஒரு லத்தின் பழமொழி ஒன்று உள்ளது...இதன் அர்த்தத்தை டெரர் கும்மி ஏற்றவாரு மாற்றலாம்.
அதற்கான முழு தகுதியும் இவர்களுக்கு உண்டு ....

'Terrorkummi came,Terrorkummi saw,Terrorkummi conquered;

vinu said...

congrats and applause
congrats and applause
congrats and applause
congrats and applause
congrats and applause
congrats and applause
congrats and applause

மங்குனி அமைச்சர் said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் :-))

தர்ஷினி said...

Hearty Congrats to all :)

TERROR-PANDIYAN(VAS) said...

கலந்து கொண்ட அனைவருக்கும், பரிசுகளை வென்ற ஐந்து பேருக்கும்

இப்பொழுது விளையாடி கொண்டு இருக்கும்

Marimuthu
SGA

அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த பதிவையும், கமெண்டுகளையும் படித்துகொண்டிருக்கும் சிரிப்பு போலீஸ் ரமேஷ்க்கு வாழ்த்துக்கள் !!!!

Balakumar Vijayaraman said...

வடிவமைத்தவர்களுக்கும், வெற்றி பெற்றோர்க்கும், கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

Admin said...

முதலில் இந்த போட்டிக்காக உழைத்தவர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள். சாம்பிள்களை விளையாடியப்போது எளிதாக இருந்தது. ஆனால் விளையாட்டோ சற்று கடினமாக இருந்தது.

சில கேள்விகள் எளிதாக இருந்தாலும், அதிகமான கேள்விகளில் கடின உழைப்பு தெரிந்தது.

என்னை வியக்க வைத்த சில:

1.Page source-ல் பதிலை பார்க்க முடியாதவாறு இருந்தது.

2. ஏதோ ஒரு கேள்விக்கு URL-ல் Cricket என்று டைப் செய்தேன். ஆனால் அது மீண்டும் முகப்பு பக்கத்திற்கே சென்றது.ஆனால் சில லெவல்களுக்கு பிறகு cricket என்ற URL இருந்தது.

3. லெவல்களின் முகவரிகளை தேடுபொறிகளில் வராதவாறு பார்த்துக் கொண்டது.

என்னை ஏமாற்றிய(?) சில:

1. ஆறாவது லெவலில் உள்ள படத்தை கூகிளில் தேடிய போது, ஒரு Code-ஐ பரிந்துரை செய்தது. அது விடையாக இருக்காது என்று நினைத்து விட்டுவிட்டேன். பிறகு பல மணி நேரத்திற்கு பின் மீண்டும் அந்த code-ஐ பார்த்த போது தான் விடை தெரிந்தது.

2. Barcode படத்தை நெட்டில் தேடிய போது கூகிள் தவறான பெயரை காட்டியது. அதற்கும் பலமணி நேர செலவிற்கு பின் தான் கண்டுபிடித்தேன்.

3. 23a லெவலுக்கு வந்த பின், நாம தான் ஃபர்ஸ்ட் தாண்ட போகிறோம் என நினைத்தால், அடுத்த லெவல் என்னை ஏமாற்றியது.

விளையாடிய மூன்று நாட்களும் இது பற்றி தான் நினைப்பு முழுவதும். Forum மட்டும் இல்லையெனில், க்ளூ கிடைக்காமல் பாதியிலேயே நின்றிருப்பேன்.

வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

பரிசு பெற்றவர்களுக்கும், போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

Forum-ல் க்ளூ கொடுத்த Admins மற்றும் சக போட்டியாளர்களுக்கு எனது நன்றி!

இதற்காக கடினமாக உழைத்த டெர்ரர்கும்மி நண்பர்களுக்கு பாராட்டுக்கள்!

Admin said...

என் கம்மென்ட் பதிவு போல ஆயிடுச்சோ?

:) :) :)

அருண் பிரசாத் said...

நன்றி Vidhoosh, பலே பிரபு,

@மொக்கராசா
டெரர்கும்மி.காம் கும்மி அடிக்க மட்டும் தெரிஞ்சவங்க இல்லைனு நிரூபிச்சிட்டோம் பாஸ்

Thanks Vinu

Thanks தர்ஷினி

எஸ்.கே said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

அருண் பிரசாத் said...

நன்றி வி.பாலகுமார் சார்

@ அப்துல் பஷீத்
இப்படி விளக்கமா சொன்னாதான பாஸ் எங்களுக்கும் மகிழ்ச்சியா இருக்கும்

pagesource, url change, search எல்லாம் விடையை தரகூடாது என பார்த்து பார்த்துதான் வடிவமைத்தோம்

உங்கள் உழைப்பிற்கு பலன் கிடைத்துவிட்டது....

கருத்துக்கு நன்றி அப்துல்

செல்வா said...

// Abdul Basith said...
என் கம்மென்ட் பதிவு போல ஆயிடுச்சோ?

:) :) :)//

ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்க :) உங்கள் ஊக்கத்திற்கும் பாரட்டுகளுக்கும் நன்றிகள் பல!

Arjun said...

உண்மையில் இந்த விளையாட்டு வியக்க வைத்தது. இதற்குப் பின்புறம் இருந்து உழைத்த புரோகிராமர், டிசைனரின் பணி அற்புதமானது.

ஒவ்வொன்றும் வித்தியாசமான கேள்விகள்.ஒரு லெவலில் 5 மணி நேரமாக நின்ற போது பெரிய சோதனையாக இருந்தது. ஆனால் அதன் விடை எளிமையாக இருந்ததைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டேன்.

மூன்று நாட்களாக மற்ற வேலைகளுக்கிடையில் இதனை விளையாடியது மிக்க சுவாரசியமான அனுபவமாக இருந்தது.

முதல் நாள் இரவும் இரண்டாம் நாள் இரவும் கேள்விக்கான பதில் என்னவாக இருக்கும் என்று நினைத்தவாறே தான் தூங்கிப் போனேன்.
Really Super amazing game.

பரிசு பெற்றவர்களுக்கும் விளையாடிய நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

இந்த போட்டியை நடத்திய டெரர்கும்மி தளத்திற்கும் அட்மின்க்கும் நன்றி.

ரேவா said...

இந்த விளையாட்டிற்கும், அதற்காய் மெனக்கெட்ட அத்துணை சகோதரர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுதல்கள்..நல்லதொரு முயற்சியை சிறப்பாய் செய்து முடித்துள்ளீர்கள்...கேம் இன் ஒவ்வொரு லெவெலிலும் ஒவ்வொரு விஷயங்கள் தெரிந்து கொண்டோம்...விடை தெரிய நாங்கள் குழம்பியது எவ்வளவு உண்மையோ, அவ்வளவிலும் உங்கள் உழைப்பு தெரிகிறது...பதிவுலகை கட்டிப் போட்ட ஹன்ட் ஆப் ஹின்ட் நல்ல உழைப்பின் வெளிப்பாடு.... உங்கள் குழுவுக்கும், வெற்றி பெற்ற நண்பர்களுக்கும், வெற்றிக்குள் வந்து தவற விட்ட நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..விளையாட்டை விளையாட்டாய் எடுத்து கொள்வோம்...வாழ்த்துக்கள் குழு உறுப்பினர்களுக்கு...

Unknown said...

எங்கள் (&$%#$%#%)கம்பெனி அனுமதி தராத காரணத்தால்
விளையாட முடியவில்லை :((((
இருந்தாலும்
கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Unknown said...

வேறு சாப்பாடு போட்டி எங்கு இருந்தாலும் கூறவும்

Subash said...

super,,,,,, i congrats all of you,,but still im struggle in levl 19th.,,,,so saddddd,,,after i completed only im fully satisfied,,

அருண் பிரசாத் said...

நன்றி அர்ஜுன்.... உழைப்பிற்கு ஏற்ற பரிசையும், மேலும் சில புதிய தகவல்களையும் நீங்கள் பெற்றதில் மகிழ்ச்சி

@ரேவா
என்ன மேடம்... கேமை முடிக்காம விட்டுட்டீங்க... பரிசை பெறுவதை விட பங்கேற்றதிலும், அதானால் புதிய விஷயங்கள் அறிந்து கொள்ளவதிலும்தான் உண்மையான வெற்றி இருக்கு...

அருண் பிரசாத் said...

@ siva
// எங்கள் (&$%#$%#%)கம்பெனி அனுமதி தராத காரணத்தால்
விளையாட முடியவில்லை :((((
இருந்தாலும்
கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்//
அவங்க அனுமதிச்சிருந்தா மட்டும் ?

@ Subash
// super,,,,,, i congrats all of you,,but still im struggle in levl 19th.,,,,so saddddd,,,after i completed only im fully satisfied,,//

yes, Thats the Sprit Subash... to respect that sprit, we didnt revealed the answers now

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்திய,பாராட்டிய அனைவருக்கும் நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி!

Subash said...

ok ,,thanks,,,i just complted levl19th,,,oh god,,super,,,, good thinking game,,thank u again.

செல்வா said...

// ok ,,thanks,,,i just complted levl19th,,,oh god,,super,,,, good thinking game,,thank u again.
.
//

Once again thanks a lot sir. Try to complete all the levels :))

TERROR-PANDIYAN(VAS) said...

@Selva

//Once again thanks a lot sir. Try to complete all the levels :))//

பாருடா!! புள்ளை இங்கிலிபிஷ் எல்லாம் பேசுது.... :)

மாணவன் said...

// TERROR-PANDIYAN(VAS) said...
@Selva

//Once again thanks a lot sir. Try to complete all the levels :))//

பாருடா!! புள்ளை இங்கிலிபிஷ் எல்லாம் பேசுது.... :)//

இந்த புள்ளைக்குள்ளயும் ஏதோ ஒன்னு இருக்கு பாரேன்! :))

எஸ்.கே said...

இந்த விளையாட்டிற்கு கிடைத்த வரவேற்புதான் எங்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சியை அளித்தது. இத்தனை பேருக்கு பிடித்த மாதிரியான ஒன்றை அளித்திருக்கிறோம் என்கிற மனநிறைவு என்றும் மறையாது.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

போட்டியில் பங்கேற்ற & வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
இப்போட்டியை சிறப்புற வெற்றிகரமாக உருவாக்கிய அனைத்து டெரர்கும்மி நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்.மென்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்...

செல்வா said...

//பாருடா!! புள்ளை இங்கிலிபிஷ் எல்லாம் பேசுது.... :)
/

ஹி ஹி.. சும்மா முயற்சி பண்ணினேன்.. தப்பா போச்சோ ?!

cheena (சீனா) said...

அன்பு நண்பர்களே ! அருமையான விளையாட்டு - டெரர் கும்மி குழுமத்தின அனைத்து உறுப்பினர்களின் கடும் உழைப்பும் திறமையும் பாராட்டத்தக்கது. கடினமான புதிர்கள் தான் - எளிதாகப் பலர் கண்டு பிடித்து விட்டார்கள் போலும். அனைத்து உறுப்பினர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும், மற்றவர்களுக்கும் வடிவமைத்தவர்களுக்கும், நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா

வெங்கட் said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்..!

அருண் பிரசாத் said...

@ சீனா ஐயா...
மிக்க நன்றி ஐயா, உங்க வார்த்தைகள் எங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கிறது....

குசும்பன் said...

கும்மி டீம் அனைவருக்கும் வாழ்த்துகள்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

வாழ்த்திய,பாராட்டிய அனைவருக்கும் நன்றி!

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி!

Anonymous said...

நல்ல முயற்சி !!போட்டியில் கலந்துகொண்ட மற்றும் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!!

சில காரணங்களால் என்னால் கலந்து கொள்ள முடிய வில்லை ., அதற்கு மிகவும் வருத்தங்கள் ( எல்லாரும் சொல்லும் போதும்., கேக்கும் போது செம கடுப்பு கூட வருது மிஸ் பண்ணிடனேன் னு நினச்சு )

--
கல்பனா இராஜேந்திரன்

அருண் பிரசாத் said...

நன்றி குசும்பன் சார்

@கல்பனா...

இண்ட்ரஸ்ட் இருந்தா இப்போவும் விளையாடலாம்...
பரிசுக்காக விளையாடுறதை விட புது விஷயம் கத்துகறதுக்காக விளையாடிப்பாருங்க :)

Ganesh Gopalasubramanian said...

சூப்பருங்க... உங்க ஒற்றுமையும் டிசைனும் பொறாமை பட வைக்குது...
இத்தனை பேரு ஒண்ணா கூடி கும்மி அடிக்கிறதுன்னு சும்மாவா... ரொம்ப நல்லா இருந்தது... இது போல் அடிக்கடி நடத்தவும்... ப்ரைஸ் இல்லைன்னாலும் கூட ஓகே தான் ;)

அருண் பிரசாத் said...

நன்றி கணேஷ்... முயற்சிக்கிறோம்

. said...

Superb game... i never forgot this event in my life because i got more happy after a long period.

I like to say thanks to

Terrorkummi Team and its members...

Admin....

Members who providing clue in discussion form and helped me.

Prabu Krishna said...

உண்மையில் இரவில் ஒரு லெவல் முடிக்க முடியாமல் படுத்த போது கனவில் கூட அதுதான் வந்தது. (கனவும், நினைவும் நீயே......)

உண்மையில் போரும் இல்லை என்றால் முடித்து இருக்கவே முடியாது. அதே சமயம் சில கேள்விகள் எல்லோராலும் பதில் அளிக்க இயலாது என்பது என் கருத்து.

விடைகளை வெளியிடும் போது ஏன் அவை விடை என்பதையும் சொல்ல வேண்டும். நிறைய பேருக்கு அந்த சந்தேகம் இருக்கும். அத்துடன் நான் எப்படி நினைத்து பதில் கூறி உள்ளேன் என்பதை உங்களின் தெளிவான கருத்துகளுடன் ஒப்பிட ஆசை.

இம்சைஅரசன் பாபு.. said...

கலந்து கொண்ட அனைவருக்கும், பரிசுகளை வென்ற ஐந்து பேருக்கும் என் வாழ்த்துக்கள்

ஒய்ட்டு லக்கான் கோழி ஒன்னு கூவுது said...
This comment has been removed by the author.
அருண் பிரசாத் said...

//ரத்த பூமிக்கு ரிவீட் அடிப்போர் சங்கம் said...
This post has been removed by the author. //

தக்காளி...அந்த பயம் இருக்கட்டும்

இம்சைஅரசன் பாபு.. said...

//ரத்த பூமிக்கு ரிவீட் அடிப்போர் சங்கம் said.//

ஹி ..கி ரிவீட்ன்னு சொல்லிக்கிட்டு ..அப்பீட் ஆகிட்டாரு போல

Unknown said...

// nvNePN இந்த பிட்டுல ஒரு clue இருக்கு அத வச்சி என் கம்மென்ட்ட கண்டு புடிச்சிகோங்க //

வெரி சிம்பிள் ...........

எதோ என்னால முடிஞ்சது ..... ஹி ஹி

Chitra said...

போன வாரம் லீவு. மிஸ் பண்ணிட்டேனே....

Congratulations to the winner!

வைகை said...

அருண் பிரசாத் said...
//ரத்த பூமிக்கு ரிவீட் அடிப்போர் சங்கம் said...
This post has been removed by the author. //

தக்காளி...அந்த பயம் இருக்கட்டும//


அடப்பாவிகளா? ஆட்டோட சைஸ் தெரியுறதுக்குள்ள அடிச்சி பத்திட்டிங்களே? போங்கப்பா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இம்சைஅரசன் பாபு.. said...
//ரத்த பூமிக்கு ரிவீட் அடிப்போர் சங்கம் said.//

ஹி ..கி ரிவீட்ன்னு சொல்லிக்கிட்டு ..அப்பீட் ஆகிட்டாரு போல/////

இல்ல, அண்ணன் ரிவீட்ட மாத்தி அடிச்சிட்டாருன்னு நினைக்கிறேன்... இப்ப தக்காளி சட்னியோட வருவாரு....

Anonymous said...

கேம் முடிஞ்சிபோச்சா?! இது தெரியாமல் இன்னும் 10வது லெவலை தாண்ட முடியாமல் அவதிப்படுகிறேன். 10 வது லெவல் மட்டும் சொல்லுங்கள்.. பிறகு நான் முயற்சித்துக்கொண்டேயிருக்கிறேன். ரொம்ப ஈஸின்னு க்ளு சொல்றாங்க...ஆனா கண்டுபிடிக்கவே முடியல.

TERROR-PANDIYAN(VAS) said...

//illa ..... vera ethachum clue venuma//

அண்ணே ஏதாவது க்ளு வேணும்... :)

நீச்சல்காரன் said...

வெற்றியாளர்களுக்கும் படைப்பாளருக்கும் வாழ்த்துகள்.

ஜாவா ஸ்கிரிடில் வடிவமைப்பு இருக்கலாம் என யூகித்திருந்தேன் ஆனால் அருமையாக aspயில் வடிவமைத்துவிட்டீர்கள். கச்சிதமான போட்டிப் பக்கங்கள்.
போட்டி முழுவதும் கூகிள் ஆக்கிரமிப்பு அதிகமிருந்தது.
போட்டியாளர் எத்தனையாவது இடம் என்று அறிந்து கொள்ளமுடியாததால், வின்னர்கள் தெரிவு செய்ததும் போட்டியில் தொய்வு கொண்டதாக உணர்கிறேன்.
forum பகுதியில் கொடுக்கும் க்ளூக்களை முறையாக போட்டிப் பக்கத்திலேயே கொடுத்திருந்தால் எல்லா க்ளூவும் எல்லாருக்கும் சமமாக அமைந்திருக்கும் என நினைக்கிறேன்.

அருண் பிரசாத் said...

Thanks Hari

@பலே பிரபு
இன்னும் சிலர் விளையாடிட்டு இருக்காங்க அதனால விடைகளை எப்போ வெளியிடலாம்னு யோசிச்சிட்டு இருக்கோம்

@ சித்ரா
இப்பொ கூட ஒண்ணும் இல்லை விளையாடலாமே :)

அருண் பிரசாத் said...

@ ஷீ -நிசி
தொடர்ந்து விளையாடுங்க... கண்டிப்பா முடிச்சிடலாம்.... விடை கண்டு பிடிக்கறவரைதான் கஷ்டம்... கண்டுபிச்சிட்டா சே இது தோணலையேனு தலைல அடிச்சிப்பீங்க

@ நீச்சல்காரன்
பாராட்டுக்கு நன்றி பாஸ்
முதல்லயே வின்னர் தெரிய கூடாதுனுதான் லீடர்போர்டை குறிப்பிட்ட லெவலுக்கு அப்புறம் அப்டேட் செய்யலை... ஆனாலும் தோய்வு ஏற்பட்டது உண்மை அதுக்கு கடைசி லெவலும் காரணமாக இருக்கலாம்....

அந்த பேஜ்லேயே க்ளூ கொடுப்பது பற்றி அடுத்த சீசனில் யோசிக்கிறோம் நீச்சல்

Arjun said...

போட்டியே Klueless என்ற முறைப்படி இருக்கிறது. இதில் அந்த பக்கத்திலேயே clue கொடுக்கலாமா? பாரம் தான் கரெக்ட்

raamaarun (இராம அருண் ) said...

என்னை போன்றவர்கள் இன்னும் தேடிக் கொண்டே இருக்கிறோம், பௌர்ம்ல ரிப்ளை போடுங்க பிளீஸ் நான் இன்னும்
23b ல தான் இருக்கேன்

Anonymous said...

@அருண் பிரசாத்
//தொடர்ந்து விளையாடுங்க... கண்டிப்பா முடிச்சிடலாம்.... விடை கண்டு பிடிக்கறவரைதான் கஷ்டம்... கண்டுபிச்சிட்டா சே இது தோணலையேனு தலைல அடிச்சிப்பீங்க///

நான் தலைல அடிச்சிக்கறேன்.. தயவு செய்து விடையை சொல்லுங்க.. :)

Unknown said...

என்னோட கமெண்ட் அ ............ நீங்க கண்டு புடிக்கல போல ............. ஓகே நானே ANSWER சொல்லிடவா ..?!?!?

smilzz said...

congrats to all winners!
Wonderful puzzle game! Great effort.

Actually 5th level mudujadum "Hunt for hint fever " vandruju(exam fever madri).Result potadukapram ta sariyapoju.Ini tairiyama 6th level viladalam :p

///எங்கள் டீம் தலை வணங்குகிறது//
ஐயோ ரெம்ப glare அடிக்கிறது !

USAA said...

It was a good effort, I am still playing (in level 19) . In some levels I stuck badly....but I enjoyed it.

asksukumar said...

நான் இன்னமும் 24 தான் இருக்கேன்.உண்மையிலேயே அருமையான முயற்சி..எனக்கு பலவித கதவுகளை திறந்துவிட்டது. இந்த விளையாட்டு!

அனைத்து Admin மற்றும் உடன் விளையாடிய நண்பர்களுக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும்.

Unknown said...

நீங்க கண்டு புடிக்கிற மாதிரி தெரில ....... நானே ANSWER சொல்லிடுறேன்


ANSWER : bit.ly/nvNePN

இதுக்கு நான் ஏற்கனவே ரெண்டு குடுத்து இருந்தேன் .............

1. bit
2. url

..... he he

Admin said...

பரிசு கிடைத்தது. மீண்டும் அனைவருக்கும் எனது நன்றி!