Monday, August 8, 2011

பேச்சுலர் சமையல் ( ங்கொய்யாலே சாவுங்கடா )

முஸ்கி : என்னது டெர்ரர் கும்மியில் சமையல் குறிப்பா ?
என்ன பண்ணி தொலையிறது இந்த குரூப்ல
" கல்யாணம் ஆகாத பசங்க இருக்காங்க "
" ( எப்பவும் ) கல்யாணமே ஆகாத பசங்களும் இருக்காங்க..
அவங்களுக்காக தான்.. இது.. ( எல்லாம் என் தலையெழுத்து.. )

" வெஜ் சாம்பார் செய்வது எப்படி ? "


( கம கமக்கும் வெஜ் சாம்பார் )


தேவையான பொருட்கள் :

கிச்சன் :1 (உங்க வீட்டில் இருக்கணும் )

கேஸ் அடுப்பு : 1 (இரண்டு பர்னர் கொண்டது )

கேஸ் சிலிண்டர் : 1 (கேஸ் உடன் )

கேஸ் : தேவையான அளவு

பாத்திரம் : 2 (சைஸ் உங்களுக்கு தேவையான அளவு )

கரண்டி : 2 ( பாதாள கரண்டி இல்லை )

டேபிள் ஸ்பூன் : 3 ( டேபிள் இல்லாமல் )

லைட்டர் : 1 ( இல்லாவிட்டால் தீப்பெட்டி )

தண்ணீர் : 6 லிட்டர்

டுஸ்கி : நோ , நோ ..... இதுக்கே கோவப்பட்டு அருவாள எடுத்தா எப்படி? இன்னும் செய்முறை வேற இருக்கே ?

செய்முறை :

முதலில் கிச்சனுக்குள் நுழையவும் ,லைட்டர் அல்லது தீப்பெட்டி கொண்டு கேஸ் அடுப்பைபற்ற வைக்கவும்.ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்து இரண்டு பாத்திரங்களையும் கழுவி கொள்ளவும் ,ஒரு பாத்திரத்தை பற்ற வைத்த அடுப்பின் மேல் வைக்கவும் ,அதில் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.

கொதிக்க வைத்த நீரை வைத்து அடுத்த பாத்திரத்தைகழுவவும் ,பின்பு பிரிட்ஜில் இருக்கும் நேத்து இடது பக்கத்து வீட்டில் ஓசி வாங்கி மீதமுள்ள சாம்பாரை எடுக்கவும்..அதை அந்த பாத்திரத்தில் ஊற்றி 5 நிமிடம் சிம்மில் வைக்கவும்.

இப்போது சுவையான "வெஜ் சாம்பார்" ரெடி .அடுத்து உங்கள் இஷ்டம் போல் வலது பக்கத்து ( தக்காளி..... தப்பி தவறி கூட இடது பக்கத்து வீட்டுக்கு போயிடாதிங்க செருப்படி விழும் , நேத்துதான் சாம்பார் ஓசி வாங்கி இருக்கோம் ) வீட்டிலோ ,எதிர்த்த வீட்டிலோ தேவையான அளவு சோறு ஓசி வாங்கி ,இந்த சுவையான "வெஜ் சாம்பார்" ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

டிஸ்கி : ஹி,ஹி,ஹி........ இன்னும் நிறையா ஐட்டம் இருக்கு ஒன்னு ஒன்னா எடுத்து விடுறேன் .

இப்படிக்கு

மங்குனி அமைச்சர்
தலைவர்
ஓசியில் உடம்பை தேத்துவோர் சங்கம்

66 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பின்பு பிரிட்ஜில் இருக்கும் நேத்து இடது பக்கத்து வீட்டில் ஓசி வாங்கி மீதமுள்ள சாம்பாரைஎடுக்கவும்.//

எங்க வீட்டுல பிரிட்ஜ் இல்லியே எங்கிருந்து எடுக்குறது?

வைகை said...

முஸ்கி : என்னது டெர்ரர் கும்மியில் சமையல் குறிப்பா ?///

இங்கதான் முக்கியமா வேணும்.. :))

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பின்பு பிரிட்ஜில் இருக்கும் நேத்து இடது பக்கத்து வீட்டில் ஓசி வாங்கி மீதமுள்ள சாம்பாரைஎடுக்கவும்.//

எங்க வீட்டுல பிரிட்ஜ் இல்லியே எங்கிருந்து எடுக்குறது?////

அண்ணா ப்ரிட்ஜில இருந்து எடுக்த்துக்க.. வழக்கமா அங்கதான எடுப்ப?

வைகை said...

வெஜ் சாம்பார் செய்வது எப்படி ?////




சாம்பார்னாலே அது வெஜ் தானே?

எஸ்.கே said...

தங்கள் சமையல் அருமை சுவையோ குளுமை ஆனால் வயிறோ...

வைகை said...

கேஸ் சிலிண்டர் : 1 (கேஸ் உடன் )//

நம்ம ஜெயந்துக்கு இது தேவையில்லை :)

வைகை said...

முதலில் கிச்சனுக்குள் நுழையவும் //

கிச்சன் பூட்டியிருந்தா என்ன பண்ணனும்?

எஸ்.கே said...

சார் ரச வாங்கி செய்வது எப்படி?

வைகை said...

லைட்டர் அல்லது தீப்பெட்டி கொண்டு கேஸ் அடுப்பைபற்ற வைக்கவும்.//

அடுப்பையே பத்த வைக்கணுமா இல்லை பர்னர மட்டுமா?

வைகை said...

பாத்திரத்தில் ஊற்றி 5 நிமிடம் சிம்மில் வைக்கவும்..

சிம்கார்ட் ரெம்ப சின்னமா இருக்கே? பாத்திரத்த அதுல வைக்க முடியுமா?

வைகை said...

ஹி,ஹி,ஹி........ இன்னும் நிறையா ஐட்டம் இருக்கு //

ஹி..ஹி.. இதெல்லாம் வேற ஓசி தர்றாங்களா இப்ப?

இம்சைஅரசன் பாபு.. said...

//பின்பு பிரிட்ஜில் இருக்கும் நேத்து இடது பக்கத்து வீட்டில் ஓசி வாங்கி மீதமுள்ள சாம்பாரைஎடுக்கவும்.//

எங்க வீட்டுல பிரிட்ஜ் இல்லியே எங்கிருந்து எடுக்குறது//

உனக்கு ஊசின சாம்பார் தானே பிடிக்கும்.....நீ சுட வைக்காம அப்படியே சாப்பிடலாம்

எஸ்.கே said...

உனக்கு ஊசின சாம்பார் தானே பிடிக்கும்.....நீ சுட வைக்காம அப்படியே சாப்பிடலாம்//
No he is a hygienic person!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கேஸ் : தேவையான அளவு//

தேவையான அளவு தேவைஇல்லாத அளவு ன்னு எப்படி கண்டுபிடிக்கிறது?

Madhavan Srinivasagopalan said...

@ Ramesh// எங்க வீட்டுல பிரிட்ஜ் இல்லியே எங்கிருந்து எடுக்குறது? //

மொதல்ல பக்கத்து வீட்டு 'பிரிட்ஜ்' எடுத்து உங்க வீட்ல வச்சிக்கவும்..

மாணவன் said...

//என்னது டெர்ரர் கும்மியில் சமையல் குறிப்பா ?//

நல்லாருக்கு.. நல்லாருக்கு முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள்! :))

மாணவன் said...

//" ( எப்பவும் ) கல்யாணமே ஆகாத பசங்களும் இருக்காங்க..
அவங்களுக்காக தான்.. இது.. ////

ஆனால் இது நீங்க நம்ம தல டெரரையும், ரமேசையும் சொல்லலன்னு புரிஞ்சிடுச்சு.. :))

மாணவன் said...

//தப்பி தவறி கூட இடது பக்கத்து வீட்டுக்கு போயிடாதிங்க செருப்படி விழும் , நேத்துதான் சாம்பார் ஓசி வாங்கி இருக்கோம் ) வீட்டிலோ ,எதிர்த்த வீட்டிலோ தேவையான அளவு சோறு ஓசி வாங்கி ,இந்த சுவையான "வெஜ் சாம்பார்" ஊற்றிசாப்பிட்டால் சுவையாக இருக்கும்.///

இது யாருக்கு பயன்படுதோ இல்லையோ கண்டிப்பா நம்ம ரமேசுக்கு மிகவும் பயனுள்ளதாக இருகக்கும்... :))

மாணவன் said...

//கேஸ் : தேவையான அளவு//

தேவையான அளவு தேவைஇல்லாத அளவு ன்னு எப்படி கண்டுபிடிக்கிறது?///

நீங்க யூஸ் பண்றது எல்லாமே தேவையில்லாத கேஸ்தான்... :))

மாணவன் said...

//இன்னும் நிறையா ஐட்டம் இருக்கு ஒன்னு ஒன்னா எடுத்து விடுறேன் .///

மிகுந்த எதிர்பார்ப்புடன்......... :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

#இனிய பன்னிக்குட்டி ராம்சாமி தின வாழ்த்துகள்

காட்டான் said...

நல்லாதான்யா செய்யுறீங்க சமொய்ய்ய்ய்யல்ல்ல்ல்.!!??

காட்டான் குழ போட்டான்....

Unknown said...

இதுக்கு பேரு ஓசி சாம்பார் சுட வைப்பது எப்படி கொய்யால கொல்லுரய்யா மாப்ள!

வெங்கட் said...

@ வைகை.,

// அடுப்பையே பத்த வைக்கணுமா
இல்லை பர்னர மட்டுமா? //

அது உங்க இஷ்டம்.. நீங்க ஆசைப்பட்டா
சிலிண்டரை கூட பத்த வெச்சிக்கோங்க..!

vinu said...

கொயால மங்குனி நீர் மட்டும் கையில் சிக்குநீர் கைமாதான்

இந்திரா said...

இதுக்கெதுக்கு சுடு தண்ணி வச்சு பாத்திரம் கழுவணும்??

Anonymous said...

பல பேர் தேடிக்கிட்டு இருக்காங்க வினு ..,புதுபேட்டை டாஸ்மாக் ல ஆறு மணிக்கு மேல கைல மினி பீரோட ஒருத்தர் இருப்பார் அவர் தான் மங்குனி

gayathri said...

,ஒரு பாத்திரத்தை பற்ற வைத்த அடுப்பின் மேல் வைக்கவும் ,அதில் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.

pathirathai pathra vaithu athan mel thanni othina eppadi kothikka vaikka mudium .

neruppu ananjidatha

iyoooooooo iyoooooooo

நிரூபன் said...

" ( எப்பவும் ) கல்யாணமே ஆகாத பசங்களும் இருக்காங்க..
அவங்களுக்காக தான்.. இது.. ( எல்லாம் என் தலையெழுத்து.. )//

அவ்..அமைச்சர் சைட் கப்பில் நம்ம சிரிப்பு போலீஸைக் கடிக்கிறாரே;-)))

நிரூபன் said...

முதலில் கிச்சனுக்குள் நுழையவும் ,லைட்டர் அல்லது தீப்பெட்டி கொண்டு கேஸ் அடுப்பைபற்ற வைக்கவும்.ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்து இரண்டு பாத்திரங்களையும் கழுவி கொள்ளவும் ,ஒரு பாத்திரத்தை பற்ற வைத்த அடுப்பின் மேல் வைக்கவும் ,அதில் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.//

இது நன்றாகத்தானே இருக்கிறது,
அவ்...அவ்....

நிரூபன் said...

அமைச்சரே, காஸ் மூஞ்சியில் சீறினால் நாம என்ன பண்ணுவது?
அதனையும் சொல்லித் தரலாமில்லே.

அருண் பிரசாத் said...

அப்போ நான்-வெஜ் சாம்பார் வெக்கறது எப்படி?

Prabu Krishna said...

ஆமா அடுப்பே பத்த வைக்க தெரியாதவங்க என்ன பண்றது. # டவுட்டு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////" கல்யாணம் ஆகாத பசங்க இருக்காங்க "
" ( எப்பவும் ) கல்யாணமே ஆகாத பசங்களும் இருக்காங்க.. /////

அவங்கள்லாம் பசங்களா? கெழவனுங்களை போயி பசங்கன்னு சொல்றீங்களே வெக்கமா இல்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அவங்களுக்காக தான்.. இது.. ( எல்லாம் என் தலையெழுத்து.. )
" வெஜ் சாம்பார் செய்வது எப்படி ? "
///////

அப்போ அடுத்தது நான்வெஜ் சாம்பாரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கிச்சன் :1 (உங்க வீட்டில் இருக்கணும் )////

ஏன் ஹால்ல வெச்சி பண்ணா வராதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கேஸ் அடுப்பு : 1 (இரண்டு பர்னர் கொண்டது )////

என்கிட்ட மூணு பர்னர் இருக்கு,இப்போ என்ன பண்றது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பாத்திரம் : 2 (சைஸ் உங்களுக்கு தேவையான அளவு )/////

அந்த பாத்தரத்த மாட்டிக்க போறோமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கரண்டி : 2 ( பாதாள கரண்டி இல்லை )//////

ஜல்லிக்கரண்டி ஓகேவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////டேபிள் ஸ்பூன் : 3 ( டேபிள் இல்லாமல் )/////

வெறும் ஸ்பூனே மூணு வேணுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////லைட்டர் : 1 ( இல்லாவிட்டால் தீப்பெட்டி )////

இந்த தீப்பந்தம்லாம் கொளுத்திக்க கூடாதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தண்ணீர் : 6 லிட்டர்///////

ரெண்டு புல்லு இருக்கு போதுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பின்பு பிரிட்ஜில் இருக்கும் நேத்து இடது பக்கத்து வீட்டில் ஓசி வாங்கி மீதமுள்ள சாம்பாரைஎடுக்கவும்.//

எங்க வீட்டுல பிரிட்ஜ் இல்லியே எங்கிருந்து எடுக்குறது?//////

பக்கத்து வீட்டு பிரிட்ஜ்ல இருந்து எடு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பின்பு பிரிட்ஜில் இருக்கும் நேத்து இடது பக்கத்து வீட்டில் ஓசி வாங்கி மீதமுள்ள சாம்பாரை எடுக்கவும்..அதை அந்த பாத்திரத்தில் ஊற்றி 5 நிமிடம் சிம்மில் வைக்கவும்.
இப்போது சுவையான "வெஜ் சாம்பார்" ரெடி ////////

இதுக்கு பக்கத்து வீட்லயே சுட வெச்சி வாங்கிடலாமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வீட்டிலோ ,எதிர்த்த வீட்டிலோ தேவையான அளவு சோறு ஓசி வாங்கி ,இந்த சுவையான "வெஜ் சாம்பார்" ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.//////

அப்போ சோத்த சூடு பண்ண வேணாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வீட்டிலோ ,எதிர்த்த வீட்டிலோ தேவையான அளவு சோறு ஓசி வாங்கி ,இந்த சுவையான "வெஜ் சாம்பார்" ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.///////

அப்போ ஆம்லேட்டு, ஆப்பாயில்லாம் யாரு கொடுப்பா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////"பேச்சுலர் சமையல் //////

அப்போ கல்யாணம் ஆனவங்க இந்த சமையல் பண்ணா வராதா?

மங்குனி அமைச்சர் said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)said...
பின்பு பிரிட்ஜில் இருக்கும் நேத்து இடது பக்கத்து வீட்டில் ஓசி வாங்கி மீதமுள்ள சாம்பாரைஎடுக்கவும்.//

எங்க வீட்டுல பிரிட்ஜ் இல்லியே எங்கிருந்து எடுக்குறது?
/////

விட்ரா விட்ரா, உனக்கு அந்த சாம்பார் திங்கிற பாக்கியமே இல்ல!

மங்குனி அமைச்சர் said...

////வைகைsaid...
முஸ்கி : என்னது டெர்ரர் கும்மியில் சமையல் குறிப்பா ?///

இங்கதான் முக்கியமா வேணும்.. :))
///////

ஆமா இங்கதானே அடிக்கடி சமைக்க வேண்டி இருக்கு?

மங்குனி அமைச்சர் said...

//////வைகைsaid...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பின்பு பிரிட்ஜில் இருக்கும் நேத்து இடது பக்கத்து வீட்டில் ஓசி வாங்கி மீதமுள்ள சாம்பாரைஎடுக்கவும்.//

எங்க வீட்டுல பிரிட்ஜ் இல்லியே எங்கிருந்து எடுக்குறது?////

அண்ணா ப்ரிட்ஜில இருந்து எடுக்த்துக்க.. வழக்கமா அங்கதான எடுப்ப?
///////

அண்ணா ஹஜாரேவோட பிரிட்ஜா? அப்புறம் அவரு அதுக்கும் உண்ணாவிரதம் இருக்க போறாரு!

மங்குனி அமைச்சர் said...

//////வைகைsaid...
வெஜ் சாம்பார் செய்வது எப்படி ?////




சாம்பார்னாலே அது வெஜ் தானே?
//////

நான் வெஜ் சாம்பாரும் இருக்கே?

வெங்கட் said...

@ மங்குனி.,

// ஆமா இங்கதானே அடிக்கடி சமைக்க
வேண்டி இருக்கு? //

இதுவும் அரைவேக்காட்டு சமையலா..?!

மங்குனி அமைச்சர் said...

//////எஸ்.கே said...
தங்கள் சமையல் அருமை சுவையோ குளுமை ஆனால் வயிறோ...
////////

வயிறு கொடுமைன்னு சொல்லுதா?

மங்குனி அமைச்சர் said...

/////வெங்கட்said...
@ மங்குனி.,

// ஆமா இங்கதானே அடிக்கடி சமைக்க
வேண்டி இருக்கு? //

இதுவும் அரைவேக்காட்டு சமையலா..?!
///////

ஹி..ஹி.... யோவ் இப்படி உள்குத்து வெச்சா நான் ஏதாவது தப்பு தப்பா சொல்லிடுவேன்!

மங்குனி அமைச்சர் said...

//////வைகைsaid...
கேஸ் சிலிண்டர் : 1 (கேஸ் உடன் )//

நம்ம ஜெயந்துக்கு இது தேவையில்லை :)
////////

அவன் சிலிண்டர் மாதிரின்னு கேள்விபட்டிருகேன், ஆனா இப்படின்னு இப்பதான் தெரியும்!

மங்குனி அமைச்சர் said...

//////வைகைsaid...
கேஸ் சிலிண்டர் : 1 (கேஸ் உடன் )//

நம்ம ஜெயந்துக்கு இது தேவையில்லை :)
////////

அவன் சிலிண்டர் மாதிரின்னு கேள்விபட்டிருகேன், ஆனா இப்படின்னு இப்பதான் தெரியும்!

மங்குனி அமைச்சர் said...

////வைகைsaid...
முதலில் கிச்சனுக்குள் நுழையவும் //

கிச்சன் பூட்டியிருந்தா என்ன பண்ணனும்?
///////

ஹால்ல சமைக்கனும்.

மங்குனி அமைச்சர் said...

////எஸ்.கேsaid...
சார் ரச வாங்கி செய்வது எப்படி?
////

ரசத்த வாங்கி சுட வைங்க சார்!

மங்குனி அமைச்சர் said...

/////வைகைsaid...
லைட்டர் அல்லது தீப்பெட்டி கொண்டு கேஸ் அடுப்பைபற்ற வைக்கவும்.//

அடுப்பையே பத்த வைக்கணுமா இல்லை பர்னர மட்டுமா?
//////

பத்த வெச்சிட்டயே பரட்ட?

நாய் நக்ஸ் said...

அது சரி...நான்தான் இந்த பதிவ தொடரசொல்லீயுல்லேனே....
http://naai-nakks.blogspot.com/2011/08/blog-post.html

WILPER S.RAJ FAN said...

WILPER S.RAJ FAN said...
http://naai-nakks.blogspot.com/2011/08/blog-post.html

இப்பவாச்சும் தெரிஞ்சுதா என் தலைவன் தெறமை....

///....இந்த பதிவை மேலும் terror kummi groups மற்றும் காமெடி கும்முவர்கள் தொடருவார்கள் .......////

அந்த நினைப்பு வேற இருக்கா???

ஜாக்கிரதை/////!!!!!
August 8, 2011 11:46 PM

aotspr said...

உங்கள் முயற்சிக்கு நன்றி.
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Priya said...

உங்கள் முயற்சிக்கு நன்றி.
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com//


Thanks

சுபத்ரா said...

ரொம்ப ஆர்வத்தோட வந்தேன்.. என் ஆர்வம் வீண் போகல :)

ஆனாலும் சாம்பார் வைக்கிறது இவ்ளோ கஷ்டமா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சுபத்ரா said...

ரொம்ப ஆர்வத்தோட வந்தேன்.. என் ஆர்வம் வீண் போகல :)

ஆனாலும் சாம்பார் வைக்கிறது இவ்ளோ கஷ்டமா...//

நாளைக்கு vaangka suduthanni vaikka solli tharom!!!

Unknown said...

மரண மொக்கை ..............