Wednesday, August 24, 2011

Hunt For Hint - விடைகள் + காமெடிகள் (1 - 5)

நண்பர்களே,

ஒரு வழியா "Hunt for Hint" கேமில் ஜெயிச்சவங்களுக்கு பரிசு காசோலை அனுப்பி வெச்சாச்சு. ஆனாலும், இன்னும் ஆர்வமா சிலர் விளையாடிட்டு இருக்காங்க. இந்த மாதிரி விளையாட்டுகளில் பரிசு வெல்வதைவிட அந்த கேமை முழுவதும் விளையாடி முடிப்பதில் தான் திரில் இருக்குது. 


இருந்தாலும் விடைகளை தெரிஞ்சிக்கற ஆர்வம் எல்லோருக்குமே இருப்பதை பார்க்க முடியுது. இப்பொ விளையாடிட்டு இருக்கவங்க ஆர்வத்தை கருத்தில் கொண்டு முதல் 5 கேள்விகள் உருவான விதத்தையும், எங்க எங்கலாம் க்ளூ இருந்துச்சு, எப்படி விடையை கண்டுபிடிகனும்னு சொல்லுறோம்.

Level 1:
இது ஒண்ணும் பெரிய கஷ்டமான லெவல் எல்லாம் இல்லைங்க, சிம்பிள் க்ளிக் தான்.... ஒரு கதவை போட்டு சாவிய கீழ வைக்கலாம். அதை கிளிக் செய்தா திறக்கற மாதிரி யோசிச்சோம்.... ஆனா, கடைசில இப்படி வந்து முடிஞ்சிடுச்சி....

Level 2:

டைட்டானிக் கப்பல், URL ல flower.aspx மற்றும் டைட்டில்ல Flower இப்படி க்ளூ குடுத்தும் சிலருக்கு விடையை எங்க போடுறதுனு தெரியலை. ஆன்சர் பொட்டிய தேடிட்டு இருந்தாங்க. About Games ல ரூல்ஸ்ல தெளிவா சொல்லி இருந்தோம். சில இடங்களில் URL மாத்தனும்னு. flower.aspxக்கு பதில் rose.aspx னு போடனும் அவ்வளோதான்.

அட Rose அந்த படத்துல ஹீரோயின் பேருங்க.

Level 3:

A,E,I,_,Q - இதுக்கு என்னங்க க்ளூ. டைட்டில், இமேஜ் பேரு letterனு கொடுத்தாச்சு, விடுபட்ட எழுத்தை கண்டுபிடிக்க வேண்டியதுதான். ஆனா சிலர் இதை A,E,I,O,U சேர்த்து வெச்சி குழப்பிக்கிடாங்க U வை காணோம் Q தான் இருக்குனு. A ல இருந்து அடுத்தடுத்த 3  எழுத்துக்கள் தான் இந்த sequence.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q

M தாங்க விடை.

Level 4:

இது கொஞ்சம் கடினமா லெவல்தான். பலர் குழம்பினாங்க. சிலர் ரோடை கண்டுபிடிச்சும் மேல போக முடியலை. இது அப்போலோ டயர்ஸ் லோகோ.


இதுக்கு க்ளூவா இமேஜ், டைட்டில், URL பேரு எல்லாத்தையும் "DELPHI"னு கொடுத்து இருந்தோம். DELPHI என்பது கிரேக்க கடவுள் அப்போலோவை வணங்கும் இடம். இதை லீடா வெச்சி போகனும். இன்னும் ஒரு குறுக்குவழி இருக்கு. கூகுள்ல இமேஜ் சர்ச் அப்படினு ஒரு கான்செப்ட் இருக்கு அதை பயன்படுத்தி இருக்கலாம். அதை பற்றி இன்னும் நிறைய பேருக்கு தெரியலைனு நினைக்கறோம்.

Level 5:

இது ஒரு சுலபமான லெவல். FLIPனு க்ளூ கொடுத்துட்டு ஒரு Coin படத்தை போட்டோம் அதுல “H”னு தெளிவா எழுதியும் இருக்கு. H = Heads. Heads ஐ Flip செய்தால் Tails. Tails or Tail எதை போட்டாலும் அநத லெவல் முடிக்கலாம். பலர் இதுல குழம்பிட்டாங்க. இமேஜை Flip செய்ங்கனு சொல்லியும் சிலருக்கு புரியலை. ஆனாலும் ஒரு சுவாரசியமான் லெவல் இது. அது உலகபோப்பை பைனல்ல டாஸ் போட உபயோகிச்ச காயின். ICC siteல இருந்து எடுத்தோம்.

சில Bloopers:

கேமை விளையாடினவங்க விடையை கண்டுபிடிக்க எவ்வளோ கஷ்டபட்டாங்கனு எங்களுக்கு தெரியும். அவங்களோட கஷ்டம் டிஸ்கஷன் போரம்ல காண முடிஞ்சது. ஆனாலும் அவங்க அப்பாவியா கேட்ட சில விஷயங்கள், குழம்பின விஷயங்களை பார்க்கும் போது எங்களை மீறி சிரிப்பு வருது, ஒரு சின்ன விஷயம் இவ்வளோ குழப்புமானு? நீங்களே முதல் 5 கேள்விக்கு க்ளூ கேட்டு போட்ட கமெண்ட்டுகளை பாருங்களேன்... கூடவே நம்ம கும்மி டீமோட நக்கலும் :)
(இது நகைச்சுவைக்காக மட்டுமே, யார் மனதையும் புண்படுத்த அல்ல)


22 comments:

மாணவன் said...

வணக்கம்...

ஆய்வு மறுமொழி!

NaSo said...

:))

Madhavan Srinivasagopalan said...

வணக்கம்...

மறுஆய்வு மறுமொழி!

Prabu Krishna said...

Ha ha Ha ha

super.

பாவமாக உள்ளது இப்படி கேள்விகளை கேட்டவர்கள் நினைத்து. இப்புடி வம்பிழுத்துட்டீங்களே. (இன்னும் கொஞ்ச நாள்ல என் கேள்விக்கும் இப்புடிதானா அவ்வ்வ்வ் )

மாணவன் said...

//(இது நகைச்சுவைக்காக மட்டுமே, யார் மனதையும் புண்படுத்த அல்ல)//

அதையும் மீறி புண்பட்டிருந்தால் ஐயாம் பண்டமெண்டலி, பேசிக்லி, சின்சியர்லி ஸாரி....

யுவர் பேத்புல்லி....
இது உங்கள் - http://www.terrorkummi.com/

(தேங்க்ஸ் டூ பாலாஜி பிக் எப்.எம்)

:)

வைகை said...

ஜெயிச்சவங்களுக்கு பரிசு காசோலை அனுப்பி வெச்சாச்சு//

அப்பிடின்னு ரமேஷ் சொன்னாரா? பயபுள்ளைய நம்ப முடியாது :))

வைகை said...

இருந்தாலும் விடைகளை தெரிஞ்சிக்கற ஆர்வம் எல்லோருக்குமே இருப்பதை பார்க்க முடியுது.//

எனக்கு இல்லையே? :))

வைகை said...

கேமை விளையாடினவங்க விடையை கண்டுபிடிக்க எவ்வளோ கஷ்டபட்டாங்கனு எங்களுக்கு தெரியும். //

விடைய கண்டுபிடிச்சவங்கள கண்டுபிடிக்க எவ்வளவு கஷ்ட பட்டாங்கன்னும் தெரியும் :))

இம்சைஅரசன் பாபு.. said...

//ரெண்டாவது செட்டிங்கே இவ்ளோ நேரம் ஆகுதே? நம்ம பாபுகிட்ட கேளு... மனுஷன் மூணு நாலுன்னு போய்கிட்டே இருக்காரு :)//

அட பாவிகளா சந்தடி சாக்குல என்னையும் போட்டு தள்ளிடீன்களே

செல்வா said...

//அட பாவிகளா சந்தடி சாக்குல என்னையும் போட்டு தள்ளிடீன்களே/

விடுங்கணா, இது என்ன புதுசா ? தினமும் நடக்குறதுதானே ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

ஜெயிச்சவங்களுக்கு பரிசு காசோலை அனுப்பி வெச்சாச்சு//

அப்பிடின்னு ரமேஷ் சொன்னாரா? பயபுள்ளைய நம்ப முடியாது :))//

யோவ் உனக்குத்தான் கமிஷன் கொடுத்துட்டனே. அப்புறம் என்ன பேச்சு!!!

Unknown said...

//சரி உங்களுக்கு வேலாயுதம் டிவிடி அனுப்புறோம்...//

அதுக்கு பேசாம ......... நாலு தூக்க மாத்திரை ........ கொஞ்சூண்டு குருணை மருந்து வாங்கி அனுப்புங்கோ ........... சாகும் போதாச்சும் சந்தோசமா சாகுறேன்

Madhavan Srinivasagopalan said...

அட.. அது அப்பொல டயர்சா ?
நா டயர்டாகி, அப்பால பாத்துக்கலாம்னு விட்டுட்டேன்..

செங்கோவி said...

ஆஹா..போட்டி முடிஞ்ச்டுச்சா..அப்போ இனிமே பயப்படாம இங்கிட்டு வரலாம்...

செங்கோவி said...

மீண்டும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.

smilzz said...

அட பாவிகளா இப்டி பப்ளிஷ் பண்ணிடீங்களே !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆய்வு மறுமொழி!

smilzz said...

////யாருய்யா இவரை அட்மினா போட்டது/////////
பாவம் அந்த அட்மின் ரெம்ப ரெம்ப நல்லவக -- திட்டபிடாது !

Unknown said...

முடிவுகள் வெளியானது கூட தெரியாமல் நான் இன்னும் விளையாடிக் கொண்டே இருக்கிறேன். கடந்த ஒரு வாரமாக e-mail கூட செக் பண்ணல... எந்த பதிவையும் படிக்கல. இப்போ லெவல் 22 ல் இருக்கிறேன். நான் முடிக்கும் முன் விடை சொல்லிட மாட்டீங்கல்ல...

. said...

5 level dhan romba nondhutean....

forum comments padichu nanum sirichitu irundhean....sama comedy

மாணவன் said...

அன்பின் நண்பருக்கு இனிய வணக்கம்,
உங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!

(ஏய்.. ஏய்.. மிஸ்டர்....... நோ பேட் வேர்ட்ஸ் நான் என் கடமையதான் செஞ்சேன்) :))

raamaarun (இராம அருண் ) said...

Apollo Tyres was difficult for me, I found the word apollo very early but to find the tyres it took lot of time for me