"Hunt For Hint" முதல் ஐந்து கேள்விகள் அதற்கான க்ளூக்கள் மற்றும் அதன் பதில்களை போன பதிவுல பார்த்தோம். அப்படியே அந்த கமெண்ட்டுகளையும் படிச்சி ரசிச்சி இருப்பீங்கனு நம்புறோம். இப்போ அடுத்த ஐந்து லெவலுக்கான விடைகளை பார்க்கலாம்.
Level 6:
இது பெரும்பாலவர்களுக்கும் தெரிஞ்ச Morse code தாங்க. உங்களை குழப்பறதுக்காக நிறைய கோட்களை போட்டு குறிப்பிட்ட சிலதை மட்டும் சிகப்பு வண்ணதுல வெச்சோம். அந்த கோட்களை மட்டும் தனியா எடுத்து Decode செய்யனும் அவ்வளவுதான். இதுக்கு ஆன்லைன்லயே பல தளங்கள் இருக்கு. க்ளூவாக டைட்டிலை “What is Different?"னும் இமேஜ் பேரை “City”னும் கொடுத்து இருந்தோம்.
என்னது விடை என்னவா? அட சும்மா அதிருது பாருங்க தலைவர்படம் “ENTHIRAN”
Level 7:
இது ஒரு Trickyயான லெவல். சில கார்டுகளை சிவப்பு, கருப்புல சில எழுத்துகளோட தந்து இருந்தோம். அந்த எழுத்துகளை கண்டுபிடிச்சா லெவல் முடிஞ்சது. அங்கதான பிரச்சனை. சிவப்பு எழுத்துகள் எல்லாம் ஒரு செட், அதாவது ரோமன் நமபர், கருப்பு எழுத்துகள் எல்லாம் ஒரு செட், அதாவது Hexadecimal நம்பர். முதல்ல அதை மாத்தி
1,2,5,10,20,?,100,500,1000
இப்படி கொண்டுவரனும். சரி இதெல்லாம் என்ன? நம்ம நாட்டு ரூபாய் நோட்டு மதிப்புகள். அப்போ விடுபட்டது 50 ரூபாய். அதை Hexadecimalல மாத்தி 32 னு விடைதரனும். கொஞ்சம் யோசிக்கனும். அவ்வளோதான் :)
Level 8:
இந்த லெவல்ல வார்த்தைகளை ஆங்காங்கே வேகமா ஓட விட்டு விடையை கண்டுபிடிக்க சொன்ன என்னனு தோணியதை அற்புதமா செயல்ல கொண்டு வந்தாரு எஸ் கே. வேகமா ஓடுற வார்த்தை மேல மெளஸ் பாயிண்டரை வெச்சா அது நிற்கும் (எத்தனை பேர் இதை செய்து பார்த்தீங்க?! :) ).
அங்க வேகமா ஓடுற வார்த்தைகள் இது தான் “Who is the Author of The Parish Boy's Progress”. இது நாம சின்ன வயசுல படிச்ச Oliver Twist புத்தகத்தோட இன்னொரு பெயர்.
விடை : Charles Dickens
Level 9:
இந்த லெவல் சிலரை குழப்பும்னு எதிர்பார்க்கவே இல்லை. பேஜ் சோர்ஸ்ல “TTTTTTTTT” வேற கொடுத்து இருந்தோம். இது பல மொபைல்கள்ல உபயோகிக்கற T9 எனப்படும் Predective text technology. சிம்பிளா சொல்லனும்னா “Dictionary ON mode”. அங்க கொடுத்து இருக்கற 8428679 நம்பரை டைப் செய்தால் வரும் “VICTORY” தான் விடை. LG, NEC, Nokia, Samsung, Siemens, Sony Ericsson, Sanyo, Sagem போன்ற நிறுவனங்களின் மொபைலை உபயோகிக்காதவர்களுக்கு கஷ்ட்டம்தான்.
Level 10:
இந்த லெவல்ல நம்ம மக்கள் குழம்பினாங்க பாருங்க. அவ்வ்வ்வ்வ்வ்.... போரம்ல எவ்வளோ சொல்லியும் புரியலை சிலருக்கு. இது ஒரு Lateral Thinking. WRITE THE INVISIBLE WORDனு சொல்லி இருந்தோம் விடை THE INVISIBLE WORD தான். ஆனா போரம்ல ஒருத்தரு Odd One Out னு இருக்கு அந்த காமெடி நடிகரை போட்டும் விடைதப்புனு சொன்னாரு. Vijay, T.Rajendar, Jayalaitha, Sarathkumar, Vijayakanth - இதுல யாருங்க காமெடி பீசு..... நாங்க குழம்பிட்டு இருக்கோம்.
அடுத்து ஹைலைட் விஷயமான நம்ம போரம் காமெடி கமெண்ட்டு, அதுக்கு நம்ம டெரர்கும்மி டீம்மின் நக்கலை பார்க்கலாம். மறுபடி சொல்லிக்கிறோம் இது நகைச்சுவைக்குகாக மட்டுமே யார் மனதையும் புண்படுத்த அல்ல.
8 comments:
ஹாஹாஹா... மூணாவது கம்மென்ட் என்னோடது. ஆபிஸ் முடியுற டைம். அதனால அப்படி சொல்லிடு போனேன். என்னோட அதிர்ஷ்டம், அன்னிக்கு நைட் எங்க ரூமிலும் நெட் வந்துடுச்சி..
level 6: கூகிளில் அந்த படத்தை தேடிய போது Morse Code என்று காட்டியது. ஆனால் இது விடையாக இருக்காதுன்னு விட்டுட்டேன். மறுநாள் தான் கண்டுபிடிச்சேன்.
level 7: இதுக்கு ஒருமணி நேரம் தான் ஆச்சு.. கூகிளில் அந்த நம்பர்களை தேடினதும் hexadecimal-ஐ மாத்தணும்னு தெரிஞ்சது. ஆனா எதை மாத்தணும்னு தெரில. 30, 40, 50னு மாத்துநேன்.. அடுத்த லெவலுக்கு போய்ட்டேன்...
level 8: என்னை ரொம்ப டென்சனாக்கிய லேவல்களில் ஒன்று. அன்னிக்கு நைட் நான் மொபைலில் விளையாடினேன். ஃபிளாஷ் என்பதால் மொபைலில் எதுவும் இல்லை. பதிலுக்கான பேட்டி மட்டும் தெரிஞ்சது. என்னென்னமோ ட்ரை பண்ணி, ஒன்னும் வேலைக்காகாம, தொங்க போய்ட்டேன். மறுநாள் ஆபிஸ்ல போய் பாத்ததும் செம டென்ஷன்..!
//சந்தடி சாக்குல ஐபோன் வச்சிருக்குரத எல்லார்ட்டயும் சொல்லியாச்சா? வந்த வேலை முடிந்ததா? :))//
:)
:)
பதிலுக்கான பேட்டி மட்டும் தெரிஞ்சது. என்னென்னமோ ட்ரை பண்ணி, ஒன்னும் வேலைக்காகாம, தொங்க போய்ட்டேன்.//
அடபாவி அப்துல் இதுக்கெல்லாமா தொங்கணும்?
ஆஹா.. hand slip ஆயிடுச்சு..
தூங்க போயிட்டேன்...
:) :) :)
ஆகா நானும் சிக்கிட்டேனா ஆறாவது கேள்வி கேட்டது நான்.
Level 6: இதுக்கு நான் நோட்ஸ் எல்லாம் எடுத்தேன்யா. விடை கடைசில இவ்ளோ ஈஸி.
Level 7: ஆங் இதுக்கு தலைகீழ நின்னு தண்ணிலாம் குடிச்சேன்.
Level 8: இது ஈஸி. நான் நிறுத்தி படிச்சேன்.
Level 9: ம்ம்ம் நிஜமா ஒரு பொண்ணா இருந்தா சைட் ஆச்சும் அடிச்சு இருக்கலாம். Forum ல கொடுத்த "other than computer" Clue மூலம் கண்டுபிடிச்சேன்
Level 10: கொய்யால இதுக்கு ஒரு நாள் உக்காந்து இருந்தேன் யா.
seekeram 18 vadhu level ku answer sollunga...
Enthiran was difficult for me, I found the morse code, but to find what to do took long time
லிங்க்ல அவன் அவன் 20 25 லெவல் தாண்டி சந்தோஷமா போய்ட்டு இருக்காங்க... இந்த 10வது லெவல்ல உட்கார்ந்துகிட்ட நான் பட்ட பாடு இருக்கே.. ஐயய்யய்யயோ.....
write the invisible word.
இதுக்கான விடைகள் நான் முயற்சி செய்தது...
odd one out na... ஜெயலலிதா மட்டும்தான் பெண்... அதனால அந்த விடை கொடுத்தேன்...
சம்பந்தமே இல்லாம டி.ஆர்னு கொடுத்து பார்த்தேன்..
சரி invisible word na ஒருவேளை empty யோ நெனச்சேன்..
cursor blink ஆகுதேன்னு cursor nu koduthen....
முழுக்கவே எழுதினேன் write the invisible word nu...ம்ஹூம்...
கடைசி வரைக்கும் கண்டுபிடிக்கவேயில்லையே...
சூப்பரா யோசிக்கறீங்க.. வாழ்த்துக்கள்!
Post a Comment