Sunday, January 2, 2011

நாங்களும் ஹீரோ தான்!


பிரபல பதிவர்னு ஏதோ சொல்றாங்களே, அப்டின்னா என்னப்பா? ஏதோ ஹிட்ஸ வச்சு சொல்றதாம். இதில 2010-ல் முன்னணி  பதிவுகள்னு ஒரு லிஸ்ட் வேற வச்சிருக்காங்க. நான் தெரியாமத்தான் கேக்கறேன், ஹிட்ஸ் வர வைக்கிறது பெரிசா? நடிகை ரம்யாஸ்ரீக்கு ஆண் குழந்தை - தந்தை யார்? அப்படின்னு ஒரு தலைப்பு வச்சு பதிவு போட்டா, ஒரே நாள்ல ஆயிரக் கணக்கான ஹிட்ஸ் வராதா? ஆனா நாமலாம் அப்படி கீழ்த்தரமான பதிவு போடறது கிடையாது. நம்ம மனத் திருப்திக்காக பதிவு போடற சாதிப்பா, நாங்க!
அப்படியே பார்த்தாலும் நம்ம பிரெண்ட்ஸ் தான் முன்னணி லிஸ்ட்ல இருக்காங்க! எனக்குப் பின்னால ப்ளாக் ஆரம்பிச்சவங்க எனக்கு முன்னால போய்க்கிட்டிருக்கறது எனக்கு சந்தோஷம்தான், அதில் வருத்தமில்லை, அட, பொறாமை கூட எனக்கு இல்லைங்க! என்ன பாக்கறீங்க? நான் சொல்றதை நம்பலையா? அது உங்க இஷ்டம்.
திரும்பவும் சொல்றேன்,இந்த முன்னணி பதிவு,பின்னணி பதிவு இதெல்லாம் சுத்த ஹம்பக்! நான் அதை எல்லாம் நம்பறதே இல்லை, சொல்லப் போனா, அதை நான் எதிர்க்கிறேன் .............................................................. .........................இருங்க, ஒரு போன் வருது,
"ஹலோ, கோகுலத்தில் சூரியன் வெங்கட்டா? சொல்லுங்க, என்னது தமிழ்மணம் கடந்த மூன்று மாத முன்னணி பதிவுகள்ள என்னோட பதிவும் இருக்குதா? அதுவும் கிட்டத்தட்ட 1500 பதிவுகள்ல முப்பதாவது இடமா? ஓகே, தேங்க்ஸ்!" ........................................................

என்ன சொல்லிகிட்டிருந்தேன், ஆங்.....இந்த முன்னணி பதிவுகள் பத்தி. அதுல என்ன தப்புங்கறேன்? சும்மா ஹிட்ஸ் அது இதுன்னு சால்ஜாப்பு சொல்லாதீங்க. நல்லா எழுதினாதான மக்கள் வந்து படிப்பாங்க? யார் என்ன எழுதினாலும் வந்து படிச்சு போக மக்கள் ஒண்ணும் முட்டாள் இல்லை, சார்! ஏதோ என்னோட பதிவுகளும் முன்னணில வந்துடுச்சுன்னு நான் சொல்லலை. இந்த முன்னணி பதிவுகளை கிண்டல் பண்றவங்க எல்லாம் மனசாட்சியே இல்லாதவங்க, சார். வயித்தெரிச்சல்ல புலம்பறவங்க!
என்னதான் சொல்லுங்க, நாம எழுதறதை பாராட்டறவங்க இருக்கத் தான் செய்யறாங்க!
அது நமக்கு ஒரு டானிக் மாதிரி. அதுனாலதான் சொல்றேன், இந்த மாதிரி முன்னணி பதிவுகள் பத்தி எல்லாருக்கும் தெரிய வேண்டியது அவசியம்தான். நான் வரவேற்கிறேன்!

வாழ்க, பிரபல பதிவர்கள்!

19 comments:

Madhavan Srinivasagopalan said...

first

Madhavan Srinivasagopalan said...

நல்லா சொன்னீங்க..
ப்ளஸ் டூ - தமிழ் பாடத்துல ஒரு தலைப்பு 'மன மாற்றம்' -- அதனை நினைவு படுத்துகிறது இந்த பதிவு.
உண்மையில் நான் எனது மனத் திருப்திக்காகவே எழுதுகிறேன்.
ஆனாலும், சரியான பின்னூட்டங்கள் ஊக்கம் தருகிறது.

எஸ்.கே said...

பலர் இந்த ரேங்க் பட்டியலுக்கு கருத்து தெரிவித்திருக்கிறார்கள். சில நல்ல வலைப்பூக்கள், முன்னணியில் வராததை குறித்து வருத்தமும் அடைந்திருக்கிறார்கள்!

எஸ்.கே said...

என்னைப் பொறுத்தவரை வலைப்பூவில் ஓட்டு, ஹிட்ஸ், ரேங்க் இதையெல்லாம் விட உண்மையான பின்னூட்டமே நமக்கு நல்ல ஊக்கத்தை அளிக்கும் என நினைக்கின்றேன்!

எஸ்.கே said...

திரட்டிகள் ஒரு பக்கம் நன்மை செய்தாலும் அதனால் சில குறைபாடுகளும் வரத்தான் செய்கின்றன. தாங்கள் முன்னணியில் இடம்பெற முடியவில்லையென வருத்த்தப்பட்டு மனநிலையை பாதித்துக் கொள்பவர்களும் உருவாகிறார்கள்!

Madhavan Srinivasagopalan said...

@ எஸ்.கே. பிரமாதமான கருத்து..
நீங்களும் இந்த மாதிரி ஒரு பதிவே போடலாமே..

வானம் said...

மட்டமான பதிவு....

என்னது, எனக்கு ஆப்பிள் ஜீஸ் சொல்லியிருக்கீங்களா?

ஆகா, பதிவுன்னா இதுதான் பதிவு,கண்களில் ஒற்றிக்கொள்ளக்கூடிய எழுத்து நடை,பிரமாதம்...

வெங்கட் said...

நாங்கல்லலாம் தோசையைதான்
திருப்பி போடுவோம்..
நீங்க தோசை கல்லையே
திருப்பி போடுவீங்க போல....

:-)

Unknown said...

பகிர்வுக்கு நன்றி

என்னைப்போன்ற மொக்கைப்பதிவர்களுக்கு இது பெரிய சைஸ் ஜாங்கிரி. ஆனால் பல ஜீனியஸ்கள் தங்கள் இடங்களை தேடிக்கொண்டு இருப்பதை காண முடியவில்லை!/

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எங்கேயோ இடிக்குதே.......... ஓ அங்கேயா.... ? சரி சரி நடத்துங்க நடத்துங்க.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எஸ்.கே said...
பலர் இந்த ரேங்க் பட்டியலுக்கு கருத்து தெரிவித்திருக்கிறார்கள். சில நல்ல வலைப்பூக்கள், முன்னணியில் வராததை குறித்து வருத்தமும் அடைந்திருக்கிறார்கள்!/////

எஸ்கே, அதுதான் நல்ல வலைப்பூன்னு யாரு கண்டுபுடிக்கறது? படிக்கறவங்களும் மாறனும், எழுதுறவங்களுக்கும் பொறுப்புணர்வு வேணும்....

இப்போ குத்துப்பாட்டுக்கு சினிமாக்காரங்க சொல்றாங்கல்ல மக்களுக்குப் புடிக்குது வைக்கிறோம்னு, அந்த மாதிரி போயிக்கிட்டு இருக்கு....!

எஸ்.கே said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எஸ்.கே said...
பலர் இந்த ரேங்க் பட்டியலுக்கு கருத்து தெரிவித்திருக்கிறார்கள். சில நல்ல வலைப்பூக்கள், முன்னணியில் வராததை குறித்து வருத்தமும் அடைந்திருக்கிறார்கள்!/////

எஸ்கே, அதுதான் நல்ல வலைப்பூன்னு யாரு கண்டுபுடிக்கறது? படிக்கறவங்களும் மாறனும், எழுதுறவங்களுக்கும் பொறுப்புணர்வு வேணும்....

இப்போ குத்துப்பாட்டுக்கு சினிமாக்காரங்க சொல்றாங்கல்ல மக்களுக்குப் புடிக்குது வைக்கிறோம்னு, அந்த மாதிரி போயிக்கிட்டு இருக்கு....!//

நீங்க சொல்றது சரிதான். இதை இரண்டு விதமா எடுத்துக்கலாம். ஒன்னு அவங்களை பொறுத்தவரை அது நல்ல வலைப்பூவாக இருக்கலாம். அது வரலைன்னு அவங்க கவலைப்படுவாங்க!

அதேபோல் உண்மையாகவே சில நல்ல வலைப்பூக்கள் வரவில்லைதான், உதராணமாக அந்த பட்டியலில் பல தொழிற்நுட்ப வலைப்பூக்கள் வரவே இல்லை!

இன்னும் கேட்டால் அந்த பட்டியல் முக்கியமானதே இல்லை. நீங்கள் சொன்னதுபோல் படிக்கிறவங்க எதையோ விரும்பி படிக்கிறாங்க (பெரும்பாலும் எண்டர்டெய்ண்ட்மெண்ட்) அதுக்கு தகுந்தாற்போல் எழுதறது ஹிட்டாகுதான். அதனால மற்றது நல்லதில்லனு கவலைப்படவும் வேண்டாம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் ஒரு எழவும் புரிய மாட்டேன்குது. நான் எழுதுறது நல்ல பதிவா? மொக்கை பதிவா? யாராவது சொல்லுங்களேன். சொன்னேங்கன்னா நல்லா இருக்கும்

எஸ்.கே said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் ஒரு எழவும் புரிய மாட்டேன்குது. நான் எழுதுறது நல்ல பதிவா? மொக்கை பதிவா? யாராவது சொல்லுங்களேன். சொன்னேங்கன்னா நல்லா இருக்கும்//

நீங்கள் ஒரு எண்டெர்டெய்னர்! மற்றவர்களை மகிழ்விக்கும் வகையில் நகைச்சுவை எழுதுபவர்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எஸ்.கே said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் ஒரு எழவும் புரிய மாட்டேன்குது. நான் எழுதுறது நல்ல பதிவா? மொக்கை பதிவா? யாராவது சொல்லுங்களேன். சொன்னேங்கன்னா நல்லா இருக்கும்//

நீங்கள் ஒரு எண்டெர்டெய்னர்! மற்றவர்களை மகிழ்விக்கும் வகையில் நகைச்சுவை எழுதுபவர்!///

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி என்னை சாவடிச்சிடுவீங்க்களோ? # டவுட்டு

Anonymous said...

பெ.சொ.வி சார் ..
இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நான் முரண்படுகிறேன் ..,இந்த ஹிட்ஸ் வைச்சி எத்தானை கூத்து நடக்க போகிறது பாருங்கள் ..,

மாணவன் said...

//எஸ்.கே said... 4
என்னைப் பொறுத்தவரை வலைப்பூவில் ஓட்டு, ஹிட்ஸ், ரேங்க் இதையெல்லாம் விட உண்மையான பின்னூட்டமே நமக்கு நல்ல ஊக்கத்தை அளிக்கும் என நினைக்கின்றேன்!//

இதுதான் சார் வேண்டும் ஒருவரை மென்மேலும் சிறப்பாக எழுதுவதற்கும் உண்மையான் பின்னூட்டமே சிறந்த உற்சாகமும் ஊக்கமுமாய் அமையும்

logu.. said...

//எஸ்.கே said... 4
என்னைப் பொறுத்தவரை வலைப்பூவில் ஓட்டு, ஹிட்ஸ், ரேங்க் இதையெல்லாம் விட உண்மையான பின்னூட்டமே நமக்கு நல்ல ஊக்கத்தை அளிக்கும் என நினைக்கின்றேன்!//


mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

ஆமினா said...

//என்னைப் பொறுத்தவரை வலைப்பூவில் ஓட்டு, ஹிட்ஸ், ரேங்க் இதையெல்லாம் விட உண்மையான பின்னூட்டமே நமக்கு நல்ல ஊக்கத்தை அளிக்கும் என நினைக்கின்றேன்!//

அதே தான்....

இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள் சகோ