Tuesday, January 18, 2011

விர்சுவல் பொங்கல் கொண்டாட்டம்... !

,
எங்களது கும்மி குழுவில் இருக்கும் நண்பர்கள் வெவ்வேறு ஊர்களில் தங்களின் உற்றாருடன் பொங்கல் கொண்டாடினாலும், இதுவரை செய்யாத முறையில் எங்களது கும்மி ஃபோரம் மூலம் ஒன்று சேர்ந்து கொண்டாடிய பொங்கல் - ஓர் விர்ச்சுவல் பொங்கல். அது பற்றி..

நாள், 15-01-2011 , தைத்திங்கள் 1 ,    மதியம் மூன்று மணிபோல் (ஐ.எஸ்.டி) எங்கள் 'கும்மி ஃபோரத்தில்' நண்பர் டெரர் பாண்டியன்தான் ஆரம்பித்தார்.

டெரர் பாண்டியன் : எஸ்.கே & சௌந்தர் & பாண்டியான் & பெ.சொ., மாதவன், ஜெய்... யாரு எல்லாருக்கும் நெட் இருக்கு வாங்க.. :))
எஸ்.கே : வந்தாச்சு !
டெரர் பாண்டியன் : நாம ஏன் இங்க, ஃபோரத்துல பொங்கல் கொண்டாடக் கூடாது.
( இல்லியா பின்ன, சொந்த பந்த்களை விட்டு வெளி நாட்டுல இருக்குற நண்பர்களுக்கு தனிமை மறந்து ஒரு இனிய பொங்கலா இருக்கட்டுமே ! )....

டெரர் பாண்டியன் : போய் ஸ்டவ், பானை , அரிசி, தண்ணி.. எல்லா பிக்சர் எடுத்து வாங்க. நாம போரம்ல பொங்கல் வைக்கலாம்... :)))
மாதவன் : நா கூட தேவையான பொருள் தரேன்..
டெரர் பாண்டியன் : சரி... நீங்க திரட்சை, முந்திரி எல்லாம் எடுத்து வாங்க....
(எலேய் எஸ்.கே.. இருக்கியா இல்லையா... டைம் ஆகுது..)

மாதவன் : முதல்ல, இடத்த சுத்தம் பண்ணி, கோலம் போடுறேன்..
டெரர் பாண்டியன் : இருங்க தல நான் கழுவி விடறேன்.. அப்புறம் நீங்க கோலம் போடுங்க.. :)
மாதவன் : இப்ப கோலம் ரெடி..

எஸ்.கே : இதோ, அரிசி.. ஓகேவா ?
ப. ராம்சாமி : இது புழுங்கலரிசி எஸ்கே, பொங்கலுக்கு பச்சரிசிதான் வேணும்.......
எஸ்.கே : அவசரத்துல மிஸ்டேக்காயிடிச்சி, சாரி. அரிசி நீங்களே ஏற்பாடு பண்ண முடியுமா 

டெரர் பாண்டியன் : பன்னி, உனக்கு பல விஷயம் தெரியுது மச்சி.. நீ உண்மையா விஞ்ஞானி, தான்.. :)). சரி. சரி.. போயி பச்சரிசிய சுத்தம் செய்திட்டு எடுத்து வா.
டெரர் பாண்டியன் : மாப்பு (தேவா) கரும்பு வாங்க மறந்துடேன்.. கொஞ்சம் கீழ இருக்க கடைல வாங்கி வா ப்ளீஸ்... :
தேவா : கரும்பு வாங்கியாந்துட்டேன்.... அடப்பாவிகளா மஞ்சக்கொத்து.... இருங்க இருங்க இப்ப வாங்கியாரேன்...........!


டெரர் பாண்டியன் @தேவா : அட! கரும்ப வெட்டியே வாங்கி வந்துட்டியா.. இங்க எங்க முழு கரும்பு கிடைக்குது... :)) மாப்ஸ் நீ பூஜை வேலை கவனி... :))
தேவா : சரி பூஜைய நான் பாக்குறேன்....மஞ்சள் கெழங்கு வாங்கியாந்து பானைல கட்டுங்க...!
மாதவன் : அலங்கரிக்கப் பட்ட பானை ரெடி. வாழைபழமும், கரும்பு துண்டும் கட்டிட்டேன்..

டெரர் பாண்டியன் : ஒ.கே ஸ்டவ் ரெடி, கோலம் போட்டாச்சி... பானை ரெடி...
பருப்பு, வாழைப்பழம் இதெல்லாம் இன்னும் வரலையா ? இதோ மஞ்சள்... வினோ, இத கொஞ்சம் பானைல கட்டுங்க... :)
வினோ : டன் ! மஞ்சள் கட்டியாச்சு...
பி.எஸ்.வி : கரும்புத் துண்டை பானையில கட்டுங்க
வினோ : ஏற்கனவே கட்டியாசுங்க
மாதவன் : வாழைத்தாரு இல்லாமா பொங்கலா ? ரெண்டும் ஏற்கனவே வந்திடிச்சே.. இதோ பாருங்க..

டெரர் பாண்டியன் : பன்னிகுட்டி இருக்கியா அரிசி கழுவிட்டியா?? :))
ப. ராம்ஸ் : யோவ் பச்சரிசி இப்போதான் கெடச்சிருக்கு, இரு கழுவுறேன்!

எஸ்.கே : வெல்லம் ரெடி.. ! சுத்தமான நெய்யும் ரெடி !!



டெரர் பாண்டியன் : அட பொங்கல் வேலை கலைகட்டுது... ஹா..ஹா..
ஜெயந்த் : எனக்கென்ன வேலை, நான் என்ன பண்ணனும் ?
எஸ்.கே : சாப்பிட ஆள் கூட்டிட்டு வாங்க ஜெயந்த் !
ஜெயந்த் : அதுக்கு தான் நானிருக்கனே.,..
டெரர் பாண்டியன் : ஜெயந்த், ராம்ஸ் அரிசி கழுவ போனான் கழுவிட்டானா பார்த்துட்டு ஓடிவா.. :))... டேய் டேய் அப்படியே அந்த பருப்ப கொஞ்சம் கழுவி எடுத்துவா...
ஜெயந்த் : இதோ இப்பவே பாக்குறேன்... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க...
தேவா : பூஜை வேலையா நா கவனிக்கறேன். தேங்காய் பழம் எல்லாம் எடுத்து வைக்கிறேன். தேங்காய்.. எங்க ?
எஸ்.கே : பழத்தை மாதவன், அப்பவே வெச்சிட்டாரே.. கவனிக்கலியா? இதோ தேங்காய், தேவா.


தேவா : பொங்கல் ரெடியா? பூசை ஆரம்பிக்கலாமா?
டெரர் பாண்டியன் : இரு மாப்பு அரிசி எடுத்துகிட்டு பன்னிகுட்டி ஓடி போய்டான்.... :)) ஜெய் பாக்க போய் இருக்கான்... :))
ஜெயந்த் : அரிசி ரெடி ஆரம்பிக்கலாமா..?
ஷமீர் அஹமது : சீக்கிரம்.. எவ்ளோ நேரம் வெயிட் பண்ணுறது..?
ராம்ஸ் : வாங்க, ஷமீர்.. நீங்களும் கலந்துகிட்டதுல ரொம்ப மகிழ்ச்சி.. (பாண்டியைப் பார்த்து ) அரிசிய குடுத்து விட்டேனே ஜெய்கிட்ட?
ஜெயந்த் : அரிசி ரெடி .. பருப்பு என்னாச்சுன்னு பாக்குறேன்..
மாதவன் : பால் ரெடி. சுத்தமான தண்ணி பைப்புல வரும்..



டெரர் பாண்டியன் : ராம்ஸ்.. ராம்ஸ்.. என்ன பண்ணுற அங்க.. ?
ப. ராம்ஸ் : சர்க்கரைப் பொங்கல்' ரெசிபி பண்ணுறேன் .
எஸ்.கே : வாழையிலை.. இதோ...

பி.எஸ்.வி. : இன்னும் பாலே பொங்கலை, அதுக்குள்ளே, இலையோட  வந்துட்டீங்களா, எஸ்கே? இதோ, "பொங்கலோ பொங்கல்" சொல்ல அடிக்க ட்ரம் செட் ரெடி.
எஸ் .கே : எல்லாம் ஒரு முன்னேற்பாடுதான்.
ஜெயந்த் : பொங்கல் கூட வடை இருக்கா ?

மாதவன் : வடைக்குலாம் தனியா நேரத்த வேஸ்டு பண்ண முடியாது..
அதனால.. ரெடிமேட் வடை.. வாங்கியாதிட்டேன்.

வினோத்: நன்றிங்க மாதவன்.. அதை நான் சூடு பண்ணிடுறேன்.
டெரர் பாண்டியன் : அட வடை வந்துடுச்சா பலே பலே.. :)
ஜெயந்த் : இந்தப்பா முந்திரி பருப்பு.. இதையும் சேத்துக்குங்க.....

பி.எஸ்.வி  : ஓகே, பத்த வைக்கவா, (அடுப்பத் தான்) தீக்குச்சி எடுத்தாச்சு.. இதோ பத்தவேச்சாச்சு..  விறகு அடுப்பும் ரெடி
பி.எஸ்.வி : விறகு அடுப்புல பொங்கல்-பானைய வெச்சாச்சு.. பானையில பால வெச்சிருக்கேன். அரிசி பருப்பு வெல்லம் எல்லாம் ரெடியா இருக்கா...
டெரர் பாண்டியன் : யாராவது வெல்லத்த கொஞ்சம் காய்ச்சுங்கபா... :)
மாதவன் : மொதல்ல வெல்லத்த தூள் பண்ணனும்..
வினோத் : ஏற்கனேவே காய்ச்சிட்டேனே, நான்.
டெரர் பாண்டியன் : நான் முன்னாடியே தூள் பண்ணி வெச்சிட்டேன். வினோத் காய்ச்சிட்டாராம்.. வெரி குட். :-)
ஜெயந்த் : பார்த்து பக்குவமா பண்ணுங்க... வீட்டில சமைக்கிற கனவானுங்க முன்னாடி வந்து அடுப்பை கவனிங்க..
தேவா : ஏய்.....புகை அதிகமா இருக்கு சுள்ளிய வை.......கண்ணு எல்லாம் எரியுது வீடு புல்லா புகை...!

டெரர் பாண்டியன் : இதுக்கு தான் நான் சுள்ளி பொறுக்கு வரேன் சொன்னேன்.. சௌந்தர் தான் ஈர சுள்ளி பொறுக்கி வந்துடான்... இரு நான் ஊதாங்கோல் வச்சி ஊதரேன்... அப்பா இப்போ நல்லா எரியுது.,... :)
தேவா : யாருக்குப்பா குலவை சத்தம் போடத்தெரியும் அவுங்க பால் பொங்கும் போது போடுங்க!
பி.எஸ்.வி. : ரெடியா? பால் பொங்கி வருது
வினோத் & மாதவன் : பால் பொங்குதா.. ? 'பொங்கலோ பொங்கல்' ! 'பொங்கலோ பொங்கல்' !!
டெரர் பாண்டியன்: 'ட்ரம்ஸ' எடுப்பா.. மறந்திட்டிங்களா ? :)

(எல்லோரும் ட்ரெம்ஸ் அடிச்சி, சத்தமாக சொல்லுறாங்க )

" பொங்கலோ பொங்கல்......!! "
(கொஞ்ச நேரம் கழித்து..)
மாதவன் : என்ன நடக்குது..பேச்சக் காணும்..?//
டெரர் பாண்டியன் : எல்லாம் பசி கடுப்புல இருக்காங்க... :))
எஸ்.கே : வெண்பொங்கலும் மெது-மசால் வடையும் ரெடி..
டெரர் பாண்டியன் :சரி சரி பொங்கல் ரெடி, வடை ரெடி... தேவா எங்க போனாரு.... படையல் போடணும்..... :) 
தேவா : பூஜை எல்லாம் ரெடி பண்ணிட்டேன் மாப்ஸ்... எல்லாம் கொண்டாங்க... பூஜை ஆரம்பிக்கிறேன்.....
டெரர் பாண்டியன் : இந்தா மாப்ஸ்!! பொங்கல், வடை, இலை, தேங்காய், கரும்பு, கற்பூறம்.. வேற ஏதாவது தேவையா... ?




பி.எஸ்.வி : எல்லா கடவுளும் இங்க ரெடி மணியும் ரெடி. - 
தேவா: தீபம் ஏத்திட்டேன்.
ப.ராம்ஸ் : ஒகே ஸ்டார்ட்........
ஜெயந்த் : எல்லாரும் வாங்கப்பா... சாமி கும்பிடலாம்....
தேவா:
(பூஜை போடுகிறார்) :
  பொங்கலோ பொங்கல்
சங்கரன் பொங்கல்
பட்டிப் பழுக பழுக
பால் பானை பொங்கப் பொங்க
மூதேவி முறிஞ்சோட...
சீதேவி நின்றுலங்க...

பொங்கலோ பொங்கல்...! பொங்கலோ பொங்கல்...! பொங்கலோ பொங்கல்...! பொங்கலோ பொங்கல்...!

ஒளி பரப்பி எல்லா உயிர்களுக்கும் உணர்வை கொடுக்கும் சூரியனே.. உன்னை நினைத்து எங்கள் நன்றிகளை தெரிவிக்கிறோம். டெரர் கும்மியில் இருக்கும் நாங்கள் எல்லோரும் இரத்த பந்தங்கள். எங்கள் குடும்பம்த்தில் இருக்கும் எல்லோருக்கும் எங்களுக்கும் நீண்ட ஆயுளும் நல்ல செல்வமும் எப்போதும் நிலைக்கட்டும்...

ஒத்துமையாய் எங்களை எப்போதும் செழிக்கவை...! மாம, அண்ணன், மாப்ஸ், சித்தப்பா.. என்று என்று எங்கள் எல்லா உறவுகளும் எப்போதும் தொடரட்டும்.. எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து நாங்கள் எப்போதும் ஒத்துமையாய் வாழ வேண்டும்.

யாருப்பா அது வெறும்பய அந்த மணி அடி.. நான் தீபம் காட்றேன்...! சத்தமா சொல்லுங்க மக்கா.. பொங்கலோ.............பொங்கல்.......

(எல்லோரும் சத்தமாக.. )

பொங்கலோ.............பொங்கல்.......
பொங்கலோ.............பொங்கல்.......
பொங்கலோ.............பொங்கல்.......
பொங்கலோ.............பொங்கல்.......
பொங்கலோ.............பொங்கல்....... ! பொங்கலோ.............பொங்கல்....... ! பொங்கலோ.............பொங்கல்.......!
-------------  இவ்வாறாக (விர்சுவல்) பொங்கல் இனிதே கொண்டாடப் பட்டது..! 

மாதவன் 

36 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

pongka;

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஐ முதல் பொங்கல் வடை எனக்கா?

ஆர்வா said...

பொங்கலோ பொங்கல் சூப்பரப்பு.. பொங்கல் செம டேஸ்ட்..

வெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கங்கள்

ஆர்வா said...

என்கிட்ட இருந்து வடைய பறிச்ச ரமேஷ் ஒழிக

ஆர்வா said...

ரமேஷ்- ரொம்ப கெட்டவன் (சத்தியமா)

Unknown said...

செங்கலோ செங்கல்... ஆ.. சாரி..
பொங்கலோ பொங்கல்...

Unknown said...

உங்கள் சொந்தமும், பந்தமும் இதே போல என்றும் நிலைத்திருக்க வாழ்த்துக்கள்..

எஸ்.கே said...

எல்லா பொங்கல்களிலும் இனிப்பு இருப்பதில்லை! இனிப்பு இருக்கும் எல்லாமே பொங்கலுமில்லை!

மாணவன் said...

பொங்கலோ.............பொங்கல்.......
பொங்கலோ.............பொங்கல்.......
பொங்கலோ.............பொங்கல்.......
பொங்கலோ.............பொங்கல்.......
பொங்கலோ.............பொங்கல்....... ! பொங்கலோ.............பொங்கல்....... ! பொங்கலோ.............பொங்கல்.......!

மாணவன் said...

பொங்கலோ.............பொங்கல்.......
பொங்கலோ.............பொங்கல்.......
பொங்கலோ.............பொங்கல்.......
பொங்கலோ.............பொங்கல்.......
பொங்கலோ.............பொங்கல்....... ! பொங்கலோ.............பொங்கல்....... ! பொங்கலோ.............பொங்கல்.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சும்மா பாத்துட்டு போகலாம்னு வந்தேன்....!

மாணவன் said...

பொங்கலை சிறப்பாக கொண்டாடிய அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...

தித்திக்கும் பொங்கலோடு தொடர்ந்து பல இனிய நிகழ்வுகள் நடக்கட்டும் மென்மேலும் சிறக்கட்டும்........

Unknown said...

பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள்

மாணவன் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
சும்மா பாத்துட்டு போகலாம்னு வந்தேன்....!///

பார்த்துட்டு சும்மா போனா எப்படி?????????

சும்மா ஏதாவது சொல்லிட்டு போங்க........ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மாணவன் said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
சும்மா பாத்துட்டு போகலாம்னு வந்தேன்....!///

பார்த்துட்டு சும்மா போனா எப்படி?????????

சும்மா ஏதாவது சொல்லிட்டு போங்க........ஹிஹி/////

சரி, சும்மா ஏதாவது சொல்லிட்டேன்.....!

மாணவன் said...

//Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மாணவன் said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
சும்மா பாத்துட்டு போகலாம்னு வந்தேன்....!///

பார்த்துட்டு சும்மா போனா எப்படி?????????

சும்மா ஏதாவது சொல்லிட்டு போங்க........ஹிஹி/////

சரி, சும்மா ஏதாவது சொல்லிட்டேன்.....!//

இப்படி சும்மா சொன்னா எப்படி????ஹிஹிஹி

செல்வா said...

//ரர் பாண்டியன் : இதுக்கு தான் நான் சுள்ளி பொறுக்கு வரேன் சொன்னேன்.. சௌந்தர் தான் ஈர சுள்ளி பொறுக்கி வந்துடான்... இரு நான் ஊதாங்கோல் வச்சி ஊதரேன்... அப்பா இப்போ நல்லா எரியுது.,... :)//

சவுண்டருக்கு இது கூடவா தெரியல !

செல்வா said...

அங்க வச்சிருக்கிற வடைய நான் எடுத்துகிட்டுமா ?

middleclassmadhavi said...

//பொங்கலோ.........பொங்கல்.......

பொங்கலோ........பொங்கல்.......
பொங்கலோ........பொங்கல்.......//

வினோ said...

அன்னைக்கு டபுள் பொங்கல்.. செமயா இருந்துச்சு...

vinu said...

suuuuperrrrrrrrrrrrrrrrrrrrrrb pongal sagalaygalaaaaaaaaaaaa

வெங்கட் said...

பொங்கலோ பொங்கல்..

எங்கேப்பா என் பங்கு..??
என்ன என் பங்கையும் ரமேஷே
சாப்பிட்டுட்டாரா..? அடிங்..

Madhavan Srinivasagopalan said...

//ஐ முதல் பொங்கல் வடை எனக்கா?//
எலேய்.. அந்த வடை போட்டு, நாலு நாளாச்சி.. கேட்டுப் போயிருக்கும்..பரவாயில்லையா ?

Madhavan Srinivasagopalan said...

நன்றி
கவிதைக் காவலன்,
பாரதி..
மாணவன்
இரவு வானம்

Madhavan Srinivasagopalan said...

//கோமாளி செல்வா said...

அங்க வச்சிருக்கிற வடைய நான் எடுத்துகிட்டுமா ? //

நாலே நாலு..
நாலு நாள்தான் ஆச்சு, வடை சுட்டு.. ஒன்னோட விருப்பம்..

Madhavan Srinivasagopalan said...

Thanks for ur visit and greetings.

middleclassmadhavi,
வினோ &
vinu

Madhavan Srinivasagopalan said...

// வெங்கட் said...
" பொங்கலோ பொங்கல்.."

Thanks

// "எங்கேப்பா என் பங்கு..??
என்ன என் பங்கையும் ரமேஷே
சாப்பிட்டுட்டாரா..? அடிங்..
//

அவரு வந்தப்பவே, வடையில காத்து போயிடிச்சு..
ஒங்களுக்கு பரவாயில்லையா ?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லாவே கொண்டாடி இருக்க்கீங்க..:)

மங்குனி அமைச்சர் said...

ஹி.ஹி.ஹி............. என்னோட பங்கு இன்னும் வது சேரலை

MANO நாஞ்சில் மனோ said...

என்னை ஒரு பயலும் கூப்பிடலையே ஏம்லே....

கோமதி அரசு said...

அருமையான கொண்டாட்டம்.
பொங்கல் பாட்டு அருமை.

எல்லோரும் எல்லா நலன்களும் பெற்று வாழ்க பல்லாண்டு!

ஸ்ரீராம். said...

aahaaa.....

:))

Madhavan Srinivasagopalan said...

நன்றி ---
முத்துலெட்சுமி
கோமதி அரசு
ஸ்ரீராம்

Madhavan Srinivasagopalan said...

@ மங்குனி அமைச்சர் &
MANO நாஞ்சில் மனோ
-----------------
இத ப்ளான் பண்ணிலாம், பண்ணலை..
அந்த நேரத்துல யாரெலாம் ஆன்லயணுல இருந்தாங்களோ.. ஜஸ்ட் கொண்டாடினோம்.. அவ்ளோதான்..
--------------------------

ராஜி said...

பொங்கலோ பொங்கல்...
பொங்கலோ பொங்கல்...
பொங்கலோ பொங்கல்...
பொங்கலோ பொங்கல்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அப்பாடா.. நல்ல வேளை, பொங்கல் சாப்பிட்டுட்டு, அதை படமா எடுத்து போடாம ..விட்டாங்களே....

:-)