Monday, January 3, 2011

பாம்பு....பாம்ம்ம்ம்ம்........பு..!


வழக்கபடி பஸ்ல ஏறி உக்காந்தேங்க.. ஆமா. கல்லூரி விடுமுறைக்காக திருப்பத்தூர்ல இருந்து புதுக்கோட்டை வந்து புதுக்கோட்டைல இருந்து பட்டுக்கோட்டை போற பஸ்ஸேதான்....! நான் ஏறுனப்ப கூட்டமே இல்ல. அப்புறம் பாத்தீங்கனா திபு திபுனு கூட்டம் ஏறி, பஸ் கிட்டத்தட்ட ஃபுல்...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! அப்பா! இந்த காலை 11 மணிக்கே வெயிலு கொளுத்துற கொளுத்துல ஒரே புழுக்கம் பஸ்ஸுக்குள்ல...

அடிச்சு பிடிச்சு பஸ்ஸும் கிளம்பிடுச்சு... வழக்கப்படி நாம முன்னாலதானே உக்காருவோம்..(ஏன்னு எல்லோருக்கும் தெரியும்..ச்சும்மா கேள்வி கேக்கணுமின்னு கேக்கப்பிடாது.....அது வாலிப வயசு..(மறுபடி உள் கேள்வி கேக்குறான் பாரு  ஒருத்தன் இப்போ கிழவனான்னு.........முடியல...))

பஸ்ஸு சீறிப்பாயுது.. நான் கைல வைச்சிருந்த சூனியர் (ஜூ போடக்கூடாது அது வட மொழி ஹி ஹி ஹி)விகடன எடுத்து புரட்டிகிட்டே.. கையில இருந்த முறுக்கை சாப்பிட ஆரம்பிச்சேன்.. என் பக்கத்துல முக்காவாசி சீட்ல அவரே உக்காந்துகிட்டு...ஷேவ் பண்ணாத தாடியால தோள் பட்டைல குத்தி இம்சை பண்ணிகிட்டு இருந்தாரு ஒருத்தரு...ஆமாங்க ங்கொய்யால தூங்கி தூங்கி எம்மேல விழுகுறாரு... ! நானும் எம்புட்டு தடவைதான் தள்ளி தள்ளிவிடுறது...இதோ பாருங்க மறுபடி விழுறாரு மேல...ஷேவிங்காச்சும் பண்ணிட்டு வந்திருக்கலாம் ....ம்ம்ம்ம் எல்லாம் நேரக்கொடுமை...

யோவ் யாருய்யா முன்னால உக்காந்துகிட்டு எச்சிய துப்புறது போய்கிட்டு இருக்குற பஸ்ஸுல துப்புனா பின்னால இருக்கவங்க மேல படும்னு தெரியாது...ச்சே...என்ன இது ...முன்னால ஒருத்தர் கத்த.. பாதிக்கப்பட்ட நானும் கர்ச்சிப்பால தொடச்சிகிட்டே...அறிவே இல்லப்பா யாருக்கும்னு சொன்னது யாருக்கும் கேட்டு இருக்காது...

கூட்டம் உள்ள பிதுங்கி வழியுது கண்டக்டர் உள்ள போ.. உள்ளபோன்னு திணிச்சுகிட்டே டிக்கட் போட்டுகிட்டு இருந்தாரு...'இதுக்கு மேல உள்ள போகணும்னா பின்னால உடைச்சுகிட்டு கீழ விழுந்தாதேன்.. ஒரு பெருசு.. சிரிக்காம சொல்லிட்டு.. பேசாம நின்னுச்சு...' நான் திரும்பி பாத்தவுடன் அங்கிட்டு திரும்பிகிடுச்சு..

'ஏம்பா ஆவணம் நாலு ரோட்ல என்னிய இறக்கிவிட்ருப்பா ' ஒரு ஆயா டிரைவர்கிட்ட கெஞ்சிகிட்டு இருந்துச்சு.. டிரைவர் ஒரு ஹேர் பின் பெண்ட்ல கஷ்டப்பட்டு ஸ்டேரிங்க வளைக்க முடியாம வளைசுகிட்டு சொன்னாரு...' ம்ம்ம்ம்ம்ம் ஏன் ஆத்தா நான் பொழைக்கிற பொழப்புல உன்னிய வேற இறக்கி விடணுமா.. ம்க்கூம்ம்.. வண்டிய நிறுத்துறேன் நீயா இறங்கிக்கன்னு அந்த கடுப்புலயும் ஒரு நகைச்சுவைய தெளிச்சுவிட்டுட்டு.. கியர்பாக்ஸோடு மாரடிச்சிகிட்டு இருந்தாரு...

திடீர்னு ஒரு சத்தம்........' ஏய்..........என் பாம்ப காணம்டோய்ய்ய்ய்ன்னு...........' ஒரு முண்டாசு கட்டியிருந்த மூதேவி இப்படி கத்தவும்...டிரைவர்ல இருந்து எல்லோருக்கும் கரண்ட் அடிச்சமாதிரி ஷாக்கு........ஆமாம் முண்டாசு ஒரு பாம்பாட்டி...பாம்பு வைச்சிருந்த பெட்டிய பார்ட்டி வழில செக் பண்ணிக்க தொறந்திருக்கு... உள்ள பாம்ப காணோம்....அவரு டென்சனு பாம்ப காணொம்னு..நம்ம டென்சனு பாம்பு நம்மள போட்றுச்சுனா..???????? விளைவு...என்னவாயிருக்கும்.......

பஸ்ஸ நடுவழில நிறுத்தி புட்டு டிரைவர் மொத ஆளா கீழ குதிச்சு ஓடிட்டாரு.. நாங்க எல்லாம் அடிச்சு புடிச்சு உயிர கையில புடிச்சுக் கிழ இறங்கினோம்..(நான் முறுக்கு பாக்கெட்டோடதான் எறங்கினேன்...செத்தாலும் சாப்பிடறத விடமாட்டம்லப்பு...)

பாம்பாட்டி பஸ் புல்லா பாம்ப தேடிட்டி கீழ வந்து பாம்ப காணோம் சாமின்னு சத்தமா சொன்னான்....எல்லோரு காலுக்குள்ளயும் பாம்பு ஓடுற மாதிரி ஒரு மனப்பிராந்தி....ஹி ஹி ஹி...

ஒரே டென்சன் எல்லோருக்கும் இந்த நேரத்துலதான் இன்னோரு சி.ஆர்.சி (சோழன்ங்க) பஸ்ஸு எங்கள கிராஸ் பண்ணி போய் முன்னால நிக்குது. அந்த பஸ் டிரைவர் என்னமோ ஏதோன்னு நினைச்சு ஹெல்ப் பண்னுவோமேன்னு நிறுத்தியிருக்காரு...டபக்குனு அந்த பஸ்ல இருந்து நம்ம பஸ்ஸு பாம்பாட்டி மாதிரியே முண்டாசு கட்டுன ஒரு ஆளு வந்து இறங்கினான்...அவன் இவன பாத்துட்டு...

' டேய்........மாப்ளேய்....உன் பாம்பு என்கிட்ட இருக்குடோய்ன்னு ஒரு சத்தம் போட்டான்' நம்ம ஆளு  உடனே சந்தோசத்துல.. ஏய். காளி.....எம் பாம்பு கிடைச்சுருச்சுலேன்னு கைய எடுத்து வானத்த பாத்து கும்பிட்டு கத்திப்புட்டு........ரெண்ட மாப்ளைகளும்
 கட்டி பிடிச்சுகிட்டு நடு ரோட்ல ஒரே ஆனந்த கண்ணீரு....

வந்துச்சு பாருங்க கோபம் எல்லாருக்கும்.....அப்டியே அவிங்கள அசிங்க அசிங்கமா கேட்டுபுட்டு..........ரெண்டு பேரையும் ரெண்டு பஸ்காரங்களும் நடு காட்ல விட்டு புட்டு வண்டிய எடுத்துகிட்டு வந்தாச்சு...

மறுபடியும் ரெண்டு பேரும் வண்டி கிளம்புறதுக்கு முன்னால சாமி சாமின்னு கெஞ்சுனத யாரும் கண்டுக்கல............ஹா ஹா..ஹா..

ஊர் வந்து சேர்ற வரைக்கும் எங்க காலுக்குள்ள பாம்பு நெளிஞ்சுகிட்டே இருந்துச்சு சாமியோவ்....

கொடுமையில்ல... ...இன்னைக்கு பஸ்ல ஏறுனாலும் பாம்பாட்டிங்க அடிச்ச லூட்டி மறக்கவே முடியல சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!


அப்போ வர்ர்ர்ர்ர்ட்டா!

டெரர் கும்மிக்காக
தேவா. S

45 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai

பாரத்... பாரதி... said...

..(நான் முறுக்கு பாக்கெட்டோடதான் எறங்கினேன்...செத்தாலும் சாப்பிடறத விடமாட்டம்லப்பு...)

ha ha ha haa

பாரத்... பாரதி... said...

சேதாரமில்லாம தப்பிச்சாச்சு...

பாரத்... பாரதி... said...

டெரர் தேவா அவர்களுக்கு இந்த 2011 சிறப்பாக இருக்க ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் நல்வாழ்த்துக்கள்.

karthikkumar said...

நான் முறுக்கு பாக்கெட்டோடதான் எறங்கினேன்...///
ராஜ தந்திரங்கள் அனைத்தையும் கரைத்து குடித்திருக்கிறீர்கள் போங்கள்.....:)

dheva said...

நன்றி...பாரத் பாரதி...........!

dheva said...

கார்த்திக் குமார்... @ பின்ன.......உயிர் போனாலும் முறுக்க எப்டி விடுறது...? சாப்டுட்டு சாவோம்னுதான்... ஹி ஹி ஹி!

இம்சைஅரசன் பாபு.. said...

//பாம்பாட்டி பஸ் புல்லா பாம்ப//
பாம்பாட்டி பாம்பே(BOMBAY அது தான் இப்ப மும்பை ஆக்கிடுச்சு இல்ல ) ஏன் பஸுல தேடினான்

இம்சைஅரசன் பாபு.. said...

//மனபிராந்தி//

சாந்திய நினைச்சா பிராந்தி தான் நினைவுக்கு வரும் போல
நான் நிறைய வகையான பிராந்தி கேள்வி பட்டு இருக்கிறேன் அது என்ன மனபிராந்தி ...........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இதுல என்னப்பா மெசேஜ் இருக்கு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இம்சைஅரசன் பாபு.. said...

//பாம்பாட்டி பஸ் புல்லா பாம்ப//
பாம்பாட்டி பாம்பே(BOMBAY அது தான் இப்ப மும்பை ஆக்கிடுச்சு இல்ல ) ஏன் பஸுல தேடினான்//

ennaa arivu

இம்சைஅரசன் பாபு.. said...
This comment has been removed by the author.
இம்சைஅரசன் பாபு.. said...

//இம்சைஅரசன் பாபு.. said...

//பாம்பாட்டி பஸ் புல்லா பாம்ப//
பாம்பாட்டி பாம்பே(BOMBAY அது தான் இப்ப மும்பை ஆக்கிடுச்சு இல்ல ) ஏன் பஸுல தேடினான்//

ennaa அறிவு//

நண்பன்டா

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

super!

(pathivu padikkaamal comment mattum poduvor sangam!)

கோமாளி செல்வா said...

///அடிச்சு பிடிச்சு பஸ்ஸும் கிளம்பிடுச்சு... வழக்கப்படி நாம முன்னாலதானே உக்காருவோம்..(ஏன்னு எல்லோருக்கும் தெரியும்..ச்சும்மா கேள்வி கேக்கணுமின்னு கேக்கப்பிடாது....///

நான் பின்னாடி தான் உக்காருரேனே , அப்படின்னா நான் சின்னப் பையன் இல்லையா ..?

எஸ்.கே said...

பாம்பின் கால் பாம்பறியும்!

கோமாளி செல்வா said...

/// எஸ்.கே said...
பாம்பின் கால் பாம்பறியும்!
///

STD or LOCAL.!

எஸ்.கே said...

//கோமாளி செல்வா said...

/// எஸ்.கே said...
பாம்பின் கால் பாம்பறியும்!
///

STD or LOCAL.!//

தேவா வெளிநாட்டில்தானே இருக்கார் அப்போ ISD!

இம்சைஅரசன் பாபு.. said...

அட லூசு தம்பி தேவா அண்ணா எங்கே இருக்காரு ..துபாய்ல,விவேகந்தர் தெரு ,பஸ் சட்டத் அருகில் துபாய் .....அப்போ இது ISD கால் ஒகே

Madhavan Srinivasagopalan said...

சூப்பர் அனுபவமப்பா..

கோமாளி செல்வா said...

//தேவா வெளிநாட்டில்தானே இருக்கார் அப்போ ISD!///

//அட லூசு தம்பி தேவா அண்ணா எங்கே இருக்காரு ..துபாய்ல,விவேகந்தர் தெரு ,பஸ் சட்டத் அருகில் துபாய் .....அப்போ இது ISD கால் ஒகே

///

அவர் இருக்குற நாட்டுல லோக்கல் பண்ணினா கூட அது ISD ஆகுமா ..?

எஸ்.கே said...

//அவர் இருக்குற நாட்டுல லோக்கல் பண்ணினா கூட அது ISD ஆகுமா ..?//

அப்போ அவரை லோக்கல்னு சொல்ரீங்களா?

கோமாளி செல்வா said...

//அப்போ அவரை லோக்கல்னு சொல்ரீங்களா?
//

நமக்கு அவர் ISD , ஆனா அவர் இருக்குற ஊர்ல அவர் ISD ய இல்ல லோகலா ..?

எஸ்.கே said...

//நமக்கு அவர் ISD , ஆனா அவர் இருக்குற ஊர்ல அவர் ISD ய இல்ல லோகலா ..?//

எதுக்கு குழப்பம்? அனகோண்டாக்கு உங்க எஸ் எம் எஸ் ஒன்னு அனுப்புங்க நல்ல பதில் கிடைக்கும்!

கோமாளி செல்வா said...

//எதுக்கு குழப்பம்? அனகோண்டாக்கு உங்க எஸ் எம் எஸ் ஒன்னு அனுப்புங்க நல்ல பதில் கிடைக்கும்!
///

ஹி ஹி ஹி ,, அது செத்துப்போசுனா ..?

எஸ்.கே said...

//ஹி ஹி ஹி ,, அது செத்துப்போசுனா ..?//

மொக்கை லேகியம் கொடுத்து உயிர் பிழைக்க வச்சிடலாம்!

வைகை said...

எஸ்.கே said...
//ஹி ஹி ஹி ,, அது செத்துப்போசுனா ..?//

மொக்கை லேகியம் கொடுத்து உயிர் பிழைக்க வச்சிடலாம்///////////


லேகியம் செய்முறையை நம்ம பன்னிகுட்டிகிட்ட கேளுங்க நல்லா சொல்லுவாரு

வைகை said...

கோமாளி செல்வா said...
//அப்போ அவரை லோக்கல்னு சொல்ரீங்களா?
//

நமக்கு அவர் ISD , ஆனா அவர் இருக்குற ஊர்ல அவர் ISD ய இல்ல லோகலா ..////////////

நானும் வெளிநாட்லதான் இருக்கேன்...எனக்கும் அவரு ISD தான் இது ஏன்?

எஸ்.கே said...

//நானும் வெளிநாட்லதான் இருக்கேன்...எனக்கும் அவரு ISD தான் இது ஏன்?//
இதான் காலத்தின் கோலம்

ISD to ISD - ISD
STD to STD - STD
Local to Local - Local

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நல்லா கிளப்புறாய்ங்கய்யா பீதிய

மாணவன் said...

//"பாம்பு....பாம்ம்ம்ம்ம்........பு..!//

அய்யயோ பாம்பாஆஆஆஆஆஆ ஓடுங்க...........

மாணவன் said...

//ஊர் வந்து சேர்ற வரைக்கும் எங்க காலுக்குள்ள பாம்பு நெளிஞ்சுகிட்டே இருந்துச்சு சாமியோவ்....//

பாம்பாட்டியோட தாக்கமோ.........

மாணவன் said...

// எஸ்.கே said...
//நானும் வெளிநாட்லதான் இருக்கேன்...எனக்கும் அவரு ISD தான் இது ஏன்?//
இதான் காலத்தின் கோலம்

ISD to ISD - ISD
STD to STD - STD
Local to Local - Local//

அட புதுசா இருக்கே...

சுபத்ரா said...

எனக்கு முறுக்குகுகுகுகுகு ;’(

வானம் said...

// (ஜூ போடக்கூடாது அது வட மொழி ஹி ஹி ஹி////

ஆனா அதுக்கு பக்கத்துலயே ஹி போடலாம். ஏன்னா அது தமிழ் மொழிதானே?

dheva said...

//ஆனா அதுக்கு பக்கத்துலயே ஹி போடலாம். ஏன்னா அது தமிழ் மொழிதானே?

// அதானே.......?????????????????

வெறும்பய said...

ஐயோயோயோயோயோயோயோயோய"பாம்பு....பாம்ம்ம்ம்ம்........பு..!"

சௌந்தர் said...

இம்சை பண்ணிகிட்டு இருந்தாரு ஒருத்தரு...////

யாரு நம்ம இம்சையா...?

இம்சைஅரசன் பாபு.. said...

//இம்சை பண்ணிகிட்டு இருந்தாரு ஒருத்தரு...////

யாரு நம்ம இம்சையா...//

என்ன வம்பு இழுக்காம உனக்கு தூக்கம் வராதே

சௌந்தர் said...

இம்சைஅரசன் பாபு.. said... 39
//இம்சை பண்ணிகிட்டு இருந்தாரு ஒருத்தரு...////

யாரு நம்ம இம்சையா...//

என்ன வம்பு இழுக்காம உனக்கு தூக்கம் வராதே////

அப்பறம் உங்க பேரு தானே இம்சை அந்த பாம்பை நீங்க பார்தீங்களா

சௌந்தர் said...

இந்த பதிவை எழுதியது தேவா வா...ம்ம்ம் என்ன அர்த்தம் எல்லாம் வேற மாதரி இருக்கு தான் கேட்டேன் :P

Reggie J. said...

மிகவும் ரசித்துப் படித்தேன். நன்றி

மனசாட்சி said...

change your back round unable to read

விக்கி உலகம் said...

என்னோவோ போங்க..........

பட் ரசிச்சி படிச்சேன்!

sathish said...

hello sir h r u?
u r native place plz?
i am from karambakkudi
plz reply