Wednesday, January 12, 2011

சிறுகுறிப்புத் திருவிழா!


முன்குறிப்பு : நாம ஒன்னாவது இரண்டாவது படிக்கும் போது இரண்டு மார்க் கேள்வில கேப்பாங்க இல்லையா , திருக்குறள் சிறுகுறிப்பு வரைக அப்படின்னு அது மாதிரி ப்ளாக் பத்தின சில சிறுகுறிப்புகள் உங்களுக்காக.

ப்ளாக் : ப்ளாக் என்பது அமெரிக்காவில் ஒரு இருதலைக் கொல்லி எருமையாகும். அது பெரும்பாலும் குளிர்ப்பிரதேசங்களில் வாழும் தன்மையுடையது. ஆனால் சில வெப்ப , மித வெப்ப பிரதேசங்களிலும் வாழ்வதாக சில கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இதனைப் பற்றி நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பின்னூட்டம் : பின்னூட்டம் என்பது இருசக்கர வாகனங்களில் பொருத்தப்படும் ஒரு வித ஒலி எழுப்பும் கருவியாகும். இது பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு விதமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த முறை தமிழக சட்டமன்றத்தேர்தலில் இலவசத் திட்டங்களில் இது போன்ற கருவிகள் இலவசமாக வழங்கப்படலாம் என்ற அறிக்கையினை மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர் என்பது சூடான செய்தியாகும்!

பதிவு : பதிவு என்பது செவ்வாய்க் கோளில் காணப்படும் ஒரு உயிரனமாகும். அது பூமியில் வளருமா என்ற என்ற ஆராய்சிகள் தற்பொழுது நடந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் அந்தப் பூச்சி கொடூர விசத்தன்மை உடையது என்று கோட்டர் கோவிந்தன் பாதி மப்பில் உள்ள போது உளறியது நாம் அறிந்ததே! இருந்தாலும் அது போன்ற பூசிகளை பூமியில் வளர்க்க ஆராய்ச்சியாளர்கள் விருப்பம் தெரிவித்திருப்பது சற்று வேதனை அளிக்கக்கூடியதாகவும் உள்ளது.

ஒட்டுப்பட்டை : ஒட்டுப்பட்டை என்பது ஒரு மனிதரின் பெயராகும். அவர் இருநூறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் என்று தற்ப்பொழு பிறந்த குழந்தை ஒன்று திருவாய் மலர்ந்துள்ளது. அவர் காலத்தில் கல்வி அறிவு செழித்து வளர்ந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆயினும் அந்தக் கால கட்டங்களில் மக்கள் மிகவும் செல்வாக்குடன் திகழ்ந்தனர் என்ற புரளி கிளப்பியுள்ளது சற்று நடுக்கத்திற்கு உரியதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

எதிர் ஒட்டு  : எதிர் ஒட்டு என்பது ஒரு குளிர்பானம் ஆகும். அது ஹார்லிக்ஸ் , பூஸ்ட் போன்றது என்றும் சிலர் தெரிவித்துள்ளனர். ஆயினும் அதனைப் பருகும் போது ஆகாயத்தில் பறப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தக் கூடியதாக ஜப்பான் வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது. ஆயினும் இதனை அருந்திய சிலர் அருந்திய உடனே ரத்தம் கக்கி செத்தது மகிழ்ச்சி அளிப்பதாக ஐ.நா சபைத் தலைவர் பெருமிதம் அடைந்துள்ளார்.

நீதி : நீதி என்பது ஒரு ஐந்து தலை கொண்ட , ஒவ்வொரு தலையிலும் தலா நான்கு கொம்புகள் கொண்ட , ஒரு பருமனான உருவம் உடைய கொடூர உருவம் கொண்ட அதே சமயம் பல வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் உயிரியாகும், ( அட ச்சே , நான் இந்தப் பதிவோட நீதி சொல்ல வந்து , நீதி பத்தி சிறுகுறிப்பு எழுதிட்டு இருக்கேன் )

பின்குறிப்பு : பின்குறிப்பு என்பது ஒரு பழங்கால ஒலைச்சுவடியாகும். அதில் தற்போழு ரோபோ எவ்வாறு உருவாக்குவது என்பது போன்ற நிரல்கள் C மொழியில் எழுதப்பட்டு காட்சி அளிப்பதாக திருவள்ளுவப் பெருந்தகை தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார். ( மறுபடியும் பின்குறிப்பு எழுத வந்தவன் , பின்குறிப்பு பத்தி சொல்லிட்டு இருக்கேன் , சரி உங்களுக்கு ஏதும் சிறுகுறிப்பு எழுத ஆசை இருந்தா பின்னூட்டத்துல எழுதுங்க)

84 comments:

Unknown said...

ம்ம் velankiruchu ... vadai?

Unknown said...

hyaaa vadai yenakuthan

ஜெயந்த் கிருஷ்ணா said...

படிச்சிட்டு தான் கமெண்ட் போடணுமா...

middleclassmadhavi said...

சபாஷ்! ஒன்றை ஒன்று விஞ்சும் வகையில் உள்ளன குறிப்புகள்! பிடியுங்கள் 100-க்கு 1000 மதிப்பெண்கள்!

செல்வா said...

//
akbar said...
ம்ம் velankiruchu ... vadai?

//

ஓ , சரி சரி ..

செல்வா said...

// வெறும்பய said...
படிச்சிட்டு தான் கமெண்ட் போடணுமா...

//

யார் சொன்னது ?

செல்வா said...

// middleclassmadhavi said...
சபாஷ்! ஒன்றை ஒன்று விஞ்சும் வகையில் உள்ளன குறிப்புகள்! பிடியுங்கள் 100-க்கு 1000 மதிப்பெண்கள்!

//

நன்றிங்க , நான் படிக்கும் போது எழுதின சிருகுரிப்புகளுக்கு கூட இவ்ளோ மார்க் வாங்கினது இல்ல

ஜெயந்த் கிருஷ்ணா said...

இந்த பதிவ படிச்சிட்டு சிரிப்பு வரலன்னா என்ன பண்றது...

Madhavan Srinivasagopalan said...

// நன்றிங்க , நான் படிக்கும் போது எழுதின சிருகுரிப்புகளுக்கு கூட இவ்ளோ மார்க் வாங்கினது இல்ல //
ஒன்னோட நன்றி யாருக்கு வேணும்..
பொட்டிப்பா.. பொட்டி..
பொட்டி அனுப்பு..

Arun Prasath said...

படிச்சிட்டு தான் கமெண்ட் போடணுமா...//

படிகாமையும் போடலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அட சீ செல்வா லேப்டாபுல இருந்து காலை எடு

Unknown said...

ஏன் இரண்டாவது பாஸ் பண்ணலனு இப்பத்தான் தெரிகிறது.

Unknown said...

செல்வா இரண்டாம் வகுப்பு பெயில்.,
அவ்வையார் ஆரம்ப பாடச்சாலை,

Unknown said...

படிச்சிட்டு தான் கமெண்ட் போடணுமா...//

படிகாமையும் போடலாம்//
வழக்கம் போல...

எஸ்.கே said...

பூ பூவா பூத்திருக்கு ஆயிரம் பூ
பூவிலே சிறந்த பூ
என்ன பூ?

Unknown said...

செல்வா இரண்டாம் வகுப்பு பெயில்.,
ஆனால் மொக்கையில் டாக்டர் பட்டம்..

வினோ said...

செல்வா குறிப்பு எழுதியே ஒன்னும் தேறல போல...

செல்வா said...

//செல்வா இரண்டாம் வகுப்பு பெயில்.,
அவ்வையார் ஆரம்ப பாடச்சாலை,/

ஹி ஹி , நல்லா ஏமாந்திட்டாங்க , நான் ஒன்னவதுலையே பெயில் .. ஹா ஹா ..

எஸ்.கே said...

//ஹி ஹி , நல்லா ஏமாந்திட்டாங்க , நான் ஒன்னவதுலையே பெயில் .. ஹா ஹா ..//

அப்போ எல்கேஜி, யூகேஜி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ப்ளாக் - கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பின்னூட்டம் - ஊட்டி வரை உறவு. வீதிவரை பிள்ளை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பதிவு - பதிவே பதிவே இசை பாடு பதிவே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மறுபடியும் பின்குறிப்பு எழுத வந்தவன் , பின்குறிப்பு பத்தி சொல்லிட்டு இருக்கேன் , சரி உங்களுக்கு ஏதும் சிறுகுறிப்பு எழுத ஆசை இருந்தா பின்னூட்டத்துல எழுதுங்க//


பேனா வச்சு எழுதணுமா? பென்சில் வச்சா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒட்டுப்பட்டை என்பது ஒரு மனிதரின் பெயராகும். அவர் புனை பெயர் பன்னிகுட்டியா?

செல்வா said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பதிவு - பதிவே பதிவே இசை பாடு பதிவே

//
பதிவு இசை பாடுதா ?

Unknown said...

சிறு குறிப்பு சூப்பர் தல

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

இம்சைஅரசன் பாபு.. said...

எலேய் செல்வா உன்னை இன்னும் நாடு கடத்தலையா .......?

karthikkumar said...

கொலுசு கொலுசே எசப்பாடு கொலுசே அட காலு கொலுசே....

எஸ்.கே said...

//karthikkumar said...

கொலுசு கொலுசே எசப்பாடு கொலுசே அட காலு கொலுசே....//

சரி கொலுசை கொடுங்க பாலீஸ் போட்டுத் தரேன்!

logu.. said...

\\இருந்தாலும் அது போன்ற பூசிகளை பூமியில் வளர்க்க ஆராய்ச்சியாளர்கள் விருப்பம் தெரிவித்திருப்பது சற்று வேதனை அளிக்கக்கூடியதாகவும் உள்ளது.\\

Neengallam boomila irukumpothu..
ha..ha.. athukenna tharalama valakkalam..

அருண் பிரசாத் said...

ம்...ம்.... வெளங்கிடுச்சு...

logu.. said...

\\நீதி என்பது ஒரு ஐந்து தலை கொண்ட , ஒவ்வொரு தலையிலும் தலா நான்கு கொம்புகள் கொண்ட , ஒரு பருமனான உருவம் உடைய கொடூர உருவம் கொண்ட அதே சமயம் பல வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் உயிரியாகும்,\\

Pannikuttiyoda pangali kootamtyhane athu?

Unknown said...

அடிச்ச சரக்கு மட்டமா அல்லது ரியாக்சன் ஆயிருச்சா ?

அனு said...

செல்வா: செல்வா என்பது உயிரை அழிக்கக் கூடிய ஒரு விஷ கிருமி..
இது காற்று, நீர் போன்றவைகளால் பரவாது.. கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் வழியாக மட்டுமே பரவக்கூடியது.. யாராக இருந்தாலும் தேடி போய் கடிப்பதில் திறமையானது.
இதை அழிக்க இன்னும் நிரந்தர தீர்வு கண்டுபிடிக்க படவில்லையெனினும் சில websiteகளை block பண்ணுவதன் மூலம் இதன் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கலாம்...

செல்வா said...

@ அனு
மிகவும் தவறான பதிலாகும். செல்வா என்பது உலகிலேயே பெரும்பான்மையோர் விரும்பும் ஒரு பிரமிக்கத்தக்க வர்ணிக்க இயலாத மேலும் என்னாலேயே சொல்ல முடில ..!!

செல்வா said...

// இனியவன் said...
அடிச்ச சரக்கு மட்டமா அல்லது ரியாக்சன் ஆயிருச்சா ?

///

அட நீங்க வேற , நானே பரீட்சைக்கு தயாராகிட்டு இருக்கேன் !!

செல்வா said...

//Pannikuttiyoda pangali kootamtyhane athu?///

அது இல்லைங்க , இது வேற

எஸ்.கே said...

டிஸ்கி: இது கம்ப்யூட்டரில் இருக்கும் ட்ரைவ்களில் ஒன்றாகும். டிஸ்க் இ தவிர, சி, டி, எஃப் என பல ட்ரைவ்கள் இருக்கலாம்!

செல்வா said...

//டிஸ்கி: இது கம்ப்யூட்டரில் இருக்கும் ட்ரைவ்களில் ஒன்றாகும். டிஸ்க் இ தவிர, சி, டி, எஃப் என பல ட்ரைவ்கள் இருக்கலாம்!//

இதையும் உள்ள இணைசிடலாம ?

எஸ்.கே said...

இன்ணையுங்க கனெக்சன் குடுங்க செல்வா!

செல்வா said...

// எஸ்.கே said...
இன்ணையுங்க கனெக்சன் குடுங்க செல்வா!

//

ஹா ஹா , நான் போஸ்டிங் ல இணைசிடலாமன்னு கேட்டேன்

எஸ்.கே said...

பதிவர்: பதிவர் என்பது மொஸைக் கல்லை போன்று தரையில் பதிக்கப்படும் ஒருவகைக் கல். இந்த கல்லில் பயங்கரமாக கீறல் விழுந்திருந்தால் அதை பிரபல பதிவர் என்பார்கள்!

NaSo said...

ம்..ம்....வெளங்கிடுச்சு!!

NaSo said...

ம்..ம்....வெளங்கிடுச்சு!!

NaSo said...

ம்..ம்....வெளங்கிடுச்சு!!

NaSo said...

ம்..ம்....வெளங்கிடுச்சு!!

NaSo said...

ம்..ம்....வெளங்கிடுச்சு!!

NaSo said...

வடை!!!!

NaSo said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் வடை!!!!

எஸ்.கே said...

வடை: வடை என்பது பெருமாள் கோவிலில் தரப்படும் ஒரு வகை பிரசாதம். சீக்கிரம் போகாவிட்டால் தீர்ந்துவிடும்!

MANO நாஞ்சில் மனோ said...

//பதிவு : பதிவு என்பது செவ்வாய்க் கோளில் காணப்படும் ஒரு உயிரனமாகும். அது பூமியில் வளருமா என்ற என்ற ஆராய்சிகள் தற்பொழுது நடந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் அந்தப் பூச்சி கொடூர விசத்தன்மை உடையது என்று கோட்டர் கோவிந்தன் பாதி மப்பில் உள்ள போது உளறியது நாம் அறிந்ததே! இருந்தாலும் அது போன்ற பூசிகளை பூமியில் வளர்க்க ஆராய்ச்சியாளர்கள் விருப்பம் தெரிவித்திருப்பது சற்று வேதனை அளிக்கக்கூடியதாகவும் உள்ளது.///

செவ்வாய் என்பதை செல்வா என்று படிக்கவும்..
அப்போதான் பதிவு'வின் அர்த்தம் நல்லா புரியும்...ஹா ஹா ஹா ஹா....

MANO நாஞ்சில் மனோ said...

//இந்த பதிவ படிச்சிட்டு சிரிப்பு வரலன்னா என்ன பண்றது...//

எதிர் மொக்கை போட்ற வேண்டியதுதான் வசந்த்..

MANO நாஞ்சில் மனோ said...

//அட சீ செல்வா லேப்டாபுல இருந்து காலை எடு///

ஹா ஹா ஹா ஹா அதானே....

MANO நாஞ்சில் மனோ said...

//எலேய் செல்வா உன்னை இன்னும் நாடு கடத்தலையா .......?///

எலே மக்கா அவன் நம்மள நாடு கடத்திருவான் பாத்துக்க...

MANO நாஞ்சில் மனோ said...

//எலேய் செல்வா உன்னை இன்னும் நாடு கடத்தலையா .......?///

எலே மக்கா அவன் நம்மள நாடு கடத்திருவான் பாத்துக்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
படிச்சிட்டு தான் கமெண்ட் போடணுமா...////

நல்ல கேள்வி..... ஆனா எதப் படிச்சுட்டு, பதிவையா, கமெண்ட்டையா? தெளிவா கேக்க வேணாமா?

எஸ்.கே said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
படிச்சிட்டு தான் கமெண்ட் போடணுமா...////

நல்ல கேள்வி..... ஆனா எதப் படிச்சுட்டு, பதிவையா, கமெண்ட்டையா? தெளிவா கேக்க வேணாமா?//

அநேகமா அவரு ஸ்கூல்ல படிச்சிட்டு கமெண்ட் போடனுமான்னு கேட்டிருப்பாருன்னு நினைக்கிறேன்!

வானம் said...

மனுசனுக்கு கஷ்டகாலம் இப்படியெல்லாமா வரணும்?

வானம் said...

செல்வா, உனக்கு நல்லா தெரிஞ்ச விசயம் வடை வாங்குறது. ஒழுங்கா அதை மட்டும் பண்ணு. அத விட்டுட்டு இப்படி மொக்கபதிவு போடுறேன்னு மக்கள சாவடிக்கக்கூடாது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////முன்குறிப்பு : நாம ஒன்னாவது இரண்டாவது படிக்கும் போது இரண்டு மார்க் கேள்வில கேப்பாங்க இல்லையா , ////////

என்னது ஒன்னாவது ரெண்டாவதுலேயே இப்போ இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேக்க ஆரம்பிச்சுட்டாங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
படிச்சிட்டு தான் கமெண்ட் போடணுமா...////

நல்ல கேள்வி..... ஆனா எதப் படிச்சுட்டு, பதிவையா, கமெண்ட்டையா? தெளிவா கேக்க வேணாமா?//

அநேகமா அவரு ஸ்கூல்ல படிச்சிட்டு கமெண்ட் போடனுமான்னு கேட்டிருப்பாருன்னு நினைக்கிறேன்!/////

அப்படியா அப்போ படிச்சு முடிச்சிட்டே வரட்டும்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வானம் said...
மனுசனுக்கு கஷ்டகாலம் இப்படியெல்லாமா வரணும்?////

ஏன் காலைல இருந்து வரலியா? பதட்டப்படாம பொறுமையா ட்ரை பண்ணுங்க, எப்படியும் வந்துடும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ம்ம்ம்... வெளங்கிருச்சு.............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி, சரி இந்தப்பக்கம் வந்ததுல, உடம்பெல்லாம் நமைச்சல் எடுத்துடுச்சு, நான் போயி ஊசி போட்டுக்கிட்டு வர்ரேன்!

வெளங்காதவன்™ said...

எதுக்கு?
ஏன்?

Chitra said...

:-))

HAPPY PONGAL!

arasan said...

அசத்தல் ...



நெஞ்சார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் ...

vinu said...

ingea kummuravangaalukku

http://thiruttusavi.blogspot.com/2011/01/blog-post_12.html

mudinjaa ithayum konjam padingaa


oru chinna request

மாணவன் said...

ம்ம்ம்... வெளங்கிருச்சு.............

மாணவன் said...

ம்ம்ம்... வெளங்கிருச்சு.............

மாணவன் said...

ம்ம்ம்... வெளங்கிருச்சு.............

மாணவன் said...

ம்ம்ம்... வெளங்கிருச்சு.............

மாணவன் said...

படிச்சிட்டு தான் கமெண்ட் போடணுமா...

ஹிஹிஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அல்வாவை அப்படியே சாப்பிட்டாலும், அதுவாக போகும்.. அதுதான் நீயூட்டனின் ஆறாம்விதி.

( அய்யோ.. மொக்கை சாமி..முடியலே...)

Anonymous said...

தெரியாம இந்தப் பக்கம் வந்துட்டேன்.

இப்ப நா பின்னூட்டம் போட்றதா வேண்டாமா???

Anonymous said...

//middleclassmadhavi said...

சபாஷ்! ஒன்றை ஒன்று விஞ்சும் வகையில் உள்ளன குறிப்புகள்! பிடியுங்கள் 100-க்கு 1000 மதிப்பெண்கள்!//


பரவாயில்லையே.. செல்வா சொல்லிக்குடுத்தத அப்படியே சொல்லிட்டீங்களே..

Ramesh said...

என்னங்க சின்னப்பையனா இருந்தப்ப படிக்காம போயி எக்ஸாம் எழுதுவமே.. அது நியாபகம் வந்திருச்சா... அதே ஸ்டைல்ல.. பதில் எழுதிருக்கீங்க..

மங்குனி அமைச்சர் said...

பல வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் உயிரியாகும்,///

ஒரு விலங்கினமே பதிவு போட்டு உள்ளதே !!!! ஆச்சரியக்குறி

போளூர் தயாநிதி said...

//பதிவு : பதிவு என்பது செவ்வாய்க் கோளில் காணப்படும் ஒரு உயிரனமாகும். அது பூமியில் வளருமா என்ற என்ற ஆராய்சிகள் தற்பொழுது நடந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் அந்தப் பூச்சி கொடூர விசத்தன்மை உடையது என்று கோட்டர் கோவிந்தன் பாதி மப்பில் உள்ள போது உளறியது நாம் அறிந்ததே! இருந்தாலும் அது போன்ற பூசிகளை பூமியில் வளர்க்க ஆராய்ச்சியாளர்கள் விருப்பம் தெரிவித்திருப்பது சற்று வேதனை அளிக்கக்கூடியதாகவும் உள்ளது.///
parattugal

yeskha said...

பின்னூட்டம் னா பின் வழியா (??) ஊட்டுறது ன்னு நான் ரொம்ப நாளா நெனச்சிகிட்டு இருந்தேனுங்க..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

செல்வா ; கொசுத்தொல்ல தாங்க முடியலப்பா.
மணி (ஆயிரத்தில் ஒருவன்):அதாவது ரத்தத்ததான் குடிக்கும் ,மச்சி நீ
உசுரக்குடிக்கியே :-)

chammy fara said...

200/100 மதிப்பெண்கள்
வாழ்க வளர்க !!!

chammy fara said...

200/100 மதிப்பெண்கள்
வாழ்க வளர்க !!!