Tuesday, January 4, 2011

25 பைசா இன்னும் நீ வைச்சிருக்கியா...?



நான் இதை சொல்வதினால் என்னை கஞ்ச பிசுநாறி  என்று சொன்னாலும் பரவாயில்லை பதிவுலக அன்பர்களே .....நண்பர்களே ..சகோதர ....சகோதிரிகளே (இதுக்கு தான் அதிகமா அரசியல் மீட்டிங் கேக்காதேன்னு சொன்னா கேட்கணும் ).
சரி வரும் ஜூன் 30  தேதி முதல் 25 பைசா செல்லு படியாகாது என்று RESERVE BANK அறிவித்து விட்டது (25 பைசா இன்னும் நீ வைச்சிருக்கியா ன்னு யாரும் கேக்க கூடாது )எலேய் ரமேஷ் , டெர்ரர் ரெண்டு பெரும் என்ன நினைக்கிறீங்க ன்னு தெரியும் என்னை சரியான பிச்சைகார பயன்னு தானே நினைக்கீறீங்க பரவாயில்லை  எண்ணி கொள்ளுங்கள் .

நானும் ரமேஷும் வடபழனி முருகன் கோவிலுக்கு சென்றோம் சரி வரும் போது பிச்சைகாரன் ஒருத்தன் நின்றான் நான் 5 ரூபாய் எடுத்து கொடுக்க போனேன் .ரமேஷ் என் கையை பிடித்து என்ன பெரிய ராஜ பரம்பரயா நீ அப்படின்னு சொல்லிக்கிட்டு 1 ரூபாய் கொடுத்தான் அந்த பிச்சைகாரன் அந்த ரூபாயை ரமேஷ் மூஞ்சில விட்டு அடித்தான் .ரமேஷ் மூக்குல இருந்து ரத்தம் .அவனுக்கு  தான் பிஞ்சு  மூக்கு ஆச்சே .சௌந்தர் யார் அந்த பிச்சை காரன் ன்னு நினைகிரீய ...எலேய் அதுக்கு ஏன் டெர்ரர் பார்குற ...அவன் அந்த மாதிரி பிச்சை எடுக்க மாட்டான்...(இப்ப சொல்லுங்க யார் பிச்சை காரன் ?..யார் கொடை வள்ளல்..?என்று ) 

சரி சரி மேட்டர்க்கு வருவோம் எப்போதுமே இப்படி தான் சொல்ல வந்தத சொல்லாம .....

எங்கள் ஊரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 60 .59 காசு .ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டு கிட்டு 60 .50 காசு கொடுத்தால் பெட்ரோல் பங்க்ல  வாங்க மாட்டாங்க  61 ரூபாய் கொடுத்தால் மீதி கிடைக்க மாட்டுது . இது என்ன நியாயம் நீங்களே சொல்லுங்கள் .சரி இந்த பிரச்சனையே    வேண்டாம் என்று 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட சொன்னால் 99 .96 பைசா வந்தவுடன் பெட்ரோல் போடுவதை நிறுத்தி விடுகிறார்கள் .என்னய்யா டெய்லி இப்படி தானே போடுகிறீர்கள் என்றால்  பையன் பல்லை காண்பிக்குறான். (நான் என்ன பல் டாக்டரா) இப்படி போட்டாலும் 4 பைசா அவுட் .

அரசு 5 பைசா ,10 பைசா ,20 பைசா ,இப்பொழுது 25 பைசா செல்லாது  என்று கூறிவிட்டது .ஆனால் விலை மட்டும் ஏன் இப்படி நிர்ணயிக்கிறார்கள் என்று தெரியவில்லை .அந்நியன் படம் தான் நினைவுக்கு வருகிறது 5 பைசா வைச்சு எத்தனை  கோடி மக்கள் பணம் போகிறது .இந்த விலை கரெக்டா ரவுண்டு அப் பண்ணி  பைசாவில் இருந்தால் நல்லதுதானே .மக்களும் பெட்ரோல் பங்கில் சண்டை இட மாட்டார்கள் .சில்லரை  போன்ற விசயங்களுக்காக  உரிமையாளர்களுக்கு பிரச்சனை வராது அல்லவா ?செயல் படுமா அரசு ?

அவங்க மட்டும் ரவுண்டு பண்ணி  கொள்ளை  அடிக்கிறாங்கப்பா.அறுபதுனாயிரம் கோடி. ௦௦176000 கோடி இப்படி அடிக்கிறாங்க . 

ஒரு பைசாவா இருந்தா என்ன ஐந்து பைசாவா இருந்தா என்ன பணம்...பணம் தான் இது  பெட்ரோல் பங்கில் மட்டும் இல்லை எல்லா கடைகளிலும் இப்படி தான் நடக்குது.

டெரர் கும்மிக்காக
இம்சைஅரசன் பாபு.


68 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் அரசாங்கத்துக்கு என்ன வேற வேலை இல்லேன்னு நெனச்சுட்டீயா? இந்த மாதிரி சில்லறைப் பெரச்சனைக்குப் போனா சில்லறை தேறுமா?

மங்குனி அமைச்சர் said...

அப்ப போலீசு பிஞ்சு மூஞ்சிய வச்சிக்கிட்டுதான் படம் காமிக்குதா ???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இங்கேயும் அப்பிடித்தான் பண்றானுங்கப்பா, சூப்பர் மார்க்கெட் போனா, பைசா சில்லறையே கொடுக்கறது இல்ல, அதுக்குப் பதிலா முட்டாய் கொடுத்துடறானுங்க.... வாங்கி சப்பிக்கிட்டு வரவேண்டியிருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைச்சர் said...
அப்ப போலீசு பிஞ்சு மூஞ்சிய வச்சிக்கிட்டுதான் படம் காமிக்குதா ???////

ஓ அதானா, நான் ஆசிட் ஊத்திட்டாய்ங்கன்னுல்ல நெனச்சேன்?

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////மங்குனி அமைச்சர் said...
அப்ப போலீசு பிஞ்சு மூஞ்சிய வச்சிக்கிட்டுதான் படம் காமிக்குதா ???////

ஓ அதானா, நான் ஆசிட் ஊத்திட்டாய்ங்கன்னுல்ல நெனச்சேன்///

அது ஏன்னா ஆசிட்டும் வெலை ஏறிருக்கும் அதான் போலிசு மூஞ்சிய அப்டியே விட்டுட்டாங்க...

NaSo said...

//karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////மங்குனி அமைச்சர் said...
அப்ப போலீசு பிஞ்சு மூஞ்சிய வச்சிக்கிட்டுதான் படம் காமிக்குதா ???////

ஓ அதானா, நான் ஆசிட் ஊத்திட்டாய்ங்கன்னுல்ல நெனச்சேன்///

அது ஏன்னா ஆசிட்டும் வெலை ஏறிருக்கும் அதான் போலிசு மூஞ்சிய அப்டியே விட்டுட்டாங்க...//

பினாயில் ஊத்துலாமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சில்லறை பையன்னு நிருபிக்கிற போ.

NaSo said...

இது கூட பரவாயில்லை. எங்கிட்டே சில்லறை இல்லை 500 ரூபாய் இருக்கு, 300 ரூபாய்க்கு பெட்ரோல் போடுனா; போட முடியாதுன்னு சொல்றாங்க சில பங்க்குகள்ல.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏம்பா 50காசு அடிக்க 1 ரூபா செலவாகுதாமே கெவர்மென்ட்டுக்கு, உண்மையா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இப்பதாம்லே புரியுது. சங்கரன்கோவிலுக்கு அடிக்கடி ஏன் போறேன்னு. அங்க கோவில்ல உள்ள ஒரு பிச்சைக்காரிய உஷார் பண்ணிருக்கியாமே?

NaSo said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சில்லறை பையன்னு நிருபிக்கிற போ.//

அப்போ போலிசு நோட்டுப் பையனா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏம்பா 50காசு அடிக்க 1 ரூபா செலவாகுதாமே கெவர்மென்ட்டுக்கு, உண்மையா?///

அப்படியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாகராஜசோழன் MA said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சில்லறை பையன்னு நிருபிக்கிற போ.//

அப்போ போலிசு நோட்டுப் பையனா?//

Naughty பையன்

செல்வா said...

/ (இதுக்கு தான் அதிகமா அரசியல் மீட்டிங் கேக்காதேன்னு சொன்னா கேட்கணும் )///

நீங்க அரசியல் வாதியா ..?

செல்வா said...

//
பரவாயில்லை எண்ணி கொள்ளுங்கள் . ///

எவ்ளோ வரைக்கும் எண்ணனும் ..?
100 வரைக்குமா ..?

செல்வா said...

//
(நான் என்ன பல் டாக்டரா) இப்படி போட்டாலும் 4 பைசா அவுட் . //

நீங்க கணக்குல புலியா ..?

செல்வா said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஏம்பா 50காசு அடிக்க 1 ரூபா செலவாகுதாமே கெவர்மென்ட்டுக்கு, உண்மையா///



அப்பிட்த்தான் சொல்லுறாங்க .!

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 10
இப்பதாம்லே புரியுது. சங்கரன்கோவிலுக்கு அடிக்கடி ஏன் போறேன்னு. அங்க கோவில்ல உள்ள ஒரு பிச்சைக்காரிய உஷார் பண்ணிருக்கியாமே?////

இப்போ கூட அதான் செய்றார் ஜனவரி ஒன்னு போய் அந்த பிச்சைக்காரிக்கு வாழ்த்து சொல்லிட்டு வந்தார்

எஸ்.கே said...

நான் கூட 25 பைசா நிறைய சேர்த்து வைச்சிருக்கேன். பத்து வருசம் கழிச்சு அதெல்லாம் புராதான பொருளாயிடும் அப்போ அதோட மதிப்பு அதிகமாகும் நிறைய காசுக்கு விக்கலாம்!

Madhavan Srinivasagopalan said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said... 3

இங்கேயும் அப்பிடித்தான் பண்றானுங்கப்பா, சூப்பர் மார்க்கெட் போனா, பைசா சில்லறையே கொடுக்கறது இல்ல, அதுக்குப் பதிலா முட்டாய் கொடுத்துடறானுங்க.... வாங்கி சப்பிக்கிட்டு வரவேண்டியிருக்கு! //

அடுத்த தடவை.. சில்லறைக்கு பதிலா அவங்க கொடுத்த மிட்டாய திருப்பி கொடுத்துப் பாருங்க.

செல்வா said...

//பத்து வருசம் கழிச்சு அதெல்லாம் புராதான பொருளாயிடும் அப்போ அதோட மதிப்பு அதிகமாகும் நிறைய காசுக்கு விக்கலாம்!///

விக்கும்போது தண்ணி குடிங்க .!

எஸ்.கே said...

காசுக்கு பதிலா குடுக்கிற மிட்டாய் நல்லாவே இருக்க மாட்டேங்குது. கொஞ்சம் நல்லா முட்டாயா குடுக்க சொல்லுங்க!

எஸ்.கே said...

ஆமா ஓட்டை காலணா யார்கிட்டயாவது இருக்கா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/எஸ்.கே said...

காசுக்கு பதிலா குடுக்கிற மிட்டாய் நல்லாவே இருக்க மாட்டேங்குது. கொஞ்சம் நல்லா முட்டாயா குடுக்க சொல்லுங்க!//

piskoththu venaamaa?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

செல்வா said...

// எஸ்.கே said...
காசுக்கு பதிலா குடுக்கிற மிட்டாய் நல்லாவே இருக்க மாட்டேங்குது. கொஞ்சம் நல்லா முட்டாயா குடுக்க சொல்லுங்க!

//

உங்களுக்கு என்ன மிட்டாய் பிடிக்கும் .. ?

எஸ்.கே said...

//கோமாளி செல்வா said...

//பத்து வருசம் கழிச்சு அதெல்லாம் புராதான பொருளாயிடும் அப்போ அதோட மதிப்பு அதிகமாகும் நிறைய காசுக்கு விக்கலாம்!///

விக்கும்போது தண்ணி குடிங்க .!//

அப்போ எல்லா தொழிலதிபர்களும் பெரிய தண்ணி பார்டிகளா இருப்பாங்களோ!

எஸ்.கே said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/எஸ்.கே said...

காசுக்கு பதிலா குடுக்கிற மிட்டாய் நல்லாவே இருக்க மாட்டேங்குது. கொஞ்சம் நல்லா முட்டாயா குடுக்க சொல்லுங்க!//

piskoththu venaamaa?//

பிஸ்கேட்?? ஓகே நல்லதா ஒரு கிரீம் பிஸ்கெட் தரச் சொல்லுங்க!

எஸ்.கே said...

//கோமாளி செல்வா said...

// எஸ்.கே said...
காசுக்கு பதிலா குடுக்கிற மிட்டாய் நல்லாவே இருக்க மாட்டேங்குது. கொஞ்சம் நல்லா முட்டாயா குடுக்க சொல்லுங்க!

//

உங்களுக்கு என்ன மிட்டாய் பிடிக்கும் .. ?//

புளிப்பு மிட்டாய்!

Madhavan Srinivasagopalan said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏம்பா 50காசு அடிக்க 1 ரூபா செலவாகுதாமே கெவர்மென்ட்டுக்கு, உண்மையா?///

அப்படின்னா ஒரு பக்கம் மட்டும் அடிங்க.... சரியாயிடும்

செல்வா said...

//அப்போ எல்லா தொழிலதிபர்களும் பெரிய தண்ணி பார்டிகளா இருப்பாங்களோ!//

ஹி ஹி ஹி

NaSo said...

//Madhavan Srinivasagopalan said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏம்பா 50காசு அடிக்க 1 ரூபா செலவாகுதாமே கெவர்மென்ட்டுக்கு, உண்மையா?///

அப்படின்னா ஒரு பக்கம் மட்டும் அடிங்க.... சரியாயிடும்//

உங்களுக்கு இருக்கிற அழகுக்கும் அறிவுக்கும் நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை. உகாண்டாவில் இருக்க வேண்டிய ஆள்..

பனித்துளி சங்கர் said...

நகைச்சுவையான எழுத்து நடையில் ஒரு சிறந்தக் கருத்தை சிந்திக்கும் வகையில் சொல்லி இருக்கிறீர்கள் . பாராளமன்றத்தில் பட்டிமன்றம் மற்றும் குத்து சண்டை போன்ற வீர விளையாட்டுக்களை அரங்கேற்றும் நமது மந்திரிகளுக்கு எங்கேப் விளங்கப்போகிறது மக்களின் கஷ்ட்டம் . பகிர்வுக்கு நன்றி

வார்த்தை said...

தல,
இப்பத்தான் 2 ரூபா கொடுத்து (அதுல ரெண்டு 25 காசு) ஒரு கண்ணாடி கிளாசு நெறையா டீ சாப்டு வரேன்..... (இந்தியால தான் இருக்கேன்).
தமிழ் நாட்டுல கொள்ள பயலுகளுக்கு தகுதிக்கு மீறுன‌ பேராசையும், கூடவே நாதாரித்தனமும் கூடிப்போச்சு. அதான் பிச்சக்கார நாயெல்லாம் பிரஸ்டீஜ் பாக்குது.

வானம் said...

அன்னைஜீ சோனியாஜீயையும், தலைவர்ஜீ கலைஞர்ஜீயையும் பாத்து கத்துகுங்கைய்யா. அவனவன் 60,000 கோடி, ஒன்னேமுக்கால் லட்சம் கோடின்னு பெருசு பெருசா களவாண்டுட்டு இருக்கானுங்க, இங்க நாலு பைசா, 25பைசாவுக்கெல்லாம் பதிவு போட்டுகிட்டு இருக்கீங்களே. உங்கள மாதிரி ஆளுங்களாலதான் இன்னும் இந்தியா வல்லரசு ஆகமாட்டேங்குது.

அருண் பிரசாத் said...

பைசா பெறாத விஷயத்துக்கு ஏன்ய்யா இப்படி சண்டை

Madhavan Srinivasagopalan said...

'வல்லரசு' --

அதான் விஜயகாந்த் ஏற்கனவே ஆக்கிட்டரே !

Anonymous said...

ennayyaa nadakkuthu ingka?

Madhavan Srinivasagopalan said...

//@ N. Cholan "உங்களுக்கு இருக்கிற அழகுக்கும் அறிவுக்கும் நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை. உகாண்டாவில் இருக்க வேண்டிய ஆள்.." //

யோவ் நா குண்டாவும் இல்லேய்..
அட்டக் கரியாவும் இல்லை..
என்னையபோயி.. உகாங்க அனகோண்டா ஆப்படிநீடு சொல்லிக்கிட்டு..

Anonymous said...

25 காசுக்கு பெறாத பதிவு...மூஞ்சிய துடைச்சிட்டு அடுத்த பதிவ ரெடி பண்ணு இம்சை

Anonymous said...

41 என் ராசி நெம்பர்

Anonymous said...

சில்ரைப் பதிவு சில்ரைப் பதிவுனு சொல்வாங்களே..
அது இது தானோ???

Anonymous said...

பிச்சைக்காரனுக்கு அஞ்சு ரூபாயா??
உண்மைலயே நீங்க கொடை வள்ளல் தான்.
ஆனாலும் இது கொஞ்சம் ஓவரா தெரிலயா??

வினோ said...

நம்மளும் பைசா பைசாவா சேர்த்தப் பார்க்கிறோம்.. ஒன்னும் நடக்கல...

இம்சைஅரசன் பாபு.. said...

நன்றி பனி துளி சங்கர் அவர்களே ..என்னோட மனநிலையும் இது தான் ....நான் காமெடி யாக எழுதினாலும் இதில் நீங்கள் போட்ட பின்னூட்டம் தான் டாப் ......

இம்சைஅரசன் பாபு.. said...

//25 காசுக்கு பெறாத பதிவு...மூஞ்சிய துடைச்சிட்டு அடுத்த பதிவ ரெடி பண்ணு இம்சை//

ஓஹ...நீங்க மாட்டு வண்டில போற ஆளா....சரி சரி அப்போ உங்களுக்கு இது சில்லறை பிரச்சனையாக தான் தெரியும் ....

இம்சைஅரசன் பாபு.. said...

//
பைசா பெறாத விஷயத்துக்கு ஏன்ய்யா இப்படி சண்டை//

மௌரிசியஸ் ல இருந்து கிட்டு இது .பைசா பெறாத விசயம்னு சொல்லுறா நீ .....இரு ஊருக்கு வந்து வண்டிய எடுத்துட்டு போய் பெட்ரோல் போடு அப்போ தெரியும் .....

இம்சைஅரசன் பாபு.. said...

//சில்லறை பையன்னு நிருபிக்கிற போ//
எலேய் .வண்டில மாலை போட்டதோட சரி என்னைக்காவது வண்டிய வெளியே எடுத்து பெட்ரோல் போட்டியா

இம்சைஅரசன் பாபு.. said...

//ஏம்பா 50காசு அடிக்க 1 ரூபா செலவாகுதாமே கெவர்மென்ட்டுக்கு, உண்மையா?//

மெய்யாலுமா ....அப்போ ஏன் அடிக்கிறாங்க ??

இம்சைஅரசன் பாபு.. said...

/// (இதுக்கு தான் அதிகமா அரசியல் மீட்டிங் கேக்காதேன்னு சொன்னா கேட்கணும் )///

நீங்க அரசியல் வாதியா ..//

ஹி.....ஹி .....தம்பிடா

பெசொவி said...

கல்லறைக்குப் போனாலும்
காசுக்கு வழி பார்க்கும்
செல்லரித்துப் போன தேசத்தில்
சில்லறைக்கு என்ன மதிப்பு?
நல்ல்லாதான் சொன்னாய் நீ,
நான் விரும்பும் இம்சையே,
புல்லரித்துப் போனேன், உன்
பொன்னான பதிவு கண்டு!

பெசொவி said...

கல்லறைக்குப் போனாலும்
காசுக்கு வழி பார்க்கும்
செல்லரித்துப் போன தேசத்தில்
சில்லறைக்கு என்ன மதிப்பு?
நல்ல்லாதான் சொன்னாய் நீ,
நான் விரும்பும் இம்சையே,
புல்லரித்துப் போனேன், உன்
பொன்னான பதிவு கண்டு!

சுபத்ரா said...

பெட்ரோல் டீசல் போன்ற எண்ணெய் வகைகளை நாம் இறக்குமதி செய்து வாங்குவதால், அவற்றின் விலையை வெளிநாட்டுக் கரன்சியில் இருந்து இந்திய ரூபாய்க்கு மாற்றுகையில் பைசா கணக்கு வருகிறதோ???

Arun Prasath said...

நம்ம நாடு இருக்கற நெலமயில... அப்டின்னு பாடு தான் பாடனும்.... என்ன தல பண்ண சொல்றீங்க... தீ குளிச்சா கூட கண்டுக்க மாட்டாங்க

Arun Prasath said...

அடடா PSV சார் கவிதையே சொல்லிடீங்களா.. இடைல மானே தேனே எல்லாம் போட்டுக்கணும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இம்சைஅரசன் பாபு.. said...

நன்றி பனி துளி சங்கர் அவர்களே ..என்னோட மனநிலையும் இது தான் ....நான் காமெடி யாக எழுதினாலும் இதில் நீங்கள் போட்ட பின்னூட்டம் தான் டாப் //

மக்களே இங்க பாருங்க நாமெல்லாம் கேவலமா பின்னூட்டம் போடுரமாம். இம்சை சொல்றான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எச்சூஸ் மி, 1,70,000 கோடீக்கு எத்தனை 25 காசு வெக்கனும், யாராவது சொல்றீங்களா?

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சில்லறை பையன்னு நிருபிக்கிற போ//////////////


இவரு பிலிப்பைன் பைய்யன்.....ஹி ஹி

வைகை said...

இம்சைஅரசன் பாபு.. said...
//சில்லறை பையன்னு நிருபிக்கிற போ//
எலேய் .வண்டில மாலை போட்டதோட சரி என்னைக்காவது வண்டிய வெளியே எடுத்து பெட்ரோல் போட்டியா/////////


அவருக்கு போடறதுக்கே பத்தலையாம்!

வைகை said...

Arun Prasath said...
நம்ம நாடு இருக்கற நெலமயில... அப்டின்னு பாடு தான் பாடனும்.... என்ன தல பண்ண சொல்றீங்க... தீ குளிச்சா கூட கண்டுக்க மாட்டாங்/////

ஏலே...கொஞ்ச நாளா ஊருபக்கமே காணும்? புள்ளபுடிக்கி புடிச்சிட்டு போயிட்டானா?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
எச்சூஸ் மி, 1,70,000 கோடீக்கு எத்தனை 25 காசு வெக்கனும், யாராவது சொல்றீங்களா/////////////


எத்தன 25 காசு வச்சா 17000 கோடி வருமோ அத்தன 25 காசு வக்கணும்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பேசாம ரமேஸ, தீக்குளிக்க வெச்சு இந்த பிரச்சனைய முடிங்க...

Kousalya Raj said...

இந்த மாதிரி விலை இருக்கிறதால சில்லறையா வரும் எக்ஸ்ட்ரா அமௌன்ட் அங்கு வேலை பார்க்கும் வேலையாட்களுக்கு போய் சேரும். அவர்கள் இதை தங்களுக்குள் பிரித்து கொள்வார்கள்...

அதனால பெருந்தன்மையா நம்ம மக்கள் தானே எடுத்துகிராங்கனு விட்டு கொடுத்திட வேண்டியது தான்.

:)))

Madhavan Srinivasagopalan said...
This comment has been removed by the author.
Madhavan Srinivasagopalan said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
68000000000000 இருபத்தியைந்து பைசாக்கள்
---------------------
68000000000000 * 4
= 1,70,000 crore

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாபட்டி.... said...

பேசாம ரமேஸ, தீக்குளிக்க வெச்சு இந்த பிரச்சனைய முடிங்க...///

குளிக்கிறது பிடிக்காதுன்னு மெயில் அனுப்பி சொல்லியாச்சு போன் பண்ணி சொல்லியாச்சுஇன்னும் விட மாட்டேன்க்கிராங்களே

Unknown said...

பகிர்வுக்கு நன்றி

உதவுங்கள்

http://vikkiulagam.blogspot.com/2011/01/help.html

காத்திருக்கிறேன் ...........

டக்கால்டி said...

நாலணாவை வருங்கால சந்ததியினர் மியுசியத்தில் தான் பார்ப்பார்கள். நாம் ஒரு அணா பார்த்ததைப் போல...மாற்றங்கள் இருந்து கொண்ட ஏதான் இருக்கும்...நாம் தான் நம்மை இந்த "சில்லறை" மாற்றங்களுக்கு பழக்கப் படுத்திக்கணும் தோழரே.