Hunt For Hint புதிர் போட்டியின் 1 - 10 கேள்விகளுக்கான விடைகளை கடந்த இரண்டு பதிவுகளில் பார்த்தோம், கூடவே அந்த கேள்விகளுக்கு டிஸ்கஷன் போரம்ல வந்த காமெடியான கமெண்டுகள் அதை டெரர்கும்மி மக்கள் அடித்த நக்கலையும் பார்த்து ரசிச்சிருப்பீங்க. இப்போ அடுத்த 5 கேள்விகளுக்கான விடைகளை பார்க்கலாம்.
Level 11:
இதுல ஒரு Barcode கொடுத்து இருந்தோம் அதை read செய்யனும். அந்த படத்தை டவுன்லோட் செய்து, Online Barcode readerக்குனே இருக்கற சில தளங்களில் அப்லோட் செய்தால் உங்களுக்கு விடை கிடைத்துவிடும்.
விடை: Iamlucky
இந்த விடைக்காக க்ளுவாக, 101 Dalmatians படத்துல வர்ற லக்கி நாயின் படத்தை போட்டு இருந்தோம். Insert coin என்று உங்களை குழப்ப ஒரு தேவையற்ற க்ளூவையும் கொடுத்து இருந்தோம்.
Level 12:
இது ஒரு நேரடி கேள்வி. இந்திராகாந்திக்கு சிரிக்கும் புத்தர் என்றால், வாஜ்பேயிக்கு என்ன? இதுதான் கேள்வி. இந்த மூன்று படத்தின் பேரையும் கூகுளில் போட்டு தேடினால் உங்களுக்கு “ஆப்பரேஷன் சக்தி” விடை கிடைத்துவிடும். வாஜ்பேயி ஆட்சியில் நடத்தப்பட்ட அணுகுண்டு வெடிப்பு சோதனைக்கு பெயர் “ஆபரேஷன் சக்தி”
Level 13:
இந்த லெவல் செம லெவல். ஒரு 36 தனிமங்களில் symbols கொடுத்துட்டு <Something missing>னு பேஜ் சோர்ஸ்ல ஹிண்ட் கொடுத்து இருந்தோம். நல்லாவே குழம்பினாங்க எல்லோரும். மெட்டல், நான் மெட்டல்ஸ்னு எல்லாம் யோசிச்சாங்க ஆனா அதுல மிஸ்ஸிங்கா இருக்கறது “J”ன்ற எழுத்துதாங்க. Periodic Tablesல பயன்படுத்தபடாத ஒரே எழுத்து “J” தான். அதுதான் விடை.
Level 14:
இந்த லெவல் ஓபன் செய்தவுடனே எல்லோரும் ரொம்ப மும்மரமா Maze Gameஐ விளையாட ஆரம்பிச்சி இருப்பீங்களே.... ஒரு முறை கூட அதை விளையாடலைனு யாராவது சொல்லுங்க பார்க்கலாம் :). இது சும்மா குழப்பறத்துக்கு ஏற்படுத்தப்பட்ட லெவல். இது என்ன கேம்னு URL ல தரனும். game.aspxஐ maze.aspxனு மாத்தினா அடுத்த லெவலுக்கு போயிடலாம்.
Level 15:
கிரிக்கெட்டை தொடர்ந்து பார்கறவங்க சுலபமா இந்த லெவலை முடிச்சி இருப்பாங்க. Chennai Superstars, Chandigarh Lions, Ahmadabad Rockets எல்லாம் IPL (Indian Premier League)க்கு முன்னோடியா இருந்த ICL (Indian Cricket League) விளையாட்டின் அணிகளின் பெயர்.
விடை: Hyderabad Heroes.
அடுத்து நம்ம காமெடி கமெண்ட் + டெரர் கும்மி நக்கல். இது நகைச்சுவைக்காக மட்டுமே, யார் மனதையும் புண்படுத்த அல்ல.