Wednesday, October 3, 2012

Hunt For Hint - 2 - Answers



இணைய நண்பர்களே,
ஹண்ட் ஃபார் ஹிண்ட் 2 போட்டி முடிந்து வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை அனுப்பும் பணி நடந்து கொண்டு இருக்கின்றது.



இன்னும் சிலர் தொடர்ந்து விளையாடிட்டு தான் இருக்காங்க. இந்த கேம்மோட தனித்துவமே பரிசை வெல்வதை விட அனைத்து லெவல்களையும் முடிக்கறப்போ கிடைக்கற சந்தோஷத்துலதான் இருக்கு. நம்மளோட விடை தவறாக இருந்தாலும் அந்த தவறிலும் ஒரு புதிய விஷயத்தை தெரிஞ்சிக்கற திருப்தி வேற எந்த விளையாட்டிலும் கிடைக்காதது.

நீங்கள் விடைகளை தேடுறப்போ மட்டும் இல்லை நாங்கள் கேள்விகளை வடிவமைக்கறப்போ கூட பல விஷயங்களை கத்துகிட்டோம். ஒவ்வொரு கேள்வியையும் உருவாக்க எங்கள் அணி பல விஷயங்களை படிக்க வேண்டி இருந்தது. இப்படிப்பட்ட கேள்விகளும் அதுக்கான விடைகள் கொண்டு வரவேண்டிய முறையையும் இனி பார்க்கலாம். முடிந்த வரை அலுப்பு தட்டாமல் கொடுக்க முயற்சிக்கிறோம்

LEVEL 1:
புதியதா விளையாடறவங்களுக்கு எப்படி போட்டி இருக்குனு முதல் லெவல்லயே எதிர்பார்ப்பை கூட்ட சுலபமாக ஆனா கொஞ்சமா பல்பு தரமாதிரி இந்த கேள்வியை அமைச்சோம். டீவி யை ஆன் செய்து வழக்கமா வர்ற கருப்பு வெள்ளை ஸ்கிரினும், ஹண்ட் ஃபார் ஹிண்ட் சீசன் 2 என்பதால் ரிமோட்டில் 2 வது பட்டனை கிளிக் செய்யும் படியும் வைத்து இருந்தோம். இதுல ஒரு லேட்ரல் திங்கிங் கொடுத்தா என்ன என தோன்ற. Go to next level by pressing Terrorkummi logo என ஒரு வாசகத்தை வர வைத்து அங்கே டெரர் கும்மி லோகோவையும் கொடுத்து இருந்தோம். ஆனா லோகோ இமேஜை கிளிக் செய்து ஏமாந்தவங்க பலர். வெற்றிகரமான முதல் பல்பு :)
Answer - Click on "Terrorkummi logo" text

LEVEL 2:
Hints: Page Title - Master, Image Name - 10.jpg, On image - Player with no 10 jersey
டெஸ்ட் பண்ணுறப்போலாம் நல்லா வேலை செய்த இந்த லெவல் கேம் லாஞ்ச் செய்ததும் சொதப்புச்சு. அப்புறம் சரி செய்து மறுபடி தொடங்கினோம். அந்த டிரஸ், பேட் எல்லாம் பார்த்தா கிரிக்கெட் வீரர்னு நல்லாவே தெரியும். டைட்டிலில் MASTER, இமேஜ் நேம் - 10, படத்தில் 10ம் எண் ஜெர்சினு போட்டாலே அது டெண்டுல்கர்னும் ஏறகுறைய யூகிச்சிடலாம். ஆனா எங்கே விடையை இன்புட் செய்யனும்னு நிறைய பேருக்கு குழப்பம்....
Answer - Replace "GodIsHere.aspx" to "sachin.aspx"

LEVEL 3:
Hints: Title name - Market Trend, Image name - Tobleronelogo.jpg, On Image - Tolerone
இது ஒரு சாக்லெட் தயாரிப்பாளர்களின் லோகோ. உலகில் வித்தியாசமான லோகோகளில் இதுவும் ஒன்று.  அந்த மலைக்கு நடுவில் ஒரு கரடி இருப்பதுதான் இந்த லோகோவோட சிறப்பம்சம். Share Marketingல் Bear என்ற சொல்லை மார்கெட் சரியும் போது பயன்படுத்து வார்கள்.
Answer - Enter "Bear" in the Answer box

LEVEL 4:
Hints: Page title - Portraite, Image name - colors.jpg, Url name - portrait.aspx, On image - 4 different colored same image - ஆனா இதுல ஒண்ணு கூட விடைக்கான க்ளூ கிடையாது :) உங்களை குழப்பறதுக்காகவே இதை எல்லாம் கொடுத்து, மேட்டரை Find the differance: க்குள்ளாற வெச்சி இருந்தோம். ஆமாம், இந்த பக்கதுலயே வித்தியாசமா இருக்கறது Difference என்கிற வார்த்தை தான். இதை கண்டுபிடிச்சும் பலர் விடையை ஆன்சர் பாக்ஸ்ல டைப் பண்ணி தப்பு நினைச்சாங்க அங்கயும் ஒரு குழப்பு குழப்பி விடையை differance வார்த்தைல இருக்கற a என்ற எழுத்தை கிளிக் செய்தால் அடுத்த லெவல் போகிற மாதிரி வெச்சோம். HTML தெரிந்து இருந்தால் இந்த லெவல் சுலபம்.
Answer: Click on "a" in the word "differance:"

LEVEL 5:
Hints: Page title - Series, url name - numbers.aspx, On image - Cricket Scorecard 
series+numbers இந்த இரண்டையும் சேர்த்து இருந்தாலே இது Number seriesனு புரிஞ்சி இருக்கலாம். இந்த மாதிரி 123, 235, 358, 134 அள்வுக்கு எல்லாம் ஒரே இன்னிங்ஸில் இத்தனை பேர் அடிச்சது இல்லை. இந்த சீரியசை பார்த்தால் புரியும் முந்தின எண்ணோட கடைசி 2 எண்களை தொடக்கமா வெச்சி அந்த இரண்டு எண்களோட கூட்டுதொகையை கடைசி எண்ணாக போட்டு வரும் சீரியஸ்.
Answer: Enter "5813" in answer box.

LEVEL 6a:
Hints: Page title- Open the Book, url - book.aspx
படத்தில் ஒரு புத்தகம் கருப்பு வெள்ளை கோடுகளை அட்டைல இருக்கறதை பார்த்ததுமே அந்த கோடுகள் பார்கோடுகள்னு ஓரளவு யூகிச்சி இருக்கலாம். இணையத்தில் கிடைக்கும் ஆன்லைன் பார்க்கோட் டீகோடர்களை பயன்படுத்தி இந்த இமேஜை டீகோட் செய்தால் விடைகிடைக்கும். விடையும் புத்தகம் சம்பந்தப்பட்டதுதான்
Answer: Enter "isbn 13" in answer box.

LEVEL 6b:
Hints: Page title - Checkmate, url- code.aspx, Image name - cd.jpg, On image - QR code, Source hint - Find X
இது லெவல் 7னு இல்லாமல் லெவல் 6bனு இருக்கும் போது இந்த கேள்விக்கும் இதற்கு முந்தய கேள்விக்கும் ஒரு தொடர்பு இருக்குனு புரிஞ்சி இருக்கும். படத்தில் உள்ள QR codeஐ டீகோட் செய்தால் ஒரு எண் வரிசை முடிவில் X உடன் வரும். சோர்ஸ் ஹிண்ட் படி நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது X ன் மதிப்பு. இது ஒரு ISBN 13 code கடைசி X ஐ checkdigit என சொல்வார்கள் (Image name - cd.jpg, Page title - checkmate) இதற்கு ஒரு பார்முலா இருந்தாலும் இணையத்தில் Online checkdigit calculator பயன்படுத்தியும் கண்டுபிடிக்கலாம். ஆனால் வழக்கம் போலவே விடை அந்த X எண்ணோ அல்லது ISBN numberரோ இல்லை. கண்டுபிடித்த எண்ணிற்கான புத்தகத்தின் பெயரை ஆன்சர் பாக்சில் தர வேண்டும். சாதாரண கூகுள் சர்ச் விடையை சொல்லிவிடும்
Answer: Enter "2 states" in answer box.

LEVEL 7:
Hints: Page title-decode, Image name-decode.png, url-decode.aspx
ஒரு QR codeக்குள் ஒரு morse code வைக்க முடியும் என எங்களுக்கும் இப்போதுதான் தெரியும். ஒரு தற்செயலான முயற்சி, இந்த கேள்வி வடிவமைப்பில் முடிந்தது. பலர் இந்த QR code ஐ டீகோட் செய்து "it cant be that easy" பதிலுடன் விழித்ததை பார்க்க முடிந்தது. ஆனால் அவர்கள் பார்க்காமல் தவற விட்டது படத்தின் கீழ் வலது மூலையில் இருந்த மோர்ஸ் கோடைதான்.
Answer: Replace "decode.aspx" to "hoof.aspx"
Click on the image to Enlarge
LEVEL 8:
Hints: Page title-Replace me vik!, Image name - signal, On image - Umpire signalling something
கிரிக்கெட்டில் சில வருடங்களுக்கு முன்பு பரிட்சார்த்த முறையில் முயற்சித்த supersub தான் கேள்வியின் கரு. இதை கண்டு பிடித்தால் Replace me vikக்குகான் அர்த்தம் தெரிந்து விடும். ஆம் முதன் முதலில் இந்த ரூல் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் சூப்பர் சப்பாக வந்தவர் “விக்ரம் சோலன்கி” அவர் மாற்றியது “சைமன் ஜோன்ஸ்”சை. இந்த படத்தை கூகுள்  இமேஜ் சர்ச் பயன்படுத்தி தேடினால் சுலபமாக விடை கிடைத்து இருக்கும்.
Answer: Enter "simon jones" in Answer box.



சரி இந்த அளவு விளக்கமே கொஞ்சம் போர் அடிச்சி இருக்கும்னு நினைக்கறோம்.

மற்ற கேள்விகளுக்கான விடைகளையும் மேலும் நடு நடுவில் வந்த செக்பாயிண்ட் கேள்விகளுக்கான விடைகளையும் அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

இந்த கேள்விகளை நீங்கள் கடந்த போது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை கமண்ட்டில் பகிர்ந்து கொளுங்களேன்.

Keep Hunting for the Good Knowledge.....




12 comments:

Madhavan Srinivasagopalan said...

Very Useful Post.. but posted atleast by 21 days late..

பட்டிகாட்டான் Jey said...

எனக்கு இந்த ஆன்சரெல்லாம் முன்னமேயே தெரியுமே.....

சின்ன டவுட்டு.... அதாவது.... ஆன்சர தானா கண்டுபிடிச்சி ஜெயிச்சவங்களுக்கு குடுத்த பரிசுல பதியாச்சும்.....இப்ப விளையாடி ஜெயிக்கிறவங்களுக்கு தருவீங்களா????

இந்த டவூட்டு கேக்கச் சொன்னது ஒரு அம்மனிப் பதிவர் அதனால...பொறுப்பாக பதில் சொல்லவும்.

வெளங்காதவன்™ said...

லெவல் ஏழு வரைக்கும் ரெண்டாவது எடத்துல இருந்தேன்....

அப்புறம், ஜெயில்ல புடிச்சுப் போட்டதால வெளாட முடில....

திவாண்ணா said...

முதல் முறை ஆடறேன்.
முதல்ல இறங்க வேண்டாம்ன்னு இருந்தேன். அப்புறமா திடீர்ன்னு லீவு கிடைச்சு.... விதி யாரை விட்டது??? :-))
1. இது கஷ்டமே இல்லை. நேரா போயாச்சு.
2. விடை சச்சின்னு தெரிஞ்சும் என்டர் செய்ய வேண்டிய முறை தெரியாம டிலே ஆச்சு.
3. ரொம்ப யோசிக்காம கரடியை போட்டுட்டேன்.
4. ஸோர்ஸ் கோடை பாத்து இங்கதான் ஏதோ இருக்குன்னு கண்டுபிடிச்சும் a அழுத்தணும்ன்னு புரிய ரொம்ப நேரமாச்சு!
5. நம்பர் சமாசாரம்ன்னு புரிஞ்சு சீக்கிரமே வெர்க் அவுட் செஞ்சாச்சு!
6. பார் கோட்ன்னு புரிஞ்சுடுத்து. ஆனா ஆன் லைன்ல டீகோடர் இருக்கும்ன்னு எல்லாம் தெரியாது. தேடிப்பாத்தா இருந்தது ஆச்சரியமே. கொஞ்ச நேரம் செலவழிச்சு போட்டாச்சு.
6 பி இதுவும் டீகோடிங்க் ன்னு புரிஞ்சது. கூகுள் செர்ச் விடையை கொடுத்தப்ப அவநம்பிகையோடத்தான் போட்டேன்!
7. இதுக்கு போரம்ல நிறையவே க்ளூ இருந்தது. அதனால கஷ்டம் இல்லை. இல்லாட்டா நேரம் எடுத்து இருப்பேன்னு நினைக்கறேன்.
8. கூகுள் செர்ச் என்ன சமாசாரம்ன்னு சொன்னாலும் கடேசில விடையை போட்டது ஒரு ப்ளூக்தான்! அவ்வளோ சரியா வொர்க் அவுட் பண்ணலை.
இவ்வளோ தூரம் சுலபமா போயிட்டதா நினைப்பு! முதல் செக்பாய்ண்டும் (பார்பிக்யூ) சுலபமா போட்டேன். ரெண்டாவது செக்பாய்ண்ட் (கன்ஸ்) உசிரை வாங்கிடுச்சு!

அருண் பிரசாத் said...

@vasudevan Tirumurti
உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

செக்பாயிண்ட்ஸ் கேள்விகளை தனியா ஒரு செட்டா போடலாம்னு இருக்கோம்....

பலருக்கு அந்த 3வது லெவல் கரடி பத்தி தெரிஞ்சி இருந்தது ஆச்சர்யம்தான்

அருண் பிரசாத் said...

@வெளங்காதவன்

இப்போ மட்டும் வக்கனையா பேசு.... இருங்க நீங்க டிஸ்கஷன் போரம்ல போட்ட கமெண்ட்டை எல்லாம் தனி பதிவா போடு மானத்தை வாங்கறோம்

வெளங்காதவன்™ said...

//இருங்க நீங்க டிஸ்கஷன் போரம்ல போட்ட கமெண்ட்டை எல்லாம் தனி பதிவா போடு மானத்தை வாங்கறோம்///

நீ நல்லா இருப்ப தல....

#யோவ்.... வாங்குன பணத்துக்கு கரீட்டா கூவிட்ட தல!!!

:)

வெளங்காதவன்™ said...

//இருங்க நீங்க டிஸ்கஷன் போரம்ல போட்ட கமெண்ட்டை எல்லாம் தனி பதிவா போடு மானத்தை வாங்கறோம்///

என்னதான் எனக்கு வயசானாலும், நீங்க நாங்கன்னு பேசாதீக.... நான் ஜஸ்ட் அறுவது வயசு குமரன் மேன்...

:-)

Unknown said...

இதுவரைக்கும் எப்படியோ கடந்துட்டேன். இதுக்கு மேல தாண்ட முடியலை! :(

அப்பாதுரை said...

ஆகா! ரொம்ப நன்றி. இப்ப பாருங்க, எத்தனி சுளுவா லெவல் தாண்டுறேனு.. :-)

Vasumathy said...

was an interesting experience for me. Accidentally I came to know ur site and the game. And was very much attracted. I reached upto level 7. This game needs total concentration which is very difficult for me. Still enjoyed and hope to take the prize in one of the future editions. And the forums I thoughrouly enjoyed. Hats off Team!

Unknown said...

1 & 2 cleared easily

3 - மலைக்குள் ஒளிந்திருக்கும் கரடின்னு விக்கி சொன்னதால் எளிது (I think level three was logo in HFH-1 also...Apollo....wright?)

4 - சுலபமா இருந்தாலும் ரொம்ப சுத்த விட்டது

5 - very easy

6- chetan பகத் பற்றி முன்னரே தெரியும். ஆனால் barcode decoder, ISBN 13, QR code என மிக சுவாரஸ்யமான லெவல்

7. நானும் "it cant be that easy" பார்த்த பிறகுதான் morse code பார்த்தேன். (HFH-1 யானை படம் போல...)

8 - HFH-1 ல் தெரிந்துகொண்ட google image search உதவியது