Thursday, September 6, 2012

HUNT FOR HINT 2 - புதிர் போட்டி - பரிசு 10,000 ரூபாய்

இணைய நண்பர்களே,

பதிவுலக வரலாற்றில் முதல்முறையாக சென்ற வருடம் டெரர்கும்மி சார்பாக நடந்த ஹண்ட் ஃபார் ஹிண்ட் மெகா புதிர் போட்டி உங்களின் ஆதரவால் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த வருடமும் அப்படியான ஒரு போட்டியை மேலும் சிறப்பாக நடத்த போவதாக முந்தய பதிவுகளில் சொல்லி இருந்தோம்.

 
ஆம், நண்பர்களே உங்கள் புத்தியை தீட்ட நேரம் வந்துவிட்டது.... வரும் புதன் கிழமை (12/09/2012) காலை 9.00 மணிக்கு ஹண்ட் ஃபார் ஹிண்ட் - 2 போட்டி தொடங்கும். மொத்தப்பரிசு ரூ 10,000....


இந்த வருடம் புதியதாக விளையாட போகிறவர்களுக்காக இந்த கேம் பற்றிய சிறிய அறிமுகம்:

என்ன புதிர் போட்டி இது?

1. இந்தூர் ஐஐம் மாணவர்களால் வருடாவருடம் நடத்தப்படும் "KLUELESS" விளையாட்டின் தாக்கத்தால் உருவாக்கப்பட்ட விளையாட்டு இது.

2. நேரடி கேள்விகள் இருக்காது.... படமாகவோ, எழுத்தாகவோ, மவுஸ் கிளிக்காகவோ இப்படி வித்தியாசமாக இருக்கும்

3. ஒவ்வொரு கேள்விக்குமான விடைக்கும் க்ளூ கொடுக்கப்பட்ட்டு இருக்கும். பேஜ் சோர்ஸ், பேஜ் டைட்டில், url name, image name அல்லது வெப்பேஜில் ஏதாவது ஒரு இடத்தில் க்ளூ இருக்கும்... அதை கண்டுபிடித்து  விடை சொல்ல வேண்டும்

4. விடைகளை அதற்கான ஆன்சர் பாக்சிலோ, url name மாற்றுவது போன்றோ, கிளிக் செய்வது போன்றோ இருக்கும்.... 

5. விடையை  கொடுத்தவுடன் அடுத்த பக்கத்திற்கு (லெவலுக்கு)  செல்லும்

6. இப்படி மொத்த லெவல்களை யார் முதலில் முடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்....

7. அனைத்து லெவல்களையும்  முடிப்பவர்களின் பெயர்கள் “HALL OF FAME”லும் “டெரர் கும்மி.காம்”மிலும் வெளியிடப்படும்.

8. போட்டியில் கலந்து கொள்ள எந்த வித நிபந்தனையும் இல்லை. டெரர் கும்மியை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களை தவிர யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்

9. புதிர் முடிக்க டைம் லிமிட் கிடையாது. முதலில் முடிப்பவர்களுக்கு பரிசு.


பரிசு விவரம்:

முதல் பரிசு: 5000 ரூபாய்
இரண்டாம் பரிசு: 3000 ரூபாய்
மூன்றாம் பரிசு: 1000 ரூபாய்
இரண்டு ஆறுதல் பரிசு தலா 500 ரூபாய்.

இந்த போட்டியை பற்றிய மேலும் விரங்கள் அறிய கீழகண்ட சமூக தளங்களில் உள்ள எங்கள் பேஜ்களை பாருங்கள்......


சென்ற வருட கேமை புதியதாக விளையாட http://hfhseason1.terrorkummi.com/Game/Home.aspx

சென்ற வருட போட்டியை பற்றி மேலும் தெரிந்து கொள்ள http://www.terrorkummi.com/search/label/Hunt%20for%20hint



இந்த வருடமும் இந்த விளையாட்டு உங்களுக்கு நல்லதொரு அனுபவத்தை தருமென்று நம்புகிறோம்..



25 comments:

Vidhoosh said...

தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லது...

முரளிகண்ணன் said...

சூப்பர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Super

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமாக இருக்கும் போல... (போன முறை தெரியாது)

இந்த முறை நேரம் கிடைப்பின் கலந்து கொள்கிறேன்...

Admin said...

கடைசி கேள்விக்கான லிங்க் கிடைக்குமா?

:D :D :D

Admin said...

போன முறை ஆறுதல் பரிசு பெற்றேன். இந்த முறை?

TERROR-PANDIYAN(VAS) said...

//கடைசி கேள்விக்கான லிங்க் கிடைக்குமா?//

கவலைபடாதிங்க கேம் முடிந்ததும் நான் தரேன் சார்.

அருண் பிரசாத் said...

@Vidhoosh
// தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை..//
சும்மா தைரியமா இறங்குங்க :)

@கவிதை வீதி... // சௌந்தர் //
@முரளிகண்ணன்
நன்றி

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
// Super//
ஸ்போர்ட் ஷூ பாலிஸ் போட்டு ரெடியா வை மச்சி

அருண் பிரசாத் said...

@ திண்டுக்கல் தனபாலன்
// வித்தியாசமாக இருக்கும் போல... (போன முறை தெரியாது)
இந்த முறை நேரம் கிடைப்பின் கலந்து கொள்கிறேன்...//

வித்தியாசமான விளையாட்டுதான்... விளையாடி பாருங்க அடிக்ட் ஆகிடுவீங்க....

அருண் பிரசாத் said...

@Abdul Basith said...
// கடைசி கேள்விக்கான லிங்க் கிடைக்குமா?//
வேணும்னா நேரா hall of fame லிங்கையே கொடுத்துடறேனே....

@TERROR-PANDIYAN(VAS)
//
//கடைசி கேள்விக்கான லிங்க் கிடைக்குமா?//

கவலைபடாதிங்க கேம் முடிந்ததும் நான் தரேன் சார்.//
முந்திட்டான்ய்யா

Admin said...

:) :) :)

My greetings for the game success..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
// Super//
ஸ்போர்ட் ஷூ பாலிஸ் போட்டு ரெடியா வை மச்சி//

எங்க நான் ஜெயிச்சிருவனோ அப்டின்னு பயந்து ஒரு கால் ஷூவை டெரர் திருட்டிடான் மச்சி. வாங்கித்தா. அப்பத்தான் என்னால விளையாட முடியும்

Arjun said...

போன வருஷம் மூன்றாவது பரிசு எனக்கு. இந்த தடவை முதல் பரிசை பிடிக்க டெரரா விளையாட வேண்டியது தான்.

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

”தளிர் சுரேஷ்” said...

புதிய தகவல்! கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்!

இன்று என் தளத்தில்
வாஸ்து பிரச்சனையில் வடிவேலு!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6.html

Unknown said...

வேடிக்கை பார்க்குறேன்....!கடைசிக்கு ஆறுதல் பரிச்சு கொடுத்தா தேவலாம்.....!
:)

Yoga.S. said...

வீடு சுரேஸ்குமார் said...
வேடிக்கை பார்க்குறேன்....!கடைசிக்கு ஆறுதல் பரிசு கொடுத்தா தேவலாம்.....!////கடேசியா வர்றதே ஆறுதல் தானே?????ஹ!ஹ!ஹா!!!

ஹிஷாலி said...

நல்லது...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

ரமேஷ்; உன்கிட்ட ஸ்போர்ட்ஸ் ஜட்டி ஏதாவது இருக்கா மச்சி ?
டெரர்; எதுக்கு கேக்குற ..
ரமேஷ்; இல்ல hunt for hint லகலந்துக்க போறேன் அதான் கேட்டேன் ..
டெரர் ; க்க்க்ரர்ர்ர்ர்....த்த்த்த்து

பாலா said...

நல்லா சுவாரசியமான போட்டி. ஆனா புதன்கிழமை காலை 9 மணிக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. அந்த நேரம் நான் மணமேடையில் இருப்பேன். ஆகவே இந்தமுறையும் பார்வையாளன்தான்.

Yoga.S. said...

வாழ்த்துக்கள்,பாலா!!!!இல்லறத்தில் இணைந்து யாம் பெற்ற இன்பம் நீவிரும் பெறுக!!!!!!!!

அருண் பிரசாத் said...

வாழ்த்துக்கள் பாலா... :)

Thamiz Priyan said...

போன முறை வென்றவர்கள் இந்த முறை ஒதுங்கிக் கொள்ளலாமே? அல்லது அவர்கள் முதலில் முடித்தாலும் அவர்களுக்கு Hall of fame ல் மட்டும் இடம்.. பரிசு புதியவர்களுக்கு என அறிவிக்கலாமே?

# போட்டு விடுவோம்ல... :-))

Anonymous said...

தோழர்.நக்கீரன் இப்போட்டியில் கலந்து கொள்ளவிருப்பதாக பீதி கிளம்பி இருக்கிறது.