HFH 2 வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இன்னும் சில நண்பர்கள் விளையாடிக் கொண்டிருப்பதால் தற்போது விடைகளை வெளியிட முடியவில்லை. விரைவில் கேள்விகளுக்கான விடைகள் விளக்கத்துடன் வெளியிடப்படும். உங்களின் ஆதரவால் கடந்த வருடத்தைவிட இந்த வருடம் சிறப்பான வரவேற்பு இருந்தது. இதில் கலந்துகொண்டதோடு மட்டுமல்லாமல் அதன் அனுபவத்தை மற்றவர்களோடும் பகிர்ந்து அவர்களையும் விளையாடத் தூண்டிய அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்! உங்கள் எல்லோருக்கும் இது டெரர்கும்மி நடத்தினார்கள் என்று தெரியும், ஆனால் முழுமை அடைந்த கேமை உங்களிடம் கொண்டு வந்து சேர்த்தது வேண்டுமானால் ஒட்டுமொத்த டீமாக இருக்கலாம்! ஆனால் இதன் பின்னால் இருக்கும் பிரம்மாண்ட உழைப்பு அனைத்தும் ஐந்து பேரின் உழைப்பு! அந்த ஐந்து பேரை பற்றிதான் இப்போது உங்களிடம் சொல்லப்போகிறோம்!
இந்த வருடம் ஆரம்பத்தில் இருந்தே டெரர்கும்மி நண்பர்கள் பலரும் தங்கள் வேலை நிமித்தமாக கொஞ்சம் நேரமின்மையாக இருந்தபடியால் இந்த வருடமும் கேமை நடத்த வேண்டுமா என யோசித்தபோது நிச்சயமாக நடத்த வேண்டும் என்று ஆர்வமாக இருந்தவர்கள் அருண் பிரசாத் மற்று நாகா! இவர்கள் இல்லையென்றால் கேம் நடந்து இருக்குமா என்பது சந்தேகமே.
அருண் பிரசாத் மற்றும் டெரர்பாண்டியன் ஆகியோரது அழகான எண்ணங்களுக்கு (விடுங்க சார்.. அவனுங்க எண்ணங்களாவது அழகா இருந்துட்டு போகட்டும்!) வண்ணம் கொடுத்தவர்கள் எஸ்.கே மற்றும் நாகா. (ரெண்டு பேரும் பெயிண்டரா? சொல்லவே இல்லை?) கேம் சைட் டிசைனிங் வேலைகளை மிக அருமையாக செய்தவர்கள் இவர்கள் இருவருமே. ஷங்கர் நினைத்ததை செட்டில் அழகாக கொண்டுவரும் கலை இயக்குனர்கள் போல அருண் பிரசாத்(இனி இவன புடிக்க முடியாதே?) நினைத்ததை டிசைனிங்கில் அழகாக கொண்டுவந்தவர்கள் எஸ்.கே மற்றும் நாகா அவர்கள். இந்த அருண பத்தி உங்களுக்கு சொல்லியே ஆகணும்! கேம் ஆரம்பிச்சதில இருந்து புள்ளைக்கு பிஸ்கட் வாங்கிட்டு போனாகூட கைல கொடுக்க மாட்டானாம்! எங்கயாவது ஒளிச்சு வச்சிட்டு அது எங்க இருக்குன்னு லேப்டாப்ல டைப் பண்ணி காமிச்சதான் கைல கொடுப்பானாம்! அந்த அளவுக்கு கேமில் ஒன்றிப் போய் திரிஞ்சிருக்கு பயபுள்ள!
பொதுவாக தமிழ்ப் படங்களில் நட்புக்காக நடிப்பவர்கள் ஒரு சில பிரேம்களில் தலை காட்டிவிட்டு அதுக்கே கோடிக் கணக்கில் பணம் வாங்குவார்கள்! ஆனால் டெரர்கும்மியை பொறுத்தவரை எங்களுக்கு ஒரு அருமையான நட்பு உண்டு! அவங்கதான் அனு மேடம்! நட்புக்காக கேம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை கூட இருந்து நடத்தி கொடுத்தார்கள்! அருண், அனு, எஸ்கே மூவரின் விவாதங்களிலும் இருந்து உருவானதுதான் கேள்விகள் அனைத்தும். நண்பன், பிரண்ட்ஸ் போன்ற சின்ன டாக்டர் படங்களை பல தடவை பார்த்ததால்தான் அனு அவர்கள் நட்புக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தார்கள் என்று உளவுத்துறை குறிப்புகள் தெரிவிக்கின்றன! (அனு ஒரு சின்ன டாக்டர் ரசிகைன்னு ஊருக்கே சொல்லியாச்சு!) டிஸ்கஷன் போரமை எஸ்.கே மற்றும் அருண் அவர்களுடன் மானிட்டர்செய்தது இவர்தான். <mod edit> ***** நீங்கள் பார்ப்பதெல்லாம் விடை அல்ல. விடைன்னு நினைப்பதெல்லாம் விடை அல்ல என்று உங்களை குழப்பிய அட்மின்களை கட்டுப்படுத்தியது இவர்கள்தான். அட்மினை கொலைவெறியோடு தேடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த உண்மையை இன்னும் அதிகமான கொலைவெறியோடு சமர்பிக்கிறோம். ( புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்... எங்களுக்கே ஒழுங்கா க்ளூ தரல!)
அவர்களின்கேள்விகளையும், டிசைன்களையும் தனது லாவகமான கோடிங் மூலம் செவ்வனே சேர்த்து ஒரு அருமையான அனுபவத்தை உங்களுக்கு உண்டாக்கியவர் நம் நாகராஜசோழன் எம்.எல்.ஏ அவர்கள். தனது அலுவலக வேலைகள், குடும்ப வேலைகளுக்கு மத்தியில் கேமுக்காக நேரம் ஒதுக்கி தனது பணியினை செவ்வனே செய்து முடித்தார். (வீட்டுக்கு போனா அடி விழுகும்னு ஆபிசே கதியா கெடந்து செய்துட்டு..இந்த பில்ட்டப்பா?) இவரு எப்பிடின்னா தமிழ் பட ஹீரோ மாதிரி! என்ன பண்ணுறார்னே தெரியாது, ஆனா ஒரே அடில பத்து பேர் விளுவாங்கல்ல? அந்த மாதிரி... ஒண்ணுமே செய்யாத மாதிரி இருக்கும் திடீர்னு சைட் ரெடி ஆயிருச்சுன்னு மெசேஜ் போடுவாரு! (பயபுள்ள அல்லக்கைஸ் செஞ்சிருக்கும் போல?) ஆனாலும் கேம் ரிலீஸ் பண்ற அந்த கடைசி நிமிடங்களில் பிரசவ வார்டுக்கு வெளியே நிற்கும் கணவனின் மனநிலைதான் இவனுக்கும்!
இந்த நேரத்தில் டெரர்கும்மி என்று எங்கள் எல்லோரையும் காலரை தூக்கி விட்டுக்கொள்ள உதவி செய்த இவர்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறோம்! இன்னும் வரும் காலங்களில் இன்னும் சிறந்த பொழுதுபோக்கை டெரர் கும்மியின் சார்பாக உங்களுக்கு வழங்குவோம் என்ற நம்பிக்கையோடு அனைவருக்கும் நன்றி சொல்லி விடை பெறுகிறோம்!
21 comments:
vadai
Paayasam
இந்த ஹண்டு ஃபாரு ஹிண்டு கேமையே A to Z டிசைன் பண்ணி, கோடிங் எழுதி, மார்க்கெட்டிங் பண்ணி...ஃபோரத்துல எல்லார் டவுட்டுக்கும் க்ளு குடுத்து... எல்லாம் பண்ண ஏகாம்பரம் நான் தான் அப்படினு கொல்லப்பேர்கிட்ட சொல்லிட்டிருந்தேன்.....
அதெல்லாம் பொய்னு இப்படி புப்ளிக்கா போட்டு உடைச்சிப் புட்டீங்களே... நீங்க நல்லா மிருப்பீங்களாடா சின்னப்பசங்களா...
இனி எல்லாரும் வரிசைல வந்து காறித் துப்புவானுகளே...நான் என்ன செய்ய....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)))
moar
சிரிக்கவைத்த நல்ல பதிவு..
மூனே மூணு டவுட்டு...
1) ஏன் எல்லா வார்த்தைகளையும் சிவப்பு மையினால் எழுதி இருக்கீங்க.. (வழக்கமான குப்பு மை தீர்ந்து விட்டதா ) ?
2) ஏன் எல்லா வாக்கியங்களுக்கு இடையே நீங்க இடைவெளி..?
3) யாரைப் பத்தின்னு சொல்லாம விட்டுட்டீங்க போல..(க்ளூ கொடுங்க.. நாங்களே ஹின்ட்ட ஹன்ட் பண்ணி தெரிஞ்சிக்க ட்ரை பண்ணுறோம்...)
நகைச்சுவையான பதிவு..
நன்றி
Errata
//(வழக்கமான குப்பு மை தீர்ந்து விட்டதா) //
May be re-read as 'கருப்பு'
பட்டிகாட்டான் Jey said... இந்த ஹண்டு ஃபாரு ஹிண்டு கேமையே A to Z டிசைன் பண்ணி, கோடிங் எழுதி, மார்க்கெட்டிங் பண்ணி...ஃபோரத்துல எல்லார் டவுட்டுக்கும் க்ளு குடுத்து... எல்லாம் பண்ண ஏகாம்பரம் நான் தான் அப்படினு கொல்லப்பேர்கிட்ட சொல்லிட்டிருந்தேன்.....//
இந்த பொழப்புக்கு
இந்த கேமிற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி!
//
இந்த பொழப்புக்கு
//
விட்ரா..விட்ரா... நான்கெல்லாம் எம்பூட்டு பொழப்ப பாத்தவிய்ங்க.... போடா ..போ...போய் துணி துவைக்கிற வேலைய நல்லாப் பாரு... போய்ய்ட்டே இருடியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......
டோட்டன் டோட்டன் டோட்டண்டோயைன் ....
நட்புக்காக மியஊசிக்குபா!!!
ஒழுங்கா மருவாதையா hintman, atlas, phonix எல்லாம் யார் யாருன்னு சொல்லிப் போடுங்க.. கைல கிடைக்கும் போது பழி தீர்க்கோனும்.. ;-)
//ஒழுங்கா மருவாதையா hintman, atlas, phonix எல்லாம் யார் யாருன்னு சொல்லிப் போடுங்க.. கைல கிடைக்கும் போது பழி தீர்க்கோனும்.. ;-) //
phoenix - ரமேஷ் சுப்புராஜ் (தொலைந்தான் துரோகி)
hitman - வைகை
atlas - இம்சையரசன் பாபு
// hintman, atlas, phonix //
இந்த குருப்புக்கு லீடர் டெர்ரட் பாண்டிதான்...
அப்பாடா கோர்த்து விட்டாச்சு.....
//phoenix - ரமேஷ் சுப்புராஜ் (தொலைந்தான் துரோகி)
hitman - வைகை
atlas - இம்சையரசன் பாபு//
ம்ம்க்கும் வெளங்கிரும் .... ஐ ஆம் நாட் அட்லஸ் ஐ ஆம் அசித் குமார்
//ஒழுங்கா மருவாதையா hintman, atlas, phonix எல்லாம் யார் யாருன்னு சொல்லிப் போடுங்க.. கைல கிடைக்கும் போது பழி தீர்க்கோனும்.. ;-) //
phoenix - ரமேஷ் சுப்புராஜ் (தொலைந்தான் துரோகி)
hitman - வைகை
atlas - இம்சையரசன் பாபு///
Danks for ur support
Thanks & Regards
____________
Very Good Team Work ....
Congrats to all ....
வாழ்த்துக்கள்! :)
>>>
பட்டிகாட்டான் Jey said...
//
இந்த பொழப்புக்கு
//
விட்ரா..விட்ரா... நான்கெல்லாம் எம்பூட்டு பொழப்ப பாத்தவிய்ங்க.... போடா ..போ...போய் துணி துவைக்கிற வேலைய நல்லாப் பாரு
<<<
அவரு போலிஸ் இலாக்காவில் வேலை செய்ராருன்னுல கேவிப்பட்டேன் 'லாண்டரி கடையா' வச்சிருக்காரு! :D :D :D
அயம் பிசி!
//வெளங்காதவன்™ said...
அயம் பிசி! //
ஓ! யூ ஆர் நாட் 'சி.பி'
அருமையான விளையாட்டை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!
Post a Comment