Monday, September 17, 2012

ஹண்ட் ஃபார் ஹிண்ட் 2 - போட்டி முடிவுகள்


இணைய நண்பர்களே,

கடந்த 5 நாட்களாக உங்களை ஒட்டு மொத்தமாக கட்டி போட்ட ஹண்ட் ஃபார் ஹிண்ட் - 2 வின் வெற்றியாளர்கள் முடிவாகிவிட்டது. அதற்கு முன்னதாக இந்த இமாலய வெற்றியை எங்களுக்கு வழங்கிய உங்கள் அனைவருக்கும் எங்களின் நன்றியை டெரர்கும்மி சார்பாக தெரிவித்து கொள்கிறோம்கேம் பற்றிய சில சுவாரசிய தகவல்கள்:

நேற்று நள்ளிரவு (16/09/2012) வரையில் பதிவான,

மொத்த போட்டியாளர்கள்              : 659
மொத்த PAGE VIEWS                   : 211,318
HALL OF FAME ல் இடம்பிடித்தவர்கள் : 11  (17/09/2012 - மதியம் 2 மணி வரை)
20 (கடைசி) லெவலில் இருப்பவர்கள் : 15
16 - 19 லெவலில் இருப்பவர்கள்      : 15
11 - 20 லெவலில் இருப்பவர்கள்      : 32

கேம் உருவான விதம்: 


சென்ற வருடம் நடந்த ஹண்ட் ஃபார் ஹிண்ட் - 1 மாபெரும் வெற்றி பெற்றிருந்தாலும் இந்த வருடம் எப்படி இருக்குமோ என்ற ஒரு வித தயக்கத்துடன் தான் கேமை வடிவமைக்க தொடங்கினோம். இதை பற்றி  G+ல்லும் தெரிவித்து இருந்தோம். இதை கேள்விபட்டு உங்களில் பலர் நேரடியாகவும் இமெயில் மூலமாகவும் எங்களை ஊக்கமூட்டி உற்சாகபடுத்தினர். குறிப்பாக எங்கள் டெரர்கும்மி நண்பர்கள் துணிந்து இறங்கலாம் வெற்றியைவிட மனதிருப்திதான் முக்கியம் என உணர்த்தி எங்களை புதுப்பொலிவுடன் விளையாட்டை வடிவமைக்க செய்தனர்.

 சரியென செயலில் இறங்கி கிட்டதட்ட 25 நாட்களில் முழுவடிவத்துடன் கொண்டுவந்து  இதோ உங்கள் முன்னிலையில் செயல்படுத்திவிட்டோம்.

கேம் வடிவமைப்பிலும் கேம் மார்க்கெட்டிங்கிலும் முழு நேர உழைப்பையும், சில இரவுகளின் தூக்கத்தையும் செலவழித்து இந்த கேம்மிற்கு முழு உருவம் கிடைக்கச் செய்ய காரணம் எங்களின் டீம் ஒர்க் மட்டுமே..  ! இதற்கு அனு அவர்களுக்கு மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்..

விளையாட்டு தொடங்கியபின் நாங்களே எதிர்பார்காத ஒன்று நிகழ்ந்தது. ஆம், எல்லாவித சமூக தளங்களிலும் ஹண்ட் ஃபார் ஹிண்ட் பற்றிய செய்திகளே வந்த வண்ணம் இருந்தன. இது இந்த விளையாட்டை மேலும் பலருக்கு கொண்டு சேர்ந்த்து. இந்த இன்ப அதிர்ச்சியை தந்து எங்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் தந்து உதவிய உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

எங்களை பற்றின தற்பெருமை போதும் என சொல்வது காதில் விழுகிறது :) 

சரி வெற்றியாளர்கள் பற்றிய அறிவிப்புக்கு செல்லலாம்

HALL OF FAME: 
Rank
Name
Date
Time
6
Akila Balasubramanian From UK 
9/16/2012
8:00 PM
7
Rukmani Ramkumar - Surat
9/16/2012
8:19 PM
8
Sen..
9/16/2012
8:25 PM
9
Yosippavar, Tuticorin
9/16/2012
8:45 PM
10
Abdul Basith, Dubai
9/17/2012
12:52 AM
11
Athisha
9/17/2012
1:20 PM


நாம் ஏற்கனவே அறிவித்தது போல.......

5வது 4வது இடத்தை பிடித்து ரூ 500 ஆறுதல் பரிசு பெறுபவர்கள்
Rank
Name
Date
Time
4
Penathal
9/16/2012
6:40 PM                  
5
Ca
9/16/2012
7:27 PM

3வது இடத்தை பிடித்து ரூ 2000 பரிசு பெறுபவர்
Rank
Name
Date
Time
3
sathyanarayanan-chennai                     
9/16/2012
6:32 PM                  

2வது இடத்தை பிடித்து ரூ 3000 பரிசு பெறுபவர்
Rank
Name
Date
Time
2
Mohamed Ali Jinna
9/16/2012
6: 04 PM                  

பலத்த போட்டிக்கு நடுவில்  திறமையாக விளையாடி ஹால் ஆப் பேம்மில் முதலில் நுழைந்து ஹண்ட் ஃபார் ஹிண்ட் - 2 போட்டியின் முதல் இடத்தை பிடித்து ரூ 5000 பரிசு பெறும் வெற்றியாளர்
Rank
Name
Date
Time
1
KVR, Riyadh
9/16/2012
5:38 PM                  


இவர் சென்ற வருடம் நடந்த ஹண்ட் ஃபார் ஹிண்ட் போட்டியில் ஒரு இடத்தால் டாப் 5 ஐ தவறவிட்டவர் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

இந்த சந்தோஷமான சமயத்தில் இன்னும் ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். பலர் குழுவாக விளையாடி தனிதனியாக தங்கள் பெயர்களை முன்னனியில் கொண்டு செல்வதாகவும் விடைகளையும் க்ளூகளையும் பகிர்ந்து கொள்வதாகவும் எங்களுக்கு தகவல்கள் வந்தன. அவற்றை பல சமூக தளங்களில் மறைமுகமாகவும் நேரடியாகவும் சுட்டி காட்டினோம். சிலருக்கு எச்சரிக்கையும் சிலரின் தவறுகளை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி அவர்களை தகுதி நீக்கமும் செய்தோம்.

இவைகளை நாங்கள் செய்ய காரணம் மற்றவர்களின் கடின உழைப்பு வீணாக கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே என்பதை உங்களுக்கு தெரிவித்து கொண்டு யாருக்கேனும் எங்களால் மன வருத்தம் ஏற்பட்டு இருந்தாதால் அதற்கு எங்கள் வருத்ததையும் இங்கே பதிவு செய்து கொள்கிறோம்.

டிஸ்கி: தொடந்து விளையாடி கொண்டு இருப்பவர்களின் ஆர்வத்தை கருதி விடைகள் தற்போது வெளியிடப்படமாட்டது.....


விளையாட்டில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்துகளையும் அனுபவத்தையும் கமெண்ட்டில் தெரியப்படுத்த விரும்புகிறோம்.....

நீங்கள் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியப்பட்டு இருக்காது. ஒவ்வொரு விடைகளை கண்டுபிடிப்பது எவ்வளவு கடினம் என எங்களுக்கு தெரியும், நீங்கள் செய்த உழைப்பை நாங்கள் அறியாமல் இல்லை. உங்கள் உழைப்பிற்கு எங்கள் டீம் தலை வணங்குகிறது.

இந்த விளையாட்டால் நீங்களும், கேள்விகள் வடிவமைப்பால் நாங்களும் பல விஷயங்களை கற்றுகொண்டதை மறுக்க முடியாது. ஒரு வித்தியாசமான போட்டியை உங்களுக்கு வழங்கிய மகிழ்ச்சியுடன் உங்களிடம் இருந்து  விடை பெறுகிறோம். கேம் வெப்சைட் தொடர்ந்து இயங்கும்.

வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகள்....
மற்றும்
கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்....

மேலும் ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் மீண்டும் சந்திப்போம்....

இது வரை HALL OF FAME சென்றவர்களை காண இங்கே சொடுக்கவும்

.

45 comments:

Anonymous said...

Good work Guyz..

மாலுமி said...

பரிசுகளை வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)

Abdul Basith said...

போட்டியை பற்றி சொல்ல வேண்டுமானால் தனியாக ஒரு பதிவே எழுதணும், அவசியம் எழுதுகிறேன். இப்போதைக்கு டெர்ரர் கும்மி நண்பர்களுக்கு இரண்டு வார்த்தைகளை மட்டும் சொல்கிறேன்,

HATS OFF!

Abdul Basith said...

போட்டியில் பரிசு பெறவில்லை என்றாலும், HALL OF FAME-ல் பத்தாவது இடம் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி!

Karthik S said...

Congrats to the winners and to the terrorkummi team.

வெறும்பய said...

நாலஞ்சு நாள் ராப்பகலா தூக்கம் இல்லாம வீட்டிலையும் ஆபிஸ்லையும் திட்டு வாங்கி கேமை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கும் பரிசுக்கான தர வரிசையில் வந்தவர்களுக்கும், கலந்து கொண்டு முயற்ச்சி செய்தவர்களுக்கும் எங்கள் "டெரர் கும்மி" சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Abdul Basith said...

@வெறும்பய

திட்டு வாங்குனா கூட பரவாயில்லை,

"ஏன் நீ துப்பாக்கி பத்தி தேடுற? யாரையாவது சுட போறீயா?"ன்னு கேட்டது தான் தாங்க முடியல...

:( :( :(

பட்டிகாட்டான் Jey said...

பரிசு பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

மற்றும் விளையாட்டில் பங்கெடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.

ரசிகன் said...

போட்டியை நடத்தியவர்களுக்கும் வென்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் :)

Vasudevan Tirumurti said...

யப்பாடா! லெவல் 11 ல மாட்டிகிட்டு இருக்கேன். போட்டிய முடிச்சுடப்போறீங்களோ ன்னு பயம். இனி நிதானமா எல்லாத்துக்கும் விடை கண்டு பிடிக்கலாம். நன்னி!

Vasudevan Tirumurti said...

கேவிஆர், பாராட்டுக்கள்!

Akila Balasubramanian said...

Great game!! Excellent creativity!!

Learnt so many things which I never knw before while playing this game.. Thanks to Terrorkummi team for that!!

Congratz to everyone who involved in HFH Season2 thru playing and owning the game!!

அதிஷா said...

கிரேட் வொர்க் நண்பர்களே.. எதை பார்த்தாலும் இது குளுவா இருக்குமோனு நினைக்கிற அளவுக்கு ஒருத்தன ஒருவாரத்துல மென்டலாக்கிட்டீங்களே! ;-)

உங்களுடைய உழைப்பை ஒவ்வொரு லெவலிலும் அதற்கான விடைகளை கண்டுபிடிக்கும்போது உணர்ந்திருக்கிறேன். நிஜமாகவே நிறைய புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள ஒரு தளமாக அமைந்தது.

தமிழ் பிரியன் said...

இப்படி ஒரு அற்புதமான அனுபவத்திற்கு எங்களை அழைத்துச் சென்ற டெடர்களுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்.. :)

கலந்து கொண்டவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் இனிமையான வாழ்த்துக்கள்.

அன்புடன்
தமிழ் பிரியன் @ Mohamed Ali Jinna

வி.பாலகுமார் said...

வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

"டெரர் கும்மி” டீம் அனைவரின் உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் மிகப்பெரிய சல்யூட் !

Anonymous said...

ஏம்பா!! அது என்ன 11 பேரு லிஸ்ட மொட்டையா போடுறது?? ஒரு 15 பேரு ஹால் ஆப் பேம் லிஸ்ட் போட்டீங்கன்னா என்னோட பெயரும் வரும்!!!!

/* அட்மின் அய்யா அவர்களே அடியேன் 15வது இடத்தில் உள்ளேன்!! அடியேன் பெயரும் அங்கு தெரிய ஆசைப்படுகிறேன் :-D */

வானம்பாடிகள் said...

No word of appreciation will do justice to your efforts. Hats of guys. well done.

...αηαη∂.... said...

One of the Best things happened in tamil Blogosphere..,

Hats off Guys :) :)

Eagerly waiting for next season ...

One small request : ippo hall of fame ah update pannenganna en perum varum :) :)

முகிலன் said...

20 பேர் போட்டா நானும் வருவேன். (17, 18, 19,20ல முடிக்கப் போற நண்பர்களுக்கும் சேர்த்து பேசுறேன் பாருங்க).

வாழ்த்துகள் நண்பர்களே. நானும் என் பங்குக்கு இது மாதிரி ஒரு போட்டியை வடிவமைத்தவன் அப்பிடிங்கிறதால சொல்றேன். இது சாதாரணமான காரியம் இல்லை. உங்கள் உழைப்பு அபாரம். அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ந்து இது போல நடத்தவும் வாழ்த்துகள்.

ஆளுங்க அருண் said...

அருமையான விளையாட்டு..
நமக்கு ஒன்பதையே தாண்ட முடியலையே!

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

ஹுஸைனம்மா said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@Thanks all

and Congrats for all the Winners :)

அப்பாதுரை said...

வித்தியாசமானக் கூட்டு முயற்சி அபாரம். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

விடைகளுக்கான துப்புகள் புரியவில்லை என்பதே என் குறை. என்னால் toblerone நிலையைத் தாண்டிச் செல்ல முடியவில்லை. என்ன தான் தலைப்பையும் படத்தையும் இணைத்துப் பார்த்தாலும் முடியவில்லை. என் பதிலில் தவறா அல்லது 'submit' செயல்படவில்லையா என்ற feedback இல்லாமல் சிரமப்பட்டேன். குறைந்தது, "தவறான விடை" என்ற செய்தியாவது தந்திருக்கலாம். விடை தெரியாத காரணத்தால் நான் தொடரவில்லை என்றாலும் வெற்றியுடன் பல நிலைகளைக் கடந்து சென்றவர்கள் மேல் பொறாமைப் படாமல் இருக்க முடியவில்லை. (விடைகளையும் க்ளூக்களையும் பகிர்ந்து கொண்டார்களா? தெரியாமல் போச்சே?)

புதிருக்கான துப்புகளைப் பெற முடிகிற வகையில் (அபராதம் கட்டியாவது) புதிரை உருவாக்கினால், நிறைய பேர் கலந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். வெற்றியின் கவர்ச்சி அலாதியானது. பரிசு கூடத் தேவையில்லை.

விடைகளை வெளியிடுவீர்களா? எங்கே தவறினேன் என்று தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். அடுத்த புதிருக்குத் தயாராகவும்.

மீண்டும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

முரளிகண்ணன் said...

வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

அருமையான டீம்யா உங்க டீம்.

"டெரர் கும்மி” டீம் அனைவரின் உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் மிகப்பெரிய சல்யூட்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்பாதுரை Discussion forum யூஸ் பண்ணீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

முரளிகண்ணன் said...

வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

அருமையான டீம்யா உங்க டீம்.

"டெரர் கும்மி” டீம் அனைவரின் உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் மிகப்பெரிய சல்யூட்
//

Thank you

லதாமகன் said...

சென்ற ஆண்டு மிகத் தாமதாக இதைபற்றித் தெரிந்து கொண்டு 6-7வது லெவல் வரை வந்து அப்டியே விட்டாயிற்று. இந்த முறை முதலிலியே தெரிந்ததால், ஒரு வேகத்தில் தொடர்ந்து விளையாட முடிந்தது.

அற்புதமான உழைப்பு நண்பர்களே. இதுவரை தொழில் சம்பந்தமான கூகுள் தேடல் மட்டும்தான் செய்திருக்கிறேன். பல புதிய விஷயங்களைக்கற்றுக்கொள்ள முடிந்தது,

வேண்டுகோள்: அடுத்தமுறை திங்கள்-வெள்ளி இடைவெளியை தேர்த்தெடுத்தால், என்னைப்போன்ற வார இறுதிகளில் இணையத்திற்கு விடுமுறை விடும் ஆள்களுக்கு உதவியாக இருக்கும்.

வேண்டுகோள் இரண்டு: அடுத்தமுறை முதலில் முடித்தவர் பிறகு முடித்தவர் என்றில்லாமல், குறிப்பிட்ட கால இடைவெளி வரை காத்திருந்து, பிறகு வெற்றிபெற்றவர் பெயரைத் தெரிவிக்கவும். இந்த முடிவுகள் பதிவு வரும்போது 19ல் நின்றிருந்தேன். தொடர்வதற்கு பெரும் சலிப்பு ஏற்பட்டதென்பதை வைத்துச் சொல்கிறேன்.

வேண்டுகோள் 3 : முடிவுகள் இன்ன பிற விளம்பரங்களை தமிழ் & ஆங்கிலம் இரு மொழிகளிலும் வெளியிடலாமே? எனது அலுவலக நண்பர்களும் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். (போரமில் தமிழ் வரிகளைத் தவிர்த்து, ஆங்கிலம் அதிகமாய் இருந்தது அவர்களுக்கு வசதியாம் :)) )

வரலாற்று சுவடுகள் said...

விளையாட்டில் கலந்துகொண்டவர்களுக்கும், கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!

அப்பாதுரை said...

பதிலுக்கு நன்றி ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா.)
forumல ஸ்டாக் மார்கெட் பேசிக்ஸ்னு ஒரு கமெண்ட் இருந்துச்சு.. படத்தையும் அதையும் சம்பந்தப்படுத்தினாலும் முடியலே.. இல்லின்னா எனக்கு சரியான விடை தோணல.. ரெண்டுல ஒண்ணு :)

மாணவன் said...

போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!
போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுகள்+நன்றிகள்! :-)

Madhavan Srinivasagopalan said...

thanks..

க.பாலாசி said...

வெற்றிபெற்ற நண்பர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. இந்த வருஷம்தான் எப்புடி வெளையாடுறதுன்னுதான் பாப்பமேன்னு விளையான்டேன். 8 லெவல் வரைக்கும் வந்தது பெரிய அனுபவமாக இருந்தது. இப்போட்டிக்காக உழைத்த நண்பர்களுக்கு எனது வாழ்த்துகள்..

ரசிகன் said...

//ஏம்பா!! அது என்ன 11 பேரு லிஸ்ட மொட்டையா போடுறது?? ஒரு 15 பேரு ஹால் ஆப் பேம் லிஸ்ட் போட்டீங்கன்னா என்னோட பெயரும் வரும்!!!!//
இதை நான் வழி மொழிகிறேன். :))

TERROR-PANDIYAN(VAS) said...

HALL OF FAME கேட்டவங்க எல்லாம் இங்க போங்க

http://hfhseason2.terrorkummi.com/hfhseason2/Game/HallOfFame.aspx

இல்யாஸ்.மு said...

நிச்சயம் ஒரு சுகமான அனுபவம்..த்ரில்லிங் அனுபவமும்கூட.. நன்றி என்ற ஒற்றை வார்தையில் உங்களின் முயற்சியை, அர்பணிப்பை அடக்கிட முடியவில்லை...வாழ்த்துக்கள்

Thomas Ruban said...

விளையாட்டில் கலந்துகொண்ட அனைவருக்கும், மற்றும் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கும்,
டெரர் கும்மி டீம் நண்பர்கள் அனைவரின் உழைப்புக்கும்
வாழ்த்துக்கள் மற்றும் பாரட்டுக்கள்.

கொசக்சி பசபுகழ் said...

2 nd level answer ennada ?????????/////

கொசக்சி பசபுகழ் said...

இன்னும் என்னக்கு செகண்ட் லெவல் விடை தெரியல யுவர் ஆனர்!!!

புதுகை.அப்துல்லா said...

நான் தொடர் சுற்றுப்பயணத்தில் இருந்த காரணத்தால் என்னால் போட்டியில் பங்கேற்க இயலவில்லை. ( இல்லைன்னா மட்டும்...)

டெரர் பாய்ஸ்க்கு வழக்கம்போல் வாழ்த்துகள் :)

Moorthy G said...

அருமையான அனுபவம்! ஹண்ட் ஃபார் ஹிண்ட் குழுவிற்கு நன்றிகள்!!

sathyanarayanan said...

பரிசு எப்போது கிடைக்கும் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது

TERROR-PANDIYAN(VAS) said...

@Sathyanarayanan

//பரிசு எப்போது கிடைக்கும் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது//

பரிசா?? அப்படினா? கேஷியர் ரமேஷ் காசை தூக்கிட்டு ஓடி போய்ட்டான்.. ;)

(கூடிய விரைவில் மின்னஞ்சல் அனுப்பி வெற்றியாளர்கள் விலாசம் வாங்கி காசோலை அனுப்பி வைக்கபடும் நண்பரே)

தமிழ் பிரியன் said...

என்னது அக்கவுண்டண்ட் ஓடிப் போய்ட்டாரா.. ? யாரோட?
வயித்துல புளியைக் கரைக்காதீங்கப்பா..
;-))

cheena (சீனா) said...

அன்பின் டெரர் கும்மி குழும நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுகல் கலந்த நல்வாழ்த்துகள் - வெற்ரி பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

நீச்சல்காரன் said...

அற்புதமான படைப்பு. வாழ்த்துக்கள். பல லெவல்கள் அசத்தலாக இருந்தன. அடுத்த முறை போரத்தில் தனிப்பட்ட க்ளுக்களை தவிர்த்தால் அல்லது edit செய்யப்படாமலிருந்தால் போட்டி விருவிருப்பாகயிருக்கும்.