Monday, September 3, 2012

கவுண்டமணி VS வேட்டைக்காரன்


கவுண்டமணி ரிலாக்சாக ரெஸ்ட் எடுத்துகொண்டிருக்கிறார். Hunt For Hint-2 கேம்க்காக இம்சை அரசன் பாபு அவரை சந்திக்க செல்கிறார்.

பாபு: அண்ணே வணக்கம்

கவுண்டமணி:வணக்கம். யாருடா நீ. எருமை மாட்டுக்கு கருப்பு பெயின்ட் அடிச்ச மாதிரி?

பாபு: (மனசுக்குள்:ஆமா அண்ணன் வெள்ளை கலரு). அண்ணே நாங்க Hunt For Hint-2 அடுத்தமாசம் ரிலீஸ் வச்சிருக்கோம். நீங்க தான் வந்து ஓபன் பண்ணி வைக்கணும்

கவுண்டமணி: ஆமா இவரு பலகோடி ரூபாய் செலவழிச்சு கம்பனி தொடங்குறார். அத நான் வந்து ரிலீஸ் பண்ணனும். படவா பிச்சிடுவேன் பிச்சு.

பாபு: அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுன்னே. நாங்கெல்லாம் உங்க ரசிகர்கள். டெரர்கும்மி நண்பர்கள் எல்லாம் சேர்ந்து இந்த கேமை டெவலப் பண்ணிருக்கோம்.

கவுண்டமணி: என்னது கேம் டெவலப் பண்ணீங்களா? ஒட்டகம் மேய்க்கிறவன், தோழிகிட்ட கடலை போடுறவன், FACEBOOK ல ஸ்டேடஸ் மெசேஜ் போட்டு சாவடிக்கிரவன்,மொரீசியஸ் ஹாஸ்பிட்டல்ல டேப்லெட் திருடுறவன் இவனெல்லாம் கேம் டெவலப்பரா? இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலையே நாராயணா?

பாபு: அண்ணே அதுவந்து..

கவுண்டமணி: சரி வந்து தொலையுறேன். நீ அங்க என்னடா பண்ற?

பாபு: அண்ணே நான்தான் பாபு, விலம்பர பிரிவு அதிகாரி, Hunt For Hint-2,டெரர் கும்மி.

கவுண்டமணி: டேய் அது விளமபர பிரிவுடா. இதையே ஒழுங்கா சொல்ல தெரியலை. நீயெல்லாம் விளம்பரம் பண்ணி விளங்கிடும். ராமன் சோலைக்குள் புகுந்தான்னு எழுத சொன்னா ராமன் சேலைக்குள் புகுந்தான் அப்டின்னு எழுதி அடிவாங்கின பயதானடா நீ?

பாபு: ஹிஹி
=========
இடம்: டெரர் கும்மி ஆபீஸ்(இங்க நோ சிரிப்பு. இது சீரியஸ்). கவுண்டமணி உள்ளே நுழைகிறார். அப்போது நாகராஜசோழன் பொன்னாடை போர்த்துகிறார்.

கவுண்டமணி: அட கருமம் பிடிச்சவங்களா. இன்னும் இந்த பழக்கத்தை விடலியாடா நீங்க. இந்த பொன்னாடையை வச்சு நாக்கா வழிக்கிறது. தலையும் துவட்ட முடியாது. போர்வையாவும் யூஸ் பண்ண முடியாது.

நாகராஜசோழன்: இதெல்லாம் பழக்கம்னே.

கவுண்டமணி: ஏன் முன்னாடி ஆட்டுக்கல்ல மாவாட்டி, பத்துகிலோ மீட்டர் நடந்து போனீங்களே. அதையெல்லாம் மாத்துநீங்க. இத மாத்த மாட்டீங்களா? இனிமே பொன்னாடைக்கு பதில் அதுக்குள்ளே காச கொடுங்க. இனி எந்த பன்னாடையாவது பொன்னாடை போர்த்துனா பிச்சிடுவேன் ராஸ்கல்.

அப்போது டெரர் டீ கொண்டுவருகிறார். கவுண்டமணி குடித்துவிட்டு

கவுண்டமணி: கர். தூ. என்ன கருமம்டா இது. கழனித்தண்ணி கூட டேஸ்ட்டா இருக்கும்போல. இது என்ன கருமாந்திரம் டா?

டெரர்: அண்ணே நான் வளர்க்கிற ஒட்டகப் பால்ல போட்டது. ரொம்ப நல்லா இருக்கும்ண்ணே.

கவுண்டமணி: கருமடா சாமி. ஒட்டகப்பால் குடிச்சுத்தான் இவ்ளோ பிரைட்டா இருக்கிறியா. வெளங்கிடும். போடா போயி சுடு தண்ணி எடுத்துட்டு வா. அதையாவது குடிச்சு தொலையுறேன்.

அப்போது செல்வா வாசலையே பார்த்துகொண்டிருக்கிறான்.

கவுண்டமணி: என்னடா ராஜா செய்ற?

செல்வா: இல்ல அங்கிள்.

கவுண்டமணி: அங்கிளா. அடி செருப்பால. எனக்கு கேபிள் சங்கரை விட நாலு வயசு குறைவு. அவரே யூத்னா நான் என்ன அங்கிளா?

செல்வா: சாரின்னா. செந்தில் வராரான்னு பார்க்கிறேன். நீங்க மட்டும் வந்திருக்கீங்க? செந்தில் எங்க?

கவுண்டமணி: டேய் மொக்கை மண்டையா? அவன் என்ன என்னோட லவ்வராடா? கூடியே கூட்டிட்டு போக? நல்லவேளை ஷர்மிளா எங்கன்னு கேக்காம விட்டியே?

செல்வா: ஷர்மிளா யாருன்னே?

கவுண்டமணி: தம்பி நீ இன்னும் வயசுக்கு வரலைன்னு நினைக்கிறேன். போயி உங்க க்ரூப்ல வயசானவங்க யாரையாவது கேட்டு தெரிஞ்சுக்கோ.

அப்போது கவுண்டமணி மாஸ்க் மாட்டி சிவப்பா ஒருத்தர் வரார்.

கவுண்டமணி: யாரடா அவன் செக்க செவேல்னு என்ன மாதிரி?

பாபு: அவுருதாங்க டிகாப்ரியோ

கவுண்டமணி: என்னது டீ காய்ச்சுரவனா? முதல்லே எல்லாம் நீங்க சாராயம்தாண்டா காய்ச்சுனீங்க  ?

பாபு: அது நாங்க இல்லனே. அது நரி. இவருதான் எங்க க்ரூப் சிவப்பு கவுண்டமணி.

கவுண்டமணி: அடன்கொன்னியா இந்த நாட்ல டூப்ளிகேட் தொல்லை தாங்க முடியலை. சிவப்பு MGR , கருப்பு MGR , திருவல்லிக்கேணி அஞ்சாநெஞ்சன், சிவப்பு கவுண்டமணி. டேய் அவனவன் சொந்த பேர்ல அலைங்கடா.

பாபு: அவரு உங்க தீவிர ரசிகன். பேர் கூட உங்க கேரக்டர் பேருதான். பன்னிக்குட்டி ராம்சாமி.

கவுண்டமணி: வாடா ராசா நீதானா அது. ஏற்கனவே சந்தானம்ன்னு ஒருத்தன் என் பேரை சொல்லாமலே என்னை மாதிரி ஆக்ட் பண்றானாம். அடுத்து நீ வேறையா?

பன்னிகுட்டி : அது வந்துங்ண்ணா...

கவுண்டமணி: என்னடா அது வந்து நொந்துன்னு..படுவா... இந்த தமிழ் பட டைரெக்டர்ங்தான் திருட்டு வி.சி.டில இங்க்லீஷ் படத்த பார்த்துட்டு காப்பி அடிக்கிராங்கனா நீங்களுமாடா? அது யார்ரா பின்னாடி பம்மிகிட்டு நிக்கிறது?

பன்னிகுட்டி : அது நம்ம மாலுமி ப்ரபசனல் குடிகாரன்..

கவுண்டமணி: அடங்கொன்னியா... ஒரு மார்க்கமாத்தண்டா பேரு வச்சிக்கிட்டு திரியுறானுங்க. வா ராஜா நீ என்ன ராஜா பண்ணுவ?

மாலுமி: யாராச்சும் ஜெயிச்சு பரிசு வாங்கினா கைதட்டுவேன். யார் ஜெயிச்சாலும் ஜெயிச்சதை கொண்டாட தண்ணி அடிப்பேன்.

கவுண்டமணி: பன்னாடை முழு நேரமும் போதைல தான் இருக்கும் போல. டாஸ்மாக்ல தண்ணி அடிச்சதுக்கு பதில் உங்க வீட்டுக்கு அடி பம்புல தண்ணி அடிச்சு கொடுத்திருந்தா வீட்ல சீக்கிரம் உனக்கு பொண்ணு பார்த்தாவது கட்டி வெச்சிருப்பாங்க.

மாலுமி: நாங்கெல்லாம் பெண்களை ஏறெடுத்து பார்க்காதோர் சங்கம்ல மெம்பெர்.

கவுண்டமணி: கருமாந்திரம் பிடிச்சவனே. ஒரு பிகர் கூட உன்னை ஏறெடுத்து பார்க்கலைங்கிரத எவ்ளோ நாசூக்கா சொல்றான் பாரு. சரி சரி என்ன பண்ணனும் நானு?

மாலுமி: அது வந்து.

டெரர்: நான்தான் அட்மின். நான்தாண்டா சொல்லுவேன்.

கவுண்டமணி: கண்றாவிடா. சொல்லித்தொலை.

டெரர்: அண்ணே இந்த கேம் பேரு Hint For Hunt.

அருண்: தூ பரதேசி. அது Hunt For Hint.

டெரர்: மச்சி எல்லாம் ஒண்ணுதாண்டா. விடு விடு

கவுண்டமணி: ங்கொக்காமக்கா. இதுவே தெரியாமத்தான் பீலா விட்டுக்கிட்டு இருந்தியா. இதுக்கு மாணவன் மாதிரி பேசாம வேடிக்கை மட்டும் பார்க்கலாம்ல? சரி இதுல நான் என்னடா பண்ணனும்.

அருண்: (கேம் ரூல் explain செய்கிறார்)

கவுண்டமணி:(அடப்பாவிகளா அதுக்கு என்னை ஏண்டா கூட்டிட்டு வந்தீங்க. கம்ப்யூட்டர் கருமமெல்லாம் நமக்கு வராதே. செல்போன்ல SMS அனுப்பவே இப்பத்தான கத்துக்கிட்டேன். விவரமா போன் பேசுற மாதிரி எஸ்கேப் ஆகிடலாம்.

ஹெலோ தன்ராஜா. ஆமா நான்தான் பேசுறேன். இங்க ஏதோ கேம் ரிலீசாம். நான்தான் விளையாண்டு ஜெயிக்கனுமாம். டெண்டுல்கரால முடியலையாம், விஸ்வநாதன் ஆனந்தாலையும் முடியலையாம். நம்மளை விளையாட சொல்றாங்கப்பா. இது கூட பரவாயில்லை. விளையாடலாம். அடுத்த சீசன் கேமுக்கு நான்தான் கோடிங் எழுதித்தரனுமாம். இதெல்லாம் நடக்கிற காரியமா. நான் ரொம்ப பிசி. அதுத்த பிளைட்ட ஏறி டெல்லி வரேன். ஆமா பிளைட்லதான் வருவான் இந்த கோட்டைசாமி.(அப்படியே பேசிக்கிட்டே கவுண்டர் எஸ்கேப் ஆகிறார்)

டெரர் கும்மி அதிர்ச்சியாகி நிற்கிறது.

HUNT FOR HIN-2 COMING SOON

27 comments:

Madhavan Srinivasagopalan said...

Humorous..

May I know the Source from where this has been copied...
==== Madhavan

MARI The Great said...

கவுண்ட்ஸ் பேசுறது பேட்டரியில்லாத போன் தானே? :) :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அது போனே இல்ல ரிமோட் கண்ட்ரோலுங்கோ......

முரளிகண்ணன் said...

super. Very nice.

Madhavan Srinivasagopalan said...

// அது போனே இல்ல ரிமோட் கண்ட்ரோலுங்கோ......//

ரிமோட்டா இருந்தாலும், அதுல பேட்டரி இருந்திச்சா இல்லையா...?

மாலுமி said...

// கருமாந்திரம் பிடிச்சவனே. ஒரு பிகர் கூட உன்னை ஏறெடுத்து பார்க்கலைங்கிரத எவ்ளோ நாசூக்கா சொல்றான் பாரு. //
கவுண்டரு.......கரெக்ட்டா கண்டுபுடுசுட்டரே :)))..................
கவுண்டரே அந்த சங்கத்துல டெரர், ஜெயந்த், மாணவன், மங்கு எல்லோரும் மெம்பெர் தான் :))).........
இவனுக பொண்ணுகனா.........பத்து அடி தள்ளி நின்னு தான் பேசுவானுக :)))

இம்சைஅரசன் பாபு.. said...

பண்ணிகுட்டியை டீகேப்றியோ என்று அழைத்தமைக்கு நன்றி ..அதே சமையத்தில் ஒரு இடத்திலாவது என்னை அசித் குமார் (ஆசை ) என்று அழைத்து இருக்கலாமே நண்பரே .. மிகுந்த வருத்ததுடன்,கனத்த இதையத்துடம் ,நீடித்த ..நீடித்த ..நீடித்த கண்ணீருடன் செல்லுகிறேன் நண்பரே

பட்டிகாட்டான் Jey said...

[[ என்னது கேம் டெவலப் பண்ணீங்களா? ஒட்டகம் மேய்க்கிறவன், தோழிகிட்ட கடலை போடுறவன், FACEBOOK ல ஸ்டேடஸ் மெசேஜ் போட்டு சாவடிக்கிரவன்,மொரீசியஸ் ஹாஸ்பிட்டல்ல டேப்லெட் திருடுறவன் இவனெல்லாம் கேம் டெவலப்பரா? இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலையே நாராயணா? ]]

ROFL
(இதுக்கு விளக்கம் கேட்டு என்னை முழிக்க வச்சிராதீங்க மக்களே...ஏன்னா எனக்குத் தெரியாது..)

Madhavan Srinivasagopalan said...

// பண்ணிகுட்டியை //

அசீத்குமார் போல 'பன்னிக்குட்டி' எனச் சரியாக நீங்கள் எழுதினால், உங்களையும் 'அசீத்' என அழிப்போம், ச்சே.. அழைப்போம் (நான் அசீத் அல்ல) என
அன்போடு.. பாசத்தோடு... நீடித்த நீடித்த நேசத்தோடும் சொல்கிறோம்
--- டெரர் கும்மி..

பட்டிகாட்டான் Jey said...

[[ தூ பரதேசி. அது Hunt For Hint. ]]

துப்புறத நிறுத்தி நம்மலமாதி நல்ல புள்ளையா எப்ப மாறுவானுகன்னு தெரியலையே ஆண்டவா....

Madhavan Srinivasagopalan said...

//(இதுக்கு விளக்கம் கேட்டு என்னை முழிக்க வச்சிராதீங்க மக்களே...ஏன்னா எனக்குத் தெரியாது..)//

உங்கள் போயி எதுக்காவது விளக்கம் கேப்போமா ...
இதலாம்(விளக்கம் கேப்பது) நமக்கு என்ன புதுசா ?

பட்டிகாட்டான் Jey said...

[[
டெரர்: நான்தான் அட்மின். நான்தாண்டா சொல்லுவேன். ]]

உன் ஒருத்தன அட்மினா வச்சிகிட்டு நாங்க படுற அவஸ்த இருக்கே.... அப்பப்பப்பபப்பப....

பட்டிகாட்டான் Jey said...

[[ Madhavan Srinivasagopalan said...
//(இதுக்கு விளக்கம் கேட்டு என்னை முழிக்க வச்சிராதீங்க மக்களே...ஏன்னா எனக்குத் தெரியாது..)//

உங்கள் போயி எதுக்காவது விளக்கம் கேப்போமா ...
இதலாம்(விளக்கம் கேப்பது) நமக்கு என்ன புதுசா ? ]]

புரிதலுக்கு மிக்க நன்றி திருவாளர் Madhavan Srinivasagopalan அவர்களே.... ங்கொன்னியா முழுப்பேர டைப் அடிக்கிரதுக்குள்ள பாதி உசுரு போயிடும்போல நிக் நேம் ஏதும் சார்டா சொன்னா தேவலை...

மாணவன் said...

கவுண்டர் ராக்ஸ்.....! :-)

இந்திரா said...

கவுண்டர் (கரண்டி இல்லாமலேயே) கலக்குறாரு..
:-)

முத்தரசு said...

கவுண்டர் கவுண்டர்தானுங்கோ

Yoga.S. said...

நல்லாருந்திச்சு!மத்த யாரும் பிரசென்ட் ஆவுலியா?????

வைகை said...

அண்ணே! இந்த கேம் அடுத்த ஒலிம்பிக்ல உண்டா? :-)

Yoga.S. said...

வைகை said...
அண்ணே! இந்த கேம் அடுத்த ஒலிம்பிக்ல உண்டா? :-)////அடுத்த ஒலிம்பிக் பிரேசி...லில!!!!!!

திண்டுக்கல் தனபாலன் said...

கலக்கல்...

வெளங்காதவன்™ said...

அருமை....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டேய் இது நீ போட்ட போஸ்ட்டுதான்.... மறந்துட்டு நீயே சூப்பர் சொல்லிட்டே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

im telling about comments

இல்யாஸ்.மு said...

சூப்பர்

காப்பிகாரன் said...

சூப்பர்

muduvai thiru said...

muy bieno

Easy (EZ) Editorial Calendar said...

கலக்கல் பதிவு.......


நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)