Monday, September 24, 2012

ஹன்ட் ஃபார் ஹின்ட் -2 (திரைக்குப்பின்னால்)!




HFH 2 வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இன்னும் சில நண்பர்கள் விளையாடிக் கொண்டிருப்பதால் தற்போது விடைகளை வெளியிட முடியவில்லை. விரைவில் கேள்விகளுக்கான விடைகள் விளக்கத்துடன் வெளியிடப்படும்உங்களின் ஆதரவால் கடந்த வருடத்தைவிட இந்த வருடம் சிறப்பான வரவேற்பு இருந்தது. இதில் கலந்துகொண்டதோடு மட்டுமல்லாமல் அதன் அனுபவத்தை மற்றவர்களோடும் பகிர்ந்து அவர்களையும் விளையாடத் தூண்டிய அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்! உங்கள் எல்லோருக்கும் இது டெரர்கும்மி நடத்தினார்கள் என்று தெரியும், ஆனால் முழுமை அடைந்த கேமை உங்களிடம் கொண்டு வந்து சேர்த்தது வேண்டுமானால் ஒட்டுமொத்த டீமாக இருக்கலாம்! ஆனால் இதன் பின்னால் இருக்கும் பிரம்மாண்ட உழைப்பு அனைத்தும் ஐந்து பேரின் உழைப்பு! அந்த ஐந்து பேரை பற்றிதான் இப்போது உங்களிடம் சொல்லப்போகிறோம்!




இந்த வருடம் ஆரம்பத்தில் இருந்தே டெரர்கும்மி நண்பர்கள் பலரும் தங்கள் வேலை நிமித்தமாக கொஞ்சம் நேரமின்மையாக  இருந்தபடியால் இந்த வருடமும் கேமை நடத்த வேண்டுமா என யோசித்தபோது நிச்சயமாக நடத்த வேண்டும் என்று ஆர்வமாக இருந்தவர்கள் அருண் பிரசாத் மற்று நாகா! இவர்கள் இல்லையென்றால் கேம் நடந்து இருக்குமா என்பது சந்தேகமே.

அருண் பிரசாத் மற்றும் டெரர்பாண்டியன் ஆகியோரது அழகான எண்ணங்களுக்கு (விடுங்க சார்.. அவனுங்க எண்ணங்களாவது அழகா இருந்துட்டு போகட்டும்!) வண்ணம் கொடுத்தவர்கள் எஸ்.கே மற்றும் நாகா. (ரெண்டு பேரும் பெயிண்டரா? சொல்லவே இல்லை?)  கேம் சைட்  டிசைனிங் வேலைகளை மிக அருமையாக செய்தவர்கள் இவர்கள் இருவருமே. ஷங்கர் நினைத்ததை செட்டில் அழகாக கொண்டுவரும் கலை இயக்குனர்கள் போல அருண் பிரசாத்(இனி இவன புடிக்க முடியாதே?) நினைத்ததை டிசைனிங்கில் அழகாக கொண்டுவந்தவர்கள் எஸ்.கே மற்றும் நாகா அவர்கள். இந்த அருண பத்தி உங்களுக்கு சொல்லியே ஆகணும்! கேம் ஆரம்பிச்சதில இருந்து புள்ளைக்கு பிஸ்கட் வாங்கிட்டு போனாகூட கைல கொடுக்க மாட்டானாம்! எங்கயாவது ஒளிச்சு வச்சிட்டு அது எங்க இருக்குன்னு லேப்டாப்ல டைப் பண்ணி காமிச்சதான் கைல கொடுப்பானாம்! அந்த அளவுக்கு கேமில் ஒன்றிப் போய் திரிஞ்சிருக்கு பயபுள்ள!

பொதுவாக தமிழ்ப் படங்களில் நட்புக்காக நடிப்பவர்கள் ஒரு சில பிரேம்களில் தலை காட்டிவிட்டு அதுக்கே கோடிக் கணக்கில் பணம் வாங்குவார்கள்! ஆனால் டெரர்கும்மியை பொறுத்தவரை எங்களுக்கு ஒரு அருமையான நட்பு உண்டு! அவங்கதான் அனு மேடம்! நட்புக்காக கேம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை கூட இருந்து நடத்தி கொடுத்தார்கள்! அருண், அனு, எஸ்கே மூவரின் விவாதங்களிலும் இருந்து உருவானதுதான் கேள்விகள் அனைத்தும்.  நண்பன், பிரண்ட்ஸ் போன்ற சின்ன  டாக்டர்  படங்களை பல தடவை பார்த்ததால்தான் அனு அவர்கள் நட்புக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தார்கள் என்று உளவுத்துறை குறிப்புகள் தெரிவிக்கின்றன! (அனு ஒரு சின்ன டாக்டர் ரசிகைன்னு ஊருக்கே சொல்லியாச்சு!)  டிஸ்கஷன் போரமை எஸ்.கே மற்றும் அருண் அவர்களுடன் மானிட்டர்செய்தது இவர்தான். <mod edit> ***** நீங்கள் பார்ப்பதெல்லாம் விடை அல்ல. விடைன்னு நினைப்பதெல்லாம் விடை அல்ல என்று உங்களை குழப்பிய அட்மின்களை கட்டுப்படுத்தியது இவர்கள்தான். அட்மினை கொலைவெறியோடு தேடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த உண்மையை இன்னும் அதிகமான கொலைவெறியோடு  சமர்பிக்கிறோம். ( புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்... எங்களுக்கே ஒழுங்கா க்ளூ தரல!) 


அவர்களின்கேள்விகளையும், டிசைன்களையும் தனது லாவகமான கோடிங் மூலம் செவ்வனே சேர்த்து ஒரு அருமையான அனுபவத்தை உங்களுக்கு உண்டாக்கியவர் நம் நாகராஜசோழன் எம்.எல்.ஏ அவர்கள். தனது அலுவலக வேலைகள், குடும்ப வேலைகளுக்கு மத்தியில் கேமுக்காக நேரம் ஒதுக்கி தனது பணியினை செவ்வனே செய்து முடித்தார். (வீட்டுக்கு போனா அடி விழுகும்னு ஆபிசே கதியா கெடந்து செய்துட்டு..இந்த பில்ட்டப்பா?) இவரு எப்பிடின்னா தமிழ் பட ஹீரோ மாதிரி! என்ன பண்ணுறார்னே தெரியாது, ஆனா ஒரே அடில பத்து பேர் விளுவாங்கல்ல? அந்த மாதிரி... ஒண்ணுமே செய்யாத மாதிரி இருக்கும் திடீர்னு சைட் ரெடி ஆயிருச்சுன்னு மெசேஜ் போடுவாரு!  (பயபுள்ள அல்லக்கைஸ் செஞ்சிருக்கும் போல?) ஆனாலும் கேம் ரிலீஸ் பண்ற அந்த கடைசி நிமிடங்களில் பிரசவ வார்டுக்கு வெளியே நிற்கும் கணவனின் மனநிலைதான் இவனுக்கும்!

இந்த நேரத்தில்  டெரர்கும்மி என்று எங்கள் எல்லோரையும் காலரை தூக்கி விட்டுக்கொள்ள உதவி செய்த இவர்களுக்கு  நன்றி சொல்லிக்கொள்கிறோம்! இன்னும் வரும் காலங்களில் இன்னும் சிறந்த பொழுதுபோக்கை டெரர் கும்மியின் சார்பாக உங்களுக்கு வழங்குவோம் என்ற நம்பிக்கையோடு அனைவருக்கும் நன்றி சொல்லி விடை பெறுகிறோம்!


Monday, September 17, 2012

ஹண்ட் ஃபார் ஹிண்ட் 2 - போட்டி முடிவுகள்


இணைய நண்பர்களே,

கடந்த 5 நாட்களாக உங்களை ஒட்டு மொத்தமாக கட்டி போட்ட ஹண்ட் ஃபார் ஹிண்ட் - 2 வின் வெற்றியாளர்கள் முடிவாகிவிட்டது. அதற்கு முன்னதாக இந்த இமாலய வெற்றியை எங்களுக்கு வழங்கிய உங்கள் அனைவருக்கும் எங்களின் நன்றியை டெரர்கும்மி சார்பாக தெரிவித்து கொள்கிறோம்



கேம் பற்றிய சில சுவாரசிய தகவல்கள்:

நேற்று நள்ளிரவு (16/09/2012) வரையில் பதிவான,

மொத்த போட்டியாளர்கள்              : 659
மொத்த PAGE VIEWS                   : 211,318
HALL OF FAME ல் இடம்பிடித்தவர்கள் : 11  (17/09/2012 - மதியம் 2 மணி வரை)
20 (கடைசி) லெவலில் இருப்பவர்கள் : 15
16 - 19 லெவலில் இருப்பவர்கள்      : 15
11 - 20 லெவலில் இருப்பவர்கள்      : 32

கேம் உருவான விதம்: 


சென்ற வருடம் நடந்த ஹண்ட் ஃபார் ஹிண்ட் - 1 மாபெரும் வெற்றி பெற்றிருந்தாலும் இந்த வருடம் எப்படி இருக்குமோ என்ற ஒரு வித தயக்கத்துடன் தான் கேமை வடிவமைக்க தொடங்கினோம். இதை பற்றி  G+ல்லும் தெரிவித்து இருந்தோம். இதை கேள்விபட்டு உங்களில் பலர் நேரடியாகவும் இமெயில் மூலமாகவும் எங்களை ஊக்கமூட்டி உற்சாகபடுத்தினர். குறிப்பாக எங்கள் டெரர்கும்மி நண்பர்கள் துணிந்து இறங்கலாம் வெற்றியைவிட மனதிருப்திதான் முக்கியம் என உணர்த்தி எங்களை புதுப்பொலிவுடன் விளையாட்டை வடிவமைக்க செய்தனர்.

 சரியென செயலில் இறங்கி கிட்டதட்ட 25 நாட்களில் முழுவடிவத்துடன் கொண்டுவந்து  இதோ உங்கள் முன்னிலையில் செயல்படுத்திவிட்டோம்.

கேம் வடிவமைப்பிலும் கேம் மார்க்கெட்டிங்கிலும் முழு நேர உழைப்பையும், சில இரவுகளின் தூக்கத்தையும் செலவழித்து இந்த கேம்மிற்கு முழு உருவம் கிடைக்கச் செய்ய காரணம் எங்களின் டீம் ஒர்க் மட்டுமே..  ! இதற்கு அனு அவர்களுக்கு மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்..

விளையாட்டு தொடங்கியபின் நாங்களே எதிர்பார்காத ஒன்று நிகழ்ந்தது. ஆம், எல்லாவித சமூக தளங்களிலும் ஹண்ட் ஃபார் ஹிண்ட் பற்றிய செய்திகளே வந்த வண்ணம் இருந்தன. இது இந்த விளையாட்டை மேலும் பலருக்கு கொண்டு சேர்ந்த்து. இந்த இன்ப அதிர்ச்சியை தந்து எங்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் தந்து உதவிய உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

எங்களை பற்றின தற்பெருமை போதும் என சொல்வது காதில் விழுகிறது :) 

சரி வெற்றியாளர்கள் பற்றிய அறிவிப்புக்கு செல்லலாம்

HALL OF FAME: 
Rank
Name
Date
Time
6
Akila Balasubramanian From UK 
9/16/2012
8:00 PM
7
Rukmani Ramkumar - Surat
9/16/2012
8:19 PM
8
Sen..
9/16/2012
8:25 PM
9
Yosippavar, Tuticorin
9/16/2012
8:45 PM
10
Abdul Basith, Dubai
9/17/2012
12:52 AM
11
Athisha
9/17/2012
1:20 PM


நாம் ஏற்கனவே அறிவித்தது போல.......

5வது 4வது இடத்தை பிடித்து ரூ 500 ஆறுதல் பரிசு பெறுபவர்கள்
Rank
Name
Date
Time
4
Penathal
9/16/2012
6:40 PM                  
5
Ca
9/16/2012
7:27 PM

3வது இடத்தை பிடித்து ரூ 2000 பரிசு பெறுபவர்
Rank
Name
Date
Time
3
sathyanarayanan-chennai                     
9/16/2012
6:32 PM                  

2வது இடத்தை பிடித்து ரூ 3000 பரிசு பெறுபவர்
Rank
Name
Date
Time
2
Mohamed Ali Jinna
9/16/2012
6: 04 PM                  

பலத்த போட்டிக்கு நடுவில்  திறமையாக விளையாடி ஹால் ஆப் பேம்மில் முதலில் நுழைந்து ஹண்ட் ஃபார் ஹிண்ட் - 2 போட்டியின் முதல் இடத்தை பிடித்து ரூ 5000 பரிசு பெறும் வெற்றியாளர்
Rank
Name
Date
Time
1
KVR, Riyadh
9/16/2012
5:38 PM                  


இவர் சென்ற வருடம் நடந்த ஹண்ட் ஃபார் ஹிண்ட் போட்டியில் ஒரு இடத்தால் டாப் 5 ஐ தவறவிட்டவர் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

இந்த சந்தோஷமான சமயத்தில் இன்னும் ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். பலர் குழுவாக விளையாடி தனிதனியாக தங்கள் பெயர்களை முன்னனியில் கொண்டு செல்வதாகவும் விடைகளையும் க்ளூகளையும் பகிர்ந்து கொள்வதாகவும் எங்களுக்கு தகவல்கள் வந்தன. அவற்றை பல சமூக தளங்களில் மறைமுகமாகவும் நேரடியாகவும் சுட்டி காட்டினோம். சிலருக்கு எச்சரிக்கையும் சிலரின் தவறுகளை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி அவர்களை தகுதி நீக்கமும் செய்தோம்.

இவைகளை நாங்கள் செய்ய காரணம் மற்றவர்களின் கடின உழைப்பு வீணாக கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே என்பதை உங்களுக்கு தெரிவித்து கொண்டு யாருக்கேனும் எங்களால் மன வருத்தம் ஏற்பட்டு இருந்தாதால் அதற்கு எங்கள் வருத்ததையும் இங்கே பதிவு செய்து கொள்கிறோம்.

டிஸ்கி: தொடந்து விளையாடி கொண்டு இருப்பவர்களின் ஆர்வத்தை கருதி விடைகள் தற்போது வெளியிடப்படமாட்டது.....


விளையாட்டில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்துகளையும் அனுபவத்தையும் கமெண்ட்டில் தெரியப்படுத்த விரும்புகிறோம்.....

நீங்கள் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியப்பட்டு இருக்காது. ஒவ்வொரு விடைகளை கண்டுபிடிப்பது எவ்வளவு கடினம் என எங்களுக்கு தெரியும், நீங்கள் செய்த உழைப்பை நாங்கள் அறியாமல் இல்லை. உங்கள் உழைப்பிற்கு எங்கள் டீம் தலை வணங்குகிறது.

இந்த விளையாட்டால் நீங்களும், கேள்விகள் வடிவமைப்பால் நாங்களும் பல விஷயங்களை கற்றுகொண்டதை மறுக்க முடியாது. ஒரு வித்தியாசமான போட்டியை உங்களுக்கு வழங்கிய மகிழ்ச்சியுடன் உங்களிடம் இருந்து  விடை பெறுகிறோம். கேம் வெப்சைட் தொடர்ந்து இயங்கும்.

வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகள்....
மற்றும்
கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்....

மேலும் ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் மீண்டும் சந்திப்போம்....

இது வரை HALL OF FAME சென்றவர்களை காண இங்கே சொடுக்கவும்

.

Wednesday, September 12, 2012

Hunt For Hint 2 - Game Starts now....

இணைய நண்பர்களே,


பதிவுலக வரலாற்றில் முதல்முறையாக சென்ற வருடம் டெரர்கும்மி சார்பாக நடந்த ஹண்ட் ஃபார் ஹிண்ட் மெகா புதிர் போட்டி உங்களின் ஆதரவால் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த வருடமும் அப்படியான ஒரு போட்டியை மேலும் சிறப்பாக நடத்த போவதாக முந்தய பதிவுகளில் சொல்லி இருந்தோம்.
ஆம், நாங்கள் ஏற்கனவே அறிவித்தது போல இதோ இன்று “HUNT FOR HINT” போட்டியின் 2 வது பதிப்பை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.



இந்த போட்டியை பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். புகழ் பெற்ற ஆன்லைன் விளையாட்டான க்ளூலெஸ் விளையாட்டின் தாக்கத்தால் டெரர்கும்மி நண்பர்களால் உருவான விளையாட்டு "HUNT FOR HINT". இது  பல லெவல்களை கொண்ட ஒரு ஆன்லைன் விளையாட்டு.

மேலும் உங்களுக்கு உதவ எங்களின் விளையாட்டு குழு உறுப்பினர்கள் விளையாட்டுக்கான் டிஸ்கஷன் போரத்தில் தயாராக இருக்கிறார்கள்... அதற்கான சுட்டி கேம் தளத்திலேயே இருக்கிறது.... பயன்படுத்தி கொள்ளுங்கள்....



கேள்விகள் படமாகவோ, எழுத்தாகவோ, அல்லது வேறு ஏதாவது ஒரு விதத்திலோ இருக்கலாம். ஆங்காங்கே இருக்கும் க்ளூக்களை கண்டுபிடித்து அடுத்த லெவலுக்கு முன்னேற வேண்டும்.

விளையாடும் முறை, விதிகள் மற்றும் பரிசு விவரங்களை விளையாட்டின் பிரத்தியேக தளத்தில் கொடுத்து இருக்கிறோம்.  விளையாடும் முன்பு அவற்றை படித்தல் நலம்.






இந்த விளையாட்டை வடிவமைக்க பலர் தங்களின் உழைப்பையும் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு உள்ளனர். அவர்களுக்கு எங்களின் சிறப்பு நன்றியை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொண்டு, போட்டியாளர்கள் இந்த போட்டியை நேர்மையான முறையில் அணுகுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் போட்டியை தொடங்குகிறோம்.....


கீழே உள்ள சுட்டியை சொடுக்கி விளையாட தொடங்குங்கள்....


வாழ்த்துக்கள்....

Hunt for Hint



டிஸ்கி: விளையாட்டின் ஆர்வத்தை கருதி.... இந்த பதிவிற்கு வரும் அனைத்து கமெண்ட்டுகளும் மட்டறுக்கப்படுகிறது.





For Non Tamil Players:

Dear Friends,

Hunt for Hint is created by Terror Kummi Team, based on the concept of the popular online game Klueless. It is a multilevel game and each level is a web page. The questions will be in the form of picture, text, or some data. All you have to do is to hunt for the hints to cross each level and win.

Our Game designers are available to help you in Game discussion Forum... Link for the forum is available on the game site.... Pls utilize it....

Please read the Rules of the Game and play with a high integrity.

With the above hope, We declaring that the Game to begins now...


 Hunt For Hint



Monday, September 10, 2012

Hunt For Hint 2 - Sample Games & Questions




இணைய நண்பர்களே,

நாம் முன்பே சென்ற பதிவில் சொன்னது போல ஹண்ட் ஃபார் ஹிண்ட் விளையாட்டின் 2 ஆம் பதிப்பு வரும் புதன்கிழமை (12/09/2012) அன்று காலை 9.00 மணிக்கு வெளியாகவுள்ளது....


அது தொடர்பாக சில சாம்பிள் கேள்விகளை கடந்த 5 நாட்களாக பல்வேறு சமூக இணைய தளங்களில் உள்ள எங்கள் பக்கங்களில் வெளியிட்டு வருகிறோம். மேலும் வெறும் கேள்விகளோடு நிற்காமல் அந்த விளையாட்டு எப்படி இருக்கும் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த இதோ சில சாம்பிள் விளையாட்டுக்கள்......


=> சாம்பிள் கேம் 1 - http://testarun1981.blogspot.com/2012/08/click.html
=> சாம்பிள் கேம் 2 - http://contest.terrorkummi.com/samples/welcome.html

இதுவரை கேட்கப்பட்ட சாம்பிள் கேள்விகள்.....

Sample Question 1:
HINT : Roses



Sample Question 2:
Hint: Swiss Champ

Sample Question 3:
Hint: 2nd Medal

Sample Question 4:
Hint: Term

Sample Question 5:
Hint: Outline

Sample Question 6:
Hint: Person


இந்த போட்டியை பற்றிய மேலும் விவரங்கள் அறிய கீழகண்ட சமூக தளங்களில் உள்ள எங்கள் பக்கங்களை பாருங்கள்......

                           Facebook Page - https://www.facebook.com/HuntForHint
                           Facebook Group-https://www.facebook.com/groups/huntforhint
                           Google + - https://plus.google.com/u/0/s/hunt%20for%20hint
                           Twitter - https://twitter.com/HfH_tk

சென்ற வருட கேமை மறுபடி விளையாட http://hfhseason1.terrorkummi.com/Game/Home.aspx

சென்ற வருட போட்டியை பற்றி மேலும் தெரிந்து கொள்ள http://www.terrorkummi.com/search/label/Hunt%20for%20hint


வேட்டைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே.....



Thursday, September 6, 2012

HUNT FOR HINT 2 - புதிர் போட்டி - பரிசு 10,000 ரூபாய்

இணைய நண்பர்களே,

பதிவுலக வரலாற்றில் முதல்முறையாக சென்ற வருடம் டெரர்கும்மி சார்பாக நடந்த ஹண்ட் ஃபார் ஹிண்ட் மெகா புதிர் போட்டி உங்களின் ஆதரவால் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த வருடமும் அப்படியான ஒரு போட்டியை மேலும் சிறப்பாக நடத்த போவதாக முந்தய பதிவுகளில் சொல்லி இருந்தோம்.

 
ஆம், நண்பர்களே உங்கள் புத்தியை தீட்ட நேரம் வந்துவிட்டது.... வரும் புதன் கிழமை (12/09/2012) காலை 9.00 மணிக்கு ஹண்ட் ஃபார் ஹிண்ட் - 2 போட்டி தொடங்கும். மொத்தப்பரிசு ரூ 10,000....


இந்த வருடம் புதியதாக விளையாட போகிறவர்களுக்காக இந்த கேம் பற்றிய சிறிய அறிமுகம்:

என்ன புதிர் போட்டி இது?

1. இந்தூர் ஐஐம் மாணவர்களால் வருடாவருடம் நடத்தப்படும் "KLUELESS" விளையாட்டின் தாக்கத்தால் உருவாக்கப்பட்ட விளையாட்டு இது.

2. நேரடி கேள்விகள் இருக்காது.... படமாகவோ, எழுத்தாகவோ, மவுஸ் கிளிக்காகவோ இப்படி வித்தியாசமாக இருக்கும்

3. ஒவ்வொரு கேள்விக்குமான விடைக்கும் க்ளூ கொடுக்கப்பட்ட்டு இருக்கும். பேஜ் சோர்ஸ், பேஜ் டைட்டில், url name, image name அல்லது வெப்பேஜில் ஏதாவது ஒரு இடத்தில் க்ளூ இருக்கும்... அதை கண்டுபிடித்து  விடை சொல்ல வேண்டும்

4. விடைகளை அதற்கான ஆன்சர் பாக்சிலோ, url name மாற்றுவது போன்றோ, கிளிக் செய்வது போன்றோ இருக்கும்.... 

5. விடையை  கொடுத்தவுடன் அடுத்த பக்கத்திற்கு (லெவலுக்கு)  செல்லும்

6. இப்படி மொத்த லெவல்களை யார் முதலில் முடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்....

7. அனைத்து லெவல்களையும்  முடிப்பவர்களின் பெயர்கள் “HALL OF FAME”லும் “டெரர் கும்மி.காம்”மிலும் வெளியிடப்படும்.

8. போட்டியில் கலந்து கொள்ள எந்த வித நிபந்தனையும் இல்லை. டெரர் கும்மியை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களை தவிர யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்

9. புதிர் முடிக்க டைம் லிமிட் கிடையாது. முதலில் முடிப்பவர்களுக்கு பரிசு.


பரிசு விவரம்:

முதல் பரிசு: 5000 ரூபாய்
இரண்டாம் பரிசு: 3000 ரூபாய்
மூன்றாம் பரிசு: 1000 ரூபாய்
இரண்டு ஆறுதல் பரிசு தலா 500 ரூபாய்.

இந்த போட்டியை பற்றிய மேலும் விரங்கள் அறிய கீழகண்ட சமூக தளங்களில் உள்ள எங்கள் பேஜ்களை பாருங்கள்......


சென்ற வருட கேமை புதியதாக விளையாட http://hfhseason1.terrorkummi.com/Game/Home.aspx

சென்ற வருட போட்டியை பற்றி மேலும் தெரிந்து கொள்ள http://www.terrorkummi.com/search/label/Hunt%20for%20hint



இந்த வருடமும் இந்த விளையாட்டு உங்களுக்கு நல்லதொரு அனுபவத்தை தருமென்று நம்புகிறோம்..



Monday, September 3, 2012

கவுண்டமணி VS வேட்டைக்காரன்


கவுண்டமணி ரிலாக்சாக ரெஸ்ட் எடுத்துகொண்டிருக்கிறார். Hunt For Hint-2 கேம்க்காக இம்சை அரசன் பாபு அவரை சந்திக்க செல்கிறார்.

பாபு: அண்ணே வணக்கம்

கவுண்டமணி:வணக்கம். யாருடா நீ. எருமை மாட்டுக்கு கருப்பு பெயின்ட் அடிச்ச மாதிரி?

பாபு: (மனசுக்குள்:ஆமா அண்ணன் வெள்ளை கலரு). அண்ணே நாங்க Hunt For Hint-2 அடுத்தமாசம் ரிலீஸ் வச்சிருக்கோம். நீங்க தான் வந்து ஓபன் பண்ணி வைக்கணும்

கவுண்டமணி: ஆமா இவரு பலகோடி ரூபாய் செலவழிச்சு கம்பனி தொடங்குறார். அத நான் வந்து ரிலீஸ் பண்ணனும். படவா பிச்சிடுவேன் பிச்சு.

பாபு: அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுன்னே. நாங்கெல்லாம் உங்க ரசிகர்கள். டெரர்கும்மி நண்பர்கள் எல்லாம் சேர்ந்து இந்த கேமை டெவலப் பண்ணிருக்கோம்.

கவுண்டமணி: என்னது கேம் டெவலப் பண்ணீங்களா? ஒட்டகம் மேய்க்கிறவன், தோழிகிட்ட கடலை போடுறவன், FACEBOOK ல ஸ்டேடஸ் மெசேஜ் போட்டு சாவடிக்கிரவன்,மொரீசியஸ் ஹாஸ்பிட்டல்ல டேப்லெட் திருடுறவன் இவனெல்லாம் கேம் டெவலப்பரா? இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலையே நாராயணா?

பாபு: அண்ணே அதுவந்து..

கவுண்டமணி: சரி வந்து தொலையுறேன். நீ அங்க என்னடா பண்ற?

பாபு: அண்ணே நான்தான் பாபு, விலம்பர பிரிவு அதிகாரி, Hunt For Hint-2,டெரர் கும்மி.

கவுண்டமணி: டேய் அது விளமபர பிரிவுடா. இதையே ஒழுங்கா சொல்ல தெரியலை. நீயெல்லாம் விளம்பரம் பண்ணி விளங்கிடும். ராமன் சோலைக்குள் புகுந்தான்னு எழுத சொன்னா ராமன் சேலைக்குள் புகுந்தான் அப்டின்னு எழுதி அடிவாங்கின பயதானடா நீ?

பாபு: ஹிஹி
=========
இடம்: டெரர் கும்மி ஆபீஸ்(இங்க நோ சிரிப்பு. இது சீரியஸ்). கவுண்டமணி உள்ளே நுழைகிறார். அப்போது நாகராஜசோழன் பொன்னாடை போர்த்துகிறார்.

கவுண்டமணி: அட கருமம் பிடிச்சவங்களா. இன்னும் இந்த பழக்கத்தை விடலியாடா நீங்க. இந்த பொன்னாடையை வச்சு நாக்கா வழிக்கிறது. தலையும் துவட்ட முடியாது. போர்வையாவும் யூஸ் பண்ண முடியாது.

நாகராஜசோழன்: இதெல்லாம் பழக்கம்னே.

கவுண்டமணி: ஏன் முன்னாடி ஆட்டுக்கல்ல மாவாட்டி, பத்துகிலோ மீட்டர் நடந்து போனீங்களே. அதையெல்லாம் மாத்துநீங்க. இத மாத்த மாட்டீங்களா? இனிமே பொன்னாடைக்கு பதில் அதுக்குள்ளே காச கொடுங்க. இனி எந்த பன்னாடையாவது பொன்னாடை போர்த்துனா பிச்சிடுவேன் ராஸ்கல்.

அப்போது டெரர் டீ கொண்டுவருகிறார். கவுண்டமணி குடித்துவிட்டு

கவுண்டமணி: கர். தூ. என்ன கருமம்டா இது. கழனித்தண்ணி கூட டேஸ்ட்டா இருக்கும்போல. இது என்ன கருமாந்திரம் டா?

டெரர்: அண்ணே நான் வளர்க்கிற ஒட்டகப் பால்ல போட்டது. ரொம்ப நல்லா இருக்கும்ண்ணே.

கவுண்டமணி: கருமடா சாமி. ஒட்டகப்பால் குடிச்சுத்தான் இவ்ளோ பிரைட்டா இருக்கிறியா. வெளங்கிடும். போடா போயி சுடு தண்ணி எடுத்துட்டு வா. அதையாவது குடிச்சு தொலையுறேன்.

அப்போது செல்வா வாசலையே பார்த்துகொண்டிருக்கிறான்.

கவுண்டமணி: என்னடா ராஜா செய்ற?

செல்வா: இல்ல அங்கிள்.

கவுண்டமணி: அங்கிளா. அடி செருப்பால. எனக்கு கேபிள் சங்கரை விட நாலு வயசு குறைவு. அவரே யூத்னா நான் என்ன அங்கிளா?

செல்வா: சாரின்னா. செந்தில் வராரான்னு பார்க்கிறேன். நீங்க மட்டும் வந்திருக்கீங்க? செந்தில் எங்க?

கவுண்டமணி: டேய் மொக்கை மண்டையா? அவன் என்ன என்னோட லவ்வராடா? கூடியே கூட்டிட்டு போக? நல்லவேளை ஷர்மிளா எங்கன்னு கேக்காம விட்டியே?

செல்வா: ஷர்மிளா யாருன்னே?

கவுண்டமணி: தம்பி நீ இன்னும் வயசுக்கு வரலைன்னு நினைக்கிறேன். போயி உங்க க்ரூப்ல வயசானவங்க யாரையாவது கேட்டு தெரிஞ்சுக்கோ.

அப்போது கவுண்டமணி மாஸ்க் மாட்டி சிவப்பா ஒருத்தர் வரார்.

கவுண்டமணி: யாரடா அவன் செக்க செவேல்னு என்ன மாதிரி?

பாபு: அவுருதாங்க டிகாப்ரியோ

கவுண்டமணி: என்னது டீ காய்ச்சுரவனா? முதல்லே எல்லாம் நீங்க சாராயம்தாண்டா காய்ச்சுனீங்க  ?

பாபு: அது நாங்க இல்லனே. அது நரி. இவருதான் எங்க க்ரூப் சிவப்பு கவுண்டமணி.

கவுண்டமணி: அடன்கொன்னியா இந்த நாட்ல டூப்ளிகேட் தொல்லை தாங்க முடியலை. சிவப்பு MGR , கருப்பு MGR , திருவல்லிக்கேணி அஞ்சாநெஞ்சன், சிவப்பு கவுண்டமணி. டேய் அவனவன் சொந்த பேர்ல அலைங்கடா.

பாபு: அவரு உங்க தீவிர ரசிகன். பேர் கூட உங்க கேரக்டர் பேருதான். பன்னிக்குட்டி ராம்சாமி.

கவுண்டமணி: வாடா ராசா நீதானா அது. ஏற்கனவே சந்தானம்ன்னு ஒருத்தன் என் பேரை சொல்லாமலே என்னை மாதிரி ஆக்ட் பண்றானாம். அடுத்து நீ வேறையா?

பன்னிகுட்டி : அது வந்துங்ண்ணா...

கவுண்டமணி: என்னடா அது வந்து நொந்துன்னு..படுவா... இந்த தமிழ் பட டைரெக்டர்ங்தான் திருட்டு வி.சி.டில இங்க்லீஷ் படத்த பார்த்துட்டு காப்பி அடிக்கிராங்கனா நீங்களுமாடா? அது யார்ரா பின்னாடி பம்மிகிட்டு நிக்கிறது?

பன்னிகுட்டி : அது நம்ம மாலுமி ப்ரபசனல் குடிகாரன்..

கவுண்டமணி: அடங்கொன்னியா... ஒரு மார்க்கமாத்தண்டா பேரு வச்சிக்கிட்டு திரியுறானுங்க. வா ராஜா நீ என்ன ராஜா பண்ணுவ?

மாலுமி: யாராச்சும் ஜெயிச்சு பரிசு வாங்கினா கைதட்டுவேன். யார் ஜெயிச்சாலும் ஜெயிச்சதை கொண்டாட தண்ணி அடிப்பேன்.

கவுண்டமணி: பன்னாடை முழு நேரமும் போதைல தான் இருக்கும் போல. டாஸ்மாக்ல தண்ணி அடிச்சதுக்கு பதில் உங்க வீட்டுக்கு அடி பம்புல தண்ணி அடிச்சு கொடுத்திருந்தா வீட்ல சீக்கிரம் உனக்கு பொண்ணு பார்த்தாவது கட்டி வெச்சிருப்பாங்க.

மாலுமி: நாங்கெல்லாம் பெண்களை ஏறெடுத்து பார்க்காதோர் சங்கம்ல மெம்பெர்.

கவுண்டமணி: கருமாந்திரம் பிடிச்சவனே. ஒரு பிகர் கூட உன்னை ஏறெடுத்து பார்க்கலைங்கிரத எவ்ளோ நாசூக்கா சொல்றான் பாரு. சரி சரி என்ன பண்ணனும் நானு?

மாலுமி: அது வந்து.

டெரர்: நான்தான் அட்மின். நான்தாண்டா சொல்லுவேன்.

கவுண்டமணி: கண்றாவிடா. சொல்லித்தொலை.

டெரர்: அண்ணே இந்த கேம் பேரு Hint For Hunt.

அருண்: தூ பரதேசி. அது Hunt For Hint.

டெரர்: மச்சி எல்லாம் ஒண்ணுதாண்டா. விடு விடு

கவுண்டமணி: ங்கொக்காமக்கா. இதுவே தெரியாமத்தான் பீலா விட்டுக்கிட்டு இருந்தியா. இதுக்கு மாணவன் மாதிரி பேசாம வேடிக்கை மட்டும் பார்க்கலாம்ல? சரி இதுல நான் என்னடா பண்ணனும்.

அருண்: (கேம் ரூல் explain செய்கிறார்)

கவுண்டமணி:(அடப்பாவிகளா அதுக்கு என்னை ஏண்டா கூட்டிட்டு வந்தீங்க. கம்ப்யூட்டர் கருமமெல்லாம் நமக்கு வராதே. செல்போன்ல SMS அனுப்பவே இப்பத்தான கத்துக்கிட்டேன். விவரமா போன் பேசுற மாதிரி எஸ்கேப் ஆகிடலாம்.

ஹெலோ தன்ராஜா. ஆமா நான்தான் பேசுறேன். இங்க ஏதோ கேம் ரிலீசாம். நான்தான் விளையாண்டு ஜெயிக்கனுமாம். டெண்டுல்கரால முடியலையாம், விஸ்வநாதன் ஆனந்தாலையும் முடியலையாம். நம்மளை விளையாட சொல்றாங்கப்பா. இது கூட பரவாயில்லை. விளையாடலாம். அடுத்த சீசன் கேமுக்கு நான்தான் கோடிங் எழுதித்தரனுமாம். இதெல்லாம் நடக்கிற காரியமா. நான் ரொம்ப பிசி. அதுத்த பிளைட்ட ஏறி டெல்லி வரேன். ஆமா பிளைட்லதான் வருவான் இந்த கோட்டைசாமி.(அப்படியே பேசிக்கிட்டே கவுண்டர் எஸ்கேப் ஆகிறார்)

டெரர் கும்மி அதிர்ச்சியாகி நிற்கிறது.

HUNT FOR HIN-2 COMING SOON