அனைவருக்கும் வணக்கம்,
ஒரு இனிமையான பொழுதில் மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. முதல் முறையாக இதைப் படிப்பவர்கள் சிரமம் பாராமல் டெரர் கும்மி விருதுகள் அறிவிப்பு மற்றும் டெரர் கும்மி விருதுகள் போட்டி விதிமுறைகள் ஆகிய இரண்டு பதிவுகளையும் படித்துவிட்டு இதை தொடருங்கள். நாங்கள் ஏற்கனவே அறிவித்தபடி இன்று டிசம்பர் 26-ம் தேதி உங்கள் பதிவுகளை இணைப்பதற்கான அறிவிப்போடு வந்துள்ளோம்.
முதலில் நாங்கள் கொடுக்கும் இணைப்பை தொடுத்து எங்கள் போட்டிக்கான தளத்தை திறந்துகொள்ளுங்கள். அதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து முதலில் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்களுடைய பதிவு ( ரெஜிஸ்டர் ) ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டால் விரைவில் உங்களுக்கு ஆக்டிவேசன் லிங்க் அனுப்பப்படும் என்ற தகவல் ( மெசேஜ் ) வரும். உங்கள் மின்னச்சல் முகவரிக்கு அந்த லிங்க் வரும்வரை தயவுசெய்து காத்திருங்கள். எதற்கும் உங்களுடைய ஸ்பேம் அல்லது ஜங்க் மெயிலையும் சோதனை செய்துகொள்ளுங்கள். மின்னஞ்சலில் ஆக்டிவேசன் லிங்க் கிடைக்கப்பட்டு அதை அழுத்தினால் நீங்கள் இப்போது பதிவுகளை இணைப்பதற்கு தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.
பதிவுகளை இணைப்பதற்கு இரண்டு பிரிவுகளாக வைத்துள்ளோம். பொதுப்பிரிவில் நீங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்ட மூன்று பதிவுகளை மட்டுமே இணைக்கமுடியும். அடுத்து புதுமுக பதிவர்களுக்கான பிரிவு. இதில் அவர்களின் சிறந்த பதிவாகக் கருதும் மூன்று பதிவுகளை இணைக்கலாம். மேலும் புதுமுக பதிவர்கள் மட்டும் பொதுப்பிரிவில் இணைத்த பதிவுகளையும் புதுமுக பிரிவில் இணைக்கலாம். பதிவுகளைஇணைக்க கடைசி தேதி 2012 ஜனவரி 6 என்று விதிமுறைகளில் அறிவித்தோம். பல வாசகர்கள் தொடர்புகொண்டு விடுமுறை நாட்கள் அதிகம் வருவதால் கால அவகாசத்தை நீட்டிக்க சொன்னார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 2012 ஜனவரி 10 வரை நீட்டிக்கப்படுகிறது. அதற்க்கு பிறகு இணைக்கப்படும் பதிவுகள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களுடைய விதிமுறைகள் பற்றிய பதிவை மீண்டும் ஒருமுறை படியுங்கள். இதையும் மீறி ஏதேனும் சந்தேகம் அல்லது பதிவு செய்வதில் ( ரெஜிஸ்டர் ) பதிவுகளை இணைப்பதில் பிரச்னை அல்லது குழப்பம் இருந்தால் தயங்காமல் கருத்துரைகளில் கேளுங்கள் அல்லது contest_2011@terrorkummi.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்புங்கள்.உங்களுக்கு உதவுவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது சுலபமான ஒன்றுதான். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பை பயன்படுத்தி எந்த பிரிவில் உங்கள் பதிவுகளை இணைக்கப்போகிறீர்கள் என்று தேர்வு செய்து உங்கள் பதிவுகளைஇணைக்கவும். இணைப்பதற்கு முன் ஒரு முறைக்கு இரு முறை சரியான பிரிவில் சரியான பதிவை இணைக்கிறீர்களா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள், ஏனென்றால் ஒருமுறை இணைத்த பதிவை மறுமுறை மாற்ற இயலாது. மீண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொண்டு தொடர்ந்து உங்களோடு இணைந்திருக்கிறோம். நன்றி.
65 comments:
All the best to everyone.
என் ஈ மெயில் ஐடி ஏற்றுக்கொள்ள மாட்டேங்குதே. நான் சரியாதான் யூசர் நேம் பாஸ்வேர்ட் டைப் பண்ணினேன்.
//// Lakshmi said...
என் ஈ மெயில் ஐடி ஏற்றுக்கொள்ள மாட்டேங்குதே. நான் சரியாதான் யூசர் நேம் பாஸ்வேர்ட் டைப் பண்ணினேன்.///
ரிஜிஸ்டர் பண்ணிட்டீங்களா?
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!!
வாழ்த்துகள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...டெரர் அங்கத்தினர்கள்..முடிந்தால் மற்றவர் பதிவுக்கும் வரவும் ஹிஹி!- கோத்து விடுவோம்ல...!
>>Login failed. Please try with correct credentials.
sசம்திங்க் ராங்க்
>>விக்கியுலகம் said...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...டெரர் அங்கத்தினர்கள்..முடிந்தால் மற்றவர் பதிவுக்கும் வரவும் ஹிஹி!- கோத்து விடுவோம்ல...!
தம்பி, என்னை மாதிரியே அவங்களையும் நினைச்சுடாதே, எதிர்பதிவு போட்டாங்கன்னா தாங்க மாட்டே, 11 பேரு
// சி.பி.செந்தில்குமார் said...
>>Login failed. Please try with correct credentials.
sசம்திங்க் ராங்க்//
பதிவு சப்மிட் பண்ற பேஜ்ல லாகின்க்கு கீழே Register-னு இருக்கு பாருங்க அத க்ளிக் பண்ணி முதல்ல ரிஜிஸ்டர் பண்ணுங்க.. ரிஜிஸ்டர் செஞ்சவுடனே டெரர் கும்மிலேருந்து ஆக்டிவேசன் மெயில் வரும் அந்த மெயில் வந்தவுடனே லிங்க் க்ளிக் பண்ணி வந்தீங்கன்னா லாகின் செய்யலாம்.... :-)
சி.பி.செந்தில்குமார் said...
>>விக்கியுலகம் said...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...டெரர் அங்கத்தினர்கள்..முடிந்தால் மற்றவர் பதிவுக்கும் வரவும் ஹிஹி!- கோத்து விடுவோம்ல...!
தம்பி, என்னை மாதிரியே அவங்களையும் நினைச்சுடாதே, எதிர்பதிவு போட்டாங்கன்னா தாங்க மாட்டே, 11 பேரு”
>>>>>>>>>>>
உசுப்பி விடும் சிபி அவர்களுக்கு பொங்கல் வைக்கப்படும் ஹிஹி!
வணக்கம் நண்பர்களே,
எல்லோரும் நல்லா இருக்கிறீங்களா?
பன்னிக்குட்டி அண்ணன் எப்படி இருக்காரு?
வித்தியாசமான முயற்சி, இதுவரை நாளும் திரட்டிகள் செய்து வந்ததை தற்போது பதிவர்கள் நீங்கள் கையில் எடுத்திருக்கிறீங்க.
வாழ்த்துக்கள்!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// Lakshmi said...
என் ஈ மெயில் ஐடி ஏற்றுக்கொள்ள மாட்டேங்குதே. நான் சரியாதான் யூசர் நேம் பாஸ்வேர்ட் டைப் பண்ணினேன்.///
ரிஜிஸ்டர் பண்ணிட்டீங்களா?//
ஒரு வேளை டெரர் கும்மி உறுப்பினரளை இணைச்சுக் கொள்ள கூடாதுன்னு யாராச்சும் கோடிங் கொடுத்திருப்பாங்களோ?
அண்ணே மொதல் கமெண்டில் சின்ன எழுத்துப் பிழை, அது தான் நீக்கிட்டு மறுபடியும் போட்டிருக்கேன்.
/// சி.பி.செந்தில்குமார் said...
வாழ்த்துகள்////
சபாஷ் சரியான ஸ்பெல்லிங்..... (யோவ் நெசமாத்தான்யா....)
////விக்கியுலகம் said...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...டெரர் அங்கத்தினர்கள்..முடிந்தால் மற்றவர் பதிவுக்கும் வரவும் ஹிஹி!- கோத்து விடுவோம்ல...!//////
நல்ல வேள தக்காளி கொஞ்சம் புரியும்படியா கமெண்ட் போட்டிருக்காப்ல.........
/////சி.பி.செந்தில்குமார் said...
>>விக்கியுலகம் said...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...டெரர் அங்கத்தினர்கள்..முடிந்தால் மற்றவர் பதிவுக்கும் வரவும் ஹிஹி!- கோத்து விடுவோம்ல...!
தம்பி, என்னை மாதிரியே அவங்களையும் நினைச்சுடாதே, எதிர்பதிவு போட்டாங்கன்னா தாங்க மாட்டே, 11 பேரு//////
அண்ணன் கரெக்டா எடுத்து கொடுக்கிறாரே?
////நிரூபன் said...
வணக்கம் நண்பர்களே,
எல்லோரும் நல்லா இருக்கிறீங்களா?
பன்னிக்குட்டி அண்ணன் எப்படி இருக்காரு?
வித்தியாசமான முயற்சி, இதுவரை நாளும் திரட்டிகள் செய்து வந்ததை தற்போது பதிவர்கள் நீங்கள் கையில் எடுத்திருக்கிறீங்க.
வாழ்த்துக்கள்!/////
வாங்க நிரூபன்...... நான் நல்லாருக்கேன்ம், நீங்க எப்படி இருக்கீங்க.......? வாழ்த்துகளுக்கு நன்றி......!
//// நிரூபன் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// Lakshmi said...
என் ஈ மெயில் ஐடி ஏற்றுக்கொள்ள மாட்டேங்குதே. நான் சரியாதான் யூசர் நேம் பாஸ்வேர்ட் டைப் பண்ணினேன்.///
ரிஜிஸ்டர் பண்ணிட்டீங்களா?//
ஒரு வேளை டெரர் கும்மி உறுப்பினரளை இணைச்சுக் கொள்ள கூடாதுன்னு யாராச்சும் கோடிங் கொடுத்திருப்பாங்களோ?
அண்ணே மொதல் கமெண்டில் சின்ன எழுத்துப் பிழை, அது தான் நீக்கிட்டு மறுபடியும் போட்டிருக்கேன்./////
ஹி....ஹி....!
நான் டெரர் கும்மியில் இருந்து ரிசைன் பண்றேன். இப்போ நான் போட்டியில் கலந்துக்கலாமா? :)
// TERROR-PANDIYAN(VAS) said...
நான் டெரர் கும்மியில் இருந்து ரிசைன் பண்றேன். இப்போ நான் போட்டியில் கலந்துக்கலாமா? :)//
நோ திஸ் இஸ் ரிஜக்டட்......!
>>TERROR-PANDIYAN(VAS) said...
நான் டெரர் கும்மியில் இருந்து ரிசைன் பண்றேன். இப்போ நான் போட்டியில் கலந்துக்கலாமா? :)
இது கலக்கல் கேள்வி, ஆனா டீசண்ட்டா கேட்டா அனுப்ப மாட்டாங்க, ராம்சாமியை கேவலமா திட்டி ஒரு போஸ்ட் பொடுங்க, ஆட்டோமேடிக்கா தூக்கிடுவாங்க . அப்புரம் நீங்க போட்டில கலந்துக்கலாம்
/////சி.பி.செந்தில்குமார் said...
>>TERROR-PANDIYAN(VAS) said...
நான் டெரர் கும்மியில் இருந்து ரிசைன் பண்றேன். இப்போ நான் போட்டியில் கலந்துக்கலாமா? :)
இது கலக்கல் கேள்வி, ஆனா டீசண்ட்டா கேட்டா அனுப்ப மாட்டாங்க, ராம்சாமியை கேவலமா திட்டி ஒரு போஸ்ட் பொடுங்க, ஆட்டோமேடிக்கா தூக்கிடுவாங்க . அப்புரம் நீங்க போட்டில கலந்துக்கலாம்//////
திட்டுறதே கேவலம்தான், அப்புறம் என்ன கேவலமா திட்டுறது? நாம ப்ளாகர் அக்கவுண்ட் தொங்கும் போதே எல்லாத்தையும் அவுத்து வெச்சிட்டுத்தானே வந்திருக்கோம், யாருகிட்ட....... ?
செந்தில் சொன்னதுபோல ரிஜிஸ்டர் பண்ணினதும் ஆக்டிவேட் மயில் வந்தது. ஸப்மிட் பண்ணும் பக்கம் போயி ஸப்மிட் பண்ணினேன் அது சரியா இணைக்கப்பட்டதான்னு தெரியல்லே அதான் இங்கியும் இணைப்பு கொடுதேன் சாரி, சாரி
http://echumi.blogspot.com/2011/10/1960.html ( அனுபவம்)
http://echumi.blogspot.com/2011/01/dhegadhiya.html ( நகைச்சுவை)
http://echumi.blogspot.com/2011/09/blog-post.html ( சிறு கதை)
@Lakshmi
//அது சரியா இணைக்கப்பட்டதான்னு தெரியல்லே//
வணக்கம் அம்மா! உங்களால் மீண்டும் பதிவுகளை இணைக்க முடிகிறதா என்று பார்க்கவும். பதிவுகள் சரியாக இணைக்கபட்டால் பதிவு இனைக்கும் பெட்டி டிஸேபிளாகிவிடும். முடிந்தால் terror.blogger@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
ஆக்டிவேஷன் மெயிலே வரமாட்டேங்குதே? :-(
// யுவகிருஷ்ணா said...
ஆக்டிவேஷன் மெயிலே வரமாட்டேங்குதே? :-(//
ஆக்டிவேசன் லிங்க் மெயில் வரதுக்கு சற்று தாமதமாகலாம்....தயவு செய்து காத்திருக்கவும். மெயில் வந்தவுடன் நீங்க லாகின் செய்து பதிவுகளை இணைக்கலாம் :-)
Aaha...ellarum..inga
irukkeengala.....
Ithu theriyama....
Panni post-la
comment pottutene....
Sari paravaa illai.....
Ellarum anga poi
antha ulaga maha
comment-i
padichikkunga.....
நான் ரிஜிஸ்டர் பண்ணியும் எனக்கு ஆக்டிவெஷன் மெயிலே வல்லியே.
//We have faced an unexpected situation. Please try again!//
:-((((
/////komu said...
நான் ரிஜிஸ்டர் பண்ணியும் எனக்கு ஆக்டிவெஷன் மெயிலே வல்லியே.////
15 நிமிடங்கள் வரை ஆகலாம். சற்றுப் பொறுத்தருள்க.....!
ஒருவழியா சப்மிட் பண்ணிட்டேன். ஒரு பிரச்சினைன்னு சொன்னதுமே எவ்வளவு பேருவந்து ஆலோசனை சொல்லி ஹெல்ப் பன்ரீங்க அனைவருக்கும் நன்றி. சப்மிட் பண்ணும்போது கேட்டகிரில அனுபவமும், கதையும் இடம் மாறிட்டுது.
காலை 11-மணிக்கே ரிஜிஸ்டர் பண்ணிட்டு இவ்வளவு நேரமா வெயிட் பண்ணிபார்த்தேன் சார் இப்ப மணி 1.30- அதான் கேட்டேன்.
வாழ்த்துகள்..
/////யுவகிருஷ்ணா said...
//We have faced an unexpected situation. Please try again!//
:-((((////
பாஸ் உங்கள் பதிவுகள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டு விட்டன
கவிதை category ல
கவிதை இணைச்சாச்சி;
விழிப்புணர்வு category ல
விழிப்புணர்வுக் கவிதை
எழுதலால்லே ?
அனுபவம்/பயணக் கட்டுரை category ல
(காதல்)அனுபவம் கவிதை எழுதலால்லே ?
ஜஸ்ட் இப்பதான் ஆக்டிவேஷன் மெயில் வந்தது என் பதிவுகள் இணைச்சுட்டேன் நன்றி.
////Starjan ( ஸ்டார்ஜன் ) said...
வாழ்த்துகள்..////
நன்றி சார்!
ViswanathV said...
கவிதை category ல
கவிதை இணைச்சாச்சி;
விழிப்புணர்வு category ல
விழிப்புணர்வுக் கவிதை
எழுதலால்லே ?
அனுபவம்/பயணக் கட்டுரை category ல
(காதல்)அனுபவம் கவிதை எழுதலால்லே //
மன்னிக்கவும்.. கவிதை என்றாலே அது ஏதாவது கருப்பொருளை கொண்டுதான் இருக்கும்... ஆகவே கவிதையை கவிதைப்பிரிவில் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும். புரிதலுக்கு நன்றி :-)
நானும் பதிவு செய்தேன் வெயிட்டிங் பார் ஆக்டிவேஷன் மெயில்
komu said...
ஜஸ்ட் இப்பதான் ஆக்டிவேஷன் மெயில் வந்தது என் பதிவுகள் இணைச்சுட்டேன் நன்றி//
உங்கள் பொறுமைக்கும் போட்டியில் கலந்து கொண்டமைக்கு நன்றி. :-))
சசிகுமார் said...
நானும் பதிவு செய்தேன் வெயிட்டிங் பார் ஆக்டிவேஷன் மெயில்//
பதிவு செய்தமைக்கு நன்றி.
கொஞ்ச நேரம் காத்திருங்கள் சசி.. கண்டிப்பாக வரும் :-)
நலமா நண்பரே!
அருமையான திட்டத்துடன் வந்து இருக்கின்றீங்க வாழ்த்துக்கள் .
மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தாயிற்று...
காத்திருப்பில் உள்ளது !
மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தாயிற்று...
காத்திருப்பில் உள்ளது !
//மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தாயிற்று...
காத்திருப்பில் உள்ளது !//
பதிவு செய்ததற்கு நன்றி நண்பரே ..சீக்கிரம் எங்களிடம் இருந்து ஆக்டிவேஷன் மெயில் வரும் அது வரை பொருத்து இருங்கள் ..:))
இதுக்குன்னு தனியா பதினோரு பெரும் வந்து பொங்கல் வைப்பாங்களோ
//வைகை said...
//ViswanathV said...
கவிதை category ல
கவிதை இணைச்சாச்சி;
விழிப்புணர்வு category ல
விழிப்புணர்வுக் கவிதை
எழுதலால்லே ?
அனுபவம்/பயணக் கட்டுரை category ல
(காதல்)அனுபவம் கவிதை எழுதலால்லே //
//மன்னிக்கவும்.. கவிதை என்றாலே அது ஏதாவது கருப்பொருளை கொண்டுதான் இருக்கும்... ஆகவே கவிதையை கவிதைப்பிரிவில் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும். புரிதலுக்கு நன்றி :-)
So, if i have 200 posts in my blog, where all 200 posts are TAMIL KAVIDHAIs of various categories, so I can take part in only 1 category called KAVIDHAIGAL ???
////ViswanathV said...
//வைகை said...
//ViswanathV said...
கவிதை category ல
கவிதை இணைச்சாச்சி;
விழிப்புணர்வு category ல
விழிப்புணர்வுக் கவிதை
எழுதலால்லே ?
அனுபவம்/பயணக் கட்டுரை category ல
(காதல்)அனுபவம் கவிதை எழுதலால்லே //
//மன்னிக்கவும்.. கவிதை என்றாலே அது ஏதாவது கருப்பொருளை கொண்டுதான் இருக்கும்... ஆகவே கவிதையை கவிதைப்பிரிவில் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும். புரிதலுக்கு நன்றி :-)
So, if i have 200 posts in my blog, where all 200 posts are TAMIL KAVIDHAIs of various categories, so I can take part in only 1 category called KAVIDHAIGAL ???/////
ஆம் நண்பரே, நீங்கள் எப்பொருளில் எழுதி இருந்தாலும் கவிதை கவிதையாகத்தான் எடுத்துக் கொள்ளப்படும். ஆகவே நீங்கள் கவிதையை கவிதை பிரிவிலேயே இணைக்கவும்.
புரிதலுக்கு நன்றி!
பதிவுலகம் இதுவரை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த,டெரர்கும்மி விருதுகள்.இனிதே துவக்கப்பட்டுள்ளன.பதிவர்களே முந்துங்கள்.
சலுகை அறிவிக்கப்பட்ட நாள் வரை மட்டுமே.
போனா வராது.
காலம் போனா கிடைக்காது.
இன்றே பதிவுகளை இணையுங்கள்.
புதுமுகப்பதிவருக்கான பதிவுகள் சமர்ப்பிக்கும் option வரவில்லை.
மூன்று பதிவுகளை சமர்ப்பிக்கும்படிதான் லின்க்கில் வருகிறது.
கோகுல் said...
புதுமுகப்பதிவருக்கான பதிவுகள் சமர்ப்பிக்கும் option வரவில்லை.
மூன்று பதிவுகளை சமர்ப்பிக்கும்படிதான் லின்க்கில் வருகிறது...
வாங்க கோகுல் ...
மூன்று பிரிவுகளுக்கு உண்டான option க்கு கீழே உள்ள ஏரோவை கிளிக் பண்ணுங்க புதிய பதிவருக்கு உண்டான option இருக்கும்
தினேஷ்குமார் said...
கோகுல் said...
புதுமுகப்பதிவருக்கான பதிவுகள் சமர்ப்பிக்கும் option வரவில்லை.
மூன்று பதிவுகளை சமர்ப்பிக்கும்படிதான் லின்க்கில் வருகிறது...
வாங்க கோகுல் ...
மூன்று பிரிவுகளுக்கு உண்டான option க்கு கீழே உள்ள ஏரோவை கிளிக் பண்ணுங்க புதிய பதிவருக்கு உண்டான option இருக்கும்//
நன்றி!
தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை..
கால் வச்சாச்சுங்கோ.
இந்த நிகழ்வு முடியும் வரைக்கும் பின்னூட்டத்தில் தேவையில்லாத கும்மிகளை தவிர்க்கப் பாருங்க.
Be Serious.
//தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை..//
ஹா ஹா! :) பதிவுகளை இணைத்துவிட்டேன். நன்றி.
We have faced an unexpected situation. Please try again!
என்றே நிறைய முறை வருகிறதே..
////இராஜராஜேஸ்வரி said...
We have faced an unexpected situation. Please try again!
என்றே நிறைய முறை வருகிறதே..////
Refresh செய்து மீண்டும் லாகின் செய்து பார்க்கவும். நன்றி!
நான் மூன்று தலைப்பில் வலைப்பூ எழுதி வருகிரேன். இப்போ போட்டியில் ஒரு வலைப்பூவிலிருந்து மூன்று பிரிவுகளுக்கு பதிவுகள் இணைத்திருக்கேன். மத்த ரெண்டு வலைப்பூவிலிருந்தும் பதிவுகளை போட்டியில் இணைக்கலாமா? ப்ளாக்ஸ்பாட் பேரு சேமா இருக்குமே.?
Lakshmi said...
நான் மூன்று தலைப்பில் வலைப்பூ எழுதி வருகிரேன். இப்போ போட்டியில் ஒரு வலைப்பூவிலிருந்து மூன்று பிரிவுகளுக்கு பதிவுகள் இணைத்திருக்கேன். மத்த ரெண்டு வலைப்பூவிலிருந்தும் பதிவுகளை போட்டியில் இணைக்கலாமா? ப்ளாக்ஸ்பாட் பேரு சேமா இருக்குமே.?/////
வணக்கம் அம்மா,
மன்னிக்கவும்.. விதிமுறை 9 ன் படி, ஒரு நபருக்கு அதிகப்பட்சம் இரண்டு வலைப்பூக்கள் அனுமதிக்கப்படும். அதுவும் மொத்தம் மூன்று பிரிவுகளுக்கு மட்டுமே இரண்டில் இருந்தும் இணைக்கமுடியும். புரிதலுக்கு நன்றி.
தகவலுக்கு நன்றி வைகை
மெயில் எதுவும் வரல்லியே. தலைப்பு மாறிப்போச்சு இல்லியா அதுக்கு/
I also submitted my post. Waiting for Result.
:) :) :)
நானும் இரத்தபூமியில்.
எழுத்துக்களை ஊக்குவிக்கும் உங்கள் முயற்சிக்கு நன்றி !
யோவ் ராம்சாமி, எனக்கு எதிரா சதி நடக்குது
>>We have faced an unexpected situation. Please try again!
ஹி ஹி என்னய்யா இது? 2 டைம் ரி ஃப்ரெஸ் செஞ்சாச்சு
////சி.பி.செந்தில்குமார் said...
யோவ் ராம்சாமி, எனக்கு எதிரா சதி நடக்குது
>>We have faced an unexpected situation. Please try again!
ஹி ஹி என்னய்யா இது? 2 டைம் ரி ஃப்ரெஸ் செஞ்சாச்சு/////
ஹோம் பேஜுக்கு போய் திரும்ப லாகின் பண்ணுங்கண்ணே......
ஹி ஹி சரி ஆகிடுச்சு
Post a Comment