Wednesday, January 4, 2012

டெரர் கும்மி விருதுகள் 2011 - சில அப்டேட்ஸ்.




அனைவருக்கும் வணக்கம்,
டெரர் கும்மி நண்பர்களின் சார்பில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். அனைவருக்கும் கடந்தகால கால கசப்புகள் மறந்து இனிமையான நினைவுகளோடு இருக்க எல்லோரும் வணங்கும் இறைவனை வேண்டிக்கொள்கிறோம். நாங்கள் அறிவித்த டெரர் கும்மி விருதுகள் 2011 க்கு நீங்கள் அளித்துவரும் ஆதரவிற்கு மிகவும் நன்றி. பலரும் தங்கள் படைப்புகளை விருதுகளுக்கு பதிவுசெய்து  வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் எங்கள் நன்றிகள்.

படைப்புகளை இணைக்க இன்னும் குறைந்த அளவே கால அவகாசம் உள்ளது. அதாவது ஜனவரி 10 - ம் தேதி வரை இணைக்கப்படும் பதிவுகள்தான் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகளை இணைக்காதவர்கள் கூடுமானவரை விரைவாக தங்கள் பதிவுகளை இணைக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்வதில் அல்லது பதிவுகளை இணைப்பதில் ஏதேனும் சந்தேகம் அல்லது குழப்பம் இருந்தால் தயங்காமல் எங்களை தொடர்புகொள்ளுங்கள். உங்களுக்கு உதவுவதற்காக காத்திருக்கிறோம். நீங்கள் கருதுரைகளில் கேட்க்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளில் எதில் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்கள்.

இந்த நேரத்தில் எங்கள் டெரர் கும்மி விருதுகள் இணைப்பை தங்கள் முகப்பில் வைத்து எங்களை கௌரவப்படுத்திய யுடான்ஸ் திரட்டி நிர்வாகிகளுக்கு எங்கள் நன்றிகள். மேலும் டெரர் கும்மி விருதினைப்பற்றி தங்கள் வலைப்பதிவில் எழுதிய பல நண்பர்களுக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த நன்றிகள்.  கால அவகாசம் குறைவாக இருப்பதால் இன்னும் இணைக்காமல்  இருக்கும் நண்பர்கள் உடனே தங்கள் பதிவுகளை இணைக்கவும். அப்படி நீங்கள் இணைத்துவிட்டால் உங்கள் நண்பர்களிடமும் சொல்லி அவர்களையும் ஊக்கப்படுத்தவும். நல்லதொரு பொழுதில் மீண்டும் உங்களை சந்திக்கிறோம். நன்றி.
           

    


25 comments:

மனசாட்சி said...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Mohamed Faaique said...

ஒரு கை பாத்துரலாம்...

Lakshmi said...

நான் ஏற்கனவே உங்க கிட்ட மெயிலில் கேட்டிருந்தேன். என் இன்னொரு வலைப்பூவிலிருந்தும் மூன்று பதிவுகள் இணைக்க விருப்பம். ரூல்படி இரண்டு வலைப்பூவிலிருந்து பதிவுகள் இணைக்கலாம்னு சொல்லி இருந்தீங்க. யூசர் ஐடி பாஸ்வேர்ட் கொடுத்ததும் இணைக்கும் பக்கம் ஒப்பன் ஆகுது ஆனா இணைக்கும் இடங்கள் ஓபன் ஆக மாட்டேங்குதுதே.

நிகழ்காலத்தில்... said...

ஆர்வமாக செயல்படும் டெரர் கும்மிக்கும், நேசத்துடன் இதை எல்லோருக்கும் சென்று சேர தன் பங்களிப்பை தரும் யுடான்ஸ் க்கும் வாழ்த்துகள்..

வைகை said...

மனசாட்சி said...
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்//


வாழ்த்துக்களுக்கு நன்றி :-)

வைகை said...

Mohamed Faaique said...
ஒரு கை பாத்துரலாம்...//


ண்ணா... பார்க்குறதுதான் பார்க்கிறீங்க.. ரெண்டு கையா பாருங்ண்ணா... :-))

வைகை said...

Lakshmi said...
நான் ஏற்கனவே உங்க கிட்ட மெயிலில் கேட்டிருந்தேன். என் இன்னொரு வலைப்பூவிலிருந்தும் மூன்று பதிவுகள் இணைக்க விருப்பம். ரூல்படி இரண்டு வலைப்பூவிலிருந்து பதிவுகள் இணைக்கலாம்னு சொல்லி இருந்தீங்க. யூசர் ஐடி பாஸ்வேர்ட் கொடுத்ததும் இணைக்கும் பக்கம் ஒப்பன் ஆகுது ஆனா இணைக்கும் இடங்கள் ஓபன் ஆக மாட்டேங்குதுதே
/////


வணக்கம்,
மன்னிக்கணும் தவறாக புரிந்துகொண்டீர்கள் என்று நினைக்கிறோம். இணைக்கும் மூன்று பதிவுகளை இரண்டு வலைப்பூவில் இருந்து இணைக்கலாம் என்று சொல்லியிருக்கிறோம். அதாவது ஒரு பதிவை ஒரு வலைப்பூவில் இருந்தும் மற்ற இரண்டு பதிவுகளை உங்கள் இன்னொரு வலைப்பூவில் இருந்தும் இணைக்கலாம். ஒவ்வொரு வலைப்பூவில் இருந்தும் மூன்று பதிவுகள் இணைக்க முடியாது. இதைப்பற்றி ஏற்கனவே தங்களுக்கு மின்னஞ்சலில் சொல்லியிருக்கிறோம். சிரமத்திற்கு மன்னிக்கவும். புரிதலுக்கு நன்றி.

வைகை said...

நிகழ்காலத்தில்... said...
ஆர்வமாக செயல்படும் டெரர் கும்மிக்கும், நேசத்துடன் இதை எல்லோருக்கும் சென்று சேர தன் பங்களிப்பை தரும் யுடான்ஸ் க்கும் வாழ்த்துகள்..////



நன்றி.. உங்களைப்போன்றவர்களின் ஊக்கம் எங்களை மேலும் உற்சாகப்படுத்தும் :-))

விக்கியுலகம் said...

வாழ்த்துக்கள் அனைவருக்கும்!

இராஜராஜேஸ்வரி said...

"டெரர் கும்மி விருதுகள் 2011 - சில அப்டேட்ஸ்."

சிரத்தையான பணிக்குப் பாராட்டுக்கள்..

Yoga.S.FR said...

வணக்கம் டெரர் கும்மி மெம்பர்ஸ்!மீண்டும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.பதிவர்கள் கவனமெடுப்பார்கள் என்று நம்புகிறேன்!வாழ்த்துக்கள்!!!!

நிரூபன் said...

வணக்கம் நண்பர்களே,
பதிவர்களுக்கு நினைவூட்டலாய் ஒரு பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க. நன்றி நண்பா.

MANO நாஞ்சில் மனோ said...

நான் ஏற்கனவே அனுப்பியாச்சு ஹி ஹி உடனே பணத்தை அனுப்புங்க...

------தகவலுக்கு நன்றி------

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்தியவர்களுக்கு நன்றி.... பதிவுகளை இணைக்க விரும்புபவர்கள் விரைவாக இணைத்திடுங்கள்!

! சிவகுமார் ! said...

பதிவு முழுக்க ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. அதில் ஒரு சந்தேகம். அனுபவம் எனும் தலைப்பில் எழுதுகையில்:

"அவன் என்னை பைக்ல கூட்டிட்டு போனான்" என்று என் நண்பன் கூறினான்.

பேசியதை அப்படியே பதிவிடுகையில் அதையும் தமிழ்ப்படுத்த வேண்டுமா? விளக்கம் தர கேட்டுக்கொள்கிறேன்.

! சிவகுமார் ! said...

அது போல கிரிக்கெட் மாதிரியான ஆங்கில சொற்கைளையும் தமிழ்ப்படுத்தியே எழுத வேண்டுமா?

ஜோதிஜி திருப்பூர் said...

ம்

துஷ்யந்தன் said...

தகவலுக்கு நன்றி

Lakshmi said...

நான் தான் தவறாக புரிந்து கொண்டிருக்கேன் சாரி. தெளிவு படுத்தியமைக்கு நன்றி.

K.s.s.Rajh said...

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நான் இணைத்துவிட்டேன்

வைகை said...

சிவகுமார் ! said...
பதிவு முழுக்க ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. அதில் ஒரு சந்தேகம். அனுபவம் எனும் தலைப்பில் எழுதுகையில்:

"அவன் என்னை பைக்ல கூட்டிட்டு போனான்" என்று என் நண்பன் கூறினான்.

பேசியதை அப்படியே பதிவிடுகையில் அதையும் தமிழ்ப்படுத்த வேண்டுமா? விளக்கம் தர கேட்டுக்கொள்கிறேன்//


கண்டிப்பாக அப்படி இல்லை சிவா. நடைமுறையில் நான் அன்றாடம் பயன்படுத்தும் சில ஆங்கில சொற்களை தவிர்க்கமுடியாது. தாராளமாக பதிவுகளில் அந்த வார்த்தை இருக்கலாம்.

வைகை said...

சிவகுமார் ! said...
அது போல கிரிக்கெட் மாதிரியான ஆங்கில சொற்கைளையும் தமிழ்ப்படுத்தியே எழுத வேண்டுமா?//


அப்படி தேவை இல்லை.

! சிவகுமார் ! said...

நன்றி வைகை.

டிராகன் said...

வாழ்த்துக்கள் ..,மச்சிஸ் ..,

ஹுஸைனம்மா said...
This comment has been removed by the author.