Thursday, December 8, 2011

சில கீச்சுகள்!

எனது சில டிவிட்டுகள் உங்களுக்காக :))


*.எனக்கு விக்கல் வரும்போதெல்லாம் எனது நண்பர்கள் நீ சிறந்த அறிவாளி என்பார்கள். உடனே விக்கல் நின்றுவிடுகிறது!

*.துவைத்து வைத்திருக்கும் பேன்ட்டில் ஜிப் போடவில்லை என்று சுட்டிக்காட்டி சிரித்துக்கொண்டிருக்காதீர்கள்!

*.யாரையும் சாதாரணமாக எடை போட வேண்டாம். தராசைப் பயன்படுத்துங்கள்!

*.கோபத்துடன் பிள்ளையார் முன் வந்த எலி கேட்டது “யாரைக் கேட்டு என்னை உமது வாகனமாக்கினீர்? “ நீண்ட யோசனைக்குப் பின் சொன்னார் “மறந்துட்டேன்!”

*.கிணறு ஒன்று செத்துப்போய்விட்டது. அதை எப்படிப் புதைப்பது ?

*.யானை ஒன்றை கனவில் பார்த்தேன்.கருப்பாகவும் 4 கால்கள் ஒரு வாலுடனும் இருந்தது.தும்பிக்கை எங்கே என்றேன்.எருமைக்கு எதற்குத் தும்பிக்கை என்றது!

*.திரியில் தீயை வைத்தும் வெடிக்காமல் உறங்கிக் கொண்டிருக்கிறது பட்டாசு. முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பிவிடப் போகிறேன்!

*.போலீஸ்காரர் வீட்டில் திருடுபவர் சிறந்த திருடரல்ல. இன்னொரு சிறந்த திருடன் வீட்டில் திருடுபவனே மிகச் சிறந்த திருடனாவான்!


*.வயிற்றுவலி என்று மாத்திரை ஒன்றை விழுங்கினேன்.உள்ளே சுற்றி பார்த்துவிட்டு இருட்டென்று வெளியே வந்துவிட்டது. அதை வாந்தி என்கின்றனர் மூடர்கள்!

*.நிலா என்னை முறைத்துக்கொண்டேயிருக்கிறதென கடவுளிடம் முறையிட்டேன். அதிகமாக மிரட்டிவிட்டார் போலும் நாளுக்கு நாள் இளைத்துக்கொண்டே போகிறது!

*.தலை முழு சொட்டையாக இருப்பவர் மொட்டை அடிக்கிறேன் என்று வேண்டியதை நம்பிக்கொண்டு வரம் தருவது கடவுளின் அறியாமையன்றி வேறென்ன?

*.மிகச் சிரமப்பட்டு புள்ளியே வைக்காமல் ஒரு கோலம் வரைந்தேன். “ ரொம்ப அழகா இருக்கு, எத்தன புள்ளி கோலம்? “ என்று கேட்கிறார்கள்!

*.தோல்விகளே வெற்றிகளின் படிக்கட்டுகளாம். படிக்கட்டுகள் யாருக்கு வேண்டும்? எனக்கு லிஃப்ட்டிற்கான வழி சொல்லுங்கள்!

*.சேற்றில் விழுந்த என் நிழல் குளிக்காமலே வீட்டிற்குள் வந்துவிட்டது. விரட்டினேன் வெளியேற் மறுத்தது.விளக்கை அணைத்ததால் பயத்தில் ஓடிவிட்டது!

*.சத்தமில்லாமல் சுடவேண்டுமென்பதற்காய் சைலென்சர் துப்பாக்கி கொடுத்தார்கள். “டாய்ய்ய்” என்று கத்திக்கொண்டே துப்பாக்கியை எடுத்தார் வில்லன்!

*.நல்லவேளையாக என் வலது கையில் ஒரு மச்சம் இருக்கிறது. இல்லையென்றால் கண்ணாடியில் தெரியும் எனது உருவத்தை அடையாளம் தெரியாமல் குழம்பியிருப்பேன்!

*.என் மூளையைக் குழப்பி விடுவதாக எனக்கும் என் நண்பனுக்கும் ஒரு பந்தயம். நிச்சயம் வெற்றி எனக்கே. இல்லாத ஒன்றை அவனால் எப்படிக் குழப்ப முடியும்?

*.அவ்வளவு பெரிய வீட்டையே சுத்தம் செய்துவிடுகிறது என்று உங்கள் உடலை விளக்குமாரால் சுத்தம் செய்ய நினைத்தால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை!

*.பொன் நகையை விட புன்னகை சிறந்தது என்பதற்காக நகை அடகு கடையில் இளித்துவிட்டுப் பணம் கேட்டால் உடனே உங்கள் மூக்கில் தக்காளிச் சட்னி வரலாம்!

*.தூக்கம் வரவில்லை என்பதற்காக தூக்க மாத்திரைகளை விழுங்கினேன், உள்ளே சென்ற தூக்க மாத்திரைகள் தூங்கிவிட்டன போலும்; எனக்கு தூக்கமே வரவில்லை!

*.பயமாயிருக்கிறதென்று கதவு, ஜன்னல்களை மூடி வைத்திருந்தேன். வெளியில் செல்ல வழியில்லாமல் என்னுடனே தங்கிவிட்டது பயம்!

*.இறந்தவரை எழுப்பும் மருந்தொன்று கண்டுபிடித்துள்ளேன்.உங்களை வைத்துதான் சோதனை செய்யவேண்டும்!உதவ முடியுமா? தோல்வியடைந்தால் நான் உங்கள் அடிமை!

*.எனது கவிதை ஒன்றை பக்கத்துவீட்டு பாட்டியிடம் படித்துக்காட்டினேன்.அருமை என்று பாரட்டினார்கள்.அவர்களுக்கு காது கேட்காதென்பதை நம்பமுடியவில்லை!

43 comments:

கடைக்குட்டி said...

:) kadaisi keechu nach :)

all selvu touch :)

NAAI-NAKKS said...

LOL

NAAI-NAKKS said...

அங்க தான் கொல்லுரீங்கன்னா ....
இங்குமா..????

கோமாளி செல்வா said...

@ கடைக்குட்டி :

நன்றி மச்சி :)))))))

கோமாளி செல்வா said...

@ NAAI NAKKS ;)))))

NAAI-NAKKS said...

இந்த செல்வா-வை ...யாரும் இல்லாத
காட்டுல கொண்டு போய் விடுங்கப்பா ....மிருகத்து கிட்ட பேசிக்கிட்டு இருக்கட்டும் ....
(காடு அழிஞ்சா செல்வதன் பொறுப்பு )

அருண் பிரசாத் said...

@நாய் நக்ஸ்
//(காடு அழிஞ்சா செல்வதன் பொறுப்பு )//
மிருகங்கள் அழிஞ்சிட்டா?

ஆகாயமனிதன்.. said...

அனைத்துமே ரசிக்கக் கூடியவை...
சிந்திகவும் தான்:)

ஜீ... said...

சூப்பர் பாஸ்! இடையிடையே சிக்சர்!
குறிப்பா பாட்டியிடம் சொன்ன கவிதை, இறந்தவரை எழுப்பும் மருந்து!

சிலது கவித கவித .... (உ -ம்) நிலா!

குளிக்காமலே வீட்டிற்குள் வந்துவிட்டது..
சேற்றில் விழுந்த
என் நிழல்!

- ஹைக்கூ!! :-)

எஸ்.கே said...

கீசிட்டீங்க!:-)

மாலுமி said...

/// *.வயிற்றுவலி என்று மாத்திரை ஒன்றை விழுங்கினேன்.உள்ளே சுற்றி பார்த்துவிட்டு இருட்டென்று வெளியே வந்துவிட்டது. அதை வாந்தி என்கின்றனர் மூடர்கள்! ///
அப்போ சரக்கு அடிச்சு வாந்தி எடுக்கறது என்னனு சொல்லுவ ???

Sen22 said...

கீச்சுக்கள் அனைத்தும் செம..

பகிர்வுக்கு நன்றி.. :)

Rathnavel said...

அருமை.

Mohamed Faaique said...

செம மொக்கைங்கோ!!!!

நானும் சிலதை சுட்டுட்டேன்...

Mohamed Faaique said...

///போலீஸ்காரர் வீட்டில் திருடுபவர் சிறந்த திருடரல்ல. இன்னொரு சிறந்த திருடன் வீட்டில் திருடுபவனே மிகச் சிறந்த திருடனாவான்!///

அப்போ போலீஸ் காரர் வீட்டுல திருடுரவருதானே சிறந்த திருடர்..

Mohamed Faaique said...

///கிணறு ஒன்று செத்துப்போய்விட்டது. அதை எப்படிப் புதைப்பது ?///

மண்ணைப் போட்டு....

Mohamed Faaique said...

///மிகச் சிரமப்பட்டு புள்ளியே வைக்காமல் ஒரு கோலம் வரைந்தேன். “ ரொம்ப அழகா இருக்கு, எத்தன புள்ளி கோலம்? “ என்று கேட்கிறார்கள்!///

கேக்குரவங்க “அழகா இருக்கு’னு ஒரு பொய் சொல்லி இருக்காங்கல்ல... நீங்களும் எத்தனை புள்ளி’னு ஒரு பொய் சொல்லுங்களே!!

Mohamed Faaique said...

///தூக்கம் வரவில்லை என்பதற்காக தூக்க மாத்திரைகளை விழுங்கினேன், உள்ளே சென்ற தூக்க மாத்திரைகள் தூங்கிவிட்டன போலும்; எனக்கு தூக்கமே வரவில்லை///

இன்னும் சில எக்ஸ்ட்ரா தூக்க மாத்திரைகளை விழுங்கினால் யாராலும் எழுப்ப முடியாதளவு தூக்கம் வரும்... ஹி..ஹி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இன்னும் சில எக்ஸ்ட்ரா தூக்க மாத்திரைகளை விழுங்கினால் யாராலும் எழுப்ப முடியாதளவு தூக்கம் வரும்... ஹி..ஹி...//

க்கும் தூக்கவே ஆள் வரும் :))

வெளங்காதவன் said...

Good....
Nice too.....

வைகை said...

ங்கொய்யால... ஊர்ல அவன் அவனும் கொலை வெறியோடதான் திறியிராய்ங்க போல? :-)

Lakshmi said...

எல்லாமே நல்லா இருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///*.துவைத்து வைத்திருக்கும் பேன்ட்டில் ஜிப் போடவில்லை என்று சுட்டிக்காட்டி சிரித்துக்கொண்டிருக்காதீர்கள்!///

பேண்டை கழட்டாமயே துவைப்பியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//*.கிணறு ஒன்று செத்துப்போய்விட்டது. அதை எப்படிப் புதைப்பது ?//

எரிச்சிடு......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///*.யானை ஒன்றை கனவில் பார்த்தேன்.கருப்பாகவும் 4 கால்கள் ஒரு வாலுடனும் இருந்தது.தும்பிக்கை எங்கே என்றேன்.எருமைக்கு எதற்குத் தும்பிக்கை என்றது!///

அது காண்டாமிருகம், நீ சின்னப் பையன்னு ஏமாத்தி இருக்கு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//*.போலீஸ்காரர் வீட்டில் திருடுபவர் சிறந்த திருடரல்ல. இன்னொரு சிறந்த திருடன் வீட்டில் திருடுபவனே மிகச் சிறந்த திருடனாவான்!//

திருடன்கிட்ட திருடுறதே போலீசுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///*.தலை முழு சொட்டையாக இருப்பவர் மொட்டை அடிக்கிறேன் என்று வேண்டியதை நம்பிக்கொண்டு வரம் தருவது கடவுளின் அறியாமையன்றி வேறென்ன?///

விடு விடு.. அவரு சலூன்கடை காரரா இருக்கும்...

Yoga.S.FR said...

*.வயிற்றுவலி என்று மாத்திரை ஒன்றை விழுங்கினேன்.உள்ளே சுற்றி பார்த்துவிட்டு "இருட்டென்று" வெளியே வந்துவிட்டது. அதை வாந்தி என்கின்றனர் மூடர்கள்!////"விருட்டென்று" வெளியே வந்து விட்டதோ?

Yoga.S.FR said...

*.எனது கவிதை ஒன்றை பக்கத்துவீட்டு பாட்டியிடம் படித்துக்காட்டினேன்."அருமை" என்று பாரட்டினார்கள்.அவர்களுக்கு காது கேட்காதென்பதை நம்பமுடியவில்லை! ///உங்களுக்குத் தான் காது கேட்கவில்லை!"எருமை" என்று சொல்லியிருப்பார்கள்,ஹி!ஹி!ஹி!!!!!

Yoga.S.FR said...

*.என் மூளையைக் குழப்பி விடுவதாக எனக்கும் என் நண்பனுக்கும் ஒரு பந்தயம். நிச்சயம் வெற்றி எனக்கே. இல்லாத ஒன்றை அவனால் எப்படிக் குழப்ப முடியும்?///அதானே?இன்னிக்காச்சும் ஒத்துக்கிட்டீங்களே?

Yoga.S.FR said...

*.துவைத்து வைத்திருக்கும் பேன்ட்டில் ஜிப் போடவில்லை என்று சுட்டிக்காட்டி சிரித்துக்கொண்டிருக்காதீர்கள்!////ஆமாமா,லூசுன்னு கண்டு புடிச்சுடப் போறாங்க!

Yoga.S.FR said...

*.இறந்தவரை எழுப்பும் மருந்தொன்று கண்டுபிடித்துள்ளேன்.உங்களை வைத்துதான் சோதனை செய்யவேண்டும்!உதவ முடியுமா? தோல்வியடைந்தால் நான் உங்கள் அடிமை!////என்கிட்டயா கேட்டீங்க?

ViswanathV said...

//*.பொன் நகையை விட புன்னகை சிறந்தது என்பதற்காக நகை அடகு கடையில் இளித்துவிட்டுப் பணம் கேட்டால் உடனே உங்கள் மூக்கில் தக்காளிச் சட்னி வரலாம்!

next time லேர்ந்து இட்லியையு எடுத்துட்டுப் போண்ணா

ViswanathV said...

//எனக்கு விக்கல் வரும்போதெல்லாம் எனது நண்பர்கள் நீ சிறந்த அறிவாளி என்பார்கள். உடனே விக்கல் நின்றுவிடுகிறது!

உமது நண்பர்களுக்கு நகைச்சுவை உணர்வு அளவுக்கதிகமோ ?

ViswanathV said...

// *.சத்தமில்லாமல் சுடவேண்டுமென்பதற்காய் சைலென்சர் துப்பாக்கி கொடுத்தார்கள். “டாய்ய்ய்” என்று கத்திக்கொண்டே துப்பாக்கியை எடுத்தார் வில்லன்!

சைலென்சர் துப்பாக்கி க்கு தானே, வில்லனுக்கு இல்லியே

ViswanathV said...

// *.நிலா என்னை முறைத்துக்கொண்டேயிருக்கிறதென கடவுளிடம் முறையிட்டேன். அதிகமாக மிரட்டிவிட்டார் போலும் நாளுக்கு நாள் இளைத்துக்கொண்டே போகிறது

வளரும், வளரும்,
குறைந்துக் குறைந்து
கும்மிருட்டாகி ஒருநாள்
பெளர்ணமியைப்
பிரகாசிக்கும்;
மீண்டு(ம்) வந்து
முறைக்கும்;

ViswanathV said...

//*.எனது கவிதை ஒன்றை பக்கத்துவீட்டு பாட்டியிடம் படித்துக்காட்டினேன்.அருமை என்று பாரட்டினார்கள்.அவர்களுக்கு காது கேட்காதென்பதை நம்பமுடியவில்லை!

அவுங்க 'அருமை' ன்னு சொன்னாங்களா, 'கொடுமை' ன்னு சொன்னாங்களா,
உண்மையச் சொல்லுங்க

MANO நாஞ்சில் மனோ said...

காக்டையில் கலக்கல் மக்கா, எங்கே உன் கையை கொண்டா கண்ணுல ஒத்திக்கிறேன்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

எருமையை யானை ஆக்கிய பாவியே...!!

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாமே அருமை. கலக்குறீங்க...
இதையும் படிக்கலாமே:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

மனசாட்சி said...

அடேங்கப்பா எல்லா கீச்சுகளும் செமையாக உள்ளது

துஷ்யந்தன் said...

*.யானை ஒன்றை கனவில் பார்த்தேன்.கருப்பாகவும் 4 கால்கள் ஒரு வாலுடனும் இருந்தது.தும்பிக்கை எங்கே என்றேன்.எருமைக்கு எதற்குத் தும்பிக்கை என்றது!<<<<

ஹா ஹா... அங்கையும் தண்ணியா...... :) :) lol

துஷ்யந்தன் said...

எல்லாமே கலக்கல் பாஸ்