Thursday, October 27, 2011

வேலாயுதம் ஒரு கவிதை!





உன் படத்தை நான் பார்த்த ஒவ்வொரு மணித்துளியும்

மரணப்படுக்கையிலும் மறக்காத கன்றாவியே!

மூன்று மணி நேரங்கள் படம் பார்த்த காலம்தான்

இரண்டு நாட்க்களாய் இதயத்தில் வலிக்குதடா..

பார்க்காமல் சிலநிமிடம்... பயத்தோடு சில நிமிடம்.

கதறி அழுதபடி கண்ணீரில் சிலநிமிடம்...

இரக்கமே இல்லாமல்..

எல்லா சீன்களிலும் டயலாக் பேசியே டரியல் ஆக்கிய சிலநிமிடம்!

உன் படத்தை நான் பார்த்த ஒவ்வொரு மணித்துளியும்

மரணப்படுக்கையிலும் மறக்காத கன்றாவியே!

எது நியாயம் எது பாவம்

உனக்குகூட தெரியவில்லை!

அது படமா இல்ல எனக்கு வச்ச பாம்மா அதுபற்றி அறியவில்லை!

யார் முதலில் யார் முடிவில் ஒருவருக்கும் தெரியவில்லை!

படம் பார்த்த அனைவருக்குமே சங்குதானே?..

ஒருத்தனுக்கும் தோன்றவில்லை..

அச்சம் கலைந்தேன்..ங்கொய்யால..

அடுத்த படமும் நடிப்பேன் என்றாய்..

தூக்கம் கலைந்தேன்..

துயரங்கள் தொடரும் என்றாய்!

படம் பார்த்த காலத்தை கனவாக நினைத்தாலும்..

உன் படம் பார்த்து கடைசியாக அழுத கண்ணீர் கைகளிலே ஒட்டுதடா...

உன் படத்தை நான் பார்த்த ஒவ்வொரு மணித்துளியும்

மரணப்படுக்கையிலும் மறக்காத கன்றாவியே!
 
ஹி..ஹி....வேலாயுதம்  படத்தை பார்த்ததின்  விளைவு இது!
நன்றி - வைரமுத்து (இருவர் பட கவிதை)
 
**********************************************************************************
ஒவ்வொரு விடியலிலும்

உன்னை நோக்கியே என் பிராத்தனை..

என் ஒவ்வொரு பாதச்சுவடும்..

உன்னை நோக்கியே அணிவகுக்கும்..

இரவுவரை உனைப்பார்த்து

உறவாடி வந்தாலும்..

விடிந்ததுமே என் மனது

உன்னை நோக்கி திரும்புவதை...

காதல் என்று சொன்னால் கயவர்கள்

நம்பமாட்டார்கள்!

என் ஆலயத்தின் மூலஸ்தானம்

திறப்பதற்கு காத்திருந்து..உன்

தரிசனத்தை நான் காண- இன்னும்

எத்தனை மணித்துளிகள் காத்திருக்க வைப்பாயோ?

# என்னங்கடா அநியாயம்...10 மணி ஆகப்போகுது...இன்னும் டாஸ்மாக் தொறக்கலை?

**********************************************************************************
ஒவ்வொரு இரவிலும்

உன்னுடைய தாலாட்டு..

ஒவ்வொரு விடியலிலும்

உன்னுடைய உற்சாகம்...

பல இரவுகளின் பொழுதை

உன்னோடு கழித்ததும்..

பல பயணங்களில்

என் மனதில் நீ தவழ்ந்ததும்...

என் தனிமையை பங்கிட்டு

தாரமாய் நின்றதும்..

பல நேரம் ஆனந்தம் 

சில நேரம் அதிர்ச்சி - இப்படி

கலவையான உணர்சிகளை

கண்மூடி ரசித்ததும்...

எப்படி தொலைத்தேன் உன்னை?

இன்றுவரை புரியவில்லை....

இப்போது யாரிடம் நீ?

என் நண்பனைகூட நம்பவில்லை...

இருந்தாலும் இருக்கலாம்!

# என் பாக்கெட் ரேடியோ தொலைஞ்சி போச்சி.. பார்த்தவங்க சொல்லுங்களே?

**********************************************************************************

53 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

First ticket

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

102 vathu pathivukku vazthukkal

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டாகுடரு படத்த பார்க்காதீங்கடான்னா கேட்க மாட்டேங்கிறானுங்களே?

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
First ticket

//

பாவம் தம்பி... யாரு பெத்த புள்ளையோ? :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இரக்கமே இல்லாமல்..
எல்லா சீன்களிலும் டயலாக் பேசியே டரியல் ஆக்கிய சிலநிமிடம்!//////

யோவ் ஒரு படத்துல டயலாக் கூட பேசப்படாதுன்னா அப்புறம் டாகுடர் என்னதான்யா செய்வாரு?

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
102 vathu pathivukku vazthukkal//


வெளங்கும் :)

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
டாகுடரு படத்த பார்க்காதீங்கடான்னா கேட்க மாட்டேங்கிறானுங்களே?//

சொந்த செலவில் சூனியம் :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////படம் பார்த்த அனைவருக்குமே சங்குதானே?..//////

யாரோ சொன்னாங்க, படம் பார்க்கறவங்க 3 மணிநேரத்தோட ஓடிடுறோம், ஆனா அந்த தியேட்டர் ஆப்பரேட்டர் நெலமைய கொஞ்சம் யோசிச்சு பாருங்கய்யான்னு..........

அருண் பிரசாத் said...

மச்சி 3 மனி நேரத்துல உன் நிலைமை இப்படியா ஆகனும்

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///இரக்கமே இல்லாமல்..
எல்லா சீன்களிலும் டயலாக் பேசியே டரியல் ஆக்கிய சிலநிமிடம்!//////

யோவ் ஒரு படத்துல டயலாக் கூட பேசப்படாதுன்னா அப்புறம் டாகுடர் என்னதான்யா செய்வாரு?///

இன்னும் ஒழிக்க வேண்டிய ரவ்டிங்க நிறைய இருக்காங்கல்ல? :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

3 மணிநேரத்தில் சுயநினைவை மறக்கடிக்கும் அற்புத சூத்திரம்......

middleclassmadhavi said...

தலைப்பை படித்து விட்டு டாக்டர் திருந்திட்டாருன்னு நினைச்சேனே! :-))

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////படம் பார்த்த அனைவருக்குமே சங்குதானே?..//////

யாரோ சொன்னாங்க, படம் பார்க்கறவங்க 3 மணிநேரத்தோட ஓடிடுறோம், ஆனா அந்த தியேட்டர் ஆப்பரேட்டர் நெலமைய கொஞ்சம் யோசிச்சு பாருங்கய்யான்னு..........///


அவரு நிறைய பாவம் பண்ணியிருப்பாரு போல? :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சென்னைல உள்ள ரவுடி, மலேசியா ரவுடின்னு இருந்தவரு, இப்பத்தான் பாக்கிஸ்தான் பார்டர் பக்கம் வந்திருக்காரு, இன்னும் போக வேண்டிய தூரம் ரொம்ப இருக்குல்ல........

பெசொவி said...

hihi :))

வைகை said...

அருண் பிரசாத் said...
மச்சி 3 மனி நேரத்துல உன் நிலைமை இப்படியா ஆகனும்//


மச்சி.. இதோட நின்னதேன்னு சந்தோசப் படறேன் :)

அருண் பிரசாத் said...

//சென்னைல உள்ள ரவுடி, மலேசியா ரவுடின்னு இருந்தவரு, இப்பத்தான் பாக்கிஸ்தான் பார்டர் பக்கம் வந்திருக்காரு, இன்னும் போக வேண்டிய தூரம் ரொம்ப இருக்குல்ல......//.

என்னது இது.... அடுத்த கேப்டன் இவர் தான் போல

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
3 மணிநேரத்தில் சுயநினைவை மறக்கடிக்கும் அற்புத சூத்திரம்......//

ஆனா சேதாரம் அதிகம் :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுகளையும் சூப்பரோ சூப்பர்னு சொல்றதுக்கு நாட்ல நிறைய வெந்த மண்டையனுங்க இருக்கானுங்க மச்சி....

வைகை said...

middleclassmadhavi said...
தலைப்பை படித்து விட்டு டாக்டர் திருந்திட்டாருன்னு நினைச்சேனே! :-))//


அவரே நாட்ட திருத்துறதுக்கு முயற்சி பண்றாரு :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அருண் பிரசாத் said...
//சென்னைல உள்ள ரவுடி, மலேசியா ரவுடின்னு இருந்தவரு, இப்பத்தான் பாக்கிஸ்தான் பார்டர் பக்கம் வந்திருக்காரு, இன்னும் போக வேண்டிய தூரம் ரொம்ப இருக்குல்ல......//.

என்னது இது.... அடுத்த கேப்டன் இவர் தான் போல//////

ஆமா அவரும் டாகுடர் இவரும் டாகுடர்..... அதான் அப்படியே பின்பத்துறாரு......

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
சென்னைல உள்ள ரவுடி, மலேசியா ரவுடின்னு இருந்தவரு, இப்பத்தான் பாக்கிஸ்தான் பார்டர் பக்கம் வந்திருக்காரு, இன்னும் போக வேண்டிய தூரம் ரொம்ப இருக்குல்ல........///

எனக்கென்னமோ.. அடுத்து டாக்டர் சைனா உளவாளிய வேட்டையாடுவாருன்னு தோணுது :))

வைகை said...

பெசொவி said...
hihi :))

//


சிரிக்கிறத பார்த்தா அங்கயும் சேதாரம் போல? :))

வைகை said...

அருண் பிரசாத் said...
//சென்னைல உள்ள ரவுடி, மலேசியா ரவுடின்னு இருந்தவரு, இப்பத்தான் பாக்கிஸ்தான் பார்டர் பக்கம் வந்திருக்காரு, இன்னும் போக வேண்டிய தூரம் ரொம்ப இருக்குல்ல......//.

என்னது இது.... அடுத்த கேப்டன் இவர் தான் போல//


ஆமா.. பெரிய டாகூட்டர் அவருன்னா.. சின்ன டாகூட்டர் இவருதானே? :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////# என்னங்கடா அநியாயம்...10 மணி ஆகப்போகுது...இன்னும் டாஸ்மாக் தொறக்கலை?/////

அங்க வழக்கமா ஃபர்ஸ்ட் வாங்குற ரெகுலர் கஸ்டமர் வந்தாத்தான் தொறப்பாங்களாம், அவர் இன்னிக்கு லேட்டு.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////# என் பாக்கெட் ரேடியோ தொலைஞ்சி போச்சி.. பார்த்தவங்க சொல்லுங்களே?////

உன் பாக்கெட்டுக்கு எதுக்கு ரேடியோ?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
இதுகளையும் சூப்பரோ சூப்பர்னு சொல்றதுக்கு நாட்ல நிறைய வெந்த மண்டையனுங்க இருக்கானுங்க மச்சி....//


அப்பிடி சொன்னாலும் பரவாயில்ல மச்சி... ஆனா வாய் கூசாம தமிழில் இதுவரை வராத கதைன்னு சொல்லுவாங்க பாரு.... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
25/////


சிங்கப்பூர்ல உக்காந்து இப்படி நம்பர் போட்டுக்கிட்டு இருக்கியே வெக்கமா இல்ல?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////# என்னங்கடா அநியாயம்...10 மணி ஆகப்போகுது...இன்னும் டாஸ்மாக் தொறக்கலை?/////

அங்க வழக்கமா ஃபர்ஸ்ட் வாங்குற ரெகுலர் கஸ்டமர் வந்தாத்தான் தொறப்பாங்களாம், அவர் இன்னிக்கு லேட்டு.......//


ஓ.. அப்ப மாலுமிதான் போகனுமா? :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
25/////


சிங்கப்பூர்ல உக்காந்து இப்படி நம்பர் போட்டுக்கிட்டு இருக்கியே வெக்கமா இல்ல?

October 27, 2011 11:24 AM
||
Hehe Tamil typing is not there. I'm using iPad

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இதுகளையும் சூப்பரோ சூப்பர்னு சொல்றதுக்கு நாட்ல நிறைய வெந்த மண்டையனுங்க இருக்கானுங்க மச்சி....//


அப்பிடி சொன்னாலும் பரவாயில்ல மச்சி... ஆனா வாய் கூசாம தமிழில் இதுவரை வராத கதைன்னு சொல்லுவாங்க பாரு.... :))//////

அதெல்லாம் எப்பவோ சொல்லிட்டானுகளே.... ஒவ்வொரு படத்துக்கும் அதைத்தானே சொல்றானுங்க.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
25/////


சிங்கப்பூர்ல உக்காந்து இப்படி நம்பர் போட்டுக்கிட்டு இருக்கியே வெக்கமா இல்ல?

October 27, 2011 11:24 AM
||
Hehe Tamil typing is not there. I'm using iPad////////

http://jaffnalibrary.com/tools/Unicode.htm
அங்க போய் தமிங்கிலீஷ்ல டைப் பண்ணி காப்பி பண்ணி போடு.....

கோகுல் said...

வேலாயுதக்காவியம்னு டைட்டில் வைச்சுருக்கலாம்!ஹிஹி

Mohamed Faaique said...

//பார்க்காமல் சிலநிமிடம்... பயத்தோடு சில நிமிடம்.

கதறி அழுதபடி கண்ணீரில் சிலநிமிடம்...///

சூப்பர்....

Unknown said...

ஏன்யா இந்த கொலைவெறி...அவன் நம்ம பயடா அப்படியெல்லாம் பண்ண மாட்டானே ஹிஹி!

மாணவன் said...

ஹிஹி.....

கருப்பசாமி காவியம்... மை ஃபேவரட் போயம்.... :-)

Rajesh said...
This comment has been removed by the author.
Rajesh said...
This comment has been removed by the author.
vivek kayamozhi said...

பாவம் டாக்டர்... அவனவன் என்னென்னவோ பண்றான்...சீனா, சொல்லாமல் விட்ட வரலாற்று நாயகன், தமிழன்,. இவருக்கு இன்னும் அவுங்க அப்பா குச்சி முட்டாயும், குருவி ரொட்டி மாதிரி கதைய தான் வாங்கி கொடுக்கிறார். போட்டிக்கு இப்போ வந்திருக்கும் சூர்யா சம்பள விசயத்தில் முன்னால் போய். விட்டார்,( தான் தேர்ந்தெடுக்கும் வித்யாசமான கதைகளால்....கொடுக்கும் தொடர் ஹிட்டுக்களால்.)
பாடம் கற்றுக்கொள்வாரா விசய்.? இன்னும் எத்தனை நாள் தான் தங்கச்சிய பாத்துக்கிட்டே இருப்பாரு? இவருக்கு ஒரு குடும்பம் வேணாம்? பின்னால வயசான காலத்துல என்ன பண்ணுவாரு பாவம்?.. சீக்கிரம் தங்கச்சிய கட்டி கொடுங்கப்பா, அப்படியே உன் சம்பாத்தியத்த ஊதாரிதனமா செலவு செய்யிற அப்பாவ முதியோர் இல்லத்துல சேர்த்துருங்க....பொழைக்க இதுதான் வழி.....!!!

K.s.s.Rajh said...

என்னது டாகுதரின் புதுப் படம் ரிலீசா........என்னசொலுறீங்க?.......அவரின் வழமையான படம்தானே.

என்னது நாளைக்குத்தான் தீபாளியா....அப்ப நேத்து....இன்னைக்கு பதிவா...யார் போடுறது......பதிவு போடுதல் என்றால் என்ன?....சினிமா என்றால் என்ன.....அதான் பதிவா

(என்ன சம்மந்தமே இல்லாம உளருறேன் என்று பாக்கிறீங்களா?எல்லாம் நேத்து வேலாயுதம் பார்ததினால் வந்த பாதிப்புதான்)

test said...

டைட்டில பாத்துட்டு பயந்திட்டேன்...உங்களுக்கு ஏதும் ஆச்சோன்னு...

ஆனா... செம்ம கலக்கல் பாஸ்! :-)

NaSo said...

:))

Yoga.S. said...

ஐயய்யோ,எம் புள்ளக்கு என்னமோ ஆயிடுச்சே!யாராச்சும் வாங்களேன்,என்னாச்சுன்னு கொஞ்சம் பாருங்களேன்!

நாய் நக்ஸ் said...

இப்ப நான் என்ன செய்யணும்...
படம் பார்த்து உயிரோடு இருப்பவர்கள் ...கூறவும்...

தமிழ்வாசி பிரகாஷ் said...

அய்யாய்யாய்யாஓ...
ஹி..ஹி...
ஏக...கஜி.....
க்குஹ்ன்....
ப்ஜெஎஜ்...
ஈஈக்க்ல்.....
உன்ன்ஹி......
அஜ்ஜாங்...
பிஈன்ன்ஹ்ஹஐஜ்ஜ்.......

இப்படிக்கு.
வேலாயுதம் படம் பார்த்தவர்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

பிரண்ட்ஸ் படத்துல இவர் சிரிச்ச சிரிப்பை பார்த்துட்டே இன்னும் எனக்கு பேதி ஸாரி பீதி போகலை, இது வேறயா...

MANO நாஞ்சில் மனோ said...

வேலாயுதம் டுபுக்கு ஆனது, பன்னிகுட்டிக்கு அவல் ஆகிப்போச்சு...

MANO நாஞ்சில் மனோ said...

வேலாயுதம் படத்தை ரகசியமாய் போயி பார்த்துட்டு வந்து பன்னிகுட்டி ரூம் போட்டு சிரிக்கிறதா உளவுத்துறை ரிப்போர்ட்.

ரைட்டர் நட்சத்திரா said...

வேலாயுதம் கவிதை சூப்பர்ப்

Prakash said...

இவங்கல்லாம் கமெண்ட் போட படம் பாக்றதுனாலேயே விஜய் படம் 10 நாள் ஓடிடுது..

வெளங்காதவன்™ said...

ஹி ஹி ஹி

பிலஹரி:) ) அதிரா said...

2 ஆவதும் 3 ஆவதும் சூப்பர்... மிக அருமையாக இருக்கு படிக்க.

Unknown said...

super vela