Wednesday, October 12, 2011

7 - ம் அறிவு படத்தின் கதை.. முதல் முறையாக உங்களுக்காக!
படத்தின் நாயகன் சூர்யா(நடிகர் சிவகுமாரின் மகன், நடிகை ஜோதிகாவின் கணவன், கார்த்தியின் அண்ணன்) ஒரு சர்கஸ் கம்பனியில் சர்கஸ் கலைஞனாக வேலை பார்க்கிறார். ஒருநாள் விஞ்ஞானி  ஆன சுருதி, நாயகன் சூர்யாவை சந்திக்கிறார்! இருவருக்கும் வேதியியல் மாற்றம் உருவாகி காதல் மலர்கிறது!. பின்னணியில் ஹரிஸ் ஜெயராஜ் வழக்கம் போல ஒரு  ஆங்கில  பாடலை சுட்டு ஒரு பாடல் போடுகிறார்! பாடல் முடிவதற்குள்... அந்த பாடலுக்கு சொந்தக்காரன் சண்டைக்கு வருகிறானோ இல்லையோ...  ஒரு பிரபல அரசியல்வாதி சண்டைக்கு வருகிறார்...

ஏன் சண்டைக்கு வருகிறார்? சூர்யாவுக்கும் அந்த குழப்பம்தான்.. ஆனால்  யாருக்கும்  எந்த  சிரமமும்   இல்லாமல் அந்த அரசியல்வாதியே  காரணத்தை சொல்லுகிறார்... சர்கஸ் என்பது  அவரது கட்சிக்கு  உரிமையான   ஒன்றாம்...  இவர்கள் தாவி தாவி சர்கஸ் பண்ணுவது  அவர்கள் கட்சியை கிண்டல் அடிப்பது போல் உள்ளது என்று சண்டைக்கு வருகிறாராம்... ஒரு வழியாக அவர்களை அடித்து போட்டு  விட்டு  அவர்களை பார்த்து வசனம் பேச ஆரம்பிக்கிறார் சூர்யா!

 அதை கேட்ட அந்த அரசியல்வாதி... சூர்யா காலில் விழுந்து கெஞ்சுகிறார்... " தம்பி.. என்னைய உன் கையாலே கொன்னுவிடு.. இப்பிடி வசனம் பேசியே என்ன சித்திரவதை செய்யாத.. என்று கதறுகிறார்... அதைக்கேட்ட சூர்யாவும்... சரி.. கடைசியா நான் கஷ்டப்பட்டு மனப்பாடம் செஞ்ச நூறு பூக்களின் பேர வரிசையா சொல்றேன்.. அத மட்டும் கேட்டுட்டு போங்கன்னு சொல்றார்... ஆனா அதைகேட்ட மறுவினாடியே.. அந்த அரசியல்வாதியின் உயிர் அநியாயமாக பிரிகிறது!

இதை பார்த்துகொண்டிருந்த ஸ்ருதி அஞ்சு நிமிஷம் பேசியே ஒருத்தன சாகடிக்கிறியே? ஆயுசு முழுக்க உன்கிட்ட நான் எப்பிடி பேச முடியும் என்று கேட்கிறார்... பின்னணியில் ஹரிஸ் ஜெயராஜ்... இந்த சீனுக்கு எந்த ஆல்பத்தில் இருந்து சுடலாம் என்று யோசிக்கும்போதே சூர்யா ஸ்ருதி   இருவருக்கும்  இடையில் கருத்து மோதல் வந்துவிடுகிறது!  அபோது ஸ்ருதி  சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்கிறார்!!

அபோது கோவமான சூர்யா ஸ்ருதியிடம்...   சட்டையை கலட்டி தனது சிக்ஸ் பேக் உடம்பை காண்பிக்கிறார்... ஒன்றும் புரியாமல் ஸ்ருதி சூர்யாவை பார்க்க.. சூர்யா சொல்லுகிறார்... " என்ன பார்க்கிற? ஏன் இப்ப சிக்ஸ் பேக் உடம்ப காண்பிக்கிரேன்னா?.. அந்த கருமம்தான் எனக்கும் தெரியல... ஏதோ.. டைரெக்டர்  சொன்னாரு காண்பிக்கறேன்" என்று சொல்கிறார்! இதுக்கும் நீ மயங்கலைனா.. இன்னைக்கு நைட்டே பவர் ஸ்டாரோட ஆனந்த தொல்லை படத்த பார்த்திட்டு தற்கொலை பண்ணிக்குவேன்னு மிரட்டுகிறார்! மேலும் லத்திகா பட டிவிடியை உனக்கு அனுப்புவேன் என்றும் மிரட்டுகிறார்!

 இதைக்கேட்டு அதிர்ச்சியான ஸ்ருதி... உயிர் பயத்தில் சூர்யாவிடம் மன்னிப்பு கேட்கிறார்!! ஆனால் சூர்யா மன்னிக்க மறுக்கிறார்!! அபோதுதான் திரைக்கதையில் சூடு பிடிக்கிறது. பார்க்கிற நமக்கும் பேதி பிடிக்கிறது... பிறகு சூர்யாவின் இந்த தற்கொலை முயற்சிக்கு தான்தான்  காரணம் என்று நினைக்கும் ஸ்ருதி.. சூர்யாவின் இந்த பிரச்சினைக்கு காலச்சக்கரம் மூலம் முற்றுப்புள்ளி வைக்க முயல்கிறார் விஞ்ஞானியான ஸ்ருதி.  காலச்சக்கரம் மூலம் சூர்யாவை 30 வருடங்கள் பின்னோக்கி பயணம் செய்ய வைக்கிறார்.

அபோது சூர்யா 6 வயது சிறுவனாக நடித்திருக்கிறார். 36 வயதில் நான் உயரம் குறைவாக இருப்பதற்கு 6 வயதில் சரியாக Complan குடிக்காததுதான் காரணம் என கண்டறிகிறார் சூர்யா! மேலும் அப்போது சைனாவில் இருந்ததால்தான் அதை குடிக்கமுடியவில்லை என்று கண்டறிகிறார்! இப்போது திரைக்கதை  சைனாவுக்கு  செல்கிறது... இந்த இடத்தில ஹரிஸ் ஜெயராஜ்.. கவுண்ட மணி  ஏற்க்கனவே பாடி  வைத்த ஒரு சைனீஸ்  பாடலை யாருக்கும்  தெரியாமல்  ரீமிக்ஸ்  பண்ணி போடுகிறார்.. சூர்யாவுக்கு சைனாவில் ஏன் காம்ப்ளான் கிடைக்கவில்லை? திரும்பவும் அதை குடித்து  வளர்கிறாரா?  ஸ்ருதியை கை பிடிக்கிறாரா இல்லையா? என்பதுதான் மீதி கதை! அதை தைரியமிருந்தால் வெண்திரையில் காண்க!

குறிப்பு - இது  பேஸ் புக்கில் இருந்து எடுத்து அதை கொஞ்சம் டெவலப் செய்து இங்கு அளித்திருக்கிறோம்!


64 comments:

கடம்பவன குயில் said...

சூரியாவை நீங்கள் எங்களுக்கு புரியும்படி அறிமுகப்படுத்தியவிதம் அருமை. நான் கூட சூரியான்னா யாருன்னு ஒரு நிமிடம் யோசித்தேன்.

கடம்பவன குயில் said...

நானும் என்னோட ஆறறிவை உபயோகித்து கதை புரியுதான்னு பார்த்தேன். கடைசியில் எனக்கு 5 அறிவாய் என் அறிவு குறைந்ததுதான் மிச்சம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:)

கடம்பவன குயில் said...

//குறிப்பு - இது பேஸ் புக்கில் இருந்து எடுத்து அதை கொஞ்சம் டெவலப் செய்து இங்கு அளித்திருக்கிறோம்! //

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!!

Madhavan Srinivasagopalan said...

எட்டாம் அறிவு -- மிக விரைவில்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// இருவருக்கும் வேதியியல் மாற்றம் உருவாகி காதல் மலர்கிறது!. //////

நல்லவேளை மத்த மாற்றங்கள் வரல.......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வேதியியல்=Physics?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கடம்பவன குயில் said...

சூரியாவை நீங்கள் எங்களுக்கு புரியும்படி அறிமுகப்படுத்தியவிதம் அருமை. நான் கூட சூரியான்னா யாருன்னு ஒரு நிமிடம் யோசித்தேன்.//

சூர்யா தெரியாதா. தேவாவின் நண்பன். தளபதி படம் பார்க்கவும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கடம்பவன குயில் said...

//குறிப்பு - இது பேஸ் புக்கில் இருந்து எடுத்து அதை கொஞ்சம் டெவலப் செய்து இங்கு அளித்திருக்கிறோம்! //

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!!//

நேர்மை கருமை எருமை

அருண் பிரசாத் said...

//சூர்யா தெரியாதா. தேவாவின் நண்பன். தளபதி படம் பார்க்கவும்//

எந்த தேவா மச்சி....

விக்கியுலகம் said...

அண்ணே கொஞ்சம் இங்க போய் பாக்கவும் http://youtu.be/pZSkt3_VTHc

விக்கியுலகம் said...

அண்ணே என்ன கொடுமன்னே இது...http://youtu.be/hxWHKg7MhA0

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கானா பாட்டெல்லாம் பாடுவாரே அவர்தான்

மதுரன் said...

ஹா ஹா கலக்கல் காமடி

வெளங்காதவன் said...

குன்ஜாஞ் குஞ்சாங்!

இந்திரா said...

//நடிகர் சிவகுமாரின் மகன், நடிகை ஜோதிகாவின் கணவன், கார்த்தியின் அண்ணன்//


ஓ அப்படியா?????

பெசொவி said...

//6 வயதில் சரியாக Complan குடிக்காததுதான் காரணம் என கண்டறிகிறார் சூர்யா! //

அப்போ படத்துக்கு ஆறாம் அறிவுன்னு தானே பேர் வச்சிருக்கணும்?

சரியான இடத்தில தப்பான கேள்வியைக் கேட்போர் சங்கம்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//வேதியியல் மாற்றம்
//

எப்ப உயிரியல் மாற்றம்?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்


கிளுகிளு கில்பான்ஸ் கழகம்- துவக்க விழா

MANO நாஞ்சில் மனோ said...

அடாடா இன்னைக்கு சூர்யா'தான் கைமாவா????

MANO நாஞ்சில் மனோ said...

சிக்ஸ் பேக்சை திறந்து காட்டியதும் மயங்கி தரையில் பொத்தென்று விழுந்தார் கமல் மகள்...

MANO நாஞ்சில் மனோ said...

எட்டாம் அறிவு வரும் அன்று சுனாமி தாக்குதல் நிச்சயம்...

MANO நாஞ்சில் மனோ said...

என்ன தமிழ்மணம் அவுட்டா...????

வைகை said...

கடம்பவன குயில் said...
சூரியாவை நீங்கள் எங்களுக்கு புரியும்படி அறிமுகப்படுத்தியவிதம் அருமை. நான் கூட சூரியான்னா யாருன்னு ஒரு நிமிடம் யோசித்தேன்.//

நீங்க இப்படி யோசிக்க கூடாதுன்னுதான் அந்த அறிமுகமே:))

வைகை said...

கடம்பவன குயில் said...
நானும் என்னோட ஆறறிவை உபயோகித்து கதை புரியுதான்னு பார்த்தேன். கடைசியில் எனக்கு 5 அறிவாய் என் அறிவு குறைந்ததுதான் மிச்சம்.//


இன்னும் கொஞ்ச நேரம் ட்ரை பண்ணினா பத்து அறிவா மாறிரும்.. ட்ரை பண்ணுங்க :)

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
:)

///


:-)))))))))))))))))

வைகை said...

கடம்பவன குயில் said...
//குறிப்பு - இது பேஸ் புக்கில் இருந்து எடுத்து அதை கொஞ்சம் டெவலப் செய்து இங்கு அளித்திருக்கிறோம்! //

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!!//

நம்பிக்கை.... நாணயம்.... எல்லாம் சேர்ந்ததுதான் டெரர் கும்மி :)

வைகை said...

Madhavan Srinivasagopalan said...
எட்டாம் அறிவு -- மிக விரைவில்..///

ஆமா... சின்ன டாகூட்டர் நடிப்பில் :))

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// இருவருக்கும் வேதியியல் மாற்றம் உருவாகி காதல் மலர்கிறது!. //////

நல்லவேளை மத்த மாற்றங்கள் வரல.......//

அதை ஒன்று இரண்டு என வரிசைப்படுத்தவும் :))

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வேதியியல்=Physics?//

Nooooo...

Tamil :)

வைகை said...

விக்கியுலகம் said...
அண்ணே கொஞ்சம் இங்க போய் பாக்கவும் http://youtu.be/pZSkt3_VTHc//


தக்காளி.. புரியாம போடறதே பொழப்பா போசுயா உனக்கு :))

வைகை said...

விக்கியுலகம் said...
அண்ணே என்ன கொடுமன்னே இது...http://youtu.be/hxWHKg7MhA0//


தக்காளி.. சொல்லிட்டு போடுயா... எனக்கு இங்க ஒப்பன் ஆகாது :((

வைகை said...

மதுரன் said...
ஹா ஹா கலக்கல் காமடி//


ஹா..ஹா.. நன்றிங்கோ :)

வைகை said...

இந்திரா said...
//நடிகர் சிவகுமாரின் மகன், நடிகை ஜோதிகாவின் கணவன், கார்த்தியின் அண்ணன்//


ஓ அப்படியா?????/////


அப்பிடியான்னா? நீங்க யார நினைசீங்க? :)

வைகை said...

பெசொவி said...
//6 வயதில் சரியாக Complan குடிக்காததுதான் காரணம் என கண்டறிகிறார் சூர்யா! //

அப்போ படத்துக்கு ஆறாம் அறிவுன்னு தானே பேர் வச்சிருக்கணும்?

சரியான இடத்தில தப்பான கேள்வியைக் கேட்போர் சங்கம்///

நீங்க அதை உங்க ஏழாம் அறிவாலதானே கண்டுபிடிச்சீங்க? அதான் :))

தப்பான இடத்தில சரியான கேள்வியை கேட்ப்போர் சங்கம்

வைகை said...

என் ராஜபாட்டை"- ராஜா said...
//வேதியியல் மாற்றம்
//

எப்ப உயிரியல் மாற்றம்?//


பத்து மாசம் கழிச்சு வாங்க.. இருக்கும் :))

வைகை said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
இன்று என் வலையில்


கிளுகிளு கில்பான்ஸ் கழகம்- துவக்க விழா//

அண்ணே.. தமிழ் மணத்திற்கு ஒரு அழைப்பு வச்சிருங்க :))

வைகை said...

MANO நாஞ்சில் மனோ said...
அடாடா இன்னைக்கு சூர்யா'தான் கைமாவா????//


என்னண்னே? ஹோட்டல்ல கேக்குற மாதிரி கேக்குறீங்க? :))

வைகை said...

MANO நாஞ்சில் மனோ said...
சிக்ஸ் பேக்சை திறந்து காட்டியதும் மயங்கி தரையில் பொத்தென்று விழுந்தார் கமல் மகள்...//

ஏண்ணே... குளிக்காம தொறந்து காட்டிட்டாரோ? :))

வைகை said...

MANO நாஞ்சில் மனோ said...
எட்டாம் அறிவு வரும் அன்று சுனாமி தாக்குதல் நிச்சயம்...//


அதுக்குள்ளே பூமா தேவி சிரிச்சிருவா :))

வைகை said...

MANO நாஞ்சில் மனோ said...
என்ன தமிழ்மணம் அவுட்டா...????//


இல்லை... கிக் ஃப்ரம் த டெரர் பிட்ச் :))

Prabu Krishna said...

அண்ணே வேலாயுதம், மயக்கம் என்ன இதெல்லாம் எப்போ?

K.s.s.Rajh said...

ஹா.ஹா.ஹா.ஹா.ஹா.சிரிச்சி சிரிச்சி முடியல.........அப்படியே வேலாயுதம் கதையையும் சொன்னால் இன்னும் பிரமாதமாக இருக்கும்

Saran said...

சொட்ட தனமான விமர்சனம் எழுதிட்டு இதில காமடி வேற.ப்ளாக் எழுத தெரியடி எழுதாத......

வைகை said...

Saran said...
சொட்ட தனமான விமர்சனம் எழுதிட்டு இதில காமடி வேற.ப்ளாக் எழுத தெரியடி எழுதாத.....///

அண்ணே..நீங்க எங்க எர்வாடில இருந்து நேர பஸ் புடிச்சு வர்றீங்களா? இது என்ன விமர்சனம்னு போட்றுக்கோமா? போங்க.. போய் பல்ல வெளக்கிட்டு வாங்க :))

Anonymous said...

செம காமெடி..

Anonymous said...

அண்ணே நீங்க டாக்குடர் ஆளு... வேலாயுதம் படத்துக்கு போட்டியா ஏழாம் அறிவு வர்றதனாலதான் இப்புடி எழுதுனாங்கன்னு சொல்றாங்களே? உண்மையா??

பி.கு: இப்ப எல்லாம் பதிவுலகத்துல அப்புடிதானாம்ண்ணே...

ஏமரா மன்னன் பொன்.செந்தில்குமார் said...

ஆகா அருமையிலும் அருமை....என்ன ஏழாம் அறிவா...மங்குனிக்கு இன்னும் 2 அறிவுகள் தேவையே ஏழாம் அறிவை எட்ட....ஹி..ஹி..ஹி...

http://ponsenthilkumar.blogspot.com/2011/10/blog-post_12.html

சுபத்ரா said...

சூப்பரு :-)

நீச்சல்காரன் said...

உடல் அமைப்புகளை கிண்டல் செய்வது சிலருக்கு நகைச்சுவையாக இருப்பதில்லை என்பதை இங்கு புன்னகையுடன் பதவு செய்து கொள்கிறேன்.

வைகை said...

Prabu Krishna said...
அண்ணே வேலாயுதம், மயக்கம் என்ன இதெல்லாம் எப்போ?///


வேலாயுதம் வந்தாதான் மயக்கம் தன்னால வருமே? :))

வைகை said...

K.s.s.Rajh said...
ஹா.ஹா.ஹா.ஹா.ஹா.சிரிச்சி சிரிச்சி முடியல.........அப்படியே வேலாயுதம் கதையையும் சொன்னால் இன்னும் பிரமாதமாக இருக்கும்//


ஆஹா.. எல்லோரும் ஒரே மாதிரி கொலை வெறியாவுள்ள இருக்கீங்க? :))

வைகை said...

மொக்கராசு மாமா said...
அண்ணே நீங்க டாக்குடர் ஆளு... வேலாயுதம் படத்துக்கு போட்டியா ஏழாம் அறிவு வர்றதனாலதான் இப்புடி எழுதுனாங்கன்னு சொல்றாங்களே? உண்மையா??

பி.கு: இப்ப எல்லாம் பதிவுலகத்துல அப்புடிதானாம்ண்ணே...//


பயபுள்ளைங்க..கோர்த்து விடறதிலே இருக்குதுங்க :))

வைகை said...

ஏமரா மன்னன் பொன்.செந்தில்குமார் said...
ஆகா அருமையிலும் அருமை....என்ன ஏழாம் அறிவா...மங்குனிக்கு இன்னும் 2 அறிவுகள் தேவையே ஏழாம் அறிவை எட்ட....ஹி..ஹி..ஹி...//


அப்ப.. நீங்க அவருக்கு இருக்கிறதா சொல்ற அஞ்சு அறிவே அதிகம்ங்க :))

வைகை said...

சுபத்ரா said...
சூப்பரு :-)//


நன்றிங்க :)

வைகை said...

நீச்சல்காரன் said...
உடல் அமைப்புகளை கிண்டல் செய்வது சிலருக்கு நகைச்சுவையாக இருப்பதில்லை என்பதை இங்கு புன்னகையுடன் பதவு செய்து கொள்கிறேன்//

கண்டிப்பா அண்ணே.. சிலருக்கு இல்லை எங்களுக்கே அதில் உடன்பாடு இல்லை.. நீங்கள் உயரத்தை கிண்டல் செய்ததை சொல்லுகின்றீர்கள் என்று நினைக்கிறேன்... சிங்கம் படபிடிப்பின் போது அவரே வெளிப்படையாக சொன்னது என்றதால் அதை போட்டோம்.. மேலும் அதன் மூலக்கதை பேஸ் புக் தளத்தில் இருந்து எடுத்தோம்... மற்றபடி உயரம் குறைவானவர்களை கிண்டல் செய்யும் நோக்குடன் அதை போடவில்லை.. அதையும் மீறி யாராவது புண் பட்டிருந்தால் எங்களது வருத்தத்தை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்! சுட்டியதற்கு நன்றி :))

Yoga.s.FR said...

குறிப்பு - இது பேஸ் புக்கில் இருந்து எடுத்து அதை கொஞ்சம் டெவலப் செய்து இங்கு அளித்திருக்கிறோம்!////ஓகோ,சிக்ஸ் பேஸ் எங்கிறதால பேஸ்புக்கிலேருந்து சுட்டிருக்காரு போல?ஹா!ஹா!ஹா!

C.P. செந்தில்குமார் said...

எக்ஸ்ட்ரா அறிவு இருந்தாலே பிரச்சனைதான்.

IlayaDhasan said...

தலைவா ,இங்க பாருங்க , மெயின் படம் ...

ஏழாம் அறிவு , இப்ப Online ல் available

Kalakkuravan said...

//பின்னணியில் ஹரிஸ் ஜெயராஜ் வழக்கம் போல ஒரு ஆங்கில பாடலை சுட்டு ஒரு பாடல் போடுகிறார்! பாடல் முடிவதற்குள்... அந்த பாடலுக்கு சொந்தக்காரன் சண்டைக்கு வருகிறானோ இல்லையோ... ஒரு பிரபல அரசியல்வாதி சண்டைக்கு வருகிறார்//

இது ல என் மனச டச் பண்ணிட்டிங்க.....
பட் over all அக parkum bothu மொக்க தாங்க முடியலங்க

இளிச்சவாயன்சுந்த்ரம்.M.A.B.F. said...

ஏன் அப்பு ரொம்ப நாளா கவனிக்கிறேன்,ஆது ஏன் டெரர் கும்மிகாரங்க டாகூடர் விஜய் படத்தயே கலாய்கிரீங்க?இப்படி கலாய்ச்சா அவ்ரு-அதன் டாகூடர்-எற்கனவே பறவை(குருவி)& மீன்(ஸுரா) பேர்ல படமெடுத்து அதுங்கலை படா படுத்தினது போதாதா? அப்புரம் மனுஷன்னு ஒரு படம் நடிச்சி நம்மலயும் ஒரு வழி பன்னிடுவரோன்னு பயமர்க்கப்பு... பார்தத்து செய்ங்க ஐயா.

எஸ் சக்திவேல் said...

>>பின்னணியில் ஹரிஸ் ஜெயராஜ் வழக்கம் போல ஒரு ஆங்கில பாடலை சுட்டு ஒரு பாடல் போடுகிறார்! பாடல் முடிவதற்குள்... அந்த பாடலுக்கு சொந்தக்காரன் சண்டைக்கு வருகிறானோ இல்லையோ... ஒரு பிரபல அரசியல்வாதி சண்டைக்கு வருகிறார்...

ஹா ஹா.

அத்தோடு இது இன்னொரு குளிக்காத ஹீரோ கதையா?

Surya Prakash said...

mudiyala ..... முடியல ........

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் பண்ணிக்குட்டி ராமசாமி,

தாங்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக என்னை தொடர்பு கொள்ளவும் (aashiq.ahamed.14@gmail.com).

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ