Wednesday, October 19, 2011

தமிழ்மணம் பிரச்சனையில் டெரர் கும்மியின் நிலைப்பாடு!


அனைவருக்கும் வணக்கம், 
கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வரும் பிரச்சனைகளைப் பற்றி அனைவருமே அறிவீர்கள்.. அதன் தொடக்கம் எங்களுடைய அந்த பயடேட்டா பதிவு என்பதால் நாங்களும் சில விளக்கங்களை இதன் மூலம் கொடுப்பது அவசியமாகிறது! இதற்காக அந்த பதிவு தெரியாமல் போட்டுவிட்டோம் என்றோ அதில் தமிழ் மண நிர்வாகி திரு. பெயரிலி அவர்கள் போட்ட பின்னூட்டங்கள் ஏற்றுக்கொள்ள கூடியது என்றோ பின்வாங்க வில்லை. அந்த பதிவு தமிழ் மணத்தின் மேல் காழ்ப்புணர்ச்சி கொண்டோ அல்லது வேறு உள்நோக்கத்திலோ வெளியிட வில்லை. மேலும் ஒட்டுமொத்த தமிழ்மணத்தை விட அவரின் கருத்துரைகளையும் எதேச்சாதிகரா போக்கையும்தான் நாங்கள் எதிர்க்கிறோம்..  இதுதான் எங்கள் நிலைப்பாடு.. இதற்கு மேலும் விளக்கங்கள் போதும் போதும் என்ற அளவிற்கு பல இடங்களில் கொடுத்தாகி விட்டது.


பதிவு போட்ட பிறகு தமிழ்மணத்தின் செயல்பாடு எங்களுக்கு பிடிக்கவில்லை அதனால் எங்கள் குழுவில் உள்ள பதினேழு பேரும் அதில் இருந்து விலகுவதாக நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி விலகிக்கொண்டோம். ( கவனிக்கவும்... கடிதம் எழுதி மட்டுமே... எதிர்ப் பதிவு போட்டு அல்ல ) யார் அந்த பதினேழு பேர் என்று தெரிந்து கொள்ள எங்கள் தளத்தில் பார்க்கவும்.

நாங்களாக யாரையும் கட்டாயபடுத்தி தமிழ் மணத்திற்கோ அல்லது திரு.பெயரிலி அவர்களுக்கு எதிராக பதிவு போடச் சொல்லவும் இல்லை தமிழ் மணத்தில் இருந்து விலகும் படி அறிவுறுத்தவும் இல்லை.. அது அவரவர் சொந்த விருப்பங்களின் பேரில் எடுத்த முடிவு. 

இதுவரை தமிழ்மணத்திற்கு எதிராகவும் திரு.பெயரிலிக்கு எதிராகவும் பல பதிவுகள் வந்து விட்டன.. அதில் ஒரு இடத்தில கூட நாங்கள் அவர்களை ஆபாசமாகவோ அல்லது கண்ணியக்குறைவாகவோ பேசவில்லை என்பதை எங்களால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும்.

இஸ்லாமிய நண்பர்கள்  சுட்டி காட்டும் அந்த முகமனை கிண்டல் செய்தது பற்றி அந்த நேரத்தில் எங்களுக்கு தெரியாது.... இன்று வரையிலும் அந்த முகமனை பற்றி எங்களுக்கு சரியான தெரிதல் இல்லை.. அதனாலேயே அதை பற்றி நாங்கள் கருத்து எந்த இடத்திலும் கூறவில்லை... தவறாக இருக்கும் பட்சத்தில் அவர் மன்னிப்பு கேட்ப்பதும் அவரை மன்னிப்பதும் அவர்களது நிலைப்பாடு.. இதில் நாங்கள் கருத்து சொல்ல ஒன்றுமில்லை... ஆனால் ஒன்றை  கூறிக்கொள்கிறோம்.. முகமனையை அவர் கிண்டல் செய்ய எங்கள் பதிவுதான் வாய்ப்பாக அமைந்தது என்று நினைத்தால் முஸ்லிம் சகோதரர்களிடம் வருத்தம் தெரிவிக்க எந்த ஈகோவும் எங்களுக்கு இல்லை.. சகோதரர்களே நீங்கள் அப்பிடி யாரேனும் நினைத்தால் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்!

ஆனால்.. இந்த பிரச்சனையில் குளிர் காய நினைக்கும் சிலர் நாட்டாமை பண்ண வருவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வில்லை.. மேலும் எங்களை ஏதோ மத உணர்வோடும் ஜாதி உணர்வோடும் சம்பந்தபடுத்த சிலர் ஆசைப்பட்டு பின்னூட்டம் இடுவது தெரிகிறது.. இதன் மூலம் நாங்கள் சொல்வது நாங்கள் எந்த மதத்துக்கோ ஜாதிகோ எதிரானவர்கள் இல்லை..அது எங்களுக்கு தேவையும் இல்லை.. எங்கள் குழுமத்தில் பதினேழு பேர் இருக்கிறோம்.. இதுவரை யார் எந்த மதம் எந்த ஜாதி என்று தெரியாமல்தான் பழகுகின்றோம்... எங்களுடைய சொந்த பதிவில் கூட மத ஜாதி உணர்வை தூண்டும் விதத்தில் ஏதேனும் உங்களால் சுட்டி காட்ட இயலுமா? இதை சவாலாகவே கூறுகிறோம்.. அப்படி சுட்டிகாட்டுங்கள்.. இப்போதே அந்த கருத்துரையை நீக்கச் சொல்லி, வருத்தம் தெரிவிக்க சொல்கிறோம். அது தப்பு மாதிரி தெரியுது ஆனா தப்பு இல்லையென்று நாங்கள் நியாயப்படுத்திச் சொல்ல மாட்டோம்!

இதற்கு மேலும் அந்த பயடேட்டா பதிவில் எங்களிடம் பதிலை எதிர்பார்த்தோ அல்லது விவாத நோக்கிலோ யாரும் கருத்துரை இடவேண்டாம். அதே போல் தூங்கி எழுந்த சிலர் நாட்டாமை பண்ணுகிறேன் என்று விடும் பதிவிலோ பஸ்சிலோ எங்கள் பதிலை எதிர்பார்க்கவேண்டாம்! போதுமான பதில்களை கொடுத்தாகி விட்டது... தமிழ்மண நிர்வாகிகளுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் பல வேலைகள் உள்ளது.

தமிழ்மணத்தை பற்றி இனி நாங்கள் கருத்து எதுவும் சொல்லப் போவதும் இல்லை.. தேவையுமில்லை. நாங்கள் விலகி விட்டோம் இனியும் இணைவதாக இல்லை.. ஆகவே இதன் மூலம் நாங்கள் சொல்வது இதுவரை அவர்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. இனிமேலும் அவர்களின் புரிந்துணர்வுடன் கூடிய முன்னேற்றங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!

இந்த பிரச்சனைக்கு பிறகு இதுவரை வெளிவந்த பதிவுகளில் எங்கள் குழுமத்தை சேர்ந்தவர்கள் இட்ட கருத்துரைகளை நாங்கள் எங்கள் குழுமத்தின் கருத்தாகவே ஏற்றுக்கொள்கிறோம்.. அதில் ஏதேனும் தவறு இருந்தால் சொல்லுங்கள் அதற்காக ஏதோ ஒரு பதிவில் பகிர்வுக்கு நன்றி என்று போட்டால் மதத் துவேசம் என்று சொல்ல வேண்டாம்..  இனி எங்கள் உறுப்பினர்கள் சொல்லும் கருத்துரைகள் அவரவர் சொந்த கருத்துரைகளே.. அதை டெரர் கும்மியோடு சம்பந்தப்படுத்த வேண்டாம் ( நன்றி - தமிழ்மணம் ) ஒருவருக்கு சொந்த கருத்துக்கள் இருக்க கூடாதா என்ன?

அந்த பதிவில் வந்த ஆபாச கருத்துரைகளை கண்டித்தும்...  இதுவரை எங்களோடு துணையாக இருந்து... இன்றும் இருந்துவரும் நண்பர்களுக்கு எங்கள் நன்றிகளையும் சொல்லிக்கொள்கிறோம்!

இந்த விளக்கம் கூட இது அடிப்படை பிரச்சனையில் இருந்து திசைமாறி மத ரீதியாக போய்விட்டதாலும் அதை வைத்து நாட்டமை செய்ய சிலர்ஆசைப்பட்டதாலுமே அவசியமாகி இருக்கிறது.. மற்றபடி நாங்கள் என்றுமே தவறென்றால் தட்டி கேட்க தயங்க மாட்டோம் என்பதையும் இதன்மூலம் சொல்லிக்கொள்கிறோம்! நன்றி.. டாட். :)


டெரர்கும்மி நண்பர்கள்

115 comments:

வெளங்காதவன்™ said...

இந்த நிலைப்பாட்டை கூறியது சரிதான் என்றே நினைக்கிறேன்...

முத்தரசு said...

உண்மை தான் திசை மாறி போயிடுச்சி...ரைட்டு
சரி நீங்க சொல்றதை தெளிவா சொல்லிடிக.

Mohamed Faaique said...

நீங்கள் விளக்கமளித்திருக்க வேண்டிய தேவை இல்லை. இருந்தாலும், உங்க விளக்கப் பதிவிற்கு எம் நன்றிகள்...

Anonymous said...

ரைட்டு...

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

பிரச்சினை திசை மாறி திரிக்கப்ப்படுமிடத்து தன்னிலை விளக்கம் அவசியமாகிற்று. வீண் வம்பளப்பவர்களுக்கு பதில் கூறா கொள்கை உங்கள் கண்ணியத்திற்கு சான்று.

செங்கோவி said...

தெளிவான நிலைப்பாடு..விளக்கத்திற்கு நன்றி!

நானும் இங்கே விளக்கம் போடலாமா?

வைகை said...

செங்கோவி said...
தெளிவான நிலைப்பாடு..விளக்கத்திற்கு நன்றி!

நானும் இங்கே விளக்கம் போடலாமா?////

தாராளமா போடுங்க பாஸ் :))

வெளங்காதவன்™ said...

///வைகை said...

செங்கோவி said...
தெளிவான நிலைப்பாடு..விளக்கத்திற்கு நன்றி!

நானும் இங்கே விளக்கம் போடலாமா?////

தாராளமா போடுங்க பாஸ் :))////

சர்ச்சை வராத மாதிரி போட்டா சந்தோஷம்தான்.....

#இந்தப் பிரச்சினைய இப்படியே விட்டுட்டு புள்ள குட்டிங்கள படிக்கவைக்கலாம்-ங்கறது ஏன் தாழ்மையான கருத்து.

துணிந்து சொல்பவன் said...

//நாங்களாக யாரையும் கட்டாயபடுத்தி தமிழ் மணத்திற்கோ அல்லது திரு.பெயரிலி அவர்களுக்கு எதிராக பதிவு போடச் சொல்லவும் இல்லை தமிழ் மணத்தில் இருந்து விலகும் படி அறிவுறுத்தவும் இல்லை.. அது அவரவர் சொந்த விருப்பங்களின் பேரில் எடுத்த முடிவு.

இதுவரை தமிழ்மணத்திற்கு எதிராகவும் திரு.பெயரிலிக்கு எதிராகவும் பல பதிவுகள் வந்து விட்டன.. அதில் ஒரு இடத்தில கூட நாங்கள் அவர்களை ஆபாசமாகவோ அல்லது கண்ணியக்குறைவாகவோ பேசவில்லை என்பதை எங்களால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும்.//

I second it!

I totally agree with terrorkummi group on this issue!

துணிந்து சொல்பவன் said...

//செங்கோவி said...
தெளிவான நிலைப்பாடு..விளக்கத்திற்கு நன்றி!

நானும் இங்கே விளக்கம் போடலாமா?//

Sure, But I hope it does not open the Pandora's box once again :))

செங்கோவி said...

ஓகே, இனி வருவது எனது தனிப்பட்ட கருத்துக்களே..டெரர்கும்மியின் கருத்துகள் அல்ல....(போதுமாய்யா)

செங்கோவி said...

தமிழ்மணத்தில் இருந்து நான் விலகுவது என்று பல மாதங்களுக்கு முன்பு எடுத்த முடிவு, எனது தனிப்பட்ட காரணங்களுக்கானது. அடுத்து நான் எழுதப்போகும் சில விஷயங்களுக்கு ரேட்டிங்/ஹிட்ஸ் போன்றவை தொந்தரவாக இருப்பதாலேயே விலகினேன். ஆனால் அதன்பிறகும் நண்பர்களின் பதிவுகளுக்கு தமிழ்மணம் ஓட்டுப்பட்டையில் வாக்களித்து வந்தேன் என்பதே தமிழ்மணத்தின்மீது நமக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி ஏதுமில்லை என்பதற்குச் சான்று.(உலவி, தமிழ்10-ஐயும் அப்போது விலக்கினேன்)

தற்போதைய எமது தமிழ்மண எதிர்ப்பு நிலைப்பாடு, பயடேட்டா பதிவில் பெயரிலி சகபதிவரை தரம்தாழ்ந்து விமர்சித்ததாலேயே எடுக்க வேண்டியதானது. ஆனாலும் நான் எந்தவொரு நண்பர்களிடமும் தனிப்பட்ட முறையில் ‘நீங்க விலகுங்க’ என்று பிரச்சாரம் செய்யவில்லை என்பதை என்னுடன் தொடர்பில் உள்ளோர் அறிவர். பொதுவில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக பொங்கியதோடு சரி. எனவே பதிவர்களால் தமிழ்மணம் பயன்பெறுவதிலோ, பதிவர்கள் தமிழ்மணத்தால் பயன்பெறுவதிலோ எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

செங்கோவி said...

//தமிழ்மணத்தின் உண்மையான மணத்தை வெளிக்கொண்டு வந்துட்டீங்க போல// என்று நான் இட்ட பின்னூட்டம் பற்றியும் நான் விளக்கிவிடுகிறேன்....

நான் 2006ஆம் ஆண்டிலிருந்தே பதிவுலகின் தீவிர வாசகன். பெயரிலியை அப்போதே அறிவேன். எத்தனையோ பேரை இதே போன்று செருப்பால் அடிப்பது போன்று பேசி 2007-2008களில் அவர் விரட்டிய கதையும் நான் அறிவேன். நீங்கள் திரு./அவர்கள் போடும் அளவிற்கு அவரது வார்த்தைப் பிரயோகம் எப்போதும் மரியாதைக்குரியதாக இருந்ததில்லை. 2008களில் இதே போன்று தான் தோன்றித்தனமாக பலரை அவமானப்படுத்தி விரட்டினார். அதனால் பல நல்ல பதிவர்களும் தமிழ்மணத்தை விட்டு விலகினர். அதன்பின் பல ரகளைகளுக்குப் பின் பெயரிலியும் தமிழ்மண நிர்வாகப் பொறுப்பில் இருந்து விலகினார். அதன்பிறகான காலம் தமிழ்மணத்தின் பொற்காலம் எனலாம்.

ஆனால் அதன்பின் எப்போது இவர் திரும்ப தமிழ்மணத்திற்கு வந்தார் என்று யாருக்கும் தெரியவில்லை, எனக்கும். மனநிலை பிறழ்ந்த, தரம் தாழ்ந்த துர்நாற்றமுள்ள பதிவராகவே அவர் முன்பு இருந்தார். டெரர்கும்மி பதிவில் இட்ட பின்னூட்டங்கள் மூலம் தான் மாறவேயில்லை என்பதையும் நிரூபித்தார். அங்கு கமெண்ட் இட்டபிறகே பெயரிலி என்ற மணம் நிறைந்த மனிதர், திரும்ப தமிழ்மணத்திற்கு வந்திருப்பதை அறிந்தேன். அதையே “தமிழ்மணத்தின் உண்மையான மணத்தை வெளிக்கொண்டு வந்துட்டீங்க போல” என்று பின்னூட்டம் இட்டேன். நான் எதிர்பார்த்த மாதிரியே அவரும் மெயில் பாய்ந்து வந்தார்..அப்புறம் நடந்ததை நீங்கள் அறிவீர்கள்.

செங்கோவி said...

தமிழ்மணத்திடமும் பெயரிலியிடமும் நல்ல பெயர் வாங்கி நலமுடன் வாழ ஒரு குரூப் இங்கே மும்முரமாக வேலை செய்கிறது. அதே போன்று தமிழ்மணம்/பெயரிலிக்கு எதிரான குரூப்பும் எதிர்தாக்குதலில் தீவிரமாக இறங்கியுள்ளது. இருதரப்பிலும் திரித்தல் வேலைகள் நடைபெறுகின்றன. இந்த நேரத்தில் பதிவரசியலில் விருப்பமில்லாத நாம், இவ்வாறு விலகிவிடுவதே மரியாதை.

செங்கோவி said...

அதே நேரத்தில் பெயரிலியின் தான் தோன்றித்தனமான நடத்தையை, பதிவர்களை பிச்சைக்காரர்கள் போன்று ‘இன்னும்’ எண்ணும் மனப்பான்மையை நாம் கண்டிக்கிறோம். அதற்கு தமிழ்மணமும் பொறுப்பேற்பதே நியாயம் என்று நினைக்கின்றோம். அவர்கள் வருத்தம் தெரிவிப்பதே சரி என்பதில் நாம் இப்போதும் உறுதியாக உள்ளோம்.

இதற்கு மேல் ‘அது’ பற்றிப் பேச ஒன்றும் இல்லை.

நன்றி.

கோகுல் said...

செங்கோவி said...


இதற்கு மேல் ‘அது’ பற்றிப் பேச ஒன்றும் இல்லை.//

ஆமாண்ணே!

வைகை said...

மனசாட்சி said...
உண்மை தான் திசை மாறி போயிடுச்சி...ரைட்டு
சரி நீங்க சொல்றதை தெளிவா சொல்லிடிக.///


Mohamed Faaique said...
நீங்கள் விளக்கமளித்திருக்க வேண்டிய தேவை இல்லை. இருந்தாலும், உங்க விளக்கப் பதிவிற்கு எம் நன்றிகள்...////

Dr. Butti Paul said...
பிரச்சினை திசை மாறி திரிக்கப்ப்படுமிடத்து தன்னிலை விளக்கம் அவசியமாகிற்று. வீண் வம்பளப்பவர்களுக்கு பதில் கூறா கொள்கை உங்கள் கண்ணியத்திற்கு சான்று.///


உங்களின் புரிதல்களுக்கு நன்றிகள் :))

வைகை said...

துணிந்து சொல்பவன் said...


I second it!

I totally agree with terrorkummi group on this issue!//

Thanks :-))

வைகை said...

செங்கோவி said...
ஓகே, இனி வருவது எனது தனிப்பட்ட கருத்துக்களே..டெரர்கும்மியின் கருத்துகள் அல்ல....(போதுமாய்யா)//


இது போதும் அண்ணே :))

வைகை said...

செங்கோவி said...

பொதுவில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக பொங்கியதோடு சரி. எனவே பதிவர்களால் தமிழ்மணம் பயன்பெறுவதிலோ, பதிவர்கள் தமிழ்மணத்தால் பயன்பெறுவதிலோ எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை.///

இதேதான் எங்கள் நிலைபாடும்.. எங்கள் குழுவை பன்றிகளின் கூட்டம் என்று சொன்னது பிடிக்காமல்தான் நாங்கள் கடிதம் எழுதி விலகிக்கொண்டோம்! மற்றபடி யாரையும் நாங்கள் வலுக்கட்டாயமாக் இழுக்க வில்லை :)

வெளங்காதவன்™ said...

//செங்கோவி said...

ஓகே, இனி வருவது எனது தனிப்பட்ட கருத்துக்களே..டெரர்கும்மியின் கருத்துகள் அல்ல....(போதுமாய்யா)///

ரைட்டு....

வைகை said...

நான் 2006ஆம் ஆண்டிலிருந்தே பதிவுலகின் தீவிர வாசகன். பெயரிலியை அப்போதே அறிவேன். எத்தனையோ பேரை இதே போன்று செருப்பால் அடிப்பது போன்று பேசி 2007-2008களில் அவர் விரட்டிய கதையும் நான் அறிவேன். நீங்கள் திரு./அவர்கள் போடும் அளவிற்கு அவரது வார்த்தைப் பிரயோகம் எப்போதும் மரியாதைக்குரியதாக இருந்ததில்லை. //

இதெல்லாம் எங்களுக்கு புதிய செய்திகள்... ஏனென்றால் அந்த பதிவில் பெயரிலி என்று ப்ரபைல் இல்லாமல் கருத்து வரவும் எங்களுக்கு அதை எப்படி எடுத்து கொள்வது என்று தெரியவில்லை... மற்றபடி அவருக்கு பதில் சொல்ல கூடாது என்றெல்லாம் ஒன்றும் இல்லை :))

வைகை said...

செங்கோவி said...
தமிழ்மணத்திடமும் பெயரிலியிடமும் நல்ல பெயர் வாங்கி நலமுடன் வாழ ஒரு குரூப் இங்கே மும்முரமாக வேலை செய்கிறது. அதே போன்று தமிழ்மணம்/பெயரிலிக்கு எதிரான குரூப்பும் எதிர்தாக்குதலில் தீவிரமாக இறங்கியுள்ளது. இருதரப்பிலும் திரித்தல் வேலைகள் நடைபெறுகின்றன. இந்த நேரத்தில் பதிவரசியலில் விருப்பமில்லாத நாம், இவ்வாறு விலகிவிடுவதே மரியாதை.///

கண்டிப்பாக... குளிர் காய புறப்பட்ட குள்ள நரிகளை அடையாளம் கண்டதால்தான் இந்த பதிவே... எங்களுக்கு பதிவுலகம் பொழுதுபோக்கே தவிர இதுவே எங்கள் பொழுது அல்ல :))

வைகை said...

செங்கோவி said...
அதே நேரத்தில் பெயரிலியின் தான் தோன்றித்தனமான நடத்தையை, பதிவர்களை பிச்சைக்காரர்கள் போன்று ‘இன்னும்’ எண்ணும் மனப்பான்மையை நாம் கண்டிக்கிறோம். அதற்கு தமிழ்மணமும் பொறுப்பேற்பதே நியாயம் என்று நினைக்கின்றோம். அவர்கள் வருத்தம் தெரிவிப்பதே சரி என்பதில் நாம் இப்போதும் உறுதியாக உள்ளோம்.

இதற்கு மேல் ‘அது’ பற்றிப் பேச ஒன்றும் இல்லை.///

அதேதான்.. அதைப்பற்றி பேச நமக்கு ஒன்றும் அல்ல.. அது தமிழ் மணத்தில் இருப்பவர்கள் கவலைப்பட வேண்டிய விஷயம் :)

வெளங்காதவன்™ said...

//செங்கோவி said...

தமிழ்மணத்திடமும் பெயரிலியிடமும் நல்ல பெயர் வாங்கி நலமுடன் வாழ ஒரு குரூப் இங்கே மும்முரமாக வேலை செய்கிறது. அதே போன்று தமிழ்மணம்/பெயரிலிக்கு எதிரான குரூப்பும் எதிர்தாக்குதலில் தீவிரமாக இறங்கியுள்ளது. இருதரப்பிலும் திரித்தல் வேலைகள் நடைபெறுகின்றன. இந்த நேரத்தில் பதிவரசியலில் விருப்பமில்லாத நாம், இவ்வாறு விலகிவிடுவதே மரியாதை.//

நல்லது அண்ணே!

வெளங்காதவன்™ said...

//வைகை said...

செங்கோவி said...
அதே நேரத்தில் பெயரிலியின் தான் தோன்றித்தனமான நடத்தையை, பதிவர்களை பிச்சைக்காரர்கள் போன்று ‘இன்னும்’ எண்ணும் மனப்பான்மையை நாம் கண்டிக்கிறோம். அதற்கு தமிழ்மணமும் பொறுப்பேற்பதே நியாயம் என்று நினைக்கின்றோம். அவர்கள் வருத்தம் தெரிவிப்பதே சரி என்பதில் நாம் இப்போதும் உறுதியாக உள்ளோம்.

இதற்கு மேல் ‘அது’ பற்றிப் பேச ஒன்றும் இல்லை.///

அதேதான்.. அதைப்பற்றி பேச நமக்கு ஒன்றும் அல்ல.. அது தமிழ் மணத்தில் இருப்பவர்கள் கவலைப்பட வேண்டிய விஷயம் :)///

சரிதான் பாஸ்!

Unknown said...

அண்ணே நானும் கொஞ்சம் சொல்லிக்கட்டா!

வெளங்காதவன்™ said...

//விக்கியுலகம் said...

அண்ணே நானும் கொஞ்சம் சொல்லிக்கட்டா!////

வேண்டாம்னா பயபுள்ளைக விடவா போறீங்க?

Unknown said...

இதுவரை இங்கு திரு. செங்கோவி அவர்கள் சொன்ன கருத்துக்கள் எனக்கு புதியவையே...என்னை பொறுத்தவரை வேணாம்னு முடிவு பண்ணி வெளியேறியதோடு இந்த பிரச்சனையை முடித்து கொள்வது நலம்....ஆனாலும், அந்த நபர் வீசிய பல வார்த்தைகள் காரணமாக நெடுங்காலம் இது தொடர்வதை நம்மால் நிறுத்த முடியாது என்று நினைக்கிறேன்!..இதில் யாரும் பஞ்சாயத்துக்கு வருவதை எம்மால் ஏற்க்க முடிய வில்லை...இனி ஆதரவும் எதிர்ப்பும் தேவையில்லை என்பதே எனது நிலைப்பாடு!

வெளங்காதவன்™ said...

@விக்கியுலகம்-

:-)

செங்கோவி said...

// விக்கியுலகம் said...

திரு. செங்கோவி அவர்கள் //

மனுசனாய்யா நீரு?

Unknown said...

" செங்கோவி said...
// விக்கியுலகம் said...

திரு. செங்கோவி அவர்கள் //

மனுசனாய்யா நீரு?"

>>>>>>>>>>>

மாப்ள ஏதாவது மரியாத இல்லாம பேசிட்டனா!

இப்பல்லாம் மரியாத கொடுத்தா கூட தப்பா தெரியிது போல ஹிஹி!

தமிழ்வாசி பிரகாஷ் said...

மதிப்புமிகு. செங்கோவி அவர்கள் பெயரிலி பற்றி குறிப்பிட்ட செய்திகள் எனக்கு புதியவையே. இங்கே சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

தமிழ்வாசி பிரகாஷ் said...

பல்சுவை பதிவுகளிடும் டெரர் கும்மியில் தன்னிலை விளக்கம் போட்டு விட்டார்கள். ஆனாலும் தமிழ்மணம் நிர்வாகியாக பெயரிலி என்பவர் வீசிய ..... கருத்துரைகளே நான் தமிழ்மணத்திலிருந்து விலக காரணமாயிற்று என்பதை இங்கே குறிப்பிடுகிறேன். இந்த முடிவு எடுத்த நாள் முதல் நான் யாருக்கும் தமிழ்மணம் ஒட்டு போடுவதில்லை என்பதையும் தெரியப்படுத்துகிறேன்.

வெளங்காதவன்™ said...

//தமிழ்வாசி - Prakash said...

பல்சுவை பதிவுகளிடும் டெரர் கும்மியில் தன்னிலை விளக்கம் போட்டு விட்டார்கள். ஆனாலும் தமிழ்மணம் நிர்வாகியாக பெயரிலி என்பவர் வீசிய ..... கருத்துரைகளே நான் தமிழ்மணத்திலிருந்து விலக காரணமாயிற்று என்பதை இங்கே குறிப்பிடுகிறேன். இந்த முடிவு எடுத்த நாள் முதல் நான் யாருக்கும் தமிழ்மணம் ஒட்டு போடுவதில்லை என்பதையும் தெரியப்படுத்துகிறேன்.///

:-)

பெசொவி said...

By the way, congratulations for the 100th Post in Terrorkummi.

அருண் பிரசாத் said...

@ பெசொவி
//
By the way, congratulations for the 100th Post in Terrorkummi.//

இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது உங்களுக்கு....

நிரூபன் said...

அன்பிற்குரிய அபையோருக்கும், கும்மி குரூப் நண்பர்களுக்கும் வணக்கம்,
பன்னிக்குட்டி அண்ணாவினதும்,உங்களிடதும் முழுமையான ஆலோசனையின் கீழ் வந்திருக்கும் இப் பதிவினை வரவேற்கிறேன்.
தெளிவான விளக்கங்கள்.
இவ் விளக்கங்கள் பதிவர்களிடையே புரிந்துணர்வைக் கட்டியெழுப்ப உதவும் என நினைக்கிறேன்.

ஆனால் இப் பிரச்சினையூடாக இலங்கை இந்தியப் பதிவர்கள் எனும் வேறு பாட்டினை அல்லது பிரிவினையினை உண்டாக்க முயன்றவர்களைப் பற்றியும் கண்டித்து இப் பதிவில் சில வசனங்களைச் சேர்த்திருந்தால் இன்னும் அகம் மகிழ்ந்திருப்பேன்.

நேசமுடன்,
செ,நிரூபன்

மாணவன் said...

//@ பெசொவி
//
By the way, congratulations for the 100th Post in Terrorkummi.//

இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது உங்களுக்கு....///

அட ஆமாம்... மறந்தேபோய்ட்டேன்...

வாழ்த்துகள்....வாழ்த்துகள்...

டெரர் கும்மி இன்னும் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்! :-)

மாணவன் said...

தொடரட்டும் தங்களின் பொன்னான பணி...!

:-)

வெளங்காதவன்™ said...

///பெசொவி said...

By the way, congratulations for the 100th Post in Terrorkummi.///

வாத்துக்கள்!

வெளங்காதவன்™ said...

டெரர் கும்மி நூறு பதிவுகள் போட்டதை முன்னிட்டு, இன்றுமுதல் இருநூறாவது போஸ்ட் போடும்வரை தான் குளிக்கப் போவதில்லை என்று டெரர் பாண்டி சூளுரைத்துள்ளார்!

Astrologer sathishkumar Erode said...

டெரர் கும்மி குரூப்பில் அதிகாரப்பூர்வமாக நான் இல்லாவிட்டாலும்,நானும் அதில் இருப்பதாக இதுவரை எண்ணியிருக்கிறேன்.நண்பர்களுக்கு ஏற்பட்ட மன வருத்தத்தை அறிந்து நானும் கண்ணியகுறைவாகவே தமிழ்மத்தை திட்டி இரண்டு பதிவுகள் போட்டிருக்கிறேன்.காரணம் உங்கள் பிரச்சனை ஒன்று.என் பிரச்சனை இரண்டு.அவர்களின் கொள்கை குழப்பமானது.அதை அவர்கள் முழுமையாக செயல்படுத்தவில்லை..இதுவரை அவ்ர்கள் கொள்கைபடி எத்தனை பதிவுகளை தடுத்து வைத்திருக்கின்றனர்.என அறிவிக்கவில்லை.காரணம் அப்படி யாரையுமே அவர்கள் தடுத்து வைக்கவில்லை என்பதுதான் உண்மை.எப்படியெனில் என்னை கட்டண சேவைக்கு மார்றியுள்ளதாக தடுத்தனர்.சோதிட பதிவு என சொல்லி என்னை முற்றிலும் நீக்கவில்லை.இதுபோல் எத்தனையோ குழப்பங்கள்.சர்ச்சை இங்கு இடம்பெற வேண்டாம் என சொல்லிவிட்டதால் நண்பர்களின் சுதந்திரமான எழுத்து பயணம் தொடரவும்,என் ஆஸ்தான டெரர் கும்மி நண்பர்களின் கலக்கலான நகைச்சுவை வீச்சுகள் அதிகரிக்கவும் வாழ்த்து கூறி முடிக்கிறேன்

தமிழ்வாசி பிரகாஷ் said...

செஞ்சுரிக்கு வாழ்த்துகள்

வெளங்காதவன்™ said...

//சர்ச்சை இங்கு இடம்பெற வேண்டாம் என சொல்லிவிட்டதால் நண்பர்களின் சுதந்திரமான எழுத்து பயணம் தொடரவும்,என் ஆஸ்தான டெரர் கும்மி நண்பர்களின் கலக்கலான நகைச்சுவை வீச்சுகள் அதிகரிக்கவும் வாழ்த்து கூறி முடிக்கிறேன்//

:-)

செல்வா said...

//டெரர் கும்மி நூறு பதிவுகள் போட்டதை முன்னிட்டு, இன்றுமுதல் இருநூறாவது போஸ்ட் போடும்வரை தான் குளிக்கப் போவதில்லை என்று டெரர் பாண்டி சூளுரைத்துள்ளார்!//

இப்ப மட்டும் ?

வெளங்காதவன்™ said...

//கோமாளி செல்வா said...

//டெரர் கும்மி நூறு பதிவுகள் போட்டதை முன்னிட்டு, இன்றுமுதல் இருநூறாவது போஸ்ட் போடும்வரை தான் குளிக்கப் போவதில்லை என்று டெரர் பாண்டி சூளுரைத்துள்ளார்!//

இப்ப மட்டும் ?///

ஹி ஹி ஹி...

#செல்வா பாறை உடைக்கிறார்!

துணிந்து சொல்பவன் said...

@
செ,நிரூபன்
//ஆனால் இப் பிரச்சினையூடாக இலங்கை இந்தியப் பதிவர்கள் எனும் வேறு பாட்டினை அல்லது பிரிவினையினை உண்டாக்க முயன்றவர்களைப் பற்றியும் கண்டித்து இப் பதிவில் சில வசனங்களைச் சேர்த்திருந்தால் இன்னும் அகம் மகிழ்ந்திருப்பேன்.
//

எனக்குத் தெரிந்தவரை டெரர்கும்மி ஆளுங்க எந்தப் பிரிவினையையுமே ஊக்குவிப்பதில்லை. நீங்களாகவே இங்கு வந்து இந்தப் பிரச்சினையை எழுப்ப முயற்சிப்பதுபோல் தெரிகிறது, வேண்டாம் சகோ!

பெசொவி said...

49

பெசொவி said...

50

வெளங்காதவன்™ said...

//பெசொவி said...

50////

ஹி ஹி ஹி....

நல்லா இருங்க!

MANO நாஞ்சில் மனோ said...

நல்லதொரு விளக்கம் சரியான விளக்கமே....

நமக்கு பிடிக்கலையா ஒதுங்குரதுதான் நல்லது....

அருள் said...

இப்படியொரு சிக்கல் ஏற்பட்டது வியப்பளிக்கக் கூடியதாக இல்லை. இது ஒருவகையான "பட்டாம்பூச்சி விளைவு".

http://en.wikipedia.org/wiki/Butterfly_effect

எது எப்படியோ "டெர்ரர் கும்மி: இது ரத்த பூமி...!" என்கிற உங்களது தலைப்பை காப்பாற்றி விட்டீர்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

best wishes for 100th post

செங்கோவி said...

100வது பதிவா? வாழ்த்துகள்யா..தொடர்ந்து கலக்குங்க.


அப்போ அடுத்த பயடேட்டா இன்னும் 98 பதிவு கழிச்சா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செங்கோவி said...

100வது பதிவா? வாழ்த்துகள்யா..தொடர்ந்து கலக்குங்க.


அப்போ அடுத்த பயடேட்டா இன்னும் 98 பதிவு கழிச்சா?/.//


ennaa villaththanam.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செங்கோவி said...

100வது பதிவா? வாழ்த்துகள்யா..தொடர்ந்து கலக்குங்க.


அப்போ அடுத்த பயடேட்டா இன்னும் 98 பதிவு கழிச்சா?/.//


ennaa villaththanam.

Sathish Murugan . said...

அன்பு பங்காளிகளுக்கு (வேறயாரு எல்லாம் டெரர்கும்மிs),

மச்சி பூவுக்கு வாசம் இருந்தா கூவி விற்க தேவை இல்லை. எனவே "அந்த மணம்" தேவையில்லை. பெயரில்லா புண்ணாக்கை தூக்கி சுமக்க யாராவது மணி அடிப்பார்கள். எனவே, கிளப்புங்கள்.... அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா? கிளப்புங்கள் உங்கள் மரண மொக்கைகளை....

என்றும் அன்புடன்
சதீஷ் முருகன்

Anonymous said...

கருத்து கூறுமளவு நான் பெரிய ஆள் கிடையாது...... நான் உங்கள் அனைவர் பதிவையும் தேடி பிடித்து படித்து வருகிறேன்.... தொடரட்டும் உங்கள் பதிவுலக சேவை.............. நல்லா சிரிக்க வைகறிங்க... கவலைகளை மறக்க வைகறிங்க... இன்னும் இன்னும் தொடரட்டும் உங்கள் சேவை ....

Yoga.S. said...

எல்லோரும் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்.வாசகர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என நம்பலாம்!நானும் ஒரு வாசகனாகவே இதனை எழுதுகிறேன்!மீண்டும் எரிந்த/எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்க்க வேண்டாமே?

வைகை said...

விக்கியுலகம் said...
இதுவரை இங்கு திரு. செங்கோவி அவர்கள் சொன்ன கருத்துக்கள் எனக்கு புதியவையே...என்னை பொறுத்தவரை வேணாம்னு முடிவு பண்ணி வெளியேறியதோடு இந்த பிரச்சனையை முடித்து கொள்வது நலம்...///

தக்காளி க.க.க.போ :)

வைகை said...

தமிழ்வாசி - Prakash said...
பல்சுவை பதிவுகளிடும் டெரர் கும்மியில் தன்னிலை விளக்கம் போட்டு விட்டார்கள். ஆனாலும் தமிழ்மணம் நிர்வாகியாக பெயரிலி என்பவர் வீசிய ..... கருத்துரைகளே நான் தமிழ்மணத்திலிருந்து விலக காரணமாயிற்று என்பதை இங்கே குறிப்பிடுகிறேன். இந்த முடிவு எடுத்த நாள் முதல் நான் யாருக்கும் தமிழ்மணம் ஒட்டு போடுவதில்லை என்பதையும் தெரியப்படுத்துகிறேன்/////

உண்மைதான்.. இனி அதைவிட்டு ஒதுங்கி இருப்பதே அனைவருக்கும் நலம் :))

வைகை said...

நிரூபன் said...
அன்பிற்குரிய அபையோருக்கும், கும்மி குரூப் நண்பர்களுக்கும் வணக்கம்,
பன்னிக்குட்டி அண்ணாவினதும்,உங்களிடதும் முழுமையான ஆலோசனையின் கீழ் வந்திருக்கும் இப் பதிவினை வரவேற்கிறேன்.
தெளிவான விளக்கங்கள்.
இவ் விளக்கங்கள் பதிவர்களிடையே புரிந்துணர்வைக் கட்டியெழுப்ப உதவும் என நினைக்கிறேன்.

ஆனால் இப் பிரச்சினையூடாக இலங்கை இந்தியப் பதிவர்கள் எனும் வேறு பாட்டினை அல்லது பிரிவினையினை உண்டாக்க முயன்றவர்களைப் பற்றியும் கண்டித்து இப் பதிவில் சில வசனங்களைச் சேர்த்திருந்தால் இன்னும் அகம் மகிழ்ந்திருப்பேன்.

நேசமுடன்,
செ,நிரூப/////


உங்கள் புரிதலுக்கும் ஆதரவிற்கும் நன்றி நிரூபன் :)

நீங்கள் சொல்லிய அந்த பிரிவினை விசயத்தில் எங்களுக்கும் எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை... ஆனால் அதை இங்கே சுட்டி காமித்து தூண்டி விடுவதைவிட புறக்கணிப்பதே நலம் என்று விட்டுவிட்டோம்.. நன்றி :)

வைகை said...

சோதிடம்’’ சதீஷ்குமார் said...

நண்பர்களின் சுதந்திரமான எழுத்து பயணம் தொடரவும்,என் ஆஸ்தான டெரர் கும்மி நண்பர்களின் கலக்கலான நகைச்சுவை வீச்சுகள் அதிகரிக்கவும் வாழ்த்து கூறி முடிக்கிறே///

நன்றி சதீஸ்,

நீங்கள் ஆரம்பத்தில் இருந்து எங்களை கவனித்து வருவதால் உங்கள் புரிதல் எங்களுக்கு ஆச்சர்யம் இல்லை... சின்ன விசயங்களுக்காக நாங்களும் உங்களை போன்றவர்களை இழக்க தயார் இல்லை... தொடர்ந்து உங்கள் ஆதரவோடு எங்கள் மொக்கை தொடரும் :))

வைகை said...

தமிழ்வாசி - Prakash said...
செஞ்சுரிக்கு வாழ்த்துகள்

///

நன்றி தமிழ்வாசி :))

வைகை said...

துணிந்து சொல்பவன் said...
@
செ,நிரூபன்
//ஆனால் இப் பிரச்சினையூடாக இலங்கை இந்தியப் பதிவர்கள் எனும் வேறு பாட்டினை அல்லது பிரிவினையினை உண்டாக்க முயன்றவர்களைப் பற்றியும் கண்டித்து இப் பதிவில் சில வசனங்களைச் சேர்த்திருந்தால் இன்னும் அகம் மகிழ்ந்திருப்பேன்.
//

எனக்குத் தெரிந்தவரை டெரர்கும்மி ஆளுங்க எந்தப் பிரிவினையையுமே ஊக்குவிப்பதில்லை. நீங்களாகவே இங்கு வந்து இந்தப் பிரச்சினையை எழுப்ப முயற்சிப்பதுபோல் தெரிகிறது, வேண்டாம் சகோ///


உங்களின் ஆதரவிற்கும் புரிதலுக்கும் நன்றிங்க... அவரும் நம்ம சகோதான்..உரிமையில் கேட்க்கிறார்... அவருக்கும் எங்கள் பதிலை சொல்லிவிட்டோம் :))

வைகை said...

MANO நாஞ்சில் மனோ said...
நல்லதொரு விளக்கம் சரியான விளக்கமே....

நமக்கு பிடிக்கலையா ஒதுங்குரதுதான் நல்லது...///


கண்டிப்பா மனோ.. அதுதான் இப்பொழுது செய்துள்ளோம்... நன்றி :)

TERROR-PANDIYAN(VAS) said...

@வைகை

என்னாட மச்சி இங்க தனியா பொலம்பிட்டு இருக்க. கஸ்டமர் எல்லாம் போய்ட்டாங்க... :)

வைகை said...

அருள் said...
இப்படியொரு சிக்கல் ஏற்பட்டது வியப்பளிக்கக் கூடியதாக இல்லை. இது ஒருவகையான "பட்டாம்பூச்சி விளைவு".

http://en.wikipedia.org/wiki/Butterfly_effect

எது எப்படியோ "டெர்ரர் கும்மி: இது ரத்த பூமி...!" என்கிற உங்களது தலைப்பை காப்பாற்றி விட்டீர்கள்///

பட்டாம்பூச்சியோ... பாரசூட்டோ...ஆனா விளைவுகள் மோசமானது....மற்றபடி இது தப்பு செய்றவங்களுக்குதான் ரத்த பூமி சார்.. பழகுரவங்களுக்கு ரத்தம் கொடுக்குற பூமி இது :))

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
best wishes for 100th post

//

:-))))

வைகை said...

செங்கோவி said...
100வது பதிவா? வாழ்த்துகள்யா..தொடர்ந்து கலக்குங்க.


அப்போ அடுத்த பயடேட்டா இன்னும் 98 பதிவு கழிச்சா?///


ஹா..ஹா.. சொல்ல முடியாது அது உங்களுக்கே இருக்கலாம் :))

வைகை said...

சதீஷ் முருகன் . said...
அன்பு பங்காளிகளுக்கு (வேறயாரு எல்லாம் டெரர்கும்மிs),

மச்சி பூவுக்கு வாசம் இருந்தா கூவி விற்க தேவை இல்லை. எனவே "அந்த மணம்" தேவையில்லை. பெயரில்லா புண்ணாக்கை தூக்கி சுமக்க யாராவது மணி அடிப்பார்கள். எனவே, கிளப்புங்கள்.... அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா? கிளப்புங்கள் உங்கள் மரண மொக்கைகளை....

என்றும் அன்புடன்
சதீஷ் முருகன்///

பங்காளி சதீஸ்... எங்கள் (வலை) பூ மேல் எங்களுக்கு அந்த நம்பிக்கை என்றுமே உண்டு... நீங்கள் வழக்கம் போல் இனி எதிர்பார்க்கலாம் :))

வைகை said...

எனக்கு பிடித்தவை said...
கருத்து கூறுமளவு நான் பெரிய ஆள் கிடையாது...... நான் உங்கள் அனைவர் பதிவையும் தேடி பிடித்து படித்து வருகிறேன்.... தொடரட்டும் உங்கள் பதிவுலக சேவை.............. நல்லா சிரிக்க வைகறிங்க... கவலைகளை மறக்க வைகறிங்க... இன்னும் இன்னும் தொடரட்டும் உங்கள் சேவை ...///

நன்றிங்க.. கருத்துக்கு வயது தேவை இல்லைங்க... நல்ல தெளிவும் நேர்மையும் இருந்தால் போதும்... தொடர்ந்து படியுங்கள்..எங்கள் நகைச்சுவை விருந்து தொடரும் :))

வைகை said...

Yoga.S.FR said...
எல்லோரும் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்.வாசகர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என நம்பலாம்!நானும் ஒரு வாசகனாகவே இதனை எழுதுகிறேன்!மீண்டும் எரிந்த/எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்க்க வேண்டாமே?////

புரிந்து கொண்டமைக்கு நன்றி யோகா... தொடர்ந்து வாங்க எங்கள் குலத்தொழில் மொக்கை தொடரும் :-)

வைகை said...

TERROR-PANDIYAN(VAS) said...
@வைகை

என்னாட மச்சி இங்க தனியா பொலம்பிட்டு இருக்க. கஸ்டமர் எல்லாம் போய்ட்டாங்க... :)////


அட விடு மச்சி... நானே ஆல் இல்லாத நேரத்துல கமெண்ட் போட்டாத்தான் யாரும் கேள்வி கேக்க மாட்டாங்கன்னு போட்டுக்கிட்டு இருக்கேன்.. நீ வேற? :))

Unknown said...

Crystal Clear explanation from Terror group...100vathu pathivukku vazthukkal....

http://ponsenthilkumar.blogspot.com/2011/10/blog-post_17.html

நான் என்னுடைய ப்ளாக்கில் இந்த பதிவைப் போட்டதிற்கு முழுமுதற்காரணம் பெயரிலியின் பேத்தல் கமெண்டுகளே தவிர வேறு எதுவுமில்லை என்பதனை இதன் மூலம் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்...

smart said...

நாட்டாமை செய்த எந்த புண்ணியவானுக்கு எனது நன்றிகள் உங்கள் நிலைப்பாட்டை தெரிவித்ததற்கு

smart said...

Congrats for 100th post

அஞ்சா சிங்கம் said...

அடடா இங்க இவ்ளோ பெரிய கலவரம் நடந்திருக்கு எனக்கு தெரியாமல் போச்சே...............

நாலு நாள் நான் ஊருல இல்லை அதுக்குள்ள நாறிடிச்சி ...சரி சரி ..அடுத்த சண்டையில என்னையும் சேத்துக்கங்க ..............

இப்படிக்கு பண்ணிகுட்டியாரின் .போர்வாள் ...........

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

செங்கோவி said...
//பதிவர்களை பிச்சைக்காரர்கள் போன்று ‘இன்னும்’ எண்ணும் மனப்பான்மையை நாம் கண்டிக்கிறோம். அதற்கு தமிழ்மணமும் பொறுப்பேற்பதே நியாயம் என்று நினைக்கின்றோம். அவர்கள் வருத்தம் தெரிவிப்பதே சரி என்பதில் நாம் இப்போதும் உறுதியாக உள்ளோம்.//

இதுவே எமது நிலைப்பாடும். தெரியாத சில விடயங்களை புதிய பதிவர்களுக்கு தெரிவித்த செங்காவி அண்ணனுக்கு நன்றிகள்.

//இதற்கு மேல் ‘அது’ பற்றிப் பேச ஒன்றும் இல்லை.//

சலசலப்பை முடித்துக்கொள்வோம், கொள்கையில் உறுதியாய் இருப்போம்.

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

// இதுவரை எங்களோடு துணையாக இருந்து... இன்றும் இருந்துவரும் நண்பர்களுக்கு எங்கள் நன்றிகளையும் சொல்லிக்கொள்கிறோம்!//

நூறாவது பதிவில் நண்பர்களுக்கு நன்றி கூறிய ராம்சாமி அண்ணன் வாழ்க. நூறாவது பதிவு கண்ட டெர்ரர் கும்மி நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். ஒரே ஒரு கவலை, உங்கள் நூறாவது பதிவு தாரை தப்பட்டைகள் கிளியும் மரண மொக்கை பதிவை இருந்திருக்க வேண்டாமா? இப்படி தன்னிலை விளக்க பதிவாக ஆகிவிட்டதே. இதற்கு காரணமானவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

Yoga.S. said...

வைகை said...புரிந்து கொண்டமைக்கு நன்றி யோகா... தொடர்ந்து வாங்க எங்கள் குலத்தொழில் மொக்கை தொடரும் :-)//// நீங்க சொல்லவே வேணாம்!கண்டிப்பா எங்க இருந்தாலும் கும்மியடிக்க வருவேன்! நமக்கு என்ன வேண்டும்?உழைத்தோம்,கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண மொக்கை,கும்மி.வேறு எதைக் காணப் போகிறோம்?

settaikkaran said...

//ஒரு இடத்தில கூட நாங்கள் அவர்களை ஆபாசமாகவோ அல்லது கண்ணியக்குறைவாகவோ பேசவில்லை என்பதை எங்களால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும்.//

//சகோதரர்களே நீங்கள் அப்பிடி யாரேனும் நினைத்தால் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்!//

//இந்த பிரச்சனையில் குளிர் காய நினைக்கும் சிலர் நாட்டாமை பண்ண வருவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வில்லை//

//இனிமேலும் அவர்களின் புரிந்துணர்வுடன் கூடிய முன்னேற்றங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!//

இந்த இடுகை உங்களது விசாலமான கண்ணோட்டத்தையும், பக்குவமான அணுகுமுறையையும், தெளிவான குறிக்கோளையும் படம்பிடித்துக் காட்டுகிறது. பிரச்சினை மேலும் வலுக்காமல் இருக்க, தக்க சமயத்தில் நீங்கள் எழுதியிருக்கிற இடுகை உங்கள் மீதுள்ள நன்மதிப்பைப் பன்மடங்கு அதிகரிக்கச் செய்துவிட்டது. உங்களுக்கு எனது உளமார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும்!

Stock said...

////
தமிழ்மணத்தை பற்றி இனி நாங்கள் கருத்து எதுவும் சொல்லப் போவதும் இல்லை.. தேவையுமில்லை. நாங்கள் விலகி விட்டோம் இனியும் இணைவதாக இல்லை
////////


அப்பாடா தமிழ்மணத்திற்கு விடுதலை.... இது கிண்டலுக்காக சொன்னதில்லை. நான் தமிழ்மணத்தை 7 வருடங்களாக வாசித்து வருகிறேன். கும்மிகளும் சுவாரசியம் தான். ஆனால் நீங்கள் என்ன எழுத வேண்டும் என்பதை மற்றவர்கள் கட்டளையிடக்கூடாதோ அதே போல் வெற்று மொக்கைகளால் தமிழ்மணத்தை நிரப்புவதும் ஏற்க முடியாது. முடிந்தால் 100 பின்னூட்டங்கள் பெற்ற முதல் தமிழ் வலைப்பதிவு தேடிப்பாருங்கள். கும்மிகூட எவ்வளவு சுவாரசியம் என்று தெரியும்.
பெயரிலி கலகம் நன்மையில் முடிந்தது நிறைய பேருக்கு மகிழ்வே.

Stock said...

////
தமிழ்மணத்தை பற்றி இனி நாங்கள் கருத்து எதுவும் சொல்லப் போவதும் இல்லை.. தேவையுமில்லை. நாங்கள் விலகி விட்டோம் இனியும் இணைவதாக இல்லை
////////


அப்பாடா தமிழ்மணத்திற்கு விடுதலை.... இது கிண்டலுக்காக சொன்னதில்லை. நான் தமிழ்மணத்தை 7 வருடங்களாக வாசித்து வருகிறேன். கும்மிகளும் சுவாரசியம் தான். ஆனால் நீங்கள் என்ன எழுத வேண்டும் என்பதை மற்றவர்கள் கட்டளையிடக்கூடாதோ அதே போல் வெற்று மொக்கைகளால் தமிழ்மணத்தை நிரப்புவதும் ஏற்க முடியாது. முடிந்தால் 100 பின்னூட்டங்கள் பெற்ற முதல் தமிழ் வலைப்பதிவு தேடிப்பாருங்கள். கும்மிகூட எவ்வளவு சுவாரசியம் என்று தெரியும்.
பெயரிலி கலகம் நன்மையில் முடிந்தது நிறைய பேருக்கு மகிழ்வே.

வெளங்காதவன்™ said...

//அப்பாடா தமிழ்மணத்திற்கு விடுதலை.... இது கிண்டலுக்காக சொன்னதில்லை. நான் தமிழ்மணத்தை 7 வருடங்களாக வாசித்து வருகிறேன். கும்மிகளும் சுவாரசியம் தான். ஆனால் நீங்கள் என்ன எழுத வேண்டும் என்பதை மற்றவர்கள் கட்டளையிடக்கூடாதோ அதே போல் வெற்று மொக்கைகளால் தமிழ்மணத்தை நிரப்புவதும் ஏற்க முடியாது. முடிந்தால் 100 பின்னூட்டங்கள் பெற்ற முதல் தமிழ் வலைப்பதிவு தேடிப்பாருங்கள். கும்மிகூட எவ்வளவு சுவாரசியம் என்று தெரியும்.
பெயரிலி கலகம் நன்மையில் முடிந்தது நிறைய பேருக்கு மகிழ்வே.//

அண்ணே! என்ன சொல்ல வாரீங்க?

வைகை said...

ஏமரா மன்னன் பொன்.செந்தில்குமார் said...
Crystal Clear explanation from Terror group...100vathu pathivukku vazthukkal....

http://ponsenthilkumar.blogspot.com/2011/10/blog-post_17.html

நான் என்னுடைய ப்ளாக்கில் இந்த பதிவைப் போட்டதிற்கு முழுமுதற்காரணம் பெயரிலியின் பேத்தல் கமெண்டுகளே தவிர வேறு எதுவுமில்லை என்பதனை இதன் மூலம் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்...///


உங்க புரிதலுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி செந்தில்... :))

வைகை said...

smart said...
நாட்டாமை செய்த எந்த புண்ணியவானுக்கு எனது நன்றிகள் உங்கள் நிலைப்பாட்டை தெரிவித்ததற்கு///


நன்றிங்க :))

வைகை said...

அஞ்சா சிங்கம் said...
அடடா இங்க இவ்ளோ பெரிய கலவரம் நடந்திருக்கு எனக்கு தெரியாமல் போச்சே...............

நாலு நாள் நான் ஊருல இல்லை அதுக்குள்ள நாறிடிச்சி ...சரி சரி ..அடுத்த சண்டையில என்னையும் சேத்துக்கங்க ..............

இப்படிக்கு பண்ணிகுட்டியாரின் .போர்வாள் ...........//

சரி..சரி.. ஆனா உங்களுக்கு விசயமே தெரியாதா? அடுத்த சண்டையே உங்கள வச்சுதான் :))

இப்படிக்கு,
பன்னிகுட்டியாரின் பீர் வாள் :))

வைகை said...

Dr. Butti Paul said...
// இதுவரை எங்களோடு துணையாக இருந்து... இன்றும் இருந்துவரும் நண்பர்களுக்கு எங்கள் நன்றிகளையும் சொல்லிக்கொள்கிறோம்!//

நூறாவது பதிவில் நண்பர்களுக்கு நன்றி கூறிய ராம்சாமி அண்ணன் வாழ்க. நூறாவது பதிவு கண்ட டெர்ரர் கும்மி நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். ஒரே ஒரு கவலை, உங்கள் நூறாவது பதிவு தாரை தப்பட்டைகள் கிளியும் மரண மொக்கை பதிவை இருந்திருக்க வேண்டாமா? இப்படி தன்னிலை விளக்க பதிவாக ஆகிவிட்டதே. இதற்கு காரணமானவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்./////

வாழ்த்துக்கு நன்றி... நூறாவது பதிவு இப்படி ஆனதில் எங்களுக்கும் வருத்தமே.. ஆனாலும் இனி ஒவ்வொரு பதிவும் சென்சுரியாக இருக்கும் :))

வைகை said...

Yoga.S.FR said...
வைகை said...புரிந்து கொண்டமைக்கு நன்றி யோகா... தொடர்ந்து வாங்க எங்கள் குலத்தொழில் மொக்கை தொடரும் :-)//// நீங்க சொல்லவே வேணாம்!கண்டிப்பா எங்க இருந்தாலும் கும்மியடிக்க வருவேன்! நமக்கு என்ன வேண்டும்?உழைத்தோம்,கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண மொக்கை,கும்மி.வேறு எதைக் காணப் போகிறோம்?///

கண்டிப்பா.. ஒரு ஸ்ட்ரெஸ் ரிலீஸ் பண்ணத்தான் இங்க வர்றோம்.. இதையே தூக்கி சுமக்க நாங்கள் தயார் இல்லை.. தொடர்ந்து வாங்க மரண கும்மி தொடரும் :))

வைகை said...

சேட்டைக்காரன் said...

இந்த இடுகை உங்களது விசாலமான கண்ணோட்டத்தையும், பக்குவமான அணுகுமுறையையும், தெளிவான குறிக்கோளையும் படம்பிடித்துக் காட்டுகிறது. பிரச்சினை மேலும் வலுக்காமல் இருக்க, தக்க சமயத்தில் நீங்கள் எழுதியிருக்கிற இடுகை உங்கள் மீதுள்ள நன்மதிப்பைப் பன்மடங்கு அதிகரிக்கச் செய்துவிட்டது. உங்களுக்கு எனது உளமார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும்!///

உங்கள் புரிந்துணர்வுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சேட்டை அண்ணே :))

வைகை said...

Stock said...
////
தமிழ்மணத்தை பற்றி இனி நாங்கள் கருத்து எதுவும் சொல்லப் போவதும் இல்லை.. தேவையுமில்லை. நாங்கள் விலகி விட்டோம் இனியும் இணைவதாக இல்லை
////////


அப்பாடா தமிழ்மணத்திற்கு விடுதலை.... இது கிண்டலுக்காக சொன்னதில்லை. நான் தமிழ்மணத்தை 7 வருடங்களாக வாசித்து வருகிறேன். கும்மிகளும் சுவாரசியம் தான். ஆனால் நீங்கள் என்ன எழுத வேண்டும் என்பதை மற்றவர்கள் கட்டளையிடக்கூடாதோ அதே போல் வெற்று மொக்கைகளால் தமிழ்மணத்தை நிரப்புவதும் ஏற்க முடியாது. முடிந்தால் 100 பின்னூட்டங்கள் பெற்ற முதல் தமிழ் வலைப்பதிவு தேடிப்பாருங்கள். கும்மிகூட எவ்வளவு சுவாரசியம் என்று தெரியும்.
பெயரிலி கலகம் நன்மையில் முடிந்தது நிறைய பேருக்கு மகிழ்வே.///


தமிழ் மணத்தின் விடுதலைக்கு நாங்கள் காரணமாக இருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியே நண்பரே... மற்றபடி நீங்கள் சொல்வதை எல்லாம் தேடி பார்க்க எங்களுக்கு நேரம் இல்லை... எங்களுக்கு கும்மி அடிக்கவே நேரம் போதவில்லை! தொடர்ந்து தமிழ் மணத்தை நீங்கள் வாசித்து உங்கள் இலக்கிய பசியை தீர்த்துக்கொள்ளுங்கள்! ( கண்டிப்பாக இதுவும் கிண்டலுக்கு இல்லை நண்பரே!)

வைகை said...

வெளங்காதவன் said...
//என்று தெரியும்.
பெயரிலி கலகம் நன்மையில் முடிந்தது நிறைய பேருக்கு மகிழ்வே.//

அண்ணே! என்ன சொல்ல வாரீங்க?//////

அண்ணே விடுங்க... அவரு நினைச்சத அவர் சொல்றாரு :))

வெளங்காதவன்™ said...

//வைகை said...

வெளங்காதவன் said...
//என்று தெரியும்.
பெயரிலி கலகம் நன்மையில் முடிந்தது நிறைய பேருக்கு மகிழ்வே.//

அண்ணே! என்ன சொல்ல வாரீங்க?//////

அண்ணே விடுங்க... அவரு நினைச்சத அவர் சொல்றாரு :))////

-------------(அமைதி எனக் கொள்க)

வெளங்காதவன்™ said...

@வைகை-
//தமிழ் மணத்தின் விடுதலைக்கு நாங்கள் காரணமாக இருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியே நண்பரே... மற்றபடி நீங்கள் சொல்வதை எல்லாம் தேடி பார்க்க எங்களுக்கு நேரம் இல்லை... எங்களுக்கு கும்மி அடிக்கவே நேரம் போதவில்லை! தொடர்ந்து தமிழ் மணத்தை நீங்கள் வாசித்து உங்கள் இலக்கிய பசியை தீர்த்துக்கொள்ளுங்கள்! ( கண்டிப்பாக இதுவும் கிண்டலுக்கு இல்லை நண்பரே!)///

சாப்டீங்களா தல?

துணிந்து சொல்பவன் said...
This comment has been removed by the author.
துணிந்து சொல்பவன் said...

@ Stock
//பெயரிலி கலகம் நன்மையில் முடிந்தது நிறைய பேருக்கு மகிழ்வே.//

பெயரிலி கலகம் செய்தார் என்பதை ஒப்புக் கொண்டவரையில் என் நன்றிகள்!

ஒரு பதிவை மொக்கை என்பதும் அருமை என்பதும் வேறு வேறானது என்று புரிந்து கொண்டிருந்தீர்களானால் உங்களுக்கு என் அனுதாபங்கள். இதற்கு காமெடி நடிகர் S. Ve. சேகர் சொன்னதுதான் நானும் சொல்வேன்,
"என் நாடகங்களைப் பார்க்க வருகிறவர்கள் மகிழ்ச்சிக்காகத் தான் வருகிறார்கள், அவர்களை மகிழ்விப்பதுதான் என் வேலை, அதை விட்டுவிட்டு கருத்து சொல்லுங்கள், கதை சொல்லுங்கள் என்று வீண் வாதம் செய்பவர்களுடன் நான் எந்த தர்க்கமும் செய்ய விரும்பவில்லை"

கருத்தாழமிக்க பதிவுகளை எழுதுவதை விட, மொக்கையாக எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குப் புரியும்.
ஏனென்றால் எனக்கு மொக்கை எழுத வராது, என்னுடைய பதிவுகளை படித்துப் பாருங்கள்! #Advertisement
:)

பெசொவி said...

99

பெசொவி said...

100

பெசொவி said...

me the 50 & me the 100!
hihi..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பெசொவி said...

me the 50 & me the 100!
hihi..//

So u don't have any வேலைவெட்டி

வெளங்காதவன்™ said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பெசொவி said...

me the 50 & me the 100!
hihi..//

So u don't have any வேலைவெட்டி///
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)-
ஆமா, போலீஸ் அண்ணாச்சி எந்நேரமும் "வேலை"தான் செய்வார்...

பெசொவி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

So u don't have any வேலைவெட்டி
October 20, 2011 11:30 AM //

Yes, I don't have any வெட்டி வேலை like you have :))

டிராகன் said...

NICE AND CLASS

Anonymous said...

தெளிவான விளக்கம் ., உறுதியான நிலைப்பாடு ., .,

தொடரட்டும் பணி உங்கள் பாணியில் ............................

கல்பனா இராஜேந்திரன் ...................

Unknown said...

ஆம் நண்பரே

நாம் எடுத்திருக்கும் முடிவு சரியே

இனியும் நாம் தமிழ்மணத்தில் இனையப்போவது இல்லை

வெளங்காதவன்™ said...

தமிழ்மணம் சவூதியில் தடை செய்யப்பட்டதை அடுத்து தடையை நீக்கக் கோரியவர்களில் பன்னி அண்ணனும் ஒருவர் என்று கேள்விப்பட்டேன். பெருந்தன்மைக்கு வாழ்த்துக்கள்!

#ஐ ரியலி லைக் திஸ் அப்ரோச் அண்ணே!

சி.பி.செந்தில்குமார் said...

நல்லதொரு விளக்கம்

Sen22 said...

அருமையான விளக்கம் கொடுத்துருக்கீங்க..

தொடரட்டும் உங்கள் பணி...

நாங்க இருக்கோம் உங்களுக்கு சப்போர்ட் பண்ண....

Senthil,
Bangalore..

சம்பத்குமார் said...

//இந்த பிரச்சனையில் குளிர் காய நினைக்கும் சிலர் நாட்டாமை பண்ண வருவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வில்லை.. மேலும் எங்களை ஏதோ மத உணர்வோடும் ஜாதி உணர்வோடும் சம்பந்தபடுத்த சிலர் ஆசைப்பட்டு பின்னூட்டம் இடுவது தெரிகிறது.. இதன் மூலம் நாங்கள் சொல்வது நாங்கள் எந்த மதத்துக்கோ ஜாதிகோ எதிரானவர்கள் இல்லை..அது எங்களுக்கு தேவையும் இல்லை.. //

தங்களது நிலைப்பாடே எனக்கும்..

நன்றியுடன்
சம்பத்குமார்

Jaleela Kamal said...

விளக்கம் அருமை

நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்

அப்பாதுரை said...

//தூங்கி எழுந்த சிலர் நாட்டாமை பண்ணுகிறேன் என்று விடும் பதிவிலோ பஸ்சிலோ

:)

//அவர்களின் புரிந்துணர்வுடன் கூடிய முன்னேற்றங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!
பண்பட்ட கருத்து. பாராட்டுக்கள்.

Prabu Krishna said...

நூறுக்கு வாழ்த்துகள்.

விளக்கம் அருமை.

Prabu Krishna said...

ஆமா அண்ணன்ஸ் அடுத்த பயோ-டேட்டா எப்போ?.

ஹி ஹி ஹி