Tuesday, October 8, 2013

HUNT FOR HINT -3 - புதிய அறிவிப்பு!

இணைய நண்பர்களே!

நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த Hunt For Hint - 3 போட்டி தவிர்க்கமுடியாத சில தொழிநுட்பக் காரணங்களால் நாங்கள் ஏற்கனவே அறிவித்திருந்த அக்டோபர் 9 ம் தேதியில் ஆரம்பிக்கமுடியவில்லை! போட்டி இன்னும் பொலிவுடனும் புதுமையுடனும் அக்டோபர் 17ம் தேதியில் வரும்! உங்களது எதிர்பார்ப்பையும் இந்த ஏமாற்றத்தையும் நாங்கள் உணர்ந்தே இருக்கின்றோம்! ஆகவே கண்டிப்பாக உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் இந்தப் போட்டியை வரும் 17ம் தேதி உங்கள் முன் படைக்கின்றோம்! தொடர்ந்து உங்கள் ஆதரவை எங்களுக்குத் தாருங்கள்! நன்றி!




இந்த கேமைப் பற்றி தெரியாத புதியவர்களுக்காக  இந்த கேம் பற்றிய சிறிய அறிமுகம்:

என்ன புதிர் போட்டி இது?

1. இந்தூர் ஐஐம் மாணவர்களால் வருடாவருடம் நடத்தப்படும் "KLUELESS" விளையாட்டின் தாக்கத்தால் உருவாக்கப்பட்ட விளையாட்டு இது.

2. நேரடி கேள்விகள் இருக்காது.... படமாகவோ, எழுத்தாகவோ, மவுஸ் கிளிக்காகவோ இப்படி வித்தியாசமாக இருக்கும்

3. ஒவ்வொரு கேள்விக்குமான விடைக்கும் க்ளூ கொடுக்கப்பட்ட்டு இருக்கும். பேஜ் சோர்ஸ், பேஜ் டைட்டில், url name, image name அல்லது வெப்பேஜில் ஏதாவது ஒரு இடத்தில் க்ளூ இருக்கும்... அதை கண்டுபிடித்து  விடை சொல்ல வேண்டும்

4. விடைகளை அதற்கான ஆன்சர் பாக்சிலோ, url name மாற்றுவது போன்றோ, கிளிக் செய்வது போன்றோ இருக்கும்.... 

5. விடையை  கொடுத்தவுடன் அடுத்த பக்கத்திற்கு (லெவலுக்கு)  செல்லும்

6. இப்படி மொத்த லெவல்களை யார் முதலில் முடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்....

7. அனைத்து லெவல்களையும்  முடிப்பவர்களின் பெயர்கள் “HALL OF FAME”லும் “டெரர் கும்மி.காம்”மிலும் வெளியிடப்படும்.

8. போட்டியில் கலந்து கொள்ள எந்த வித நிபந்தனையும் இல்லை. டெரர் கும்மியை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களை தவிர யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்

9. புதிர் முடிக்க டைம் லிமிட் கிடையாது. முதலில் முடிப்பவர்களுக்கு பரிசு.



பரிசு விவரம்:

முதல் பரிசு: 5000 ரூபாய்
இரண்டாம் பரிசு: 3000 ரூபாய்
மூன்றாம் பரிசு: 2000 ரூபாய்
இரண்டு ஆறுதல் பரிசு தலா 1000 ரூபாய்




இந்த போட்டியை பற்றிய மேலும் விரங்கள் அறிய கீழ்கண்ட சமூகத் தளங்களில் உள்ள எங்கள் பேஜ்களை பாருங்கள்......


கடந்த இரண்டு வருடமும் நடந்த கேம்களை  புதியதாக விளையாடி பயிற்சி செய்ய...

2011 கேம் 

2012 கேம் 

இந்தப் போட்டியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள 


இந்த வருடமும் இந்த விளையாட்டு உங்களுக்கு நல்லதொரு அனுபவத்தை தருமென்று நம்புகிறோம். இதனைப்பற்றிய விபரங்களை அடிக்கடி உங்களுக்குத் தருகிறோம். தொடர்ந்து எங்களோடு இணைந்திருங்கள்!

வாழ்த்துக்களுடன் 
டெரர்கும்மி 

***********************************************************************************************

Dear Friends,
Due to some technical issues, Release of Hunt For Hint - Season 3 postponed for a week

Game will be released by October 17th, 2013 at 10.00 Am IST

We know it will be too disappointing for you like we felt. we feel sorry for it which is beyond our control. We regret for the inconvenience caused.

Rest assured Game will be back with a bang and rock you with new features, designs and unimagined ways of Levels.

With Regards,
Terror Kummi.

3 comments:

Unknown said...

பரவாயில்லை,பொறுமையாக புது மெருகுடன் உங்கள் வசதிக்கேற்ப தொடங்குங்கள்,ஆவலுடன் காத்திருப்போம்!

Madhavan Srinivasagopalan said...

நல்லாத்தான போயிட்டு இருந்திச்சு..
ஏன்.. ஏன்.. எண்டா இப்படி...?

Jazeela said...

//கடந்த இரண்டு வருடமும் நடந்த கேம்களை புதியதாக விளையாடி பயிற்சி செய்ய...//

பயிற்சி செய்ய முடியலையே. லாக்கின் ஆக மாட்டிங்குது.