இணைய நண்பர்களே!
நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த Hunt For Hint-3 எதிர்பாராத சிறிது கால தாமதத்திற்குப் பிறகு நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 17ம் தேதி வியாழக் கிழமை இந்திய நேரம் காலை 10 மணிக்கு தொடங்கும் என்பதை மகிழ்ச்சியோடும் பெருமையோடும் உங்களுக்குத் தெரிவிக்கிறோம்! கடந்த வருடங்களைபோல இந்த வருடமும் உங்கள் ஆதரவையும் அன்பையும் எதிர்பார்த்துக் களம் இறங்குகின்றோம்! நன்றி!
இந்த கேமைப் பற்றி தெரியாத புதியவர்களுக்காக இந்த கேம் பற்றிய சிறிய அறிமுகம்:
பரிசு விவரம்:
முதல் பரிசு: 5000 ரூபாய்
இரண்டாம் பரிசு: 3000 ரூபாய்
மூன்றாம் பரிசு: 2000 ரூபாய்
இரண்டு ஆறுதல் பரிசு தலா 1000 ரூபாய்.
என்ன புதிர் போட்டி இது?
1. இந்தூர் ஐஐம் மாணவர்களால் வருடாவருடம் நடத்தப்படும் "KLUELESS" விளையாட்டின் தாக்கத்தால் உருவாக்கப்பட்ட விளையாட்டு இது.
2. நேரடி கேள்விகள் இருக்காது.... படமாகவோ, எழுத்தாகவோ, மவுஸ் கிளிக்காகவோ இப்படி வித்தியாசமாக இருக்கும்
3. ஒவ்வொரு கேள்விக்குமான விடைக்கும் க்ளூ கொடுக்கப்பட்ட்டு இருக்கும். பேஜ் சோர்ஸ், பேஜ் டைட்டில், url name, image name அல்லது வெப்பேஜில் ஏதாவது ஒரு இடத்தில் க்ளூ இருக்கும்... அதை கண்டுபிடித்து விடை சொல்ல வேண்டும்
4. விடைகளை அதற்கான ஆன்சர் பாக்சிலோ, url name மாற்றுவது போன்றோ, கிளிக் செய்வது போன்றோ இருக்கும்....
5. விடையை கொடுத்தவுடன் அடுத்த பக்கத்திற்கு (லெவலுக்கு) செல்லும்
6. இப்படி மொத்த லெவல்களை யார் முதலில் முடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்....
7. அனைத்து லெவல்களையும் முடிப்பவர்களின் பெயர்கள் “HALL OF FAME”லும் “டெரர் கும்மி.காம்”மிலும் வெளியிடப்படும்.
8. போட்டியில் கலந்து கொள்ள எந்த வித நிபந்தனையும் இல்லை. டெரர் கும்மியை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களை தவிர யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்
9. புதிர் முடிக்க டைம் லிமிட் கிடையாது. முதலில் முடிப்பவர்களுக்கு பரிசு.
முதல் பரிசு: 5000 ரூபாய்
இரண்டாம் பரிசு: 3000 ரூபாய்
மூன்றாம் பரிசு: 2000 ரூபாய்
இரண்டு ஆறுதல் பரிசு தலா 1000 ரூபாய்.
இந்த போட்டியை பற்றிய மேலும் விரங்கள் அறிய கீழ்கண்ட சமூகத் தளங்களில் உள்ள எங்கள் பேஜ்களை பாருங்கள்......
Facebook Pagehttps://www.facebook.com/HuntForHint
Facebook Group-https://www.facebook. com/groups/huntforhint
Twitter - https://twitter.com/HfH_tk
கடந்த இரண்டு வருடமும் நடந்த கேம்களை புதியதாக விளையாடி பயிற்சி செய்ய...
2011 கேம்
2012 கேம்
இந்தப் போட்டியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள
இந்த வருடமும் இந்த விளையாட்டு உங்களுக்கு நல்லதொரு அனுபவத்தை தருமென்று நம்புகிறோம். நாளை மறுநாள் கேமிற்கான சுட்டியுடன் உங்களைச் சந்திக்கின்றோம்!
வாழ்த்துக்களுடன்
டெரர்கும்மி
3 comments:
அப்பாடா..................ஒரு வழியா எல்லாம் சரி பண்ணி போட்டி தொடங்கப் போகுது!கெட் ரெடி மக்கள்'ஸ்!!!
time is 9.05am
:(
Game starts at 10 am...
Post a Comment