Tuesday, October 22, 2013

ஹண்ட் ஃபார் ஹிண்ட் 3 - போட்டி முடிவுகள்!

இணைய நண்பர்களே,

கடந்த 5 நாட்களாக உங்களை ஒட்டு மொத்தமாக கட்டி போட்ட ஹண்ட் ஃபார் ஹிண்ட் - 3யின் வெற்றியாளர்கள் முடிவாகிவிட்டது. அதற்கு முன்னதாக இந்த இமாலய வெற்றியை எங்களுக்கு வழங்கிய உங்கள் அனைவருக்கும் எங்களின் நன்றியை டெரர்கும்மி சார்பாக தெரிவித்து கொள்கிறோம்




கேம் பற்றிய சில சுவாரசிய தகவல்கள்:

நேற்று நள்ளிரவு (21/10/2013) வரையில் பதிவான,

மொத்த போட்டியாளர்கள்                   : 412
HALL OF FAME ல் இடம்பிடித்தவர்கள்  : 12
21 - 30 லெவலில் இருப்பவர்கள்            : 12
16 - 20 லெவலில் இருப்பவர்கள்            : 8
11 - 15 லெவலில் இருப்பவர்கள்            : 16

கேம் உருவான விதம்: 

கடந்த இரண்டு வருடங்களாக  நடந்த ஹண்ட் ஃபார் ஹிண்ட்  மாபெரும் வெற்றி இந்த வருடமும் இதை தொடர்ந்து நடத்த எங்களுக்கு ஊக்கம் தந்தது. இந்தப் போட்டியைப் பற்றி அவ்வப்போது சமூக வலைத்தளங்களில்  தெரிவித்து இருந்தோம். இதை கேள்விபட்டு உங்களில் பலர் நேரடியாகவும் இமெயில் மூலமாகவும் எங்களை ஊக்கமூட்டி உற்சாகபடுத்தினர். குறிப்பாக எங்கள் டெரர்கும்மி நண்பர்கள் துணிந்து இறங்கலாம் வெற்றியைவிட மனதிருப்திதான் முக்கியம் என உணர்த்தி எங்களை புதுப்பொலிவுடன் விளையாட்டை வடிவமைக்க செய்தனர்.

சரியென செயலில் இறங்கி குறைந்த நாட்களில் நாட்களில் முழுவடிவத்துடன் கொண்டுவந்துவிட்டோம் ஆனாலும் கடைசி நேர எதிர்பாராத சில தொழில் நுட்பப் பிரச்சனைகளால் முதலில் அறிவித்த தேதியில் கொண்டுவர முடியவில்லை, ஆனாலும் எங்கள் Hunt For Hint குழுவின் தீராத முயற்சியினால் அடுத்து அறிவித்த மாற்றுத் தேதியில் சரியான முறையில் கொண்டுவந்து  இதோ உங்கள் முன்னிலையில் செயல்படுத்திவிட்டோம்.

பணம் மட்டும் அல்ல, கேம் வடிவமைப்பிலும் கேம் மார்க்கெட்டிங்கிலும் முழு நேர உழைப்பையும், சில இரவுகளின் தூக்கத்தையும் செலவழித்து இந்த கேம்மிற்கு முழு உருவம் கிடைக்கச் செய்ய காரணம் எங்களின் டீம் ஒர்க் மட்டுமே..  ! 

இதற்கு அனு அவர்களுக்கு சிறப்பு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்!
எங்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் தந்து உதவிய உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

சரி வெற்றியாளர்கள் பற்றிய அறிவிப்புக்கு செல்லலாம்

HALL OF FAME: 

நாம் ஏற்கனவே அறிவித்தது போல.......

தற்போது HOFல் இடம் பிடித்து 6 முதல் 12 இடம் வரை இருப்பவர்கள் 
 

Rank Name Date Time
12 Ahamed 10/21/2013 10:27 PM
11 Yo 10/21/2013 4:40 PM
10 Minnie 10/21/2013 2:27 PM
9 Subadhra Ravichandran 10/21/2013 12:14 PM
8 vedhalam 10/21/2013 4:17 AM
7 dhoniv 10/20/2013 8:38 PM
6 Sathya 10/20/2013 8:10 PM


5வது 4வது இடத்தை பிடித்து ரூ 500 ஆறுதல் பரிசு பெறுபவர்கள்


Rank Name Date Time
4 penathal 10/20/2013 7:48 PM
5 Lathamagan 10/20/2013 7:51 PM
3வது இடத்தை பிடித்து ரூ 2000 பரிசு பெறுபவர்


Rank Name Date Time
3 Dhinesh Kumararaman 10/20/2013 7:36 PM
2வது இடத்தை பிடித்து ரூ 3000 பரிசு பெறுபவர்
  
Rank Name Date Time
2 Sukumar Swaminathan 10/20/2013 7:30 PM

பலத்த போட்டிக்கு நடுவில்  திறமையாக விளையாடி ஹால் ஆப் பேம்மில் முதலில் நுழைந்து ஹண்ட் ஃபார் ஹிண்ட் - 3 போட்டியின் முதல் இடத்தை பிடித்து ரூ 5000 பரிசு பெறும் வெற்றியாளர்


Rank Name Date Time
1 Gargy Manoharan 10/20/2013 7:29 PM

இந்த சந்தோஷமான சமயத்தில் இன்னும் ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். பலர் குழுவாக விளையாடி தனிதனியாக தங்கள் பெயர்களை முன்னனியில் கொண்டு செல்வதாகவும் விடைகளையும் க்ளூகளையும் பகிர்ந்து கொள்வதாகவும் எங்களுக்கு தகவல்கள் வந்தன. அவற்றை பல சமூக தளங்களில் மறைமுகமாகவும் நேரடியாகவும் சுட்டி காட்டினோம். 

இவைகளை நாங்கள் செய்ய காரணம் மற்றவர்களின் கடின உழைப்பு வீணாக கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே என்பதை உங்களுக்கு தெரிவித்து கொண்டு யாருக்கேனும் எங்களால் மன வருத்தம் ஏற்பட்டு இருந்தாதால் அதற்கு எங்கள் வருத்ததையும் இங்கே பதிவு செய்து கொள்கிறோம்.

நாங்களும் எங்களின் அன்றாட பணிகளுக்கு இடையில்தான் இதைச் செய்கின்றோம்! இதனால் எங்களுக்கு கிடைக்கும் திருப்தி மட்டுமே லாபமாகக் கொள்கிறோம்! ஆகவே விளையாடும் நண்பர்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது உங்களின் நேர்மையை மட்டுமே! 

டிஸ்கி: தொடர்ந்து விளையாடி கொண்டு இருப்பவர்களின் ஆர்வத்தை கருதி விடைகள் தற்போது வெளியிடப்படமாட்டது. 


விளையாட்டில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்துகளையும் அனுபவத்தையும் கமெண்ட்டில் தெரியப்படுத்த விரும்புகிறோம்.

நீங்கள் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியப்பட்டு இருக்காது. ஒவ்வொரு விடைகளை கண்டுபிடிப்பது எவ்வளவு கடினம் என எங்களுக்குத் தெரியும், நீங்கள் செய்த உழைப்பை நாங்கள் அறியாமல் இல்லை. உங்கள் உழைப்பிற்கு எங்கள் டீம் தலை வணங்குகிறது.

இந்த விளையாட்டால் நீங்களும், கேள்விகள் வடிவமைப்பால் நாங்களும் பல விஷயங்களை கற்றுகொண்டதை மறுக்க முடியாது. ஒரு வித்தியாசமான போட்டியை உங்களுக்கு வழங்கிய மகிழ்ச்சியுடன் உங்களிடம் இருந்து  விடை பெறுகிறோம். கேம் வெப்சைட் தொடர்ந்து இயங்கும்.

வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகள்....
மற்றும்
கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்....

மேலும் ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் மீண்டும் சந்திப்போம்....

இது வரை HALL OF FAME சென்றவர்களை காண இங்கே சொடுக்கவும்

நன்றியுடன்,
டெரர்கும்மி 

.

23 comments:

வெளங்காதவன்™ said...

எடேய் கோபி,

ஆன்சர் கொடுக்கறபோது சொல்லுவே. பூராவும் பாக்கணும்.

வெளங்காதவன்™ said...

அண்ணனின், அளப்பரிய சேவையை குறிப்பிடாததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

NaSo said...

சேவை எல்லாம் இங்கே கிடைக்காதுங்க தோழர்..

கேரளாக்காரன் said...

இந்த வருடம் சின்ன தாதா என்னும் பெயரில் விளையாடினேன். மூனாவது லெவல் முடிச்சதுமே Completed Levels பகுதியில் எனக்கு அனைத்து Levels- m தெரிந்தது உடனடியாக தகவல் தெரிவித்தேன்.

ஆனால் 30 நிமிடத்துக்குள் சரி செய்யபப்ட்டது.


Number என்னும் லெவல் விளையாடும்பொது தற்செயலாக Action.Aspx என்று மாற்றியதும் அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது, அப்புறம் இதை விளையாண்டால் அது குழுவினரின் கடின உழைப்புக்கு செய்யும் துரோகம் என வெள்ளி இரவோடு விளையாடுவதை விட்டுவிட்டேன்.

ஏனென்றால் எல்லா லெவலுக்கான URL என் கையில் இருந்தது



பின்பு மீண்டும் நியாயமாக விளையாடலாம் என ஆர்வமாக விளையாடவந்த பொது சிலர் குழு அமைத்து விளையாடுவது தெரிந்தது.

ஒத்த மூளை 6 மூளை கூட போட்டி போடா முடியாதுன்னு எஸ்கேப் ஆகிட்டேன்.

கேரளாக்காரன் said...

யாரந்த 6 பேர்ன்னு கும்மி குழுவினருக்கு நான் சொல்லவேண்டியதில்லன்னு நினைக்கிறேன்.

போன வருஷம் இறுதிச்சுற்றுக்குள் இரண்டாவது ஆளாக நுழைந்து விளையாடிக்கொண்டிந்தேன் அப்போது நானும் இன்னொருவரும் குழு அமைத்து விளையாடுவதாக சொல்லி ப்ளாக் செய்யப்பட்டேன்.

பின்பு விளக்கம் குடுத்ததும் Unblock செய்தாலும் அதற்க்கு மேலும் விளையாட ஆர்வம் இல்லாததால் வெளியேறிவிட்டேன்.

ஆக இந்த ஆண்டும் மோசமான அனுபவமே!.

அடுத்த வருடம் பார்க்கலாம்.

கேரளாக்காரன் said...

நியாயமாக விளையாண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Unknown said...

Though i have finished the game a day back, i am yet to come back to normal.. Whole day i was thinking about this game. Your hard work, efforts in making this game are uncountable. You should have spent lot of time, may be sleepless nights... i have no words to appreciate your sincere efforts on building this game. I am very much happy and satisfied with the overall game experience. I have to really thank you everyone from the team, mannn!! you people have done a excellent job.

I am stimulated, fresh, excited !!! Thanks for giving this great opportunity for playing this game.

I have one suggestion, I have heard from people that this game is popular around blogger world (Ahem ! I am not a blogger though, i came to know about this game through Facebook), i feel that this game should reach a big audience circle, since this is such a 'mind' blowing game. Anyways i have told about this game to my friends circle. Hope more people would join the next season and again the game will be an awesomatic !!! ;)

Once again thanks a lot team :)

BLAST!!!

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். வெற்றி தோல்வி முக்கயமில்லை விளையாடுவது தான் முக்கியம் என்று எண்ணி தொடர்ந்து விளையாடிய நண்பர்களுக்கும் பாராட்டுக்கள் :)

கேரளாக்காரன் said...

1 Gargy Manoharan 10/20/2013 7:29 PM
2 Sukumar Swaminathan 10/20/2013 7:30 PM
3 Dhinesh Kumararaman 10/20/2013 7:36 PM
4 penathal 10/20/2013 7:48 PM
5 Lathamagan 10/20/2013 7:51 PM
7 dhoniv 10/20/2013 8:38 PM
6 Sathya 10/20/2013 8:10 PM


இவங்க எல்லாரும் முடிச்சது ஒருசில நிமிடங்கள் வித்யாசத்தில். அவ்வளவு கஷ்டமான ஒரு கேமின் லாஸ்ட் லெவலை எப்படி இப்படி ஒரு நெருங்கிய கால வித்யாசத்தில் முடிக்க முடியும்? எல்லாருக்கும் ஒரே நிமிடத்தில் ஆன்ஸர் தோன்றிவிட்டதா? நான் காரணம் கண்டுபிடிக்கிறேன் என நினைப்பவர்களுக்கு: மேற்கண்ட போட்டியாளர்களை முதலில் இருந்தே நான் கவனித்து வந்தேன் எனக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். என்னைப்போல் வெறுத்து பாதியில் விலகியவர்கள் ஏராளம். இவ்வளவு முயற்சிசெய்து ஆர்கனைஸ் செய்யப்பட்ட ஒரு கேம் நியாயமாக இல்லை என்று ஃபீட்பேக் கூறுவதில் தவறில்லை என நினைக்கிறேன். nothing more nothing less.


கடைசியாக, போட்டியில் ஜெயிப்பது முக்கியமில்லை. விளையாடுவதும் முக்கியமில்லை. எப்படி விளையாடுகிறோம் என்பதே முக்கியம். Its not the end that matters, it is the means. Anyway congrats to the so called winners.

Sarwan said...

kudos to the team

Unknown said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!

கேரளாக்காரன் said...
This comment has been removed by the author.
Neechalkaran said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் உழைப்பிற்கு ஒரு சபாஸ். வேறு காரணங்களால் என்னால் தொடர்ந்து விளையாட முடியாமல் போய்விட்டது.:(

ராஜ் said...

//மேற்கண்ட போட்டியாளர்களை முதலில் இருந்தே நான் கவனித்து வந்தேன் எனக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். என்னைப்போல் வெறுத்து பாதியில் விலகியவர்கள் ஏராளம்.///

இதே காரணத்துக்காக தான் நான் போட்டியில் இருந்து பாதியிலே விலகினேன். :(:(

Unknown said...
This comment has been removed by the author.
கேரளாக்காரன் said...

Admins what is ur opinion about my feedback?

டெரர் கும்மி said...

திரு. கேரளாக்காரன்,

விளையாடியவர்கள் அனைவரையும் தொடர்ச்சியாக கண்காணித்துக் கொண்டுதான் இருந்தோம். வெற்றி பெற்றவர்கள் குறித்து எங்கள் டெக்னிக்கல் டீம் அது மாதிரியான எந்த வித தவறான செயலகளையும் report செய்யவில்லை. குறைவான நேர இடைவெளியில் இருவர் ஒரே லெவலை கடந்தாலே அவர்கள் கடும் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் குழு அமைத்து விளையாடவில்லை என்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே மேற்கொண்டு விளையாட அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே 6 பேர் குறைந்த நேர இடைவெளியில் முடித்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது. தங்களுக்கு ஏற்பட்ட இந்த சந்தேகம் ரிசல்ட்டை பார்க்கும் சிறுபிள்ளைக்கும் கூட வரும். ஆனால் அதை பற்றி நாங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுத்திருக்க மாட்டோம் என்ற தங்கள் புரிதல் மிகவும் தவறானது. அவர்கள் குழு அமைத்து விளையாடியதற்கான ஆதாரங்கள் எதுவும் எங்களிடம் இல்லை, குறைந்த நேர இடைவெளி என்பது தற்செயலாக அமைந்ததே.

வெறும் யூக குற்றச்சாட்டிற்கு பதில் உங்களிடம் ஏதாவது ஆதாரம் இருந்தால் தெரியப்படுத்தவும். வெறும் கால இடைவெளியை மட்டுமே கணக்கில் வைத்து நாங்கள் யாரையும் குற்றம் சொல்ல முடியாது.

நன்றி!

Philosophy Prabhakaran said...

விளையாட்டு செம !

முதலிரண்டு வருடங்கள் தவற விட்டுவிட்டோமே என்று வருந்த வேண்டியதாகி போய்விட்டது...

ஆனால் ஒன்று, இனி வரும் ஆண்டுகளில் விளையாடுவதாக இருப்பின் ஆபீஸுக்கு ரெண்டுநாள் லீவ் சொல்லிவிட்டு விளையாட வேண்டும் :)

வெளங்காதவன்™ said...

வைகை.

நான், நம்ம திரட் மட்டுமில்லாம, நாலு பேருட்ட மெயில்ல க்ளு கேட்டு வெளாண்டேன். நேரடியான விடை எதையும் பெறவில்லை. ஒன்லி க்ளு மட்டும்.

ஆனா, எனக்கு ஒரு விஷயம் பிரியல. டைரக்ட்டா மெயில் பண்ண ஆப்சன் கொடுத்து இருக்கீறே அது எதுக்குவோய்?

#வெளக்கவும்.

கேரளாக்காரன் said...

// வெற்றி பெற்றவர்கள் குறித்து எங்கள் டெக்னிக்கல் டீம் அது மாதிரியான எந்த வித தவறான செயலகளையும் report செய்யவில்லை.///

அப்போ Report செய்யபடாமல் இருப்பதுதான் வெற்றி பெற தகுதி போல

//குறைவான நேர இடைவெளியில் இருவர் ஒரே லெவலை கடந்தாலே அவர்கள் கடும் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்//

அது கடைசி சில லேவல்களோட டைமிங்க பாத்தாலே தெரியுது பாஸ் :)

// 6 பேர் குறைந்த நேர இடைவெளியில் முடித்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது. தங்களுக்கு ஏற்பட்ட இந்த சந்தேகம் ரிசல்ட்டை பார்க்கும் சிறுபிள்ளைக்கும் கூட வரும். ஆனால் அதை பற்றி நாங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுத்திருக்க மாட்டோம் என்ற தங்கள் புரிதல் மிகவும் தவறானது. //

ஒருவர் இருவரல்ல ஆறு பெரும் இவ்வளவு சிறிய இடைவெளியில் பெரும்பான்மை லெவலை முடிக்க முடியுமா என்பதே என் கேள்வி

//அவர்கள் குழு அமைத்து விளையாடியதற்கான ஆதாரங்கள் எதுவும் எங்களிடம் இல்லை, //

உங்களிடமே இல்லன்னா எங்களிடம் எப்படி இருக்கும் பாஸ்?

அப்போ ஆதாரமில்லாமல் தப்பு பண்ணிக்கலாமா?

//குறைந்த நேர இடைவெளி என்பது தற்செயலாக அமைந்ததே. //

Worst case Probability போட்டாலும் வராது பாஸ் நீங்க டிசைன் பண்ண Clever கேம்ல

//வெறும் யூக குற்றச்சாட்டிற்கு பதில் உங்களிடம் ஏதாவது ஆதாரம் இருந்தால் தெரியப்படுத்தவும். வெறும் கால இடைவெளியை மட்டுமே கணக்கில் வைத்து நாங்கள் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. //

இது யூகமல்ல என்பது பார்வையாளர்கள் அனைவருக்கும் தெரியும்.

அவர்களனைவரும் முகனூலில் நண்பர்கள் அதைத்தவிர ஆதாரம் தர என்னிடம் எந்த விதமான Source-ம் இல்லை

Madhavan Srinivasagopalan said...

// அவர்களனைவரும் முகனூலில் நண்பர்கள் //

As on today, those who are familiar to internet, blog, etc (like those played H4H-3) obvious to be on FB network.

So, what so great abt. that ?

கேரளாக்காரன் said...

//So, what so great abt. that?//


I haven't mentioned anything like I got a evidence or something....

//அவர்களனைவரும் முகனூலில் நண்பர்கள் அதைத்தவிர ஆதாரம் தர என்னிடம் எந்த விதமான Source-ம் இல்லை//

I don't have any proof..... That's all