Tuesday, October 29, 2013

HUNT FOR HINT - 3 - விடைகள்




இணைய நண்பர்களே,
ஹண்ட் ஃபார் ஹிண்ட் 3 போட்டி முடிந்து வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை அனுப்பும் பணி நடந்து கொண்டு இருக்கின்றது.

இன்னும் சிலர் தொடர்ந்து விளையாடிட்டு தான் இருக்காங்க. இந்த கேம்மோட தனித்துவமே பரிசை வெல்வதை விட அனைத்து லெவல்களையும் முடிக்கறப்போ கிடைக்கற சந்தோஷத்துலதான் இருக்கு. நம்மளோட விடை தவறாக இருந்தாலும் அந்த தவறிலும் ஒரு புதிய விஷயத்தை தெரிஞ்சிக்கற திருப்தி வேற எந்த விளையாட்டிலும் கிடைக்காதது.
நீங்கள் விடைகளை தேடுறப்போ மட்டும் இல்லை நாங்கள் கேள்விகளை வடிவமைக்கறப்போ கூட பல விஷயங்களை கத்துகிட்டோம். ஒவ்வொரு கேள்வியையும் உருவாக்க எங்கள் அணி பல விஷயங்களை படிக்க வேண்டி இருந்தது. இப்படிப்பட்ட கேள்விகளும் அதுக்கான விடைகள் கொண்டு வரவேண்டிய முறையையும் சுருக்கமா பார்க்கலாம். 
 

LEVEL NAME PAGE NAME ANSWER How to get the Answer
welcome welcome.aspx Click on "Click and Go to next Level" Just a Click
FB changehere.aspx Change url from changehere. aspx to like.aspx Change the url name
play like.aspx dominos / dominoes Famous Tile - based game
series series.aspx sf Number Series in backwards... Ten, Nine, Eight, Seven, Six, Five
tintin tintin.aspx workhard Adventures of dancing men chiper 
pizza number.aspx 134340 Famous Planets Mnemonic. find the ????? and get the number of that planet
yellow blue.aspx india International Maritime signal Flags
love love.aspx music Trace those letters in keyboard and get the pattern
jeep jeep.aspx brumbrella Portmanteau word - Large pitch covering used at the Edgbaston Cricket Ground, Birmingham, England from 1981 to 2001
graph economics.aspx newdelhi/new delhi Get N and E co ordinates from bar graph - N 28, 36,50 E 77, 12, 32
action action.aspx angelina jolie Find 4 hollywood films and its common thing - Jon Voight. His daughter is answer
liarparadox liarparadox.aspx portmanteau All words including Level 12 answer is Portmanteau
animals animals.aspx cites Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora is a multilateral treaty to protect endangered plants and animals
music music.aspx badge get the letters from music note and convert them as seven segment display
artificer artificer.aspx steve wilhite Artificer / inventor of GIF images
mib mib.aspx hunt find the game machine. get the code from Polybius square
art gallery missing.aspx ant check only the frame and put it under famous morse code method
nature gothicpry.aspx
pitchgyro.aspx
itchygorp.aspx
chirpygot.aspx
porgyitch.aspx
element
taste
penta
korotkoff
quincunx
get the anagram of url name and click Copyright symbol on bottom of the page
roamaround solveme.aspx righthere roamaround all the level of the game based on the equation given. L = level, U = url, I = image name, a = Answer. get the mail id and send a blank msg to receive answer
identity identity.aspx 7777 open the image in note pad. Find the hint given. find the identiy of jamesbond on that novel
text text.aspx abaaabaaba Baconian chiper
number master.aspx semafour convert the highlighted number to time and get the letters from semaphore flag signal
movie whatnext.aspx 111221 find movie and then persons who told abt that disaster. get their number and complete the number series given in the image
herodotus herodotus.aspx snowden / edward snowden change url from herodotus.aspx to herodotus.txt. get another link and decode the image in stegnography
time time.aspx mike This is a list of time zone names based on the NATO phonetic alphabet as used by the U.S. military and others
common common.aspx alcoholics anonymous get all the images and find common number for all. Relate it with traditional steps
crossword crosswords.aspx myth find 17 words. arrange balance 9 letter in the same order given. Google lead you to a famous script and decode the symbol on the image
name nameit.aspx maxicode/maxi code just find the name of the code
game cricket.aspx indonesia Operation vijay with pakistan, Operation virat with Srilanka and find Operation Gambhir with whom
count count.aspx thisistheanswertoproceed google the quote and get excel. Downlad it from url. arrange the subscripted letters in order and get the equivalent letter from column

விடைகள் வந்த விதத்தை இன்னும் விரிவாக தெரிந்துக்கொள்ள எங்கள் Answer Guideஐ இங்கு பார்க்கலாம்

Please Share your Gaming Experience and give us your feedback / suggestions to improve the game.

இத்துடன் Hunt For Hint - 3ஐ Official ஆக நிறைவு செய்கிறோம். நல்லதொரு அனுபவத்தை உங்களுக்கு வழங்கிய மகிழ்ச்சியுடன் உங்களிடம் இருந்து விடை பெறுகிறோம். மற்றுமொரு இனிய தருணத்தில் மீண்டும் இணையலாம். உங்கள் ஆதரவுக்கு ஊக்கத்திற்கும் எங்கள் நன்றிகள்.



Tuesday, October 22, 2013

ஹண்ட் ஃபார் ஹிண்ட் 3 - போட்டி முடிவுகள்!

இணைய நண்பர்களே,

கடந்த 5 நாட்களாக உங்களை ஒட்டு மொத்தமாக கட்டி போட்ட ஹண்ட் ஃபார் ஹிண்ட் - 3யின் வெற்றியாளர்கள் முடிவாகிவிட்டது. அதற்கு முன்னதாக இந்த இமாலய வெற்றியை எங்களுக்கு வழங்கிய உங்கள் அனைவருக்கும் எங்களின் நன்றியை டெரர்கும்மி சார்பாக தெரிவித்து கொள்கிறோம்




கேம் பற்றிய சில சுவாரசிய தகவல்கள்:

நேற்று நள்ளிரவு (21/10/2013) வரையில் பதிவான,

மொத்த போட்டியாளர்கள்                   : 412
HALL OF FAME ல் இடம்பிடித்தவர்கள்  : 12
21 - 30 லெவலில் இருப்பவர்கள்            : 12
16 - 20 லெவலில் இருப்பவர்கள்            : 8
11 - 15 லெவலில் இருப்பவர்கள்            : 16

கேம் உருவான விதம்: 

கடந்த இரண்டு வருடங்களாக  நடந்த ஹண்ட் ஃபார் ஹிண்ட்  மாபெரும் வெற்றி இந்த வருடமும் இதை தொடர்ந்து நடத்த எங்களுக்கு ஊக்கம் தந்தது. இந்தப் போட்டியைப் பற்றி அவ்வப்போது சமூக வலைத்தளங்களில்  தெரிவித்து இருந்தோம். இதை கேள்விபட்டு உங்களில் பலர் நேரடியாகவும் இமெயில் மூலமாகவும் எங்களை ஊக்கமூட்டி உற்சாகபடுத்தினர். குறிப்பாக எங்கள் டெரர்கும்மி நண்பர்கள் துணிந்து இறங்கலாம் வெற்றியைவிட மனதிருப்திதான் முக்கியம் என உணர்த்தி எங்களை புதுப்பொலிவுடன் விளையாட்டை வடிவமைக்க செய்தனர்.

சரியென செயலில் இறங்கி குறைந்த நாட்களில் நாட்களில் முழுவடிவத்துடன் கொண்டுவந்துவிட்டோம் ஆனாலும் கடைசி நேர எதிர்பாராத சில தொழில் நுட்பப் பிரச்சனைகளால் முதலில் அறிவித்த தேதியில் கொண்டுவர முடியவில்லை, ஆனாலும் எங்கள் Hunt For Hint குழுவின் தீராத முயற்சியினால் அடுத்து அறிவித்த மாற்றுத் தேதியில் சரியான முறையில் கொண்டுவந்து  இதோ உங்கள் முன்னிலையில் செயல்படுத்திவிட்டோம்.

பணம் மட்டும் அல்ல, கேம் வடிவமைப்பிலும் கேம் மார்க்கெட்டிங்கிலும் முழு நேர உழைப்பையும், சில இரவுகளின் தூக்கத்தையும் செலவழித்து இந்த கேம்மிற்கு முழு உருவம் கிடைக்கச் செய்ய காரணம் எங்களின் டீம் ஒர்க் மட்டுமே..  ! 

இதற்கு அனு அவர்களுக்கு சிறப்பு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்!
எங்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் தந்து உதவிய உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

சரி வெற்றியாளர்கள் பற்றிய அறிவிப்புக்கு செல்லலாம்

HALL OF FAME: 

நாம் ஏற்கனவே அறிவித்தது போல.......

தற்போது HOFல் இடம் பிடித்து 6 முதல் 12 இடம் வரை இருப்பவர்கள் 
 

Rank Name Date Time
12 Ahamed 10/21/2013 10:27 PM
11 Yo 10/21/2013 4:40 PM
10 Minnie 10/21/2013 2:27 PM
9 Subadhra Ravichandran 10/21/2013 12:14 PM
8 vedhalam 10/21/2013 4:17 AM
7 dhoniv 10/20/2013 8:38 PM
6 Sathya 10/20/2013 8:10 PM


5வது 4வது இடத்தை பிடித்து ரூ 500 ஆறுதல் பரிசு பெறுபவர்கள்


Rank Name Date Time
4 penathal 10/20/2013 7:48 PM
5 Lathamagan 10/20/2013 7:51 PM
3வது இடத்தை பிடித்து ரூ 2000 பரிசு பெறுபவர்


Rank Name Date Time
3 Dhinesh Kumararaman 10/20/2013 7:36 PM
2வது இடத்தை பிடித்து ரூ 3000 பரிசு பெறுபவர்
  
Rank Name Date Time
2 Sukumar Swaminathan 10/20/2013 7:30 PM

பலத்த போட்டிக்கு நடுவில்  திறமையாக விளையாடி ஹால் ஆப் பேம்மில் முதலில் நுழைந்து ஹண்ட் ஃபார் ஹிண்ட் - 3 போட்டியின் முதல் இடத்தை பிடித்து ரூ 5000 பரிசு பெறும் வெற்றியாளர்


Rank Name Date Time
1 Gargy Manoharan 10/20/2013 7:29 PM

இந்த சந்தோஷமான சமயத்தில் இன்னும் ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். பலர் குழுவாக விளையாடி தனிதனியாக தங்கள் பெயர்களை முன்னனியில் கொண்டு செல்வதாகவும் விடைகளையும் க்ளூகளையும் பகிர்ந்து கொள்வதாகவும் எங்களுக்கு தகவல்கள் வந்தன. அவற்றை பல சமூக தளங்களில் மறைமுகமாகவும் நேரடியாகவும் சுட்டி காட்டினோம். 

இவைகளை நாங்கள் செய்ய காரணம் மற்றவர்களின் கடின உழைப்பு வீணாக கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே என்பதை உங்களுக்கு தெரிவித்து கொண்டு யாருக்கேனும் எங்களால் மன வருத்தம் ஏற்பட்டு இருந்தாதால் அதற்கு எங்கள் வருத்ததையும் இங்கே பதிவு செய்து கொள்கிறோம்.

நாங்களும் எங்களின் அன்றாட பணிகளுக்கு இடையில்தான் இதைச் செய்கின்றோம்! இதனால் எங்களுக்கு கிடைக்கும் திருப்தி மட்டுமே லாபமாகக் கொள்கிறோம்! ஆகவே விளையாடும் நண்பர்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது உங்களின் நேர்மையை மட்டுமே! 

டிஸ்கி: தொடர்ந்து விளையாடி கொண்டு இருப்பவர்களின் ஆர்வத்தை கருதி விடைகள் தற்போது வெளியிடப்படமாட்டது. 


விளையாட்டில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்துகளையும் அனுபவத்தையும் கமெண்ட்டில் தெரியப்படுத்த விரும்புகிறோம்.

நீங்கள் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியப்பட்டு இருக்காது. ஒவ்வொரு விடைகளை கண்டுபிடிப்பது எவ்வளவு கடினம் என எங்களுக்குத் தெரியும், நீங்கள் செய்த உழைப்பை நாங்கள் அறியாமல் இல்லை. உங்கள் உழைப்பிற்கு எங்கள் டீம் தலை வணங்குகிறது.

இந்த விளையாட்டால் நீங்களும், கேள்விகள் வடிவமைப்பால் நாங்களும் பல விஷயங்களை கற்றுகொண்டதை மறுக்க முடியாது. ஒரு வித்தியாசமான போட்டியை உங்களுக்கு வழங்கிய மகிழ்ச்சியுடன் உங்களிடம் இருந்து  விடை பெறுகிறோம். கேம் வெப்சைட் தொடர்ந்து இயங்கும்.

வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகள்....
மற்றும்
கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்....

மேலும் ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் மீண்டும் சந்திப்போம்....

இது வரை HALL OF FAME சென்றவர்களை காண இங்கே சொடுக்கவும்

நன்றியுடன்,
டெரர்கும்மி 

.

Thursday, October 17, 2013

HUNT FOR HINT-3 - The Game Starts Now.......

இணைய நண்பர்களே,
பதிவுலக வரலாற்றில் முதல்முறையாக கடந்த இரண்டு வருடங்களாக டெரர்கும்மி சார்பாக நடந்த ஹண்ட் ஃபார் ஹிண்ட் மெகா புதிர் போட்டி உங்களின் ஆதரவால் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த வருடமும் அப்படியான ஒரு போட்டியை மேலும் சிறப்பாக நடத்த போவதாக முந்தய பதிவுகளில் சொல்லி இருந்தோம்.


ஆம், நாங்கள் ஏற்கனவே அறிவித்தது போல இதோ இன்று “HUNT FOR HINT”போட்டியின் 3 வது பதிப்பை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.

இந்த போட்டியை பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். புகழ் பெற்ற ஆன்லைன் விளையாட்டான க்ளூலெஸ் விளையாட்டின் தாக்கத்தால் டெரர்கும்மி நண்பர்களால் உருவான விளையாட்டு "HUNT FOR HINT". இது  பல லெவல்களை கொண்ட ஒரு ஆன்லைன் விளையாட்டு.
.

 


மேலும் உங்களுக்கு உதவ எங்களின் விளையாட்டு குழு உறுப்பினர்கள் விளையாட்டுக்கான் டிஸ்கஷன் போரத்தில் தயாராக இருக்கிறார்கள்... அதற்கான சுட்டி கேம் தளத்திலேயே இருக்கிறது.... பயன்படுத்தி கொள்ளுங்கள்....

கேள்விகள் படமாகவோ, எழுத்தாகவோ, அல்லது வேறு ஏதாவது ஒரு விதத்திலோ இருக்கலாம். ஆங்காங்கே இருக்கும் க்ளூக்களை கண்டுபிடித்து அடுத்த லெவலுக்கு முன்னேற வேண்டும்.

விளையாடும் முறை, விதிகள் மற்றும் பரிசு விவரங்களை விளையாட்டின் பிரத்தியேக தளத்தில் கொடுத்து இருக்கிறோம்.  விளையாடும் முன்பு அவற்றை படித்தல் நலம்.  இல்லையென்றாலும் இந்த இணைப்பில் உள்ள பதிவுகளைப் படித்தாலும் நலம்!




இந்த விளையாட்டை வடிவமைக்க பலர் தங்களின் உழைப்பையும், விலை மதிப்பில்லாத நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு உள்ளனர். அவர்களுக்கு எங்களின் சிறப்பு நன்றியை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொண்டு, போட்டியாளர்கள் இந்த போட்டியை நேர்மையான முறையில் அணுகி எங்கள் உழைப்புக்கு மரியாதை செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் போட்டியை தொடங்குகிறோம்.....


கீழே உள்ள சுட்டியை சொடுக்கி விளையாட தொடங்குங்கள்....


வாழ்த்துக்களுடன் 
டெரர்கும்மி 


டிஸ்கி: விளையாட்டின் ஆர்வத்தை கருதி.... இந்த பதிவிற்கு வரும் அனைத்து கமெண்ட்டுகளும் மட்டறுக்கப்படுகிறது.

***********************************************************************************************************

For Non Tamil Players:

Dear Friends,
Hunt for Hint is created by Terror Kummi Team, based on the concept of the popular online game Klueless. It is a multilevel game and each level is a web page. The questions will be in the form of picture, text, or some data. All you have to do is to hunt for the hints to cross each level and win.

Our Game designers are available to help you in Game discussion Forum... Link for the forum is available on the game site.... Pls utilize it....

Please read the Rules of the Game and play with a high integrity. 

With the above hope, We declaring that the Game to begins now...



Greetings,
Terrorkummi