அனைவருக்கும் வணக்கம்,
ஒரு சந்தோசமான தருணத்தில் சந்தோசமான அறிவிப்போடு உங்களைச் சந்திப்பதில் எங்களுக்குப் பெருமகிழ்ச்சியே! தமிழ்நாட்டில் பிறந்து உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களை இந்த இணையம் ஒன்றாகக் கொண்டு வந்து சேர்த்தது. சிதறிக் கிடந்த எங்களை இரும்புத் துகள்களைக் காந்தம் இழுப்பது போல இழுத்துச் சேர்த்துக் கொண்டது எங்களின் நட்புதான்! ஒரு குழுவாக மின்மடலிலும் பதிவுகளிலும் கூடி கும்மி அடித்த நாங்கள் கடந்த வருடம் இதே நாளில்தான் இந்த டெரர் கும்மி தளத்தை ஆரம்பித்தோம்! ஆரம்பத்தில் எந்த இலக்கும் எங்களுக்கு இருக்கவில்லை.. எங்களின் ஒரே நோக்கம் வாசக நண்பர்களின் சந்தோசம் மட்டுமே! அதனை இலக்காக கொண்டுதான் அற்புத விளக்கு என்ற நகைச்சுவை தொடர்.. அதன் பின் ஹன்ட் ஃபார் ஹின்ட் என்ற கேம் அதன் தொடர்ச்சியாக புதிய முயற்சியாக பூமியை தேடிஎன்ற அறிவியல் கதை என்று எங்களை நாங்களே அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முயற்சி செய்தோம்... அதற்கு உங்களின் ஆதரவும் வரவேற்பும்தான் முதல் காரணம் என்றால் அது மிகையில்லை!
ஒரு சந்தோசமான தருணத்தில் சந்தோசமான அறிவிப்போடு உங்களைச் சந்திப்பதில் எங்களுக்குப் பெருமகிழ்ச்சியே! தமிழ்நாட்டில் பிறந்து உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களை இந்த இணையம் ஒன்றாகக் கொண்டு வந்து சேர்த்தது. சிதறிக் கிடந்த எங்களை இரும்புத் துகள்களைக் காந்தம் இழுப்பது போல இழுத்துச் சேர்த்துக் கொண்டது எங்களின் நட்புதான்! ஒரு குழுவாக மின்மடலிலும் பதிவுகளிலும் கூடி கும்மி அடித்த நாங்கள் கடந்த வருடம் இதே நாளில்தான் இந்த டெரர் கும்மி தளத்தை ஆரம்பித்தோம்! ஆரம்பத்தில் எந்த இலக்கும் எங்களுக்கு இருக்கவில்லை.. எங்களின் ஒரே நோக்கம் வாசக நண்பர்களின் சந்தோசம் மட்டுமே! அதனை இலக்காக கொண்டுதான் அற்புத விளக்கு என்ற நகைச்சுவை தொடர்.. அதன் பின் ஹன்ட் ஃபார் ஹின்ட் என்ற கேம் அதன் தொடர்ச்சியாக புதிய முயற்சியாக பூமியை தேடி
இதே நம்பிக்கையோடு எங்களின் சந்தோசத்தை பகிரவும் உங்களுக்கு எங்களது நன்றியினை தெரிவிக்கும் விதமாகவும் எங்கள் அடுத்தகட்ட முயற்சியினை இன்று விதைக்கிறோம்! அதாவது இந்த வருடத்தில் வந்த சிறந்த பதிவுகளைக் கண்டறிந்து ஊக்குவித்து பரிசு வழங்குவதே அது. அனைத்துப் பதிவுகளையும் பத்து பிரிவுகளாக வகைப்படுத்தி இருக்கிறோம்.. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.. இந்த வருடம் ஜனவரி முதல் தேதியில் இருந்து டிசம்பர் இறுதி வரை பதிவிடப்பட்ட/பதிவிடப்போகும் உங்களுடைய பதிவுகளில் சிறந்த பதிவு எந்த பிரிவின் கீழ் வருகிறது என்று பார்த்து தயங்காமல் எங்களுக்கு அனுப்புங்கள். ஒவ்வொரு பிரிவிற்கும் இரண்டு நடுவர்களை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம் அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த இரண்டு இடுகைகளுக்கு (ஒவ்வொரு பிரிவிலும்) டெரர் கும்மி விருதுடன் முதல் பரிசும் இரண்டாம் பரிசும் வழங்கப்படும்! மொத்த பரிசுத்தொகை RS 10000/-!
எப்படி உங்கள் பதிவுகளை இணைப்பது என்று இப்பொழுது குழம்ப வேண்டாம் அதைப்பற்றியும் எந்த தேதியில் இருந்து இணைக்க ஆரம்பிக்கலாம், இணைப்பதற்கு இறுதி தேதி எது மற்றும் மற்ற விதிமுறைகளை அனைத்தையும் அடுத்தடுத்த பதிவுகளில் தருகிறோம். இப்போது என்னென்ன பிரிவுகள் என்று தந்திருக்கிறோம், அதற்கு தகுந்தாற்போல் உங்கள் சிறந்த பதிவுகளைத் தேர்ந்தெடுத்து/தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்!
1 . நகைச்சுவைப் பதிவுகள்.
இந்த பிரிவின் கீழ் உங்கள் ஆகச்சிறந்த நகைச்சுவை படைப்பு என்று கருதும் எந்த படைப்பையும் இணைக்கலாம்! உங்கள் பதிவுகளை தேர்ந்தெடுக்க இரண்டு நகைச்சுவை ஜாம்பவான்கள் தயாராக இருக்கின்றனர்! இன்னும் என்ன தாமதம்? கிளப்புங்கள் பட்டையை :-)
2 . கவிதைகள்
இந்த பிரிவின்கீழ் உங்கள் கவிதைகளை இணைக்கலாம். கவிதை என்றால் அது எந்த வடிவமாக இருந்தாலும் கவலை வேண்டாம் மரபுக் கவிதை, புதுக்கவிதை இப்படி தனித்தனிப் பிரிவுகள் இல்லை. எப்படிப்பட்ட கவிதையையும் எங்களிடம் தாருங்கள். அதில் இருந்து சிறந்த முத்துக்களை தேர்ந்தெடுக்க எங்கள் கவிஞர்கள் தயாராக உள்ளனர்!
3 . விழிப்புணர்வு
இந்தப் பிரிவின் கீழ் உங்கள் விழிப்புணர்வு பதிவுகளை இணைக்கலாம்.. விழிப்புணர்வு என்றால் அது சமூகம், சுற்றுச்சூழல், கல்வி, மொழி இப்படி எதைப்பற்றி வேண்டுமானால் இருக்கலாம்! உங்கள் பதிவு சமூக மாற்றத்திற்கு சின்ன விதையை விதைக்கும் என்று கருதினால் அதை தயங்காமல் எங்களிடம் இணையுங்கள்! சிறந்ததை தேர்ந்தெடுக்க எங்கள் நடுவர்கள் தயாராக உள்ளனர்!
4 . கதைகள்
இந்தப் பிரிவின் கீழ் சிறந்த கதை என்று நீங்கள் நினைக்கும் உங்கள் கதைகளை இணைக்கலாம்! கதைக்களன் எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்... சமூகம், குடும்பம், க்ரைம், த்ரில்லர் இப்படி.. அப்பறம் என்ன தயக்கம்? உடனே தயாராகுங்கள்! (தொடர்கதைகளுக்கு அனுமதி இல்லை, மன்னிக்கவும்)
5 . அனுபவம்/பயணக்கட்டுரை
இரண்டு பெயர் கொண்ட தலைப்பை பார்த்து குழம்ப வேண்டாம்.. சிலர் ஒரு கடைக்குச் சென்று வந்த அனுபவத்தைக் கூட அழகாகச் சொல்லியிருப்பார்கள்... சிலர் ஒரு இடத்திற்கு போய் வந்தால் அவர்களின் கட்டுரையின் வாயிலாக நம்மையும் அந்த இடத்திற்கே அழைத்துச் செல்வார்கள்! உங்கள் பதிவுக்கு இப்படி ஒரு தகுதி உண்டென்று நீங்கள் நினைத்தால் தயங்காமல் பதிகளை இந்த பிரிவின்கீழ் இணைக்கலாம்!
6 . அரசியல் கட்டுரை
கடந்த கால அரசியல் ஆகட்டும் சம கால அரசியல் ஆகட்டும், இரண்டைப் பற்றியும் திறம்பட எழுதக்கூடிய பதிவர்கள் நம் பதிவுலகத்தில் எத்தனையோ பேர் உள்ளனர். இப்படி ஒரு பதிவாக உங்கள் பதிவு இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் தயங்காமல் இந்த பிரிவின் கீழ் இணைத்துவிடுங்கள்!
7 . திரை விமர்சனம்
இன்று இயக்குனர்கள் கூட நம் பதிவர்களுக்கு சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யும் நிலைக்கு நம் பதிவர்களின் விமர்சனம் தரமாகவும் நடுநிலையாகவும் இருக்கின்றது! மோசமான திரைப்படத்தின் விமர்சனத்தைக் கூட நல்ல விமர்சனம் என்று சொல்ல வைக்கும் வகையில் எழுதக்கூடியவர்கள் இங்கு அதிகம். இப்படி ஒரு விமர்சனத்தை நீங்கள் எழுதியிருந்தால் இந்த பிரிவின்கீழ் இணைத்துவிடுங்கள்!
8 . தொழில்நுட்பம்
தொழில்நுட்ப பிரிவில் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் சம்பந்தமான பதிவுகள் மட்டுமல்லாது, அறிவியல், விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட பதிவுகளையும் இணைக்கலாம். கணினி சம்பந்தமான அனைவருக்கும் தெரிந்த விளக்கம் அளிக்கும் பதிவுகளாக அல்லாமல் வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் புதிதாக அறிமுகமாகும் கணினி மென்பொருள்களை பற்றி விளக்குவதாகவும், அறிவியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம் சம்பந்தமான எல்லோருக்கும் புரியும்படியான கட்டுரைகளாகவும் இருத்தல் நலம்.
9 . சிறந்த புதுமுக பதிவர்கள்
நீங்கள் இந்தவருடம் ( 2011 ) ஜனவரி முதல் தேதிக்கு பிறகு பதிவுலகிற்கு வந்து வாசகர்களிடம் நல்ல வரவேற்பை அல்லது அவர்களால் கவனிக்கப்படாமல் போன நல்ல பதிவுகளை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைத்தால் தயங்காமல் இந்த பிரிவின் கீழ் இணைத்துவிடுங்கள்! உங்களை அங்கீகரிக்க நாங்கள் தயாராக உள்ளோம்! இதற்கு நீங்கள் எந்தக் குறிப்பிட்ட இடுகையையும் இணைக்க வேண்டாம். உங்கள் தளத்தின் முகவரியை மட்டும் இணைத்தால் போதுமானது. மற்றதை எங்கள் நடுவர்கள் பார்த்துக்கொள்வார்கள்!
10 . ஹால் ஆஃப் ஃபேம் பதிவர்.
இந்த பிரிவில் நீங்கள் இணைக்கமுடியாது. இது இந்த வருடம் முழுவதும் தொடர்ச்சியாக பல துறைகளிலும் படிக்க சுவாரஸ்யமான பதிவுகள் தந்த பதிவர் ஒருவரை அடையாளம் காட்டும் முயற்சி! இது முழுக்க முழுக்க டெரர் கும்மி நண்பர்கள் நாங்கள் பதினாறு பேரும் ஒவ்வொருவரை நாமினேட் செய்து அதில் இருந்து ஒரு சிறந்த பதிவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளோம். இதில் எங்களுக்கு என்று சில விதிகளை வகுத்துள்ளோம். இந்த பிரிவு மட்டும் முழுக்க டெரர் கும்மி முடிவு சார்ந்தது!
சரி.. எல்லா பிரிவுகளையும் பார்த்தாயிற்று.. இனி நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் பதிவுகளை பிரிவுகளுக்கு தகுந்தாற்போல் வகைப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். விரைவில் அடுத்த அறிவிப்பில் எந்த தேதியில் இருந்து எந்த தேதி வரை எப்படி இணைக்கலாம் என்றும் இணைப்பதற்கு என்னென்ன விதிமுறைகள் என்றும் சொல்லுகிறோம்! இந்த நேரத்தில் இன்னொன்றும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறோம். மேலே குறிப்பிட்ட பிரிவுகளில் 10 வது குறிப்பிட்ட ஹால் ஆஃப் ஃபேம் பதிவரை தேர்ந்தெடுப்பது மட்டுமே டெரர் கும்மி உறுப்பினர்கள். மீதமுள்ள ஒன்பது பிரிவுகளும் டெரர் கும்மியில் உறுப்பினர் அல்லாத நடுவர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படும்... மேலும் எந்த ஒரு பிரிவிலும் டெரர்கும்மி உறுப்பினர்கள் யாரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறோம். இது வரை நீங்கள் கொடுத்து வந்த ஆதரவை இனிமேலும் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்களிடம் இருந்து இப்போது விடைபெறுகிறோம்!
டெரர் கும்மி நண்பர்கள்
139 comments:
ஒரு பிரமாண்டமான கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்! :-)
Wish u a Happy Terror Kummi Day. :-)
HAPPY TERROR KUMMI DAY!!!
இனிய டெரர் கும்மி தின நல்வாழ்த்துக்கள் ...
டெரர் கும்மிக்கு இதுவரையிலும் ஆதரவளித்து இனிமேலும் ஆதரவளிக்க போகும் நண்பர்களுக்கு எங்களின் அனைவரின் சார்பாகவும் நன்றிகள். இந்த 'சிறந்த பதிவுகள்' போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற போகும் நண்பர்களுக்கு இப்பொழுதே எங்கள் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறோம்..:)
நல்வாழ்த்துக்கள்.
தங்களின் அருமையான முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
Excellent. Keep it growing.
All the best !!!
எம்பா!! வீட்டுக்கு வந்து போர விருந்தாளிக்கு எல்லாம் யாருப்பா சந்தனம் கொடுத்து வரவேற்று, விருந்து பரிமாரி, வெத்தலை பாக்கு, தாம்பூலம் எல்லாம் கொடுக்கரது... :)
ERROR-PANDIYAN(VAS) said...
எம்பா!! வீட்டுக்கு வந்து போர விருந்தாளிக்கு எல்லாம் யாருப்பா சந்தனம் கொடுத்து வரவேற்று, விருந்து பரிமாரி, வெத்தலை பாக்கு, தாம்பூலம் எல்லாம் கொடுக்கரது... :////
அதுக்கு சிரிப்பு போலிஸ் அவர்கள் இப்போதே பயிற்சி எடுப்பதற்க்காக தயாராக உள்ளார் :-)
//எம்பா!! வீட்டுக்கு வந்து போர விருந்தாளிக்கு எல்லாம் யாருப்பா சந்தனம் கொடுத்து வரவேற்று, விருந்து பரிமாரி, வெத்தலை பாக்கு, தாம்பூலம் எல்லாம் கொடுக்கரது... :)//
நீங்களும், ரமேசும்தான் இதெல்லாம் கொடுத்து வரவேற்கனும்.:-)
@வைகை
/அதுக்கு சிரிப்பு போலிஸ் அவர்கள் இப்போதே பயிற்சி எடுப்பதற்க்காக தயாராக உள்ளார் :-) //
நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்பொழுது பிஸியாக உள்ளார்.. :)
டெரர்கும்மி திருநாள் வாழ்த்துக்கள்
உங்களின் இந்த நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள் நண்பர்களே!
///// TERROR-PANDIYAN(VAS) said...
@வைகை
/அதுக்கு சிரிப்பு போலிஸ் அவர்கள் இப்போதே பயிற்சி எடுப்பதற்க்காக தயாராக உள்ளார் :-) //
நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்பொழுது பிஸியாக உள்ளார்.. :)/////
தவறு, நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்பொழுது பசியாக உள்ளார்..
//குசும்பன் said...
உங்களின் இந்த நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள் நண்பர்களே!//
ரொம்ப நன்றி பாஸ்!
இனிய டெரர் கும்மி தின நல்வாழ்த்துக்கள் ...
ஓராண்டு நிறைவுபெற்றதுக்கும், புதிய முயற்சிக்கும் வாழ்த்துக்கள்...!
டெர்ரர் கும்மி நண்பர்களுக்கு வாழ்த்துகள். விருது அறிவிப்பும் மகிழ்ச்சி தரும் செய்திதான். கீப் ராக்கிங்!!
விருது வழங்குவதில் 'அதிநவீன நமீதா' அறக்கட்டளை கோ பார்ட்னரா?
மரா said...
நல்வாழ்த்துக்கள்////
சம்பத் குமார் said...
தங்களின் அருமையான முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்க////
ViswanathV said...
Excellent. Keep it growing.
All the best !!!////
ரொம்ப நன்றிங்க :-)
Abdul Basith said...
ஓராண்டு நிறைவுபெற்றதுக்கும், புதிய முயற்சிக்கும் வாழ்த்துக்கள்...////
நன்றி பாஸ் :-)
! சிவகுமார் ! said...
டெர்ரர் கும்மி நண்பர்களுக்கு வாழ்த்துகள். விருது அறிவிப்பும் மகிழ்ச்சி தரும் செய்திதான். கீப் ராக்கிங்!///
நன்றி சிவா.. உங்க பதிவுகள இணைக்க மறந்திராதிங்க :-)
சிவகுமார் ! said...
விருது வழங்குவதில் 'அதிநவீன நமீதா' அறக்கட்டளை கோ பார்ட்னரா?///
டோன்ட் வொரி.. முடிஞ்சா நமீதாவையே பார்ட்னரா சேர்க்க முயற்சி பண்றோம் :-)
அப்பறமென்ன பட்டய கிளப்ப வேண்டியதுதான்!
உங்களின் இந்த நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
நல்ல முயற்சி. வாழ்த்துகள் நண்பர்களே..
டெரர் கும்மிக்கு நல்வாழ்த்துக்கள் - கலக்கல் நண்பர்களே - வாழ்க வளர்க
ஜாலி ஜாலி... :-)
HAPPY TERROR KUMMI DAY!!!
Thanks for all
பகல் வணக்கம்,பதினாறு பெற்ற மகராசிக்கு!ச்சி...........பதினாறு பேருக்கும்!அருமை,அருமையிலும் அருமை!ஓராண்டு நிறைவுக்கு கொண்டாட்டம் பிரமாதம்!இப்படியொரு அறிவிப்பை எதிர்பார்க்கவேயில்லை!(தெரிஞ்சிருந்தா மட்டும்??????!!!!!)
கோகுல் said...
அப்பறமென்ன பட்டய கிளப்ப வேண்டியதுதான்!////இப்பவும் இருக்குதா?(பட்ட)
என்னயவிட டெர்ரர் ஆளு இருக்கா என்னா..?
எனக்கு பரிசக் கொடுக்காட்டி கொன்னுபோடுவேன் கொன்னு.
:))))))
வாழ்த்துகள் நண்பர்களே!
டெரர்கும்மி திருநாள் வாழ்த்துக்கள்
டெரர்கும்மி திருநாள் வாழ்த்துக்கள்
Great Day friends..
Sweet edu.. kondaadu..
கலக்குறீங்கய்யா! வாழ்த்துகள்!
இந்த வருடம் தமிழ மணம் விருதுகள் இல்லை அந்த குறையை போக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும் டெர்ரர் கும்மி நண்பர்களுக்கு வாழ்த்துகள்
HAPPY TERROR KUMMI DAY!!!
முயற்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள். நாங்களும் பங்கு பெற முயல்கிறோம்.
பதிவு தமிழில் தான் இருக்க வேண்டுமா ஆங்கிலத்திலும் இருக்கலாமா?
Ram
/// Ram said...
பதிவு தமிழில் தான் இருக்க வேண்டுமா ஆங்கிலத்திலும் இருக்கலாமா? ///
நன்றி ராம்
தமிழ் பதிவுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
விதிமுறைகள் விரைவில்.......
சரிங்க அண்ணே நானும் ரெடியாகிறேன், எனக்கு பணம் கேஷாதான் வேணும் ஹி ஹி...
தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை..
வச்சாச்சு.
நண்பர்களுக்கு வாழ்த்துகள்.
அன்பின் டெரர் கும்மி உறிப்பினர்களே !
நல்லதொரு சிந்தனையில் உதித்த நல்லதொரு செயல். சிறப்புற நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
இனிய கும்மி நாள் வாழ்த்துகள்!
@Terror.//
Good effort dude.. I would love to nominate Mr. Visa (writervisa.blogspot.com) for "ஹால் ஆஃப் ஃபேம்" பதிவர் for this year..! இவர தவிர வேற யாருக்காச்சும் இந்த அவார்ட குடுத்தா காசு வாங்கிட்டாணுக டெர்ரர் கும்மி டீமுன்னு, பதிவுலகம் முழுக்க கழுவி கழுவி ஊத்தப்படும் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்...! (இத எழுதற பையன சத்தியமா எனக்கு யாருன்னு தெரியாது மச்சி...! வெளியூர்காரன் நேர்மையான ரசிகன்..! அதனால சொம்படிக்காம நேர்மையா இந்த பையன செலெக்ட் பண்ணுங்க...வாழ்த்துக்கள். ) :)
@Veliyoorkaran
//இத எழுதற பையன சத்தியமா எனக்கு யாருன்னு தெரியாது மச்சி...! வெளியூர்காரன் நேர்மையான ரசிகன்..! //
இந்த இனிமையான நாளில் எனது பதிவுலக ரோல் மாடல் திரு.வெளியூர்காரன் அவர்கள் இங்கு வந்து வாழ்த்து தெரிவித்து இருப்பது மிக்க மகிழ்ச்சி.. :) மாவீரன் பட்டா, மன்னர் ரெட்டைவால், கொரிய மொழி திரைபட விமர்சகர் இலுமி போன்றவர்கள் வராமல் இருப்பது வருத்தமே.. :(
@@@@மேலும் எந்த ஒரு பிரிவிலும் டெரர்கும்மி உறுப்பினர்கள் யாரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறோம்...//
நீங்க கலந்துகிட்டாலும் அப்டியே லாரி வெச்சு அள்ளிகிட்டு போயிருவீங்க எல்லா அவார்டையும்...நார பயலுகளா...! ஏண்டா ஆஸ்கார் கமிட்டி ரேஞ்சுக்கு பிட்டுகள அள்ளி கொட்றீங்க.....! :)
@@@TERROR-PANDIYAN(VAS) said...
இந்த இனிமையான நாளில் எனது பதிவுலக ரோல் மாடல் திரு.வெளியூர்காரன் அவர்கள் இங்கு வந்து வாழ்த்து தெரிவித்து இருப்பது மிக்க மகிழ்ச்சி.//
பார்ரா..இது வேறயா...! ( உனக்கு நான் சரக்கு கூட வாங்கி குடுத்ததில்லையே மச்சி...அப்பறம் என் இப்புடி...? ) :)
@வெளியூர்காரன்
//பார்ரா..இது வேறயா...! ( உனக்கு நான் சரக்கு கூட வாங்கி குடுத்ததில்லையே மச்சி...அப்பறம் என் இப்புடி...? ) :) //
இல்லைனா நீ மேல போட்டு இருக்க ஆஸ்கர் கமெண்ட் மாதிரி கழுவி கழுவி ஊத்துவியே.. :))
@ வெளியூர்.,
// ஏண்டா ஆஸ்கார் கமிட்டி ரேஞ்சுக்கு
பிட்டுகள அள்ளி கொட்றீங்க.....! :) //
ஆஸ்கார் கமிட்டியும் டெரர் கும்மி மாதிரி
பெரிய கமிட்டியாண்ணே..? # டவுட்டு
@ டெரர்.,
// இந்த இனிமையான நாளில் எனது
பதிவுலக ரோல் மாடல் திரு.வெளியூர்காரன்
அவர்கள் இங்கு வந்து வாழ்த்து தெரிவித்து
இருப்பது மிக்க மகிழ்ச்சி.. : //
இதை நான் வழிமொழிகிறேன்.!
@வெங்கட்
//ஆஸ்கார் கமிட்டியும் டெரர் கும்மி மாதிரி
பெரிய கமிட்டியாண்ணே..? # டவுட்டு //
இதுக்கு ROFL சொன்னா போனவன் திரும்பி வந்து துப்புவான்...அதானால் சைலண்டா ஹா.. ஹா.. :)
நல்ல முயற்சி பாஸ் வாழ்த்துக்கள்....
ஓராண்டு வெற்றிகரமாய் கடந்தமைக்கும் வாழ்த்துக்கள்
@கோகுல்
//அப்பறமென்ன பட்டய கிளப்ப வேண்டியதுதான்!//
ஹும்.. அடிக்கிர அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்.. :)
@Lakshmi
//உங்களின் இந்த நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.//
நன்றி அம்மா. தங்கள் வாழ்த்துகளையும் ஆசிர்வாதத்தையும் என்றும் எதிர் பார்க்கிரோம்.. :)
@கார்த்திகைப் பாண்டியன்
//நல்ல முயற்சி. வாழ்த்துகள் நண்பர்களே.//
நன்றி நண்பரே.. :)
@மனசாட்சி
//டெரர் கும்மிக்கு நல்வாழ்த்துக்கள் - கலக்கல் நண்பர்களே - வாழ்க வளர்க//
எல்லோரும் சேர்ந்தே வளருவோம். நன்றி!
(ராஸ்கல்! எல்லாரும் எங்கடா போய்ட்டிங்க. பார்மாலிட்டி பண்ரது ரொம்ப கஷ்டம் போல)
@சுபத்ரா
// ஜாலி ஜாலி... :-) //
ஏம்பா! யாராவது இந்த புள்ளைக்கு மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் நல காப்பகம் விலாசம் கொடுத்து விடுங்கப்பா.. :)
@Yoga.S.FR
//பகல் வணக்கம்,பதினாறு பெற்ற மகராசிக்கு!ச்சி...........பதினாறு பேருக்கும்!அருமை,அருமையிலும் அருமை!ஓராண்டு நிறைவுக்கு கொண்டாட்டம் பிரமாதம்!இப்படியொரு அறிவிப்பை எதிர்பார்க்கவேயில்லை!(தெரிஞ்சிருந்தா மட்டும்??????!!!!!)//
நன்றி சார்!!
(இதில் ஒன்னும் உள்குத்து இல்லியே.. ச்சும்மா)
@RAVI
//என்னயவிட டெர்ரர் ஆளு இருக்கா என்னா..?
எனக்கு பரிசக் கொடுக்காட்டி கொன்னுபோடுவேன் கொன்னு.
:))))))//
ஐ!! அப்போ நாம இரண்டு பேரும் செத்து செத்து விள்ளாடலாம்... :))
@வி.பாலகுமார் said...
//வாழ்த்துகள் நண்பர்களே!//
நன்றி நண்பரே... :)
@அருணையடி
//கலக்குறீங்கய்யா! வாழ்த்துகள்!//
அப்படியா சொல்லிட்டிங்க. ரைட்டு விடுங்க.. :)
@மோகன் குமார்
//இந்த வருடம் தமிழ மணம் விருதுகள் இல்லை அந்த குறையை போக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும் டெர்ரர் கும்மி நண்பர்களுக்கு வாழ்த்துகள்//
இப்போ இது ஒரு சிறிய முயற்சிதான். எதிர் வரும் காலத்தில் இறைவன் அருள் இருந்தால் இன்னும் சிறப்ப செய்கிறோம். உங்கள் கருத்துக்கு நன்றி மோகன்.. :)
@kg gouthaman said...
//முயற்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள். நாங்களும் பங்கு பெற முயல்கிறோம்.//
கண்டிப்பா!! நீங்க எல்லாம் இல்லாமலா.. :)
மக்காஸ் ...பரிசு தொகைய 2 மடங்காக்குங்க....
பரிசு பெறும் நபர்களையும் அதிகபடுதுங்க ....ஏன்னா ...இப்ப அறிவிசிக்கிற
பரிசு எல்லாம்...நான் """ஒருத்தனே""" வாங்கிட்டு போனா மத்தவங்க
ஏமாந்திடுவாங்க...
அதனால நான் சொன்ன மாதிரி செய்ங்க......
@MANO நாஞ்சில் மனோ
//சரிங்க அண்ணே நானும் ரெடியாகிறேன், எனக்கு பணம் கேஷாதான் வேணும் ஹி ஹி...//
டேய்!! அண்ணன் ஏதோ கேஷ் தராங்களாம் என்னான்னு கேளு... :)
@ஜோதிஜி திருப்பூர் said...
//தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை..
வச்சாச்சு.//
ஒத்துகிறேன். நீங்க தைரியசாலிதான். உங்களை நெக்ஸ்ட் மீட் பண்றேன்.. :)
// நண்பர்களுக்கு வாழ்த்துகள்.//
நன்றி நண்பரே.. :)
Happy terror kummi day!
@cheena (சீனா)
//அன்பின் டெரர் கும்மி உறிப்பினர்களே !
நல்லதொரு சிந்தனையில் உதித்த நல்லதொரு செயல். சிறப்புற நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
தங்கள் வரவிற்க்கும் வாழ்த்திற்க்கும் நன்றி ஐயா!! :)
@NAAI-NAKKS
// மக்காஸ் ...பரிசு தொகைய 2 மடங்காக்குங்க....
பரிசு பெறும் நபர்களையும் அதிகபடுதுங்க ....ஏன்னா ...இப்ப அறிவிசிக்கிற
பரிசு எல்லாம்...நான் """ஒருத்தனே""" வாங்கிட்டு போனா மத்தவங்க
ஏமாந்திடுவாங்க...
அதனால நான் சொன்ன மாதிரி செய்ங்க....//
செஞ்சிட்டா போச்சி... :)))
@Yoga.S.FR
//பகல் வணக்கம்,பதினாறு பெற்ற மகராசிக்கு!ச்சி...........பதினாறு பேருக்கும்!அருமை,அருமையிலும் அருமை!ஓராண்டு நிறைவுக்கு கொண்டாட்டம் பிரமாதம்!இப்படியொரு அறிவிப்பை எதிர்பார்க்கவேயில்லை!(தெரிஞ்சிருந்தா மட்டும்??????!!!!!)//
நன்றி சார்!!
(இதில் ஒன்னும் உள்குத்து இல்லியே.. ச்சும்மா)////அச்சச்சோ! நான் என்ன "மணத்தோட" சகவாசம் வச்சிருக்கேன்னு நினைச்சீங்களா?
அது வந்து நான் கூட போன மாசம் சின்னதா ஒரு கட தொறந்திருக் கேனில்ல?அதான்!என்ன பொருள் போடுறதுன்னு தெரியாமலே கடையத் தொறந்துட்டேன்.ஹி!ஹி!ஹி!!!!
TERROR-PANDIYAN(VAS) said...
@MANO நாஞ்சில் மனோ
//சரிங்க அண்ணே நானும் ரெடியாகிறேன், எனக்கு பணம் கேஷாதான் வேணும் ஹி ஹி...//
டேய்!! அண்ணன் ஏதோ கேஷ் தராங்களாம் என்னான்னு கேளு... :)
நான் இன்னைக்கே போய் வாங்கிட்டு வர்றேன் மாம்ஸ்.......
Yoga.S.FR
// அது வந்து நான் கூட போன மாசம் சின்னதா ஒரு கட தொறந்திருக் கேனில்ல?அதான்!என்ன பொருள் போடுறதுன்னு தெரியாமலே கடையத் தொறந்துட்டேன்.ஹி!ஹி!ஹி!!!!//
நேரம் கிடைக்கிர அப்போ கண்டிப்பா உங்க கடைக்கு வந்துடுவோம்... :)
@தினேஷ்
//நான் இன்னைக்கே போய் வாங்கிட்டு வர்றேன் மாம்ஸ்......//
சரி. அண்ணன் நிறைய காசு கொடுப்பாங்க பத்திரமா மஞ்ச பையில் வச்சி சுத்தி வேட்டிகுள்ள மறச்சி கொண்டு வா... :)
"டெரர் கும்மி விருதுகள் அறிவிப்பு - மொத்தப்பரிசு RS10000 !"
முதலாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள்!
விருதுகள் அறிவிப்புக்கு
சிறப்பான பாராட்டுக்கள்..
வாழ்க வளமுடன்!!
@இராஜராஜேஸ்வரி
//முதலாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள்!
விருதுகள் அறிவிப்புக்கு
சிறப்பான பாராட்டுக்கள்..
வாழ்க வளமுடன்!!//
நன்றி! என்ன வாழ்த்திட்டு கிளம்பறிங்க. சீக்கிரம் போய் போட்டிக்கு பதிவை ரெடி பண்ணுங்க.. :)
புத்தக விமர்சனத்துக்கு இல்லையே ?
//
//நான் இன்னைக்கே போய் வாங்கிட்டு வர்றேன் மாம்ஸ்......//
சரி. அண்ணன் நிறைய காசு கொடுப்பாங்க பத்திரமா மஞ்ச பையில் வச்சி சுத்தி வேட்டிகுள்ள மறச்சி கொண்டு வா... :) //
மெதுவா.. மெதுவா.. பப்ளிக்.. பப்ளிக்..
அருண்மொழித்தேவன் said...
புத்தக விமர்சனத்துக்கு இல்லையே ?//
இது மட்டும் இல்லை நண்பரே..இன்னும் நாங்கள் நினைத்த பல பிரிவுகளை சேர்க்கவில்லை.. முதல் ஆண்டு என்பதாலும் காலக்கெடு குறைவாக இருப்பதாலும் குறைந்த அளவிலே செயல்படுத்த முயற்சி செய்கிறோம்.. வரும் ஆண்டுகளில் இன்னும் பல பிரிவுகளை இணைத்து இன்னும் நிறைவாக செய்ய முயற்சி செய்கிறோம் :-))
வாழ்த்துகள்.
மிக்க மகிழ்ச்சி..
அருமை. Terror Start!
பகிர்வுக்கு நன்றி நண்பரே!
ஆல் டெரர் கும்மி மெம்பர்ஸ்....
வாழ்த்துக்கள்...
#மச்சி டெரரு அண்ட் வைகை... ரெண்டு பாட்டில் வாங்கிட்டு வாங்கய்யா... விதிமுறைகள் பற்றி டிஸ்கஸ் பண்ணலாம்....
:)
whoa! you are serious!
வாழ்த்துக்கள்.
வெளங்காதவன் said...
ஆல் டெரர் கும்மி மெம்பர்ஸ்....
வாழ்த்துக்கள்...
#மச்சி டெரரு அண்ட் வைகை... ரெண்டு பாட்டில் வாங்கிட்டு வாங்கய்யா... விதிமுறைகள் பற்றி டிஸ்கஸ் பண்ணலாம்....
:)//
ஏண்டா நீ காய்ச்சுன சரக்கு என்னாச்சி?
அப்பாதுரை said...
whoa! you are serious!
வாழ்த்துக்கள்.//
நன்றிங்க. சீக்கிரம் போட்டில கலந்துக்கோங்க
திண்டுக்கல் தனபாலன்
Advocate P.R.Jayarajan
Blogger ஸ்ரீராம்.
நன்றிங்க
Happy Terror Kummi Days Guys, I ama Abdul Kareem from Saudi Arabia, Please join me in your group. I also want to share my thoughts.
இப்போ நான் என்ன சொல்லணும் .....
96
97
98
99
100
அப்பாடி 1௦௦ சொல்லிட்டேன் வர்ட்டா...
கும்மி நாள் வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் :))
/நீங்க கலந்துகிட்டாலும் அப்டியே லாரி வெச்சு அள்ளிகிட்டு போயிருவீங்க எல்லா அவார்டையும்...நார பயலுகளா...! ஏண்டா ஆஸ்கார் கமிட்டி ரேஞ்சுக்கு பிட்டுகள அள்ளி கொட்றீங்க.....! :)//
அட! எங்க அண்ணன் வெளியூர்க்காரர் வந்திருக்காரு. நீங்க என்னைய மறந்திட்டு மேல இருக்கிற கமெண்ட் போட்டுட்டீங்க :)))
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வெளங்காதவன் said...
ஆல் டெரர் கும்மி மெம்பர்ஸ்....
வாழ்த்துக்கள்...
#மச்சி டெரரு அண்ட் வைகை... ரெண்டு பாட்டில் வாங்கிட்டு வாங்கய்யா... விதிமுறைகள் பற்றி டிஸ்கஸ் பண்ணலாம்....
:)//
ஏண்டா நீ காய்ச்சுன சரக்கு என்னாச்சி?//
நான் சரக்கு காச்சுறது இல்ல மச்சி... ஒன்லி மார்கெட்டிங் இன் மை நேம். காசுறது நம்ம மாம்ஸ் நாகராஜசோழன்.....
:)
//கோமாளி செல்வா said...
கும்மி நாள் வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் :))
/நீங்க கலந்துகிட்டாலும் அப்டியே லாரி வெச்சு அள்ளிகிட்டு போயிருவீங்க எல்லா அவார்டையும்...நார பயலுகளா...! ஏண்டா ஆஸ்கார் கமிட்டி ரேஞ்சுக்கு பிட்டுகள அள்ளி கொட்றீங்க.....! :)//
அட! எங்க அண்ணன் வெளியூர்க்காரர் வந்திருக்காரு. நீங்க என்னைய மறந்திட்டு மேல இருக்கிற கமெண்ட் போட்டுட்டீங்க :)))////
வெளியூரு வந்து வாந்தி எடுத்துட்டுப் போயிருக்கு... கொஞ்சம் கழுவிட்டு கமண்ட் போடுங்க செல்வா சார்....
:)
ஓராண்டு நிறைவு பெற்ற்றதற்கு வாழ்த்துக்கள் , நல்ல முயற்சி அனவருக்கும் வாழ்த்த்க்கள்
2nd year wishes
அருமை அருமை.. இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் டெரர் கும்மி நண்பர்களுக்கு வாழ்த்துகள்.. போட்டி மாபெரும் வெற்றி அடைய உளமார்ந்த வாழ்த்துகள் :-)
அருமை. அத்தோடு பெரிய வாழ்த்துகள்.
மிக மிக சிறப்பான முயற்சி...
இன்னும் இன்னும் அதிகளவான தமிழ்ப் பதிவர்களை ஊக்குவித்து தமிழ் இணைய உலகத்தை வலுப்படுத்த என் வாழ்த்துக்கள்..
அது போல் தங்களின் புதிய ஆண்டின் காலடிப் பதிப்பிற்கும் வாழ்த்துக்கள்...
// வெளியூரு வந்து வாந்தி எடுத்துட்டுப் போயிருக்கு... கொஞ்சம் கழுவிட்டு கமண்ட் போடுங்க செல்வா சார்....
:)
//
இதுக்கு நான் பதில் சொல்லமாடேன். எதாச்சும் சொன்னா மறுபடி வெளியூர் அண்ணன் வந்தா நான் தாங்க மாட்டேன் :))
// Blogger Jaleela Kamal said...
ஓராண்டு நிறைவு பெற்ற்றதற்கு வாழ்த்துக்கள் , நல்ல முயற்சி அனவருக்கும் வாழ்த்த்க்கள்//
ரொம்ப நன்றிங்க :))
// Blogger சி.பி.செந்தில்குமார் said...
2nd year wishes//
நன்றிகள் :))
// Blogger jroldmonk said...
அருமை அருமை.. இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் டெரர் கும்மி நண்பர்களுக்கு வாழ்த்துகள்.. போட்டி மாபெரும் வெற்றி அடைய உளமார்ந்த வாழ்த்துகள் :-)//
மிக்க நன்றிங்க :))
// Blogger Prabu Krishna said...
அருமை. அத்தோடு பெரிய வாழ்த்துகள்.//
நன்றிகள் :))
// அது போல் தங்களின் புதிய ஆண்டின் காலடிப் பதிப்பிற்கும் வாழ்த்துக்கள்...//
மிக்க மகிழ்ச்சிங்க. மற்றும் வாழ்த்தியமைக்கு நன்றிகள் :))
உங்களை முதல் பிறந்தநாள் விழாவில் உங்கள் தலத்தில் இணைவதில் மிக்க மகிழ்ச்சி..வலை உலகத்திற்கு சற்றே புதியவன்...காள தாமதத்திற்கு மன்னிக்கவும்...:) பதிவுகள் சிலவற்றுடன் காத்திருக்கிறேன்..நன்றி...
டெரர் கும்மி தின வாழ்த்துக்கள் கூறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் சிறப்பு வணக்கங்களும் நன்றிகளும்
எனக்குள்ள உள்ள மிருகத்த தூங்க விட மாட்டேண்டுரீங்களே!!
மறுபடியும் களத்துல குதிக்கனுமா????
நாங்க தண்ணில குதிக்க ரெடியா இருக்கிறம், தமிழ் நாட்டில பிறந்தவைக்கு மட்டுமா அண்ணே? நாங்க ஈழத்தில பிறந்த ஆக்கள் .. நம்மளயும் ஆட்டத்தில சேர்த்துக்குங்க பாஸ்!
வாழ்த்துக்கள் கும்மி நண்பர்களே ..
நல்ல முயற்சிக்கும் , ஒரு வருட முழுமைக்கும் வாழ்துக்கள்
கொண்டாட்டத்திற்கு நாங்க தயார்.
வாழ்த்துக்கள்.
Mohamed Faaique said...
எனக்குள்ள உள்ள மிருகத்த தூங்க விட மாட்டேண்டுரீங்களே!!
மறுபடியும் களத்துல குதிக்கனுமா????.///
உனக்குள்ள தூங்கிக்கிட்டு இருக்குற மிருகம் கழுதைதான. அதை எழுப்பி விட்டு பேப்பரை தின்றாத!!!
வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி
பத்தாயிரம் ரூபாயை கோத்தகிரி பெண்டுக்கு வந்தா கொடுத்துடுவீங்களா?
Nanbargalukku valthukkal..
நன்றி சொன்ன அனைவருக்கும் வாழ்த்துக்கள். :)
டெரர் கும்மியின் வளர்ச்சிக்கும், ஓராண்டு நிறைவுக்க்ம் டிஸ்கவரி புக் பேலஸ்-ன் வாழ்த்துக்கள்!
Discovery book palace said...
டெரர் கும்மியின் வளர்ச்சிக்கும், ஓராண்டு நிறைவுக்க்ம் டிஸ்கவரி புக் பேலஸ்-ன் வாழ்த்துக்கள்!//
Thank you
வாழ்த்துகள்
டெரர் கும்மி நண்பர்களின் முயற்சிக்கு...
செம்ம செம்ம மச்சி ..,
யோவ் ..,இதுல நான் ஜெயிக்கிற மாதிரி இருக்க ஒரு CATEGORY a விட்டுடீங்க # தக்காளி கழுவி கழுவி ஊத்த போறானுங்க
நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்
வெரிகுட் :)
nice initiative... thanks...
I advance Wishes to all winners...
//சரி.. எல்லா பிரிவுகளையும் பார்த்தாயிற்று..//
இல்லை.. ஓவியம் மற்றும் புகைப்படத்துறையை விட்டு விட்டீர்கள்...
இவை இல்லையெனில் சிம்பிளாக நான் வெளிநடப்பு செய்கிறேன்...
கவிதை, கதைகளை விட மிக எளிதானதல்ல ஓவியம் என்று நினைக்கிறேன்...;)
நல்வாழ்த்துக்கள்.
விழிப்புணர்வு category ல
விழிப்புணர்வுக் கவிதை
எழுதலால்லே ?
நல்வாழ்த்துக்கள் ...
தாமதத்திற்கு மன்னிக்கவும் .
இனிய முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
//சிறந்த பதிவுகளைக் கண்டறிந்து ஊக்குவித்து பரிசு வழங்குவதே //
வித்தியாசமான அருமையான விஷயம் .வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் .
அனைத்து கும்மி சகோதரர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Post a Comment