ஒரு வழியா மேல வந்தாச்சி அப்படினு மூச்சிவிடரதுகுள்ள வாழ்க்கை மறுபடியும் கீழ தள்ளும். நீங்க மூழ்கிகிட்டு இருக்கிங்க அப்போ வெளிநாட்டில் இருந்து ஒரு கைமட்டும் நீளுது என் கையை பிடிச்சிகோன்னு. பத்தாவது படிக்கிர அப்போ வெளிநாட்டில் நல்ல வேலை கிடைச்ச யார் எல்லாம் போவிங்க அப்படினு வகுப்பாசிரியர் கேட்டதும் எல்லாரும் கையை தூக்க நாம மட்டும் பெரிய ஹீரோ மாதிரி (@#@$#$%%) சும்மா இருக்க. வாத்தியார் ஏன் அப்படினு கேக்க. நான் படிச்சிட்டு இந்தியாவுக்கு தான் சேவை செய்வேன் சொன்னது அதுக்கு அவரு குட் சொன்னது எல்லாம் தேவையில்லாம நியாபகத்துக்கு வரும். ஆனா அதை எல்லாம் ஓரம் தள்ளிட்டு நீட்டின கையை பிடிச்சி முதல்ல மேல வாடா அப்படினு வாழ்க்கை சொல்லும். அதான் செஞ்சேன். ப்ளாஷ் பேக் கட்.. (இல்லைனா ஏழு வருஷத்து கதையை சொன்னா டைம் பத்தாது)
//நம் நாட்டை குறை சொல்ல ஆயிரம் காரணங்களை அடுக்கலாம். ஆனால் ஏன் இங்கே உழைக்க முடியவில்லை என்ற கேள்விக்கு சரியான பதில் இருக்கிறதா ? அப்படி உங்களுக்கு சாதகமாக பதில் வைத்திருந்தாலும், இங்கே இருக்கும் மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டி வருமே...?! //
அது என்ன சாதகமான பதில் இருந்தாலும்னு இழுக்கறிங்க? சரின்னு தெரிஞ்சாலும் ஒத்துக்க மாட்டிங்க அப்படியா?? வாழராங்க ரைட்டுங்க. உங்க வழிக்கே வரேன்? உங்க வீட்டில் கார் இருக்கா? சரி பைக்? எதுக்குங்க அதை எல்லாம் வாங்கறிங்க? கார் பைக் இல்லாதவன் எல்லாம் வாழவில்லையா? ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்துக்கு போகவில்லையா? இப்படி ஆள் ஆளுக்கு பைக் வாங்க போய்தான் பெட்ரோல் தேவை அதிகரிச்சிகிட்டே போகுது. அப்படினு நான் சொன்னா நீங்க ஒத்துபிங்களா? உங்க வாழ்க்கை தரம் உயரலாம் அடுத்தவன் அப்படியே இருக்கனுமா? :) இந்தியாவில் ஐம்பதாயிரம் ரூபாக்கு வேலை செய்யர ஒரு மேனேஜர் வெளிநாட்டில் வேலை தேடினால் குறைந்தது இரண்டு லட்சம் ரூபாய்க்கு வேலை கிடைக்கும் அப்படினு என்னால சொல்ல முடியும். ஆனே வெளிநாட்டில் ஒரு லட்சம் ரூபாய்க்கு வேலை செய்யரவன் இந்தியாவுக்கு திரும்பி வந்தா முப்பதாயிரம் ரூபாய்க்கு வேலை கிடைக்கும்னு உங்களால சொல்ல முடியுமா??
// ஆயிரம் வசதிகள் இருந்தாலும் சொந்த நாட்டில் சொந்த பந்தங்களுடன், மனைவி குழந்தைகளுடன் ஒன்றாக வாழும் வாழ்க்கைக்கு ஈடு இணை ஏதும் இல்லை. மனைவி குழந்தைகளை விட்டு சென்று, பல வருடம் கழித்து திரும்பி வரும் சிலருக்கு,நெருங்கிய அந்த உறவுகளே அன்னியமாகி விட்டதை போல தெரியும் சோகம் மிக கொடுமை//
எல்லாருக்கு ஆசை அதான் பொண்டாட்டி புள்ளை எல்லாம் விட்டு வெளிநாட்டி போய் சந்தோஷமா இருக்காங்க.
// முதலில் அன்பை பொழிந்த உறவுகள், வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை அனுபவித்த பின்னர், வெறும் பணம்காய்ச்சி மரமாக மட்டுமே உங்களை பார்க்க கூடிய நிலை சகஜம் !! //
சும்மா ஊர்ல இருக்க எங்க சொந்தகாரங்களை எல்லாம் அசிங்க படுத்தாதிங்க. கஞ்சியோ கூழோ கூட இருந்தா போதும் திரும்பி வந்துடு அப்படினு கூப்பிடத வீடு மிக குறைவு. இருந்தாலும் நாம கஷ்டபட்டாலும் நம்ம சேர்ந்தவங்க கஷ்டபடாம இருக்கனும் அப்படினு நாடுவிட்டு நாடுவந்து நாங்க வேலை பார்த்தா. எருதின் புண் காக்கைக்கு தெரியுமான்னு சொல்ர மாதிரி ஏறி உக்காந்து கொத்தாதிங்க. வேனும்னா உங்க அட்வைஸ் எல்லாம் இன்னும் பணம் இன்னும் பணம் அப்படினு எவனாவது வேலை செய்வான் அங்க போய் சொல்லுங்க. அப்படி சொல்லனும் ஆசைபட்ட இந்தியாவில் இருந்துகிட்டு அளவுக்கு மிறி பணம் சம்பாதிக்கரவனும் இருக்கான் அங்க இருந்து ஆரம்பிங்க.. :))
//வெளிநாட்டு வேலையை பற்றி இப்படி என்னை ஆதங்கப்பட வைத்துவிட்டது நேற்று நடந்த ஒரு சிறிய சம்பவம்...//
இவ்வளவு பேச்சி பேசிட்டு அங்க என்ன படம் போட்டு இருக்கிங்க? ஏன் அந்த உழைப்பாளி, உண்மையான இந்தியன் தன்னோட படத்தை போட வேண்டாம் சொல்லிட்டாரா? அப்படினா கூகுள்ள போய் தேடினா ஒரு உழைப்பாளி படம் கூட கிடைக்கவில்லையா? #சும்மா டவுட்டு. நீங்க பிறந்ததில் இருந்து இந்தியா / இந்தியன் அப்படினு எத்தனை முறை சொல்லி இருக்கிங்களோ அதைவிட அதிக முறை நான் இங்க இந்த மூனு வருஷத்தில் சொல்லி இருக்கேன். நாட்டை பற்றி நினைப்பு உங்களைவிட எங்களுக்கு அதிகம்.
பல பேரு இங்க இஷ்டபட்டு இல்லை கஷ்டபட்டு தான் வேலை செய்யரோம். வேற வழியே இல்லாம ஒரு ஸ்டேஜ்ல இந்தியா வருவோம். அப்போ வந்து இப்போ வந்தா இல்ல இப்போ வந்த இல்லை இப்போ மட்டும் இதில் வாழ முடியுதா அப்படினு வடிவேல் மாதிரி காமடி பண்ணாதிங்க. அது வரை எங்க குடும்பங்களும் பொருளாதார ரீதியா கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டுமே. அதில் உங்களுக்கு என்ன வருத்தம்? அதுவரை வேணும்னா நீங்க இப்படி அட்வைஸ் பண்ணி கட்டுரை எழுதிகிட்டு இருங்க... வாழ்க ஏசி ரூம் பதிவர்கள்.
டிஸ்கி : நண்பர்களே! இது வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லாம் ஏதோ மோகத்தில் வாழ்கிறார்கள் என்ற கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதபட்டது. இறைவன் அருளால் நான் இன்று நலமுடனும் வளமுடனும் இருக்கிறேன். ஆனாலும் இன்றும் பல இளைஞர்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் விமானம் ஏறி கொண்டு தான் இருக்கிரார்கள். அவர்கள எல்லாம் ஏதோ தேச தூரோகிகளை போல் பார்க்க வேண்டாம் என்ற வேண்டுகோளுடன்... டாடா.
.
டிஸ்கி : நண்பர்களே! இது வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லாம் ஏதோ மோகத்தில் வாழ்கிறார்கள் என்ற கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதபட்டது. இறைவன் அருளால் நான் இன்று நலமுடனும் வளமுடனும் இருக்கிறேன். ஆனாலும் இன்றும் பல இளைஞர்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் விமானம் ஏறி கொண்டு தான் இருக்கிரார்கள். அவர்கள எல்லாம் ஏதோ தேச தூரோகிகளை போல் பார்க்க வேண்டாம் என்ற வேண்டுகோளுடன்... டாடா.
.
72 comments:
last punch line suuuuuuuuuuuuuuuuuperappuuuuuuuu!!!!!
//last punch line suuuuuuuuuuuuuuuuuperappuuuuuuuu!!!!!//
ங்கொய்யாலே பதிவ நீ முழுசா படிச்சியா இல்லையா? இல்ல கடைசி வரிய மட்டும் படிச்சுட்டு சூப்பர்னு சொல்றியா? :-)
:(
என்ன மச்சி... இப்படி பேசிட்ட.... அவ்வளோ கஷ்ட்டப்படுறியா :(
//:(
என்ன மச்சி... இப்படி பேசிட்ட.... அவ்வளோ கஷ்ட்டப்படுறியா :(//
:(
மச்சி...
இதுக்கெல்லாம் இவ்ளோ டைப் பண்ணுனியா?
போயித் தண்ணியக் குடி...
:-)
//வாழ்க ஏசி ரூம் பதிவர்கள்.//
என்னை வாழ்த்திய இந்தக் கட்டுரை ஆசிரியருக்கு மிகுந்த நன்றிகள்.
(எதிலுமே பாசிடிவை எடுத்துக் கொள்வோர் சங்கம்)
மச்சி... கையக் குடு.....
ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுதி இருக்க?
நீயும் பாலிடாயல் குடிக்க ஆரம்பிச்சுட்டியா?
:-(
இரு பதிவுகளையும் படித்தேன்...உங்களின் உணர்வுகளை மதிக்கிறேன்...
எனக்கு ஆதங்கமாக தெரிந்தது, எழுதினேன். அதற்கு உங்களின் விரிவான விளக்கங்கள் எனக்கு பல நல்ல புரிதல்களை கொடுத்தன...
அதற்காக உங்களுக்கு என் நன்றிகள் டெரர்.
வாழ்த்துக்கள்.
:)
அண்ணா.. இவ்ளோ நாள் மனசுக்குள்ள வெச்சிருந்தத எல்லாம் இன்னைக்குக் கொட்டித் தீர்த்துட்டீங்க...இப்பெல்லாம் எல்லார் குடும்பத்திலும் ஒருத்தராவது வெளிநாடு சென்று வேலை பார்க்கிற சூழ்நிலை..அவர்களின் நிலையிலிருந்து யோசித்துப் பார்த்தால் டெரராகத் தான் இருக்கிறது..
These things apart, U have good writing skill.. Continue writing whenever u find time :)
அன்புத் தங்கை,
சுபா.
வெளிநாட்டில் ஒரு லட்சம் ரூபாய்க்கு வேலை செய்யரவன் இந்தியாவுக்கு திரும்பி வந்தா முப்பதாயிரம் ரூபாய்க்கு வேலை கிடைக்கும்னு உங்களால சொல்ல முடியுமா??/
NEVER!!
Machi nice da. Nalla feeling post
எல்லாத்தையும் விட பணம்தான் பெரிசா போச்சுபோல இருக்கே? அதுக்கு விலையாக கொடுப்பதெல்லாம் மிக மிக அதிகம்.
உள்ளக்குமுறலை சூப்பரா சொல்லிட்டேய்யா.....!!!
MANO நாஞ்சில் மனோ said...
ஏ யப்பா கொஞ்சம் கைகுடு சாமீ நீ நல்லாயிருக்கணும், மும்பையில நான்பட்ட கஷ்டத்தை சொன்னால் கண்ணுல ரத்த கண்ணீரே வந்துரும், நீங்கெல்லாம் அழுதுருவீங்க அதனால சொல்லலை....
உண்மைதான் ..டெரர்....
SOME THINGS ARE THERE TO DISCUSS...
MILES TO GO..IN THIS MATTER...
WITH OUT KUMMI..SHELL WE ALL DISCUSS...BUT THERE IS NO HARM THINGS....
@NN
//MILES TO GO..IN THIS MATTER...
WITH OUT KUMMI..SHELL WE ALL DISCUSS...BUT THERE IS NO HARM THINGS....//
பேசலாம் சார். ஆனா பதில்கள் கொஞ்சம் தாமதமாகலாம். உங்களுக்கே காரணம் தெரியும்.. :)
கட்டுரை ரொம்பப் பாதிச்சிடுச்சு பாஸ்....
உங்களது ஆதங்கம் நன்கு புரிகிறது .
மத்திய கிழக்கு நாட்டு நிலவரம் எனக்கு அவளவு தெரியாது .ஆனா இங்கே ஐரோப்பாவில் நிறைய மாணவர்கள் இந்தியாவில் நல்லவேலையை விட்டு இங்கே வந்து படித்து கொண்டே வேலை செய்யலாமென்ற தவறான எண்ணத்தில் கடன் வாங்கி இங்கே வராங்க அவங்க படும் கஷ்டத்தை நினைத்து பார்த்து தான் நான் //அங்கே வேலையில்லையா //என்று கேட்டிருந்தேன் .தவறாக கூறியிருப்பின் மன்னிக்கவும்
@NN
//MILES TO GO..IN THIS MATTER...
WITH OUT KUMMI..SHELL WE ALL DISCUSS...BUT THERE IS NO HARM THINGS....//
பேசலாம் சார். ஆனா பதில்கள் கொஞ்சம் தாமதமாகலாம். உங்களுக்கே காரணம் தெரியும்.. :)//////
இங்கு நான் குறிப்பிடுவது...
இந்த கருத்தை ஆதரிப்பவர்,,,எதிர்பவர் ....
எல்லாரையும்....
அவர்களும் வந்து ஆரோக்கியமான வாதம் தொடர்ந்தால் நல்ல இருக்கும்....
1)...அயன் பன்னுருவர் ஜெய்த்து விட்டால் எல்லாருமே ஜெய்துவிடுவர்களா...
எத்துனை பேர் தொழில் தொடங்கி நிறைய காரணத்தால் தோற்று உள்ளார்கள் ....
உடனே தெறமை இல்லை என்று சொல்ல வேண்டாம் ....
அவனது போட்டியாளர் வந்து எல்லாத்தையும் சொல்லிதருவரா...இல்லை ....(என்ன செய்வார்???)
2.)நன்றாக யோசித்து பாருங்கள்...சுய தொழில்-ஆக லாட்டரி டிக்கெட்டு விற்றவனை நீங்கள் பார்த்த பார்வை என்ன ?????
அதே ஆள் வெளிநாட்டில் இதே வேலை செய்தால் பார்க்கும் பார்வை என்ன ???
யாரை வியந்து பார்ப்பீர்கள் ???
யாரை கௌரவமாக எடுதுக்கொள்வீர்கள் ????
3.)அடுத்து எத்தனை உறவினர்கள் தொழில் செய்ய பணம் தருவார்கள் ???
இதே ஆட்களிடம் வெளி நாடு செல்ல பணம் கேளுங்கள்...எப்படி சிரித்துக்கொண்டே தருகிறார்கள்...
பாருங்கள்....
(இங்க இன்னொன்னு ----அவன் நல்ல படியா இருந்தால் சொல்லிக்குவாங்க---"""இவனோட இந்த நிலைமைக்கு நான் தான் காரணம்""" என்று)
TERROR PL..DONT DELETE THIS COMMENT...
4.)வெளி நாட்டில் இருக்கும் திருமணமான நண்பர்கள்...(தனியாகஇருப்பவர்கள்)-----
இவர்களின் காம இச்சைகளுக்கு விலை சொல்ல முடியுமா??
அவர்கள் வேண்டும் என்றா-- இதை மனநோயாளி போல்---சகித்துக்கொண்டு இருக்கிறார்கள் ?????
@Vinu
//last punch line suuuuuuuuuuuuuuuuuperappuuuuuuuu!!!!!//
ஒரு முடிவோடதான் வந்து இருக்க.. :)
@அருண்
//என்ன மச்சி... இப்படி பேசிட்ட.... அவ்வளோ கஷ்ட்டப்படுறியா :( //
நீங்க எல்லாம் இருக்க அப்போ எனக்கு என்னாட குறை. ஐய்யோ செண்டிமெண்டா பேச வைக்கிரானே. உனக்கு சேர்த்து தான் எழுதி இருக்கேன்... :))
@மாணவன்
நீ என்னா அவனுக்கு கொடுக்கா? தூ.. :)
@வெளங்காதவன்
//மச்சி...
இதுக்கெல்லாம் இவ்ளோ டைப் பண்ணுனியா?
போயித் தண்ணியக் குடி...
:-)//
உனக்கு என்னைக்கு எது வெளங்கி இருக்கு... :)
@மாதவன்
//என்னை வாழ்த்திய இந்தக் கட்டுரை ஆசிரியருக்கு மிகுந்த நன்றிகள்.
(எதிலுமே பாசிடிவை எடுத்துக் கொள்வோர் சங்கம்)//
போங்க அந்த கரண்டு கம்பத்தில் ஏறி எதில் பாசிடிவ் வருது பாருங்க... :)
@வெளங்காதவன்
//மச்சி... கையக் குடு.....
ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுதி இருக்க?
நீயும் பாலிடாயல் குடிக்க ஆரம்பிச்சுட்டியா?//
யோ!! நல்லா பாரு அங்க எவ்வளவு மிஸ்டேக் இருக்கு. தப்பு இல்லாம எழுதினா நான் எழுதினதுனு நம்ம மாட்டனு எனக்கு தெரியும்.. :)
@எஸ்.கே
// :-( //
என்ன்ன்ன?? யார் உங்களை கிள்ளி விட்டது?.. :)
@கௌசல்யா
//இரு பதிவுகளையும் படித்தேன்...உங்களின் உணர்வுகளை மதிக்கிறேன்...
எனக்கு ஆதங்கமாக தெரிந்தது, எழுதினேன். அதற்கு உங்களின் விரிவான விளக்கங்கள் எனக்கு பல நல்ல புரிதல்களை கொடுத்தன...
அதற்காக உங்களுக்கு என் நன்றிகள் டெரர்.
வாழ்த்துக்கள்.//
தங்களின் புரிதலுக்கு நன்றி சகோ! உங்களை ஏதாவது வரிகள் காயபடுத்தி இருந்தால் வருந்துகிறேன்.. :(
@சுபா
//அண்ணா.. இவ்ளோ நாள் மனசுக்குள்ள வெச்சிருந்தத எல்லாம் இன்னைக்குக் கொட்டித் தீர்த்துட்டீங்க...இப்பெல்லாம் எல்லார் குடும்பத்திலும் ஒருத்தராவது வெளிநாடு சென்று வேலை பார்க்கிற சூழ்நிலை..அவர்களின் நிலையிலிருந்து யோசித்துப் பார்த்தால் டெரராகத் தான் இருக்கிறது.. //
:)
// These things apart, U have good writing skill.. Continue writing whenever u find time :)
அன்புத் தங்கை,
சுபா. //
போற போக்குல ஒரு நக்கலடிச்சிட்ட சரி விடு.. :)
இராஜராஜேஸ்வரி
// NEVER!! //
அதனாலயும் தான் ஊருக்கு வரமாட்டராங்க. நான் எல்லாம் 15 ஆயிரம் கொடுத்தா கூட ஊருக்கு வந்துடுவேன்... :))
@ரமேஷ்
//Machi nice da. Nalla feeling post//
உனக்கு சீரியஸ் கமெண்ட் வரமாட்டுது. வீனா ட்ரை பண்ணாத.. :)
@Lakshmi
//எல்லாத்தையும் விட பணம்தான் பெரிசா போச்சுபோல இருக்கே? அதுக்கு விலையாக கொடுப்பதெல்லாம் மிக மிக அதிகம்.//
மன்னிக்கவும். தவறான புரிதல். ஒரு பேச்சிக்கு.. நானே உங்க பிள்ளையா இருந்து உங்களூக்கு ஹார்ட் ப்ராப்ளம் இருக்குனு ஒரு 3 லட்சம் கடன் வாங்கி. என்னோட சம்பளத்தில் அதை அடைக்கு முடியாமல் வெளிநாட்டுக்கு போனா.. பாரு பணம்தான் முக்கியம் அப்படினு என்னை விட்டு வெளிநாடு போய்ட்டான் சொல்லுவிங்களா? :)
@MANO நாஞ்சில் மனோ
// உள்ளக்குமுறலை சூப்பரா சொல்லிட்டேய்யா.....!! //
ஹி ஹி.. நீங்க மட்டும் என்ன பொழுது போகாமையா வெளிநாட்டுக்கு போய் இருக்க போறிங்க.. :)
MANO நாஞ்சில் மனோ said...
// ஏ யப்பா கொஞ்சம் கைகுடு சாமீ நீ நல்லாயிருக்கணும், மும்பையில நான்பட்ட கஷ்டத்தை சொன்னால் கண்ணுல ரத்த கண்ணீரே வந்துரும், நீங்கெல்லாம் அழுதுருவீங்க அதனால சொல்லலை....//
ரத்த கண்ணீர் கதை எல்லாம் நானும் நிறைய ஸ்டாக் வச்சி இருக்கேன் பிரதர். எல்லாம் ஒரே குட்டையில் விழுந்த மட்டைதான்... :))
(இதுக்கே புள்ளைங்க எல்லாம் பீல் பண்ணுது. நாம எல்லாம் எப்பவும் காமடி பீஸா இருப்போம்)
Mohamed Faaique
// கட்டுரை ரொம்பப் பாதிச்சிடுச்சு பாஸ்....//
ஏன்?? ஒரு வேளை நீங்க சும்மா டைம்பாஸ்க்கு துபாய் வந்து இருக்கிங்களோ.. :)))
@angelin
//உங்களது ஆதங்கம் நன்கு புரிகிறது .
மத்திய கிழக்கு நாட்டு நிலவரம் எனக்கு அவளவு தெரியாது .ஆனா இங்கே ஐரோப்பாவில் நிறைய மாணவர்கள் இந்தியாவில் நல்லவேலையை விட்டு இங்கே வந்து படித்து கொண்டே வேலை செய்யலாமென்ற தவறான எண்ணத்தில் கடன் வாங்கி இங்கே வராங்க அவங்க படும் கஷ்டத்தை நினைத்து பார்த்து தான் நான் //அங்கே வேலையில்லையா //என்று கேட்டிருந்தேன் .தவறாக கூறியிருப்பின் மன்னிக்கவும் //
எதுக்கு சகோ மன்னிப்பு அப்படினு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றிங்க? உங்க கருத்தை நீங்க சொன்னிங்க. பேராசை , சூழ்னிலை இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு இல்லியா? அங்க சகோதரி கௌசல்யா
வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் வசதியானவர்களை பற்றி இங்கே சொல்லவில்லை...இந்த நாட்டில் வேலை கிடைக்கவில்லை என்று அப்பாவிடமோ, அடுத்தவரிடம் கடன் வாங்கியோ விமானத்தை பிடிக்கும் இளைஞனை சொல்கிறேன்...
அப்படினு சொல்லி இருந்தாங்க வசதி இருந்து ஏன் தொழில் செய்யாம வேறு நாட்டுக்கு போறிங்க அப்படினு கேட்ட வேற கதை. ஆனா கடன் வாங்கி ஏன் போறோம் அப்படினு புரிஞ்சிக்காம "பிழைக்க வழி வகை தெரியவில்லையா ?? துணிச்சல் இல்லையா ??" இப்படி எல்லாம் கேட்டு இருப்பது தான் என் ஆதங்கத்தை / எதிர்ப்பை தெரிவிக்க வைத்தது.
அவங்களுக்கு தெரிந்த ஒருத்தரை பாரட்ட தெரியாத பல பேரை கயப்படுத்திடாங்க. இதற்கு பதில் நல்ல வேலை கிடைக்கவில்லை என்று விரக்தியில் இருக்கும் எல்லாருக்கு பொதுவா கருத்து சொல்லி இருக்கலாம்... :) நன்றி!
@ NAAI-NAKKS
நீங்க என்னை தான் சண்டைக்கு கூப்பிட்டிங்க நினைச்சேன். அதரவாளர்கள் யாராவது உங்களுக்கு எதிர்ப்பு தெரிவிச்சா நானும் வரேன்.. :)
சீரியஸ்னா கமெண்ட்டு இது ...
செம்ப தூக்கிட்டு சண்டைக்கு வர்ரவுங்க நேர பாண்டி கிட்ட போகவும்.....
சொந்த ஊர்ல, சொந்தமா தொழில் செஞ்சு ஏதோ 100/200 ன்னு சம்பாரிச்சா....
"திரை கடல் ஓடியும் திரவியம் தேடுன்னு சொல்லுவாங்க"....
வெளி நாட்டு ல இருந்தா ஏன் இந்த வெளி நாட்டு மோகம்ன்னு சொல்லுவாங்க.....
பாண்டி இது எல்லாம் கண்டுக்காம போயிட்டே இருக்கனும்...இருப்பேங்கே.......
"வாழ்ந்தாலும் ஏசும் , தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தானடா...".
>அப்படினு சொல்லி ஒரு பத்து ரூபாய் நீட்டுச்சி அதை வாங்க சுய கௌரவம் எவ்வளவு தடுத்து இருக்கும் அப்படினு அந்த இடத்தில் இருந்தவனுக்கு மட்டும் தான் புரியும். இருந்தாலும் அதையும் வாங்கிட்டு தான் வந்தேன்.
(முதல் பாகம்)
ரொம்ப டச் பண்ணிட்டீங்க.
////TERROR-PANDIYAN(VAS) said...
@கௌசல்யா
தங்களின் புரிதலுக்கு நன்றி சகோ! உங்களை ஏதாவது வரிகள் காயபடுத்தி இருந்தால் வருந்துகிறேன்.. :(//////
போலிகளை நம்பாதீர்கள்.....
இந்தப் பதிவில் என்ற பெயரில் ஒரு போலி உலாவுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன !!!!!
//// TERROR-PANDIYAN(VAS) said...
ஒரு முடிவோடதான் வந்து இருக்க.. ://////
நீ முதல்லே நான் இதோட முதல் பாகத்துல போட்ட கமெண்டை அழிச்சது யாருன்னு சொல்லு ராஸ்கல்.... சின்னப் புள்ளைத்தனமா இர்ருக்கு.... பிச்சுப் புடுவேன் பிச்சு
///மாணவன் said...
ங்கொய்யாலே பதிவ நீ முழுசா படிச்சியா இல்லையா? இல்ல கடைசி வரிய மட்டும் படிச்சுட்டு சூப்பர்னு சொல்றியா? :-)
/////
எண்ணையை என்ன உன்னைமாதிரின்னு நினைச்சியா அல்லாம் படிச்சாச்சு படிச்சாச்சு.... படிச்சுட்டுதான் முதல் பாகத்துளையும் ரெண்டாவது பாகத்துளையும் கமெண்ட்டு போட்டேன் யாரோ வந்து முதல் பாகத்துல போட்ட கமெண்டை தூக்கிகினுப் போய்ட்டாங்க
49
50
போலிகளை நம்பாதீர்கள்.....
இந்தப் பதிவில் TERROR-PANDIYAN(VAS) said.. என்ற பெயரில் ஒரு போலி உலாவுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன !!!!!
///TERROR-PANDIYAN(VAS) said...
அதனாலயும் தான் ஊருக்கு வரமாட்டராங்க. நான் எல்லாம் 15 ஆயிரம் கொடுத்தா கூட ஊருக்கு வந்துடுவேன்... :))////
without - ல வர்ற புள்ளைக்கு வேவரத்தைப் பாருங்கப்பா......நீயே கள்ளத்தோணி ஏறி வரப்போறே இதில உனக்கு எதுக்கு அம்புட்டு காசு... எனக்கு குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும் வாங்கிட்டு வர்ரதுக்குதானே????
நீ ரொம்ப நல்லவன் மச்சி!!!!
////Terro pandian (VAS)எதுக்கு சகோ மன்னிப்பு அப்படினு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றிங்க? உங்க கருத்தை நீங்க சொன்னிங்க.///
இதனால சகலமாணவர்களுக்கும் [டை மானவா உன்னை சொல்லலை] பொதுவா அல்லாருக்கும்னு சொல்ல வர்றேன்னு சொல்லுவது என்ன வென்றால் இங்கு செய்கூலி சேதாரம் இன்று முதல் விலக்கப்படுகிறது.... டும் டும் டும் டும்
@ டெரர்
உண்மைதான் மச்சி.. நாம என்ன ஆசைப்பட்டா இங்க இருக்கிறோம்... கடலுக்கு நடுவுல தத்தளிக்கிறவனுக்கு ஒரு மரத்துண்டு கிடைச்சா என்ன பண்ணுவானோ அததான் நாம பண்ணினோம்... ஒரு மதிய அரசு ப்ராஜெக்ட்.. ப்ராஜெக்ட் அசிஸ்தன்ட்னு சொல்லி எடுத்தானுங்க... அங்க உள்ள சைண்டிஸ்ட் டீ குடிச்ச கிளாஸ கழுவ சொன்னானுங்க... அந்த இடத்துல ரோசம் வரணும்.. ஆனா வரலையே... ஏன்னா நாம எல்லாம் சபிக்க பட்டவங்க மச்சி.. ஒண்ணுமே இல்லைனா ஜீரோவுல இருந்து ஆரம்பிக்கலாம்... ரொம்ப வசதியா இருந்தா கவலையே இல்லை... இந்த நடுத்தர வர்க்கத்துல பிறந்ததால நாம படர கஷ்டம் இருக்கே... அதெலாம் பட்ரவனுக்குதான் தெரியும் மச்சி.. நம்ம குடும்பத்துல உள்ளவங்க கண்ணீர துடைக்க நமக்கு ரூபாய் நோட்டு பத்தாது மச்சி... டாலர்தான் வேணும்... அதுக்கு விலை எங்க சந்தோசம்னா அத சந்தோசமா எங்க குடும்பத்துக்காக விட்டு கொடுக்கிறோம்!
பிரதர் நச்னு ஒரு போஸ்ட்
எவ்ளோ திறமை எங்க ஒளித்து வைத்து இருந்தீங்க
வாழ்க வளமுடன்
/போற போக்குல ஒரு நக்கலடிச்சிட்ட சரி விடு.. :)/
உண்மையைச் சொன்னா நம்புங்க...
///சுபத்ரா said...
/போற போக்குல ஒரு நக்கலடிச்சிட்ட சரி விடு.. :)/
உண்மையைச் சொன்னா நம்புங்க...///
உன்னைசொல்லிக் குற்றம் இல்லை என்னை சொல்லிக் குற்றம் இல்லை.... காலம் செய்த கோலமடி காலம் செய்த கோலம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!!!!!!
அடப் போங்கப்பா ஆரையும் கானோம்ம் நானும் வூட்டுக்குப் போறேன்......
@மொக்கராசா
// சீரியஸ்னா கமெண்ட்டு இது ...
செம்ப தூக்கிட்டு சண்டைக்கு வர்ரவுங்க நேர பாண்டி கிட்ட போகவும்....//
கொய்யால்! எவ்வளவு கொலைவெறி... :))
@எஸ்.சக்திவேல்
//ரொம்ப டச் பண்ணிட்டீங்க//
சரி சரி இதுக்கு எல்லாம் வருத்தபட கூடாது. அதுக்கு பெயர்தான் பிர்க்டிகல் லைப்.. :)
கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட அனுபவங்கள் தான் நமக்கு எதிரில் வரும் பாதையை சுலபமா கடக்க உதவி செய்யுது.. :)
டெரரின் கருத்துக்களுக்கு உடன்படுகிறேன்.
(யார் செய்த புண்ணியமோ எனக்கு இருபது வயதிலேயே அரசாங்க வேலை கிடைத்துவிட்டதால் இப்படி நான் துயரப்பட்டதில்லை.)
@வைகை
//அதெலாம் பட்ரவனுக்குதான் தெரியும் மச்சி.. நம்ம குடும்பத்துல உள்ளவங்க கண்ணீர துடைக்க நமக்கு ரூபாய் நோட்டு பத்தாது மச்சி... டாலர்தான் வேணும்... அதுக்கு விலை எங்க சந்தோசம்னா அத சந்தோசமா எங்க குடும்பத்துக்காக விட்டு கொடுக்கிறோம்!//
அப்படியா சொல்லிட்ட? நான் என்னமோ நீ ஊரில் இருக்க ஒரு அரண்மனை பத்தாம இன்னும் ஒன்னு கட்ட வந்த நினைச்சிடேன்.. :)
@siva
//பிரதர் நச்னு ஒரு போஸ்ட்
எவ்ளோ திறமை எங்க ஒளித்து வைத்து இருந்தீங்க
வாழ்க வளமுடன்//
நன்றி ஐயா! :))
(ஏன் ஏன் ஏன்?)
@பெசொவி
//டெரரின் கருத்துக்களுக்கு உடன்படுகிறேன்.
(யார் செய்த புண்ணியமோ எனக்கு இருபது வயதிலேயே அரசாங்க வேலை கிடைத்துவிட்டதால் இப்படி நான் துயரப்பட்டதில்லை.)//
போங்க போய் கண்ணை துடைச்சிட்டு பொழப்பை பாருங்க.. :)
பயபுள்ளை என்னுடைய ஒரு கமேண்டுக்காவது மதிச்சு பதில் போடுத்தாணு பாரேன்....
@வினு
//பயபுள்ளை என்னுடைய ஒரு கமேண்டுக்காவது மதிச்சு பதில் போடுத்தாணு பாரேன்....//
:)
//தைரியம் இருந்தா இரத்தபூமில கால் வை..
ஐயய்யோ... தெரியாத்தனமா இரத்த பூமியில கல் வைச்சுட்டேனே... இப்ப என்ன பண்றது...
ஆகா... பதிவு ரொம்ப Terror-ஆல இருக்கு...
ஆமா நீங்க எந்த நாட்டில இருக்கீங்க??
சனி?!வணக்கம்!கம்பியூட்டர் குளறுபடியால் கடந்த சில நாட்கள் பதிவுலகப் பக்கமோ,ஏனைய செய்தி தளங்களுக்கோ வர முடியவில்லை.இன்று சரியாக்கி விட்டோம்.தொடரும்!
நான் அந்த அர்த்தத்தில் சொல்லவரல்லே.பணம் சம்பாதிக்க இளமை, சந்தோஷங்கள் குடும்பத்தினரின் பிரிவு என்று நிறைய விலையா கொடுக்கவேண்டி இருக்கு இல்லியா அதைத்தான் சொல்லவந்தேன்.
// @மாதவன்
போங்க அந்த கரண்டு கம்பத்தில் ஏறி எதில் பாசிடிவ் வருது பாருங்க... :) //
ம்.. ஒரு பிரயோஜனமும் இல்ல.. எதுல பாசிடிவ்னு தெரியல.. பவர் கட்..
:(
Post a Comment