Friday, November 25, 2011

'கொலவெறி', 'வடகறி'யாக


பிரபல ஆளு ஒருத்தரு, ஒரு girl கிட்ட பல்பு வாங்கிட்டு 'கொலவெறி' சாங் பாடினது உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். ப்ளாஷ்-பேக்ல அந்த girlளோட அறிமுகம் ஆன புதுசுல ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போனாரு. முதல்ல சூப் மற்றும் வடகறி ஆர்டர் பண்ணாரு, அவங்களுக்காக..

அப்ப அவரே டியூன் போட்டு பாடின பாட்டு.. இதோ உங்களுக்காக .. ('கொலவெறி' மெட்டுல). இந்த லிரிக்ஸ, ஒரிஜினல் பாடல கேட்டுகிட்டே பாருங்க, படிங்க

யூ  Girl, அயாம் சிங் சாங்
சூப் சாங்
ப்ளாக்-டீ சாங்

ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி
ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி

டேஸ்ட் கரேக்ட்
ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி
மெனு.. ப்ளீஸ்..
ஹொவ் திஸ் வடகறி... ...........  ...... அடி
ஹ.... ஹ..
டிஷ்ஷு இங்க க்ளீனு.. க்ளீனு...
டிஷ்ஷு கலரு ஒயிட்டு..
ஒயிட்டு பாக்ரவுண்டு ரோஸு ரோஸு
ரோஸுகலரு reddu ..
ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி
ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி

ஒயிட் ஸ்கின் eggu eggu 
eggu உள்ள yolkku 
ஓவன்ல வெச்ச Meatடு... Meatடு..
நம்ம பியுச்சர் வாட்டு?
ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி
ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி  

பேரர் ஆர்டர் எடுத்துக்கோ
அப்படியே கைல ஸ்நாக்ஸ்.. எடுத்துக்கோ..
பா பா பான் பா பா பான் ப ப பா ப ப பான்
(எழுதினத ஒரு தபா)சரியா வாசி

சூப்பர் மாமா ரெடி
ரெடி onee.. twooo three four
ஹ.. ஹ.. ஹ.. 
வாட் எ சேஞ்ஜ்  ஓவர் மாமா
ஓகே மாமா நவ் மெனு சேஞ்சு

கைல ப்ளேட்டு
ஒன்லி இங்கிலீஷ் ..
ஹான்ட் ல ப்ளேட்டு
ப்ளேட்ல ஆம்லேட் 
டிஷ்ஷு புல்லா சிப்ஸ்ஸு
எம்ப்டி பர்ஸ்ஸு
ஓனர் கம்மு..
மாவு grinda கோயிங்கு...
மாவு.. மாவு
grinder மாவு
யு ஷோ டு மீ wherரு
ஸ்டவ்வு ஸ்டவ்வு தோசை ஸ்டவ்வு
ஐ வான்ட் யு ஹியர் நவ்வு
God ஐ ம் ஃஹாபா டையிங்கு
ஷி இஸ் ஹாப்பி ஹொவ்வு  ?
திஸ்ஸு சாங்  ஃபார் சூப் பாய்ஸ்ஸு
வி டோன்ட் ஹவ் சாய்ஸ் ஸு...

ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி
ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி
ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி
ஹொவ் திஸ் வடகறி வடகறி வடகறி டி
 
..பிளாப் சாங்.

Thursday, November 24, 2011

பதிவர்கள் எழுதிய புத்தகங்கள்-சூடான விற்பனை!!!

ஒரு பதிப்பகம் ஆரமிச்சு கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம். நம்ம பிரபல(!!!) பதிவர்களிடம் கொஞ்சம் புத்தகம் எழுதி கொடுங்க, அதுக்கு முன்னாடி தலைப்ப கொடுங்கன்னு டெரர் கும்மி சார்புல போயி கேட்டோம். அவங்களும் எழுதி கொடுத்தாங்க. அவங்க என்ன தலைப்பு கொடுத்தாங்கன்னு நீங்களே பாருங்க.

வைகை:

சுடச் சுட அறுத்துக் கிழிப்பது எப்படி?

டெரர் பாண்டியன்:

“ எவனா இருந்தா எனக்கென்ன: ஒரு இரத்த சரித்திரம் “

பதிவே போடாமல் பிரபல பதிவரா இருப்பது எப்படி?

முரட்டு ஓட்டகத்துக்கு பல்லு விளக்கி விடுவது எப்படி..? ( படங்களுடன் )

போரம் வைத்து நடத்துவது எப்படி?

பொறுக்கிகளை உருவாக்குவது எப்பிடி?

அம்பியாக இருந்துகொண்டு அன்னியனாக காட்டிக்கொள்வது எப்படி?

எஸ்.கே:

பொறுக்கிகளோடு வாழ்வது எப்படி? -எஸ்கே

பன்னிக்குட்டி ராம்சாமி:

டாகுடர்களின் ரத்த சரித்திரம்

கக்கா போவது  எப்படி?

அருண் பிரசாத்:

புதிரா புனிதமா?

புதிர்களில் வாழ்கிறேன்

வந்தார்கள்.. உல்டா செய்தார்கள்

பாபு:

வம்பிழுப்பது எப்பிடி?

பல்புகளும் திமுக ஆட்சிக் கொடுமைகளும்

தமிழில் எழுதுவது எப்படி?

தப்புத்தாளங்கள்

மாணவன்:

கதவுக்கு பின்னே ஒரு வரலாறு

வரலாற்றுப் பொறுக்கிகள்

கடைசி வரை நல்லவனாகவே நடிப்பது எப்படி?

வருத்தமான வரலாறு

மாலுமி:

" சரக்கடிக்க தேவையான சைட் டிஷ் செய்வது எப்படி..? "

தண்ணீர் தேசம்

" குவார்டர் " பக்க கதைகள்

பெ.சோ.வி:

மொக்கை கத்தி முனுசாமி

மங்குனி:

I am a xerox man

எஸ்.எம்.எஸ்.களும் ப்ளாக்ஸ்பாட்டும்

செந்தமிழும்., நொந்த ( என் ) தமிழும்

ஏழரை அறிவு

செல்வா:

“ நானும் என் மொக்கைகளும் பின்னே சில வடைகளும் “

வெங்கட்:

என் சங்கத்து ஆள அடிச்சது எவண்டா?

கவிதை மாதிரி எழுதுவது எப்படி?

ஜெயந்த்:

ஜோதி தரிசனம்

பட்டாப்பட்டி:

அன்னையின் ஆணை

ரமேஷ்:

" ஓசி சோறும், ஊசி போன வடையும் "

திருமணத்துக்கு பெண் தேட 100 எளிய வழிகள்

திருமணத்துக்கு பெண் தேட 100 கடினமான வழிகள்

காலமெல்லாம் காத்திருப்பேன்

மேட்ரிமோனியல் பக்கங்கள்

ராஜ்டீவியும் மொக்கைப் படங்களும்

டாகுடர் விஜயக்காந்த் வாழ்க்கையும் வரலாறும்

படங்களை மட்டும் வைத்து பதிவு தேத்துவது எப்பிடி?
 :
நாகராஜா சோழன் MA :

பின்  நவீனத்துவம் ஒரு பார்வை

டெரர் கும்மி:

19 அப்பாவிகள் - டெரர் கும்மி

பதிப்புகளுக்கு முந்துங்கள். பரவச நிலையை அடையுங்கள்!!!

Friday, November 18, 2011

என்னாது வெளிநாட்டு மோகமா?? - 2



ஒரு வழியா மேல வந்தாச்சி அப்படினு மூச்சிவிடரதுகுள்ள வாழ்க்கை மறுபடியும் கீழ தள்ளும். நீங்க மூழ்கிகிட்டு இருக்கிங்க அப்போ வெளிநாட்டில் இருந்து ஒரு கைமட்டும் நீளுது என் கையை பிடிச்சிகோன்னு. பத்தாவது படிக்கிர அப்போ வெளிநாட்டில் நல்ல வேலை கிடைச்ச யார் எல்லாம் போவிங்க அப்படினு வகுப்பாசிரியர் கேட்டதும் எல்லாரும் கையை தூக்க நாம மட்டும் பெரிய ஹீரோ மாதிரி (@#@$#$%%) சும்மா இருக்க. வாத்தியார் ஏன் அப்படினு கேக்க. நான் படிச்சிட்டு இந்தியாவுக்கு தான் சேவை செய்வேன் சொன்னது அதுக்கு அவரு குட் சொன்னது எல்லாம் தேவையில்லாம நியாபகத்துக்கு வரும். ஆனா அதை எல்லாம் ஓரம் தள்ளிட்டு நீட்டின கையை பிடிச்சி முதல்ல மேல வாடா அப்படினு வாழ்க்கை சொல்லும். அதான் செஞ்சேன். ப்ளாஷ் பேக் கட்.. (இல்லைனா ஏழு வருஷத்து கதையை சொன்னா டைம் பத்தாது)

//நம் நாட்டை குறை சொல்ல ஆயிரம் காரணங்களை அடுக்கலாம். ஆனால் ஏன் இங்கே உழைக்க முடியவில்லை என்ற கேள்விக்கு சரியான பதில் இருக்கிறதா ? அப்படி உங்களுக்கு சாதகமாக பதில் வைத்திருந்தாலும், இங்கே இருக்கும் மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டி வருமே...?! //

அது என்ன சாதகமான பதில் இருந்தாலும்னு இழுக்கறிங்க? சரின்னு தெரிஞ்சாலும் ஒத்துக்க மாட்டிங்க அப்படியா?? வாழராங்க ரைட்டுங்க. உங்க வழிக்கே வரேன்? உங்க வீட்டில் கார் இருக்கா? சரி பைக்? எதுக்குங்க அதை எல்லாம் வாங்கறிங்க? கார் பைக் இல்லாதவன் எல்லாம் வாழவில்லையா? ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்துக்கு போகவில்லையா? இப்படி ஆள் ஆளுக்கு பைக் வாங்க போய்தான் பெட்ரோல் தேவை அதிகரிச்சிகிட்டே போகுது. அப்படினு நான் சொன்னா நீங்க ஒத்துபிங்களா? உங்க வாழ்க்கை தரம் உயரலாம் அடுத்தவன் அப்படியே இருக்கனுமா? :) இந்தியாவில் ஐம்பதாயிரம் ரூபாக்கு வேலை செய்யர ஒரு மேனேஜர் வெளிநாட்டில் வேலை தேடினால் குறைந்தது இரண்டு லட்சம் ரூபாய்க்கு வேலை கிடைக்கும் அப்படினு என்னால சொல்ல முடியும். ஆனே வெளிநாட்டில் ஒரு லட்சம் ரூபாய்க்கு வேலை செய்யரவன் இந்தியாவுக்கு திரும்பி வந்தா முப்பதாயிரம் ரூபாய்க்கு வேலை கிடைக்கும்னு உங்களால சொல்ல முடியுமா??

// ஆயிரம் வசதிகள் இருந்தாலும் சொந்த நாட்டில் சொந்த பந்தங்களுடன், மனைவி குழந்தைகளுடன் ஒன்றாக வாழும் வாழ்க்கைக்கு ஈடு இணை ஏதும் இல்லை. மனைவி குழந்தைகளை விட்டு சென்று, பல வருடம் கழித்து திரும்பி வரும் சிலருக்கு,நெருங்கிய அந்த உறவுகளே அன்னியமாகி விட்டதை போல தெரியும் சோகம் மிக கொடுமை//

எல்லாருக்கு ஆசை அதான் பொண்டாட்டி புள்ளை எல்லாம் விட்டு வெளிநாட்டி போய் சந்தோஷமா இருக்காங்க.

// முதலில் அன்பை பொழிந்த உறவுகள், வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை அனுபவித்த பின்னர், வெறும் பணம்காய்ச்சி மரமாக மட்டுமே உங்களை பார்க்க கூடிய நிலை சகஜம் !! //

சும்மா ஊர்ல இருக்க எங்க சொந்தகாரங்களை எல்லாம் அசிங்க படுத்தாதிங்க. கஞ்சியோ கூழோ கூட இருந்தா போதும் திரும்பி வந்துடு அப்படினு கூப்பிடத வீடு மிக குறைவு. இருந்தாலும் நாம கஷ்டபட்டாலும் நம்ம சேர்ந்தவங்க கஷ்டபடாம இருக்கனும் அப்படினு நாடுவிட்டு நாடுவந்து நாங்க வேலை பார்த்தா. எருதின் புண் காக்கைக்கு தெரியுமான்னு சொல்ர மாதிரி ஏறி உக்காந்து கொத்தாதிங்க. வேனும்னா உங்க அட்வைஸ் எல்லாம் இன்னும் பணம் இன்னும் பணம் அப்படினு எவனாவது வேலை செய்வான் அங்க போய் சொல்லுங்க. அப்படி சொல்லனும் ஆசைபட்ட இந்தியாவில் இருந்துகிட்டு அளவுக்கு மிறி பணம் சம்பாதிக்கரவனும் இருக்கான் அங்க இருந்து ஆரம்பிங்க.. :))

//வெளிநாட்டு வேலையை பற்றி இப்படி என்னை ஆதங்கப்பட வைத்துவிட்டது நேற்று நடந்த ஒரு சிறிய சம்பவம்...//

இவ்வளவு பேச்சி பேசிட்டு அங்க என்ன படம் போட்டு இருக்கிங்க? ஏன் அந்த உழைப்பாளி, உண்மையான இந்தியன் தன்னோட படத்தை போட வேண்டாம் சொல்லிட்டாரா? அப்படினா கூகுள்ள போய் தேடினா ஒரு உழைப்பாளி படம் கூட கிடைக்கவில்லையா? #சும்மா டவுட்டு. நீங்க பிறந்ததில் இருந்து இந்தியா / இந்தியன் அப்படினு எத்தனை முறை சொல்லி இருக்கிங்களோ அதைவிட அதிக முறை நான் இங்க இந்த மூனு வருஷத்தில் சொல்லி இருக்கேன். நாட்டை பற்றி நினைப்பு உங்களைவிட எங்களுக்கு அதிகம்.

பல பேரு இங்க இஷ்டபட்டு இல்லை கஷ்டபட்டு தான் வேலை செய்யரோம். வேற வழியே இல்லாம ஒரு ஸ்டேஜ்ல இந்தியா வருவோம். அப்போ வந்து இப்போ வந்தா இல்ல இப்போ வந்த இல்லை இப்போ மட்டும் இதில் வாழ முடியுதா அப்படினு வடிவேல் மாதிரி காமடி பண்ணாதிங்க. அது வரை எங்க குடும்பங்களும் பொருளாதார ரீதியா கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டுமே. அதில் உங்களுக்கு என்ன வருத்தம்? அதுவரை வேணும்னா நீங்க இப்படி அட்வைஸ் பண்ணி கட்டுரை எழுதிகிட்டு இருங்க... வாழ்க ஏசி ரூம் பதிவர்கள்.

டிஸ்கி : நண்பர்களே! இது வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லாம் ஏதோ மோகத்தில் வாழ்கிறார்கள் என்ற கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதபட்டது. இறைவன் அருளால் நான் இன்று நலமுடனும் வளமுடனும் இருக்கிறேன். ஆனாலும் இன்றும் பல இளைஞர்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் விமானம் ஏறி கொண்டு தான் இருக்கிரார்கள். அவர்கள எல்லாம் ஏதோ தேச தூரோகிகளை போல் பார்க்க வேண்டாம் என்ற வேண்டுகோளுடன்... டாடா.
.

என்னாது வெளிநாட்டு மோகமா??? - 1


.
இங்க சகோதரி கௌசல்யா அவர்கள் எழுதின கட்டுரையை படிச்சேன். அப்பா சாமிகளா ஏன் ஆ..ஊனா வெளிநாட்டு மோகம் அப்படினு முத்திரை குத்திடறிங்க. இதே பதிவை தன்னம்பிக்கை அப்படினு தலைப்பு வச்சி எழுதி இருந்தா பாராட்டி இருப்பேன். என்னாமோ அங்க வாய்ப்புகள் எங்க வீட்டு வாசல் படியில் தவம் கிடக்கர மாதிரியும் நாங்க தான் அதை எட்டி உதைச்சிட்டு ராக்கெட் ஏறி சந்திர மண்டலத்துக்கு போன மாதிரியும் சொல்லிடறிங்க. இதில் வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் அப்படினு ஒரு பாட்டு. வழியா இல்லை பூமியில் தான் நீங்களே சொல்லி இருக்கிங்க வழியா இல்லை இந்தியாவில் அப்படினு இல்லை.

//இந்த நாட்டில் வேலை கிடைக்கவில்லை என்று அப்பாவிடமோ, அடுத்தவரிடம் கடன் வாங்கியோ விமானத்தை பிடிக்கும் இளைஞனை சொல்கிறேன்...கடன் வாங்கி வெளிநாட்டை தேடி செல்வதை விட அதே பணத்தை வைத்து சொந்த ஊரில் சிறு தொழிலை தொடங்கலாமே என ஏன் யோசிப்பதில்லை...?! பிழைக்க வழி வகை தெரியவில்லையா ??// அப்படினு கேக்கராங்க. கேள்வி கேக்கரது சுலபம்.. :))

அங்க எல்லாம் கொட்டி கிடக்கு தான் ஆனா அதை அள்ளி எடுக்க இல்லை கிள்ளி எடுக்க எவ்வளவு கஷ்டபடனும் எனக்கு தெரியும். சுயதொழில் சொல்றிங்க, லோன் சொல்றிங்க எல்லாம் நல்லா தான் இருக்கு. அந்த லோன் வாங்க பேங்க் பக்கம் போனதும் சார் வாங்க உட்காருங்க அப்படினு காப்பி, டீ எல்லாம் கொடுத்து ஒரு லட்சம் போதுமா இல்லை ஐந்து லட்சம் தரட்டுமா அப்படினு அன்பா கேட்டு. முடியவில்லைடா சாமி. இளைஞார்களே வாருங்கள் சுயதொழில் செய்ய நாங்கள் யோசனை சொல்லி உதவுகிறோம் அப்படினு டி.வியில் பெருசா பேட்டி கொடுத்து போன் நம்பர் எல்லாம் கொடுத்தான். நானும் நம்பி ஐயா நான் ஒரு ஆர்வம் மிக்க இளைஞன் அப்படினு அங்க போய் நின்னா. எவனுக்கும் நின்னு பதில் சொல்ல கூட பொருமை இல்லை. கடைசியில் ஒரு பியூன் பரிதாப பட்டு ஒரு ஊர் பேரை சொல்லி நீங்க அங்க போய் பாருங்க ஒருத்தர் காலான் பண்ணை வச்சி இருக்காரு அவரை கேட்டு பாருங்கனு. 

நாமளும் மனசை தளர விடாம அங்க போய் தெரு தெருவா தேடி அவரை கண்டுபிடிச்சி ஐயா நான் சொந்தமா தொழில் தொடங்கனும். அதுக்கு உங்க ஆலோசனை என்ன அப்படினு கேட்டதும் அவர் சொன்ன முதல் பதில் தம்பி சொந்தமா ஒரு வேலை தேடிக்கோங்க. அப்புறம் பார்ட் டைமா இதை எல்லாம் செய்யலாம். சரி நீங்க விபரம் சொல்லுங்க அப்படினு கேட்டேன். நல்ல மனுஷன் எல்லாம் விளக்கினாரு. கடைசியா இதுக்கு முதலீடு அறுபத் ஆயிரம் வரை ஆகுன்னு சொன்னாரு. என்னது அறுபதா!!!! என்கிட்ட அறுபது ரூபாய் கூட இல்லியே. சரி சரி வாழநினைத்தால் வாழலாம் தட்டுடா பேங்க் கதவை. உங்க ஆர்வம் எல்லாம் சரி தம்பி ஆனா எதைவச்சி அவ்வளவு பணம் கொடுக்கரது? குடும்ப சொத்து இல்லைனு சொல்றிங்க, சொந்தமா இடம் எதுவும் இல்லைனு சொல்றிங்க. கேரண்டி கையெழுத்து போடவும் யாரும் தெரியாது சொல்றிங்க. அதுவுமில்லாம இந்தா காலன் வளர்ப்பு எல்லாம் வேலைக்கு ஆகாது தம்பி வேற ஏதாவது யோசிங்க இப்படி அயிரம் கதை.

நானும் கண்ணுலபடுகின்ற, மூளையில் தோன்றுகின்ற எல்லா தொழில் பத்தியும் முயற்சி பண்ணேன். அறுபதாயிரமில்லை வெறும் ஆயிரம் ரூபாய் நம்பி கொடுக்ககூட ஆள்கிடையாது. நம்பி கேரண்டி கையெழுத்து போட ஆள்கிடையாது. ஆனா சுயதொழில் எல்லாம் வேலைக்கு ஆகாது உருப்படர வழியைபாரு அப்படினு வாய் வலிக்காம யோசனை மட்டும் சொல்லி அனுப்புவாங்க. சரி என்னைக்காவது ஒரு நாள் புள்ளை தொழில் ஆரம்பிச்சி குடும்பத்த காப்பத்தும் அப்படினு பெத்தவங்க வேனா பொருமையா இருக்கலாம் ஆனா குடும்ப சூழால் அப்படி எல்லாம் உங்களை விடாது. முகவரி அப்படினு ஒரு அஜித் படம் பார்த்து இருப்பிங்களே? கடைசியில் லட்சியத்தை தூக்கி போட்டு வேலைக்கு போவாரு. உங்க கண்ணுகு தெரியாம தினம் ஆயிரம் பேரு இப்படி மாறிகிட்டு இருக்கான்.

வேலைன்னா ஐ.ஏ.எஸ் ஆபிசர் வேலை கிடைச்சி போய்ட்டேன் நினைக்காதிங்க தினம் முப்பது ரூபாய் சம்பளத்துக்கு (25 ரூபாய் சம்பளம் + 5 ரூபாய் பேட்டா) வீடு விடா போய் சோப், பேஸ்ட் விற்கின்ர வேலை. என்னைக்காவது கையில் ஒரு பை நிரைய சோப், பேஸ்ட் எல்லாம் அடுக்கி வச்சிகிட்டு ஒரு ஒரு மணி நேரம் வெயில்ல நடந்து பாருங்க. அதுலையும் ஹவுஸிங் போர்ட் ஏறியா, அப்பார்ட்மெண்ட்ஸ் எல்லாம் சூப்பர்!! படி ஏறி இரங்கி பெண்டு நிமிர்ந்திடும். தோள்கள் வலித்தாலும் உடைகள் வியர்வையில் நனைந்தாலும் மனதை தளரவிடாதே அப்படினு நாமளே உற்சாகம் பண்ணிகிட்டு யார் வீட்டு கதவையாவது தட்டினா அவங்க வாங்க வேண்டாம், நங்க சொல்வதை கேக்க வேண்டாம். எதுவும் வேண்டாம் அப்படினு மெதுவா சொல்ல கூட பொருமை இருக்காது. ”வேண்டாம்” அப்படினு ஒரு வார்த்தை அடுத்த சகெண்ட் படார் முகத்தில் அடிக்காத குறையாக கதவு மூடபடும். வீரனுக்கு இது எல்லாம் சகஜமப்பா அப்படினு அடுத்த வீட்டுக்கு போவோம். பத்து வீடு ஏறி இருக்க மாட்டிங்க வாட்ச் மேன் வருவாரு. இங்க எல்லாம் இப்படி எல்லாம் வந்து விற்க்க கூடாது கிளம்பு கிளம்புன்னு அன்பா சொல்லுவாரு.

இது எல்லாம் பராவயில்லை. ஒரு வீட்டு கதவை தட்டினா கூட படிச்ச புள்ளை வந்து கதவை திறக்குது. ”ஹேய்!! என்ன நீ இந்த வேலை செய்யர? (நான் என்ன பிச்சையா எடுக்கரேன்). தண்ணி குடிக்கிறியா? ஏதாவது சாப்படரியா? எங்க வீட்டில் இந்த பிரண்ட் உபயோகபடுத்தரது இல்லை ஆனா உனக்காக வாங்கிக்கிரேன்” அப்படினு சொல்லி ஒரு பத்து ரூபாய் நீட்டுச்சி அதை வாங்க சுய கௌரவம் எவ்வளவு தடுத்து இருக்கும் அப்படினு அந்த இடத்தில் இருந்தவனுக்கு மட்டும் தான் புரியும். இருந்தாலும் அதையும் வாங்கிட்டு தான் வந்தேன். இதுக்கு நடுவில் மதிய சாப்பாடு சாப்பிடனும் பாருங்க. நம்ம இப்போ செஞ்சிகிட்டு இருக்க வேலைக்கு ஹோட்டல் எல்லாம் போனா சங்கு தான். கூட வேலை செய்யர எல்லாரு சேர்ந்து எங்கையாவது ரோட்டோரத்தில் ஒரு மரத்தடியில் உக்காந்து சாப்பிடுவோம். கற்று வீசுது சாப்பாட்டில் மண் விழுது இது எல்லாம் பார்க்க கூடாது. அப்புறம் மாலைவரை யார் வேலை செய்வது.

எல்லாம் முடிச்சி அதுக்கு அப்புறம் ஆபீஸ் வந்து ரிப்போர்ட் எழுதி கொடுத்துட்டு அதுக்கு நடுவில் மேனேஜர் கூப்பிட்டு தம்பி போய் சிகரெட் வாங்கி வா சொல்லுவாரு. வாங்கி வந்து கொடுக்கும் பொழுது சொல்லுவாரு. “தம்பி பார்த்தா படிச்ச புள்ளை மாதிரி இருக்க உனக்கு எல்லாம் இந்த வேலை வேண்டாம்பா. உன் பயோ டேட்டா இருந்தா கொடு நானே நல்ல வேலை வந்தா சொல்லி விடரேன்” (மரியாதையா உனக்கு வேலை இல்லைனு சொல்ராரு) இதுக்கும் அந்த வாரம் நான் 200% டார்கட் கொடுத்து இருந்தேன். உடனே மனசு உடைஞ்சி வெளிநாட்டுக்கு ஓடி போய்ட்டியா கேக்காதிங்க. ஏழு வருஷம் கஷ்டபட்டு இருக்கேன் ஒரு ஒரு முறையும் மேல ஏறி கீழ விழுந்து... அடிபட்டு (அதிகமா மேல ஏறி இருந்தா அதிகமா அடிபடும்). ரோட்ல சோப் விக்கரதுல ஆரம்பிச்சி கார்பரேட் கம்பனில ஒரு ப்ராஞ்ச் இன்சார்ஜா வரனும்னா நான் எவ்வளவு படிகள் தாண்டி இருக்கனும் உங்களுக்கு தெரியுமான்னு தெரியவில்லை.... :))

Friday, November 11, 2011

KLUELESS 7 - அறிவாளிக்கான விளையாட்டு

கடந்த ஆகஸ்ட் மாதம் உங்கள் அனைவரையும் கட்டிப்போட்ட “HUNT FOR HINT” கேமின் முன்னோடி “KLUELESS” தனது 7 ஆம் பாகத்தை இன்று காலை இந்திய நேரம் 11.11 க்கு வெளியிடுகிறது.

இது இந்தூர் ஐஐஎம் மாணவர்களால் வருடா வருடம் நடத்தப்படும் ஒரு அறிவுசார்ந்த போட்டி. இந்த போட்டியின் மேல் இருந்த இன்ஸ்பைரேஷனால் தான் நாங்கள் இதை அடிப்படையாக கொண்டு HUNT FOR HINT நடத்தினோம். எதிர்பார்த்தது போலவே நல்ல ஆதரவு கிடைத்தது . பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 


இப்பொழுது அதன் ஒரிஜினல் வெர்ஷனை விளையாட நீங்கள் தயாரா? எங்களுக்கு தெரிந்து HUNT FOR HINT விளையாட்டு KLUELESS விளையாட்டை விட மிகவும் சுலபமாக அமைத்து இருந்தோம். க்ளூலெஸ் விளையாட்டுக்கு ஐந்தில் ஒரு பங்கு கடினம் தான் ஹண்ட் பார் ஹிண்ட்க்கு வைத்து இருந்தோம். ஆனாலும் நம் பதிவர்கள் க்ளூலெஸ் கேமில் வெற்றி பெற எங்களால் ஆன உதவிகளை செய்ய முயற்சியாக தான் இந்த பதிவு. 


HUNT FOR HINT விளையாட்டின் அதே விதிமுறைகள் தான் இங்கும். ஆனாலும் புதியவர்களுக்காக ஒரு சிறு அறிமுகம்.

எப்படி விளையாடுவது?

  • பல லெவல்கள் கொண்ட இந்த போட்டியில் ஒவ்வொரு லெவலுக்கான விடையையும் கண்டு பிடித்து அடுத்த லெவலுக்கு முன்னேற வேண்டும்
  • கேள்விகள் படங்களாகவே பெரும்பாலும் இருக்கும்
  • விடைகள், ஆன்சர் பாக்ஸ்சிலோ கொடுத்தோ, URL மாற்றியோ,  கிளிக் செய்வது போன்றோ இருக்கும்
  • அனைத்து விடைகளும் கூகுளில் தேடுவதால் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்
  • விடைகளுக்கான க்ளூக்கள், வெப் பேஜ் டைட்டில்லிலோ, URL, Image Name, Page source என பல விதங்களில் இருக்கும். குழப்புவதற்காகவே சில தேவையற்ற க்ளூக்களும் இருக்கும், ஜாக்கிரதை....
விளையாடுபவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுடைய பிரத்தியேக தளத்திலேயே க்ளூக்களை கொடுக்கிறார்கள் இருந்தாலும் நம் தமிழ் பதிவுலக நண்பர்களுக்காக நாங்களும் இங்கு கமெண்ட்களில் க்ளூக்கள் கொடுக்கலாம் என இருக்கிறோம்.

எந்த காரணம் கொண்டும் நேரடி விடைகள் கொடுக்கப்பட மாட்டாது. 

நாங்களும் இனிதான் விடைகளை கண்டுபிடிக்க வேண்டி இருப்பதால் சில சமயங்களில் உங்களை விட பின்னால் இருப்பதறக்கு வாய்ப்புகள் அதிகம், அதனால் க்ளூ கொடுப்பது தாமதமாகலாம்.

உங்களுக்கு விடை தெரிந்தால் நீங்களும் க்ளூகளை கமெண்ட்களில் தெரிவிக்கலாம். (எங்களுக்கும் உதவும் :) )

அனைத்து கமெண்ட்டுகளும் மாடரேட் செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு இங்கு செல்லவும்....

விளையாட்டை தொடங்க இங்கு கிளிக் செய்யவும்.


LETS PLAY TOGETHER....
ENJOY THE GREAT GAME :) with us



Tuesday, November 8, 2011

கற்பூர வாசனை தெரிந்த கழுதை




முன்னொரு காலத்தில் சவகர் என்ற குதிரை வியாபாரி வாழ்ந்துவந்தார். அரசன் முதல் ஆண்டி வரை இவரிடம் தான் குதிரைகள் வாங்கிவந்தனர். ஆண்டி எதற்காக குதிரைகளை வாங்குகிறார் என்று நாம் இப்பொழுது ஆராய வேண்டாம். அது நம் கதைக்குச் சம்பந்தம் இல்லாத ஒன்று. உலகத் தரமான குதிரைகள் இவரிடம் கிடைக்கும் என்பது நமீதா வந்து சொல்லாமலேயே எல்லோருக்கும் தெரிந்தது.

சவகர் எப்போதும் சற்று வித்தியாசமாக எதையாவது யோசிக்கும் குணமுடையவர். குதிரை வியாபாரம் மட்டும் செய்துவந்த சவகருக்கு திடீரென ஒருநாள் கழுதை வியாபாரம் செய்யலாம் என்று தோன்றிற்று. அசரீரியெல்லாம் வந்து சொல்லவில்லை. தானாகவே தோன்றியது. கழுதை வியாபாரம் ஒன்றும் குதிரை வியாபாரத்தைப் போல எளிமையானதல்ல. நாட்டில் பாதி பேருக்கு கழுதை என்றாலே சுத்தமாகப் பிடிக்காது. இருந்தாலும் தன் மனதில் ஒரு யோசனை தோன்றிவிட்டால்  அவரே அவர் பேச்சைக் கேட்கமாட்டார்.அதனால் எப்படியேனும் கழுதை வியாபாரம் செய்தே தீருவதென முடிவெடுத்தார்.

கழுதை வியாபாரத்தை குதிரைகளை வைத்துச் செய்யமுடியாது. அது என்ன தோசை மாவா ? தோசைக்கு என்று மாவரைத்துவிட்டு இட்லி சுடுவதற்கு ? அதனால் கழுதைகளை வாங்கித்தான் கழுதை வியாபாரம் செய்யமுடியும் என்று நான் சொல்லாமலே அவருக்குத் தெரிந்திருந்தது.உடனேயே கழுதை வாங்குவதற்காகப் புறப்பட்டுவிட்டார். ஊர் ஊராகச் கழுதைகள் எங்கு கிடைக்கும், எப்படிப்பட்ட கழுதைகளை நல்ல விலைக்கு விற்கலாம் என்பதைப் பற்றித் தெரிந்துகொண்டார். ஒரு ஊரில் கற்பூர வாசனை தெரிந்த அதிசயக் கழுதை ஒன்றைப் பற்றிய தகவல் கிடைத்தது.உடனடியாக அதை எப்படியாவது வாங்கிவிட வேண்டுமென முடிவெடுத்து  அதிக விலை கொடுத்து அந்தக் கழுதையை வாங்கிவந்தார்.

தன் வீட்டிற்கு வந்ததும் அதற்கு கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றிப்போட்டார். பெரும்பாலும் அவர் வீட்டிற்கு எதை வாங்கிவந்தாலும் இவ்வாறு செய்வது வழக்கம். ஏன் திருஷ்டி பொம்மைக்குக் கூட திருஷ்டி சுற்றிவிட்டுத்தான் வீட்டுக்குள் அனுமதிப்பார்.ஆனால் இந்தமுறை வீட்டிற்கு வந்திருப்பது கற்பூர வாசனை தெரிந்த கழுதையாயிற்றே. மிக்க சந்தோசத்துடனேயே திருஷ்டி சுற்றினார். ஆனால் அவரின் துரதிர்ஷ்டம் கற்பூரத்தைப் பற்றவைத்ததும் அந்தக் கழுதை பிடுங்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தது. என்னதான் கற்பூர வாசனையைப் பற்றித் தெரிந்தாலும் அதை எதற்குப் பயன்படுத்துவார்கள் என்றெல்லாம் அதற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லையே!ஓடிய கழுதையை மிகச் சிரமப்பட்டுத்தான் பிடித்துவந்தார்கள். 

அந்தக் கழுதையை வாங்கியதிலிருந்து சவகருக்கு ஒருவித செருக்கு அவன் மனதில் ஏற்பட்டது. ஊரிலேயே ஏன் உலகத்திலேயே யாரிடமும் இல்லாத அதிசயப் பொருள் தன்னிடம் உள்ளது என்று நினைத்து நினைத்துச் சந்தோசப்பட்டான். அவன் சந்தோசம் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.அந்தக் கழுதைக்காக தன்னிடமிருந்த சொத்துக்களை எல்லாம் விற்று அதற்குத் தேவையானவற்றை வாங்கிக்கொடுத்தான். தினமும் காலையில் இட்லி வாங்கிக்கொடுத்தான். அது இட்லியைச் சுற்றியிருந்த காகிதத்தை மட்டும் தின்றது. மதியம் பார்சல் சாப்பாடு வாங்கிக்கொடுத்தான். அது அதைச் சுற்றியிருந்த காகிதத்தை மட்டும் தின்றது. இரவில் புரோட்டா, பூரி என்று வாங்கிக்கொடுத்தான். அது அதைச் சுற்றியிருந்த காகிதத்தை மட்டும் தின்றது. ஆக மொத்தத்தில் அது காகிதத்தை மட்டுமே தின்றது. கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்பதற்காக சுவையான உணவுப் பொருட்களை எல்லாம் அது கேட்கவேயில்லை.
விடுவானா சவகர் ? உடனே அதை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று “ கற்பூர வாசனை தெரிந்த கழுதை ஒன்று காகித்தத்யே தின்கிறது, அதனை காகிதம் தின்னாதவாறு மருந்தொன்று கொடுங்கள்” என்று கேட்டான். மருத்துவருக்கு ஆச்சர்யம்; தனது இருபத்தைந்து கால மருத்துவச் சேவையில் இப்படியொரு கழுதையைப் பார்த்ததேயில்லையே என்றவாரு அதைப் பார்க்கச் சென்றார். உண்மையில் அது கழுதையைப் போலவே இருந்தது. கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்பதற்காக அதற்குக் கொம்பெல்லாம் முளைத்திருக்கவில்லை.

பேப்பர் தின்னாமல் இருப்பதற்காக ஒரு பேப்பரை எடுத்து சில மருந்துகளின் பெயரை எழுதினார். ஆனால் மருத்துவரின் கையிலிருந்த குறிப்பேட்டினைப் பிடுங்கி ஒரு முழுங்காக முழுங்கிவிட்டது கழுதை. மருத்துவர் இஞ்சி தின்ன குரங்கைப் போல முழித்துக்கொண்டிருந்தார். அதென்ன இஞ்சி தின்ன குரங்கு? குரங்குகளைப் பற்றி கழுதைக் கதையில் சொல்லவேண்டாமென்பதால் வேறொரு கதையில் பின்னர் சொல்கிறேன். முதலில் நாம் இந்தக் கதையை முடிப்போம். டாக்டரின் குறிப்பேட்டை முழுங்கியதும் டாக்டருக்கு கடுங்கோபம் ஏற்பட்டது.சவகருக்கும் கடுங்கோபம் ஏற்பட்டது. ஆனால் சவருக்கு டாக்டர் மேல்தான் கோபம் ஏற்பட்டது. ”பேப்பர் தின்பதை நிறுத்துவதற்காக இவரிடம் கூட்டிவந்தால் இவரே பேப்பரைத் தருகிறாரே ?” என்று நினைத்துக்கொண்டு “ நீயெல்லாம் என்னையா பேப்பர் விக்குற ? “ என்று கேட்கவேண்டும் போல இருந்தது. மன்னிக்கவும், பேப்பர் பேப்பர் என்று எழுதி எனக்கே அப்படிக் கேக்கவேண்டும் போலத்தான் உள்ளது. அவன் மட்டும் எம்மாத்திரம் ?

இவர்கள் இப்படிக் கோபப்பட்டுக்கொண்டிருந்த போது கழுதை மறுபடியும் பிடுங்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தது. ஆனால் இந்த முறை அது யார் கையிலும் சிக்கவில்லை. ஒருவேளை கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்ற பெருமை அதற்கும் வந்துவிட்டதோ என்னவோ ? சவகர் இத்தனை நாட்களாகக் காட்டிய கருணையை சிறிதும் மதிக்காமல் சென்றுவிட்டது இந்த எருமை. கழுதையைக் கழுதை என்று எப்படித் திட்டுவது? அதனால்தான் எருமை என்று திட்டுகிறேன்.

இப்படிப் பிடுங்கிக்கொண்டு ஓடிய கழுதை ஒரு அழகான காட்டில் நுழைந்தது. அதென்ன அழகான காடு, அசிங்கமான காடு ? காடுகளுக்கிடையில் அழகிப்போட்டியா நடக்கிறது ? சரி விடுங்கள், இதிகாச காலத்திலிருந்து இதையே எழுதிப்பழகிவிட்டோம்.

அப்படி அழகான காட்டுக்குள் நுழைந்த நமது நாயகனான கற்பூர வாசனை தெரிந்த கழுதை ( வெறும் கழுதை என்று எழுதினால் எங்கே மறந்துவிடுவோமோ என்பதற்காக ஒவ்வொருமுறையும் கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்றே எழுதித் தொலைக்கவேண்டியுள்ளது ) முதலில் அங்கிருந்த ஒரு ஆட்டிடம் சென்று தான் அதிசயமான விலங்கு என்றும் தனக்குக் கற்பூர வாசனை தெரியும் என்றும் கூறிக்கொண்டது. ஆனால் ஆடோ கழுதையை ஏறெடுத்தும் பார்க்காமல் அங்கிருந்த சில நுனிப்புல்லை மட்டும் ”வரக் வரக் “ என்று கடித்துக்கொண்டு திரும்பிக் கூடப் பார்க்காமல் போய்விட்டது. ஒருவேளை ஆட்டிற்கு காதில் ஏதேனும் கோளாறோ என்னவோ ?

ஆட்டின் இந்தச் செயலால் மனம் நொந்த கழுதை அடுத்து மானிடம் சென்று தனக்குக் கற்பூர வாசனை தெரியும் என்று கூறிக்கொண்டது. மானிற்கும் கற்பூரம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. இங்கேயும் அசிங்கப்பட்டது கழுதை. அடுத்து யானையிடம். அதற்கும் தெரியவில்லை.

இறுதியாகச் சிங்கத்திடம் சென்று தனக்கு கற்பூர வாசனை தெரியும் என்றும் எனவே தான் ஒரு அற்புத விலங்கென்றும் தான் தான் இனிமேல் இந்தக் காட்டிற்கே ராஜா என்றும் கூறியது. சிறிது நேரம் உட்கார்ந்து யோசித்தது சிங்கம். உண்மையில் அதற்கு ராஜா என்பதின் அர்த்தமே தெரியாது. சில நாட்கள் மனிதர்களுக்கு மத்தியில் வாழ்ந்ததால் கழுதைக்கு மட்டும் ராஜா என்பதின் அர்த்தம் தெரிந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் காட்டின் ராஜா சிங்கம் என்பதால்தான் சில மனிதர்கள் தங்களை “நான் சிங்கம்டா” என்று சொல்லிக்கொள்கிறார்கள் என்று அதற்கு ஞாபகத்தில் வந்தது. எனவே தான் காட்டிற்கு ராஜாவாகிவிட்டால் அதே மனிதர்கள் “ நான் கழுதைடா” என்று சொல்லிக்கொள்வார்களல்லவா ? அதற்காகத்தான் இத்தனை போராட்டங்கள்!

சிங்கம் யோசித்து முடித்ததும் தனக்கு இந்தக் காட்டை ஆளும் பாக்கியம் கிடைக்கும் என்றும், ரஜினியே கூட “ பன்னிங்கதான் கூட்டமா வரும் , கழுதை கண்ணமூடிட்டுத்தான் வரும் “ என்று பஞ்ச் வசனம் பேசுவார் என்றும் நினைத்து நினைத்துப் புல்லரித்தது, பேப்பர் அரித்தது. ஆனால் நடந்தததோ வேறு. உண்மையில் சிங்கம் இதுவரையில் யோசிக்கவெல்லாம் இல்லை. அது தூங்கிக்கொண்டிருந்து. அதுமட்டுமல்லாமல் இரண்டு நாட்களாக எந்த இரையும் கிடைக்காமல் கோபத்தில் இருந்தது. கண் விழித்துப்பார்த்தால் எதிரில் கழுதை. அது கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்று அதற்கு எப்படித்தெரியும்? பாவம்! சடாரென ஓங்கி ஒரு அடி அடித்துக் கழுதையைக் கீழே தள்ளியது. கண்களில் பொறிதட்டக் கீழே விழுந்த கழுதைக்கு ஒன்று மட்டும் புரிந்தது. கழுதைக்கு மட்டுமல்ல வேறு எந்த விலங்கிற்கும் கற்பூர வாசனை தெரியாதென்பது!