Friday, March 25, 2011

பேய்க் கதை

முன்குறிப்பு : கொஞ்சநாள் முன்னாடி சரித்திரக் கதை ஒன்னு படிச்சிருப்பீங்க. அதே மாதிரி பேய்க்கதை ஒன்னு இன்னிக்கு!

எச்சரிக்கை : இதய பலகீனம் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் இதைப் படிப்பதைத் தவிர்க்கவும்.

தனது தலைக்கு மேலே அசுர வேகத்தில் சுற்றிக்கொண்டிருந்த அந்த கற்றாடியிலிருந்து வரும் குளிர்காற்று கூட அவனை உஷ்ணமாக்கிக்கொண்டிருந்தது அந்த செய்தி அவன் காதில் விழுந்ததிலிருந்து. ஆம் சற்று முன்னர்தான் அவனது அறைத்தோழன் அந்த கொடூர செய்தியை போட்டுடைத்தான். சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் இந்த அறையில் வசித்துக்கொண்டிருந்த ஒரு கன்னிப்பெண் அந்த ஃபேனில் ஒரு கயிறை மாட்டி ... அவன் சொல்லும்போதே பாதி அழுதுவிட்டான் குமார். " போதுண்டா போதும். மேல சொல்லிடாத , இப்பவே வயித்தக்கலக்குது." என்று பயத்தில் மிரண்டு போனான் குமார்.

குமார் பற்றியும் அவனது அறைத்தோழன் அஸ்வின் பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்வது கதையின் சாரத்தை உங்களுக்குச் சற்று உணர்த்தலாம். குமாரும் அஸ்வினும் சென்னையில் ஒரு தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிகின்றனர். அஸ்வின்தான் முதலில் சென்னைக்கு வந்தவன். இந்த அறையினை முதன்முதலில் வாடகைக்கு எடுத்தவனும் அஸ்வின்தான். பின்னர் தனது அலுவலகத்தில் வேறொரு பணியிடம் காலியாகவே தனது நண்பனான குமாரிடம் தகவல் சொன்னதும் அவன் அஸ்வின் பணிபுரியும் நிறுவனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதும் கூடுதல் தகவல்கள். சரி இனி மேலே நடப்பதைக் காண்போம்.

குமாரின் கண்கள் மேலே சுற்றிகொண்டிருந்த காற்றாடியிலேயே நிலைத்து நின்றிந்தது. அதன் ஒவ்வொரு சுற்றுகளிலும் அவனது ஆசைகள் கனவுகள் கலைக்கப்பட்டுக் கொண்டிருந்தது என்றால் மிகையான சொல்லாகாது. அப்படி ஒரு உயிர்பயம் அவனிடம். நேரம் இரவு எட்டை நெருங்கிகொண்டிருந்தது.  வெளியில் யாரோ நடப்பது போன்ற ஒரு உணர்வு சட்டென மின்னி மறைந்தது. குமாரின் இருதயம் நிமிடத்திற்கு 72 என்ற கணக்கினைப் பொய்யாக்கியே தீருவேன் என்று துடிக்க ஆரம்பித்தது. மேலும் கொலுசொலியும் , மல்லிகைப்போ வாசமும் வருவதாக உணர்ந்தான் குமார். உண்மையில் இது வரை பார்த்த சில திரைப்படங்களின் தாக்கம் அவனுக்கு இந்த உணர்வினைக் கொடுத்துக்கொண்டிருந்தது.

வெளியில் சென்றுவிட்டு வந்த அஸ்வின் " டேய் குமார் , வா சாப்பிடப் போலாம் " என்றான். " போ .. போலாம் " என்றவன் சட்டென எழுந்து வேகமாம வெளியேறினான். சாதரணமாக அவ்வளவு பயத்தில் இருப்பவர்கள் இருந்த இடத்தில் இருந்து எழுவதற்கே சில காலம் ஆகலாம். ஆனால் குமார் எப்படி எழுந்தான் என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றலாம். எல்லாக் கதைகளிலும் அதே போன்று கூறினால் சற்று போர் அடிக்கலாம் என்பதால் குமார் தற்பொழுது எழுந்துவிட்டான். ஆனால் குமாரின் முகத்தில் இருந்த அந்தப் பயமும் நடுக்கமும் அவனிடம் இருந்து விலகவில்லை என்பதை அஸ்வினின் கண்களில் தெரிந்த குமாரின் உருவம் காட்டிக்கொடுத்தது. ஆனால் அஸ்வின் எதையும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை .. எருமை மேல் மழை பெய்தது போல அமைதியாக சாப்பிடச் சென்றவனைத் தடுத்து தான் பயந்து போயிருப்பதைக் கூறிவிட நினைத்தவனை பின்நோக்கி ஏதோ இழுப்பது போன்று உணர்ந்தான். ஆனால் அவனுக்குப் பின்னல் திரும்பிப்பார்க்கும் எண்ணம் சற்றும் இல்லை. சடாரென முன்னோக்கி இழுத்தவன் அவனது சட்டை பின்னால் இருந்த ஆணியில் பட்டுக்கிழிந்ததும் இல்லாமல் வேகமாக கீழேயும் விழுந்தான்.

கீழே விழுந்ததில் ஏற்பட்ட சத்தத்தில் திரும்பிய அஸ்வின் வேகமாக குமாரின் அருகில் வந்து " இங்க ஏன்டா விழுந்த ? இந்த இடத்தில்தான் அந்தப் பொண்ணு..."  என்று ஆரம்பித்தவனுக்கு மேற்கொண்டு வார்த்தைகள் வர மறுத்தன. அவன் மறுபடியும் அந்த விசயத்தைக் கூறவேண்டும் என்று எண்ணவில்லை. ஆனால் குமாருக்குப் புரிந்திருந்தது. பயமும் கலக்கமும் அதிர்ச்சியும் அவனது முகத்தில் ஓடியதை நம்மால் மறுக்க முடியாது. இருந்த போதிலும் குமார் சாப்பாட்டுக் கடை நோக்கி நடக்கத் தொடங்கினான். அவனது நடையில் ஒரு கழுதையின் மன்னிக்க...  ஒரு குரங்கின் மீண்டும் மன்னிக்க .. அவனது நடை ஒரு கூகை நடப்பது போன்று இருந்தது. அப்படியே நடந்து சென்றவன் செத்த பிணம் போல சாப்பாட்டுக் கடையின் பெஞ்சில் அமர்ந்தான். அங்கே இருந்த தொலைக்காட்சியில் மாண்ட மயிலாட ஓடிக்கொண்டிருந்தது என்று நான் சொல்லுவேன் என்று நீங்கள் கருதினால் அந்த என்னத்தை எச்சில் தொட்டு அழித்து விட்டு மேற்கொண்டு படிக்கவும். அங்கிருந்த தொலைக்கட்சிப்பெட்டியில் " திருவிளையாடல் " என்ற பக்திப் பரவசமான படம் ஓடிக்கொண்டிருந்தது. இந்தப் படத்தில் " பாட்டும் நானே பாவமும் நானே " என்ற பாடலில் முதலில் ஒரே ஒரு சிவாஜி பின்னர் பல சிவாஜியாக மாறிய காட்சியில் குமாருக்கு மூளையின் ஏதோ ஒரு முலையில் மின்னல் வெட்டியது. சட்டென அங்கிருந்து எழுந்தவன் தனது அறையை நோக்கி ஓடினான். இதைப் பார்த்துக்கொண்டிருந்த அஸ்வினின் இதழோரத்தில் ஒரு குரூரப் புன்னகை தோன்றி மறைந்தது.

தனது அறைக்கு ஓடிய குமார் நொடிப்பொழுதில் கையில் தனது தொலைபேசியுடன் ஓடிவந்தான். ஓடிவந்தவன் நேராக தொலைக்காட்சிப் பெட்டி அருகில் சென்று தொலைபேசியை வைத்துவிட்டு அதனை பதிவு செய்ய ஆரம்பித்தான். திரும்பி அஸ்வினைப் பார்த்தவன் அதே குரூரப் புன்னகையுடன் " இந்தப் பாட்ட ரெகார்ட் பண்ணினா தெரியும் " என்று கூறிவிட்டு சாப்பிட அமர்ந்தான்.

நேரம் இரவு 10 மணி என்பதை அந்தக் கடிகாரம் அவ்வளவு சத்தகாமத் தெரிவித்திருக்க வேண்டாம். ஏற்கெனவே நடுங்கிக்கொண்டிருந்த குமார் என்ன ஆவான் என்று உங்களின் படபடப்பு புரிகிறது. ஆனால் நீங்கள் நினைப்பது போல குமார் ஒன்றும் நடுங்கிக்கொண்டிருக்க வில்லை. நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருக்கிறான். அப்படியானால் அவன் இவ்வளவு நேரம் பயந்தது எதற்காக , அந்த காற்றாடியில் என்ன இருந்தது என்று அறியும் ஆவல் இருப்பது
நியாயமானதே. நீங்கள் நினைப்பதுபோல் அந்தக் காற்றாடியில் அந்தப் பெண் தூக்குப் போட்டெல்லாம் தொங்கவில்லை. இருபது வருடங்களுக்கு முன்னர் அந்தக் காற்றாடியில் ஒரு பெண் தனது குழந்தைக்குத் தொட்டில் கட்டி தூங்கச் செய்திருக்கிறாள் என்பதே அந்தச் செய்தி.! பின்னர் ஏன் குமார் பயந்து நடுங்கினான் என்று உங்களுக்கு விளக்கக் கடமைப் பட்டுள்ளேன்.

குமாரின் அலுவலகத்தில் ஒரு மிக முக்கியமான வேலை அவனிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வேலையை நினைத்தே அவன் பயந்து கொண்டிருந்தான். பின்னர் ஒருமுறை குமார் கீழே விழுந்ததும் அஸ்வின் " அந்த பொண்ணு " என்று கூறி மேலும் கூறாமல் விட்டதற்குக் காரணம் அஸ்வினுக்குத் திக்கு வாய் என்பதால் மட்டுமே. மேலும் அவன் திருவிளையாடல் பாடலை ரெகார்ட் செய்திடக் காரணம் அவன் நீண்ட நாட்களாக அந்தப் பாடலைக் கேட்கக் காத்திருந்தான்!!

நீதி : இதைப் படித்து பயந்தவர்களுக்கு எந்தவித நிதி உதவியும் அளிக்கப்படாது என்பதைத் தெரிவித்துகொள்கிறேன் :-)






Monday, March 7, 2011

காலில் விழுந்து கதறிய சிரிப்பு போலிஸ்!

 நம்ம போலிசுக்கு எப்பவுமே தான் ஒரு டேமேஜர் அப்படீங்கிற கர்வம் அதிகம்..  இவருக்கு மட்டும் இல்ல! அடுத்தவன் உழைப்பில் குளிர்காயும் இவரைப்போல பலபேரு இப்பிடித்தான்! என்னதான் வேலை செய்யுறவன் முன்னாடி கெத்தா திரிஞ்சாலும் அவரும் இங்க்ரிமென்டுக்கும் பிரமோசனுக்கும் அவரு முதலாளி கால்ல விழுகிறது பல பேருக்கு தெரியாமலே போயிருது! அவரின் இந்த முகமூடிய கிழிக்கும் பொருட்டு சமீபத்தில் நம்ம போலிஸ் அவரின் முதலாளி கால்ல விழுந்து சம்பள உயர்வுக்கு கெஞ்சியதையும் அவரின் முதலாளி அவரு மூஞ்சில காறி துப்பி விரட்டி அடிச்ச உரையாடலை நமது கும்மியின் உளவுப்பிரிவு பதிவு செய்தது! உலக பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக அந்த உரையாடலின் தொகுப்பு உங்களுக்காக தரப்படுகிறது! படித்துவிட்டு நீங்களும் காறி துப்பிரவேண்டாம்.. பிளீஸ் சொன்னா கேளுங்க.. காறி துப்பிராதிங்க!


சிரிப்பு போலிஸ்       : பாஸ் எனக்கு நீங்க கூட்டித்தரனும்.....அதாவது சம்பளத்த......(எதா இருந்தாலும் ஓக்கேதான்.. ஹி..ஹி)

அவரின் முதலாளி   : நீ இங்க ஒரு நாள் கூட வேலையே செய்யல நான் எப்படி உனக்கு சம்பளம் தர முடியும்

சிரிப்பு  போலிஸ்       : என்னது... நான் ஒரு நாள் கூட வேலையே செய்யலையா...? (உண்மை தெரிஞ்சிருச்சா?)

அவரின் முதலாளி  : ஒரு வருஷத்துக்கு எத்தன நாள்...?

சிரிப்பு  போலிஸ்       : ஏன் உங்களுக்கு தெரியாதா? 365 நாளு.... நாலு வருஷத்துக்கு ஒரு வாட்டி 366 நாளு...

அவரின் முதலாளி  : இதெல்லாம் வக்கனையா சொல்லு....ஒரு நாளுக்கு எத்தன மணி நேரம் ?

சிரிப்பு  போலிஸ்       : 24 மணி நேரம் ( சரிதானே?)

அவரின் முதலாளி  : ஒரு நாளுக்கு எவ்வளவு மணி நேரம் வேலை செய்வே....

சிரிப்பு  போலிஸ்       : (நான் ஏன் செய்யணும்?) காலையில 10 மணியில இருந்து சாய்ந்திரம் 6 மணி வரைக்கும்... அதாவது 8 மணி நேரம் வேலை செய்றேன்....

அவரின் முதலாளி  : அதாவது ஒரு நாளைக்கு மூனுல ஒரு பங்கு ( 8/24=1/3) வேலை செய்யுற...

சிரிப்பு  போலிஸ்       : ஆமா... (நம்பிட்டானோ?)

அவரின் முதலாளி  : சரி.... அப்போ ஒரு வருஷத்துக்கு 366 நாளுல மூனுல ஒரு பங்கு எவ்வளவு ...?

சிரிப்பு  போலிஸ்       : (கணக்கு கேட்டே கொல்றானே?) 122 நாளு... ( 1/3 * 366 =122)

அவரின் முதலாளி  : சனி, ஞாயிறுக்கிழமை வேலைக்கு வரியா...?

சிரிப்பு  போலிஸ்       : இல்ல... (எனக்கு என்ன கெரகமா? அதான் தொழிலாளி பசங்க இருக்காங்களே?)

அவரின் முதலாளி   : ஒரு வருஷத்துக்கு எத்தனை  சனி, ஞாயிறு வருது...?

சிரிப்பு  போலிஸ்        : 52 சனி கிழம, 52 ஞாயிறு கிழம... மோத்தம் 104 நாள் வருது.. (அவ்வவ்.. சம்பளம் கேட்டது தப்பா?)

அவரின் முதலாளி   : அப்போ 122 நாளுல.... 104 நாள் கழிச்சிடு...

சிரிப்பு  போலிஸ்       : 18 நாள் வருது.... (சரியாத்தானே சொல்றேன்?)

அவரின் முதலாளி  : ஒரு வருஷத்துக்கு எத்தன நாள் லீவ் தராங்க...

சிரிப்பு  போலிஸ்       : ரெண்டு வாரம்.... 14 நாள் (பாவம் அவரே கொன்புயீஸ் ஆயிட்டாரு போல?)

அவரின் முதலாளி  : சரி... 18 நாளுல.... 14 நாள் கழிச்சிக்கோ... எவ்வளவு வருது...?

சிரிப்பு  போலிஸ்       : 4 நாள்.... (முடியல...ஸ்..ஸ்..)

அவரின் முதலாளி   : சுதந்திர தினம், குடியரசு தினம் வேலை செய்யுரியா....

சிரிப்பு  போலிஸ்       : இல்ல... (வேலை நாள்லே செய்யுறதில்ல.. இதுல லீவு நாள்ல..?)

அவரின் முதலாளி  : 4 நாள... 2 நாள் கழிச்சிக்கோ

சிரிப்பு  போலிஸ்       : 2 நாள் வருது... ( நல்லா சொல்றாருயா டீட்டைலு)

அவரின் முதலாளி  : தீபாவளி, பொங்கல் அன்னைக்கு வேலை செய்யுரியா....

சிரிப்பு  போலிஸ்       : இல்ல.... ( அன்னிக்குதான்யா பல ஓசி சாப்பாடு கெடைக்கும் என் வென்று!)

அவரின் முதலாளி  : இப்போ... அந்த 2 நாளையும் கழிச்சிக்கோ

சிரிப்பு  போலிஸ்       : கழிச்சாச்சு.. கழிச்சாச்சு..... (எத்தன?)
அவரின் முதலாளி   : இப்போ... எத்தன நாளு இருக்கு...

சிரிப்பு  போலிஸ்        : எல்லா நாளும் கழிஞ்சிடுச்சு...
அவரின் முதலாளி    : இப்போ சொல்லு நான் எதுக்கு உனக்கு சம்பளம் தரனும்...

சிரிப்பு  போலிஸ்       : ஆ.....ஆ....

அவரின் முதலாளி   : இதுக்கே ஆன்னா.. எப்பிடி இன்னும் இருக்கு....

சிரிப்பு  போலிஸ்        : இன்னுமா?

அவரின் முதலாளி    : ஆமா... இதுல பாதிநாளு அவன் வர்றான் இவன் வர்றான்னு பல இடத்துக்கு ஓசி சாப்பாட்டுக்கு போயிற.அந்த கணக்குல பார்த்தா கூட ரெண்டுநாள் வேலை பார்க்கணும்! உனக்கு எப்பிடி வசதி? சம்பளம் கூட வேணுமா?

சிரிப்பு  போலிஸ்       : என்னைய மன்னிச்சிருங்க பாஸ்.. இனிமே எப்பிடி வேலை பார்க்கனும்னு வைகை.. டெரர் மாதிரி உள்ள தொழிலாளி பசங்கள்ட்ட இருந்து அவங்க கால்ல விழுந்தாவது கத்துக்கிறேன்! என்னைய வேலைய விட்டு மட்டும் தூக்கிராதிங்கோகோகோ!!!

என்ன மக்களே.. இது ஒரு கதையல்ல.. போலிஸ் மாதிரி உள்ள டேமேஜர்களுக்கு ஒரு எச்சரிக்கை......!






டெரர் கும்மிக்காக
வைகை

Thursday, March 3, 2011

போங்கடா நீங்களும் உங்க லவ்வும்...

முஸ்கி : மகளிரனி தலைவர் எல்லாம் கொஞ்சம் ஓரமா போய்டுங்க. தேவையில்லாம வந்து சப்போர்ட் பண்ணி மகளிரனி கிட்ட நல்ல பேரு எடுக்கலாம் நினைக்காதிங்க. உண்மையிலே சண்டை போடனும் சொன்னா வாங்க. நான் ரெடி. அதே மாதிரி பெண்கள் எல்லாம் வரிஞ்சி கட்டிகிட்டு நிக்காதிங்க. கொஞ்சம் யோசிங்க. நாங்க எல்லாம் அப்படி இல்லை சொல்ற அம்மணிங்க எல்லாருக்கும் அப்படிங்களா அம்மணி, கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்களை மாதிரி எல்லாரும் இருந்துட்டா யாருக்கும் பிரச்சனை இல்லை. கிளம்புங்க

நீங்க எல்லாம் மாடர்ன் பெண்கள்தான் நான் இல்லை என்று சொல்லவில்லை. எல்லார் கிட்டையும் ஜாலியா பழகறிங்க தப்புனு சொல்ல மாட்டேன். ஆனா பழகர பையன் யாருனு பாருங்க. அவன் மனசுல உங்களால ஏதாவது தப்பான என்னம் உருவாகாம பழகுங்க. உடனே நாங்க கள்ளாம் இல்லாம தான் பழகறோம் அதை அவங்க தப்பா புரிஞ்சிகிட்ட நாங்களா பொறுப்பு பொங்காதிங்க. பெண்களுக்கு பொதுவா உள்ளுனர்வு அதிகம் அப்படினு பெருமையா சொல்லிகிறிங்க. ஆன இந்த விஷயத்துல மட்டும் ஏன் கோட்டை விடறிங்க?

இந்த பதிவை படிச்சிட்டு என்னை காறி காறி துப்புவிங்க தெரியும். உங்க கிட்ட நல்ல பேரு வாங்கணும் சொல்லி நானும் கதை, காதல் கவிதைனு எழுதிட்டு போய்டலாம் ஆனா பசங்க பிரச்சனைய யாருதான் பேசரது. சின்ன வயசுல இருந்து இருபாலர் கல்வி நிலையத்துல படிச்சி வளர்ந்த பசங்கள பத்தி பிரச்சனை இல்லை. அவன் பத்தோட பதினொன்னு அப்படினு போய்டுவான் ஆன இந்த புதுசா பெண்கள்கூட பழகர பசங்க படரபாடு இருக்கே..ஸ்ஸ்ஸ்ப்ப்பா. நீங்க தொட்டு தொட்டு பேசுவிங்க, கிள்ளி விள்ளாடுவிங்க இது எல்லாம் ஒரு தப்பா கேக்க கூடாது. உங்க கணவர் முன்னடி, அப்பா முன்னாடி இப்படி விள்ளாடுவிங்களா? ஆமாம் அப்படினு பச்ச பொய் பேச கூடாது.

இது பத்தாதுனு காலையில எழுந்ததும் Hi இல்லைனா GM இப்படி ஒரு மெஸேஜ். இதுக்கு உங்க அதிக பட்ச செலவு 1 ரூபாய் இல்லைனா இலவச எஸ்.எம்.எஸ். இந்த மான ரோஷம் கெட்ட பையன் உடனே கால் பண்ணிடுவான் என்ன காலையில் எழுந்ததும் ஊருக்கு எல்லாம் எஸ்.எம்.எஸ் போல? அவங்க உடனே சீ சீ இல்லைபா உனக்கு மட்டும்தான்னு சொல்லுவாங்க. உடனே இவரு மனசுல பூ பூக்கும் (த்து..). ஆனா அங்க வெயிட்டிங்கல வேற ஒரு வெண்ணை இருப்பான். அடுத்து ஆபிஸ் இல்லை காலேஜ்ல டிபன் பாக்ஸ் எடுத்து வந்து நீட்டுவாங்க. நம்ம மாணம் கெட்ட பையன் கை வச்சி எடுக்கரதுக்குள்ள வேற ஒரு மானம் கெட்ட ஜென்மம்2 வந்து கையவிடும். மானம் கெட்ட ஜென்மம்2 போனதும் இவங்க மானம் கெட்ட ஜென்மம்1 கிட்ட சொல்லுவாங்க. அவன் ஏன் எடுக்கரான் எனக்கு பிடிக்கவே இல்லை. இது கேக்கும் அப்போ நான் எடுத்தா? நீ வேவவற அப்படினு அக்கா குத்து மதிப்பா சிரிச்சி வைப்பாங்க. இந்த லூசு கேணை பையன் இதை எல்லாம் பார்த்து லவ்வுனு நம்பி மச்சன் அவன் என்னை லவ் பண்றா நினைக்கிறேண்டாஅப்படினு கூட இருக்கவன் எல்லார் உயிரையும் எடுக்கும்.

இல்லை நாயே அவ ஏதார்த்தமா பழகரா சொன்ன கேக்காது. ஒரு நாளைக்கு போய் லவ்வ சொல்லி சாரி நான் உன்னை அப்படி நினைச்சி பழகவில்லைஅப்படினு அவங்ககிட்ட செருப்படி வாங்கிட்டு வந்து மச்சான் என்னை ஏமாத்திடாடாஅப்படினு பொலம்பும். சரி. தப்பு எல்லாம் உங்க பசங்க மேல வச்சிகிட்டு ஏன் எங்களை திட்டறிங்க கேக்காறிங்களா? இருங்க வந்துடேன். லவ் இல்லை சொல்லிட்டு அதுக்கு அப்புறம் நீங்க பண்ற அலும்பல் தான் தாங்க முடியவில்லை. அவனை பார்த்தாலே எதோ தெரு பொருக்கிய பாக்கர மாதிரி மூஞ்சிய திருப்பிகிட்டு போறது. ஏற்கனவே அவன் ஓவரா குற்ற உணர்ச்சியில இருக்கான் வச்சிகலாம் அப்போ நீங்க இப்படி நடந்துகிட்ட மேலும் அவன் மனசை பாதிக்காதா? போன பேரகிரப்ல பொங்கி வழிஞ்ச நட்ப ஒரே நாள்ல காக்க தூக்கி போச்சா? தெரிஞ்சோ தெரியாமலோ அவன் மனசுல அந்த என்னம் வர நீங்களும் காரணமா இருந்து இருக்கிங்க. அப்புறம் அவனை மட்டும் ஏன் முறைக்கிறைங்க? அவங்க இப்படி நினைச்சி பழகறாங் எங்களுக்கு எப்படி தெரியும் கேக்காதிங்க. ஒருத்தன் உங்களை பார்த்து ஜொள்ளுவிட்டா அவன் மூஞ்சிய பார்த்தே கண்டுபிடிச்சி மத்த பெண்கள்கூட உக்காந்து நல்ல கமெண்ட் அடிக்க மட்டும் தெரியுது? நீங்க சாதாரணமா பேசி அதுக்கு அப்புறமும் அவன் என் லவ் புணிதமானது அப்படினு டைலாக் பேசினா அப்போ தூக்கி போடுங்க.

இப்போ ஓவர் டூ மானம் கெட்ட ஜென்மம். அதாங்க நம்ம ஹீஹீஹிரோ. திரும்பி வந்து சாதரணமா பேசரா சொல்லி மச்சி அவளாள எங்கிட்ட பேசாம இருக்க முடியாலடா. கண்டிப்பா இது லவ்தான்அப்படினு ஆரம்பிச்சி சாவடிக்காதிங்க. இதை ஒரு அனுபவமா வச்சிகிட்டு யதார்த்தமா பழக கத்துகோங்க. இல்லைனா காலம்பூர கஷ்டம் தான். ஆண் பெண் நட்பு ஆரோக்கியமா இருக்கவரை அது மாதிரி நல்ல நட்பு இல்லை. அதுவே சண்டை வந்து இரண்டு பேரும் முறுக்கிட்டு போய்ட்ட அந்த வலியும் அதிகம். ஏன்ன இரண்டு பையன் சண்டை போட்ட அவங்க சேர ஒரு பீர் பாட்டில் இல்லைனா தம் போதும் அதே பொண்ணு கிட்ட சண்டை வந்துட்டா அப்புறம் உன் சோக கதைய கேக்க நீ தான் உன் செலவுல எல்லாருக்கும் இலவசமா சரக்கு வாங்கி தரனும்.

டிஸ்கி : இப்படி எல்லாம் பதிவு எழுதிட்டு ப்ளாக்ல போட்டோ போட முடியுமா? எவளாவது நமக்கு தெரிஞ்ச பொண்ணு பார்த்துட்டு காறி துப்பிட்டா. அட அட்டு பிகரா இருந்தாலும் பிகர் பிகர் தான மச்சி அப்படினு பன்னிகுட்டி ராம்ஸாமி மாதிரி நான் பேச மாட்டேன். ரமேஷ் மாதிரி பிச்சைகாரியா இருந்தாலும் தைரியமா லவ் யு சொல்லுவேன்... :))