Friday, February 18, 2011

சரித்திரக் கதை

முன்குறிப்பு : சரித்திர நாவல்கள் , சரித்திரக்கதைகள் எல்லாம் படிச்சிருப்பீங்க. அந்த வகைல அதாவது அந்த எழுத்து நடைல இன்னிக்கு ஒரு சரித்திரக்கதை படிங்க. இது முழுக்க முழுக்க கற்பனை.!

கி.பி இரண்டாம் நூற்றாண்டின் மிக முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தப் போகும் செய்தி அந்த ஒற்றனிடம் தெரிவிக்கப்பட்டது. அந்தச் செய்தியை விடிவதற்கு முன்னர் மன்னரிடம் சேர்த்தாக வேண்டிய  கட்டாயமும் அவனை ஆட்கொண்டது. ஆம் மன்னர் மரணப்படுக்கையில் இருக்கிறார். இந்தச் செய்தி அவரை நிச்சயம் உயிர் பிழைக்க வைக்கும் என்பது மருத்துவர்களின் கணிப்பு.

மன்னரின் அரண்மனை நோக்கிப் பயணமானான் ஒற்றன். இரண்டாம் ஜாமத்தின் பாதியில் தொடங்கியது அவனது பயணம். உண்மையில் இதற்கு முன்னர் அவன் இப்படி ஒரு பயணம் மேற்கொண்டதில்லை. வௌவால்களின் சத்தம் விண்ணைக் கிழித்தது என்றால் அது மிகையல்ல. ஒரு வித அச்சத்துடனே ஒற்றன் தனது குதிரையைத் தேடி அது கட்டப்பட்டிருந்த லாயத்திற்குச் சென்றான்.

அன்று அமாவாசை இருள் என்பதுடன் மேகங்களும் தன் பங்கிற்கு நட்சத்திர  வெளிச்சத்தையும் உறிஞ்சிகொண்டன. இருந்தபோதிலும் குதிரை லாயத்தில்  ஏற்கெனவே இருந்த அனுபவம் அவனை சரியாக குதிரையை கட்டவிழ்த்து குதிரையின் மீது ஏறி உட்கார வைத்தது. குதிரையின் மீது உட்கார்ந்த ஒற்றன் சற்றே அதிர்ந்தான். குதிரையின் தாம்புக்கயிறு சரியாகக் கட்டப்படாமல் இருந்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் குதிரை ஒற்றனின் கட்டுப்பாடில்லாமல் ஓடத்துவங்கியது.

உண்மையில் அவன் இதனை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆம் அப்படி ஒரு அசுரவேகம். இதுவரை அவன் இப்படியொரு வேகத்தைக் கண்டதில்லை. இந்த  அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அந்தக் குதிரை அவனை ஒரு பாழடைந்த  மண்டபத்தின் முன் செல்கையில் கீழே தள்ளிவிட்டு ஓடத்துவங்கியது. இப்பொழுதுதான் அதனைக் கண்டான். உண்மையில் அவன் வந்தது குதிரை அல்ல, கழுதை. யாரோ அவனது குதிரையைத் திருடிச் சென்றிருந்தனர். தற்போதைய அரசியல் வாதியாக இருந்திருந்தால் இது எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதி என்று அறிக்கை விட்டிருப்பான்.

கீழே விழுந்து எழுந்தவனுக்கு அடுத்த ஆச்சர்யம் காத்திருந்தது. ஆம் அவன் விழுந்த இடம் சற்றே விசித்திரமாகத் தோற்றமளித்தது. அது ஒரு பாழடைந்த   அரண்மனை போலத் தோற்றம் அளித்தது.அநேக இடங்கள் சிதிலமடைந்திருந்தன. அதன் முன்மண்டபம் பாதி உடைக்கப்பட்டிருந்தது. மேலும் மேற்கூரைகளில் பல இடங்களில் அம்புகள் தைக்கப்பட்டிருந்தது  இதற்கு முன்னர் நடந்த போரினை நினைவுபடுத்தின.

அந்தப் போரினைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தவனின் கவனத்தை பின்னாலிருந்து வந்த கரடியின் உறுமல் சத்தம் சப்த நாடிகளையும் ஒரு நிமிடம் ஆட்டியது. இதயம் ஒரு நிமிடம் துடிப்பதை நிறுத்திவிட்டு கரடி கடித்தால் என்ன ஆகும் என்ற கற்பனையை மூளைக்கு மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருந்தது. அந்த இருளில் அவனால் எதுவும் செய்துவிட முடியாது என்று அவனது உள் மனம் கலங்கிப்போயிருந்தது . அதே சமயம் அவன் எதிர்பார்த்த அந்த ஆபத்து அவன் முன்னாள் வந்தது. ஆம் அந்தக் கரடி இருளிலும் இவனை நோக்கி வந்து கொண்டிருந்தது. 

இனியும் தாமத்திதால் உயிர் பிழைக்க முடியாது என்பதை உணர்தவன் காட்டுக்குள் ஓடத்துவங்கினான். இதுவரை அப்படி ஒரு ஓட்டத்தை அவன் ஓடியதில்லை. மாரத்தான் ஓட்டம் அவனிடம் இருந்துதான் துவங்கியதோ என்ற சந்தேகம் நம்மை ஆட்கொள்ளும் அளவிற்கு ஓடிக்கொண்டிருந்தான். பின்னங்கால் பிடரியில் அடிப்பது என்று கேள்விப்பட்டவன், இப்பொழுதான் அதனை அறிந்தவாறு ஓடிக்கொண்டிருந்தான். நிச்சயம் அவனது ஓட்டம் கின்னஸ் புத்தகத்தில் எழுதவேண்டியதாக இருந்தது. அவனைத் துரத்திக்கொண்டு வந்த கரடி பாதியிலேயே மயங்கி விழுந்ததையும் அறியாமல் ஓடிக்கொண்டிருந்தான். 

அதிவேகத்தில் ஓடிகொண்டிருந்தவனை அந்த இடம் மேலும் திகிலூட்டியது. ஆம் அமாவாசை இருட்டில் அப்படி ஒரு வெளிச்சம். அந்த வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என்று பார்க்கும் துணிச்சல் அவனுக்குள் இல்லை. அதனால் இதுவும் ஏதோ பிரச்சினை என்பதாய்க் கற்பனை செய்து ஓட்டத்தின் வேகத்தை மேலும் சற்றுக்கூட்டினான். இந்த வேலை செய்வதற்கு கோழிமுட்டைக்கு மொட்டை அடித்துப் பிழைத்துக்கொள்ளலாம் என்று தோன்றியது. இருந்த போதிலும் மன்னரின் வாழ்க்கை அவன் கையில் இருந்த கடிதத்தில் இருக்கின்றது என்பதில் சற்றே நிம்மதியானான்.

இப்படி ஓடிக்கொண்டிருந்தவனுக்கு தான் எந்த திசையில் ஓடிக்கொண்டிருக்கிறோம் அரண்மனை எங்கு உள்ளது என்ற குழப்பத்தில் தலை சுற்றுவதுபோல உணர்ந்தான். ஆனால் தான் கொண்ட காரியத்தில் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்பதில் மட்டும் குறியாக இருந்தவன் எப்படியேனும் அந்தக் கடித்ததை மன்னரிடம் சேர்த்துவிட ஆசைப்பட்டான். அவனது ஆசை பொய்போகவில்லை. ஆம் அவனுக்கு அரண்மனை சங்குச் சத்தம் காதைக்கிழித்தது. ஒருவேளை அரசர்தான் மண்டையைப் போட்டுவிட்டரோ என்று ஒருபுறம் நினைவு ஓடாமல் இல்லை.

இருந்தபோதிலும் மனதை திடப்படுத்திக்கொண்டவன் அரண்மனையை அடைந்தான். தான் வந்த செய்தியை அமைச்சரிடம் தெரியப்படுத்தியவன் அமைச்சரின் பார்வையில் இருந்த சோகம் அவனுக்குள் மன்னர் இறந்துவிட்டார் என்ற அச்சத்தை மேலும் அதிகரித்தது. இருந்தபோதிலும் மன்னரின் உடல்நலம் பற்றி வினவினான். அமைச்சர் சோகம் தோய்ந்த குரலில் சொன்னார் " இன்னும் உயிர் இருக்கு ". இதைகேட்ட ஒற்றனின் கால்கள் யாருடைய அனுமதிக்கும் காத்திராமல் நேரே மன்னர் இருந்த அறையை நோக்கிச் சென்றன.

மன்னரைச் சுற்றி இருந்த கூட்டத்தை விலக்கிவிட்டு அவரின் கட்டிலருகில் மண்டியிட்டு அமர்ந்தவன் தான் கொண்டுவந்த உறையைப் பிரிக்க ஆரம்பித்தான். பட்டால் செய்திருந்த அந்த உறை அவனை ஆச்சர்யப்படுத்தியது. இன்னும் சொல்லப்போனால் அந்தப் பட்டுத்துணியை ஆட்டையைப் போட்டு விடவேண்டுமென்ற எண்ணம் அவன் மனதில் ஓடாமல் இல்லை. பட்டுத்துணியை பிரித்தவன் உள்ளிருந்த எழுத்துக்களை ஒவ்வொன்றாக எழுத்துக்கூட்டி வாசிக்க ஆரம்பித்தான்.அதைக் கேட்ட அரசர் முகத்தில் அப்படியொரு சந்தோசம் , தனக்கு எண்பது வயது ஆகிவிட்டது என்பதையும் மறந்து கட்டிலில் இருந்து ஒரே தாவாகத் தாவி பல்லக்கில் அமர்ந்து நேரகாக கடைக்குப் போகுமாறு ஆணையிட்டார். அதில் எழுதப்பட்டிருந்தது இதுதான் " PARLE -G இப்போ 3 ரூபாய்தான் /-"


நீதி : இப்போ PARLE -G விளம்பரம் வரதில்லை..


பின்குறிப்பு : இதுல வர்ற அந்த முட்டைக்கு மொட்டை அடிக்கிறது மட்டும் என்னோட கற்பனை இல்லை. அது நேத்திக்கு என்னோட மூஞ்சிப்புத்தாக மொக்கைல பாலயோகா அண்ணன் சொன்னது.அத இங்க போய் பார்த்துகோங்க. 

65 comments:

Arun Prasath said...

ai vadai

மாணவன் said...

vadai...

Arun Prasath said...

அட PARLE -G எப்பவுமே 3 ரூபா தான

மாணவன் said...

//
Arun Prasath said...
ai vadai//

என்னா மச்சி இன்னுமா படிக்குற?? இல்ல படிச்சுட்டு அப்படியே ஓடிபோயிட்டியா?? ஹிஹி

மாணவன் said...

// Arun Prasath said...
அட PARLE -G எப்பவுமே 3 ரூபா தான//

முதல்ல PARLE -G ன்னா என்னான்னு சொல்லுங்கபா?? ஹிஹி

Arun Prasath said...

முதல்ல PARLE -G ன்னா என்னான்னு சொல்லுங்கபா?? ஹிஹி//

காசில்லாம இருக்கும் bachelors எல்லாருக்கும் அவர் தான் காலை உணவு, மதிய உணவு

Arun Prasath said...

என்னா மச்சி இன்னுமா படிக்குற?? இல்ல படிச்சுட்டு அப்படியே ஓடிபோயிட்டியா?? ஹிஹி//

அட இல்ல மச்சி.... செவத்துல முட்டிக்கிட்டு இருந்தேன்

மாணவன் said...

// Arun Prasath said...
முதல்ல PARLE -G ன்னா என்னான்னு சொல்லுங்கபா?? ஹிஹி//

காசில்லாம இருக்கும் bachelors எல்லாருக்கும் அவர் தான் காலை உணவு, மதிய உணவு//

அப்படியா மச்சி அப்ப செல்வா நல்ல ஒரு வெளம்பரந்தான்(மொக்கை) போட்டுருக்காப்புல... ஹிஹி

சௌந்தர் said...

அமைச்சர் அமைச்சர் சொல்றீங்களே யாரு நம்ம மங்குனி அமைச்சரா...???

மாணவன் said...

// Arun Prasath said...
என்னா மச்சி இன்னுமா படிக்குற?? இல்ல படிச்சுட்டு அப்படியே ஓடிபோயிட்டியா?? ஹிஹி//

அட இல்ல மச்சி.... செவத்துல முட்டிக்கிட்டு இருந்தேன்//

ஹிஹி

மாணவன் said...

// சௌந்தர் said...
அமைச்சர் அமைச்சர் சொல்றீங்களே யாரு நம்ம மங்குனி அமைச்சரா...???//

வா மச்சி :)

மாணவன் said...

எங்கபா செல்வாவ காணும் பயந்துகிட்டு ஓடிபோயிட்டாரா?? ஹிஹி

middleclassmadhavi said...

//கி.பி இரண்டாம் நூற்றாண்டின் மிக முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தப் போகும் செய்தி அந்த ஒற்றனிடம் தெரிவிக்கப்பட்டது.// :))

dheva said...

செல்வா.. டேய்........முடியலை....!

சிரியஸா படிச்சுட்டு இருந்தப்ப...........மாராத்தான் ரேஸ் எல்லாம் வருதே ராஜா காலத்துலன்னு யோசிச்சேன்...

போ...போ.......போய் முட்டைக்கு மொட்டை அடி......! ஹா ஹா ஹா!

சக்தி கல்வி மையம் said...

நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....

Unknown said...

கல்கிக்கு அடுத்து நீங்க தான் தல

மாணவன் said...

//வௌவால்களின் சத்தம் விண்ணைக்கிழித்தது என்றால் அது மிகையல்ல. ஒரு வித அச்சத்துடனே ஒற்றன் தனது குதிரையைத் தேடி அது கட்டப்பட்டிருந்த லாயத்திற்குச் சென்றான்.
அன்று அமாவாசை இருள் என்பதுடன் மேகங்களும் தன் பங்கிற்கு நட்சத்திர வெளிச்சத்தையும் உறிஞ்சிகொண்டன. //

ஆஹா.. என்ன ஒரு இலக்கியத்தனமான வரிகள்... சூப்பர் :)

Arun Prasath said...

ஆஹா.. என்ன ஒரு இலக்கியத்தனமான வரிகள்... சூப்பர் :)/

மொதல உன்ன வெட்டனும்

சௌந்தர் said...

டேய் காலையிலே ஒரு கொலை செய்ய வைச்சுராதே

செல்வா said...

இங்க நெட் கொஞ்சம் மெதுவா இருக்கு .. நீங்க விளையாடுங்க நான் வந்திடறேன் .. ( வந்து அடிச்சிட்ட என்ன பண்ணுறது ? ) ஹி ஹி

எஸ்.கே said...

அந்த சரித்திர வர்ணனைகள் சூப்பர்!

எஸ்.கே said...

கடையில் பார்லேஜி?

Madhavan Srinivasagopalan said...

எலேய்.. மொக்கை.. மொக்கை..
மொக்கையைத் தவிர உனக்கு வேற எதுவும் தெரியாதா ?

இம்சைஅரசன் பாபு.. said...

// இன்னும் சொல்லப்போனால் அந்தப் பட்டுத்துணியை ஆட்டையைப் போட்டு விடவேண்டுமென்ற எண்ணம் அவன் மனதில் ஓடாமல் இல்லை.//

நல்ல வேளை மன்னன கால அருகில் இருந்து அவன் கோமணத்தை உருவ வேண்டும்னு சொல்லாம விட்டேயே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்வ தூ

MANO நாஞ்சில் மனோ said...

//உண்மையில் அவன் வந்தது குதிரை அல்ல, கழுதை.//

ஹா ஹா ஹா ஹா ஹா இரு இரு மேலே படிச்சுட்டு வர்றேன்...

MANO நாஞ்சில் மனோ said...

//எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதி என்று அறிக்கை விட்டிருப்பான்.//



கொய்யால பிச்சிபுடுவேன் பிச்சி....

Unknown said...

wow..beautiful.

wonerfull

meaning ful

use full...

sema sema

last lines very nice SELVA ANNA..

Unknown said...

SELVA SECRET OF ENERGY

parle-G

MANO நாஞ்சில் மனோ said...

//இந்த வேலை செய்வதற்கு கோழிமுட்டைக்கு மொட்டை அடித்துப் பிழைத்துக்கொள்ளலாம் //

ஹா ஹா ஹா ஹா அட கொன்னியா சரியாதான் யோசிச்சி இருக்கான்யா....

Unknown said...

jaisankar jaganathan said...
கல்கிக்கு அடுத்து நீங்க தான் தல

//



இது கல்கிக்கு தெரியுமா ????

அவர் கல்லறைகூட

அழும் ...



நீங்க கலக்குறீங்க அண்ணா

MANO நாஞ்சில் மனோ said...

//ஆம் அவனுக்கு அரண்மனை சங்குச் சத்தம் காதைக்கிழித்தது. ஒருவேளை அரசர்தான் மண்டையைப் போட்டுவிட்டரோ என்று ஒருபுறம் நினைவு ஓடாமல் இல்லை//

ஹா ஹா ஹா ஹா சங்கு ஊதுரதிலேயே குறியா இருக்கானுகய்யா....

Unknown said...

இதைவிட இலக்கியம் எல்லாம் அழிந்து போகட்டும்
விளம்பர உலகம்
இலக்கியம் ஆகட்டும்

வாழ்க வாழ்க மொக்கை அரசா

Unknown said...

35 vadai enakkey

MANO நாஞ்சில் மனோ said...

//கடைக்குப் போகுமாறு ஆணையிட்டார். அதில் எழுதப்பட்டிருந்தது இதுதான் " PARLE -G இப்போ 3 ரூபாய்தான் /-"//


நாசமா போச்சு போங்க வெளங்கிரும்...
@#$%^$@!##........

Unknown said...

no no PARLE-G ENAKKEY..

MANO நாஞ்சில் மனோ said...

இந்த பதிவை சாண்டில்யன் பார்த்தாருன்னா பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடியிருப்பார் ஹா ஹா ஹா ஹா...சூப்பர் மக்கா......புதிய முயற்ச்சிக்கு அண்ணனின் வாழ்த்துக்கள்...

MANO நாஞ்சில் மனோ said...

//// இன்னும் சொல்லப்போனால் அந்தப் பட்டுத்துணியை ஆட்டையைப் போட்டு விடவேண்டுமென்ற எண்ணம் அவன் மனதில் ஓடாமல் இல்லை.//

நல்ல வேளை மன்னன கால அருகில் இருந்து அவன் கோமணத்தை உருவ வேண்டும்னு சொல்லாம விட்டேயே//

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.....

Unknown said...

//கடைக்குப் போகுமாறு ஆணையிட்டார். அதில் எழுதப்பட்டிருந்தது இதுதான் " PARLE -G இப்போ 3 ரூபாய்தான் /-"//


சரி விடுங்க... டைகர் பிஸ்கோத்து வாங்கிக்கிலாம்.

Unknown said...

உண்மையிலேயே இது ரத்த பூமி தானுங்கோ....

வைகை said...

பதிவுலகின் சாண்டில்யன் செல்வா வாழ்க!

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்வ தூ/////////



தூ வர்ர்ரர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது சரித்திரக் கதையா? சரித்திரம்னா இஸ்கோல்ல வருமே அதுவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////முன்குறிப்பு : சரித்திர நாவல்கள் , சரித்திரக்கதைகள் எல்லாம் படிச்சிருப்பீங்க. அந்த வகைல அதாவது அந்த எழுத்து நடைல இன்னிக்கு ஒரு சரித்திரக்கதை படிங்க. இது முழுக்க முழுக்க கற்பனை.!///////

என்னது கற்பனையா...... சொல்லவே இல்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கி.பி இரண்டாம் நூற்றாண்டின் மிக முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தப் போகும் செய்தி அந்த ஒற்றனிடம் தெரிவிக்கப்பட்டது. ////

ஒற்றன்னா நம்ம அர்ஜுன் நடிச்ச படம்தானே? அது 2 வருசத்துக்கு முன்னாடிதானே வந்துச்சு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இரண்டாம் ஜாமத்தின் பாதியில் தொடங்கியது அவனது பயணம். ///////

ஆமா அதுவும் கரெக்ட்டுதான் அப்போதான் இடையில ஒரு குத்துப் பாட்டு வெக்கலாம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வௌவால்களின் சத்தம் விண்ணைக் கிழித்தது என்றால் அது மிகையல்ல./////

வௌவ்வாலு இப்பிடியெல்லாம் கத்துமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////குதிரையின் மீது உட்கார்ந்த ஒற்றன் சற்றே அதிர்ந்தான். குதிரையின் தாம்புக்கயிறு சரியாகக் கட்டப்படாமல் இருந்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் குதிரை ஒற்றனின் கட்டுப்பாடில்லாமல் ஓடத்துவங்கியது./////

அது எப்பிடியும் மெரீனா பீச்ல போயி நிக்கும்ல?

karthikkumar said...

மச்சி நீ ரெண்டு வரில எழுதுற மொக்கையவே தாங்க முடியல .....இப்போ இவ்ளோ பெருசா வேற எழுத ஆரம்பிச்சிட்ட ஹி ஹி ......:))

karthikkumar said...

dheva said...
சிரியஸா படிச்சுட்டு இருந்தப்ப...........மாராத்தான் ரேஸ் எல்லாம் வருதே ராஜா காலத்துலன்னு யோசிச்சேன்...

போ...போ.......போய் முட்டைக்கு மொட்டை அடி......! ஹா ஹா ஹா/////

தேவா அண்ணன் சொன்னதையே நானும் சொல்றேன் ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ஆம் அந்தக் கரடி இருளிலும் இவனை நோக்கி வந்து கொண்டிருந்தது.
இனியும் தாமத்திதால் உயிர் பிழைக்க முடியாது என்பதை உணர்தவன் காட்டுக்குள் ஓடத்துவங்கினான். ////////

அது நம்ம கரடிதானே? அப்போ ஓட வேண்டியதுதான்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////நிச்சயம் அவனது ஓட்டம் கின்னஸ் புத்தகத்தில் எழுதவேண்டியதாக இருந்தது.///////

அடேங்கப்பா....... அப்பவே கின்னஸ் புக்க கண்டுபுடிச்சிட்டாங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////அந்தக் குதிரை அவனை ஒரு பாழடைந்த மண்டபத்தின் முன் செல்கையில் கீழே தள்ளிவிட்டு ஓடத்துவங்கியது. இப்பொழுதுதான் அதனைக் கண்டான். உண்மையில் அவன் வந்தது குதிரை அல்ல, கழுதை. யாரோ அவனது குதிரையைத் திருடிச் சென்றிருந்தனர். ///////

கழுத அப்பிடி ஒரு ஸ்பீட்ல ஓடுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பின்னங்கால் பிடரியில் அடிப்பது என்று கேள்விப்பட்டவன், இப்பொழுதான் அதனை அறிந்தவாறு ஓடிக்கொண்டிருந்தான்.///////

என்னது பின்னங்காலு பிடறில அடிக்குதா? அப்போ அவனுக்கு முன்னங்காலும் இருக்கா?....... முன்னங்காலு, பின்னங்காலு.... கரெக்ட் கண்டுபுடிச்சிட்டேன், இதானே அந்தக் கழுத?

AN.SHARAPUDEEN said...

கற்பனைல கழுதைகூட குதிரையைவிட வேகமாய் ஓடும்னு இன்னைக்கு உருதியாயிடுச்சு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அவனைத் துரத்திக்கொண்டு வந்த கரடி பாதியிலேயே மயங்கி விழுந்ததையும் அறியாமல் ஓடிக்கொண்டிருந்தான். ////////

கரடி மயங்கிருச்சா? எப்பிடி? கழுத கடிச்சி கிடிச்சி வெச்சிடுச்சா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// இந்த வேலை செய்வதற்கு கோழிமுட்டைக்கு மொட்டை அடித்துப் பிழைத்துக்கொள்ளலாம் என்று தோன்றியது.///

என்னது கோழிமுட்டைக்கு மொட்டையா? இதுகெல்லாம் யாரு காசு கொடுக்கறது? ப்ளீஸ்..சொன்னீங்கன்னா நானும் ஒரு கடை போட்ருவேன்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அதில் எழுதப்பட்டிருந்தது இதுதான் " PARLE -G இப்போ 3 ரூபாய்தான் /-"/////

PARLE-Gன்னா என்ன? 2G, 3G மாதிரி ஒரு G-யா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////தனக்கு எண்பது வயது ஆகிவிட்டது என்பதையும் மறந்து கட்டிலில் இருந்து ஒரே தாவாகத் தாவி பல்லக்கில் அமர்ந்து நேரகாக கடைக்குப் போகுமாறு ஆணையிட்டார். அதில் எழுதப்பட்டிருந்தது இதுதான் " PARLE -G இப்போ 3 ரூபாய்தான் /-"////////

ஏன் PARLE-G ல ஏதாவது அந்த மாதிரி விஷேசம் இருக்கா? இல்லாம இந்த மன்னருங்கள்லாம் இப்படி அலையமாட்டானுகளே? எதுவுக்கும் நம்மளும் ரெண்டு பாக்கெட்டு PARLE-G ய வாங்கி வெப்போம்....

பெசொவி said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////அவனைத் துரத்திக்கொண்டு வந்த கரடி பாதியிலேயே மயங்கி விழுந்ததையும் அறியாமல் ஓடிக்கொண்டிருந்தான். ////////

கரடி மயங்கிருச்சா? எப்பிடி? கழுத கடிச்சி கிடிச்சி வெச்சிடுச்சா?
//

ஒரு வேளை செல்வாவோட ப்ளாகை படிசிருக்குமோ?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முடியல...

வலிக்குது..

அழுதுடுவேன்...

இந்த ப்பக்கம் வந்ததே தப்புபா...
ஏய்.. யார்ய அங்க ...
என்ன காப்பாத்துங்க.............

ஆனந்தமயம் said...

கலியுக கல்கி வாழ்க!
கோமாளிகளின் கோமாளி வாழ்க!
பதிவுலக பரந்தாமனே வாழ்க!
இலக்கியங்களின் இலக்கியமே வாழ்க!
- இந்த பதிவுக்காக நோபல் பரிசு பெற வாழ்த்துகள்.
(நீங்க சொன்ன அனைத்தையும் போட்டுட்டேன். பேசுனா மாதிரி அமௌன்ட்டை செட்டில் பண்ணிடுங்க)

- வழக்கம் போல் உங்களின் இந்த பதிவும் கலக்கல்.

vinu said...

machi pale-g vilambaram new stylil varuthu just now i watched at sonypix channel

இராஜராஜேஸ்வரி said...

உண்மையில் அவன் வந்தது குதிரை அல்ல, கழுதை. யாரோ அவனது குதிரையைத் திருடி//
super.

Rajan said...

உங்கள் சரித்திர கதையில் பிழை ஒன்று கண்டேன். இரண்டாம் நூற்றாண்டில் ஏதய்யா மின்னஞ்சல்?

......முடியலை....!