வயதானவர்: சொல்ல முடியாது.
இளைஞன்: ஏன் சார்? டைம் சொல்றதுனால உங்களுக்கு என்ன நஷ்டமாகப் போகுது?
வயதானவர்: ஆமா, உனக்கு டைம் சொன்னா எனக்கு நஷ்டம்தான் ஆகும்!
இளைஞன்: அது எப்படி நஷ்டமாகும் சொல்லுங்க?
வயதானவர் : இதப்பாரு, நான் உனக்கு டைம் சொன்னா நீ எனக்கு நன்றி சொல்லுவ. ஒருவேளை நாளைக்கும் நீ என் கிட்ட டைம் கேட்கலாம்!
இளைஞன்: வாய்ப்பிருக்கு!.
வயதானவர்: இரண்டு மூணு தடவையோ அதுக்கு மேலேயோ நாம சந்திக்கலாம். நீங்க என் பேரு அட்ரஸ் கேட்கலாம்!
இளைஞன்: ஆமா அதுக்கும் வாய்ப்பிருக்கு.
வயதானவர்: ஒரு நாள் நீ என் வீட்டு வரலாம். சும்மா இந்த பக்கம் வந்தேன் அப்படியே பார்த்துட்டு போலாம்னு நினைச்சேன்னு சொல்லலாம். நான் உன்னை உபசரிக்க காபி தரலாம். என்னோட உபசரிப்ப பார்த்துட்டு நீ மறுபடியும் வர முயற்சி பண்ணலாம். இந்த தடவை நான் காபியை பாராட்டி யார் இதை போட்டதுனு நீ கேட்பே!
இளைஞன்: ஆமா செய்யலாம்!
வயதானவர்: அப்புறம் நான் அது என் பொண்ணு போட்டதுன்னு சொல்வேன். நான் என் அழகான பொண்ணை உனக்கு அறிமுகப்படுத்துவேன். நீ உடனே ஜொள்ளு விடுவே.
இளைஞன்: (புன்னகைக்கிறார்)
வயதானவர்: அப்ப இருந்து நீ என் பொண்ணை அடிக்கடி பார்க்க முயற்சிப்ப. நீ அவளை படத்துக்கு கூட்டிட்டு போவேன் வெளியே வேற எங்கயாவது கூட்டிட்டு போவே.
இளைஞன்: (புன்னகைக்கிறார்)
வயதானவர்: என் பொண்ணு உன்னை விரும்ப ஆரம்பிக்கலாம். உனக்காக காத்திருக்க தொடங்கலாம். தொடர்ந்து சந்திச்ச பிறகு நீ அவளை லவ் பண்ணி காதலை அவகிட்ட சொல்லுவே. இரண்டு பேரும் லவ் பண்ணுவீங்க.
இளைஞன்: (மீண்டும் புன்னகைக்கிறார்)
வயதானவர்: ஒரு நாள் நீயும் அவளும் என் கிட்ட வந்து உங்க காதலை பத்தி சொல்லி கல்யாணம் பண்ண சம்மதம் கேப்பீங்க!
இளைஞன்: ஆமா சார்! ஆனா இதுக்கும் டைம் கேட்டதுக்கு என்ன சம்பந்தம்?
வயதானவர்: (கோபமாக) கொய்யாலே! ஒரு வாட்ச் கூட சொந்தமா இல்லாதவனுக்கெல்லாம் என் பொண்ணை கல்யாணம் பண்ணி குடுக்க முடியாதுடா..
************************************************************
ஒரு பணக்காரர் தன்னோட பெரிய கார்ல போய்கிட்டு இருந்தார். வழியில் ரோட்டோரமா ஏழ்மையான இரண்டு பேர் உட்கார்ந்து புல்லை தின்னுகிட்டு இருந்ததை பார்த்தார். உடனே அவர் ஆச்சரியமாகி காரை நிறுத்தி இறங்கி அவங்ககிட்ட போனார்.அவர் ஒருத்தர்கிட்ட கேட்டார் “ஏம்பா நீங்க புல்லை தின்னுறீங்க?”
ஒருத்தர் சொன்னாரு, “ஐயா, எங்க கிட்ட சாப்பாடு வாங்க காசில்ல அதான் புல்லை தின்னுறோம்”
அந்த பணக்காரர் சொன்னார் “அப்படியா, சரி என் வீட்டுக்கு வாங்க நான் சாப்பாடு தரேன்”
ஒருத்தர் சொன்னார், “ஐயா எனக்கு மனைவியும் 2 குழந்தைகளும் வேற இருக்காங்க அவங்க அந்த மரத்தடியில் இருக்காங்க”
”சரி அவங்களையும் கூட்டிட்டு வாங்க!” சொல்லிவிட்டு பக்கத்திலிருந்தவரிடமும் “நீங்களும் வாங்க” என்று சொன்னார் அந்த பணக்காரர்.
“ஐயா எனக்கு மனைவியும் ஆறு குழந்தைகளும் இருக்காங்க!”
“பரவாயில்லை, எல்லோரையும் கூட்டிட்டு வாங்க”
கார்ல எல்லோரையும் கஷ்டப்பட்டு ஏத்திக்கிட்டு அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போனார் அந்த பணக்காரர். போற வழியில் ஒரு ஏழை சொன்னார் “ஐயா உங்களுக்கு பெரிய மனசு. எங்க எல்லோரையும் உங்க கூட கூட்டிட்டு போறீங்களே. ரொம்ப நன்றி”
பணக்காரர் சொன்னார், “பரவாயில்லை உங்களை கூட்டிட்டு போறது எனக்கும் சந்தோசம்தான். என் வீடு உங்களுக்கு ரொம்ப புடிக்கும். அங்க ஒரு அடிக்கு புல்லுங்க வளர்ந்திருக்கு!”
************************************************************
ஒரு துணிக்கடை. ஒரு அழகான பொண்ணு கடைக்குள்ள போய் கல்லாவில் இருந்த ஆள்கிட்ட கேட்டாள், “நான் ஒரு ரா மெடிரீயல் வாங்கலாம்னு இருக்கேன், எவ்வளவு செலவாகும்?” அங்க இருந்த கேஷியர் ஜொள்ளுப் பார்டி. ”ஒரு அடி துணிக்கு ஒரு முத்தம் கொடுங்க” அப்படின்னான். அந்தப் பொண்ணு “அப்படியா நல்லது. நான் ஒரு பத்தடி நீளம் எடுப்பேன்” அப்படின்னு சொல்லிட்டு துணி எடுக்க போனாள். துணியெல்லாம் எடுத்துட்டு கேஷியர்கிட்ட போய் சொன்னா ”என் தாத்தா பில் கட்டுவார்”
************************************************************
ஒரு கோகோகோலா சேல்ஸ்மேன் சவுதி அரபியேல இருந்து சோகமாக வந்தார். அவர் நண்பர் கேட்டார், ”ஏங்க அரபியர்கிட்ட உங்க வியாபாரம் நல்லா இல்லையான்னு” கேட்டார். ”நான் அங்க போனப்ப அங்க நல்லா வியாபாரம் பண்ணலாம்னு நம்பிக்கையோடத்தான் இருந்தேன். ஆனா எனக்கு அரபி பேசத் தெரியாது. அதனால விசயத்தை 3 போஸ்டர் மூலமா சொல்லலாம்னு நினைச்சேன்.
முதல் போஸ்டர்ல ஒரு ஆள் கடும் பாலைவனத்தில், ரொம்ப தாகத்தோட மயங்கி இருப்பான்.
இரண்டாவது போஸ்டர்ல, அவன் கோகோகோலா குடிப்பான்.
மூன்றாவது போஸ்டர்ல அந்த ஆள் புத்துணர்ச்சியோட இருப்பான்.
நான் இந்த மூணு போஸ்டர்களையும் லைனா எல்லா இடத்திலும் ஒட்டினேன்.”
“அட! நல்ல ஐடியா தானே, அப்புறம் ஏன் வேலைக்கு ஆவாம போச்சு?”
“அதுவந்து….. எனக்கு அரபி பேச தெரியாதது மட்டுமில்ல, அரபிக்காரங்க எல்லாத்தையும் வலது பக்கமிருந்து இடதுபக்கமா படிப்பாங்கறதும் தெரியாது”
************************************************************
ஒருத்தர் புதுசா மேனேஜரா பதவியேற்றார். அப்ப பழைய மேனேஜர் அவர் கிட்ட 3 கவர் குடுத்தார். ரொம்ப பிரச்சினை, அவங்கிறப்ப இதை வரிசையா எடுத்துப்பாருன்னு சொல்லிட்டு போய்ட்டாரு.
அந்த மேனேஜர் அதுக்கப்புறம் கவரை மறந்துட்டாரு. ஆறுமாசம் கழிச்சு கம்பெனியில ஸ்ட்ரைக். கிட்டதட்ட மூடுற நிலைமை வந்துடுச்சு பணம் நஷ்டம். இவரை கேள்வி மேல கேள்வி கேட்குறாங்க. என்ன பண்ணுறதுன்னே தெரியலை. அப்பதான் கவர் ஞாபகம் வந்துச்சு. முதல் கவரை திறந்தா, “பழியை தூக்கி பழைய மேனேஜர் மேல போடு”ன்னு எழுதியிருந்தது.
அதே மாதிரி செஞ்சார். பிரச்சினை சரியாயிடுச்சு. இன்னும் கொஞ்சம் மாசம் கழிச்சு மறுபடியும் அதேமாதிரி பிரச்சினை வந்துச்சு. மறுபடியும் இரண்டாவது கவரை திறந்தார். “பழியை தூக்கி கவர்மெண்ட் மேல போடு”ன்னு எழுதியிருந்தது.
அதே மாதிரி செஞ்சார். பிரச்சினை சரியாயிடுச்சு. இன்னும் கொஞ்சம் மாசம் கழிச்சு மறுபடியும் அதேமாதிரி பிரச்சினை வந்துச்சு. இப்ப மூன்றாவது கவரை திறந்தார். “நீயும் மூணு கவரை ரெடி பண்ணு”ன்னு எழுதியிருந்தது.
************************************************************
ஒரு ட்ரெய்ன்ல ஜார்ஜ் புஷ், ஒபாமா, ஐஸ்வர்யா ராய், எலிசபெத் மகாராணி நாலு பேரும் போய்கிட்டு இருந்தாங்க. ட்ரெய்ன் ஒரு tunnel-ல போறப்ப பயங்கர இருட்டு அப்ப யாரோ முத்தம் குடுக்கிற சவுண்டும், அறை வாங்கிற சவுண்டும் கேட்டது.
tunnel-ஐ விட்டு வெளியே வந்தப்பட்ட ஜார்ஜ் புஷ் கன்னம் சிவந்து இருந்தது அவர் கன்னதில் கை வச்சிகிட்டு இருந்தார்.
எலிசபெத் மகாராணி நினைச்சாங்க ‘இந்த அமெரிக்கருங்க மோசம் போல ஜார்ஜ் புஷ் ஐஸ்வர்யாவுக்கு முத்தம் தந்திருப்பார் அவங்க அடிச்சிருப்பாங்கன்னு நினைச்சாங்க.’
ஐஸ்வர்யா நினைச்சாங்க ‘இந்த ஜார்ஜ் புஷ் நான்னு நினைச்சு எலிசபெத் மகாராணிக்கு முத்தம் தந்திருப்பார் அவங்க அடிச்சிருப்பாங்கன்னு நினைச்சாங்க.’
ஜார்ஜ் புஷ் நினைச்சாரு ‘இந்த ஒபாமா ஐஸ்வர்யாவுக்கு முத்தம் தந்திருப்பார் அவங்க இருட்டுல தெரியாம அவருன்னு நினைச்சி என்னை அடிச்சிருப்பாங்கன்னு நினைச்சாங்க.’
ஒபாமா நினைச்சாரு ‘அடுத்த tunnel வந்தவுடனே மறுபடியும் முத்தம் தர மாதிரி சவுண்ட் கொடுத்துட்டு ஜார்ஜ் புஷ்ஷை மறுபடியும் அடிக்கணும்!’
டெரர் கும்மிக்காக
எஸ். கே
33 comments:
vadai
vadai enakku
அட பாவி கண் இமைக்கும் நேரத்துல தட்டிக்கிட்டு போய்ட்ட
vadai poche!!
// இம்சைஅரசன் பாபு.. said...
அட பாவி கண் இமைக்கும் நேரத்துல தட்டிக்கிட்டு போய்ட்ட
March 1, 2011 2:35 PM
கோமாளி செல்வா said...
vadai poche!!///
ஹிஹி.... சரி சரி வாங்க ஆளுக்கு கொஞ்சமா எடுத்துப்போம்.....
//இம்சைஅரசன் பாபு.. said... 3
அட பாவி கண் இமைக்கும் நேரத்துல தட்டிக்கிட்டு போய்ட்ட//
வடை வாங்குறதுன்னா சும்மாவா?? தீயா வேலை செய்யனும் மக்கா...ஹிஹி
super!
That too George Bush/Opama joke rocks!!!!!!
//வயதானவர்: (கோபமாக) கொய்யாலே! ஒரு வாட்ச் கூட சொந்தமா இல்லாதவனுக்கெல்லாம் என் பொண்ணை கல்யாணம் பண்ணி குடுக்க முடியாதுடா..//
இது நம்ம ரமேஷ பார்த்துதானே சொன்னாரு.... ஏன்னா அவருதான் அடிக்கடி இளைஞன்னு சொல்றாரு...ஹிஹி
எஸ் கே எழுத்துக்களில் செல்வா தெரியறாரே... இது உண்மையா? எனக்கு மட்டும் அப்படி தோணுதா?
//ஒருத்தர் புதுசா மேனேஜரா பதவியேற்றார். அப்ப பழைய மேனேஜர் அவர் கிட்ட 3 கவர் குடுத்தார். ரொம்ப பிரச்சினை, அவங்கிறப்ப இதை வரிசையா எடுத்துப்பாருன்னு சொல்லிட்டு போய்ட்டாரு.//
இதுவும் நம்ம ரமேசுதான்...ஹிஹி
>>>
வயதானவர்: (கோபமாக) கொய்யாலே! ஒரு வாட்ச் கூட சொந்தமா இல்லாதவனுக்கெல்லாம் என் பொண்ணை கல்யாணம் பண்ணி குடுக்க முடியாதுடா..
ரமேஷ் கோவிச்சுக்க மாட்டாரா? ஹி ஹி
2 மட்டும் ஃபாரீன் சரக்கு,
மாணவன் said... 8
//வயதானவர்: (கோபமாக) கொய்யாலே! ஒரு வாட்ச் கூட சொந்தமா இல்லாதவனுக்கெல்லாம் என் பொண்ணை கல்யாணம் பண்ணி குடுக்க முடியாதுடா..//
இது நம்ம ரமேஷ பார்த்துதானே சொன்னாரு.... ஏன்னா அவருதான் அடிக்கடி இளைஞன்னு சொல்றாரு...ஹிஹி//
வாட்ச் வச்சிருக்க நான் என்ன வாட்ச் மேனா?
//சி.பி.செந்தில்குமார் said... 11
>>>
வயதானவர்: (கோபமாக) கொய்யாலே! ஒரு வாட்ச் கூட சொந்தமா இல்லாதவனுக்கெல்லாம் என் பொண்ணை கல்யாணம் பண்ணி குடுக்க முடியாதுடா..
ரமேஷ் கோவிச்சுக்க மாட்டாரா? ஹி ஹி//
ஆமாம் சில பேருக்கு உண்மைய சொன்னா கோவம் வரத்தான் செய்யும்...ஹிஹி
அப்போ வாட்ச் கட்டி இருக்கறவங எல்லாம் வாட்ச்மேனா? ரமேஷ் நல்ல மாட்டிக்கிட்டாரு
எல்லாம் ஜோக்ஸ்மே சூப்பர்...அதுவும் நம்ம ரமேஷபத்தின ஜோக் அல்டிமேட்...ச்சே சான்ஸே இல்ல...ஹிஹி
/எஸ் கே எழுத்துக்களில் செல்வா தெரியறாரே... இது உண்மையா? எனக்கு மட்டும் அப்படி தோணுதா?//
இருக்கலாங்க! ஏன்னா எனக்கு அவ்வளவா காமெடியா எழுத வராது. செல்வாவோட காமெடி ரொம்ப புடிக்கும். அதை அடிப்படையா வச்சுதான் காமெடியா எழுத முயற்சி செய்யறேன். அதனால் அப்படி தெரியாலாம்.:-)
கோகோகோலா , புல்லு தின்கிறது இரண்டும் எனக்கு புதுசு ..
ஹி ஹி .. இதிலும் கோக கோலா தான் ரொம்ப பிடிச்சிருக்கு ..
//இருக்கலாங்க! ஏன்னா எனக்கு அவ்வளவா காமெடியா எழுத வராது. செல்வாவோட காமெடி ரொம்ப புடிக்கும். அதை அடிப்படையா வச்சுதான் காமெடியா எழுத முயற்சி செய்யறேன். அதனால் அப்படி தெரியாலாம்.:-)
//
ஐயோ என்னே கொடுமை இது ? என்னால நம்பவே முடியல .. ஹி ஹி ..
20
nice .,
அத்தனையும் அசத்தல்.....
முதல் போட்டோவுல உள்ளது மாணவன்!
ஏன்னா..அவருதான் இசை ரசிகர்!
வயதானவர்: (கோபமாக) கொய்யாலே! ஒரு வாட்ச் கூட சொந்தமா இல்லாதவனுக்கெல்லாம் என் பொண்ணை கல்யாணம் பண்ணி குடுக்க முடியாதுடா///
இதில் வயதானவர் நம்ம போலிஸ்!
பரவாயில்லை உங்களை கூட்டிட்டு போறது எனக்கும் சந்தோசம்தான். என் வீடு உங்களுக்கு ரொம்ப புடிக்கும். அங்க ஒரு அடிக்கு புல்லுங்க வளர்ந்திருக்கு!”//
இது நம்ம பாபு..
ஏன்னா அவருதான் போலிச கூட்டிட்டு போய் மிஞ்சின பிஸ்கட் டீயெல்லாம் கொடுப்பாரு!
அங்க இருந்த கேஷியர் ஜொள்ளுப் பார்டி. ”ஒரு அடி துணிக்கு ஒரு முத்தம் கொடுங்க” அப்படின்னான்//
இது நம்ம வெறும்பய..
அதுவந்து….. எனக்கு அரபி பேச தெரியாதது மட்டுமில்ல, அரபிக்காரங்க எல்லாத்தையும் வலது பக்கமிருந்து இடதுபக்கமா படிப்பாங்கறதும் தெரியாது”////
இது நம்ம பன்னி..
ஏன்னா..அவருதான் காதல் மயக்கத்துல இருக்காரு!
அதே மாதிரி செஞ்சார். பிரச்சினை சரியாயிடுச்சு. இன்னும் கொஞ்சம் மாசம் கழிச்சு மறுபடியும் அதேமாதிரி பிரச்சினை வந்துச்சு. இப்ப மூன்றாவது கவரை திறந்தார். “நீயும் மூணு கவரை ரெடி பண்ணு”ன்னு எழுதியிருந்தது//
இதுல பழைய டேமேஜரு நம்ம மங்குனி...
புது டேமேஜரு நம்ம போலிசு!
ஒபாமா நினைச்சாரு ‘அடுத்த tunnel வந்தவுடனே மறுபடியும் முத்தம் தர மாதிரி சவுண்ட் கொடுத்துட்டு ஜார்ஜ் புஷ்ஷை மறுபடியும் அடிக்கணும்!//
பாவம் ஒபாமா....இருட்டுல உண்மைலே தெரியாம முத்தம் கொடுத்த டெரர அவர் பார்க்கல போல?
:-))))
Interesting.
very super nice................
எல்லா ஜோக்ஸுமே நல்லாயிருக்கு!
Post a Comment