Wednesday, February 9, 2011

செல்வா கதைகள்

முன் குறிப்பு: நீங்க கோமாளி ப்ளாக்ல செல்வா கதைகள் படிச்சிருப்பீங்க. அதுல செல்வா அவனோட கற்பனைல செல்வா கதைகள் எழுதி இருப்பான். கற்பனைன்னு தான் சொல்லச்சொன்னான். நீங்க அதெல்லாம் உண்மையா நடந்துதுன்னு நினைச்சுக்காதீங்க. அதே மாதிரி நானும் சில ஜோக்ஸ் செல்வா கதைகள் மாதிரி முயற்சி பண்ணிருக்கேன்.!
மரியாதையா செல்வாவோட மொக்கையை படி!

செல்வா தன் நண்பரிடம் கூறினார் “என்னை எல்லோரும் கடவுளா நினைக்கிறாங்க”

“அப்படியா?”

“ஆமாம் நான் எப்ப போனாலும், அடக்கடவுளே நீ மறுபடியும் வந்துட்டியான்னு சொல்வாங்க!”

----------------------------------------------------------------

செல்வாவும் அவர் நண்பரும் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது காக்கை அவர் மேல் எச்சமிட்டு விட்டது. “சே இந்த காக்காங்களே இப்படித்தான்..” என திட்டினார். அப்போது செல்வா பயங்கரமாக சிரிக்கத் தொடங்கினார். ”ஏண்டா லூசு மாதிரி சிரிக்கிற?”

“இல்ல மாடுங்களுக்கு பறக்கற சக்தி இருந்தா என்ன ஆகும்னு நினைச்சு பார்த்தேன்.”

----------------------------------------------------------------

 செல்வா ரோட்டில் ஒரு சுவற்றில் ஏதோ எழுதியிருந்ததை படித்தார். அதில் “இதை படிப்பவன் ஒரு கழுதை” என எழுதியிருந்தது. உடனே செல்வா கோபமாக அங்கே எழுதியிருந்ததை கஷ்டப்பட்டு அழித்துவிட்டு எழுதினார்.

“இதை எழுதியவன்தான் கழுதை”

----------------------------------------------------------------


செல்வா ஒரு படத்துக்கு போகத் தீர்மானித்தார். அதற்காக பிடிவாதமாக கஷ்டப்பட்டு அவர் நண்பர்கள் பதினெட்டு பேரை ஒன்று சேர்ந்து அழைத்து போனார். அவர் நண்பர் கேட்டார்.

”ஏண்டா பத்தொன்பது சேர்ந்து போய்தான் அந்த படத்துக்கு போகணும்னு அடம்புடிக்கிற?”

”ஏன்னா அது 18+ படம்”

----------------------------------------------------------------

 செல்வா இறந்து சொர்க்கத்துக்கு சென்றார். அங்கே சொர்க்க வாசலில் தேவதை நின்று கொண்டிருந்தது. “செல்வா நீங்க சொர்க்கத்து போகணும்னா ஏதாவது நல்லது செஞ்சிருக்கனும். இதுவரைக்கும் ஏதாவது நல்லது செஞ்சிருக்கீங்களா” என்றது தேவதை.

உடனே செல்வா சொன்னார், “ஆம் எனக்கு ஞாபகமிருக்கும். ஒரு ஆளில்லாத ரோடு வழியாக நான் பைக்ல போய்கிட்டு இருந்தப்ப தூரத்தில் ஒரு கும்பல் ஒரு பொண்ணை மிரட்டிகிட்டு இருக்கிறதை பார்த்தேன். உடனே அவங்கிட்ட போய் அவளை விடுமாறு சைகை பண்ணேன். ஆனா அவங்க கேட்கலை. நான் அவங்க பக்கத்தில் போய் அவங்க பைக்கை எட்டி உதைச்சிட்டு சொன்னேன்.”
 “அவளை விட்ருங்க. இல்லன்னா எனக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.”

தேவதை சுவாரசியமாக கேட்டது, “இது எப்ப நடந்தது?”

“இப்பத்தான் இரண்டு நிமிஷம் முன்னாடி.”

நீதி: நீதியா.. நீதி வேணும்னா நீதிமன்றத்துக்கு போங்க!சிரிம்மா கண்ணு..சிரி..சிரி!

பின் குறிப்பு: இதெல்லாம் உண்மைன்னு நம்பிடாதீங்க. செல்வா இதவிட அறிவாளி .. ஹி ஹி

இப்பட்டிய்லில் நீங்களும் இடம்பெற உடனே விரைந்தோடி செல்வா மொக்கையை படியுங்கள்!

41 comments:

நாகராஜசோழன் MA said...

வடை

Arun Prasath said...

adada vadai poachae

நாகராஜசோழன் MA said...

//“என்னை எல்லோரும் கடவுளா நினைக்கிறாங்க”///

பாவம் அவங்க..,,

நாகராஜசோழன் MA said...

//Arun Prasath said...

adada vadai poachae//

சரி விடுப்பா..

மங்குனி அமைச்சர் said...

ha,ha,ha.......s.k super .....

Arun Prasath said...

சரி சரி.... நம்ம செல்வா எங்க ஆள காணோம்

கோமாளி செல்வா said...

வந்திட்டேன் ... ஹி ஹி .. இனிமேல் புதன்கிழமை புதன்கிழமை நம்ம கும்மி ப்ளாக் ல செல்வா கதைகள் போடலாமா ? ஹி ஹி .. மக்கள் தொகை குறையும்ல ..

கோமாளி செல்வா said...

//“இதை எழுதியவன்தான் கழுதை”/

இத நீங்க எப்ப பார்த்தீங்க ? ((இனிமேல் நைட் டைம்ல போய்த்தான் அந்த மாதிரி எழுதினத அழிக்கனும் .. ))

karthikkumar said...

எஸ் கே அண்ணே சூப்பர் ROFL ....

இந்திரா said...

இனிமே உங்களையும் கடவுள்னு தான் கூப்பிடனும்போல...


அடக்கடவுளே... ஆரம்பிச்சுட்டீங்களா??

Madhavan Srinivasagopalan said...

எல்லாமே சூப்பர் எஸ்.கே..
பாராட்டுக்கள்..

middleclassmadhavi said...

ஒன்றை ஒன்று விஞ்சும் ஜோக்ஸ் - சூப்பர்

அருண் பிரசாத் said...

சூப்பர் எஸ் கே....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செல்வா இறந்து சொர்க்கத்துக்கு சென்றார்.///

இது எப்போ நடக்கும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

“இதை எழுதியவன்தான் கழுதை”//

இந்த பதிவை நீங்கதான எழுதினீங்க?

எஸ்.கே said...

//நாகராஜசோழன் MA said...

வடை//

அப்படியே ஒரு டீ?

எஸ்.கே said...

//Arun Prasath said...

adada vadai poachae//
லட்டர் போட்டு திரும்ப வரச் சொல்லுங்க!

எஸ்.கே said...

//நாகராஜசோழன் MA said...

//“என்னை எல்லோரும் கடவுளா நினைக்கிறாங்க”///

பாவம் அவங்க..,,//

அவங்க பாவத்தையெல்லாம் கடவுள் மன்னிச்சுடுவார்!

எஸ்.கே said...

//மங்குனி அமைச்சர் said...

ha,ha,ha.......s.k super .....//
நன்றி அமைச்சரே!

எஸ்.கே said...

//Arun Prasath said...

சரி சரி.... நம்ம செல்வா எங்க ஆள காணோம்//

அவர் சொர்க்கத்துக்கு சென்றுள்ளார். தேவதையுடன் திரும்பி வருவார்!

எஸ்.கே said...

//கோமாளி செல்வா said...

வந்திட்டேன் ... ஹி ஹி .. இனிமேல் புதன்கிழமை புதன்கிழமை நம்ம கும்மி ப்ளாக் ல செல்வா கதைகள் போடலாமா ? ஹி ஹி .. மக்கள் தொகை குறையும்ல ..//

போடுங்க செல்வாவின் புகழ் வளரட்டும்!

//கோமாளி செல்வா said...

//“இதை எழுதியவன்தான் கழுதை”/

இத நீங்க எப்ப பார்த்தீங்க ? ((இனிமேல் நைட் டைம்ல போய்த்தான் அந்த மாதிரி எழுதினத அழிக்கனும் .. ))//

உங்க பின்னாடியும் ஒரு கேமரா இருக்கு!

எஸ்.கே said...

//இந்திரா said...

இனிமே உங்களையும் கடவுள்னு தான் கூப்பிடனும்போல...


அடக்கடவுளே... ஆரம்பிச்சுட்டீங்களா??//

எல்லாம் மொக்கையின் மகிமைதான் காரணம்!

எஸ்.கே said...

//Madhavan Srinivasagopalan said...

எல்லாமே சூப்பர் எஸ்.கே..
பாராட்டுக்கள்..//

ரொம்ப நன்றி மாதவன்!

எஸ்.கே said...

//middleclassmadhavi said...

ஒன்றை ஒன்று விஞ்சும் ஜோக்ஸ் - சூப்பர்//
ரொம்ப நன்றிங்க!

எஸ்.கே said...

//அருண் பிரசாத் said...

சூப்பர் எஸ் கே....//

ரொம்ப நன்றி! பயணம் எப்படியுள்ளது?

எஸ்.கே said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செல்வா இறந்து சொர்க்கத்துக்கு சென்றார்.///

இது எப்போ நடக்கும்?//
துணைக்குதான் யாருமில்லையாம்! நீங்க??

எஸ்.கே said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

“இதை எழுதியவன்தான் கழுதை”//

இந்த பதிவை நீங்கதான எழுதினீங்க?//

ஆமாம் ஆனால் கழுதையில்லை நாய்!

கோமாளி செல்வா said...

//இது எப்போ நடக்கும்?//
துணைக்குதான் யாருமில்லையாம்! நீங்க??//

போலீஸ் எனக்கு துணையாவா ? நான் என்ன பாவம் செஞ்சேன் .. இங்க இருக்குறது போதாதா ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செல்வா இறந்து சொர்க்கத்துக்கு சென்றார்.///

இது எப்போ நடக்கும்?//
துணைக்குதான் யாருமில்லையாம்! நீங்க??///

டெரர் வருவார்

வெறும்பய said...

எல்லாம் அருமையா இருக்கு நண்பா...

ஜீ... said...

எல்லாம் அருமை பாஸ்! :-)

ஆர்.கே.சதீஷ்குமார் said...

செம கலக்கலா இருக்கு எஸ்.கே..படங்கள் அதைவிட காமெடி....

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சிறப்பான பதிவு..ஒரு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி...லே அவுட் நன்றாக உள்ளது

வைகை said...

எஸ்.கே சூப்பர்........அனைத்துமே நல்ல கவிதை..................................................................மாதிரி அருமையான ஜோக்ஸ்!

வைகை said...

எஸ்.கே சூப்பர்........அனைத்துமே நல்ல கவிதை..............................மாதிரி அருமையான ஜோக்ஸ்!

வைகை said...

எஸ்.கே said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செல்வா இறந்து சொர்க்கத்துக்கு சென்றார்.///

இது எப்போ நடக்கும்?//
துணைக்குதான் யாருமில்லையாம்! நீங்க?//////////////

அப்ப அது சொர்க்கமில்லை...நரகம் :))))

வைகை said...

வெறும்பய said...
எல்லாம் அருமையா இருக்கு நண்பா../////


மாமு கமெண்ட எதுவும் மாத்தி போடலியே?

இம்சைஅரசன் பாபு.. said...

வேண்டாம் இத்தோட நிறுத்திக்குவோம் ....இந்த கோமாளி செல்வா கூட சேராத ன்னு சொன்ன கேக்குறீங்கள எஸ்.கே .....நீங்களும் இப்படி ஆகிடீங்களே ......படங்கள் எல்லாம் அருமை

T.V.ராதாகிருஷ்ணன் said...

nice

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடக்கடவுளே, இங்கேயுமா.....?

Chitra said...

very funny!