முதலில் எனக்கு இதைப்பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் சிறிதும் இல்லை..இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு மெல்லிய ஆசை தலைதூக்கியது! எவ்வளவோ பார்த்திட்டோம் இதையும் பார்த்தால் என்ன என்று?! ஆனால் என் எண்ணத்தை என் நண்பர்களிடம் சொன்னபோது...அதிகமாக பயமுறுத்தினார்கள்... அதன் கொடூரமான காட்சிகளை உன்னால் பார்க்க முடியாது..நீ சின்னப்பையன் இந்த வேண்டாத வேலை வேண்டாமென்று..இன்னும் என்னென்னமோ சொன்னார்கள்..இருந்தாலும் நான் முடிவெடுத்து விட்டேன்! நடு நிசி நாய்களை பார்த்து விடுவதென்று!
முடிவெடுத்து விட்டேனே தவிர என்றைக்கு என்று முடிவு செய்யவில்லை...பகலில் கண்டிப்பாக முடியாது! இரவு நேரம்தான் லாயக்கு..ஆனால் இரவில் வீட்டை விட்ட வெளியில் சென்றால் காரணம் கேட்பார்கள், உண்மையான காரணம் கூற முடியாது! தடுத்து விடுவார்கள்..என் ஆசை நிராசை ஆகிவிடும்! இருந்தாலும் அதற்கான நாளும் தோதாக வந்தது....வீட்டில் ஒரு திருமணத்திற்கு முதல் நாளே கிளம்பி சென்று விட்டார்கள்...இன்றைய நாளை தவற விடக்கூடாது என்று முடிவெடுத்துக்கொண்டேன்...நண் பர்களிடம் சொல்லாமல் தனியாக சென்று ரசிப்பது என்று முடிவெடுத்துக்கொண்டேன்! ஏனென்றால்....நண்பர்கள் நடு நிசி நாய்களைப்பற்றி சொன்னவிதம் அப்படி! இதில் இன்செஸ்ட் கூட இருக்கும் என்றார்கள்..அதனால் அவர்களுடன் பார்க்க கூச்சமாக இருந்தது..அதனால்தான் அவர்களைத்தவிர்த்தேன்!
மாலை மங்கியதும் என் கண்கள் கடிகாரத்திலே நிலைத்திருந்து..ஒன்பது மணிக்கு கிளம்பினால்தான் நண்பர்கள் குறிப்பிட்ட அந்த தியேட்டருக்கு அருகில் செல்ல முடியும்!அதனால் கடிகாரத்துக்கு போட்டியாக நிமிடங்களை எண்ணிக்கொண்டிருந்தேன்! ஒன்பது மணி அடித்ததும் பரபரவென செயல்பட்டு வீட்டை பூட்டிக்கொண்டு அந்த தியேட்டரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்! நடக்கும்போது என் மனதில் எதிர்பார்ப்பு..பயம்..போன்ற கலவையான உணர்சிகள் வந்து போனது! இருந்தாலும் பார்த்தே தீருவது என்ற முடிவுடன் நடந்தேன்!
தியேட்டருக்கு அருகில் சென்றதும் நான் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை..அதனால் கூச்சத்தை விட்டு ஒரு டீக்கடை பார்த்து ஒதுங்கி நின்றேன்! நேரம் ஆக ஆக...ஒன்றன் பின் ஒன்றாக வரத்துவங்கியது........இன்னும் கொஞ்சம் நேரம் காத்திருந்தேன்......
மணி பன்னிரெண்டை கடந்ததும் நான் எதிர்பார்த்தபடியே...நடுநிசி நாய்கள் கூட்டமாக வந்து தியேட்டருக்கு முன்னாள் விளையாடதுவங்கியதுகள்! அவைகளின் கொஞ்சல் என்ன....கொடூரமான சண்டை என்ன...அப்பா.....எனக்கு மகிழ்ச்சியும் பயமும் மாறி மாறி வந்தது...ஒரு மணிநேரம் அந்த நடுநிசி நாய்களை ரசித்துவிட்டு வீடு திரும்ப ஆரம்பித்தேன்!
சரி....இதுக்கு ஏன் 18+ என்கிறீர்களா?.....நான் எண்ணியபோது நடுநிசி நாய்கள் பதினெட்டுக்கு மேல் இருந்தது...கரெக்ட்டாக தெரியவில்லை..அதனால்தான் 18+ என்று போட்டேன்! உங்களுக்கும் இந்த நடுநிசி நாய்கள் அனுபவம் வேண்டுமா? அந்த தியேட்டருக்கு செல்லுங்கள்!
டெரர் கும்மிக்காக
வைகை