Monday, March 12, 2012

டெரர் கும்மி விருதுகள் 2011: போட்டி முடிவுகள்!




அனைவருக்கும் வணக்கம்,
மீண்டும் ஒரு முறை ஒரு சந்தோசமான அறிவிப்போடு உங்களைச் சந்திப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. கடந்த டிசம்பர் மாதம் எங்களின் டெரர் கும்மி ஓராண்டு நிறைவு நாளை ஒட்டி நாங்கள் அறிவித்த டெரர் கும்மி விருதுகளுக்கு நீங்கள் அனைவரும் அளித்த ஆதரவிற்கு முதலில் நன்றி சொல்லிக்கொள்கிறோம்.

எங்கள் சந்தோசத்தை பகிரவும் எங்களை ஒன்றிணைத்த இந்த பதிவுலகிற்கு நாங்கள் ஏதாவது திருப்பி செய்யும் வாய்ப்பாகவும் கருதித்தான் இந்த டெரர் கும்மி விருதுகளை அறிவித்தோம். நாங்கள் எதிர்பார்த்ததுக்கும் மேலாக உங்கள் ஆதரவினை எங்களுக்கு தந்து எங்களை உற்சாகப்படுத்தியுள்ளீர்கள். இந்த ஊக்கமும் உற்சாகமும் எங்களை மேலும் புத்துணர்ச்சியோடு செயல்படவைக்கும்  என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த போட்டியை முடிவு செய்த உடனே நாங்கள் ஏற்கனவே சொன்னதுபோல் இதில் எந்தவித ஒளிவு மறைவும் இருக்ககூடாது என்று முடிவு செய்தோம். மேலும் ஒவ்வொரு பிரிவுக்கும் சிறந்த நடுவர்களை கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அந்த நடுவர்களும் பதிவுகளை பதிவர்களின் எந்த அடையாளமும் இல்லாமல் படித்து தேர்வு செய்யவேண்டும் என்று ஆரம்பத்திலே முடிவு செய்துவிட்டோம். அதற்காக எங்கள் குழுவின் தொழிநுட்ப வல்லுனர்களின் உழைப்பு அளவிடமுடியாதது.

போட்டிக்கு விளம்பர உதவி செய்த யுடான்ஸ் திரட்டிக்கு எங்கள் சிறப்பு நன்றிகள்.

நாங்கள் முன்பே சொன்னதுபோல ஒன்பது பிரிவுகளை தவிர்த்து ஹால் ஆஃப் ஃபேம் பிரிவு மட்டும் டெரர் கும்மி நண்பர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்கும் கடுமையான போட்டியே இருந்தது  என்று சொல்லலாம். இறுதிகட்டமாக மூன்று பதிவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவரைத்தான் நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். அவரை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என்றே நம்புகிறோம்.

சரி.. வரலாறு போதும் முடிவுகளை சொல்லுங்கள் என்கிறீர்களா? அதுவும் சரிதான்... பிரிவு வாரியாக முடிவுகளும் அந்த பிரிவுகளுக்கு யார் யார் நடுவர்களாக இருந்தார்கள் என்பதையும்  கீழே வரிசையாக கொடுத்துள்ளோம். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் டெரர் கும்மி சார்பாக வாழ்த்துக்களைத்  தெரிவித்துக்கொள்கிறோம். பரிசுகளை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்ற விபரங்களோடு வெற்றி பெற்றவர்களை விரைவில் தொடர்புகொள்கிறோம். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

1. அனுபவம்/ பயணக்கட்டுரை பிரிவு
இந்தப்பிரிவில் போட்டிக்கு இணைக்கப்பட்ட மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை 64. இவற்றில் விதிமுறைகளுக்கு ஒவ்வாமல் போட்டியில் இருந்து ஏழு பதிவுகள் நீக்கப்பட்டு 57 பதிவுகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் நடுவர்களால் சிறந்த பதிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெரர் கும்மி விருதினைப்பெறும் அந்தப்பதிவுகள்.

                                         பதிவர்: சுவடுகள் 


இரண்டாம் பரிசு -  பதிவு: இலங்கையின் இயற்கை கொடை
                                        பதிவர்: என்னைத்தேடி...ஸ்ரீ

இந்த பிரிவிற்கு நடுவர்களாக இருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்த கொஞ்சம் வெட்டிப்பேச்சு திருமதி.சித்ராஅவர்களுக்கும் நிழல்காலத்தில் திரு.சிவா அவர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


2. அரசியல் பிரிவு
இந்தப்பிரிவில் போட்டிக்கு இணைக்கப்பட்ட மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை 17. இவற்றில் விதிமுறைகளுக்கு ஒவ்வாமல் போட்டியில் இருந்து மூன்று பதிவுகள் நீக்கப்பட்டு 14 பதிவுகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் நடுவர்களால் சிறந்த பதிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெரர் கும்மி விருதினைப்பெறும் அந்தப்பதிவுகள்.


முதல் பரிசு -            பதிவு: அவர்கள் அறியாமையிலேயே இருக்கட்டும்
                                        பதிவர்: ஜானகிராமன்
                                       பதிவர்: சூறாவளி

இந்த பிரிவிற்கு நடுவர்களாக இருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்த தேவியர் இல்லம் திரு. ஜோதிஜி அவர்களுக்கும் திரு. கே.ஆர்.பி. செந்தில் அவர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


3. கதைகள் பிரிவு
இந்தப்பிரிவில் போட்டிக்கு இணைக்கப்பட்ட மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை 37. இவற்றில் விதிமுறைகளுக்கு ஒவ்வாமல் போட்டியில் இருந்து ஒரே பதிவு மட்டும் நீக்கப்பட்டு 36 பதிவுகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் நடுவர்களால் சிறந்த பதிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெரர் கும்மி விருதினைப்பெறும் அந்தப்பதிவுகள்.

முதல் பரிசு -         பதிவு: நாமிருவர்
                                       பதிவர்: சுபத்ரா 


இரண்டாம் பரிசு -  பதிவு: பத்து ரூபாய் ஞானி!
                                       பதிவர்: வே.சுப்ரமணியன்
 
இந்த பிரிவிற்கு நடுவர்களாக இருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்த பரிசல்காரன் அவர்களுக்கும் திரு. ஆர்.வி.எஸ். அவர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


4. கவிதைகள் பிரிவு
இந்தப்பிரிவில் போட்டிக்கு இணைக்கப்பட்ட மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை 45. இவற்றில் விதிமுறைகளுக்கு ஒவ்வாமல் போட்டியில் இருந்து ஒரே பதிவு மட்டும் நீக்கப்பட்டு 44 பதிவுகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் நடுவர்களால் சிறந்த பதிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெரர் கும்மி விருதினைப்பெறும் அந்தப்பதிவுகள்.


முதல் பரிசு  -           பதிவு: பொருந்தாமல் நிற்கும் இந்த தலைப்பு !
                                         பதிவர்: வி.பாலக்குமார் 


இரண்டாம் பரிசு -   பதிவு: போராளி....!
                                           பதிவர்: dheva 

இந்த பிரிவிற்கு நடுவர்களாக இருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்த திரு.நேசமித்திரன் அவர்களுக்கும் திரு.தமிழ்க்காதலன்  அவர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


5. திரைவிமர்சனம் பிரிவு
இந்தப்பிரிவில் போட்டிக்கு இணைக்கப்பட்ட மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை 26. இவற்றில் விதிமுறைகளுக்கு ஒவ்வாமல் போட்டியில் இருந்து இரண்டு  பதிவுகள்  நீக்கப்பட்டு 24 பதிவுகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் நடுவர்களால் சிறந்த பதிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெரர் கும்மி விருதினைப்பெறும் அந்தப்பதிவுகள்.


முதல் பரிசு -                   பதிவு: வாகை சூட வா - திரைப்பார்வை
                                                 பதிவர்: கார்த்திகைப் பாண்டியன் 


இரண்டாம் பரிசு  -            பதிவு: Have a break Selva!
                                                     பதிவர்: கார்க்கி  

இந்த பிரிவிற்கு நடுவர்களாக இருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்த திரு.கேபிள் சங்கர் அவர்களுக்கும் திரு.கருந்தேள் ராஜேஷ் அவர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


6. அறிவியல்/தொழில்நுட்பம் பிரிவு
இந்தப்பிரிவில் போட்டிக்கு இணைக்கப்பட்ட மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை 20. இவற்றில் விதிமுறைகளுக்கு ஒவ்வாமல் போட்டியில் இருந்து ஒரு பதிவு மட்டும் நீக்கப்பட்டு 19 பதிவுகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் நடுவர்களால் சிறந்த பதிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெரர் கும்மி விருதினைப்பெறும் அந்தப்பதிவுகள்


முதல் பரிசு -            பதிவு: பிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..
                                         பதிவர்: பதிவுலகில் பாபு 
                                                       பதிவர்:  Dr.Dolittle  

இந்த பிரிவிற்கு நடுவர்களாக இருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்த புரியாத கிறுக்கல்கள் திரு. ஜி.எஸ்.ஆர் அவர்களுக்கும் கிரி பக்கங்கள் திரு.கிரி அவர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


7. நகைச்சுவைப் பிரிவு
இந்தப்பிரிவில் போட்டிக்கு இணைக்கப்பட்ட மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை 36. இவற்றில் விதிமுறைகளுக்கு ஒவ்வாமல் போட்டியில் இருந்து மூன்று பதிவுகள்  நீக்கப்பட்டு 33 பதிவுகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் நடுவர்களால் சிறந்த பதிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெரர் கும்மி விருதினைப்பெறும் அந்தப்பதிவுகள்


முதல் பரிசு -              பதிவு: NRI கொசுத்தொல்லைகள்
                                            பதிவர்: ILA(@)இளா 


இரண்டாம் பரிசு  -     பதிவு: வெடி - உலகப்படங்களின் உச்சம்!
                                             பதிவர்: சிவகுமார் ! 

இந்த பிரிவிற்கு நடுவர்களாக இருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்த திரு.கந்ததாசன் ப்ளஸ் அவர்களுக்கும் திரு. குசும்பன் சரவணன் அவர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


8. விழிப்புணர்வு பிரிவு
இந்தப்பிரிவில் போட்டிக்கு இணைக்கப்பட்ட மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை 52. இவற்றில் விதிமுறைகளுக்கு ஒவ்வாமல் போட்டியில் இருந்து பதிவுகள்  நீக்கப்பட்டு 44 பதிவுகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் நடுவர்களால் சிறந்த பதிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெரர் கும்மி விருதினைப்பெறும் அந்தப்பதிவுகள்.


முதல் பரிசு -                பதிவு: இயற்கையைக் காப்போம்
                                              பதிவர்: செல்விஷங்கர் 
 
இரண்டாம் பரிசு  -      பதிவு: சைபர் க்ரைம் - ஒரு பார்வை
                                               பதிவர்: Abdul Basith  
 
இந்த பிரிவிற்கு நடுவர்களாக இருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்த திரு. சீனாஐயா  அவர்களுக்கும் திரு.புதுகை அப்துல்லா  அவர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


9. சிறந்த புதிய பதிவர் பிரிவு 
இந்தப்பிரிவில் போட்டிக்கு தங்கள் தளங்களை இணைத்த பதிவர்களின்  எண்ணிக்கை 30. இவற்றில் விதிமுறைகளுக்கு ஒவ்வாமல் போட்டியில் இருந்து 7 தளங்கள்  நீக்கப்பட்டு 23 தளங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் நடுவர்களால் சிறந்த தளங்களாக  தேர்ந்தெடுக்கப்பட்டு டெரர் கும்மி விருதினைப்பெறும் அந்தத் தளங்கள்.


முதல் பரிசு -         பதிவர்: ஜேகே
                                       வலைப்பூ: வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!


இரண்டாம் பரிசு - பதிவர்: யுவராணி தமிழரசன்
                                        வலைப்பூ: கிறுக்கல்கள்...
 
இந்த பிரிவிற்கு நடுவர்களாக இருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்த திரு. கே.வி.ஆர்  அவர்களுக்கும் திரு.விந்தை மனிதன் ராஜாராம் அவர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


10. HALL OF FAME BLOGGER
நாங்கள் விருதுகள் அறிவிப்பிலே சொன்னதுபோல இது முழுக்க முழுக்க டெரர் கும்மி நண்பர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்கும் நாங்கள் தனி வரைமுறையே வைத்திருந்தோம். இதற்கென தனி படிவம்  தயார்  செய்து அதில் பரிந்துரை செய்யும் பதிவர், காரணம்.அவரின் சிறந்த பதிவுகளாக கருதுபவையின் லிங்க் அனைத்தையும் வாங்கினோம்.முக்கியமாக ஒருவர் பரிந்துரைப்பது அடுத்தவருக்கு தெரியாத வண்ணம் பார்துகொண்டோம்.

இவ்வாறு பல கட்ட விவாதங்களுக்கு பிறகு டெரர் கும்மி நண்பர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த HALL OF FAME BLOGGER



தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்கள். இவர்களுக்கு முதல்பரிசாக ரூபாய் 600 க்கான புத்தக  கூப்பனும், இரண்டாம் பரிசாக ரூபாய் 400 க்கான புத்தக  கூப்பனும் வழங்கப்படும்.Hall Of Fame Blogger பிரிவில் தேர்ந்தெடுக்கபட்டவருக்கு ரூபாய் 1000 மதிப்பிலான புத்தகக் கூப்பன் வழங்கப்படும்.பரிசு கூப்பன்கள் அனைத்தும் டிஸ்கவரி புக் பேலஸ் மூலம் வழங்கப்படும். புத்தகங்களை எப்படி வாங்குவது என்ற விபரங்களுடனும் விருதுக்கான லோகோ கோடிங்குடனும் வெற்றி பெற்றவர்களை விரைவில் தொடர்புகொள்கிறோம்.

அனைவருக்கும் நன்றி.


97 comments:

புதுகை.அப்துல்லா said...

என்னையும் மதித்து நடுவர்களில் ஒருவராக்கிய உங்கள் அன்பிற்கு என் மனமார்ந்த நன்றி

Speed Master said...

அணைவருக்கும் வாழ்த்துக்கள்

சசிகுமார் said...

போட்டியில் வெற்றிபெற்ற அனைத்து பதிவர்களுக்கும், போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்த டெர்ரர்கும்மி குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ராஜி said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

வெளங்காதவன்™ said...

இருய்யா படிச்சிட்டு வாறன்...

முரளிகண்ணன் said...

போட்டியில் வெற்றிபெற்ற அனைத்து பதிவர்களுக்கும், போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்த டெர்ரர்கும்மி குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சத்ரியன் said...

வாகை சூடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். போட்டியை நிகழ்த்திய குழுவினருக்கு பாராட்டுக்கள்.

வெளங்காதவன்™ said...

விருதுகள் பெற்ற அனைவருக்கும், மற்றும் விருதினை அளிக்கும் டெரர் கும்மி மெம்பர்களுக்கும் வாழ்த்துக்கள்!!!!

அனுஷ்யா said...

கடைசி எங்காவது நம்ம பேரு வந்திருக்கா ன்னு பாத்தேன்.. ம்ம்ஹ்ம்ம்,, மனச தேத்திக்கிட்டேன்...:)

விருது பெரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
குறிப்பாக ஜேகே அவர்கள்.. நான் எதிர்ப்பார்த்தது அவர் விஷயத்தில் நடந்துள்ளதில் ஒரு பேரின்பம்...

K.s.s.Rajh said...

உங்கள் முதல் முயற்சி சிறப்பாக வெற்றியடைந்தமைக்கு வாழ்த்துக்கள் விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்

நாய் நக்ஸ் said...

Vazhthukkal...
Anaivarukkum....

Admin said...

எனக்கும் பரிசு கொடுத்த டெர்ரர் கும்மி நண்பர்களுக்கும், தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும், வெற்றி பெற்ற மற்ற பதிவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி! ரொம்ப சந்தோசமாக உள்ளது.

:) :) :)

Unknown said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...நல்ல முடிவுகளை வழங்கிய நடுவர்களுக்கும்...எடுத்து நடத்திய டெரர் கும்மி நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்

நாய் நக்ஸ் said...

Inga eethum
sandai.....
Illaiya...??????

Naan kilambaren.....!!!!!

Unknown said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்! அப்பாடா! நக்கீரர் பெயர் வரவில்லை.....!

ராஜ் said...

பரிசு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ...
இந்த விருது முலம் எனக்கு நிறைய சிறந்த வலைப்பூகளின் அறிமுகம் கிடைச்சிருக்கு.
தமிழ் ப்ளாக் உலகம் ரொம்ப சின்னதுன்னு நினைச்சுட்டேன்.
ஹாட்ஸ் ஆப் டெரர் கும்மி

ராஜ் said...

@ Without Investment Jobs Available said...
இங்கேயுமா..

நாய் நக்ஸ் said...

Without....sir

nangale parisu...
Kodukkurom....
Terrorkummi
groups----

ivanukku eethum
parisu
illaiya.....???????

Vendumaanaal
sirantha
commenter
viruthu
kodungalen......

Mudiyalai....

வெளங்காதவன்™ said...

//NAAI-NAKKS said...

Without....sir

nangale parisu...
Kodukkurom....
Terrorkummi
groups----

ivanukku eethum
parisu
illaiya.....???????

Vendumaanaal
sirantha
commenter
viruthu
kodungalen......

Mudiyalai....
///

:-)

Unknown said...

Without Investment Jobs Available said... இவருக்கு கொலையா கொல்றாங்கய்யா..விருது கொடுங்கண்ணா பிளீஸ்!

முத்தரசு said...

மொதல்ல வாழ்த்தை சொல்லி வைப்போம்:

டெரர் கும்மி விருது பெரும் அனைத்து பதிவர்களுக்கும் - விருதை தேர்வு செய்த நடுவர்களுக்கும் - வாரி வழங்கிய டெரர் கும்மி டீம் க்கும் - மனசாட்சியின் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

RAVI said...

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.....[[எனக்கு ரகசியமா பணம் அனுப்பி தருவீங்கன்னு நம்புறேன்]]

Madhavan Srinivasagopalan said...

வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

பரிசு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ...

சேலம் தேவா said...

வெற்றிபெற்ற பதிவர்கள் அனைவர்க்கும் வாழ்த்துகள்..!!

யுவராணி தமிழரசன் said...

புது பதிவர்கள் பிரிவில் என் வலைப்பூ தேர்ந்தெடுக்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி! நடுவர்களுக்கும் டெரர் கும்மி குழுவினருக்கும் எனது நன்றிகள்! தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற பதிவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

சி.பி.செந்தில்குமார் said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.. குறிப்பா நம்மா ஆளு ஜீக்கு ஸ்பெஷல் வாழ்த்து.. செங்கோவி அல்லது ஜீ தான் இந்த பரிசு பெறுவார்னு கெஸ் பண்ணி இருந்தேன்.. எனவே சிறந்த யூகிப்பாளர் விருதை எனக்கு நானே எடுத்துகிட்டேன் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>வீடு K.S.சுரேஸ்குமார் said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்! அப்பாடா! நக்கீரர் பெயர் வரவில்லை.....!


உயர்ந்த உள்ளம்

ஹாலிவுட்ரசிகன் said...

பக்கத்தை புக்மார்க் பண்ணிட்டேன். ஒவ்வொரு பதிவாக சீக்கிரம் வாசிக்கிறேன்.

வெற்றிப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Yoga.S. said...

வணக்கம்!பரிசுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!!!!!!!போட்டியை ஒழுங்குபடுத்தி பரிசுகள் வழங்கி ஊக்குவித்த டெரர்களுக்கும் வாழ்த்துக்கள்!!!!!

rajamelaiyur said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

Unknown said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

டெரர் கும்மி குழுமத்துக்கு எனது பாராட்டுக்கள்!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். தொடரட்டும் இதுபோன்ற சேவை.

Unknown said...

என்னையும் மதித்து நடுவர்களில் ஒருவராக்கிய உங்கள் அன்பிற்கு என் மனமார்ந்த நன்றி

கந்ததாசன் பிளஸ்! :)

maruthamooran said...

விருது வாங்கியவர்களுக்கும்- ஊக்கப்படுத்தி விருது வழங்கியவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

HALL OF FAME BLOGGER “வானம் தாண்டிய சிறகுகள்“ ஜீக்கும் விசேட வாழ்த்துக்கள். அண்மைக்காலத்தில் ரசி்த்த பதிவர்களில் “ஜீ“யும் ஒருவர்!!

cheena (சீனா) said...

அன்பின் டெரர் கும்மி நண்பர்களே - போட்டி வெற்றிகரமாக நடத்தி முடிவுகளையும் அறிவித்தமை நன்று. எனக்கும் நடுவராகப் பணியாற்றியது மகிழ்ச்சியினைத் தந்தது. வாய்ப்பிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

சிநேகிதன் அக்பர் said...

விருது வாங்கியவர்களுக்கும்- ஊக்கப்படுத்தி விருது வழங்கியவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

Anonymous said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

குறையொன்றுமில்லை. said...

போட்டியில் வெற்றிபெற்ற அனைத்து பதிவர்களுக்கும், போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்த டெர்ரர்கும்மி குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

CS. Mohan Kumar said...

வெற்றிபெற்ற பதிவர்கள் அனைவர்க்கும் வாழ்த்துகள்..!

Congrats Terror kummi for the excellent work done !

கார்க்கிபவா said...

thanks!!

நீச்சல்காரன் said...

வென்றவர்களுக்கு வாழ்த்துகள்
உங்கள் குழு வெற்றிக்கும் வாழ்த்துகள்

Cable சங்கர் said...

வெற்றிப் பெற்ற அனைவருக்கும், நடத்திய டெரர் கும்மி குழுவிற்கும், யுடான்ஸின் சார்ப்பாகவும், நடுவராய் நியமித்த குழுவினருக்கு என் சார்பாகவும் நன்றிகளையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனிமரம் said...

உங்கள் முயற்ச்சிக்கு என் வாழ்த்துக்கள். ஜீ மற்றும் சுவடுகள் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்

Philosophy Prabhakaran said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

Anonymous said...

போட்டியில் வென்ற சக பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். ஹால் ஆப் பேம் விருது வென்ற 'ஜீ' க்கு ஒரு ஜெ! டெர்ரர் கும்மி நண்பர்களுக்கு நன்றி. (டெம்ப்ளேட் தான் போட முடியுது. அய்யனார் அருவாள தூக்கிட்டு சுமோல எல்லாரும் தொறத்துனாலும் வேற 'வழி' இல்ல)

தமிழ்வாசி பிரகாஷ் said...

போட்டியின் முடிவு அறிவிப்பு....
டெர்ரர் கும்மி ராக்ஸ்....
அருமையான படைப்புகளை தேர்ந்தெடுத்த நடுவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஜோதிஜி said...

என்னை நடுவர்களில் ஒருவராக்கிய உங்கள் அன்பிற்கு என் மனமார்ந்த நன்றி

ஸ்ரீராம். said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்க்த்துகள், பாராட்டுகள்.

test said...

நன்றி! எதிர்பார்க்கவில்லை! மிக்க மகிழ்ச்சி! உங்கள் விருது என்னை இன்னும் உத்வேகத்துடன் எழுத வைக்கும்! விருது வென்ற சக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!

டெரர் கும்மி நண்பர்களுக்கும், ஏனைய பதிவுலக சொந்தங்களுக்கும் - வாழ்த்துக்களும், நன்றிகளும்!

மொக்கராசா said...

so nice to see all these awards

சௌந்தர் said...

எங்கள் MR. dheva அவர்களுக்கு விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி...

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

Balakumar Vijayaraman said...

வாழ்த்துகளும், நன்றியும் :)

Chitra said...

Congratulations to the winners! :-)

shunmuga said...

வெற்றி பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள் ! சிறந்த் முறையில் தேர்ந்தெடுத்த நீதிபதிகளுக்கும் வாழ்த்துக்கள் !

Aashiq Ahamed said...

சலாம்,

கலந்து கொண்டவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

Unknown said...

congrats to all winners...

நிகழ்காலத்தில்... said...

வெற்றி அடைந்த அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துகள்.

என்னையும் ஒரு பிரிவுக்கு நடுவராக்கி அழகு பார்த்த டெர்ரர் கும்மி நண்பர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

ILA (a) இளா said...

நன்றி!

சாம் ஆண்டர்சன் said...

ஒரு தலை பட்சமான தீர்ப்பு

சாம் ஆண்டர்சன் said...

என்னுடய பெயர் எங்கே

சாம் ஆண்டர்சன் said...

//ILA(@)இளா said...
நன்றி!//

ஆணவத்துல ஆடாதீங்க

சாம் ஆண்டர்சன் said...

//இரண்டாம் பரிசு - பதிவு: Have a break Selva!
பதிவர்: கார்க்கி

இந்த பிரிவிற்கு நடுவர்களாக இருந்து சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து கொடுத்த திரு.கேபிள் சங்கர் அவர்களுக்கும் திரு.கருந்தேள் ராஜேஷ் அவர்களுக்கும் எங்கள் குழுவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவர்களின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.//


சூப்பர்

சாம் ஆண்டர்சன் said...

யாருமே எனக்கு விருது தராதனால நானா எடுத்துக்க போரேன்

சுபத்ரா said...

Pleasant Surprise!!!!

டெரர் கும்மிக்கும் நடுவர்களுக்கும் மிக்க நன்றி.....பரிசு பெற்ற சகபதிவர் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! Keep writing...

Thank You again..

ஜானகிராமன் said...

எப்பாவாவது எழுதும், சின்னஞ்சிறிய பதிவரான எனக்கும் அங்கீகாரம் தந்து ஊக்கப்படுத்திய விருது குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்!

ஜெய்லானி said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் :-)

dheva said...

படைப்பாளிகளை ஊக்குவித்து இருக்கும் என்னுயிர் தோழர்கள் + மாப்ஸ் + தம்பிகள் (=டெரர் கும்மி) அனைவருக்கும் என் மகிழ்ச்சையையும், நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகத் திறமையாக படைப்பாளிகளை அடையாளம் கண்டிருக்கும் நடுவர் குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.....!

வர இருக்கும் நாட்களில் பதிவர்களின் திருவிழாவாக இந்த டெரர் கும்மி விருதுகள் திகழும் என்பதில் கிஞ்சித்தேனும் எனக்கு ஐயமில்லை.......!

கீப் ராக்கிங்....!!!!!!

Unknown said...

என்னுடைய பதிவு முதல் பரிசு பெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி.
எனது பதிவினைத் தேர்ந்தெடுத்த குழுவினருக்கு அனைவருக்கும் என் நன்றி.
பரிசு பெற்ற பதிவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..

Unknown said...

contest_2011@terrorkummi.com.. நீங்கள் கேட்ட தகவல்களைப் பகிர இந்த மெயில் ஐடிக்கு இரண்டு முறை ட்ரை பண்ணினேன்.. மெயில்ஸ் பவுன்ஸ் ஆயிடுச்சு..

Prabu Krishna said...

வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

இந்த முயற்சி தொடர டெரர்கும்மி நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

Vediyappan M said...

டெரர் கும்மிக் காரர்களின் அற்புதமான இந்த இலக்கியத் தொண்டில் டிஸ்கவரி புக் பேலஸ்-ம் சிறிய பங்கினை செய்துள்ளது என்பதில் மகிழ்ச்சியே!, வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

ஜேகே said...

ஆகா ... யாருமேயில்லாத கடையில இருந்து டீ ஆத்திக்கொண்டு இருக்கிறன் எண்டு நினைச்சன் .. என்னையும் அங்கீகரித்து விருது தந்த டெரர்கும்மி நண்பர்களும் மிக்க நன்றி... வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Jaleela Kamal said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Admin said...

//பதிவுலகில் பாபு said...

contest_2011@terrorkummi.com.. நீங்கள் கேட்ட தகவல்களைப் பகிர இந்த மெயில் ஐடிக்கு இரண்டு முறை ட்ரை பண்ணினேன்.. மெயில்ஸ் பவுன்ஸ் ஆயிடுச்சு..
//

எனக்கும் பவுன்ஸ் ஆயிடுச்சு!

TERROR-PANDIYAN(VAS) said...

@Abdul Basith & பதிவுலகி பாபு

//contest_2011@terrorkummi.com.. நீங்கள் கேட்ட தகவல்களைப் பகிர இந்த மெயில் ஐடிக்கு இரண்டு முறை ட்ரை பண்ணினேன்.. மெயில்ஸ் பவுன்ஸ் ஆயிடுச்சு..//

உங்க மேல மெயிலுக்கு என்ன கோவமோ.. :) இந்த ஐ.டிக்கு அனுப்புங்க பாஸ். நான் போட்டி குழுவுக்கு அனுப்பிடரேன் terror.blogger@gmail.com

Subramanian said...

எனது படைப்பையும் பெருமைப்படுத்தி, என்னை உற்சாகப்படுத்திய டெரர்கும்மி நண்பர்களுக்கும், நடுவர் குழுவிற்கும், ஆதரவளித்து உற்சாகப்படுத்தும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி! நன்றி! நன்றி! பரிசு பெற்ற மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்!

Thamira said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! டெரர் கும்மி குழுமத்துக்கு பாராட்டுக்கள்!

aalunga said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்..
சிறப்பாக போட்டியை நடத்திய டெரர் கும்மி குழுவிற்கும், போட்டி நடுவர்களுக்கும் வாழ்த்துகள்!

Radhakrishnan said...

வெற்றி பரிசுகள் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். தொடரட்டும் நற்பணி.

முட்டாப்பையன் said...

http://www.etakkumatakku.com/2012/03/blog-post_14.html

முன்னணி பதிவர் டவுசர்பாண்டி! வம்புல மாட்டி டவுசர் கிழிஞ்சதுதான் பாக்கி!

Dr.Dolittle said...

//ஆகா ... யாருமேயில்லாத கடையில இருந்து டீ ஆத்திக்கொண்டு இருக்கிறன் எண்டு நினைச்சன் .. என்னையும் அங்கீகரித்து விருது தந்த டெரர்கும்மி நண்பர்களும் மிக்க நன்றி... வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...//

same pinch ஜேகே sir,டெரர் கும்மி நண்பர்களுக்கு நன்றிகள் , அனைவருக்கும் வாழ்த்துக்கள்

அப்பாதுரை said...

பங்கு பெற்ற/ விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்களுக்கும் நடுவர்களுக்கும் பாராட்டுக்கள்.

ரசிகன் said...
This comment has been removed by the author.
ரசிகன் said...

விருது வாங்கி மகிழ்ந்தவர்களுக்கும்... கொடுத்து மகிழ்ந்தவர்களுக்கும்.. உதவி மகிழ்ந்தவர்களுக்கும் வாழ்த்துக்கள். :)

விச்சு said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Unknown said...

நடுவர்கள் தேர்வில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் .,

Unknown said...

தேர்வு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

கொசக்சி பசபுகழ் said...

I missed it !! lathikka vimarsan seinjavanga irukkaangala

Avainayagan said...

போட்டியில் வெற்றிபெற்ற பதிவர்களுக்கும், போட்டியை வெற்றிகரமாக நடத்திய டெர்ரர்கும்மி குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள்.

Unknown said...

பதிவுலகில் சிறப்பான படைப்புகளை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி சிறப்பித்த டெரர் கும்மி நண்பர்களுக்கும்,விருது பரிசு போட்டியில் படைப்புகளை சமர்பித்து கலந்துகொண்டு வெற்றி பெற்ற அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துகள்!

Unknown said...

அனைவருக்கும் வாழ்த்துகள்

ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?

சுதா SJ said...

விருது பெற்ற எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்..
மிக சரியான தெரிவுகள்...

ஜீக்கு என் ஸ்பெஷல் வாழ்த்துக்கள் :)

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

TamilTechToday said...

nice info - http://classiindia.in