Tuesday, February 14, 2012

கவுண்டமணியும் காதலர் தினமும்! ( லவ்வர்ஸ் டே ஸ்பெசல் )

 
காந்த கண்ணழகிகளையே காணுமே?
 
 
காதலர் தினம்... காலை.

சுவாமி கவுண்டானந்தாவின் ஆசிரமம்... காலையில் பூஜை முடித்து வெளியில்வரும்போதே அவரது சிஷ்யர் செந்தில் சோகமாக பாடல் கேட்டுக்கொண்டிருக்கிறார்....

"காதல் என் காதல் அது கண்ணீருல...
போச்சு அது போச்சு வெந்நீரில...
அடிடா அவள..உதைடா அவள..

"அடிசெருப்பால.. வர்ற போறவங்ககிட்ட அஞ்சு பத்து வாங்குற மொன்ன நாய்க்கு என்னடா காதல் வேண்டி கிடக்கு? அடடடா... இந்த லவ் பண்றவைங்க தொல்ல தாங்க முடியலடா சாமி... வெந்தது..வேகாதது..பிஞ்சது... பெருத்தது எல்லாம் லவ் பண்ணிக்கிட்டு திரியுதுங்க... ஒவ்வொருததனையா புடிச்சு மூஞ்சிய அடுப்புல வச்சு கருக்கனும்..படுவா... ஓடிப்போயிரு சொல்லிப்புட்டேன்"  கடுப்பாகிறார் கவுண்டானந்தா.

செந்தில் அவசரமாக எழுந்து வணங்குகிறார்... " சுவாமி..சுவாமி... அது ஒரு  பெரிய கதை....."

"சரிட்ரா நாயே...இவரு பெரிய பாரதிராஜா... அப்பிடியே பிளாஸ்பேக்க ஓப்பன் பண்றாரு.. அடச்சீ நாயே.. போ....போய்... ஆசிர்வாதம்  வாங்க வந்தவங்கள வரிசையா உள்ள அனுப்பு.. டேய் தகர வாயா.... அவங்ககிட்ட ஏதாவது தனியா  கமிஷன் வாங்குன... படுவா..மண்டைல தேங்காய வச்சு தேச்சுப்புடுவேன்.. ராஸ்கோல்... போ.. போய் வரச்சொல்லு"

வெளியே போன செந்தில் திரும்ப வருகிறார்.. " சுவாமி..சுவாமி.. ஏதோ இன்னிக்கு லவ்வர்ஸ் டேயாம்.. வெளில ஒரே லவ்வர்சா வந்துருக்காங்க..உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கனுமாம்.... "

"அடங்கொன்னியா... வழக்கமா பார்க்கு..பீச்சுன்னுதானே போவானுங்க..இப்ப என்ன ஆசிரமம் எல்லாம் வர ஆரம்பிச்சிட்டானுங்க? அதவிட இங்க ஜாலியா இருக்கும்னு எவனோ பொரலிய கெளப்பி விட்டாண்டோ...சரிடா..போய் ஒவ்வொரு ஜோடியா உள்ள அனுப்பு.."

முதலில் ஒரு ஜோடி உள்ளே வருகிறது...

" சுவாமி வணக்கம்.. எங்கள ஆசிர்வாதம் பண்ணனும்..எங்க காதல நீங்கதான் சேர்த்து வைக்கணும்... வீட்ல ஒரே பிரச்சனையா இருக்கு.. உங்களைத்தான்  நம்பியிருக்கோம்"

" சரி..சரி.. காதல்னா பிரச்சனைதான்... நீங்க எப்பிடி காதலிச்சிங்க? என்ன பிரச்னை? தெளிவா சொல்லுங்க...

" சாமி.. என் பேரு டேவிட்.. இவ பேரு மல்லிகா...

" அடடடா...... மத நல்லிணக்கம்?  அட்ராசக்க..அட்ராசக்க... மேல சொல்லு..மேல சொல்லு....

"ஒரு வாரம் முன்னாடிதான் இவள ரெஜிஸ்டர் ஆபிஸ்ல கல்யாணத்துக்காக போயிருக்கும்போது பார்த்தேன்.. இவளோட கண்ண(??) பார்த்ததுமே இவ எனக்குத்தான்னு  முடிவு பண்ணிட்டேன்.... அவளுக்கும் அப்பிடிதான்... அவங்க வீட்லயும் எங்க வீட்லயும் கூல்ட்ரிங்க்ஸ் சாப்ட வெளில போன நேரம் பார்த்து தனியா அவள பார்த்து  என் காதல அவகிட்ட சொன்னேன்.. அவளும் உடனே ஓக்கே சொல்லிட்டா... கொஞ்சம் கூட லேட் பண்ணாம அப்பிடியே பின்வாசல் வழியா ஊர விட்டு ஓடி வந்துட்டோம்... ஆனா நாங்க எங்க போனாலும் எங்க ரெண்டு பேர் வீட்ல இருந்து எங்கள துரத்திகிட்டே இருக்காங்க.. நீங்கதான் சாமி எங்கள காப்பாத்தணும்" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தனர்.

" அடங்கொன்னியா... இளஞ்ஜோடிகள பிரிக்கிறதே இந்த தகப்பன்களுக்கு வேலையா போச்சு.. சரி.. டேவிட்..நீ சொல்லு..உன் வீட்ல என்ன பிரச்னை? யார் பிரச்னை பண்றா?"

" சாமி.. எங்க வீட்லகூட அவ்வளவா பிரச்னை இல்லை சாமி.. தண்ணி தொளிச்சு விட்டுட்டாங்க....

" அட நாயே.. அப்புறம் யார்தான் உன்னை தொறத்துனா?

" அதான் சாமி.. எங்க வீட்ல கூட விட்டுட்டாங்க.. ஆனா என் பொண்டாட்டி வீட்லதான் சாமி ஆள் வச்சு துரத்துறாங்க...

" டேய்ய்.. என்னடா சொல்ற? பொண்டாட்டி வீட்லையா? அடங்கொன்னியா... ஏம்மா..இந்தாம்ம்மா பொண்ணு.. இந்த நாய்க்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு உனக்கு தெரியுமாம்மா? தெரிஞ்சுமா லவ் பண்ணுன?

" தெரியும் சாமி..  ஏன்னா..எனக்கு கல்யாணம் ஆனத அவரு பெருந்தன்மையா ஏத்துக்கலையா? அதுமாதிரிதான் நானும் ஏத்துக்கிட்டேன்...."

" டேய்ய்..தல சுத்துதுடா... ங்கப்பா... பன்னாட பரதேசிங்களா... உங்க ரெண்டு பேருக்கும்தான்  கல்யாணம் ஆயிருச்சேடா.. எந்த கல்யாணத்துலடா பார்த்து இந்த கருமாந்திரம் புடிச்ச காதல பண்ணி தொலைச்சிங்க?

" சாமி.. எங்க காதல் தெய்வீக காதல்... தப்பா பேசாதிங்க... நான் என் கல்யாணத்த ரெஜிஸ்டர் பண்ண என் பொண்டாட்டியோட அங்க  போயிருந்தேன்.. இவ கல்யாணத்த ரெஜிஸ்டர் பண்ண இவ புருசனோட வந்துருந்தா.. நாங்க பார்த்ததுமே எங்க காதல் அப்பிடியே உள்ள இருந்து ஊத்து மாதிரி கிளம்பி வந்துருச்சு.. அதான் உடனே ஓடி வந்துட்டோம்... இப்ப ஹெல்ப் பண்ண முடியுமா முடியாதா?

" அடங்கொன்னியா... கல்யாணத்த ரெஜிஸ்டர் பண்ண போனீங்களா? அப்ப உங்களுக்கு எப்ப கல்யாணம் ஆனுச்சு?

" ரெஜிஸ்டர் பண்ண போன ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் சாமி... அது ஒரு கெட்ட கனவா நினச்சு மறந்துட்டேன் சாமி... இப்ப ஆசிர்வாதம் பண்ணுங்க.."

" அட..கருமாந்திரம் புடிச்சவனுங்களா... மரத்த பார்த்தா கால தூக்குற நாய் மாதிரி பார்க்குற பொண்ண பூரா நீ லவ் பண்ணுவ? உனக்கு நான் ஆசிர்வாதம் பண்ணனுமா? இந்தா வாங்கிக்க..க்க்க்ரர்ர்..த்தூ.. இந்தாம்ம்மா பொண்ணு மல்லிகா.. (பேர பாரு? மானம் கெட்ட நாய்க்கு மல்லிகா?) இன்னும் ஒரு நிமிஷம் உங்கள இங்க பார்த்தேன்..சுடுபெட்டிய மூஞ்சில வச்சு தேச்சுபோடுவேன்.. ஓடி போயிருங்க சொல்லிபுட்டேன்...  டேய்ய் சிஷ்யா.. 
 
 


செந்தில் வேகமாக உள்ளே ஓடிவருகிறார்.. " சுவாமி..சுவாமி... அடுத்த ஜோடிய உள்ள வர சொல்லவா?

" டேய்ய் மங்குஸ் மண்டையா..இனி காதல் கீதல்னு எவனையாது உள்ள அனுப்புன... படுவா படுக்க வச்சு லாரிய விட்டு ஏத்திபுடுவேன் சொல்லிபுட்டேன்... அய்யயையையோ.. அட ஆண்டவா...காலங்காத்தால..கண்ட கழிசடைங்களை  எல்லாம் பார்க்க வைக்கிறியே? டோர் லாக்.. ஆசிரமம் க்ளோஸ்...

சாமியிடம் காதலர்தின ஆசிர்வாதம் வாங்க நினைப்பவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளவும்.

சிரிப்பு போலிஸ்
சிப்பு போலிஸ் ப்ளாக்.
பாலிடால்புரம்.
மொக்கையூர்.
 
 
 

70 comments:

எஸ்.கே said...

Life is game... If you want to come in first page of newspaper, bite the umpire..

வைகை said...

Love is war... If you want to die faster, try to love one girl..:-)

வைகை said...

:-))

எஸ்.கே said...

You can't put a price tag on love, but you can on all its accessories.

மாணவன் said...

"Don't Miss Love in Life, but don't Spoil Life in Love" :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

a

பன்னிக்குட்டி ராம்சாமி said...

b

பன்னிக்குட்டி ராம்சாமி said...

c

மொக்கராசா said...

COMMENT ONLY IN ENGLISH

மாணவன் said...

Kingfisher......... :-)

மொக்கராசா said...

love is love

மொக்கராசா said...

love is life

மாணவன் said...

//COMMENT ONLY IN ENGLISH//

ப்ளாக்ல கருத்து.....மாமு ஒன்லி இங்கிலீஷ்....

ப்ளாக்ல கமெண்ட்.......

மொக்கராசா said...

love is like sweet,take sweet and enjoy

தினேஷ்குமார் said...

என்னடா எல்லாம் இங்கிளிபிஸ்ல கமண்டறாங்க சரி நாமும் போடுவோம்

yes or no don't waste time fit up your life position after you get every think

பன்னிக்குட்டி ராம்சாமி said...

Stop it.......

வைகை said...

மொக்கராசா said...
love is like sweet,take sweet and enjoy

////

இவர புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் :-)

மொக்கராசா said...

ring o- ring roses
pocket full of poses
asha-dush -all are fall down

மாணவன் said...

ஐயாம் இண்டர்நேஷனல்............ :-)

வைகை said...

தினேஷ்குமார் said...
என்னடா எல்லாம் இங்கிளிபிஸ்ல கமண்டறாங்க சரி நாமும் போடுவோம்

yes or no don't waste time fit up your life position after you get every think//


ங்கொய்யால.. எங்க இருந்து காப்பி பண்ணின? :-)

வைகை said...

மாணவன் said...
ஐயாம் இண்டர்நேஷனல்............ :-)//நாங்க என்ன செவ்வா கிரகமா? :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

http://chippupolice.blogspot.com/2012/02/blog-post_14.html

ஹி..ஹி...

மாணவன் said...

//மாணவன் said...
ஐயாம் இண்டர்நேஷனல்............ :-)//நாங்க என்ன செவ்வா கிரகமா? :-)//

No This is not Passion......... :-)

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
http://chippupolice.blogspot.com/2012/02/blog-post_14.html

ஹி..ஹி...//


என்ன சிரிப்புயா உமது சிரிப்பு... தெய்வீக சிரிப்பையா :-)

மாணவன் said...

http://www.terrorkummi.com/2012/02/blog-post.html

கோகுல் said...

வாட் ஈஸ் தீ...............ஸ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////முதலில் ஒரு ஜோடி உள்ளே வருகிறது.../////

இது யாரோ பிரபல பதிவராமே?

அருண் பிரசாத் said...

என்னமோ போங்க....

வைகை said...

கோகுல் said...
வாட் ஈஸ் தீ...............ஸ்

///

கேள்வி கேட்டா சாமிக்கு புடிக்காது :-)

வைகை said...

அருண் பிரசாத் said...

என்னமோ போங்க....//


உன் கவலை உனக்கு :-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////" சாமி.. என் பேரு டேவிட்.. இவ பேரு மல்லிகா.../////

மல்லிகா ஷெராவத்தா...?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////முதலில் ஒரு ஜோடி உள்ளே வருகிறது.../////

இது யாரோ பிரபல பதிவராமே?////
அப்பிடியா? சொல்லவேயில்ல :-)

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////" சாமி.. என் பேரு டேவிட்.. இவ பேரு மல்லிகா.../////

மல்லிகா ஷெராவத்தா...?//


அவளுக்கு ஏதுயா புருஷன்? :-)

விக்கியுலகம் said...

think before you ink ஹிஹி!

வைகை said...

விக்கியுலகம் said...

think before you ink ஹிஹி!//


யோவ்..தக்காளி.. புரியுற மாதிரி சொல்லுயா? இப்ப யாரு மேல இன்க் அடிச்சாங்க? :-))

மனசாட்சி said...

என்ன ஒரே ஆங்கில வாடை வீசுது

ok bye see u later

விக்கியுலகம் said...

டாட் காம் மாறிய பிறகும் என்னை தவிர்க்கும் வைகை அவர்களுக்கு நன்றிகள் ஹிஹி!

ப.செல்வக்குமார் said...

அனைவருக்கும் வாழ்த்துகள் :)) (எதுக்கு ? )

TERROR-PANDIYAN(VAS) said...

@விக்கியுலகம்

//டாட் காம் மாறிய பிறகும் என்னை தவிர்க்கும் வைகை அவர்களுக்கு நன்றிகள் ஹிஹி!//

ஆமாம் பாஸ். அவன் இப்போ எல்லாம் யாரையும் மதிக்கிரது இல்லை. கேட்டா அவரு பிரபல பதிவராகிட்டாராம்.. #வைகை காலை வாரி விட வேற்று கிரகம் போகவும் தயாராக இருக்கும் சங்கம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டெரர் தவிர அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் :))

NAAI-NAKKS said...

யப்பா..முடியலை...ஹி..ஹி...
அருமை..நோ சான்ஸ்...

கொயியால...என்னது இது...!!!??????????????????????????????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!???????????????????????????????????????

இம்சைஅரசன் பாபு.. said...

Life is like an ice
Enjoy before it melts ...
அதனால டெய்லி ஒரு பிகரோட சந்தோசமா இருங்க

Yoga.S.FR said...

வணக்கமுங்க!//சிரிப்பு போலிஸ்,
சிப்பு போலிஸ் ப்ளாக்.
பாலிடால்புரம்.
மொக்கையூர்.////இந்த அட்ரசுக்கு காண்டாக்ட் பண்ணினா "எல்லாம்"சரியாப் பூடுங்க்களா?????

Yoga.S.FR said...

மாணவன் said...
No This is not Passion......... :-)////என்னது(poisson)பாய்சனா?

Madhavan Srinivasagopalan said...

ஹார்ட்டு வாயா....
அம்புத் தலையா.. (முடி ஷார்ப்ப இருக்கும்)
--- இதையும் சேத்துக்க..

! சிவகுமார் ! said...

'ஊரு விட்டு ஊரு வந்து' படத்தில் கவுண்டர் சிங்கப்பூர் சாமியார்களிடம் உதை வாங்குவாரே..அதை மனதில் கொண்டு இந்த முகவரியில் தொடர்பு கொள்ளவும். :)))

சிரிப்பு போலிஸ்
சிப்பு போலிஸ் ப்ளாக்.
பாலிடால்புரம்.
மொக்கையூர்.

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//டெரர் தவிர அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் :))//

மலர் கரத்தில் முகமேந்தி
முன்நெற்றியில் முத்தமிட்டு
இதழ்களால் இமை தொட்டு
லவ் யு சொல்லும் கன்னி இருக்க
அனுதினமும் காதலர் தினம்தான்!!

அதனால உன்னை மாதிரி பன்னாடை எல்லாம் வாழ்த்து சொல்லனும் அவசியமில்லை.. :))

Yoga.S.FR said...

மனசாட்சி said...

என்ன ஒரே ஆங்கில வாடை வீசுது?///என்னமோ கெட்டுப்போன மீன் வாட வீசுற மாதிரி சலிச்சுக்கிறீங்க?புரியலேன்னு இப்புடி பப்ளிக்கில சொல்லுவாங்களா?,,,ஹி!ஹி!ஹி!!!

வைகை said...

மனசாட்சி said...
என்ன ஒரே ஆங்கில வாடை வீசுது

ok bye see u later//


அந்த அளவுக்கு இங்க எந்த அப்பாடக்கரும் இல்லை பாஸ் :-)

வைகை said...

விக்கியுலகம் said...
டாட் காம் மாறிய பிறகும் என்னை தவிர்க்கும் வைகை அவர்களுக்கு நன்றிகள் ஹிஹி!///////


யோவ்.. இப்ப நீயெல்லாம் பிரபல பதிவர்யா... நானெல்லாம் கமெண்ட் போட பயமா இருக்குயா :-)

வைகை said...

ப.செல்வக்குமார் said...
அனைவருக்கும் வாழ்த்துகள் :)) (எதுக்கு ? )//


அனைவர்க்கும் நன்றிகள்! ( எதுக்கோ..அதுக்குதான் )

வைகை said...

TERROR-PANDIYAN(VAS) said...
@விக்கியுலகம்

//டாட் காம் மாறிய பிறகும் என்னை தவிர்க்கும் வைகை அவர்களுக்கு நன்றிகள் ஹிஹி!//

ஆமாம் பாஸ். அவன் இப்போ எல்லாம் யாரையும் மதிக்கிரது இல்லை. கேட்டா அவரு பிரபல பதிவராகிட்டாராம்.. #வைகை காலை வாரி விட வேற்று கிரகம் போகவும் தயாராக இருக்கும் சங்கம்//


போடாங்.. நானெல்லாம் பதிவரே இல்லை... இதுல பிரபலமாம்? த்தூ.. :-)

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
டெரர் தவிர அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் :))//


நாய்க்கு எருமைய பார்த்தா புடிக்காதுன்னு சொன்னது சரியாத்தாம்ல இருக்கு :-))

வைகை said...

NAAI-NAKKS said...
யப்பா..முடியலை...ஹி..ஹி...
அருமை..நோ சான்ஸ்...

கொயியால...என்னது இது...!!!??????????????????????????????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!???????????????????????????????????????//


அண்ணே.. அந்த ஆன்லைன் சம்பாத்தியத்த விட்டுட்டிங்க? :-))

வைகை said...

இம்சைஅரசன் பாபு.. said...
Life is like an ice
Enjoy before it melts ...
அதனால டெய்லி ஒரு பிகரோட சந்தோசமா இருங்க///////

ஆமாம்.. அண்ணன் எப்போதுமே இப்பிடித்தான்.. நல்லா கேட்டுக்கங்க :-)

வைகை said...

Yoga.S.FR said...
வணக்கமுங்க!//சிரிப்பு போலிஸ்,
சிப்பு போலிஸ் ப்ளாக்.
பாலிடால்புரம்.
மொக்கையூர்.////இந்த அட்ரசுக்கு காண்டாக்ட் பண்ணினா "எல்லாம்"சரியாப் பூடுங்க்களா?????//


ஆமாமா..உங்க உயிரும் :-)

வைகை said...

Madhavan Srinivasagopalan said...
ஹார்ட்டு வாயா....
அம்புத் தலையா.. (முடி ஷார்ப்ப இருக்கும்)
--- இதையும் சேத்துக்க..//


ரைட்டு....

வைகை said...

சிவகுமார் ! said...
'ஊரு விட்டு ஊரு வந்து' படத்தில் கவுண்டர் சிங்கப்பூர் சாமியார்களிடம் உதை வாங்குவாரே..அதை மனதில் கொண்டு இந்த முகவரியில் தொடர்பு கொள்ளவும். :)))

சிரிப்பு போலிஸ்
சிப்பு போலிஸ் ப்ளாக்.
பாலிடால்புரம்.
மொக்கையூர்.//


அதெல்லாம் டூப்பு பாஸ்..நீங்க சும்மா தொடர்பு கொல்லுங்க ( நோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் ) :-))

விக்கியுலகம் said...

வைகை said...
விக்கியுலகம் said...
டாட் காம் மாறிய பிறகும் என்னை தவிர்க்கும் வைகை அவர்களுக்கு நன்றிகள் ஹிஹி!///////


யோவ்.. இப்ப நீயெல்லாம் பிரபல பதிவர்யா... நானெல்லாம் கமெண்ட் போட பயமா இருக்குயா :-)

>>>>>>>>>>

யோவ் நான் பதிவரே இல்ல..அப்புறம் எங்கிருந்து பிரபலம் ஹிஹி...உனக்கு குசும்பு அதிக பூடுச்சி!

வைகை said...

TERROR-PANDIYAN(VAS) said...
@ரமேஷ்

//டெரர் தவிர அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் :))//

மலர் கரத்தில் முகமேந்தி
முன்நெற்றியில் முத்தமிட்டு
இதழ்களால் இமை தொட்டு
லவ் யு சொல்லும் கன்னி இருக்க
அனுதினமும் காதலர் தினம்தான்!!

அதனால உன்னை மாதிரி பன்னாடை எல்லாம் வாழ்த்து சொல்லனும் அவசியமில்லை.. :))///////////


த்தூ.. அது உனக்கு இப்பிடி இருக்கோணும்.....

மலர் கரத்தில் செருப்பேந்தி
முன்நெற்றியில் காறித்துப்பி
இதழ்களால் கெட்ட வார்த்தை சொல்லி
செருப்பால் அடிக்கும் ஆண்டி இருக்க
அனுதினமும் அவஸ்தை தினம்தான்!!

NAAI-NAKKS said...

Nice...
:)

online karanai...
Kanom....roooooooomba
payanthuttaano....
Illai en blog-i padichittu
tharkkolai...or....mental
intha mathiri...eethaavathu..??????

NAAI-NAKKS said...

Udane room podurom...
Online karanukkaaga....
Party vaikkirom....

Pathaatharkku....
SARIYA SETTILE AAGAAMA...
LOVE pannuravanuku
POLIDAAL
tharom...

TERROR-PANDIYAN(VAS) said...

@வைகை

//மலர் கரத்தில் செருப்பேந்தி
முன்நெற்றியில் காறித்துப்பி
இதழ்களால் கெட்ட வார்த்தை சொல்லி
செருப்பால் அடிக்கும் ஆண்டி இருக்க
அனுதினமும் அவஸ்தை தினம்தான்!! //

என்னா பன்றது மச்சி உன் வாழ்க்கையில் நடக்கரது தான் உனக்கு எழுத வரும். பக்கத்து வீட்டு சுவர் ஏறி குதிக்காத சொன்னா கேட்டா தானே.. :))

தினேஷ்குமார் said...

சாமி டெரரானந்தா நமஹ.....

ஹாலிவுட்ரசிகன் said...

நல்ல நாள் அதுவுமா கம்யுட்டர் முன்னாடி இருந்தா எப்படி கேர்ள்ஸ் சிக்கும்? எலலாரும் சபையை கலைச்சுட்டு பீச்சு பக்கம் போங்க....

திண்டுக்கல் தனபாலன் said...

கலக்கல் !

ஆளுங்க (AALUNGA) said...

நல்லா இருக்கு!!

டிராகன் said...

Love is a Kite
Thread is in your hand ..,

paparakka paparappa

டிராகன் said...

என்னா பன்றது மச்சி உன் வாழ்க்கையில் நடக்கரது தான் உனக்கு எழுத வரும். பக்கத்து வீட்டு சுவர் ஏறி குதிக்காத சொன்னா கேட்டா தானே.. :)) /////////

அவன் சுவர் ஏறி தானடா குதிச்சான் ..,வேற எதுவும் பண்ணலையே :))

துஷ்யந்தன் said...

ஹா... ஹா..... செமையாத்தான் சிரிக்க வைச்சுட்டீங்களே அண்ணே..... நானும் அங்கே போய் ஆசீர்வாதம் வாங்கலாம் என்று இருக்கேன்... என்ன ஒன்னு என பக்கத்தில் நிற பொண்ணைத்தான் காணோம் :( lol