இதுலயாவது மிக்சிங் கரெக்ட்டா இருக்குமா? |
பெயர் மாலுமி. எப்போதும் மப்புடனே இருப்பார். சைக்கிளை குரங்கு பெடல் போட்டதாலேயே மாலுமி என்று அவரே பெயர் வைத்துக்கொண்டார். காணாமல் போன அன்று கையில் குவாட்டரும் வாயில் வாந்தியும் வைத்திருந்தார் என்று பார்த்தவர்கள் சொனார்கள். பக்கத்துவீட்டு பருவதத்தின் நினைவாக ( என்ன? யாரு பருவதமா? அட நாய்ங்க...) அதற்கு யாரோ போர்த்திய பழைய சட்டையை காணாமல் போன அன்று இவர் திருடி அணிந்திருந்தாராம்.இவர் கடைசியாக பேசிய வார்த்தை குஷ்பூவை பார்க்க சென்னை போகணும் என்பதுதானாம். ஆனால் அப்படியே இவர் மோனிகாவையும் பார்க்க போயிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இவரைப்பற்றிய தகவல் அறிந்தால் தொடர்புகொள்ளவேண்டிய முகவரி. தமிழ் நாட்டின் எந்த டாஸ்மாக்கை வேணாலும் தொடர்புகொள்ளலாம்.
நம்மளவிட அன்சைசா இருக்குதுங்களே? ஷ்ஷ்ஷ்ஷ்..... |
பெயர் வெறும்பய ஜெயந்த். பெயர்தான் வெறும்பய.. ஆனால் ஆள் பார்க்க பெறும்பயலா இருப்பாரு. காணாமல் போன அன்று ஓசி புத்தகத்தில் இருந்து கிழித்த கவிதையும் சுடுகாட்டு பிணத்தின் மாலையில் இருந்து திருடிய ரோஜாவும் வைத்திருந்தாராம். காணாமல் போன அன்று அவர் அளவுக்கு துணி கிடைக்காததால் கோஆப்டெக்சில் தள்ளுபடியில் வாங்கிய போர்வையை உடம்பில் சுற்றியிருந்தார் என்று பார்த்தவர்கள் சொன்னார்கள். இவர் பல பெண்களை ”மேற்படிப்பு” படிக்க வைப்பதற்காகவும் தலைமறைவாயிருக்கலாம் என்று மக்கள் சந்தேகிக்கின்றனர். இவர் கடைசியாக சொன்ன வார்த்தை ஜோதி பார்க்க போகணும் என்பதுதானாம். ஐயப்பன் கோவில் மகர ஜோதியை என்று நீங்கள் நினைத்தால் அதற்கு வெறும்பய பொறுப்பல்ல. இவரைப்பற்றிய தகவல் தெரிந்தால் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி எல்லா அழகான பொண்ண பெத்தவன் வீட்டுக்கும் தகவல் கொடுத்துருங்க.. இவன அடிக்கத்தான் தேடிகிட்டு இருக்காங்க.
உனது வெற்றியை நாளை தரித்திரம்..ச்சே..சரித்திரம் சொல்லும்! |
பெயர் சிரிப்பு போலிஸ் ரமேஷ். இவர் பதிவெழுதி மக்களை சிரிக்க வைத்ததை விட தன் புகைப்படத்தை போட்டே மக்களை துன்பத்தை மறந்து அதிகம் சிரிக்க வைத்ததால் சிரிப்பு போலிஸ் என்ற பெயர் ஒட்டிக்கொண்டது. அது எப்படி சாத்தியம் என்று கேட்டால்... இவர் புகைப்படத்தை பார்த்ததும் இந்த கொடுமையே தாங்கிட்டமே? நமக்கு வந்த துன்பமெல்லாம் எம்மாத்திரம் என்று சிரித்துவிடுவார்கள். இவர் காணாமல் போன அன்று குஷ்பூ இட்லியில் ஏன் குஷ்பூ இல்லை என்று சரவணபவன் சர்வருடன் சண்டை போட்டதாக தகவல். இவர் கடைசியாக பேசிய வார்த்தை.. இவர் அலுவலக சர்வர் USA யில் இருப்பதாக கேள்விப்பட்டதும்.. சர்வர் அங்க இருந்தா எனக்கு எப்பிடி சாப்பாடு கொண்டுவரமுடியும்? உடனே அந்த சர்வர இங்க டிரான்ஸ்பர் பண்ணிட்டு வர்றேன் என்று கோபமாக போனாராம். போகும் போதும் சும்மா போகாமல் சின்ன தம்பி மார்த்தாண்டன் கணக்காக..ஐ..எனக்கு கண்ணாலம்...ஐ..எனக்கு கண்ணாலம் என்று கூவிக்கொண்டே சென்றாராம். இவரைப்பற்றி தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி..சென்னையின் எந்த ஹோட்டல்ல வேணாலும் சொல்லுங்க... ஒரு இடத்துல கூட சாப்பிட்டதுக்கு பில் கொடுக்காததால எல்லோருமே கொலை வெறியா தேடிகிட்டு இருக்காங்க.
இவனுங்களுக்கு வணக்கம் சொல்லியே கை வலிக்குதுப்பா! |
பெயர் பன்னிக்குட்டி ராமசாமி. ராமசாமி என்னமோ இவர் சொந்த பெயராக இருந்தாலும் இந்த பன்னிகுட்டி என்ற அடைமொழி இவரிடம் ஒட்டிக்கொண்ட கதை வித்தியாசமானது. இவர் எந்த பிளாக்கில் கமெண்ட் போட்டாலும் ஒரு கமேன்ட்டோடு நிறுத்துவதில்லை. பன்னி குட்டி போட்டது போல் வத வதவென்று கமெண்ட்களாக போட்டுத்தள்ளுவதால் இவருக்கு இந்த பெயர் ஒட்டிக்கொண்டது. இவர் காணமல் போன அன்று சில பிளாக்குகளுக்கு கமெண்ட் போட்டு வருவதாக சென்றாராம். ஆனால் பிளாக்கர் ஆரம்பித்த புதிதில் வந்த ப்ளாக்குகளுக்கு எல்லாம் இவர் இன்னும் கமெண்ட் போட்டுக்கொண்டிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் பெயரில்லாத பிளாக்குக்கு எல்லாம் பயங்கர டேட்டா போடபோவதாக சொல்லிகொண்டிருந்தாராம். அண்ணனை காணாமல் இவரின் அடிவிழுதுகள் தற்கொலை முயற்சிக்கும் தயங்க மாட்டார்கள் என்பதால் இவரை பற்றிய தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்க வேண்டிய முகவரி அகில உலக பன்னிக்குட்டி பாசறை, அபுதாபி குறுக்குசந்து, சில்பகுமார் எண்ணெய் கிணறு அருகில், துபாய்.
வாங்க..வாங்க.... அம்மா வந்தா இன்னும் குமிஞ்சு கும்பிடுவேன்! |
பெயர் இம்சை அரசன் பாபு. மங்களகரமான பெயர்...ஆனால் இவர் வாழ்விலோ மங்களம் இல்லை. யாரும் தப்பா நினைக்க வேணாம்... இந்த கரண்ட் கட் பிரச்சனையால மங்களம் இல்லைன்னு சொல்லவந்தேன். காணாமல் போன அன்று நடந்து கொண்டே போனில் பேசிக்கொண்டிருந்தாராம்.. திமுக ஆட்சியின் குறைகளை போனில் கூறிக்கொண்டிருந்தவர் ஆட்சி மாறிய பின்னும் ஆளை காணவில்லை என்று அச்சப்படுகின்றனர். அவர் தன்னை மறந்து குறைகளை கூறியபடி காசி வரை பேசியபடி நடந்தே சென்றிருக்கலாம் என்று போலீசார் அஞ்சுகின்றனர். காணாமல் போன அன்று தனது தொப்பையை உள்ளே அடக்க முயற்சி செய்த சட்டையும் இடுப்பை இறுக்கி பிடிக்க முயற்சி செய்து தோற்ற பேண்ட்டும் அணிந்திருந்தார். பேன்ட் பாக்கெட்டில் எப்போதும்போல் பேர்நெஸ் க்ரீமில் ஐந்து பாக்கெட் வைத்திருந்தாராம். இவர் காணாமல் போகும்முன் கடைசியாக பேசிய வார்த்தை..மக்கா..திமுக கண்டிப்பா தோற்கும்... அம்மா ஆட்சி வந்ததும் கரண்ட் கட்டே இருக்காது என்பதுதானாம். இவரை பற்றிய தகவல் தெரிந்தால் தொடர்புகொள்ளவேண்டிய முகவரி.. அகில இந்திய அம்மா பாசறை, கோவில்பட்டி கிளை.