பெயர் : பதிவர் சந்திப்பு
புனைப்பெயர் : பதிவர் மாநாடு
தொழில் : சாப்பாடு போடுதல்
உபதொழில் : பதிவு தேத்த உதவுதல்
தலைவர்(கள்) : பிரபல பதிவர்கள்
துணைத்தலைவர்(கள்) : கலந்து கொள்பவர்கள் அனைவரும்
பொழுதுபோக்கு : விருது கொடுத்தல்
துணைப்பொழுதுபோக்கு : கவிஞர்களை உருவாக்குதல்
மேலும் பொழுதுபோக்கு : பிரபல பதிவர்களை பிரபலமாக்குதல்
பலம் : மகளிர் அணி
பலவீனம்: : பதிவர்கள்
சமீபத்திய சாதனை: : மறுபடியும் சந்திக்க இருப்பது
நீண்டகால சாதனை: : பதிவர்கள் எழுதுவதை குறைத்திருப்பது
சமீபத்திய எரிச்சல்: : வருவதற்கு தயக்கம் காட்டும் பதிவர்கள்
நீண்டகால எரிச்சல்: : சங்கம் வைத்து தமிழ் வளர்க்க முடியாதது
நண்பர்கள்: : பதிவர் சந்திப்புக்கு வந்தவர்கள்
எதிரிகள் : ஃபேஸ்புக், ட்விட்டரில் எழுதிக் கொண்டு பதிவர் என்று சொல்லிக் கொள்பவர்கள்
ஆசை : அடிக்கடி சந்திக்க
நிராசை : தேய்ந்து வரும் பதிவுலகம்
நம்பிக்கை : ஒற்றுமை
பயம் : சைபர்கிரைம்
லட்சியம்: : கருத்து கந்தசாமிகளை உருவாக்குதல்
இதுவரை மறந்தது: : பழைய பிரபல பதிவர்களை
இனி மறக்க வேண்டியது: : இணைய போராளிகளை
24 comments:
For Follow-up..
(சண்டை வருமா?)
சண்டே வேணா வரும்........
வரும் ஆனா வராது...
enge????eppo????
superda panni...:-))))
pathivai pottu pathivar santhippukku pillaiyaar suzhi potta panni vaazhka vaazhka :-)))
//சண்டே வேணா வரும்......//
பு ..பு ..பு ....புதன் வருமா ன்னு கேக்க வந்தேன் ...........
யோவ் பட்டிக்சு, மீட்டிங் எப்போ, எங்கேன்னு கேக்கிறாங்க, விபரம் சொல்லுய்யா.....
கடந்த நூற்றாண்டில் பெருமளவில் காணப்பட்ட "பதிவர்' என்ற இனம் தற்போது சில பல தெரியாத காரணங்களால் பெரும்பாலும் அழிந்து போன நிலையில், மிஞ்சியிருக்கும் இவர்கள் தங்கள் இனத்தை அழியாமல் காப்பற்றுவதர்க்காகவும், ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் பதிவர்களை ஒன்றுசேர்க்கும் முயற்சியாகவும் கூடிய விரைவில் "மதராசப்பட்டினத்தில்" நடக்கவிருக்கும் மாநாட்டை பற்றி ஒரு பயலும் இதுவரைக்கும் சொல்லாத "பய டேட்டா"
கலக்கல் !
ரைட்டு...
அடுத்த ரிலீஸ் எப்போ?
எதிரிகள் : காந்தி சிலைக்கு பின்னால் டீயும் பஜ்ஜியும் வாங்கிக் கொடுத்து பதிவர் சந்திப்பு நடத்துபவர்கள்
வில்லன்கள் : பதிவர் சந்திப்புக்கான கணக்கை குறை சொல்லும் பாக்கியவான்கள்
மார்க்கெட்டிங் மேனேஜர்கள் : மதுவை குறை சொல்லும் மதவாத பதிவர்கள்
கல்லாப்பொட்டி சிங்காரம் : பட்டாப்பட்டி ஜெய்
டெரர் வரவேற்பு குழுத் தலைவர் : நாய் நக்ஸ்
போட்டோகிராபர்கள் : சிபி செந்தில் குமார், வீடு திரும்பல் மோகன் குமார்
சிறப்பு மெட்டர் பதிவர் விருது பெறுபவர் : நாய்நக்ஸ் (விருதுக்கான பெயர்க்காரணம் நக்கீரனிடமே கேட்டு தெரிந்துக் கொள்ளவும்)
எல்லாம் சரி எப்ப பதிவர் சந்திப்புங்கோ :)
ஆகஸ்டு மாதம் கடைசி ஞாயிறு அல்லது அதற்கு முந்தைய ஞாயிறு.
நன்றி அண்ணே
சூப்பர்!
(டெம்ப்ளேட் கமெண்ட் போடறவங்களை எந்த கேட்டகிரியில சேப்பீங்க?)
ஆமா பதிவர்னா யாரு... கற்கால மனிதர்கள் மாதிரி இவங்களும் எதாவது ஒரு கோஷ்டியா...??
முடிஞ்சுதுட ஜோலி !!!
//// ஆமா பதிவர்னா யாரு... கற்கால மனிதர்கள் மாதிரி இவங்களும் எதாவது ஒரு கோஷ்டியா...?? /////////
இது ஒரு காமெடி உலகம் வெங்கட் !!! நம்மள நாமே அடிச்சி ஒருத்தன் மேல ஒருதேன் சேத்த வாரி பூசிப்போம் ..,அப்புறம் ரொம்ப அடிவாங்கினவன் நான் இந்த உலகத விட்டே போறேன் சொல்வாங்க ..,அதுக்கு நால் பேரு உலகம் பூரவுலம் இருந்து நீங்க இந்த உலகத்துக்கு வரணும் ..,வந்து சேவை யாற்றனும் ,சோமாலிய குழந்தைகள் பசியால் வாடுவது பொறுக்காது ,பொலிவிய புரட்சி நின்று போய்டும் ,அம்மா உணவகம் திறக்க மாட்டங்க ,அப்புறம் ஏழை எளிய ,நடுத்தர மக்கள் கதி என்று உசுபேத்தி அவர மறுக்க பதிவு எழுத வச்சுடுவாங்க ...,ஆனா பாருங்க அந்த நாலு பெரும் இவங்கலவே பேக் ஐ .டி ல பதிவு எழுதி இருப்பாங்க :))))))
என்னய்யா நடக்குது இங்கே....
சிறப்பு விருந்தினரா மன் மோகன் சிங் வரதா பேசிக்கிறாங்களே உண்மையா..!! :-)
எல்லாம் சரி எப்ப பதிவர் சந்திப்பு?
Post a Comment