இணைய நண்பர்களே,
கடந்த இரண்டு வருடங்களாக டெரர்கும்மி சார்பாக நடந்த ஹண்ட் ஃபார் ஹிண்ட் மெகா புதிர் போட்டி உங்களின் ஆதரவால் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த வருடமும் அப்படியான ஒரு போட்டியை மேலும் சிறப்பாக நடத்த போவதாக முந்தய பதிவு மற்றும் கூகுள் ப்ளஸ்சில் அறிவிப்பு செய்திருந்தோம்!
ஆம் நண்பர்களே சோம்பி இருக்கும் உங்கள் புத்தியைத் தீட்ட நேரம் வந்துவிட்டது! வருகின்ற அக்டோபர் மாதம் 9ம் தேதி (09/10/2013) புதன் கிழமை காலை 9.00 மணிக்கு ஹண்ட் ஃபார் ஹிண்ட் - 3 போட்டி தொடங்கும். கடந்த வருடத்தைவிட இந்தவருடம் பரிசுத்தொகையும் அதிகம்! மொத்தப்பரிசு ரூ 12,000!
இந்த வருடம் புதியதாக விளையாட போகிறவர்களுக்காக இந்த கேம் பற்றிய சிறிய அறிமுகம்:
என்ன புதிர் போட்டி இது?
1. இந்தூர் ஐஐம் மாணவர்களால் வருடாவருடம் நடத்தப்படும் "KLUELESS" விளையாட்டின் தாக்கத்தால் உருவாக்கப்பட்ட விளையாட்டு இது.
2. நேரடி கேள்விகள் இருக்காது.... படமாகவோ, எழுத்தாகவோ, மவுஸ் கிளிக்காகவோ இப்படி வித்தியாசமாக இருக்கும்
3. ஒவ்வொரு கேள்விக்குமான விடைக்கும் க்ளூ கொடுக்கப்பட்ட்டு இருக்கும். பேஜ் சோர்ஸ், பேஜ் டைட்டில், url name, image name அல்லது வெப்பேஜில் ஏதாவது ஒரு இடத்தில் க்ளூ இருக்கும்... அதை கண்டுபிடித்து விடை சொல்ல வேண்டும்
4. விடைகளை அதற்கான ஆன்சர் பாக்சிலோ, url name மாற்றுவது போன்றோ, கிளிக் செய்வது போன்றோ இருக்கும்....
5. விடையை கொடுத்தவுடன் அடுத்த பக்கத்திற்கு (லெவலுக்கு) செல்லும்
6. இப்படி மொத்த லெவல்களை யார் முதலில் முடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்....
7. அனைத்து லெவல்களையும் முடிப்பவர்களின் பெயர்கள் “HALL OF FAME”லும் “டெரர் கும்மி.காம்”மிலும் வெளியிடப்படும்.
8. போட்டியில் கலந்து கொள்ள எந்த வித நிபந்தனையும் இல்லை. டெரர் கும்மியை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களை தவிர யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்
9. புதிர் முடிக்க டைம் லிமிட் கிடையாது. முதலில் முடிப்பவர்களுக்கு பரிசு.
முதல் பரிசு: 5000 ரூபாய்
இரண்டாம் பரிசு: 3000 ரூபாய்
மூன்றாம் பரிசு: 2000 ரூபாய்
இரண்டு ஆறுதல் பரிசு தலா 1000 ரூபாய்.
இந்த போட்டியை பற்றிய மேலும் விரங்கள் அறிய கீழ்கண்ட சமூகத் தளங்களில் உள்ள எங்கள் பேஜ்களை பாருங்கள்......
Facebook Pagehttps://www.facebook.com/HuntForHint
Facebook Group-https://www.facebook. com/groups/huntforhint
Twitter - https://twitter.com/HfH_tk
கடந்த இரண்டு வருடமும் நடந்த கேம்களை புதியதாக விளையாடி பயிற்சி செய்ய...
2011 கேம்
2012 கேம்
இந்தப் போட்டியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள
இந்த வருடமும் இந்த விளையாட்டு உங்களுக்கு நல்லதொரு அனுபவத்தை தருமென்று நம்புகிறோம். இதனைப்பற்றிய விபரங்களை அடிக்கடி உங்களுக்குத் தருகிறோம். தொடர்ந்து எங்களோடு இணைந்திருங்கள்!
வாழ்த்துக்களுடன்
டெரர்கும்மி