Friday, May 11, 2012

காண்டாமிருகம்....

ஒரு காட்டுல ஒரு காண்டாமிருகம் அது பெயர் ரெமோ (காண்டாமிருகம் டைப்பண்ண கடுப்பா இருக்கு) அதுக்கு ரொம்ப நாள பேபி சோப்பு போட்டு குளிக்கணும் ஆசையாம். ஆனா காட்டுல கடையே இல்லையம். அப்போ அங்க ஒரு குரங்கு வந்துச்சாம். ரெமோ அந்த குரங்குகிட்ட தன் ஆசையா சொல்லுச்சாம்.

அத கேட்ட குரங்கு இவ்வளோதான உன் ஆசை சொல்லி ரெமோ காதுல ஏதோ சொல்லுச்சாம். அதை கேட்ட ரெமோ ரொம்ப சந்தோசம் ஆகிடுத்து.

அடுத்த நாள் ரெமோ சந்தோசமா பேபி சோப்பு போட்டு குளிச்சிட்டு இருந்ததாம். அங்க வந்த யானை உனக்கு எப்படி பேபி சோப்பு கிடச்சுது சொல்லி கேட்டுதாம். அதுக்கு யானை காதுல ரெமோ அந்த ரகசியத்த சொல்லுச்சாம்.

குரங்கு ரெமோ கிட்ட என்ன ரகசியம் சொல்லுச்சி? ரெமோ யானை கிட்ட என்ன சொல்லுச்சி? அட.... உங்கள மாதிரிதான் நானும் ஒட்டு கேக்க முயற்சி பண்ணேன். அதுங்க ரொம்ப மெதுவா பேசினதுல ஒன்னும் கேக்கல. அதனால் குரங்கு, ரெமோ மற்றும் யானை ஆகிய மூன்று விலங்குகளையும் இந்த தொடர் பதிவுக்கு அழைக்கிறேன்.... அவர்கள் எழுதும்போது சோப்பு கிடைத்த ரகசியத்தை தெரிந்துகொள்ளவும். இப்போ நீங்க உங்க வீட்டுக்கு (ப்ளாக்) போலாம்... 

டிஸ்கி: இந்த கண்றாவி கதையை மறுபடியும் படித்து தொலைய எமலோகத்துக்கு ச்சீ  இந்த லின்கிற்க்கு போகவும்